-
Tell a friend
-
Popular Now
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
உலகம் முழுவதும் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கின December 12, 2024 01:03 am உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தளங்கள் முடங்கியது குறித்து ஏராளமான பயனர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வௌியிட்டுள்ளது. அதில், "தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக சில பயனர்களின் பயன்பாடுகளை அணுகும் திறனைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்." என்று பதிவிட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197158 -
11 இலட்சம் மக்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள் என்று ஒரு கணக்கு சொல்லுகின்றனர். ஆனால் அதில் இரண்டு லட்சம் மக்களைக் கூட கைது செய்து வெளியேற்றுவதற்கு தேவையான வளங்கள் அதற்கு பொறுப்பானவர்களிடம் இல்லை என்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் இவர்களின் இடத்தை யார் நிரப்பப் போகின்றார்கள்.................. அமெரிக்கர்களும், இந்தியர்களும் குனிந்து புல்லுப் பிடுங்கப் போவதில்லை........ எனக்குத் தெரிந்த அளவில் என்னுடைய சுற்றுவட்டாரத்தில் புல்லு வெட்டிக் கூட்டும் ஒரே ஒரு 'இந்தியன்'.............. நான் மட்டுமே............🤣.
-
இது என்ன வருத்தம்? ஹொஸ்பிட்டல் செகியுற்றியை வீடியோ எடுத்தது என்று வெருட்டுவதும் சண்டித்தனம் காட்டுவதும் கீழே வந்திருக்கு! இந்தப் பனிப்பைத்தியருக்கு நிறைய fan clubs இருக்கு @ரதி🤪 ‘சேர்’ பைத்தியம்பிடித்து அலையும் வைத்திய அதிகாரியும், மக்கள் பிரதிநிதியும்! யாழில் உலாவரும் அதிகார போதை!! By Independent Writer 3 hours ago எங்களுடைய தமிழ் வைத்தியர்களை பிடித்தாட்டிக்கொண்டிருக்கின்ற ‘சேர்’ வியாதியை நினைத்தால் ஒரு பக்கம் வெட்கமாக இருக்கிறது. மறு பக்கம் கோபம் கோபமாக வருகின்றது. ‘Call me Sir’ என்று ஒரு சிரேஷ்ட வைத்தியர் கூறியதை அவருக்கே தெரியாமல் ஒலிப்பதிவுசெய்து வெளியே கசியவிட்டு அனுதாபம் தேடி எம்பியானவர்தான் வைத்தியர் அர்ச்சுனா. ஆனால் அதே அர்ச்சுனா நேற்று யாழ் வைத்தியாலைக்குள் நுழைந்து மாவட்டப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி முன்பாக கால்மேல் கால்போட்டு அமர்ந்தபடி, ‘நீங்கள் என்னை சேர் என்றுதான் அழைக்கவேண்டும்’ என்றும், ‘நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பறவாயில்லை... என்னை சேர் என்றுதான் அழைத்தாகவேண்டும்;’ என்று அடாவடி புரிகின்ற காட்சியைப் பார்க்கின்றபோது, ‘இவர்களுக்கெல்லாம் என்னதான் நடந்துவிட்டது..’ என்று நினைக்கத்தோன்றுகின்றது. அது மாத்திரமல்ல, வைத்தியசாலை ஊழியர் ஒருவரை அவரது நெஞ்சில் கையைவைத்துத் தள்ளிவிட்டதுடன், ‘வாயை மூடுடா..’ ‘ராஸ்கல்..’ அது இது என்று கண்டிபடி அந்த ஊழியரை வைத்தியர் அரச்சுனா பலர் முன்னிலையில் பகிரங்கமாகத் திட்டுவதான CCTV காட்சி தற்பொழுது வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்திவருகின்றது. ‘உனக்குத் தெரியுமா நான் யாரென்று..’ ‘CID யிடம் பிடித்துக்கொடுப்பேன்…’ என்று அந்த ஊழியரை அவர் மிரட்டுவதையும் அந்த வீடியோவில் காண முடிகின்றது. சக மனிதர்களையும், அரச ஊழியர்களையும் மதித்துப் பேசுவதற்கு முதலில் மக்கள் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ளவேண்டும். தெரு ரவுடிகள் போன்றும், சினிமாக்களில் வருகின்ற தாதாக்கள் போன்றும் நடந்துகொள்ளாது, பதவிகள் உயருகின்றபோது தனது பண்புகளையும் உயர்திக்கொள்வற்கு அர்ச்சுனா என்கின்ற மக்கள் பிரதிநிதி கற்றுக்கொள்ளவேண்டும். ‘ என்னை சேர்’ என்று அழையுங்கள்..’ “உனக்குத் தெரியுமாடா நான் யார் என்று..’ “ராஸ்கல்..’ இவ்வாறு நீங்கள் அழைக்கின்ற நபர்கள்தான் உங்களுக்கு வாக்களித்து உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்தவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் சீ.ஐ.டி.யிடம் பிடித்துக்கொடுக்கமுனையும் அந்தத் தமிழ் இளைஞனைத்தான் நீங்கள் இன்று நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள் என்பதை தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள். மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் தனது தனிப்பட்ட காழ்ப்புணர்வு அழுக்குகளைக் கக்குகின்ற காரியத்தைத்தான் நீங்கள் தொடர்ந்துசெய்வீர்களாக இருந்தால், உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்த யாழ் மக்கள் உங்களையிட்டு வெட்கப்பட்டு நிற்பார்கள் என்பது மாத்திரமல்ல, உங்களது அரசியல் எதிர்காலத்துக்கும் கூட நிச்சயம் ஆப்பு வைத்துவிடுவார்கள். உங்களைப் போல அதிகார வெறியில் ஆடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடந்துசென்ற பண்பாளர்கள் நிறைந்துள்ள மண்ணில் நின்று நீங்கள் கூத்தாடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம். https://ibctamil.com/article/mp-arjunas-atrocity-in-jaffna-hospital-1733949837
-
விநாயகனை வழிபட்ட பின்பு தான் மூலவர் தரிசனம்... அதுதான் எழுதப்படாத விதி ...அதை விடுத்து என்னுள் இறைவன் இருக்கிறான் நான் தான் கடவுள் என கூறிய பல சாமிமார் காணாமல் போன சரித்திரம் உண்டு .... முதல் தன்னிறைவு அடைய (ஞானம்) பெற வேண்டும் அதன் பின்பு சித்தன் ஆகலாம் ,அது ஒர்ர் நீண்ட பயணம் அணுரா மாத்தையா அறியுமல்ல...
-
By goshan_che · Posted
உலகில் எந்த நாடுகள் jus soli எனப்படும் அங்கே பிறந்தாலே-பிரசை கொள்கையை பின்பற்றுகிறன என்ற தகவல் கீழே👇. https://worldpopulationreview.com/country-rankings/countries-with-birthright-citizenship
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts