Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செயலணியில் பங்கேற்பதால் தீர்வுக்கு குந்தகம் ஏற்படாது - சம்பந்தன்

Featured Replies

செயலணியில் பங்கேற்பதால் தீர்வுக்கு குந்தகம் ஏற்படாது - சம்பந்தன்

 

(ஆர்.ராம்)

 

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

 

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென முக்கிய சில காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கடிதம் மூலம் கோரியிருந்தார். எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

 

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி செயலணியில் படையினருடன் இணைந்து செயற்படுவதானது அரசியல் தீர்வு உட்பட பல விடயங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என வடமாகாண முதலமைச்சர் மீண்டும் சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகமனதாகபங்கேற்கும் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார். 

 

இந்நிலையில் இவ்விடயங்கள் குறித்து  எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

sampanthhhhhhh.jpg

ஜனாதிபதி செயலணியில் குறைகள் காணப்படுவதாக கூறிக்கொண்டி அச்செயலணியில் நேரடியாக பங்கேற்பதன் மூலம் குறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளைக் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். அத்துடன் இச்செயலணியில் பங்கேற்பதையும் அரசியல் தீர்வுக்கு உதவக்கூடிய வகையில் சாதகமாக மாற்றியமைப்பதற்கு முயற்சிப்போம் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றோம் என்றார். 

http://www.virakesari.lk/article/39132

  • தொடங்கியவர்

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு- சம்பந்தன் காட்டமான பதிலடி!!

 
 
cv-wigneswaran-sambanthan-780x405.jpg
0
 

வட­கி­ழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் செய­ல­ணி­யில் பங்­கேற்­ப­தால், அர­சி­யல் தீர்வு முயற்­சி­யில் எந்­தத் தாம­த­மும் ஏற்­ப­டாது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு எந்­தப் பாதிப்­பும் ஏற்­ப­டாது. எங்­க­ளின் ஒற்­று­மைக்கு எந்­தக் களங்­க­மும் வராது. இந்­தச் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் நாம் பங்­கேற்­பதை விரும்­பா­த­வர்­கள் இத­னைப் புரிந்து கொள்­ள­வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

வட­கி­ழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் செய­ல­ணி­யில் பங்­கேற்­கு­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் செய­ல­ணி­யில் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளார். இருப்­பி­னும் செய­ல­ணி­யின் முத­லா­வது அமர்­வில் அவர் பங்­கேற்­க­வில்லை. கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் பங்­கேற்­கக் கூடாது என்று வடக்கு முத­ல­மைச்­சர் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ருக்கு கடி­தம் எழு­தி­யி­ருந்­தார். கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்­றக் குழு அந்­தக் கோரிக்­கையை நிரா­க­ரித்­தது.

இது தொடர்­பில் வடக்கு முத­ல­மைச்­சர் தானே தயா­ரித்து அனுப்­பும் கேள்வி, பதில் அறிக்­கை­யில், கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு­வின் முடி­வைச் சாடி­யி­ருந்­தார். அர­சி­யல் தீர்­வுக்கே முன்­னு­ரிமை கொடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும், செய­ல­ணி­யில் முப்­ப­டை­யி­ன­ரும் இருப்­ப­தால் போர்க்­குற்ற விசா­ரணை நலி­வ­டை­யச் செய்­யப்­ப­டும் என்­றும் குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­யி­ருந்­தார்.

இது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­த­தா­வது, வட­கி­ழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் பங்­கேற்­பது என்ற கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்­றக் குழு­வின் முடிவை மாற்ற முடி­யாது. வட­கி­ழக்கு மக்­க­ளின் நன்மை கரு­தி­யும், போரி­னால் பாதிக்­கப்­பட்ட தாய­கத்­தின் அபி­வி­ருத்­தி­யைக் கரு­தி­யுமே இந்த முடிவை நாம் எடுத்­துள்­ளோம்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இந்­தக் கூட்­டத்­துக்கு எமக்கு அழைப்பு விடுத்­துள்­ளார். நாம் அதனை உதா­சீ­னம் செய்ய முடி­யாது. அடி­யோடு நிரா­க­ரிக்­க­வும் முடி­யாது.

