Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.எஸ் பயங்கரவாதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்

Featured Replies

ஐ.எஸ் பயங்கரவாதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்

 

 

தன் மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் நம்பவில்லை எனவும், தனது மருமகன் ஒரு அப்பாவி எனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அமைச்சரின் மருமகனான 25 வயது முஹமட் நிஜாம்டீன் அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா மறுத்துள்ளார்.

அவுஸ்திரேலியா டெய்லி மெய்ல் என்ற செய்திசேவை இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஐ.எஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நிஜாம்டீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபத்தான தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் நிஜாம்டீன் கைது செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் அறிவித்திருந்தனர்.

அவர் அவுஸ்திரேலியாவையும் தாண்டி, இலங்கையுடனே அதிக தொடர்புகளை கொண்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது மருமகன் தவறு இழைத்திருக்க மாட்டார் என தமது குடும்பத்தினர் நம்புவதாகவும், நீதித்துறைக்கு மதிப்பு கொடுப்பதன் காரணமாக நீதித்துறையின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

https://www.tamilwin.com/security/01/192494?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில்....இன்னமும்....அல்லாவின் நீதி மன்றம் வரவில்லை!

தண்டனை....கொஞ்சம் கடுமையாக இருக்கும் எனினும்.....நிச்சயமாகக் கையைக் காலை....வெட்ட மாட்டார்கள்....என்ற வரையில் ஆறுதல் படுங்கள், அமைச்சரே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

அவுஸ்திரேலியாவில்....இன்னமும்....அல்லாவின் நீதி மன்றம் வரவில்லை!

தண்டனை....கொஞ்சம் கடுமையாக இருக்கும் எனினும்.....நிச்சயமாகக் கையைக் காலை....வெட்ட மாட்டார்கள்....என்ற வரையில் ஆறுதல் படுங்கள், அமைச்சரே!

வேண்டும் என்றே ஜோடிக்கப்பட்டது என்கிறாரே அமைச்சர், உண்மையோ?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

வேண்டும் என்றே ஜோடிக்கப்பட்டது என்கிறாரே அமைச்சர், உண்மையோ?

சரியாகச் சொல்லத் தெரியாது!

பின்வரும் இணைப்புக்களைப் பாருங்கள்...!

https://www.smh.com.au/national/nsw/sri-lankan-student-charged-with-terror-offences-in-sydney-20180831-p5012l.html

http://www.abc.net.au/news/2018-09-03/alleged-islamic-state-affiliate-has-relatives-in-sri-lankan-govt/10194862

  • தொடங்கியவர்

எனது மருமகன் அப்பாவி- அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து

 

 
 

அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்ட்டுள்ள எனது மருமகன் அப்பாவி என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டு அவுஸ்திரேலியாவில் தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையை சேர்ந்த நிஜாம்டீன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவரை நேசிக்கின்றோம் ஆனால் எவராவது தவறு செய்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஒரு குடும்பம் என்ற வகையில் நாங்கள் அவர் அப்பாவி என்றே கருதுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

குடும்பம் என்ற அடிப்படையில் அவர் தவறு  இழைத்திருக்க மாட்டார் என நாங்கள் கருதுகின்றோம்,இது குறித்து நாங்கள் உயர்ந்தபட்ச நம்பிக்கை கொண்டுள்ளோம்,எனினும் நீதித்துறை தனது கருத்தை தெரிவிக்கும் வரை நாங்கள் பொறுமையாகயிருக்கவேண்டியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் முன்கூட்டியே  விடயங்களை மதிப்பிட முயலவில்லை  நாங்கள் அவரை நம்புகின்றோம் நேசிக்கின்றோம் என்பதை மாத்திரமே எங்களால் தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

