Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள்

Featured Replies

இரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள்

வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொழும்பிலிருந்து 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் நேற்று மாலை வவுனியாவை சென்றடைந்துள்ளன.

இலவச அம்பியூலன்ஸ் வண்டி சேவையை செயற்படுத்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திட்டமிட்டிருந்தார்.

அந்த வகையிலேயே குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பின்னர் இரவு 8.00 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளன. மிகுதி 29 வண்டிகள் ஊவா மாகாணத்தில் சேவையில் ஈடுபடவுள்ளன.

வவுனியாவில் மூன்று, மன்னாரில் மூன்று, முல்லைத்தீவில் மூன்று, மாங்குளத்தில் இரண்டு, கிளிநொச்சியில் நான்கு, யாழ்ப்பாணத்தில் ஏழு அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

24 மணிநேரமும் நோயாளிகள் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/188488?ref=home-feed

  • தொடங்கியவர்

யாழில் இல­வச அம்­பியூலன்ஸ் சேவை ஆரம்ப நிகழ்வு பிர­தமர் தலை­மையில்

03-35b40bacd7989887520e7c6bc2e115fccf92cedb.jpg

(எம்.எம்.மின்ஹாஜ்)  

இந்­தியப் பிர­தமர் மோடியும் உரை­யாற்­றுவார்   

வடக்கில் இல­வச அம்பியூலன்ஸ் சேவை­யினை ஆரம்­பிக்கும் நிகழ்வு நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­கழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,  பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொள்­ள­வுள்ளார்.   

யாழ்ப்­பாணம் துறை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறும் இந்த நிகழ்வில் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி உரை­யாற்­ற­வுள்ளார். இணை­ய­வ­ழி­மூ­ல­மாக அவ­ரது உரை நேர­டி­யாக இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­தி­யாவின் உத­வி­யுடன் 1990 சுவ­சி­றிய எனும் திட்­டத்தின் கீழ் இந்த இல­வச அம்­புலன்ஸ் சேவை கொழும்பு உட்­பட தென்­ப­கு­தியில் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இந்த சேவை­யினை வடக்கில் ஆரம்­பிக்கும் நிகழ்வே நாளை மறு­தினம் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெ­று­கின்­றது. பிற்­பகல் 3.30மணிக்கு நடை­பெறும் இந்த நிகழ்வில் தேசிய திட்­ட­மிடல் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா, வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் உட்­பட வட­மா­கா­ணத்தை சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதே­வேளை கம் பெர­லிய வேலைத்­திட்­டத்தின் இரண்டாம் கட்­டமும் வட­ப­கு­தியில் ஆரம்­பித்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த நிகழ்­விலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்து கொள்வார்.

நாளை மறு­தினம் சனிக்­கி­ழ­மையும் ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் கிளி­நொச்சி, முல்லை தீவு மற்றும் யாழ்ப்­பா­ணத்தில் கம்­பெ­ர­லிய நிகழ்வு நடை­பெ­ற­வுள்­ளது. இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் பங்­கேற்­க­வுள்ளார்.

கம்­பெ­ர­லிய வேலைத்­திட்­டத்தின் ஆரம்ப நிகழ்வு குரு­நாகல் நிக­வ­ரட்­டிய பகு­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நடை­பெற்­றது. இதன்­படி இரண்டாம் கட்டம் வடக்கில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

இந்த திட்­டத்தின் கீழ் கிரா­மத்தின் வீதி கட்­ட­மைப்பு, பாட­சா­லைகள், விளை­யாட்டு மைதா­னங்கள் புன­ர­மைப்பு செய்­யப்­ப­டு­வ­துடன் கைத்­தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு கடன் உத­வி­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. கிரா­மத்தை கட்­டி­யெ­ழுப்பும் பிர­தான நிகழ்ச்சி திட்­ட­மாக கம்­பெ­ர­லிய கரு­தப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­ட­தக்­கது.

