Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் மீண்­டும் தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டி­ வ­ரும் – சுமந்­தி­ரன் எம்.பி.!!

Featured Replies

ஐ.நாவில் மீண்­டும் தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டி­ வ­ரும் – சுமந்­தி­ரன் எம்.பி.!!

 

A-M-Sumanthiran.jpg

 
 

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இன்­னு­மொரு தீர்­மா­னம் நிறை­வேற்­ற­ வேண்­டும். இலங்கை அரசு இணங்­கிக் கொண்ட விட­யங்­களைச் செயற்­ப­டுத்­து­வற்­கான பன்­னாட்டு அழுத்­தத்­தைக் கொடுப்­ப­தற்கு, பன்­னாட்டு மேற்­பார்வை நீடிக்­கப்­ப­ட­வேண்­டும். மற்­றொரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்ப­டுவ­தன் ஊடா­கவே அத­னைச் செய்ய முடி­யும். அமெ­ரிக்கா இல்­லா­த­தால் மாற்­று­வழி ஊடா­கவே செய்­ய­வேண்­டி­யுள்­ளது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

மூத்த ஊட­க­வி­ய­லா­ளர் இரா.துரை­ரத்­தி­னம் எழு­திய ‘செய்­தி­க­ளின் மறு­பக்­கம்’ நூல் வெளி­யீட்டு விழா கொழும்பு தமிழ் சங்­கத்­தின் முதன்மை மண்­ட­பத்­தில் நேற்று மாலை நடை­பெற்­றது.

 

இலங்­கைத் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர் ஒன்­றி­யத்­தின் தலை­வர் அனந்த் பால­கிட்­ணர் தலை­மை­யில் நடை­பெற்ற இந்த நிகழ்­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் முதன்மை அதி­தி­யா­கக் கலந்­து ­கொண்டு உரை­யாற்­றும்­ போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

2017ஆம் ஆண்டு இலங்­கைக்கு நாங்­கள் கால அவ­கா­சம் வழங்­கி­ய­தா­கப் பல­ரும் ஒப்­பாரி வைத்­தார்­கள். கால அவ­கா­சம் என்ற சொல்லே தவ­றா­னது.

2015ஆம் ஆண்டு இலங்­கை­யும் இணை அனு­ச­ரணை வழங்கி தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யது. அதில் பல முக்­கிய விட­யங்­கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னம் ஒரு நாட்­டைக் கட்­டுப்­ப­டுத்­தாது.

பன்­னாட்­டுச் சமூ­கத்­தில் தமது நாட்­டின் நற்­பெ­ய­ருக்கு களங்­கம் ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­சத்­தில் ஒவ்­வொரு நாடு­க­ளும் தீர்­மா­னத்­தில் உள்­ள­வற்றை செய்ய முற்­ப­டு­வார்­கள். அப்­ப­டி­யான ஒரு பொறி­மு­றை­யையே நாங்­கள் இலங்கை விட­யத்­தி­லும் கையாண்­டோம்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்­து­டன் இலங்கை மீதான பன்­னாட்­டுக் கண்­கா­ணிப்பு முடி­வுற்­றது. தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்ட விட­யங்­களை இலங்கை அரசு நிறை­வேற்­று­வ­தற்கு, அதன் மீது பன்­னாட்டு அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வேண்­டும்.

அழுத்­தத்­தைப் பிர­யோ­கிப்­ப­தற்கு பன்­னாட்­டுக் கண்­கா­ணிப்பு இலங்கை மீது இருக்­க­வேண்­டும். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மீதான பன்­னாட்­டுக் கண்­கா­ணிப்பு இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது.

2015ஆம் ஆண்டு இலங்­கை­யும் இணை­அ­னு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றிய தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்ட விட­யங்­கள் உடனே செய்து முடிக்­கப்­பட முடி­யா­தவை. அவற்­றில் சில­வற்றை நிறை­வேற்­று­வ­தற்கு பத்து ஆண்­டு­கள் வரை­யி­லும் செல்­ல­லாம்.

