Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லூர் கோவிலில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை, உள்ளே விட மறுத்த நிர்வாகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோவிலுக்கு, இராணுவம் வரலாம், போலீசார் வரலாம், வெள்ளைக்காரன் வரலாம்.... 
ஆனால்  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டும் தமது வேண்டுதல்களுக்காக வரக்கூடாது. கதவடைக்கும் நல்லூர் கோவில் நிர்வாகம்.  இவர்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

நல்லூர் கோவிலுக்கு, இராணுவம் வரலாம், போலீசார் வரலாம், வெள்ளைக்காரன் வரலாம்.... 
ஆனால்  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டும் தமது வேண்டுதல்களுக்காக வரக்கூடாது. கதவடைக்கும் நல்லூர் கோவில் நிர்வாகம்.  இவர்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நல்லூர் கோவில் தனியாருக்கு சொந்தமான வணிக நிறுவனம், இல்லையா? ஆகவே அவர்களுக்கு தமது நிலத்திலும், நிறுவனத்திலும் முழுமையான கட்டுப்பாடு உள்ளது. நீங்களோ வேறு யாருமோ கேள்வி கேட்க முடியாது.

மாறாக, வட பகுதியில் உள்ள பெரும்பாலான கத்தோலிக்க தேவாலயங்கள் பொதுச்சொத்து. எல்லோரும் மதம் மாறி இந்த கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வந்து போராட்டம் நடத்தலாமே? இந்த தேவாலயங்களில் போராட்டங்கள் முன்னர் பலமுறை நடந்து இருக்கின்றன. பல கத்தோலிக்க மத குருக்களும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஆதரவு தருவார்கள்.

உங்கள் எல்லோரையும் மதம் மாற ஊக்குவிக்க  எனக்கு இந்த அரிய சந்தர்ப்பத்தை தந்த:

  1. நல்லூர் கோவில் நிருவாகத்துக்கும்,
  2. இந்த உறவுகளை காணாமல் போகச்செய்த கோத்தபாயாவுக்கும், 
  3. விடுதலை போராட்டத்தில் இந்த அளவு அழிவுகளுக்கு தலைமை வகித்து வழிநடத்திய விடுதலை புலிகளுக்கும்

எனது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் நடாத்த ஏன் மதம் மாற வேண்டும்??
இனப்படுகொலை செய்த கோத்தபாயாவுக்கு ஏன் நன்றி.

அழிவுகள் இல்லாமல் இவ்வுலகில் நடந்த போராட்டங்கள் (வெற்றி தோல்விகளுக்கு அப்பால்)  எத்தனை??

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

போராட்டம் நடாத்த ஏன் மதம் மாற வேண்டும்??

தோல்வி அடைவதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் போராட்டங்களுக்கு மதமாற்றம் தேவை இல்லை.

வெற்றி அடைய விரும்பும் போராட்டங்களுக்கு பெரும் அளவில் ஆதரவு தேவை.

இந்து சமய கோவிலான நல்லூரும் இந்து சமய தலைவர்களும் இந்து நாடான இந்தியாவும் ஈழத்தமிழ் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவு தர மாட்டா. ஆனால் ஆதரவு தருவதாக காட்டி கழுத்தறுப்பு செய்ததது தான் வரலாறு.

கிழக்கு தீமோரிலும் தென் சூடானிலும் போராட்டங்கள் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணங்களில் பொதுவான ஒன்று இரெண்டு பிரதேசங்களிலும் கிறீஸ்தவர் பெரும்பான்மையாக வாழ்வதனால் கிறீஸ்தவ, கத்தோலிக்க நாடுகள் உலக ஆதரவை திரட்டி கொடுத்தன. ஈழத் தமிழ் போராட்டத்தை அமரிக்க வெளிவிககார செயலாளராக இருந்த மடலின் அல்பிரைட் இந்து பயங்கரவாதிகளின் போராட்டம் என்று விபரித்து இருந்தார். ஆகவே ஆதரவு தராத இந்து சமயத்தில் இருந்து கிறீஸ்தவ சமயத்துக்கு மாறி போராட்டம் நடத்தினால் கிறிஸ்தவ ஆலயங்களில் போராட்டம் செய்து உலக மட்டத்தில் கிறீஸ்தவ நாடுகளின் ஆதரவை கிழக்கு தீமோர் மற்றும் தென் சூடான் போல பெற்று கொள்ளலாம். இந்து சமயமும் இந்தியாவும் ஈழத்தமிழருக்கு என்றும் எதிரானவை. எமது வரலாறு அதைத்தான் சொல்கிறது.