கிளி­நொச்சி, கரைச்சி பிர­தேச செய­ல­கப்­பி­ரிவில் நிதி மற்று் ஊடக அமைச்­சினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட விவ­சா­யி­களின் தானி­யங்கள் பாது­காப்பு மையம் சனிக்­கி­ழமை பிற்­பகல் 2.30 மணிக்கு பொது­மக்­களின் பாவ­னைக்­காக ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த நிகழ்­விலும் பிர­தமர் பங்­கேற்­க­வுள்ளார்.

இத­னை­விட மீள்­கு­டி­யேற்ற அமைச்­சினால் அன்­றைய தினம் கிளி­நொச்சி மாவட்­டத்தில் பொதுச்சந்தைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி பொதுச்சந்தையானது தீ விபத்தை அடுத்து சேதமடைந்திருந்தது. இதனையடுத்தே புதிய சந்தைக்கான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்த நிகழ்விலும் பிரதமர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-19#page-1

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தேவைகளுக்காக ஓரிரவில் நடக்கும் விடயங்கள்.. மக்களின் தேவை என்றால்.. பல ஆண்டுகள் ஆகும். ஆக.. அரசியல்வாதிகளின் நலன் கருதித்தான் நாட்டு மக்களின் தேவைகள் தீர்மானிக்கப்படுகின்றன.. அந்த நிலையில் தான்.. மக்கள்.. வைக்கப்பட்டுள்ளனர். ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

இரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள்

5 hours ago, நவீனன் said:

வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளன. மிகுதி 29 வண்டிகள் ஊவா மாகாணத்தில் சேவையில் ஈடுபடவுள்ளன.

ஊவாமாகாணத்துக்கு குடுக்கிறதை ஏன் வடமாகாணத்துக்கு தள்ளிக்கொண்டு போயினம். நல்லூரில் அரச்சனை செய்து தேங்காய் உடைக்கவோ? tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை தேர்தல் தமிழ்நாட்டுக்கு போட்டியா நடக்கும் போல் பட்சி கூவுது சம்பவங்களும் அவ்வாறே நடக்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பல மாநிலங்களில் இறந்தவர்களை கொண்டு செல்லக்கூட வாகன வசதியின்றி தோளில் சுமந்தும், ஆட்டோவில், இரு சக்கர வாகனங்களில், குப்பை லாரிகளில், மரக்கறி தள்ளு வண்டிகளில்கூட கொண்டு செல்கிறார்கள்,

பல இடங்களில் நோயாளிகள்,கர்ப்பிணிகள் வயோதிபர்களை பல கிலோமீற்றர் மருத்துவமனைவரை தோளில் காவி செல்கிறார்கள்,கால தாமதத்தினால் பல நோயாளிகள் இடைநடுவே இறந்தும் போகிறார்கள்...

அப்படி ஒரு அவலநிலை சொந்தநாட்டில் நிலவும்போது அயல்நாடான இலங்கைக்கு இலவசமாக அம்புலன்ஸ் கொடுக்க வெட்கமாயில்லை?

பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து ஒரு யுத்தம் நடத்த முடிந்த சிங்கள அரசிடம் ஒரு ஐம்பது அம்புலன்ஸ் வாங்க வக்கில்லை? அதை நினைக்க கேவலமாயில்லை?

கேவலம் நோயாளர் காவு வண்டிகள் வழங்கும் நிகழ்விற்கே இன்னொரு நாட்டின் பிரதமர்தான் உரையாற்றும் நிலமையென்றால், இலங்கைக்கென்றொரு தனி அரசு இறையாண்மை எதற்காக இன்னும் தொங்கிகொண்டிருக்கிறது?

