Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெனீஸ்வரனை பதவி நீக்கியமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

Featured Replies

டெனீஸ்வரனை பதவி நீக்கியமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

 

 

denis-cv-670x346.jpg

 

வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீர்பின் பிரதி உடனடியாக வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/11/டெனீஸ்வரனை-பதவி-நீக்கியமைக்கு-மேன்முறையீட்டு-நீதிமன்றம்-இடைக்காலத்-தடை.html

  • கருத்துக்கள உறவுகள்

டெனீஸ்வரனை பதவிநீக்கியது செல்லாது: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

June 29, 2018
625.500.560.350.160.300.053.800.900.160.

வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை பதவிநீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளது..

இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீர்பின் பிரதி உடனடியாக வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்படவுள்ளது.

விக்னேஸ்வரனிற்கு எதிரான தமிழரசுக்கட்சியின் அரசியல் நோக்குநிலையிலிருந்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் சார்பில், எம்.எ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்குள் தமிழரசுக்கட்சி அணி வெற்றிபெற்றிருந்தாலும், அரசியல்ரீதியாக மாகாணசபையின் அதிகாரமற்ற தன்மையை தீர்ப்பு புலப்படுத்துகிறது. மாகாண முதலமைச்சர்களிற்கும், ஆளுனரிற்குமிடையிலுள்ள அதிகார பேதத்தை இந்த தீர்ப்பு துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாகாணசபை முறைமையின் பலவீனம் தொடர்பான உரையாடல்களை மீளவும் இந்த தீர்ப்பு ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது.

 

http://www.pagetamil.com/9987/

  • தொடங்கியவர்

மீளவும் அமைச்சராகிறார் டெனீஸ்வரன்

b5aa8ed46c64eb5ac312bb4e4042301e?s=48&d=
 

Deniswaran-600x330.jpg

“வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்”

இவ்வாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கியது.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து, கடந்த 11ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படும் என்று திகதியிடப்பட்டிருந்தது.

எனினும், அன்றைய நாள் நீதியரசர்களில் ஒருவர் விடுப்பிலிருந்தமையால், தீர்ப்பு, கடந்த 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று தீர்ப்புக்காக எடுக்கப்பட்ட போது இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பினை அடுத்து ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த டெனீஸ்வரன்,

“எனது முயற்சியானது அநீதிக்கெதிரானது.முதலமைச்சர் தான்தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் படி எனது மக்கள் சேவையை தொடர மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் இன மத பேதங்களை மறந்து சேவை செய்தவன் நான்.இதனை சகலரும் அறிவர். எதிர்வரும் 9 ஆம் திகதி ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது கட்டளை ஒன்றை பிறப்பிக்கும்.

அதாவது என்னை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே. அத்துடன் எனது அமைச்சினை தற்போது பிடுங்கி கூறு கூறுகளாக வைத்திருக்கின்ற முதலமைச்சர், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது.

எனக்கு இந்த நல்லாட்சியில் நீதி கிடைத்துள்ளதை இட்டு சந்தோசம் அடைகின்றேன்” எனறார்.

இது தவிர ஊடகவியலாளரின் மற்றுமொரு கேள்வியான அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பீர்களா? என கேட்ட போது,

“பதவியேற்ற பின்னர் அதனை துறப்பதனைத் தவிர வேறு என்ன செய்வது? காரணம் இந்த முயற்சி முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கைத் தொடர்ந்தேன். இது மாத்திரமன்றி பழைய அமைச்சானது எனக்கு கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்துவிட்டு எனது பழைய அமைச்சினை தாருங்கள். மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளன” என்றும் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

http://www.newsuthanthiran.com/2018/06/29/மீளவும்-அமைச்சராகிறார்-ட/

நாட்டாமை தீர்ப்பை மாத்து

 

இது பௌத்த சிங்கள பேரினவாதத்தின் சதி 

donald duck laughing GIF

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா பாவம் அனந்தி அம்மையார்

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரன் கௌரவமாகப் பதவி விலகவேண்டும்!