வட­கி­ழக்கு தமிழ் மக்­கள் தங்­க­ளின் ஏக­பி­ர­தி­நி­தி­க­ளாக எங்­க­ளைத் தெரிவு செய்­துள்­ள­னர். மக்­க­ளின் எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்­ய­வேண்­டி­யது எங்­க­ளின் கடமை. அத­ன­டிப்­ப­டை­யில், போரி­னால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு கூட்­டத்­தில் கலந்து கொள்­ள­வுள்­ளோம். கூட்­டத்­தில் கலந்து கொண்­டா­லும், அர­சி­யல் தீர்வு உள்­ளிட்ட ஏனைய விட­யங்­களை நாங்­கள் ஒவ்­வொன்­றாக முன்­னெ­டுப்­போம்.

இந்­தச் செய­ல­ணி­யில் பங்­கேற்­ப­தால், அர­சி­யல் தீர்வு முயற்­சி­யில் எந்­தத் தாம­த­மும் ஏற்­ப­டாது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு எந்­தப் பாதிப்­பும் ஏற்­ப­டாது. எங்­க­ளின் ஒற்­று­மைக்கு எந்­தக் களங்­க­மும் வராது. இந்­தச் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் நாம் பங்­கேற்­பதை விரும்­பா­த­வர்­கள் இத­னைப் புரிந்து கொள்­ள­வேண்­டும்.

அபி­வி­ருத்­திப் பணி தொட­ரும் அதே­நே­ரத்­தில் அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்­சி­யும் தொட­ரும். இதனை சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­து­கின்­றேன் – என்­றார்.

https://newuthayan.com/story/10/முதலமைச்சர்-விக்னேஸ்வரனுக்கு-சம்பந்தன்-காட்டமான-பதிலடி.html

 

 

செய­ல­ணியில் பங்­கேற்பு தீர்­வுக்கு குந்­தகம் அல்ல : குறை­களை சுட்­டிக்­காட்ட வாய்ப்பு என்­கிறார் சம்­பந்தன்

 

ஆர்.ராம்

வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான ஜனா­தி­பதி செய­லணிக் கூட்­டத்தில் பங்­கேற்­ப­தா­னது அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் எவ்­வி­த­மான குந்­த­கத்­தி­னையும் ஏற்­ப­டுத்­தாது என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார். வடக்கு -கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான ஜனா­தி­பதி செய­லணிக்

கூட்டம் நாளை திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலையில் அக்­கூட்­டத்தில் பங்­கேற்க கூடா­தென முக்­கிய சில கார­ணங்­களை சுட்­டிக்­காட்டி வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரி­டத்தில் கடிதம் மூலம் கோரி­யி­ருந்தார். எவ்­வா­றா­யினும் செய­லணிக் கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி செய­ல­ணியில் படை­யி­ன­ருடன் இணைந்து செயற்­ப­டு­வ­தா­னது அர­சியல் தீர்வு உட்­பட பல விட­யங்­களில் பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும் என வட­மா­காண முத­ல­மைச்சர் மீண்டும் சுட்­டிக்­காட்டி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஏக­ம­ன­தாக பங்­கேற்கும் முடி­வுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் அறிக்கை விடுத்­துள்ளார்.

இந்­நி­லையில் இவ்­வி­ட­யங்கள் குறித்து வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வடக்கு கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியில் பங்­கேற்கக் கூடாது என்­பது உள்­ளிட்ட கருத்­துக்­களை மையப்­ப­டுத்தி வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் எனக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்தார். அதே நேரம் ஜனா­தி­பதி செய­லகம் நான் உட்­பட வடக்கு கிழக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் ஜனா­தி­பதி செய­லணி கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­கான அழைப்­பி­னையும் விடுத்­தி­ருந்­தது. இத்­த­கைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு எனது தலை­மையில் பாரா­ளு­மன்ற வளா­கத்தில் கூடி­யி­ருந்­தது. அச்­ச­ம­யத்தில் அனைத்து உறுப்­பி­னர்­க­ளி­னதும் கருத்­துக்கள் பகி­ரங்­க­மாக கோரப்­பட்­டன. அதன் பிர­கா­ரமே அச்­செ­ய­லணிக் கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக எமது பாரா­ளு­மன்­றக்­குழு ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­தது.

இச்­செ­ய­ல­ணியில் பங்­கேற்­க­வேண்டும் என்­பது எனது தனிப்­பட்ட நிலைப்­பாடும் கூட. அதற்கு கார­ணமும் உள்­ளது. அசா­தா­ரண சூழல் கார­ண­மாக எமது மக்­க­ளுக்கு பல்­வேறு அடிப்­படை, அத்­தி­யா­வ­சிய தேவைப்­பா­டுகள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன. அசா­தா­ரண சூழல் நிறை­வுக்கு வந்த பின்­னரும் கூட மக்­களின் பெரு­ம­ள­வான தேவைப்­பா­டுகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகவே அவற்­றினைப் தாம­த­மின்றி பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான உரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து மேற்­கொள்ள வேண்டும்.

