Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை”

Featured Replies

“சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை”

Sumanthiran-2.jpg?resize=666%2C470

சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை. ஊடகங்கள் பொய்யுரைத்து உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று சனிக்கிழமை பருத்துறையில் அமைந்துள்ள தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சமஸ்டி அரசியலமைப்பு எமக்கு தேவையில்லை. என நான் காலியில் பேசியதாக இன்றைய தினம பல ஊடகங்களில் தலைப்பு செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து சில பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் அப்படி பேசியிருக்க மாட்டீர்களே  என விளக்கம் கேட்டார்கள். அவர்கள் எனது விளக்கத்துடன் இன்று செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள். ஆனாலும் பல ஊடகங்கள் என்னை கேட்காமல் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். தமிழரசு கட்சியின் அடிப்படைக் கொள்கையே சமஸ்டியாகும்.

இந்நிலையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு தேவையில்லை. என நான் கூறிய தாக செய்திகளை வெளியிட்டிருக்கும் பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம்.

புதிய அரசியலமைப்பு குறித்து மக்களை தெளிவுபடுத்தும் கூட்டங்கள் தெற்கில் இடம்பெற்று வருகின்றன. இதில் 7வது கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி மாவட்டத்தில் இடம்பெற்றது.

இது குறித்து தமிழ் மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  காரணம் தமிழ் ஊடகங்கள் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த கூட்டங்கள் புதிய அரசியலமைப்பு இந்த நாட்டுக்கு எந்தளவு தூரம் அவசியமானது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்தி மக்களுடைய ஆதரவுடன் அதனை வெற்றி பெறச் செய்வதை நோக்கமாக கொண்டது.

இதனை பழைய இடதுசாரி கட்சிகள் சில முன்னெடுக்கின்றன. இதில் அரசியல் கட்சிகளாக தமிழ்தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் சில இடங்களில் ஐக்கியதேசிய கட்சியும் பங்களிக்கிறது.

இந்த கூட்டங்களில் பிரதமானமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களை பேசி வருகிறோம். மக்கள் விடுதலை முன்னணி 20வது திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ளபோதும்  தமது முன்னுரிமை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் எனவும் அது உருவாக்கப்பட்டால் 20வது திருத்தச்சட்டத்தை தாங்கள் கைவிடுவதாகவும் கூறியுள்ளது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தளவில் 20வது திருத்தச்சட்டத்தை நாம் ஆதரித்தாலும் எங்களுடைய கொள்கையின் படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்ப டவேண்டும். ஆனால் அது மட்டும் செய்தால் இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.  அதற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். இதனை நாம் கூறுவதுடன் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபில் நிபுணர்களால் மாதிரி வரைபாக கூறியுள்ள விடயங்களையும் நாங்கள் கூறியே வருகிறோம். அதிலும் சமஸ்டி என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை.

அதேபோல் ஒற்றையாட்சி என்ற சொல்லும் இடம்பெற்றிருக்கவில்லை. இது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதனை தமிழ் பிரதேசங்களில் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் நான் கூறிவந்திருக்கிறேன். புதிய அரசியலமைப்பில் சமஸ்டிக்கான 2 குணாம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது மாதிரி வரைபிலும் உள்ளது. ஆனால் சமஸ்டி என்ற பெயர்பலகை அல்லது சொல்லாடல் இருக்க கூடாது என்பதுடன், புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பாகவும் இருக்ககூடாது. இது எங்களுடைய நிலைப்பாடு.

வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம்,  மற்றும் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் வந்த சந்திரிக்கா அம்மையாருடைய தீர்வு திட்டம் உள்ளிட்டவற்றிலும் சமஸ்டி பெயர்பலகை அல்லது சொல்லாடல் இல்லை. அதேபோல் ஒற்றையாட்சி பெயர்பலகை அல்லது சொல்லாடல் இல்லை.

