Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் திரு சுமந்திரன் அவர்களுக்கு
.
திரு சுமந்திரனுக்கு, நீங்கள் அயராத உழைப்பாளர் என்றும் ஆற்றல் மிக்கவர் என்றும் தமிழரசுக் கட்சி தோழர்கள் மத்தியில் கருத்துள்ளது. உங்களைப்போல டாக்டர் நாகநாதன் திருசெல்வம் பிற்காலத்தில் குமார் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழர்கள் பலர் கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக்கு பெரும் பணி ஆற்றியுள்ளனர். அவர்களுள் எப்போதும் த்மிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுக்கும் கட்ச்சிக்கும் பணிந்து செயல்ப்பட்ட டாக்டர் நாகநாதன் மட்டும் மறந்தும் தலைமைக்கோ அமைச்சுப் பதவிகளுக்கோ ஒருபோதும் குறிவைக்காத உட்கட்சி ஜனநாயகத்தை பேணும் போராளியாக இருந்தார். குமார் பொன்னம்பலம் அவர்கள் விடுதலைப்புலிகளின் காலக்கட்டத்தில் தனது கடந்தகால அரசியல் போக்குகளில் இருந்து விலகி மிக அர்பணிப்போடு செயல்பட்டார். இந்த வகையில் டாக்டர் நாகநாதனும் பிற்கால குமார் பொன்னம்பலமும் கொழும்புத் தமிழருக்கும் கொழும்புக்கு அப்பால் பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்ககளுக்கும் மக்கள் ஆதரவுடன் கழத்தில் செயல்படும் முன்னணி தலமைக்கு கட்டுபட்டு இயங்க வேண்டும் என்கிற படிப்பினையை விட்டுச் சென்றுள்ளனர்.

.

திரு சுமந்திரன் அவர்களே, இன்றைய காலகட்டத்தில் தமிழரின் நாடாளுமன்ற அரசியலில் உங்கள் பணியை ஆற்றலை விபரம் தெரிந்த யாரும் நிராகரிக்கவில்லை. ஆனால் கட்சித் தலைமையைக் கட்டுப்படுத்தி பாராழுமன்ற உறுப்பினர்களைக்கூட அன்னியப்படுத்தி சுயநலன்களுக்காக கொழும்பு அதிகார பீடங்களோடு சமரம் செய்துகொண்ட ஜி.ஜி.பொன்னம்பலம் திருச்செல்வம் பாதையில் நீங்களும் சென்றுவிடக்கூடுமோ என்கிற அச்சமும் விமர்சனமும் பலருக்கு உள்ளது. அதுதான் உங்கள் மீதும் வைக்கபடுகிற ஒரே குற்றச்சாட்டாக உள்ளது.

.

நீங்கள் உட்பட விக்னேஸ்வரன் கஜேந்திரன் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழ் தலைவர்களின் ஆக்கமுள்ல விடுதலைப் பணிகளை யாரும் எதிர்க்கவில்லை. ஆயினும் கொழும்பு தமிழ் தலைவர்களுக்கு ஈழத் தமிழர் விடுதலை கொழும்பில் உள்ள தங்கள் நலன்களைக் காப்பாற்றுவது என்கிற இரட்டை நலன்கள் உள்ளது. மேலதிகமாக ம்முதல் அமைச்சர் விக்னேஸ்வரனைப்பொறுத்து தமிழர்களின் முதல் எதிரிகளாக கருதப்படுகிற அணியினருடன் திமண பந்தம் உள்ளது. மேலும் நமது முதல் அமைச்சர் கொலை பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆழாகிச் சிறையில் இருக்கும் பரமானந்தா என்கிற அசுத்த ஜீவனின் விடுதலைக்காக தனது பதவியை துஸ்பிரயோகம் செய்கிறது உலக அரங்கில் ஈழத் தமிழரை அவமானப் படுத்துவதாக உள்ளது. அதேபோல கஜேந்திரன் பொன்னம்பலம் கிழக்குப் பற்றிய எந்த அறிவும் செல்வாக்கும் இல்லாமல் தோல்வி நிச்சயம் என தெரிந்தும் தமிழ் வாக்குகளை சிதறடித்து சம்பந்தரை அழிக்கவேண்டுமென்கிற வன்மத்துடன் திருமலையில் போட்டியிட்டார். அதனால் சம்பந்தருக்கு எதிராக ஒரு தமிழரை நிறுத்தி தமிழர்களைத் தோற்கடிக்கும் மகிந்தவின் திட்டத்துக்கு அவசியமில்லாமல் போனது. அதனால் இரண்டு தமிழர் வெற்றிபெறவேண்டிய மயிரிழையில் சம்பந்தர் மட்டும் வென்றபோதும் தமிழர்கள் தோற்கடிக்கபட்டனர். உடுவில் மகளிர் கல்லூரிதொடர்பாக மத்தியஸ்துவம் வகிக்க வேண்டிய நீங்கள் பாரபட்சமாக நடந்துகொண்டமையும் கவலை தருவாதாக இருந்தது. வரலாற்றின் படிப்பனைகள் கொழும்பு தமிழ் தலைவர்கள் டாக்டர் நாகநாதன்போல தலைமைக்கு ஆசைப்படாமல் கட்ச்சிக்குக் கட்டுப்பட்டும் கட்சித் தலைவர்களை அனுசரித்தும் செயல்படவேண்டுமென உணர்த்துகிறது.