19 hours ago, nunavilan said:

இனப்படுகொலை செய்த கோத்தபாயாவுக்கு ஏன் நன்றி.

கோத்தபாயாவின்  இனப்படுகொலையினால் தானே நல்லூர் கோவில் தமிழ் மக்களுக்கு ஆதரவில்லை என்ற உண்மை தெரிய வந்தது?

19 hours ago, nunavilan said:

அழிவுகள் இல்லாமல் இவ்வுலகில் நடந்த போராட்டங்கள் (வெற்றி தோல்விகளுக்கு அப்பால்)  எத்தனை??

ஆக,  நீங்கள் சொல்வது இந்த அழிவுகள் போராட்டங்களில் சாதாரணம் என்றா? அதை தான் அமெரிக்க அரசும் யாழ்ப்பாணத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு கேட்ட தமிழ் மக்களிடம் சொன்னது. நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள் - அழிவு வந்து இருக்கிறது, இப்படித்த்தான் மற்ற நாடுகளிலும் கூட. ஆகவே இது ஒன்றும் வித்தியாசமான ஒன்றல்ல, போர்க்குற்ற விசாரணை கேட்பதை விட்டுவிடுங்கள் என்று அமேரிக்கா சொல்கிறது . நீங்களும் அதை தானே சொல்கிறீர்கள்?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

அப்ப கொசாவோவில்  நடந்தது என்னங்க ? கேட்பவன் கேனையன் என்றால் எலி புக்காரா ஓடுவது போல் உங்கள் கதை .

நல்லூர் நிர்வாகத்தில் இயங்கும் பேராசைக்காரர்களின் காடைத்தனங்களில் இதுவும் ஒன்று.

இதுபோன்ற சந்தர்ப்பங்களை வைத்து மதமாற்ற ஈனத்தொழில் ஈடுபடும் மதவெறி  மாஃபியாக்கள் உற்சாகம் அடைந்துள்ளதும் ஆபத்தானது! இவர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Jude said:

கோத்தபாயாவின்  இனப்படுகொலையினால் தானே நல்லூர் கோவில் தமிழ் மக்களுக்கு ஆதரவில்லை என்ற உண்மை தெரிய வந்தது?

ஆக,  நீங்கள் சொல்வது இந்த அழிவுகள் போராட்டங்களில் சாதாரணம் என்றா? அதை தான் அமெரிக்க அரசும் யாழ்ப்பாணத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு கேட்ட தமிழ் மக்களிடம் சொன்னது. நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள் - அழிவு வந்து இருக்கிறது, இப்படித்த்தான் மற்ற நாடுகளிலும் கூட. ஆகவே இது ஒன்றும் வித்தியாசமான ஒன்றல்ல, போர்க்குற்ற விசாரணை கேட்பதை விட்டுவிடுங்கள் என்று அமேரிக்கா சொல்கிறது . நீங்களும் அதை தானே சொல்கிறீர்கள்?

அப்போ மற்றைய  போராட்டம் நடந்த நாடுகளில் போர் குற்ற விசாரணைகள் நடந்து தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறதே. அதெப்படி.?? .
அழிவுகள் நடந்தது என்று சொன்லியுள்ளேன். சாதாரணம் என ஏன் மொழி பெயர்க்கிறீர்கள்.  கருத்தை திரிக்க முயலாதீர்கள். பூசி மெழுகுவதில்  தீவிரம் காட்டுகிறீர்கள் என்பது புரிகிறது.

Quote

தோல்வி அடைவதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் போராட்டங்களுக்கு மதமாற்றம் தேவை இல்லை.

இதை எப்படி அறிந்தீர்கள்.30 வருடத்துக்கு முன் அறிந்த முனிவர் போல் சொல்கிறீர்கள்.?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உங்கள் எல்லோரையும் மதம் மாற ஊக்குவிக்க  எனக்கு இந்த அரிய சந்தர்ப்பத்தை தந்த:

நீங்கள்  தெருக்கள், சந்தைகள், மூலை, முடக்குகள் இன்னும் பல இடங்களில் மத மாற்றம் செய்ய ஒரு கூட்டம் அலைந்து   திரிகிறது. அதில் ஒருவரா நீங்கள்?
தனித்துவத்தை இழந்து என்ன மண்ணுக்கு தமிழருக்கு சுதந்திரம் என விளக்க முடியுமா???

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

அழிவுகள் நடந்தது என்று சொன்லியுள்ளேன். சாதாரணம் என ஏன் மொழி பெயர்க்கிறீர்கள்.  கருத்தை திரிக்க முயலாதீர்கள்.

கருத்த்தை திரிக்கவில்லை - "சாதாரணம்" இல்லாத அழிவுகள் அசாதாரண அழிவுகள் தானே? உங்களின் கருத்து அழிவுகள் அசாதாரணம் என்பதானால் அது எனது கருத்தை உறுதி செய்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள செய்வதே எனது நோக்கம். நீங்கள் பதில் எழுதிய எனது கருத்து மீண்டும் ஒருமுறை இதோ கீழே:

On 7/9/2018 at 10:00 AM, Jude said:

விடுதலை போராட்டத்தில் இந்த அளவு அழிவுகளுக்கு தலைமை வகித்து வழிநடத்திய விடுதலை புலிகளுக்கும்

எனது நன்றிகள்.

எனது கருத்துடன் உடன்படுவதை உறுதி செய்தற்கு நன்றி.?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

கருத்த்தை திரிக்கவில்லை - "சாதாரணம்" இல்லாத அழிவுகள் அசாதாரண அழிவுகள் தானே? உங்களின் கருத்து அழிவுகள் அசாதாரணம் என்பதானால் அது எனது கருத்தை உறுதி செய்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள செய்வதே எனது நோக்கம். நீங்கள் பதில் எழுதிய எனது கருத்து மீண்டும் ஒருமுறை இதோ கீழே:

எனது கருத்துடன் உடன்படுவதை உறுதி செய்தற்கு நன்றி.?

நான் நினைத்ததையும் நீங்கள் நினைத்ததையும் எப்படி உங்களால் சாம்பாராக்க முடிந்தது??  

sad baby GIF

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

நீங்கள்  தெருக்கள், சந்தைகள், மூலை, முடக்குகள் இன்னும் பல இடங்களில் மத மாற்றம் செய்ய ஒரு கூட்டம் அலைந்து   திரிகிறது. அதில் ஒருவரா நீங்கள்?
தனித்துவத்தை இழந்து என்ன மண்ணுக்கு தமிழருக்கு சுதந்திரம் என விளக்க முடியுமா???

தமிழரின் ஐம்பெரும் காப்பிய காலத்தில் பௌத்த மற்றும் சமண மத தமிழரை இந்து தமிழர் கழுவேற்றி கொன்று வாள்முனையில் இந்துக்களாக மதம் மாற்றினார்கள். இன்று ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்து கிறீஸ்தவராக  மதம் மாற்றுகிறது. இந்துக்களின் குரூர முறையிலும் பார்க்க இந்த கிறீஸ்தவரின் முறை எவ்வளவோ சிறப்பானது. விருப்பமில்லாவிட்டால் நீங்கள் அவர்களை தாராளமாக திட்டலாம். நானும் செய்து இருக்கிறேன். அன்று எம் பௌத்த மற்றும் சமண முன்னோர்கள் இப்படி திட்ட நினைத்து கூடப்பார்க்க முடியவில்லை, இந்துக்கள் அவர்களை கழுவேற்றி கொன்றார்கள். பயங்கரவாதிகள்.