faizer_au17.jpg

நிஜாம்டீன் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள பின்னர் இதுவரை குடும்பத்தவர்களுடன் தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள பைசர் முஸ்தபா  குடும்பத்தினர் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபருடன் தொடர்புகொள்வதற்கான நடைமுறையொன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாங்கள் நீதித்துறையை மதிக்கின்றோம் பொருத்தமான தருணத்தில் நாங்கள் அவரை தொடர்புகொள்ள முடியும் என நாங்கள் கருதுகின்றோம்  எனினும் குடும்பத்தவர்கள் அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிஜாம்டீன்  தாக்குதல் முயற்சிக்கான திட்டங்களை தீட்டியிருப்பார் என நான் கருதவில்லை அவர் இறுதியாக இலங்கை வந்தபோது மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் அனைவரிலும் பாசத்துடன் காணப்பட்டார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை பொறுத்தவரை இது கடினமான தருணம்,எனினும் பயங்கரவாதம் என்ற சர்வதேச பிரச்சினையை நீதித்துறை கையாளவேண்டியுள்ளது,சந்தேகம் வந்தால் அவுஸ்திரேலிய அரசாங்கமும் அது குறித்து கவனம் செலுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நான் அமைச்சராக உள்ளேன் என்பதற்கான இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடாது அது பிழையான விடயம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிஜாம்டீன் ஏனைய இளைஞர்களை போன்றவர்   அவர் விளையாடுவார் அவர் நடனமாடுவார், இலங்கை அவுஸ்திரேலிய இளைஞர்களிடமிருந்து அவர் வித்தியாசமானவர் இல்லை,எனகுறிப்பிட்டுள்ள அமைச்சர் குடும்பத்தவர்கள் அனைவரும் மனமுடைந்த நிலையில் உள்ளனர் எனினும் இது அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதால் அங்கு சிறந்த நீதித்துறை உள்ளதால் நீதி நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39697

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கெதிராக வழக்குச் சோடிக்கவேண்டிய அவசியம் என்னவிருக்கிறது? இவர் இலங்கையின் அமைச்சர் ஒருவரின் உறவினர் என்பதாலா? எனக்குப் புரியவில்லை.

இலங்கையின் அமைச்சர் ஒருவரின் மீது அவுஸ்த்திரேலிய அரசிற்கு வரவேண்டிய கோபமும், பழிதீர்க்கும் தேவையும் என்ன?

இவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் தொடர்பற்றவர் என்பதை முதலில் நிரூபிக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்.

மில்லியன்கணக்கான முஸ்லீம்கள் இங்கே வாழ்கிறார்கள். அப்படியிருக்க, இவரைக் குறிவைத்து, பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி, கைதுசெய்யவேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஒருவர் பிரச்சனைக்குரியவராக இருக்கலாம் என்று சந்தேகம் வந்தால், அவர் ஒரு அசம்பாவிதத்தை செய்யும்வரை காத்திருந்துவிட்டு செயலாற்றுவதா அல்லது அவர் அப்படியொன்றைச் செய்யுமுன் அவரை அணுகுவதா சரியென்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நவீனனுக்கு ஒரு வேண்டுகோள்,
இங்கே செய்திகளை இணைக்கும்போது, தலைப்பிற்கும் செய்திக்குமிடையே தொடர்பிருக்கிறதா என்று பார்ப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.

தலைப்பில் இலங்கை அமைச்சர் ஐஸிஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் தனது மருமகன் ஒரு தீவிரவாதியென்று நான் நினைக்கவில்லை என்றுதான் கூறியிருக்கிறார். 
இது ஒரு பிழையான வழிநடத்தல் என்றுதான் நினைக்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதான்.

உண்மையான அப்பாவித் தமிழ் இளைஞ்சர்கள் பலரை அரசியல் கைதிகள் என்ற போர்வையில் வருடக்கணக்கில் சிறையிலடைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தின் அமைச்சர், தகுந்த ஆதாரங்களுடன் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதியை அப்பாவி எனக்கூறுவது வேடிக்கையாக உள்ளது.
ஐ.எஸ், அல் கைதா எல்லாம் 2000 ஆண்டின் பின்னர் தான் உலகறிந்த பயங்கரவாதிகள் , ஆனால் 1990 இற்கு முன்னரே இலங்கையில் ஜிகாத் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருந்தனர்.

29 minutes ago, ragunathan said:

 

அடுத்ததாக நவீனனுக்கு ஒரு வேண்டுகோள்,
இங்கே செய்திகளை இணைக்கும்போது, தலைப்பிற்கும் செய்திக்குமிடையே தொடர்பிருக்கிறதா என்று பார்ப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.

தலைப்பில் இலங்கை அமைச்சர் ஐஸிஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் தனது மருமகன் ஒரு தீவிரவாதியென்று நான் நினைக்கவில்லை என்றுதான் கூறியிருக்கிறார். 
இது ஒரு பிழையான வழிநடத்தல் என்றுதான் நினைக்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதான்.

 

அது நவீனனின் தவறில்லை ரகு , தமிழ்வின் காரரின் தவறு. செய்திகளை இணைக்கும் போது நாம் தலைப்பினை மாற்றக்கூடாது என களவிதியும் உள்ளது.

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

நானும் அவதானித்தேன் ரகு.