திரு சுமந்திரன் அவர்களே,

கட்சிக்குவெளியே அதிகாரங்களை கையகப்படுத்தி இயங்குகிறீர்கள் என்கிற சந்தேகம் மட்டுமே உள்ளது. அத்தகைய சந்தேகத்துக்கு இடமழிக்காமல் நீங்கள் தொடர்ந்தும் பணியாற்றவேண்டும் என்பதே தமிழரசுக்கட்சிக்கு உள்ளும் வெளியிலும் உள்ள பெரும்பாலான தமிழர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. விடுதலைக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உங்கள் அறிவும் செயல் திறனும்பற்றி யாருக்கும் சந்தேகமில்லை.
கட்சிக்கட்டுபட்ட வகையில் உங்கள் உழைப்பு தமிழர்களது பாராளுமன்ற அரசியலுக்கு அவசியமான ஒரு தருணத்தில் நீங்கள் ராஜினாமா பற்றிப் பேசுவதை ஏற்றுகொள்ளமுடியாது. - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் அவர்கள் சுமந்திரனுக்காகச் சங்கு ஊதுகிறார். தமழர் பிரதிநிதிகளில் அதிரடிப்படையின் பாதுகாப்புடன் வடக்குக் கிழக்கில் உலாவும் ஒருவர் இவர் மட்டும்தான் அந்த அளவுக்கு இவரது கேவலம். பரமானந்தாவின் சீடன் என விக்கியரை அழைக்கும் ஜெயபாலன் சுமந்திரன் தனது மனைவி இல்லாத ஒரு பெண்ணைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் படம் சமூகவலைத்தளங்களில் உலாவருவதை மறந்திட்டார்,  

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொரர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எனும் வகையில் ஆவனசெய்யுமாறு மன்றாடிய முன்னைநாள் போராளிகளது கருத்தினைச் செவிமடுக்காது காலுக்குமேல் கால் போட்டுக்கொண்டு செய்திப்பத்திரிகை வாசிச்ச சம்பந்தர் தமிழர் தலைவராம். வடமராட்சியில் தான் வெல்லுவதற்காக புறியாணிப்பொட்டலமும் குவாட்டரும் கொடுத்த சுமந்திரன் தவிர அதிகூடிய வாக்குகள் பெறுவதற்காக சுரேஸ் பிரேமச்சந்திரனது வெற்றியை இரணிலுடன் சேர்ந்து பறிச்ச சுமந்திரன் அவரை ஜெயபாலம் ஒரு அரசியல்வாதியாகவும்  தமிழர்க்கு வராது வந்த மாமணியாகவும் வர்ணிப்பது சிரிப்பாக இருக்கிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனதும் சம்பந்தரதும் கட்சியின் தான் தோன்றித்தனமான போக்கால் பலரும் கூட்டமைப்பில் சேர முடியாமலும் விலக்கப்பட்டும் இருக்க முக்கிய கார\னமானவர்கள். கடைசி தமிழரின் நிலை கண்டாவது ஏதோ ஒரு அடிப்படையில் இணைந்து செயற்பட முடியாமல் முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் இந்த இருவரும் தான்.


கிழக்கின் பிறந்து வளர்ந்த சம்பந்தர்  தனது தொகுதியில்  உள்ள சம்பூருக்கு எததனை தடவை சென்றவர் என கூறுங்கள் பார்க்கலாம் திரு ஜெயபாலன் அவர்களே!!!!

தமிழர்களுக்கு சேவை செய்ய என வந்தால் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு  மேற்கு மலையகம் என பார்ப்பதில்லை. நீங்கள் அடிக்கடி கிழக்கு, கொழும்பு என விழிப்பது ஏனோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் மலர்கள் மலரட்டும். என் கடிதம் தொடர்பாக கருத்தெழுதிய எழுஞாயிறுக்கும் நுணாவிலானுகும் நன்றி. இன்னும் பலர்து கருத்துக்களை அறிய விரும்புகிறேன். சரிகளுக்காக உரத்து வாதிடுவதுபோல என் தரப்புப் பிழைகளை திருத்துவதிலும் எனக்குத் தயக்கமில்லை பொதுக்கருத்துக்கு எப்பவும் தலை வணங்கிறவன நான்.

  • கருத்துக்கள உறவுகள்

வயசு போயிட்டா எல்லாரும் ஒரே மாதிரியே ஆகிடுறாங்க.

கடிதம் எழுதிகள்... கட்டுமரம்.. சங்கரி.. வரிசையில்... இவரும் சேர்ந்திட்டார்.

எல்லாரும் தங்கள் இருப்பினை வெளிக்காட்ட இப்படி அடிக்கடி கடிதம் எழுத வேண்டி இருக்குது போல.

2009 மே க்குப் பின் தலைமையின்றி.. வழிகாட்டல் இன்றி தவிக்கு தமிழ் மக்களாகிய  முயல்கள் மத்தியில் சிலர் நல்லாவே தவிச்ச முயல் அடிக்கினம்.. என்பது மட்டும் வெளிப்படை. ☺️