அர­சியல் தீர்வு எமது மக்­களின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் முற்­றுப்­புள்­ளி­வைப்­ப­தற்­கா­ன­தொன்­றாகும் என்­பதில் எந்­த­வி­த­மான மாற்­றுக்­க­ருத்­து­மில்லை. நியா­ய­மான அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பய­ணத்­தி­லி­ருந்து நாம் வில­க­வில்லை. அதே­நேரம் எமது மக்­களின் தேவைப்­பா­டுகள் பற்­றியும் நாம் அதிகம் கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. ஆகவே தான் ஜனா­தி­பதி செய­லணிக் கூட்­டத்தில் பங்­கு­பற்­ற­வேண்­டிய தீர்­மா­னத்­தினை எடுத்­துள்ளோம். இச்­செ­ய­ல­ணியில் பங்­கேற்­ப­தா­னது அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான செயற்­பா­டு­களில் எவ்­வி­த­மான குந்­த­கத்­தி­னையும் ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை. அது தொடர்­பான எமது நகர்­வு­களை பலவீனப்படுத்தப்போவதாகவும் இருக்கப்போவதில்லை.

மேலும் ஜனாதிபதி செயலணியில் குறைகள் காணப்படுவதாக கூறிக்கொண்டு அச்செயலணியில் நேரடியாக பங்கேற்பதன் மூலம் குறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளைக் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். அத்துடன் இச்செயலணியில் பங்கேற்பதையும் அரசியல் தீர்வுக்கு உதவக்கூடிய வகையில் சாதகமாக மாற்றியமைப்பதற்கு முயற்சிப்போம் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றோம் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-08-26

On 8/25/2018 at 6:03 PM, நவீனன் said:

செயலணியில் பங்கேற்பதால் தீர்வுக்கு குந்தகம் ஏற்படாது - சம்பந்தன்

வழமை போலவே கிடைக்கும் ஓசி தேநீர் விருந்தை சம்பந்தன் குழுவினர் தவறவிடக் கூடாது!

சம்பந்தனுக்கும்  சுமந்திரனுக்கும் தெரிந்த ஓசி தேநீர் விருந்தை அனுபவிக்கும் சுகம்  விக்னேஸ்வரனுக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

'விளையும் பயிரை முளையிலே தெரியும்.'

வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பாக சனா­தி­பதியின் செய­லணி தோன்றும் வேளையில்….. ஒரு மொட்டை தையிட்டியில் புத்த விகாரைக்கு அத்திவாரம் போடுது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Rajesh said:

வழமை போலவே கிடைக்கும் ஓசி தேநீர் விருந்தை சம்பந்தன் குழுவினர் தவறவிடக் கூடாது!

சம்பந்தனுக்கும்  சுமந்திரனுக்கும் தெரிந்த ஓசி தேநீர் விருந்தை அனுபவிக்கும் சுகம்  விக்னேஸ்வரனுக்கு தெரியவில்லை.

தேநீர் மட்டும்தானோ அல்லது அதுக்கும் மேலையோ!!!

  • கருத்துக்கள உறவுகள்

54_C8_C372-69_A7-4307-8383-54467249_A7_E

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேடுகெட்ட தமிழ் அரசியல்வாதிகளே! இனியும் என்ன காலநிலை மாற்றம் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்.
பேசாமல் பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு வெளியே வாருங்கள்.
பிரச்சனைகள் தானாக தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கேடுகெட்ட தமிழ் அரசியல்வாதிகளே! இனியும் என்ன காலநிலை மாற்றம் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்.
பேசாமல் பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு வெளியே வாருங்கள்.
பிரச்சனைகள் தானாக தீரும்.

எருமைமாட்டை நிற்க வைத்தாலும் தேர்தலில் வாக்கு போட மக்கள் இருக்கும் வரை கஸ்டம் தான்.

இளம் சந்ததி தான் யோசிக்கணும்.

அதையும் யோசிக்கவிடாமல் பண்ணிக் கொண்டிருக்கிறாங்கள் புலனாய்வுப் பிரிவினர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.