Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் மகிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்டது உண்மை! டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

பிரபாகரன் மகிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்டது உண்மை! டக்ளஸ் தேவானந்தா

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவைத் தோல்வியடைய செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில காணிகள் விடுவிக்க வேண்டியுள்ளது. யுத்தம் முடிவுக்கொண்டு வரப்பட்ட பின்னர் இன்று வடக்கு கிழக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் இன்று மக்கள் அமைதியாக வாழ்கின்றார்கள். நாட்டில் யுத்தம் ஒன்று நடந்ததா என்று சிந்திக்கும் வகையில் அந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்த்தார்.

அது அவரின் தவறான கணிப்பு. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரபாகரன் மக்களை அச்சுறுத்தினார்.

ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தால் இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார். பிரபாகரன் மகிந்தவிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டமை வெளிப்படையான உண்மை. அது முழு நாட்டிற்கும் தெரியும்.

நான் அரசாங்கத்தில் இருந்தவன். எனக்கு நடந்தவை அனைத்தும் தெரியும். பணத்தை பெற்றுக்கொண்டு போன எமில்காந்தன் கூட இன்று வெளிநாட்டில் உயிருடன் இருக்கின்றார்.

இலங்கைக்கு வந்தால் அந்த கொடுக்கல் வாங்களில் ஈடுபட்ட தரப்பினர்களை சந்திக்க வைக்க முடியும் என நேர்காணலில் ஈடுபட்ட ஊடகவியலாளரிடம் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilwin.com/politics/01/193942?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்

 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்: டக்ளஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதும் நேரம் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொடுக்கல் வாங்கலின் ஒரே சாட்சியும் தரகருமான.. டக்கிளஸ் தனக்கு எவ்வளவு கிடைத்தது என்பதைப் பற்றித்தான் இப்ப பேசனுமே தவிர இல்லாத பிரபாகரனுக்கு எவ்வளவு கிடைச்சது என்று பேசி என்ன பயன்..!

முட்டாள் ஆயுத அரசியல் வாதிகளா.. இதுவா இப்ப பேசப்பட வேண்டிய விடயம். புலிகளின் அழிவில் எல்லாத்தையும் வெட்டி வீழ்த்தி தமிழ் மக்களுக்கு மத்தியில் கூட்டாட்சி வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி.. பெற்றுக் கொடுத்து விடுவோம் என்ற உங்கள் வாய் வீரத்துக்கு என்னானது.. அதைப் பற்றிப் பேசுங்க... ?

Edited by nedukkalapoovan

இவருக்கு எப்பிடி இது தெரியும்?
என்ன ஆதாரம் வைச்சிருக்கார்?

இப்படி அடிப்படையில்லாமல் கண்டதையும் கதைப்பவர்களுக்கு பேர் தான் எட்டப்பர்கள் / கைக்கூலிகள் என்டு சொல்வார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறையும் ஏதாவது  பிடுங்கலாம் என மகிந்த அறிவுவறுத்தி இருப்பார்  அதற்கேற்ப வாலாட்டுகிறார் . இவ்வளவு காலமும் வாயை ஏன் மூடி இருந்தார்??
ஊடகவியலாளர் முன் தனது சகோதரர் வி.புலிகளால் கொல்லப்பட்டார் என சொல்பவர் இவரால் கொல்லப்பட்டவர்கள் பற்றி செய்தியாளரும் கேட் கவில்லை. இவரும் சொல்லவில்லை என்றால் எத்தகைய செவ்வி என மாற்று கருத்தாளர்களும் பதில் சொல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.