அந்­தத் தீர்­மா­னத்­தில் உள்ள மிக முக்­கி­ய­மான விட­யங்­க­ளை­யா­வது இலங்­கையை நிறை­வேற்­றச் செய்­வ­தற்கு பன்­னாட்டு அழுத்­தம் அவ­சி­யம். பன்­னாட்டு அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தற்கு இலங்கை மீது பன்­னாட்டு கண்­கா­ணிப்பு இருக்­க­வேண்­டும்.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் இலங்கை மீதான பன்­னாட்டு மேற்­பார்­வையை நீடிப்­ப­தற்கு மற்­றொரு தீர்­மா­னம் அவ­சி­யம். அந்­தத் தீர்­மா­னம் சில வேளை­க­ளில் நிறை­வேற்ற முடி­யா­மல் போக­லாம். ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அமெ­ரிக்கா இல்லை.

அமெ­ரிக்­கா­வுக்கு வாக்­க­ளிக்­கும் தகுதி இல்லை. இலங்கை அர­சை­யும் இணங்­கச் செய்து கொண்­டு­வ­ரு­ம­ள­வுக்கு சாத்­தி­யம் இருக்­குமோ தெரி­ய­வில்லை. ஐ.நா. செய­லர் மற்­றும் ஐ.நா. பொதுச் சபை­யின் ஊடாக அழுத்­தம் கொடுத்து பன்­னாட்டு மேற்­பார்­வையை நீடிப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை நிறை­வேற்­ற­வேண்­டி­யுள்­ளது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை வேண்­டாம், பன்­னாட்டு மேற்­பார்வை வேண்­டாம் என்று சொல்­ப­வர்­கள், மாற்று வழி என்­ப­தைச் சொல்­வ­தில்லை. எல்­லாம் வேண்­டாம் வேண்­டாம் என்று சொன்­னால், என்ன செய்­யப்­போ­கின்­றோம். இருப்­ப­தை­யும் விட்டு அடுத்து என்ன செய்­யப்­போ­கின்­றோம் – என்று கேள்வி எழுப்­பி­னார்.

http://newuthayan.com/story/09/ஐ-நாவில்-மீண்­டும்-தீர்­மா­னம்-நிறை­வேற்ற-வேண்­டி­-வ­ரும்-சுமந்­தி­ரன்-எம்-பி.html

10 hours ago, நவீனன் said:

ஐ.நாவில் மீண்­டும் தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டி­ வ­ரும் – சுமந்­தி­ரன் எம்.பி.!!

எதற்காக புதிய தீர்மானம்? ஏற்கனவே போட்ட தீர்மானத்துக்கு என்ன நடந்தது? சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளை புதிய தீர்மானம் மூலம் காப்பாற்றிவிடலாம் என்று கைக்கூலி அரசியவாதி சுமந்திரன் நினைக்கிறாரோ?

2009 இல் இருந்தே தமிழின படுகொலைகளை செய்துவரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு, அவர்கள் பொறுப்புக்களிலிருந்து நழுவுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவது இந்த சுமந்திரன் என்ற எட்டப்ப அரசியல்வாதி தான்.

எனவே இப்போது ஏதோ புதிய சதித்திட்டத்துடன் சுமந்திரன் தனது எட்டப்பத்தொழிலை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ..முன்னம்போய் சொன்னதெல்லாம்பொய்....இப்ப நான்  சொல்வது உண்மை என்று கற்பூரம் கொழுத்தி சத்தியம் செய்யப்போறார்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

எதற்காக புதிய தீர்மானம்? ஏற்கனவே போட்ட தீர்மானத்துக்கு என்ன நடந்தது? சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளை புதிய தீர்மானம் மூலம் காப்பாற்றிவிடலாம் என்று கைக்கூலி அரசியவாதி சுமந்திரன் நினைக்கிறாரோ?

2009 இல் இருந்தே தமிழின படுகொலைகளை செய்துவரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு, அவர்கள் பொறுப்புக்களிலிருந்து நழுவுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவது இந்த சுமந்திரன் என்ற எட்டப்ப அரசியல்வாதி தான்.

