Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

சமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று  காலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது.07.jpg

தாயாகப் போற்றப்படும் பெண்கள் இன்று கேவலமாக இழிவுபடுத்தப்படுகின்றார்கள் இவ்வாறு கேவலப்படுத்தி வருகின்ற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . 

06.jpg

தங்களுடைய நிர்வாணப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு வரும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் மற்றும் கையடக்கதொலைப்பேசி, மாலைநேர வகுப்புக்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் . 04.jpg

எதிர்வரும் சமூகம் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது ஏ9 வீதியுடாக வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தினை சென்றடைந்தது.

08.jpg

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இணையத்தளங்களில் பெண்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வதை தடை செய்யவேண்டும், மீண்டும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனில் மக்களாகிய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் , பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி மாலைநேர வகுப்புக்களை தடை செய்ய வேண்டும் , தமது லீலைகளை வெளியிடுவதால் ஏனைய பெண்களின் நிலை பாதிக்கப்டுமென தெரிவித்துள்ளனர்.

03.jpg

 பாடசாலை மாணவர்களின் போதை பாவனையை முற்றிலும் தடுப்போம் என்ற பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

05.jpg

போராட்டத்தின் இறுதியில்  வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஞரையும் கையளித்தனர்.

01.jpg

மகஞரினை பெற்றுக்கொண்ட வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும் , உரிய தரப்பினருக்கு தகவலை வழங்கி தீர்வினை பெற்றுத்தருவதாக அவர் மேலும் தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/39414

1 hour ago, நவீனன் said:

சமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

எதெற்கெடுத்தாலும் ஆண்களை குறை சொல்லாமல், சமூகச் சீர்கேடுகளில் பெண்களின் பாத்திரம் கணிசமானது என்பதை உணர்ந்தமை இவர்களின் முதல் வெற்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இலகு வழியில் காசு பார்க்கிறதுக்கு ஆண்.. பெண் இரு தரப்பிலும் சம அளவில் சமூகவிரோதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். இதனை இன அழிப்பு ஆட்சியாளர்களும் அவர்களின் பொலிஸ் அமைப்புகளும் ஊக்குவித்தே வருகின்றன. ஒரு சமூகம் கட்டுக்கோப்போக கல்வி அறிவுடன் இருக்கும் வரை தான் அதுக்கு இன.. மொழி.. நில உணர்வு வரும். அந்தக் கட்டுக்கோப்பை.. கல்வி அறிவு மட்டத்தை தகர்த்துவிட்டால்.. இளைய தலைமுறையை சிதைத்துவிட்டால்.. அந்த இனம்.. மீளெள முடியாது. இதுதான்.. சிங்கள ஆட்சியாளர்களின் இந்த  சமூகவிரோதச் செயல்கள் பெருக விடுப்புப் பார்த்துக் கொண்டிருப்பதன் பின்னணி. போதையூட்டல்களும் இதன் பின்னணியில் தான் நிகழ்கிறது. ?

23 hours ago, nedukkalapoovan said:

இன்னமும் எத்தனை நாளைக்கு எல்லாத்தையும் சிங்களவன் மேல் பழி போடுவீர்கள், 10 லட்சம் தமிழ் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தும் எமது எமது இனத்துக்குள் சமூக பிரச்சனைகள் உருவாகின்றது என்றால் யார் காரணம் ......???

முதலில் தாயகத்துக்கான பொருளாதார பங்களிப்பு என்ன ....???

கல்விக்கான பங்களிப்பு என்ன...??

எத்தனை பேர் வெளிநாட்டுக்கு புலம்பெய்ர்வதை தடுத்துள்ளீர்கள்....!!!

எத்தனை பேரை தாயகன் மீள ஊக்குவித்து உள்ளீர்கள்...!!!

முஸ்லீம்களுக்கு காணிகள் விற்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.....??

இந்த கேள்விகளுக்கு பதிலை தேடுங்கள் தவறு யார் மீது என்று புரியும்.....!!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

இதற்கெல்லாம் பதில் இந்தியனிடம் இருக்கிறது அவனைக் கேட்கவேண்டும். பூனைக்கு மணிகட்டுவது யார்.???

13 minutes ago, Paanch said:

இதற்கெல்லாம் பதில் இந்தியனிடம் இருக்கிறது அவனைக் கேட்கவேண்டும். பூனைக்கு மணிகட்டுவது யார்.???

இதை ஏன் இந்தியனிடம் கேட்க வேண்டும்...?????

எமது தவறை நாம் தான் திருத்த வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

இதை ஏன் இந்தியனிடம் கேட்க வேண்டும்...?????

எமது தவறை நாம் தான் திருத்த வேண்டும்

தமிழர்கள் தவறாக வாழ முயற்சிப்பதில்லை, மனிதர்களாக வாழ முயல்கிறார்கள் அதனால்தான் கொடிய மிருகங்களால் கொன்று தின்ன முடிகிறது. 

உண்மையில் இந்த போராட்டத்தின் காரணம் எனக்கு தெளிவாக விளங்கி கொள்ள முடியாமல் இருக்கு. தம் ஆபாச படங்களை / லீலைகளை வெளியிடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுகின்றனர். அப் பெண்கள் வெளிநாட்டு பெண்களா அல்லது வவுனியாவிலேயே உள்ளவர்களா? வெளிநாடு என்றால் இலங்கையால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?