ஆகவே அந்தமாதிரியான ஒரு ஒழுங்குமுறை ஊடாகவே நாங்கள் நகர்ந்து கொண்டிருக் கிறோம். புதிய அரசியலமைப்பு சம்மந்தமான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது 2015.01.19ம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்றுகையில்,  சமஷ்டி என்றால் தெற்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஒற்றையாட்சி என்றால் வடக்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் அர சியலமைப்பு மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படகூடாது. அவ்வாறான ஆவணமாக அது இருக்ககூடாது.  எனவே நவீன அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அந்த கருத்து இடைக்கால வரைபில் அப்படியே கூறப்பட்டுள்ளது. ஆகவே பெயர்பலகையில் அல்லது சொற்களில் தங்கியிருந்து குழப்பங்களை விளைவிக்காமல், புதிய அரசியலமைப்பு முயற்சிகளை தோற்கடிக்காமல் இருக்க. நாம் பெயர்பலகை அல்லது சொல்லாடலை தவிர்த்து உள்ளடக்கத்தில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு ஒன்றை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இதனை நான் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கும் தெளிவாக கூறிவருகிறேன். இரத்தினபுரி பகுதியில் உரையாற்றும் போது இந்த நாடு ஒரு நாடாக இருக்கவேண்டுமானால் புதிய அரசியலமைப்பு தேவை. இது வரை தமிழ் மக்கள் ஒரு நாட்டுக்குள் இணக்கமாக வாழ்வதற்கான இணக்கப்பாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை. ஆகவே இந்த சமூக ஒப்பந்தம் அவசிய மானது.

இந்த ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழ்வதற்கான இணைக்கப்பாட்டை நாங்கள் தெரிவிப்பதற்கான நிபந்தனையாக அர்தமுள்ள அதிகார பகிர்வு இடம்பெறவேண்டும். என கூறினேன். அதேபோல் காலியில் நடைபெற்ற கூட்டத்திலும் சமஸ்டி குறித்து பல விடயங்களை கூறியிருந்தேன். கூட்டத்தின் நிறைவில் என்னுடைய உரையை அடிப்படையாக கொண்டு என்னை நோக்கி விசேடமான கேள்வி ஒன்று எழுப்பபட்டது. அந்த கேள்வி சமஸ்டியை மட்டும்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?  என அமைந்திருந்தது. அப்போதும் நான் வழக்கமாக கூறுவதைபோல் சமஸ்டி பெயர்பலகை அல்லது. சொல்லாடல் எமக்கு தேவையில்லை. என்றே கூறினேன்.

அதனை சமஸ்டி தேவையில்லை. என நான் கூறியதாக ஊடகங்கள் தலைப்பு செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. புதிய அரசியலமைப்பில் சமஸ்டிக்கான குணாம்சங்கள் உண்டு நான் சமஸ்டி தேவையில்லை. என எப்போதும் கூறவில்லை என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/93735/

  • தொடங்கியவர்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சிங்கள குடியேற்றங்கள் இல்லை – சுமந்திரன்

 

Sumanthiran.jpg
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெறவில்லை. அவை மஹிந்த ராஜபக்ஷ காலத்திலேயே நடைபெற்றன என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
 
இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
இதன்போது மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் ஆராய்ந்தமைக்கு அமைவாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து உண்மையானது. ராஜபக்ஷ காலத்திலேயே சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள். ஆனால் ராஜபக்ஷ காலத்தில் குடியேற்றப்பட்டவர்களுக்கே இப்போது காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டுவருகிறது. அதனை நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம்.
 
மேலும் மகாவலி எல் வலய பிரச்சினை இன்று நேற்று வந்த பிரச்சினையல்ல. 1980 ஆம் ஆண்டு தொடக்கம் உக்கிரம்பெற்றுவரும் பிரச்சினை. ஆனால் இப்போது சிலர் வந்து மணலாறு பறிபோனால் தமிழ்தேசம் பறிபோனதற்கு சமம் எனக்கூறுகிறார்கள். இவர்கள் 10 வருடங்கள் நடாளுமன்றில் இருந்தார்கள். அந்த 10 வருடத்தில் 10 தடவைகள் கூட மகாவலி எல் வலய பிரச்சினை குறித்து பேசியிருக்கவில்லை.
 
பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் போன்றவற்றில் இந்த காணி பிணக்குகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அரசியலமைப்பிலும் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கான பாதுகாப்பை நாங்கள் தேடி கொண்டிருக்கிறோம்.
 
