Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது

பாரீஸ்: பிரான்சில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்சில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 17 பேர் சிக்கினர். இவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் பிரான்சை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிரான்ஸ் போலீஸ் வட்டாரங்கள்,"கைது செய்யப்பட்ட 17 பேரும் பிரான்சில் செயல்பட்டு வரும் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது,'என்றனர்.

http://www.dinamalar.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறகு....... யாருக்கு தெரியும் இது உண்மை எண்டு?

  • கருத்துக்கள உறவுகள்

'Tamil Tigers' arrested in France

Police officials in Paris say they have detained at least sixteen suspected Tamil Tiger activists.

The suspects are accused of funnelling millions of dollars to northern Sri Lanka, where the rebels are fighting Sri Lankan government forces.

Officials say the arrests were made by French anti-terror forces, in a sweep across Paris and several neighbouring districts.

The suspects allegedly coerced expatriate Sri Lankan Tamils into giving them money that was then channelled to the LTTE.

Officials say they are being held by the anti-terror police as part of an investigation into the financing of the Tamil Tigers

FROM BBC SINGALA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான செய்தி

நானும் கேள்விப்பட்டேன் பிரெஞ்சுச் செய்திகளில். ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை செய்து கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் 2000 யூரோக்களை கட்டாயப்படுத்தி பெற்றுக் கொண்டதாக போலிஸ் கூறுகிறது.

இதுவரை பிரான்ஸில் சுதந்திரமாக விடுதலைப் போராட்ட வேலைகளில் ஈடுபட முடிந்தது. போலீஸும் கண்டும் காணாததுபோல் இதுவரை நடந்து கொண்டனர். இந்தக் கைதுக்குப் பின்னால் தமிழ் சதிகாரர்கள் இருக்கவேண்டும்.

நானும் கேள்விப்பட்டேன் பிரெஞ்சுச் செய்திகளில். ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை செய்து கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் 2000 யூரோக்களை கட்டாயப்படுத்தி பெற்றுக் கொண்டதாக போலிஸ் கூறுகிறது.

இதுவரை பிரான்ஸில் சுதந்திரமாக விடுதலைப் போராட்ட வேலைகளில் ஈடுபட முடிந்தது. போலீஸும் கண்டும் காணாததுபோல் இதுவரை நடந்து கொண்டனர். இந்தக் கைதுக்குப் பின்னால் தமிழ் சதிகாரர்கள் இருக்கவேண்டும்.

பாரிசில் இருந்து செயற்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறை உளவாளகளின் செயற்பாடு தமிழ் துரோகக் கும்பல்களின் காட்டிக்கொடுப்புகள் மாவீரர்களின் உயிரையும் இரத்தத்தையும் விலை பேசி விற்று அகதி அந்தஸ்த்துப்பெற்றதை மறந்த சில ஈனப்பிறவிகளின் செயற்பாடு என்பவைதான் இந்த கைதுகளின் பின்னணிக்கான அடிப்படையாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் துரோகக் கும்பல்களின் காட்டிக்கொடுப்புகளாகத்தான் இருக்கோனும்

தமிழ் துரோகக் கும்பல்களின் காட்டிக்கொடுப்புகளாகத்தான் இருக்கோனும்

துரோகிகளின் வாக்கு மூலத்தை வீடியொவில் பாருங்கள் பிரான்ஸ் 3 தொலைக்காட்சியன் நேற்று இரவுச் செய்தி

http://jt.france3.fr/soir3/#

TTN தொலைக்காட்சி உட்பட பல அலுவலகங்களை மூடிவிட நடவடிக்கை எடுக்கப்படப் போவதாகவும் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக பிரெஞ்சு அரசாங்கம் செய்யும் ஒரு நாடகம்.

முன்பொரு காலத்தில் சுவிசில் உள்ள முக்கியமான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சிறை வைத்தார்கள். அதன் நோக்கம் என்னவெனில், இங்கே இருந்து இலங்கைக்கு அனுப்பபடுபவர்களை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்து விட்டது. எனவே இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கொஞ்ச நாள் உள்ளே வைத்தார்கள். அதன் பின் அதைப்பற்றி கதையே இல்லை. அது போலவே இதுவும் இருக்கலாம்.

நன்றி

வடிவேல் 007 அன்ட் யமுனா 008

புல நாய் வுவ் பிரிவு

தேர்தல் வருகுது தானே தமிழர்கள் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.