இந்தியாவிடமே இலங்கையின் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அரசியல்  (அரசின்) மயமாக உள்ளது :35_thinking:

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
On 7/18/2018 at 11:49 PM, nedukkalapoovan said:

அரசியல் தேவைகளுக்காக ஓரிரவில் நடக்கும் விடயங்கள்.. மக்களின் தேவை என்றால்.. பல ஆண்டுகள் ஆகும். ஆக.. அரசியல்வாதிகளின் நலன் கருதித்தான் நாட்டு மக்களின் தேவைகள் தீர்மானிக்கப்படுகின்றன.. அந்த நிலையில் தான்.. மக்கள்.. வைக்கப்பட்டுள்ளனர். ?

மக்கள் வோட்டு போட்டு தெரிவு செய்த அரசியல்வாதிகள் தானே?

உங்களை அவர்கள் தேர்வு செய்திருந்தால் வித்தியாசமாக செய்வீர்கள். ஆனால் அவர்கள் உங்களை தெரிவு செய்யவில்லையே??

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Jude said:

உங்களை அவர்கள் தேர்வு செய்திருந்தால் வித்தியாசமாக செய்வீர்கள். ஆனால் அவர்கள் உங்களை தெரிவு செய்யவில்லையே??

நாங்கள்.. அரசியல்வாதியாகி தான் மக்களுக்கு சேவை செய்யனும் என்ற எந்தக் கட்டாயத்திலும் இல்லை. அப்படி ஒரு வாக்கு வேட்டை.. சேவை தான் சனநாயகம் என்ற பெயரில்... இன்று மக்களை நாயிலும் கேடாக நடத்திக் கொண்டிருக்கிறது. 

கொள்ளை.. கொலை.. இலஞ்சம்.. போதைவஸ்து.. வாள் வெட்டு.. காடைத்தனம்.. பாலியல் வன்புணர்வு.. எல்லாம் சன நாயகப் பண்புகள் என்று விபரிக்கும் அளவுக்கு சொறீலங்காவில் சன நாயகத்தை வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.. சன நாயகத்தின் தாய் தந்தையர் நாடுகள். 

அப்படியான இடங்களில்.. வாக்கு அரசியல் மூலம்.. மக்களுக்கு சேவை என்பது.. பஞ்சமகா பாதகங்களிலும் கேடானது. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, valavan said:

இந்தியாவிடமே இலங்கையின் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடலாமே?

இந்தியா இருக்கிற திறத்துக்கு சீனாவே மேல்....

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nedukkalapoovan said:

நாங்கள்.. அரசியல்வாதியாகி தான் மக்களுக்கு சேவை செய்யனும் என்ற எந்தக் கட்டாயத்திலும் இல்லை. அப்படி ஒரு வாக்கு வேட்டை.. சேவை தான் சனநாயகம் என்ற பெயரில்... இன்று மக்களை நாயிலும் கேடாக நடத்திக் கொண்டிருக்கிறது. 

கொள்ளை.. கொலை.. இலஞ்சம்.. போதைவஸ்து.. வாள் வெட்டு.. காடைத்தனம்.. பாலியல் வன்புணர்வு.. எல்லாம் சன நாயகப் பண்புகள் என்று விபரிக்கும் அளவுக்கு சொறீலங்காவில் சன நாயகத்தை வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.. சன நாயகத்தின் தாய் தந்தையர் நாடுகள். 

அப்படியான இடங்களில்.. வாக்கு அரசியல் மூலம்.. மக்களுக்கு சேவை என்பது.. பஞ்சமகா பாதகங்களிலும் கேடானது. ?

அப்படியானால் எப்படியாக நீங்கள் இந்த நிலையை மாற்ற போகிறீர்கள்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Jude said:

அப்படியானால் எப்படியாக நீங்கள் இந்த நிலையை மாற்ற போகிறீர்கள்? 

நீங்களும் உங்களைப்போலை ஆக்களும் தானே நாங்கள் எல்லாம் செய்வம்...எங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டு சொல்லி காட்டிக்குடுத்து  2009லை கலைச்சனிங்கள்.இப்ப எத்தினை வருசமாச்சு. என்ன கோதாரியை புதிசாய் பண்ணினனீங்கள். எதுக்கெடுத்தாலும் குறை சொல்லி வயிறு நிரப்பிற கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நீங்களும் உங்களைப்போலை ஆக்களும் தானே நாங்கள் எல்லாம் செய்வம்...எங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டு சொல்லி காட்டிக்குடுத்து  2009லை கலைச்சனிங்கள்.