 

 
 

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடு தவறானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால் கௌரவமாக அவர் பதவி விலக வேண்டும் என மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி துறை அமைச்சராக தொடர்ந்தும் பா.டெனீஸ்வரனே பதவி வகிப்பார் என கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலே எதிர்க்கட்சி தலைவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசாவின் அலுவலகத்தில் இன்று மாலை ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர், வட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், சி.வி.விக்னேஸ்வரன் தனது பதவியை துறக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/102614

முதலமைச்சர் தனது பதவியைத் துறக்கவேண்டும் : சி.தவராசா

 

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கௌளரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தனது பதவியைத் துறக்கவேண்டும் என வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியது சட்டரீதியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு 2 அமைச்சர்களை மட்டும் பதவி விலகக் கோருமாறு கடந்த வருடம் பரிந்துரைத்தது. எனினும் முதலமைச்சர் தன்னிச்சையாக ஏனைய இரண்டு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு கோரியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அப்போதைய அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவியிலிருந்து நீக்கியிருந்தார். இந்த நடவடிக்கை சட்டத்துக்கு முரணானது என அப்போதே எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதனால் முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சர் பதவியிலிருக்க அவருக்கு தடை விதித்தமை தவறு என்றும் டெனீஸ்வரனை தொடர்ந்து அமைச்சராக இருக்க வழிவகுத்துக் கொடுக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளையிட்டுள்ளது.

இவ்வாறு மாகாண சபையின் சட்ட எல்லை வரம்புகள் என்னவென்று தெரியாமல்தான் முதலமைச்சர் விகனேஸ்வரன் பதவியிலிருக்கிறார். அவர் எல்லையை மீறிய விடயங்களையும் பேசுவார், எல்லைக்குட்பட்ட விடயங்களையும் நடைமுறைப்படுத்தத் தெரியாது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தர்மீகரீதியாக தனது பதவியிலிருந்து விலகவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/?p=696114-முதலமைச்சர்-தனது-பதவியைத்-துறக்கவேண்டும்-:-சி.தவராசா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஹாஹா பாவம் அனந்தி அம்மையார்

பாவமென்றெல்லாம் ஒருவரை கதைக்காதீர்... ஒருவரை பாவமென்று கதைப்பது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமோ... சிலருக்கு பாவம் என்று சொல்வது பிடிக்காத ஒன்றாக இருக்கலாம்... வேறு சிலருக்கு பாவமென்று கதைப்பதால் வரக்கூடிய சலுகையை எண்ணி பூரிப்படையலாம்... இந்த பாவத்தால் வரக்கூடிய நன்மை என்பது ஒருவரது சுய மரியாதைக்கு பங்கம் விளைவிக்க கூடும் என்பதால் அநத பாவமும் கூட பாவமே...

பாவம் "பாவம்"... 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

முதலமைச்சர், அனந்தி, சிவநேசன் பதவி விலகுவது நல்லது – டெனீஸ்வரன்

 

Deniswaran-300x200.jpgமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் தவறைச் சுட்டிக்காட்டவே அவரது உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன் என்று வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்புக்குப் பின்னர், கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எனது முயற்சி அநீதிக்கு எதிரானது. முதலமைச்சர் தான்தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

என்னை மீண்டும் பதவியிலமர்த்த வேண்டும் என்று எதிர்வரும் 9 ஆம் நாள் ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையைப் பிறப்பிக்கும்.

அத்துடன் எனது அமைச்சை தற்போது வைத்திருக்கின்ற முதலமைச்சர், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது.

எனக்கு நீதி கிடைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கைத் தொடர்ந்தேன். பழைய அமைச்சு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது.

என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக, இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்து விட்டு எனது பழைய அமைச்சை தாருங்கள்.

மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/06/30/news/31653

  • தொடங்கியவர்

டெனீஸ்­வ­ரனைப் பதவி நீக்­கி­ய­மைக்கு- நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை – பதவி வில­கப்­போ­கும் அமைச்­சர் யார்?

 

CeSf0-WWwAAzi1B.jpg

 
 

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யில் இருந்து மீன்­பி­டித் துறை அமைச்­சர் டெனீஸ்­வ­ரனைப் பதவி நீக்­கி­ய­மைக்கு நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை விதித்­துள்ளமையை அடுத்து அவர் தனது அமைச்­சுப் பொறுப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கு வச­தி­யாக வடக்கு மாகாண சபை­யில் இருந்து ஓர் அமைச்­சர் பதவி வில­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அது யார் என்­கிற கேள்வி பல­மாக எழுந்­துள்­ளது?

அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தச் சட்­டத்­துக்கு அமை­வாக, மாகாண அமைச்­ச­ர­வை­யில் ஆகக் கூடி­யது 5 பேர் மாத்­தி­ரமே பதவி வகிக்­க­லாம். ஏற்­க­னவே 5 பேர் பதவி வகிக்­கின்­ற­னர். சி.வி.விக்­னேஸ்­வ­ரன், திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன், க.சர்­வேஸ்­வ­ரன், ஜி.குண­சீ­லன் ஆகி­யோர் உள்­ள­னர்.