ஆகவே மாற்றங்கள் நடப்பதற்கு பிரதான காரணம் ஆட்சிமாற்றமே. ஆட்சிமாற்றத்தினால் ஒன்றும் நடக்கவில்லை எனவும், தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்திற்கு உதவியது எனவும் கூறப்படும் கருத்துக்கள் அப்பட்டமான பொய்கள். இதனை கூறுவதற்கும் நான் தயங்கவில்லை. ஆட்சிமாற்றம் இடம்பெறாவிட்டால்  வலி, வடக்கில் 6348 ஏக்கர் காணி அரசாங்கத்திற்கு சென்றிருக்கும். கேப்பாபுலவில் ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்பட்டிருக்காது. முள்ளிக்குளம் விடுவிக்கப்பட்டிருக்காது.
 
ஆகவே ஆட்சிமாற்றத்தினால் உண்டான நன்மைகளை மறந்துவிடக்கூடாது. மேலும் நல்லாட்சியில் குடியேற்றங்கள் நடந்ததாக நாம் அறியவில்லை. சில கரைவலைப்பாட்டு அனுமதிகளை மகாவலி அதிகாரசபை வழங்கியதாக அறிந்தோம். அதற்கு மகாவலி அதிகாரசபைக்கு உரிமை கிடையாது. அதனை சட்டரீதியாக தீர்ப்போம். அதேபோல் குடியேற்றங்களையும் இன்றுள்ள சட்டங்களின் பிரகாரமே தீர்க்க முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/நல்லாட்சி-அரசாங்க-காலத்த/

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

10 வருடங்கள் பாராளுமன்றில் இருந்தவர்கள் 10 தடவைகள் கூட மகாவலி பற்றி பேசவில்லை….

நல்லாட்சியில் குடியேற்றம் இல்லை…

sumanthiran.jpg?resize=640%2C427

 

முல்லைத்தீவு,  வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெறவில்லை. அவை மஹிந்தராஜபக்ஸ காலத்திலேயே நடைபெற்றன. என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கும் நிலையில் அவ்வாறு வழங்கவில்லை. நாங்கள் மக்களை குடியேற்றவில்லை. என அரசு கூறிவரும் கருத்து தொடர்பாக, நேற்றைய தினம் சனிக்கிழமை பருத்துறையில் உள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நாங்கள் ஆராய்தமைக்கமைவாக அமைச்சர் றாஜித சேனாரத்ன கூறிய கருத்து உண்மையானது. ராஜபக்ஸ காலத்திலேயே குடியேற்றப்பட்டார்கள். ஆனால் ராஜபக்ஸ காலத்தில் குடியேற்றப்பட்டவர்களுக்கு இப்போது காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்.

மேலும் மகாவலி எல் (L) வலய பிரச்சினை இன்று நேற்று வந்த பிரச்சினையல்ல. 1980ம் ஆண்டு தொடக்கம் உக்கிரம் பெற்றுவரும் பிரச்சினை. ஆனால் இப்போது சிலர் வந்து மணலாறு பறிபோனால் தமிழ்தேசம் பறிபோனதற்கு சமம் என கூறுகிறார்கள். இவர்கள் 10 வருடங்கள் நடாளுமன்றில் இருந்தார்கள். அந்த 10 வருடத்தில் 10 தடவைகள் கூட மகாவலி எல் (L) வலய பிரச்சினை குறித்து பேசியிருக்கவில்லை.

எனவே இந்த நபர்களுடைய கருத்து விசித்திரமாக உள்ளது. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் போன்றவற்றில் இந்த காணி பிணக்குகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அரசியலமைப்பிலும் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கான பாதுகாப்பை நாங்கள் தேடி கொண்டிருக்கிறோம். அதற்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்பதற்கான போராட்டங்களை செய்யவேண்டும்.

முன்னர் நாங்கள் போராட்டம் நடாத்தியபோது மக்களை காண முடிவதில்லை. காரணம் அன்றைக்கு மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு அச்சப்பட்டார்கள். 2013ம் ஆண்டு நான் நாடாளுமன்றில் ஆற்றிய உரையை அண்மையில் மீள எடுத்து பார்த்தேன்.