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா அண்ணர் தங்களை எப்போதும் நான் திட்டமிட்டு மறுத்துப்பேச விருப்பம் இல்லாதவன், ஆனால் முள்ளிவாய்கலுடன் விடுதலைப்புலிகளது இராணுவப்பிரசன்னம் முடிந்தபோது தலைவர் நிறையப் பிழைவிட்டுவிட்டார் பேசாமல் இப்போது கிடைக்கக்கூடியதைப்பெற்றுக்கொண்டு மேலதிகமாகக் கிடைப்பதற்காகப் போராட அவர் பலமான நிலையை எதிர்காலத்தில் கட்டமைத்திருக்கலாம் ஆனால் அவரது தற்துணிச்சல் சொல் தவறாமை நேர்மை இவைகளே எமதும் விடுதலைப்புலிகளதும் தற்போதைய நிலைக்குக் காரணம் என் நான் பலருடன் உரையாடியதுண்டு காலம் எனது கருத்தினைத் தவறென உணத்தியது, இன்று எமது அரசியல் சக்திகள் இன்னுமொன்றுடன் பொருத்திப்பார்ப்பதற்கான உரைகல்லாக அவர்கள் தம்மை ஆக்கிவிட்டு அகன்றுவிட்டனர் அதுவரை அவர்களது கொண்ட கொள்கை தவறாமை என்பதே முன்னிற்கிறது அவர்களுடன் ஒப்பிட்டே அவர்களைப் பார்த்து வளர்ந்த நான் எதையும் மதிப்பிடவேண்டியுள்ளது. மிகப்பெரிய தியாகங்களைச் செய்த எங்கள் இனத்தின் மூதாதையராக அவர்கள் இருக்கும்பட்சத்தில் எமக்கான எதிர்கால அரசியலைச் செய்வோர் அவர்களைவிட கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருந்திடல்வேண்டும் என நான் நினைப்பதில் தவறேதும் இல்லையே. 

சிறீமாவோ பண்டார நாயக்கா பாராளுமன்றப் பதவிக்காலத்தை இருவருடங்களுக்கு நீடித்தபோது தமிழ் மக்கள் எனக்கு ஐந்துவருடங்களே பாராளுமன்ற உருப்பினராக இருப்பதற்கு அனுமதி தந்தார்கள் அதனால் நான் பதவி விலகுகிறேன் இன்னுமொரு தேர்தலைச் சந்திக்கிறேன் எனக்கூறி அதன்படிநடந்த தந்தை செல்வாவின் ஜனநாயகத்தைக் கண்டு வளர்ந்தவர்கள் நாம் நீங்கள் உட்படவே.

பிரபாகர நேர்மை இல்லையேல் எஸ் ஜே வி செல்வநாயக நேர்மை இதில் எதையாவது கடைப்பிடிக்க எதிர்பார்ப்பது தவறில்லையே

தண்ணீரோ கண்ணிரோ விட்டு வளக்கவில்லை இச்சுதத்திரத்திற்கான வேள்வித்தீயை செந்நீர் விட்டெல்லொ வளர்த்தோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Elugnajiru நலமா? இங்கு இருவர் கருத்துக்கூறியுள்ளீர்கள். இருவருக்கும் நன்றி. உங்களைப்போலவே நுணாவிலானும் பொதுவாக நிலவும் சந்தேகங்களை முன்வைத்திருக்கிறார். குறைந்தது மூவராவது கருத்துச் சொன்னபிறகு பதில் எழுதலாம் என காத்திருக்கிறேன். தொடர்ந்து விவாதிக்கவும்

 

அய்யா,

உங்கள் கடிதத்தினை வாசித்தேன் சில விளக்கங்களை கேட்க முனைகிறேன். நீங்கள் ஆக குறைந்தது மூவராவது விமர்சனம் வைத்தால் மட்டுமே பதிலளிப்பேன் என்றமையால் வேறு வழியில்லாது நான் இந்த கருத்தை பதிவிடுகிறேன்.

அடியேன் அரசியலில் மற்றைய சாதாரண தமிழர்கள் போலவே ஒரு பேதை என்பதை மனதில் நிறுத்தி பதிலளியுங்கள்.

நீங்கள் மேலே எழுதிய கடிதம் ஒரு பொதுவெளி திறந்த மடலா அல்லது திரு. சுமந்த்திரனுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலா.?

திரு. சுமந்திரன் இதுவரை தமிழரின் அரசியல் தீர்வுக்காக ஆற்றிய பங்களிப்பின் முக்கிய பகுதிகளை விவரிப்பீர்களா .?? (முக்கியமாக அரசியல் கைதிகள் விடுவிப்பு உட்பட)

திரு. சுமந்திரனின் இராஜினாமா பற்றி இதுவரை அவர்சார்ந்த கட்சியே எந்தவித அறிக்கையும் விடாதவிடுத்து உங்கள் மடலின் உள்நோக்கம் என்ன .?

தமிழரின் விடுதலை திரு. சுமந்திரனின் கைகளில் தான் தங்கியுள்ளது என்ற உங்கள் கருத்தின் அடிப்படையை விளங்கப்படுத்த முடியுமா.?

மேலே நான் குறிப்பிட்ட கருத்துகள் அல்லது கேள்விகளால் உங்கள் மனம் ஏதேனும் காயப்பட்டிருந்தால் மன்னிக்க.

நன்றி.

 

ஆவலுடன்

சுமந்திரனை வைத்து தமிழர்களின் உரிமைகளுக்காக, நீதி கிடைக்க அயராது உரத்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அடக்கிவிடலாம் என்று கனவு கண்ட தமிழினப் படுகொலைகாரர்களுக்கு சுமந்திரனின் விலகல் நாடகம் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது தெளிவாகிறது.   

