Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள் வெட்டு சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்…

Featured Replies

வாள் வெட்டு சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்…

 

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்.

தென்மராட்சி பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை, வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என மானிப்பாய் பொலிசார் கடந்த 04ஆம் திகதி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் மூவர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளனர் என நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் அவர்கள் மூவரும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சை எழுதுவதற்கு மன்று அனுமதி அளித்திருந்தது. அந்நிலையில் குறித்த மூன்று மாணவர்களும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சையில் தோற்றி வருகின்றனர்.

 

http://globaltamilnews.net/2018/90919/

  • கருத்துக்கள உறவுகள்

pen என்று நினைத்து வாளை தூக்கி tw_tounge:போட்டாங்களோ..

 

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான கிரிமினல் மூளை தப்புவதுக்கு நாடகம் இதெல்லாம் புதுசு அல்ல இந்தியன் ஆமி காலத்தில் olக்கு புக் பண்ணி id கார்ட்டுடன் திரிந்தது நாட்டுக்கு இதுகள் வன்முறைக்கும்  கஞ்சா அடிப்பதுக்கும் நாலு மிதி மிதிக்க எல்லா உண்மையும் வரும் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, putthan said:

pen என்று நினைத்து வாளை தூக்கி tw_tounge:போட்டாங்களோ..

 

இல்லை அவையள் படிப்புச்செலவுக்கு பின்னேர வேலை செய்தவை எண்டு நினைக்கிறன். tw_tounge:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இல்லை அவையள் படிப்புச்செலவுக்கு பின்னேர வேலை செய்தவை எண்டு நினைக்கிறன். tw_tounge:

உழைக்க கஸ்டம் உடம்பு நோகப்படாது நோகாமல் நுங்கு திங்க வேண்டாமா அம்மை அப்பனை சொல்லணும் கருவாக்கியதற்கு 

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழனை காலாதி காலத்துக்கு மண்டியிட்டு சேவகம் செய்ய வைக்க சிங்களம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் சதிவலையில் சிங்கி சின்னாபின்னமாகிப்போன இளைய தமிழ் சமுதாயம்.  எனது நாட்டில் நான் இருந்திருந்தால் அது என்மகனாகவும் இருக்கலாம். ஆணிவேரை கண்டறிந்து அறுத்தெறிந்தால் ஒழிய இந்தக்கலச்சாரம் தொற்றுநோய்போல் பரவும். பெற்ற அம்மை அப்பனை குறைசொல்லி எதுவும் நடக்கப்போவதில்லை. பலமான அரசியல் சக்திகளுக்குமுன்  நம் இனம் ஒற்றுமையும் சரியான தலைமைத்துவமும் இல்லாமல் கதிகலங்கி நிற்க தமிழ் அரசியல்வாதிகள் இந்த சூட்சுமத்தை புரிந்து நடந்துகொள்வதாக தெரியவில்லை. குறைபாட்டின் ஆதிமூலத்தை கண்டறிந்து தமிழ் தலைமை ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.

வாள்வெட்டு குழுக்களில் எண்ணிக்கை யளவில்  மொத்தம் ஒரு 100 அல்லது 200 பேர்  இருப்பார்களா? தமிழின விடுதலைப்போரில் போராளிகள் ஆயிரமாயிரமாய் இருந்தும் போரை வென்ற சிங்கள அரசு ஒரு சிறிய குழு சமுகவிரோதிகளை  அடக்க தயங்குவது ஏன்? அதுவும் இராணுவம் நிரந்தரமாய் நிலை கொண்டுள்ள பிரதேசத்திலேயே இந்த அடாவடித்தனங்ளும் அட்டுழியங்களும் நடைபெறுமென்றால் இது ஏன் எமது தலைமைகளை சிந்தித்து சாணக்கியத்துடன் செயற்பட  தூண்டவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.