தனித்துவத்தை இழந்து என்ன மண்ணுக்கு தமிழருக்கு சுதந்திரம் என விளக்க முடியுமா???

இந்துக்களாக மாறி வட இந்திய கடவுள்களுக்கு சம்ஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்லி, நீங்கள் தீண்டத்தகாத இனம், நீச மொழி பேசும் மக்கள் என்று ஏற்றுக்கொண்ட போது உங்கள் தனித்துவம் எங்கே போனது? வட இந்திய கடவுள்களை ஏற்றுக் கொண்டது போல மத்திய கிழக்கு  அல்லாவையும் நபியையும், இயேசு  கிறீஸ்துவையும் ஜெஹோவாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மறைந்த விஞ்ஞானி  அப்துல் கலாமையும் உங்களில் ஒருவராக கொண்டாடலாம். 

இல்லை வேண்டாம், ஆக இந்துக்கள் மட்டுமே தமிழர், இந்து தமிழ் அடையாளமே எங்கள் தனித்துவம் என்று நின்றால் இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களே உங்களை அழித்து எஞ்சியவர்களை சீனருக்கும், கிறீஸ்தவ நாடுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் அடிமைகளாக்குவார்கள். உங்களுக்கு சுதந்திரம் ஒரு இடமும் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் விசாரித்த வகையில் தெரிய வருவது, சமய அநுஸ்டானங்கள் படி, இறந்து விட்ட அல்லது இறந்ததாக கருதப்படுபவர்களுக்கான, சடங்குகள் நடத்தி, அது தொடர்பான தொடக்குகாலம் முடியும் வரை கோவிலுக்குள் போக கூடாதாமே. இது முட்டையா, கோழியா முதலில் கதை போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நல்லூர் கோவிலின் நிர்வாகத்தில் எந்தவிதத்திலும் பங்குபற்றாதவர், சின்ன வயதில இருந்தே இவர் இக்கோவிலின் சுற்றாடலில் வாழ்கிறார் தான் கோவில் நிர்வாகம் எனக்கூறுபவரைத்தான் கூறுகிறேன், நல்லூர் முதலாளியின் மகனது பந்தம் இவர் யாழ் பல்கலைக்கழகத்தில வேலை செய்கிறார் தொண்ணூறுகளில் இவர் எல்லாராலும் அறியப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர். அந்தவேளையிலேயே கல்யானம்கட்டி ஒரு பிள்ளை இருந்தது அப்படியிருந்தும்  பொடிவிளையாட்டில் வீரன்

புறநிலையில் சிங்கள பேரினவாதம் எப்படி தமிழர்களை நசுக்குகின்றதோ அவ்வாறேதான் அகநிலையில் இந்த ஆதிக்க அடயாளமான நல்லு◌ார் போன்றனவும் அண்மையில் எந்திரம் கொண்டு தேர் இழுத்த நிகழ்வும். இவ்வாறா கூறுகளையே மையவாதம் எனச் சொல்கின்றோம். இன்றை தமிழ் அரசியல் வாதிகள் இந்த மையவாதத்துக்குள் தங்கள் அரசியலை கொண்டிருப்பவர்கள். காணாமல் போன உறவுகளுடன் தோழோடு தோழ் நின்று போராடவேண்டியவர்கள் அவர்கள் மட்டுமில்லை கோயில் நிர்வாகங்களும் பல்கலைக்கழகங்களும்தான் ஆனால் அதை செய்ய மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் மையவாதத்துக்குள் தமது அடிப்படை இயக்கத்தை கொண்டிருப்பவர்கள். இந்த மையவாதக் கூறுகளின் செயற்பாடுகள் அனைத்தும் சிங்கள பேரினவாதத்திற்கே சாதகமாக தொடர்ந்து இருக்கும். போராட்ட அழிவின் அகபுற நிலைக் காரணிகளில் அகநிலைக் காரணி இதுவேயாகும். சமூகத்தை சமூக அரசியல் மற்றும் உளவியலை பிரித்து சிதைத்து இனம் என்ற கட்டமைப்பை தகர்த்துக்கொண்டேயிருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.