அதில் கேப்பாபிலவு, வலி,வடக்கு, முள்ளிக்குளம், போன்ற பகுதிகளில் உள்ள காணி பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன். ஆகவே தொடர்ந்தும் நாங்கள் பேசி வருகிறோம். நான் முன்னர் கூறியதைப் போல் அந்த நாட்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட பயப்பட்டார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தினால் இன்று மக்கள் வீதியில் இறங்கி போராடும் அளவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனை கூறுவதற்கு நான் தயங்கவில்லை. மேலும் பல விடயங்கள் மாறியுள்ளன.

குறிப்பாக கேப்பாபிலவில் சிறிய பகுதி தவிர மற்றய இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. வலிவடக்கில் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி விடுவிக்கப்படாது என்றார்கள். ஆனால் இன்று மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மாற்றங்கள் நடப்பதற்கு பிரதான காரணம் ஆட்சிமாற்றமே.

ஆட்சிமாற்றத்தினால் ஒன்றும் நடக்கவில்லை எனவும், தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்திற்கு உதவியது எனவும் கூறப்படும் கருத்துக்கள் அப்பட்டமான பொய்கள். இதனை கூறுவதற்கும் நான் தயங்கவில்லை.

ஆட்சிமாற்றம் இடம்பெறாவிட்டால் வலி,வடக்கில் 6348 ஏக்கர் காணி அரசாங்கத்திற்கு சென்றிருக்கும். கேப்பாபிலவில் ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்பட்டிருக்காது. முள்ளிக்குளம் விடுவிக்கப்பட்டிருக்காது. ஆகவே ஆட்சிமாற்றத்தினால் உண்டான நன்மைகளை மறந்துவிடக்கூடாது. மேலும் நல்லாட்சியில் குடியேற்றங்கள் நடந்ததாக நாம் அறியவில்லை.

சில கரைவலைப்பாட்டு அனுமதிகளை மகாவலி அதிகாரசபை வழங்கியதாக அறிந்தோம். அதற்கு மகாவலி அதிகாரசபைக்கு உரிமை கிடையாது. அதனை சட்டரீதியாக தீர்ப்போம். அதேபோல் குடியேற்றங்களையும் இன்றுள்ள சட்டங்களின் பிரகாரமே தீர்க்க முடியும்.

குறிப்பாக வெளிநாட்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சம்பூர் நிலத்தை நீதிமன்றம் ஊடாக மீட்டோம். அதனை செய்வதற்கு நாங்கள் தயார். ஆனால் அரச தலையீட்டினால் இவை நிறுத்தப்படவேண்டும்.

அண்மையில் ஜனாதிபதி செயலணியிலும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தை தெளிவாக கூறியுள்ளார். ஜனாதிபதி அவ்வாறு நடக்கவில்லை என கூறினாலும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/93757/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

நன்றி இணைப்புக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

முல்லைத்தீவு,  வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெறவில்லை. அவை மஹிந்தராஜபக்ஸ காலத்திலேயே நடைபெற்றன. என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு சம்பவம் முக்கியமாக தெரியவில்லை. காலம் தான் முக்கியமாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

514705_BF-6_D6_E-46_DB-_A562-_C867_C56_D

  • கருத்துக்கள உறவுகள்
நீ மதிக்கும் மனிதனைக் காண்பி. நீ எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்வேன்.
-தோமசு கார்லைல்-
 
ரு யாழ் உறவு எப்படிப்பட்டவர் என்று யாழ்களத்தில் வெளிவரும் கருத்துக்களாலும், பச்சைப் புள்ளிகளாலும் தெரிந்து கொள்ளலாம்.   
 
  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் வேண்டாம், சரி.

சமஷ்ட்டி வேண்டாம், சரி.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் வேண்டாம், சரி.

நல்லிணக்க அரசாங்கத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறவில்லை,  சரி.

அப்போ, என்னதான் எமக்கு வேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ragunathan said:

ஈழம் வேண்டாம், சரி.

சமஷ்ட்டி வேண்டாம், சரி.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் வேண்டாம், சரி.

நல்லிணக்க அரசாங்கத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறவில்லை,  சரி.