 

On 6/11/2018 at 12:51 PM, poet said:

முதல் அமைச்சர் விக்னேஸ்வரனைப்பொறுத்து தமிழர்களின் முதல் எதிரிகளாக கருதப்படுகிற அணியினருடன் திமண பந்தம் உள்ளது. மேலும் நமது முதல் அமைச்சர் கொலை பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆழாகிச் சிறையில் இருக்கும் பரமானந்தா என்கிற அசுத்த ஜீவனின் விடுதலைக்காக தனது பதவியை துஸ்பிரயோகம் செய்கிறது

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்பாடு செய்த திருமணங்கள் அல்ல என்றும், வயதுக்கு வந்த இளசுகள் செய்யும் காதல் திருமணங்கள் அவரவர் உரிமை  என்று தெரிந்தும், அவர் மீது வசைபாட வேறு வழியில்லை என்ற கடும் வறட்சி இந்த வரிகளில் பிரகாசமாக தெரிகிறது! 

மேலும் பரமானந்தா என்ற இலங்கை சுவாமி சிறையில் அடைக்கப்பட்டது பற்றி மறுபக்க கதைகள் பலவுண்டு. உலகின் மிகமிகமோசமான நீதித்துறை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பரமானந்தா மேல் நம்பிக்கை வைப்பது / வைக்காமல் இருப்பது அவரவர் உரிமை. அதில் அதிகார துஸ்பிரயோகம் என்ற பொய் வாந்தி எழுதியவரின் கீழான மனநிலையை பிரகாசமாக காட்டுகிறது.

இவ்வளவு வில்லங்கப்பட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் முதலமைச்சர் மீது குறைகாணும் மனநிலை உள்ள நீங்கள்,

  •  ஈழமண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் பாலியல் பலாத்காரங்களை ஆயுத முனையில் அரங்கேற்றிய இந்திய இராணுவ பயங்கரவாதிகளை இயக்கும் இந்திய கொலைகார அரசுக்கு துதி பாடும் பேர்வழிகளை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்?  
  •  ஈழமண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் பலபடுகொலைகளை அரங்கேற்றிய இந்திய இராணுவ பயங்கரவாதிகளை இயக்கும் இந்திய போர்க்குற்றவாளி அரசுக்கு காவடி எடுக்கும் பேர்வழிகளை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்?  
  •  ஈழமண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் பல கொள்ளைகளை அரங்கேற்றிய, பத்திரிகைகளை அழித்த, வைத்தியர்களையும் நோயாளிகளையும் வைத்தியசாலையினுள் படுகொலை செய்த  இந்திய இராணுவ கயவர்களை இயக்கும் இந்திய காட்டுமிராண்டி அரசுக்கு ஜால்றா போடும் பேர்வழிகளை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்?  
  •  ஈழமண்ணில் திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றி வரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு பக்கத்துணையாக இருந்து கொண்டிருக்கும் இந்திய அரச பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக இயங்கும் ஒட்டுண்ணி கும்பலை பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்க்காலம் 1996ல் என ஞாபகம் விடுதலைப்புலிகள் அமைப்பின் உழவுப்பிரிவு  ”நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என தலைவர் கூறுகிறார். நீங்கள் எங்களை குறிப்பாக முஸ்லிம் விவகாரங்களில் விமர்சிக்கின்றீர்கள். நீங்கள்  தாராளமாக விமர்சிக்கலாம்.  உங்களிடமிருந்து அரசியல் இராணுவ விடயங்களில்  விமர்சன அறிக்கைகளை பெறும்படி தலைவர் சொல்லியிருக்கிறார்.” எனக்கேட்டுக்கொண்டார்கள். அத்தோடு வெளிவிவகாரம் தொடர்பான குறித்த சில பணிகளை தமது வெளிநாட்டுக் கிழைகளோடு சம்பந்தப்படாமல் செய்யும்படி கேட்டார்கள். இதுதனால் திரு கஸ்றோ அவர்களோடு நேரடி முரண்பாடு ஏற்பட்டது.   வன்னியில் நிலந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில்  திரு கஸ்றோ அவர்களை மிக கடுமையாக விமர்சித்தேன். மேற்படி கூட்டத்துக்கு பாலகுமாரன் உட்பட விடுதலைபுலிகளின் முக்கியஸ்தர் சிலர் வந்திருந்தனர். திரு கஸ்றோ அவர்கள் என்னை சிறைபடுத்த முனைந்தபோதும் என் பாதுகாப்பையும் விமர்சன உரிமையையும் வாக்களித்தபடி இயக்கம் பாதுகாத்தது.    இயக்கம் அளிக்க முன்வந்த வள உதவிகளை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தபோதும் இலங்கையிலும் வெளியிலும் மிகுந்த கரிசனையுடன்  என் பாதுகாப்பை இயக்கம் உறுதிப்படுத்தியது.  .  இவைபற்றி  வாழும் தலைவர்கள் அறிவார்கள். விரிவாக இராணுவ வரலாறு எழுதும்போது விரிவாக எழுதுவேன். என் விமர்சன உரிமையை நான் எப்போதும் எங்கும் விட்டுகொடுத்ததில்லை.   சுமந்திரனுக்கு எழுதிய கடிதமும் ஆழமாக வாசித்தால் எனது விமர்சனங்களின் தொடற்சிதான் என்பதை அறிவீர்கள். எனது கருத்துக்கள் எப்பவும் தீர்பாக இருந்ததில்லை. அவை ஒரு தேடலின் ஆரம்பம்தான். பதில் எழுதிய அனைவரும் என் தேடலுக்கு உதவி இருக்கிறீர்கள். என் அன்பும் நன்றிகளும்.