எனவே இப்போது ஏதோ புதிய சதித்திட்டத்துடன் சுமந்திரன் தனது எட்டப்பத்தொழிலை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

பேசின தொகை வந்து சேரவில்லை போல் இருக்கு .

காசு வருமட்டும் எங்கடை பக்கம் நிக்கும் காசு வந்தவுடன் அடுத்தபக்கம் நின்று விடும் பிழைப்புக்கு அரசியல் செய்ய வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

பேசின தொகை வந்து சேரவில்லை போல் இருக்கு .

காசு வருமட்டும் எங்கடை பக்கம் நிக்கும் காசு வந்தவுடன் அடுத்தபக்கம் நின்று விடும் பிழைப்புக்கு அரசியல் செய்ய வந்தது .

அப்புக்காத்து பிரக்கிராசி என்றால் அப்படித் தான்.

பிரச்சனை என்ன என்பது பிரச்சனை அல்ல.எந்தப் பக்கம் கூட வருது என்பது தான் பிரச்சனையே.

அவரை நொந்து பிரயோசனம் இல்லை.தொழில் அப்படி பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்ப பயப்பிடுத்திறாராம்.. அவங்கள் பயந்திடுவாங்களாம்.

எல்லா வலுவான தமிழ் மக்களுக்கு அவசியமான நீதிக்கான தீர்மானங்களையும் அமெரிக்காவினதும்.. ஹிந்தியாவினதும்.. சிங்கள எஜமானர்களினதும்  நலனுக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டு.. இப்ப தீர்மானம் போடுவாராம்.

எனி தீர்மானம் என்ன கட்டுரை.. கவிதை.. எழுதி இவரே வாசிட்டு.. இவரே வெற்றி அறிக்கை விட்டு திருப்திப்பட்டுக்க வேண்டியான்.

தமிழ் மக்களை சர்வதேச அரங்கில் அந்நியப்படுத்தி.. தமிழ் மக்களின் வலிகளுக்கான நீதியை மறப்போம் மன்னிப்போம்.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வெற்றிக்குள் முடக்கி... இன்று தமிழ் மக்களுக்கு பெரும் வரலாற்றுத் துரோகத்தையும்.. துயரத்தையும் பரிசளித்தது.. இந்த சட்டாம்பிக்கு கும்பல்.. என்பது தான் உண்மை.

இவர்களே அன்று டொனமூர் காலத்தில் இருந்து இன்று பிரபாகரன் காலம் வரை தமிழ் மக்களை இலங்கைத் தீவில் அரசியல் அனாதைகளாக்கி வந்துள்ளனர்.. சொந்த சுக போகத்திற்காக. 

இவர்களை எனியும் தமிழ் மக்கள் அறிவாளிகள் என்று நம்பின் அவர்களை விட முட்டாள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. ??

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நவீனன் said:

ஐ.நாவில் மீண்­டும் தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டி­ வ­ரும் – சுமந்­தி­ரன் எம்.பி.!!

 

A-M-Sumanthiran.jpg

இப்ப இவர்ரை வெருட்டாலை சிங்களத்துக்கு வாயாலையும் வயித்தாலையும் அடிக்கப்போகுது....?

உண்மையிலையே சுமந்திரன் நீங்கள் ஒரு பேய்க்காய் கண்டியளோ tw_glasses:

  • தொடங்கியவர்

மார்ச்சில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்

 

 

 

(ஆர்.யசி)