அப்போ, என்னதான் எமக்கு வேண்டும் ?

இன்னமும் கிடைக்க முடியாதவை எவ்வளவோ இருக்கின்றனவே? 
அவற்றை கேட்டு இன்னும் அறுபது வருடத்தை ஓட்டலாம் இல்லையா?
இதோ உதாரணத்துக்கு:

  1. எங்களுக்கு ஒலிம்பிக்கில் தனியான ஈழத்தமிழர் குழுவுக்கு அனுமதி தேவை.
  2. கனடாவுக்கு ஈழத்தமிழர் விசா இல்லாமல் போகும் உரிமை தேவை.
  3. முன்னர் இருந்த சோழ இராச்சியம் முழுவதும் ஈழத்தமிழருக்கு திறந்த பொருளாதார வலயம் ஆக வேண்டும்.

இப்படி எத்தனயோ கேட்கலாம்.

இவற்றை விட்டுவிட்டு, அங்கே இருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் ஏதாவது சாத்தியமான வழியில் பெற்று கொடுக்க பாருங்கள். அது தான் அவர்களுக்கு தேவை.

  • தொடங்கியவர்

ஆட்சி மாற்­றத்­தாலேயே காணி­கள் விடு­விப்பு- சுமந்­தி­ரன் எம்.பி.!!

 
903249998m-a-sumanthiran-%E0%AE%9F.jpg
 

வலி.வடக்கு, மயி­லிட்டி, கேப்­பாபி­லவு, முள்­ளிக் கு­ளம் என்று பல இடங்­க­ளில் இன்று காணி­கள் விடு­விக்­கப் பட்­டுள்­ளன. இன்­ன­மும் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­ வேண்­டி­யுள்­ளன. அந்த மாற்­றங்­கள் எல்­லாம் ஆட்சி மாற்­றத்­தால்­தான் நடக்­கின்­றது. ஆட்சி மாற்­றம் தமிழ் மக்­க­ளுக்­குத் தோல்வி என்­பது அப்­பட்­ட­மான பொய்.

இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பருத்­தித்­து­றை­யி­லுள்ள அவ­ரது பணி­ம­னை­யில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

1980ஆம் ஆண்­டு­க­ளி­லேயே மண­லாறு பறி­போய்­விட்­டது. அப்­போது நாடா­ளு­மன்­றத்­தில் இருந்­த­வர்­கள் இது தொடர்­பில் குரல் எழுப்­ப­வில்லை. இப்­போது அதைப் பற்­றிப் பேசு­வது விசித்­தி­ர­மாக இருக்­கின்­றது. மகா­வலி எல் வல­யத்­தில் சிங்­க­ள­வர்­கள் கோத்­த­பா­ய­வின் காலத்­தி­லேயே குடி­யேற்­றப்­பட்­டார்­கள். அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ளர் ராஜித தெரி­வித்த கருத்­துச் சரி­யா­னது. அவர்­க­ளுக்கு இப்­போது காணி உரி­மப் பத்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்­பந்­தங்­க­ளில் காணி­கள் தொடர்­பில் நல்ல சட்ட ஏற்­பா­டு­கள் இருந்­தது. புதிய அர­ச­மைப்­பி­லும் அதனை உள்­வாங்­கி­யுள்­ளோம். புதிய அர­ச­மைப்பு வரும் வரை­யி­லான காலம் வரை­யில் காணி­கள் பறி­போ­வ­தைத் தடுக்­க­வேண்­டும்.

கூட்­டாட்சி

டட்லி – செல்வா, பண்டா – செல்வா ஒப்­பந்­தங்­க­ளில் கூட கூட்­டாட்சி என்ற வார்த்தை பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்சி என்றோ கூட்­டாட்சி என்றோ வார்த்­தை­கள் இல்லை. ஆனால் இடைக்­கால அறிக்கை கூட்­டாட்­சி­யின் பண்­பு­க­ளைக் கொண்­டி­ருக்­கின்­றது – என்­றார்.

https://newuthayan.com/story/11/ஆட்சி-மாற்­றத்­தாலேயே-காணி­கள்-விடு­விப்பு-சுமந்­தி­ரன்-எம்-பி.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.