நீதி­மன்­றத் தீர்ப்­பி­னால் இவர்­க­ளில் ஒரு­வர் பதவி வில­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. யார் அவர் என்­கிற எதிர்­பார்ப்பு எகி­றி­யுள்­ளது. எனி­னும் நீதி­மன்­றத் தீர்ப்பு தனது கைக­ளுக்­குக் கிடைத்த பின்­னர் ­தான் அடுத்த கட்ட நட­வ­டிக்கை என்று முத­ல­மைச்­சர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

 

மேலும், டெனீஸ்­வ­ரன் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட பின்­னர், அவர் வகித்த அமைச்­சுப் பொறுப்­புக்­கள் முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட இரண்டு அமைச்­சர்­கள் பங்­கிட்­டி­ருந்­த­னர்.

இதன் கார­ண­மாக அவ­ரது அமைச்­சுப் பொறுப்­புக்­களை வகித்­த­வர்­கள், ஆளு­நர் முன்­ன­பாக மீண்­டும் பத­வி­யேற்­றுத் தமது பழைய அமைச்­சுப் பொறுப்­புக்­களை தொடர வேண்­டிய நிலை­யும் ஏற்­பட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/08/டெனீஸ்­வ­ரனைப்-பதவி-நீக்­கி­ய­மைக்கு-நீதி­மன்­றம்-இடைக்­கா­லத்-தடை-பதவி-வில­கப்­போ­கும்-அமைச்­சர்-யார்.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசானுக்கும்.. மாணவனுக்கும் இடையிலான போட்டியில்... டெனிஸ் சுண்டெலி.. ஓடிவிளையாடிக்கிட்டு இருக்குது.

ஆயிரம் ஆயிரம் மக்களும் மாவீரர்களும் உயிரைக் கொடுத்து இந்த மண்ணுக்கு ஆற்றிய சேவையை விடவா.. இவர் எல்லாம் அதிகாரமற்ற மாகாண சபை அமைச்சை வைச்சு மக்களுக்கு சேவையாற்றப் போறார்.

மக்களுக்கு சேவை செய்ய எவ்வளவோ வழி இருக்க.. இவருக்கு எதுக்கு இந்த பதவி ஆசை..?????!

விக்கி ஐயா.. முதலமைச்சர் என்ற அந்த பதவியால் செய்ததை விட.. அந்தப் பதவிக்கு பாவிக்கப்படும் போலி முக்கியத்துவத்தை வைச்சு மக்கள் சொல்ல வேண்டியதை உலகிற்கு சொல்ல முற்படுவது தான் முக்கியம். அதை இயன்ற அளவு செய்கிறார் என்று சொல்லலாம். ஆனால்.. டெனிஸ்வரன்.. மக்களுக்கு எதை வெட்டிக் கிழித்திடுவார்..???!?

Edited by nedukkalapoovan

3 hours ago, nedukkalapoovan said:

விக்கி ஐயா.. முதலமைச்சர் என்ற அந்த பதவியால் செய்ததை விட.. அந்தப் பதவிக்கு பாவிக்கப்படும் போலி முக்கியத்துவத்தை வைச்சு மக்கள் சொல்ல வேண்டியதை உலகிற்கு சொல்ல முற்படுவது தான் முக்கியம். அதை இயன்ற அளவு செய்கிறார் என்று சொல்லலாம்.

ஆமா உங்கடை விக்கி ஐயா இதுவரைக்கும் சாதித்ததில் ஒன்றையாவது முடிந்தால் சொல்லுங்கோ. இல்லை எண்டால் அவர் உலகத்துக்கு சொன்ன நற்செய்தியையாவது சொல்லுங்கோ.

ஓஓஹோ பிரேமானந்தி விடயமா - அதுதான் உலகமே கொட்டாவி விட்டு இளிக்குதே. ???

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா உங்கடை விக்கி ஐயா இதுவரைக்கும் சாதித்ததில் ஒன்றையாவது முடிந்தால் சொல்லுங்கோ. இல்லை எண்டால் அவர் உலகத்துக்கு சொன்ன நற்செய்தியையாவது சொல்லுங்கோ.

ஓஓஹோ பிரேமானந்தி விடயமா - அதுதான் உலகமே கொட்டாவி விட்டு இளிக்குதே. ???