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலை வென்றெடுபதற்கான காலநதியில் கலந்த "சாக்கடை நீர்"  சுமந்திரனாவார் அந்த நீரைச் சுத்திகரிக்கமுடியாது வேண்டுஎன்றால் பன்றிப்பண்ணைக்கு மடைமாற்றம் செய்யலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய இணையவன். பெண்போராளிகள் ஒருமுறை சொன்ன ஒரு சேதியை மட்டுமே உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். நீரில்லாமல் பலநாட்க்கள் அலைந்தபிறகு ஒருவீட்டு மலகூடத்து குந்துசட்டிக் குழி இருந்த தண்ணீரை பப்பாத் தண்டுக் குழல் மூலம் உறுஞ்சிக் குடித்து அவர்கள் உயிர்பிழைத்தார்களாம். இதன் படிபினைகளைப் புரிந்துகொள்ளாமல் எமக்கு எதிர்காலம் இல்லை. இருக்கிற தண்ணீரை சுத்திகரித்து அருந்தி உயிர்வாழும் நிலையில்தான் எங்கள் அரசியல் உள்ளது.

.

நாட்டில் எங்கள் சனத்தொகை (2012) வட மாகாணம்  987692 + கிழக்கு மாகாணம்609,564 =  1597256.  இது மதுரை () மாவட்ட குடித்தொகையில் பாதிமட்டுமே. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமை இல்லாவிட்டால் திருமலை நகரம் மட்டக்களப்பு மாவட்டம் ஆலையடி வேம்பு திருக்கோயில் பிரதேசங்கள் என  மூன்று தீவுகள்போல சிதறி உள்ளது தமிழர் இருப்பு.  

.

வடகிழக்கில் வாழும் 16 லட்சம் தமிழர்களில் வயோதிபர்களும் குழந்தைகளும் அதிக சதவீதத்தில் உள்ளனர். புலம்பெயர்ந்த தமிழர்  இனி தாயகம் வந்து போராடப்போவதில்லை. தங்கள் பிள்ளைகளையும் போராட அனுப்பப்போவதில்லை. அதேசமயம் அவர்கள் கழ சமூக பொருளாதார அரசியல் பாதுகாப்பு கழநிலமைகள் அறியாமல் நிதானமான அரசியலை ஆய்வுகளோ விமர்சனமோ இன்றி நிராகரிப்பவர்களாக உள்ளனர். மேலும் புலம்பெயர் தமிழர்கள் பாராழுமன்ற அரசியலில்  அதிதீவிரவாதத்தை தூண்டுகிறவர்களாக உள்ளார்கள். 

.

பெரும்தோல்வியின்பின்னர் அரச பயங்கரவாத அச்சுறுத்தல் மத்தியிலேயே  இன்றைய ஈழத் தமிழர் அரசியல் தொடர்கிறது. ஈழத்தில் மேற்க்கு நாடுகளினதும் அயல் நாடுகளதும் அரசியல் அழுத்தத்தாலும் அதன் அடிப்படையிலான  பாராளுமன்ற நடவடிக்கைகளாலுமே ஈழத் தமிழரது அன்றாட இருப்பை உறுதிப்படுத்தும் அரசியல் செய்யவேண்டியுள்ளது.  

பேரழிவான தோல்விக்குப்பின்னர் நாம் கையறு நிலையில் இருக்கிறோம்.    சிங்கள அரசுகள் சர்வதேச அழுத்தத்துக்கு மட்டுமே சற்று அசைந்து கொடுக்கின்றன. அதுவும்  சர்வதேசம் எங்களை ஒரு தரப்பாக அங்கீகரிக்கும் வரைக்கும்தான்.  எங்களுக்கான அங்கீகாரம் தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சிகள் பிரதிநிதித்துவம் பெறாத வரைக்குமே நீடிக்கும். முஸ்லிம் கட்சிகள் தேசிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும் அவலநிலையாலேயே  அவர்களுக்கு தனித் தரப்பு அங்கீகாரம் கிடைக்கவில்லை.  கஜேந்திரன் பொன்னம்பலத்தின் வரவு SLFP UNP பேரின வாத அரசுகளுக்கு எதிராக அறவழி போராட்ட அரசியலை முன்னெடுத்து வளர்த்துச் செல்லவில்லை. SLFP UNP  ஆட்ச்சியாளர்களின் பேரின வாத செயல்பாடுகளுக்கு எதிராக  அவர்கள் போராடவோ சிறைகளை நிரப்பவோ இல்லை. பதிலாக புலம்பெயர் தமிழரதும் சர்வதேச தமிழ் ஆதரவாளர்களதும் காதுகளை நிரப்புகிறதில் மட்டுமே  குறியாகச் செயல்படுகிறார்கள். 

 ரணிலும் மகிந்தவும்  வடகிழக்கில்  தமிழர்களையும்  SLFP UNP கட்ட்சியின் சின்னங்களில் போட்டியிடவைத்து தமிழர்களின் தேசிய இனத் தன்மையையும் அதனால் கிட்டிய  தனித்தரப்பு அந்தஸ்தையும் அழிக்கிற முயற்சியில் தீவிரமாக உள்ளனர். அறவழியில்கூட போராடாமல் போலித் தீவிரவாதம்பேசி  கூட்டமைப்பை மட்டுமே குறிவைத்து   செயல்படுகிறவர்கள் நோக்கம் அச்சம் தருகிறது.  SLFP, UNPக்கு எதிராக தெருவில் இறங்கி தொடர்ந்து போராடாமல்  பதவிகளை தாருங்கள் என தேர்தலில் குதித்து கூச்சமைப்பின் வாக்குகளை பிரிபது SLFP, UNP போனற தேசிய கட்சிகளுக்கு வாசல் திறக்கிற அரசியல் செய்கிறார்களோ என  என அச்சத்தை ஏற்படுத்துகிறது.   