என்ன அண்ணை நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்கிறீர்கள்? "நாங்கள் எல்லாம் செய்வம்...எங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டு சொல்லி" மக்களை முள்ளிவாயிக்காலில் பலி கொடுத்தவர்களுக்கு பின்னால் போன எங்கள் உறவுகளை நீங்களா திருப்பி கொண்டுவரப் போகிறீர்கள்? 

இப்ப எத்தினை வருசமாச்சு. என்ன கோதாரியை புதிசாய் பண்ணினனீங்கள். எதுக்கெடுத்தாலும் குறை சொல்லி வயிறு நிரப்பிற கூட்டம்.

பேயை கனவு கண்டு, கண்ட எல்லாரும் பேயென்று நினைச்சு ஒப்பாரி வைக்கிறீங்களே? நாற்பது வருஷமாய் தமிழ் ஈழம் எடுத்து தருவோம் என்றும் எமது மக்களையும், எமது நாட்டின் செல்வங்களையும், எமது மக்களின் முற்றுமுழுதான எதிர்காலத்தையுமே முழுதாக அழித்து முடித்தவர்களிடம் கேட்கவேண்டியதை காணும் எல்லாரிடமும் கேட்கவேண்டிய பரிதாப நிலையில் நீங்கள் மட்டுமில்லை அண்ணை, நாங்கள் எல்லாரும் தான் இருக்கிறோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Jude said:

என்ன அண்ணை நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்கிறீர்கள்? "நாங்கள் எல்லாம் செய்வம்...எங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டு சொல்லி" மக்களை முள்ளிவாயிக்காலில் பலி கொடுத்தவர்களுக்கு பின்னால் போன எங்கள் உறவுகளை நீங்களா திருப்பி கொண்டுவரப் போகிறீர்கள்? 

பேயை கனவு கண்டு, கண்ட எல்லாரும் பேயென்று நினைச்சு ஒப்பாரி வைக்கிறீங்களே? நாற்பது வருஷமாய் தமிழ் ஈழம் எடுத்து தருவோம் என்றும் எமது மக்களையும், எமது நாட்டின் செல்வங்களையும், எமது மக்களின் முற்றுமுழுதான எதிர்காலத்தையுமே முழுதாக அழித்து முடித்தவர்களிடம் கேட்கவேண்டியதை காணும் எல்லாரிடமும் கேட்கவேண்டிய பரிதாப நிலையில் நீங்கள் மட்டுமில்லை அண்ணை, நாங்கள் எல்லாரும் தான் இருக்கிறோம். 

30 வருசமாய் எங்களாலும் தனித்து வாழமுடியும் என்று செய்து காட்டியதை மறந்து போனீர்கள் போலும்.....
அன்பரே! நயவஞ்சகர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டதை தோல்வியென கருதமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

30 வருசமாய் எங்களாலும் தனித்து வாழமுடியும் என்று செய்து காட்டியதை மறந்து போனீர்கள் போலும்.....

அதை மறக்கவில்லை - ஆனால் அதற்கு கொடுத்த விலை - இந்த அளவு அழிவும், இனி மீள முடியாத முற்றான அழிவுக்கான  நிரந்தரமான பாதையும் என்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Di9aMgaUcAIxswZ.jpg:large

தாய் பிச்சைஎடுக்கும் போது மகன் ஊருக்கு அன்னதானம் போட்டானாம்  கதை சொந்த நாட்டு மக்கள் மனைவியின் பிணத்தை தங்கள் ஊருக்கு கொண்டு போக வாகன வசதி இல்லை இந்திய அப்பாவி மக்களின் வரியில் சிங்களத்துக்கு அடிமை சேவகம் பண்ணுது ஹிந்திய மத்திய அரசு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.