ஆனால் செய்திகளை இணைக்கும்போது அந்த இணையத்தில் உள்ளதை அப்படியே இணைக்கிறேன்.

நானாக செய்திக்கு தலைப்பை மாற்றுவது இல்லை.

யாழ் கள விதிகளும் அதையே சொல்கிறது.

31 minutes ago, ragunathan said:

அடுத்ததாக நவீனனுக்கு ஒரு வேண்டுகோள்,
இங்கே செய்திகளை இணைக்கும்போது, தலைப்பிற்கும் செய்திக்குமிடையே தொடர்பிருக்கிறதா என்று பார்ப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.

தலைப்பில் இலங்கை அமைச்சர் ஐஸிஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் தனது மருமகன் ஒரு தீவிரவாதியென்று நான் நினைக்கவில்லை என்றுதான் கூறியிருக்கிறார். 
இது ஒரு பிழையான வழிநடத்தல் என்றுதான் நினைக்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நவீனன் said:

எனது மருமகன் அப்பாவி- அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து

நிஜாம்டீன் ஏனைய இளைஞர்களை போன்றவர்   அவர் விளையாடுவார் அவர் நடனமாடுவார், இலங்கை அவுஸ்திரேலிய இளைஞர்களிடமிருந்து அவர் வித்தியாசமானவர் இல்லை,

இது எங்கோ உதைக்கிறதே... அவுத்திரேலிய இளைஞர்கள் அனைவரும் நியாம்டீன் போன்றவர்களா....??? 

50 minutes ago, நவீனன் said:

எனது மருமகன் அப்பாவி- அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து

 அங்கு சிறந்த நீதித்துறை உள்ளதால் நீதி நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீதித்துறை இறந்து பலகாலம் ஆகிவிட்டதை உறுதிப்படுத்துகிறாரா...???

  • தொடங்கியவர்

பயங்கரவாதக் குற்றச்சாட்டில் வெளிநாட்டில் கைதான இலங்கையருக்கு நீதிகோரி கையெழுத்து வேட்டை

 

 

பயங்கரவாத குற்றச்சாட்டில் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இலங்கையை சேர்ந்த கமீர் நிஜாப்தீனுக்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவின் change.org இணையத்தளத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எந்த முகாந்திரமும் இல்லாமல் கமீர் நிஜாப்தீனை கைது செய்தது மட்டுமல்லாமல், அவருக்கு உரிய சட்ட வசதிகளை மறுத்தும், அவர் தொடர்பான செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டு வருகின்ற அரச அதிகார போக்கை கண்டித்து, மக்களிடம் ஆதரவு கோரி இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கபட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

change.org இணையத்தில் 'Justice for Kamer' என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கமீர் நிஜாப்தீன் வைத்திருந்த பழைய கணினியொன்றிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நிஜாப்தீனிடமிருந்து அது கைப்பற்றப்பட்டதல்ல. அந்தக் கணினி நிஜாப்தீனால் பல மாதங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டிருந்த ஒன்று.

அத்துடன் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் புத்தகத்தில் உள்ள தகவல்கள் எதுவும் நிஜாப்பதீனின் கையெழுத்தில் எழுதப்பட்டவையும் அல்ல.

கைது செய்யப்பட்டிருக்கும் நிஜாப்தீனை யாரும் பார்க்கமுடியாதுள்ளது. அவருக்குரிய சட்ட உதவிகள் எதுவும் வழங்க முடியாமல் உள்ளது. பெற்றோர் உறவினர்கள் கூட நேரில் சென்று பார்க்க முடியாதுள்ளது.

அடிப்படை உரிமைகள் அனைத்தும் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறன. உள்ளூரிலும், வெளிநாட்டிலும் அவர் தொடர்பான அபாண்டமான செய்திகளை ஊடகங்கள் புனைந்து கொண்டிருக்கின்றன.

இதேவேளை, சமூகத்தின் பெறுமதி மிக்க இளைஞனாகவும் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோருக்கும் நற்குணம் கொண்ட மனிதனாகவும் தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தியவர் நிஜாப்தீன் என்றும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/community/01/192521?ref=home-feed

 

 
17 hours ago, நவீனன் said:

பைசர் முஸ்தபா

பைசர் முஸ்தபா குடும்பத்தினர் மிக நீண்டகாலமாக தமிழின விரோதிகளாக செயற்பட்ட மதவெறியர்கள். இவர்களிடம் இஸ்லாமிய பயங்கரவாதம் மறைந்திருப்பது ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.