.

அரசுக்கு எதிராக தீவிரமாகப் போராடாமல் தேர்தலை மட்டும் குறிவைத்து தமிழர் கட்சிகளை உடைத்து அழித்தல் எனும் செயல்பாடு  கடந்த உள்ளூர் ஆட்சி தேர்தல்களிலேயே SLFP UNP கட்சிகளுக்கு வழ்விட்டு தமிழர் பலத்தை சிதறடித்துள்ளது.  வடகிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு உடைந்தால் அதன் பலனாக SLFP மற்றும்  UNP கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதனால் தனி இன தமிழர் தனித்தரப்பு அந்தஸ்தை இழக்க நேரும். அதன்பிறகு எமக்கு SLFP UNP சொல்வதைத் தவிர வேறு குரலே இருக்காது. க்ஜேந்திரன் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் அணி அரசியல் த்ந்தை செல்வா முன்னெடுத்த அர்ப்பனிப்புள்ள அறப் போரட்ட அரசியலாக இருந்து ஆதரிப்பது வேறு. அவர்கள் செயல்படும் கட்சியாக இல்லை.  அவர்கள் தேர்தலில் தமிழர் கூட்டமைப்பை உடைத்து பதவியை எங்களுக்கு தாருங்கள் செயல்படுகிறோம் என்கிற அரசியலாக இருக்கிற ஆபத்தை நீங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. 

.

கஜேந்திரன் பொன்னம்பலம் அணியை தேர்தல் நோக்கத்தை விட்டுவிட்டு அறவழியில் விடுதலை அரசியல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக கிழக்கு மாகானத்தில் தேர்தலில் குதித்தமை தமிழ அடையாளமான பிரதிநிதித்துவத்தைச் சிதைப்பதாகவே அமைதுள்ளது. பாராளுமன்ற பதவிக்காக மக்களைப் பிரிக்காமல் போராட்டங்களில் மக்களை இணைக்கிற பணியை செய்யுங்கள்.
கூட்டமைப்பு வெளியில் உள்ள அமைப்புகளை இன்னும் இன்னும் உள்வாங்கி வலுவடையும் அமைப்பாக ஜனநாயகத் தன்மைபெற்று விரிவடைய வேண்டும்.

தோழ தோழியரே, நமக்கு அதிக மக்களும் அதிக வாய்ப்புகளும் அதிக அதிக வளங்களும் அதிக காலமும் இல்லை

.

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

அரசுக்கு எதிராக தீவிரமாகப் போராடாமல் தேர்தலை மட்டும் குறிவைத்து தமிழர் கட்சிகளை உடைத்து அழித்தல் எனும் செயல்பாடு  கடந்த உள்ளூர் ஆட்சி தேர்தல்களிலேயே SLFP UNP கட்சிகளுக்கு வழ்விட்டு தமிழர் பலத்தை சிதறடித்துள்ளது.  வடகிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு உடைந்தால் அதன் பலனாக SLFP மற்றும்  UNP கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதனால் தனி இன தமிழர் தனித்தரப்பு அந்தஸ்தை இழக்க நேரும். அதன்பிறகு எமக்கு SLFP UNP சொல்வதைத் தவிர வேறு குரலே இருக்காது. க்ஜேந்திரன் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் அணி அரசியல் த்ந்தை செல்வா முன்னெடுத்த அர்ப்பனிப்புள்ள அறப் போரட்ட அரசியலாக இருந்து ஆதரிப்பது வேறு. அவர்கள் செயல்படும் கட்சியாக இல்லை.  அவர்கள் தேர்தலில் தமிழர் கூட்டமைப்பை உடைத்து பதவியை எங்களுக்கு தாருங்கள் செயல்படுகிறோம் என்கிற அரசியலாக இருக்கிற ஆபத்தை நீங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை

குறைந்தது கூட்டமைப்பு சமீப காலத்தில் செய்த ஒரு அறவழிப்போராட்டத்தை  ஞாபகப்படுத்துங்கள்.பார்க்கலாம் .

காலிமுகத் திடலில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பின்னர்
தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருமே பேச்சளவில் மட்டுமே இயங்கினார்கள்.
சிங்கள அரசுகளுடன் ஒப்பந்தங்களை  செய்த தந்தை செல்வா கூட அந்த ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டபோது எந்த விதமான மிகப்பெரிய அளவிலான அறவழிப்போராட்டத்திலும்
ஈடுபடவில்லை .சில கடையடைப்புக்கள் , திருகோணமலைக்கான   பாத யாத்திரை என்பதோடு  சரி.
 

குறைந்தது ஒரு வாரமாவது உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டாரா?
ஆனாலும் அவர் மக்களைத் தனது பேச்சாற்றலால் ஒன்றுதிரட்டினார்.
தமிழ் மக்களுக்கு இதுதான் தீர்வாக முடியும் என்று பாதையைக் காட்டினார்.மக்களும் அவர் வழி செல்லத்தயாராகினர்.

அவரின் பின்னரான காலம் தமிழரசுக்கட்சியின் பதவி மோகக் காலமானது.

அமிர் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராகி ஒரு போராட்டத்தையும் செய்யவில்லை.

இப்போ சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்கள்  எத்தனை போராட்டங்களை நடாத்தினார்கள்.