நடக்கப்போகும் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாகவும் இதைக் கருதலாம். புதிய உள்விவரகார அமைச்சரை நியமித்து ஒரு வாரத்தில் இது நடந்துள்ளது. தேர்தலில் தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இவர்களுக்கு ஏற்கனவே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வு ஆழும் கட்சியின் நடக்கவிருக்கும் தேர்தலுக்கான ஒரு அரசியல் நாடகமே இதன் விரிவான விழக்கங்களுடன் ஒரு கட்டுரை விரைவில் இணைக்கிறேன்

இது உலகெங்கிலும் உள்ள இன விடுதலைப் போராளிகள் சந்தித்த பிரச்சனைதான் .உலகெங்கிலும் பாசிச படுகொலைக்குப் பின் யூதர்கள் வேட்டையாடப்பட்டர்கள். அது போல உலகெங்கிலும் சிதறியிருக்கும் ஈழத்தமிழர்கள் இன்று வல்லாதிக்க அர்சுகளால் கைது செய்யப்படுகிறர்கள். அவளவுதான் இந்தியாவிலும் அதுதான் நடைபெறுகிறது என்பதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். மற்றபடி கட்டாயப்படுத்தி நிதி வாங்கிறார்கள் என்பதெல்லாம் பொறுப்பற்ற மேடுக்குடி மனோபாவம்தான். ஏனென்றால் பலர் சிங்கள அரசிடம் சில சலுகைகளை பெற்று தமிழர்களுக்கு உரிமைகளை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். கைது செய்யப்பட்டிறுக்கிறவர்கள் அனைவரும் உணர்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது **************

************* நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு எமது காட்டமான எதிர்பை கன்டிப்பாக காட்ட வேன்டும்.

இதுக்கு எமது காட்டமான எதிர்பை கன்டிப்பாக காட்ட வேன்டும்.

துணிவோடு இறங்கி எதிர்புக்காட்ட ஒருத்தன் வரமாட்டான். அங்க லாப்சப்பல்லில் தெருக்களில் தூங்கிக்கொண்டு திரியுதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவன் வருவானா வரமாட்டான் என்று பார்த்துக் கொண்டிருக்காமல் நீங்களே முன்வாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களும் வீதியில் இறங்கி எதிர்பின் மூலம் அரசாங்கத்திற்கு நல்ல சாட்டை அடி குடுக்கவேண்டும்.. அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறதா என்று யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கிஷான் நீங்களே அதற்குரிய ஏற்பாடுகளை செய்யலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் உணர்வாளர்களைக் கைது செய்கின்றோம் என்று என்று பிரான்சு அரசு நினைப்பின், ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் கைது செய்தால் தான் அது அடங்கும் என்ற நிலையைக் கொடுப்போமாக இருந்தால், அது நிச்சயம் நம்மிடம் பணியும். இல்லாவிட்டால், மாடுகளைப் பிரித்து, அழித்த சிங்களத்தின் கதை போன்றே தமிழனுக்கு உருவாகும்.

எம் ஒற்றுமையைக் காட்டி, இந்த நடவடிக்கைக்கு எதிராகக் குரல் இடவேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால், நாளைக்கு நம்மவர்களைப் பிடித்து அனுப்புகின்ற வேலையைக் கூட அது செய்யத் தயங்காது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அகதியாய் வந்தவையாலதான்..! அதுக்கு முதல் இப்படி..??! :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 05-04-2007 01:57 மணி தமிழீழம் [முகிலன்]

தமிழ்ப் பிரதிநிதிகளை விடுவிக்கக் கோரி பாரிசில் எதிர்வரும் 9 நாள் எதிர்ப்புப் போராட்டம்

பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது.

இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் வர்த்தக சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது.

ரொக்கட்றரோ சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 05-04-2007 01:54 மணி தமிழீழம் [மயூரன்]

தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கைது செய்தமை தவறு - லாக்கூர்ண நகரசபை உறுப்பினர்

தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தவறு என பாரிஸ் லாக்கூர்ண நகரசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறு என்று கூறினார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பிரஞ்சு அரசுக்கு சுட்டிக்காட்டுவது அனைத்து தமிழ் மக்களின் கடமை எனவும் அன்ரொனி ரூசல் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள எதிர்ப்புப் பேரணியில் அனைத்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு

வரவேற்கின்றோம் வாழ்த்துகிறோம் லண்டனில் இப்படி செய்யாமல் விட்டபடியால் தான் தமிழரது ஒவ்வொரு உதவி நிறுவனங்களையும் மூடிக்கொண்டு போறான் நாடுகளை சுரண்டி வாயில் போட்ட பிரித்தானியன். லண்டன் தமிழன் வக்கத்த ரோசமில்லாத தமிழர்கள்.

பிரான்ஸ் தமிழர்களே உங்களை பாராட்டுகிறோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.