ஆபாச படங்களை தடை செய்ய வேண்டும் என்றால் அரபு நாடுகளின் நடைமுறைகள்  போன்று இறுக்கமான நடைமுறைகள் கொண்டு வர வேண்டும். அது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியமில்லை. 95 வீதமான இணையத்தளங்கள் வெளினாடுகளில் இருந்து இயக்கப்படுபவை. பல சட்ட ரீதியிலான வியாபாரம் (porn industry)

உண்மையில் இவர்கள் செய்ய வேண்டியது தம் பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு சரியான புரிதலை, ஆண் பெண்  இடையிலான ஆரோக்கியமான உறவை பற்றி அறிவூட்டுவது . என்னைப் பொறுத்தவரைக்கும் ஆபாச படங்களை விட ஆபத்தானது இந்திய தொலைகாட்சி தொடர்கள். ஆண் பெண் உறவை இந்த தொடர்கள் போன்று கேவலமாக சித்தரிக்க முடியாது.

எல்லாவற்றையும் விட தம் பிள்ளைகளுக்கு கட்டற்ற சுதந்திரத்தை கொடுக்கும் அலைபேசிகளை கட்டுப்படுத்துவது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Dash said:

இன்னமும் எத்தனை நாளைக்கு எல்லாத்தையும் சிங்களவன் மேல் பழி போடுவீர்கள், 10 லட்சம் தமிழ் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தும் எமது எமது இனத்துக்குள் சமூக பிரச்சனைகள் உருவாகின்றது என்றால் யார் காரணம் ......???

முதலில் தாயகத்துக்கான பொருளாதார பங்களிப்பு என்ன ....???

கல்விக்கான பங்களிப்பு என்ன...??

எத்தனை பேர் வெளிநாட்டுக்கு புலம்பெய்ர்வதை தடுத்துள்ளீர்கள்....!!!

எத்தனை பேரை தாயகன் மீள ஊக்குவித்து உள்ளீர்கள்...!!!

முஸ்லீம்களுக்கு காணிகள் விற்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.....??

இந்த கேள்விகளுக்கு பதிலை தேடுங்கள் தவறு யார் மீது என்று புரியும்.....!!!!

சில வேளை இவர்களின் சேவையால்? வித்தியா போன்றவர்கள் பாதுகாக்கப்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Dash said:

இன்னமும் எத்தனை நாளைக்கு எல்லாத்தையும் சிங்களவன் மேல் பழி போடுவீர்கள், 10 லட்சம் தமிழ் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தும் எமது எமது இனத்துக்குள் சமூக பிரச்சனைகள் உருவாகின்றது என்றால் யார் காரணம் ......???

முதலில் தாயகத்துக்கான பொருளாதார பங்களிப்பு என்ன ....???

கல்விக்கான பங்களிப்பு என்ன...??

எத்தனை பேர் வெளிநாட்டுக்கு புலம்பெய்ர்வதை தடுத்துள்ளீர்கள்....!!!

எத்தனை பேரை தாயகன் மீள ஊக்குவித்து உள்ளீர்கள்...!!!

முஸ்லீம்களுக்கு காணிகள் விற்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.....??

இந்த கேள்விகளுக்கு பதிலை தேடுங்கள் தவறு யார் மீது என்று புரியும்.....!!!!

இத்தனை தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேற யார் காரணம்..??!

முஸ்லீம்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட்டது யார்..??!

வழங்கப்படும் நிதிகளை உதவிகளை தமிழர் தாயகம் நோக்கிப் போகாமல்.. தடுத்து தென்னிலங்கைக்கு மாற்றி அமைப்பது யார்..??!

விடுதலைப்புலிகள் காலத்தில் சர்வதேச சமூகம் அளிக்க முன்வந்த உதவிகளை தமிழ் மக்களை நோக்கி வராமல் தடுத்தது யார்..??!

முஸ்லீம்களுக்கு காணி விற்கும் அளவுக்கு தமிழர்களிடம் தாயகப் பற்றை இல்லாமல் செய்வது யார்..??!

புத்தருக்கு சம்பந்தமே இல்லாத இடங்களில் எல்லாம் புத்த கோவில் அமைத்து தமிழர் நிலத்தை ஏக்கர் கணக்கில் சிங்கள மயமாக்குவது யார்..??!

தமிழரின் கடல் வளத்தைச் சூறையாடுவதும்.. தமிழர்களுக்கு தகுந்த தொழில்புரியக் கூடிய பாதுகாப்பான கெடுபிடியற்ற சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது யார்..??!

தாயகத்தில் முதலீட்டைச் செய்ய.. தொழிலை ஆரம்பிக்க.. கையூட்டுகள்.. கப்பங்கள்.. இதர இஸ்தியாதிகள் கோருவது யார்..?1

தமிழர் தாயகத்தில் தங்கள் இஸ்டத்துக்கு இஸ்டப்படி வீடு கட்டி கொடுக்க இராணுவத்தை இயக்குவது யார்..??!

மாகாண அமைச்சுக்கள் முன்மொழியும் திட்டங்களை செயற்படுத்த விடாமல் தடுத்து வரும்.. ஆளுநர்கள் எந்த இனத்தவர்கள்..??!

ஆக.. பிரச்சனைகளின் மூலக் காரணியை இனம் கண்டு அகற்றினால்.. உப காரணிகள் தாமே தீர்ந்து கொள்ளும். ☺️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.