குறைந்தது முள்ளி வாய்க்கால் தமிழ் இனவழிப்பின்போதாவது ஏதாவது செய்தாரா? சரி

சம்பந்தர் இந்தியாவில், தமிழ் நாட்டில்  ஒளித்திருக்காமல்  அரசியற்போராட்டங்களிலாவது கலந்து கொண்டாரா?

ஆனால் கஜேந்திரன் கட்சி ஆரம்பித்ததும் வீதி  மறியல், உண்ணாவிரதம், பாத யாத்திரை என்று போராட்டத்திலேயே வாழ வேண்டும்.
தமிழரசுக்கட்சி நோகாமல் நொங்கு சாப்பிட வேண்டும் அப்படித்தான் கவிஞர் ஐயா சொல்ல வருகின்றாரா?     

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவாதங்கள் எப்படி அமைந்தாலும் சம்பந்தர் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டமைப்பும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் தமிழர் விடுதலைக்கான பொது போராட்டங்களிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழர் சிங்கள முற்போக்காலர்

 உறவு போன்ற பொதுப் பிரச்சினைகளிலும் கைகோர்ப்பது அல்லது புரிந்துணர்வுடன் செயல்படுவது பற்றி உடனடியாக சந்தித்துப்பேசி முடிவுக்கு வரவேண்டும் என கோருகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கும் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் கூட்டமைப்பாக இணைந்தாலும் தனித்தனியே செயல்ப்பட்டாலும் தமிழர் விடுதலையின் இரண்டு சக்கரங்களாகச் செயல்ப்படவேண்டும் என்பதே காலத்தின் கோரிக்கையாகும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

பொதுப் பிரச்சினைகளிலும் கைகோர்ப்பது அல்லது புரிந்துணர்வுடன் செயல்படுவது பற்றி உடனடியாக சந்தித்துப்பேசி முடிவுக்கு வரவேண்டும் என கோருகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கும் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் கூட்டமைப்பாக இணைந்தாலும் தனித்தனியே செயல்ப்பட்டாலும் தமிழர் விடுதலையின் இரண்டு சக்கரங்களாகச் செயல்ப்படவேண்டும் என்பதே காலத்தின் கோரிக்கையாகும்.

ஐயா இந்த ஒற்றுமையைப் பற்றி ஆராய்ந்த்துதான் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அதிலிருந்து கஜேந்திரன் வெளியேறக் காரணம் நீங்கள் உங்கள் முதல்ப் பந்தியிலே விழித்துக் கடிதம் வரைந்தவரது செயல்களே.
கஜேந்திரனையும் வேறு சிலரையும் ஓரங்கட்டிவிட்டால் தானே அடுத்த தளபதி என நினைத்த சுமந்திரன் அவர்களே இன்றைய குழறுபடிகளுக்கான முக்கிய காரணி.
இந்த ஒற்றுமையைப் பற்றி நீங்களே சுமந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் வரைந்து பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்து விவகாரங்களுக்கான இண அமைச்சராக ஒரு இஸ்லாமியரை சிங்களம் நியமித்தபோது அந்த நியமனத்தைப் பெரும்தன்மையுடன் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் என்னால் இந்து விவகாரங்களுக்கான இணை அமைச்சராக பதவியிலிருக்கமுடியாது ஆகவே சரியானவர்களை நியமியுங்கள் என சம்பந்தப்பட்டவர் தெரிவித்தால் முஸ்லீம்களது பெருந்தனமையும் சக தமிழர்களோடு அவர்கள் சேர்ந்து அரசியல் செய்வதற்கு ஆவலுள்ளவர்கள் என எம்மால் கணித்திருக்கலாம் ஆனால் நிலைமை அப்படி இல்லையே எகிக்கொடுத்தாலும் எனது பாத்திரத்தில் போடு அது பன்றிக்கறியாகவிருந்தாலும் பறுவாயில்லை எனக்கூறி அமைச்சர் பதவியை அது என்ன அமைச்சுக்குச் சார்ந்தது யார் சார்ந்தது என சிறிதுகூட யோசிக்காது ஏற்றுக்கொள்ளும் பக்குவமுள்ள முஸ்லீம்களுடன் எம்மால் இணைந்து செயல்படலாம் என நீங்கள் எண்ணுகிறீகள  ஜெயா அண்ணர் அவர்களே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 குடும்பம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய அக்கறை இல்லாதிருந்தால் பல கணவன் மனைவிகளுக்கு  சேர்ந்துவாழ விட்டுக்கொடுத்து சமரசம் செய்கிற அவசியம் இருந்திருக்காது. தாய்மண்னின் சந்ததிகளின் எதிர்காலம் பற்றிய அக்கறையே தமிழர் முஸ்லிம்களிடையே எப்படியும் சமரசமாகி இணைந்து செயல்படுகிற வழிவகைகலை கண்டடை நிர்பந்திக்கிறது தோழா

Edited by poet

On 6/11/2018 at 3:21 AM, poet said:

 

திரு சுமந்திரன் அவர்களே,

கட்சிக்குவெளியே அதிகாரங்களை கையகப்படுத்தி இயங்குகிறீர்கள் என்கிற சந்தேகம் மட்டுமே உள்ளது. அத்தகைய சந்தேகத்துக்கு இடமழிக்காமல் நீங்கள் தொடர்ந்தும் பணியாற்றவேண்டும் என்பதே தமிழரசுக்கட்சிக்கு உள்ளும் வெளியிலும் உள்ள பெரும்பாலான தமிழர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. விடுதலைக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உங்கள் அறிவும் செயல் திறனும்பற்றி யாருக்கும் சந்தேகமில்லை.
கட்சிக்கட்டுபட்ட வகையில் உங்கள் உழைப்பு தமிழர்களது பாராளுமன்ற அரசியலுக்கு அவசியமான ஒரு தருணத்தில் நீங்கள் ராஜினாமா பற்றிப் பேசுவதை ஏற்றுகொள்ளமுடியாது. - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

வணக்கம் ஜெயபாலன் ,

உங்களுடைய ஆதங்கம் புரிகின்றது ,தற்போதைய சூழ்நிலையில் சுமந்திரன் ராஜினாமா செய்வதென்ற பேச்சுக்கு இடமில்லை .