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள் நாட்டு பங்களிப்பு இல்லாத முற்றுமுழுதான  சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது. அந்த விசாரணை இடம்பெற்று 247 பக்கம் கொண்ட அறிக்கையும் உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் எழுதிய 'செய்தியின் மறுபக்கம் " நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர்  அங்கு  மேலும் தெரிவிக்கையில், 

sumanthiran.jpg

இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பேசப்படுவது  அனைவருக்கும் தெரியும். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பது என்ன, அதன் பங்களிப்பு, அதனால் என்ன செய்ய முடியும்  என்பது  குறித்து தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் பேரவை என்ற உருவாக்கம் ஏற்பட்டது. அதேபோல் 2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் எமது போர் முடிவு ஏற்பட்ட காரணத்தினால் தான் மனித உரிமை பேரவையில் சில விவகாரங்கள் ஆராயக் கூடியதாக அமைந்தது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தீர்மானமே மனித உரிமைகள் பேரவையும் தீர்மானமாக அமையும். இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது நலன்சார்ந்தே  செயற்படுகின்றது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். 

 எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கே  மனித உரிமை மீறல்கள் இருக்கின்றன. மனித உரிமைகளை  மீறாத நாடுகள் எதுவும் இல்லை, அனைத்து நாடுகளும் மனித உரிமைகளை மீறிய வரலாறுகள் உள்ளன.  அவ்வாறான நாடுகள் தான் மனித உரிமைகள் குறித்த தீர்மானங்களையும் எடுக்கின்றன. நாளை எமது பக்கம் திரும்பிவிடக்கூடாது என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நாடும் மனித உரிமை விவகாரங்களை கையாள்கின்றன.  இவ்வாறான ஒரு நிலையில் தான் எமது பொறிமுறையை நாம் கையில் எடுத்தோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

 தங்களது நாடுகளில் மனித உரிமை மீறல்களை செய்த அரசாங்கங்களை கொண்ட மனித உரிமை பேரவையில் தான் எங்களது மனித உரிமை மீறலுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முன்வந்தோம். ஏனெனில் எமக்கு வேறு பொறிமுறை இல்லை. எனினும் இந்த நாடுகள் சர்வதேச அரங்கில் தம்மை நிருபிக்க கையாளும் நடுநிலைத் தன்மையை நாம் பயன்படுத்தி எமது தீர்வுகளை நோக்கி பயணித்துள்ளோம். மிகவும் அதிகமாக நாம் அதனை பயன்படுத்தியுள்ளோம். இதற்கு மேல் எம்மால் எந்த நலன்களையும் பெற்றுக்கொள்ள முடியாது. 

எதிர்வரும் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை தொடர்பிலான 34/1 தீர்மானத்தின் செயற்பாட்டு காலம் நிறைவடையப் போகின்றது. அந்த தீர்மானம்  நிறைவடையும் போது அடுத்து என்ன என்ற கேள்வியும் எழும்பப் போகின்றது. மார்ச் மாதத்தை நெருங்கும் நேரத்தில் மீண்டும் கால அவகாசம் கோரப் போகிறீர்களா என்ற கேள்விகள் எழுப்பப்படும். அதற்கான உண்மைகளை இப்போதே தெரிவிக்க வேண்டும்.

இதில் கால அவகாசம் என்பது தவறான சொற்பிரயோகம். 2015 ஆம்  ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும். 2014 ஆம் ஆண்டு தீர்மானம் இலங்கை விவகாரத்தில் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானமானம் நிறைவேற்றப்பட்டது.  அதனை இலங்கை அரசாங்கம் எதிர்த்தது, ஆனாலும் பிரேரணை நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணை ஒன்று நடந்து முடிந்து விட்டது. உள்நாட்டு பங்களிப்பு இல்லாத முற்றுமுழுதான  சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது. அந்த விசாரணை இடம்பெற்று 247 பக்கம் கொண்ட அறிக்கையும் உள்ளது. 