ஒருத்தரும் செய்ய முன்வராததை.. செய்தார். சொறீலங்கா சிங்கள அரசு செய்தது இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகத்திற்கு ஆதாரங்களை திரட்டி தீர்மானமாக இயற்றி சர்வதேசப் பிரதிநிதிகளிடமும் கையளித்துள்ளார். ☺️

சம் சும் கும்பலோ.. இனப்படுகொலையே நடக்கல்ல.. மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லி மக்களின் மனங்களில் உள்ள துயரங்களை கூட்டினார்கள்.. சிங்கள எஜமானர்களுக்காகவும்.. ஹிந்திய கொலைகாரர்களுக்காவும். இறுதியில் அங்கும் ஏமாற்றமே. 

9 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா உங்கடை விக்கி ஐயா இதுவரைக்கும் சாதித்ததில் ஒன்றையாவது முடிந்தால் சொல்லுங்கோ. இல்லை எண்டால் அவர் உலகத்துக்கு சொன்ன நற்செய்தியையாவது சொல்லுங்கோ.

 

 

இருதய சிகிச்சை நிபுணர் வைத்தியர் பூ, லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை

 

9 hours ago, nedukkalapoovan said:

ஒருத்தரும் செய்ய முன்வராததை.. செய்தார். சொறீலங்கா சிங்கள அரசு செய்தது இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகத்திற்கு ஆதாரங்களை திரட்டி தீர்மானமாக இயற்றி சர்வதேசப் பிரதிநிதிகளிடமும் கையளித்துள்ளார். ☺️

சம் சும் கும்பலோ.. இனப்படுகொலையே நடக்கல்ல.. மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லி மக்களின் மனங்களில் உள்ள துயரங்களை கூட்டினார்கள்.. சிங்கள எஜமானர்களுக்காகவும்.. ஹிந்திய கொலைகாரர்களுக்காவும். இறுதியில் அங்கும் ஏமாற்றமே. 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

கிணற்று தவளைகளுக்காக..................

 

On 7/1/2018 at 8:08 AM, nunavilan said:

கிணற்று தவளைகளுக்காக..................

கிணற்று தவளைகளுக்காக நிறைய எழுதியாச்சு. தவளையைப் பிடித்து கிணத்துக்குள் விட்டவனை நோகனுமே தவிர கிணத்துக்குள் இருந்து கத்தும் தவளையை நொந்து என்ன பயன்.

On 6/30/2018 at 5:49 PM, nedukkalapoovan said:

ஒருத்தரும் செய்ய முன்வராததை.. செய்தார். சொறீலங்கா சிங்கள அரசு செய்தது இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகத்திற்கு ஆதாரங்களை திரட்டி தீர்மானமாக இயற்றி சர்வதேசப் பிரதிநிதிகளிடமும் கையளித்துள்ளார். ☺️

சும்மா பொய் சொல்லாமல்,  அவர் அப்படி செய்தார் என்று கண்ட கண்ட இணையத்தளத்தில் வந்ததை தராமல் அவர் கையளித்த உண்மையான அறிக்கையை முடிந்தால் இங்கு பிரசுரியுங்கள் - உங்களை அப்ப நம்புறேன்

பொய்கள் நிலைக்காது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

சும்மா பொய் சொல்லாமல்,  அவர் அப்படி செய்தார் என்று கண்ட கண்ட இணையத்தளத்தில் வந்ததை தராமல் அவர் கையளித்த உண்மையான அறிக்கையை முடிந்தால் இங்கு பிரசுரியுங்கள் - உங்களை அப்ப நம்புறேன்

பொய்கள் நிலைக்காது

நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இங்கு கருத்து வைக்கிறீர்கள் என அறியலாமா??

On 7/2/2018 at 10:20 PM, nunavilan said:

நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இங்கு கருத்து வைக்கிறீர்கள் என அறியலாமா??

இதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் வேறு ஒன்றும் இல்லை என்ற ஆதாரத்தில்தான் எனது கருத்தை முன் வைக்கின்றேன்.

முடிந்தால் ஆதாரத்தை முன்வைக்கட்டும்.

இப்படி எத்தனைபேரை பாத்திருப்போம்.

கடைசிவரைக்கும் ஆதாரம் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2018 at 1:53 PM, ஜீவன் சிவா said:

கிணற்று தவளைகளுக்காக நிறைய எழுதியாச்சு. தவளையைப் பிடித்து கிணத்துக்குள் விட்டவனை நோகனுமே தவிர கிணத்துக்குள் இருந்து கத்தும் தவளையை நொந்து என்ன பயன்.

தவளையை யாரும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டால்தானே  அதைப்பற்றி யோசிக்கவேண்டும். இந்தத்தவளை தானே போய் எல்லோ  கிணற்றுக்குள் விழுந்து கத்திக்கொண்டு இருக்கிது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.