On 6/11/2018 at 7:05 AM, Elugnajiru said:

 

சுமந்திரன் தனது மனைவி இல்லாத ஒரு பெண்ணைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் படம் சமூகவலைத்தளங்களில் உலாவருவதை மறந்திட்டார்,  

 

 

 

கருத்துக்களை எழுதுகின்றவர்களுக்கு  எது உண்மை /பொய் என்று பகுத்தறியும் தகுதி இருக்கவேண்டும் .அல்லது ஆராய்ந்து உறுதிப்படுத்தி கருத்துக்களை முன்வைக்க வேண்டும் .முகப்புத்தகத்தில் உலவிய படங்கள் சுமந்திரனின் மனைவி,மகள் ஆகியோரது படங்கள் .கருத்துக்களை கருத்துக்களால் எழுத துணிவில்லாத வர்கள்தான் இப்படியான கேவலமான விடயங்களை அரங்கேற்றுவார்கள் .நாளைக்கு உங்களுடைய மனைவி பிள்ளைகளுக்கு இப்படி ???

On 6/15/2018 at 10:56 AM, வாத்தியார் said:

ஐயா இந்த ஒற்றுமையைப் பற்றி ஆராய்ந்த்துதான் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அதிலிருந்து கஜேந்திரன் வெளியேறக் காரணம் நீங்கள் உங்கள் முதல்ப் பந்தியிலே விழித்துக் கடிதம் வரைந்தவரது செயல்களே.
கஜேந்திரனையும் வேறு சிலரையும் ஓரங்கட்டிவிட்டால் தானே அடுத்த தளபதி என நினைத்த சுமந்திரன் அவர்களே இன்றைய குழறுபடிகளுக்கான முக்கிய காரணி.
இந்த ஒற்றுமையைப் பற்றி நீங்களே சுமந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் வரைந்து பாருங்கள்

2010இல் தேர்தலில் TNA வென்றதன் பின்புதான் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .தேர்தலுக்கு முன்னமே தங்களுக்கு சந்தர்ப்பம் தரவில்லை என்று TNA யில் இருந்து வெளியேறி விட்டார்களே .வரலாறு முக்கியம் வாத்தியாரே .

  • கருத்துக்கள உறவுகள்

கரி,
நான் ஒன்றும் வெள்ளை வேட்டிக்கள்வன் இல்லை 

அதேவேளை சுமந்திரனைப்பற்றி சமூக வலைத்தளங்களில் உலவிய இந்த விடையத்தை யாரும் இதுவரை மறுக்கவில்லை தவிர இச்செய்தி தகவல் ஊடகங்களுக்கான சட்டதிட்டங்கள் மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நாடுகளிலேயே அதிகமாக வெளிவ்ந்தது. அதேவேளை சுமந்திரன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் உலகம் முளுமைக்கும் அவருக்கான இராங்க ரீதியான பாதுகாப்பு இருக்கும் சும்ம காமா சோமா என அவரைப்பற்றி தவறாகச் சித்தரித்துவிட முடியாது தவிர அவரொரு திறமை வாய்ந்த வழக்குரைஞர் இலங்கை அரசியிலமைப்புச்சட்டம் பிரித்தானிய அரசியல் அமைப்பின் அத்திவாரத்திலிருந்தே வரையப்பட்டது. ஆகவே இவரைப்பற்றிய தகவல்கள் பிரித்தானியாவிலும் சமூக வலைத்தளங்களில் உலாவியது நீங்கள் வாழ்வது கனடாவில் கனடாவின் சட்டதிட்டங்களும் போலியான தகவல்களுக்கு அதிகூடிய தண்டனையளிக்கும்.

விருப்பமென்றால் சுமந்திரன் சட்ட நடவடிக்கையை தனது பாராளுமன்ற இராயாங்கத் தகுதி மூலமும் அப்புக்காத்துப் புலமைமூலமும் அவதூறாளர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கலாம். 

மீண்டும் மீண்டும் கூறுகிறேன்

தமிழர் அரசியலை வென்றெடுபதற்கான காலநதியில் கலந்த "சாக்கடை நீர்"  சுமந்திரனாவார் அந்த நீரைச் சுத்திகரிக்கமுடியாது வேண்டுஎன்றால் பன்றிப்பண்ணைக்கு மடைமாற்றம் செய்யலாம். 

On 6/18/2018 at 12:42 AM, Elugnajiru said:

தமிழர் அரசியலை வென்றெடுபதற்கான காலநதியில் கலந்த "சாக்கடை நீர்"  சுமந்திரனாவார் அந்த நீரைச் சுத்திகரிக்கமுடியாது வேண்டுஎன்றால் பன்றிப்பண்ணைக்கு மடைமாற்றம் செய்யலாம்.

உண்மை தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.