அந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டு வெளிவர இருந்த நிலையில் புதிய அரசாங்கம் அந்த அறிக்கையை வெளியிடுவதை தாமதிக்கக்கோரி அந்த அறிக்கை தடுக்கப்பட்டது. பின்னர் 2015 செப்டெம்பர் ஜெனிவா கூட்டத்தொடரில் அது வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை வெளியிடப்பட்ட போது இனப்படுகொலை  இடம்பெற்றதா  என்ற கேள்வியை கேட்டனர், எனினும் இனப்படுகொலை விவகாரம் உள்ளடக்கப்படவில்லை எனவும்  அதற்கான சான்றுகள் இப்போது இல்லை எனவும் செய்ட் அல்  ஹுசைன் தெரிவித்தார். உண்மையில் அப்போது இது தவறான  கேள்வியாகும். தவறான கேள்விகளை கேட்டு எமக்கு வேண்டாத பதிலை உருவாக்கிக்கொள்ள கூடாது. சர்வதேச குற்றங்களில் மிகவும் மோசமான குற்றமாக இனப்படுகொலை உள்ளது. துன்புறுத்தல் கூட  அதன் ஒரு வடிவம். இதில் இனப்படுகொலை என்ற விசாரணையை நடத்த அது குறித்து நிரூபணங்கள் இருக்க வேண்டும். இலகுவாக நிரூபிக்கக்கூடிய காரணிகளை அவர்களை அறிக்கையில் உள்ளிட்டிருந்தனர். இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். 

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர்  மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் இடம்பெற்ற பிரேரணை என்பது முக்கியமானது. 30/1 தீர்மானம் இலங்கையின் தீர்மானம்.   இரண்டு தடவை இணை அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதியாகும். இதனை இலங்கை அரசாங்கம் தவிர்க்க முடியாது.  அதேபோல் 2017ஆம் ஆண்டு மார்ச் கூட்டத்தில் கால அவகாசம் கொடுத்து விட்டதாகவும் கூறுகின்றனர். 

30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அந்த பிரேரணையை மேற்பார்வை செய்ய 18 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து மூலமாக அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதற்கான கால அவகாசமே அதுவாகும். அதன் பிறகு சர்வதேச மேற்பார்வை இருக்காது. இது மேற்பார்வை காலமே தவிர விசாரணை கால அவகாசம் அல்ல. சர்வதேச மேற்பார்வை இன்னும் நெருக்கப்பட  வேண்டும். எமது விடயங்கள் நிறைவேற்றப்படும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருக்க வேண்டும். சர்வதேச அழுத்தம் எமது விடயத்தில் இருக்க வேண்டும் என்றால் அதற்கான சர்வதேச மேற்பார்வை காலம் நீடிக்கப்பட வேண்டும். 

இரண்டு ஆண்டுகால காலஅவகாச எல்லை முடிவடையப்போகின்றது, ஆகவே இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வை அதன் மூலமாக நீடிக்கப்பட வேண்டும். எமது கருமங்கள் முழுமையாக முடிவடையும் வரையில் சர்வதேச மேற்பார்வை கால எல்லை நீடிப்பு அவசியம். இந்த பொறிமுறை அழுத்தங்களை மட்டுமே கொடுக்க முடியும், கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது.

எமது தரப்பினர் இல்லாத ஒன்றை இருப்பதாக கனவு கண்டுகொண்டு இந்த பொறிமுறையை வேண்டாம் என கூறும் குரல் எழுகின்றது.  நாம் அனைத்தையும் நிராகரித்தால் எமக்குள்ள மாற்று வழிமுறை என்ன? ஆயுதம் ஏந்துவதா எமக்குள்ள மாற்று வழிமுறை? இந்தக் கேள்வியை கேட்டால் எம்மீது முரண்படும் நிலைமை உருவாகின்றது. வழிமுறையை நிராகரிக்கும் நபர்கள் மாற்று வழிமுறையை முன்வைக்க வேண்டும். 

அடுத்த அமர்வுகளில் எமக்கான வாய்ப்புகள் குறைவடையலாம், அமெரிக்காவின் வாக்குகள் இல்லாத மனித உரிமை பேரவையில் ஒரு தீர்மானத்தை  அழுத்தமாக பெற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. ஆகவே மாற்று  வழிமுறைகளை நாம் ஆராய்ந்து வருகின்றோம். எதன்  மூலமாக அழுத்தங்களை பிரயோகிக்கலாம் என ஆராய வேண்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/37892

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.