Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை – 23 ஆவது ஆண்டு நினைவு தினம் :

Featured Replies

நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை – 23 ஆவது ஆண்டு நினைவு தினம் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Nakrkoel.jpg?resize=800%2C450

 

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது.

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின.

எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்.

nkm_12.jpg?resize=478%2C800

http://globaltamilnews.net/2018/96618/

அஞ்சலிகள்! 

  • தொடங்கியவர்

நாகர் கோவில் கொல்லப்பட்ட 21 மாணவர்களுக்கு அஞ்சலி!!

 

யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர் கோவிலில் இடம்பெற்ற விமான குண்டு தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்களின் 23 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மகா வித்தியாலத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பாடசாலைச் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

20180922_123220-750x430.jpg20180922_120544-750x430.jpg20180922_120431-750x430.jpg20180922_123320-750x430.jpg

20180922_124207-750x430.jpg20180922_125203-750x430.jpg20180922_125212-750x430.jpg20180922_125221-750x430.jpg20180922_125233-750x430.jpg

https://newuthayan.com/story/12/நாகர்-கோவில்-கொல்லப்பட்ட-21-மாணவர்களுக்கு-அஞ்சலி.html

  • தொடங்கியவர்

நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்

 

 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.

IMG_6424.JPG

இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மகாவித்தியாலத்தியில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக அமைக்கப்படுள்ள நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

IMG_6434.JPG

1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் இலங்கை விமானப்படையின் புக்காரா விமானத்தினால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 39 மாணவர்கள் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர்.

IMG_6442.JPG

விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தினால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை மரத்தின்மீது விழுந்த குண்டினால் அந்த இடத்திலேயே 25 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் 6-16 வயதிற்குட்பட்ட மாணவர்களே.

IMG_6522.JPG

மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சங்கரப்பிள்ளை திரவியராசா தலைமையில் நடைபெற்ற இன்றைய இந் நினைவுகூரல் நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

IMG_6577.JPG

IMG_6595.JPG

http://www.virakesari.lk/article/40997

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி தேவாலயப் படுகொலை, யாழ்ப்பாணம் தேவாலயப் படுகொலை, புதுக்குடியிருப்ப் பாடசாலைப் படுகொலை...இப்படிப் பல படுகொலைகளை செய்த் ஒரு கொலைகாரிக்கு செவாலியே விருது.

சிறிது நாட்களில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு மகிந்தவிற்கு அமைதிக்கான (மயான அமைதிக்கான) நொபெல் ப்பரிசு கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

பர்மாவின் ரொஹிங்கியா முஸ்லீம்களுக்கெதிரான இனக்கொலையை நடத்தியதில் பங்கெடுத்த ஆங் சாங் சூகிக்கு சில வருடங்களுக்கு முன்னர் அமைதிக்கான நொபெல் பரிசு கொடுக்கப்பட்டது நினைவிலிருக்கலாம்.

இதேபோலத்தான் யாசீர் அரபாத்துக்கும், இஸ்ரேலிய பிரதமர் யிட்ஷாக் சமீருக்கும் சமாதானத்துக்கான நொபெல் பரிசு கொடுக்கப்பட்டதும், இன்றுவரை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்குமிடையே பிணக்கு தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாஞ்சலிகள்!!

 

2 hours ago, ragunathan said:

நவாலி தேவாலயப் படுகொலை, யாழ்ப்பாணம் தேவாலயப் படுகொலை, புதுக்குடியிருப்ப் பாடசாலைப் படுகொலை...இப்படிப் பல படுகொலைகளை செய்த ஒரு கொலைகாரிக்கு செவாலியே விருது.

பிற மதங்களின் கோவில்களை அழிப்பதில் முகமதிய இனமே முன்நிற்பதாக வரலாறுகள் இன்றும் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா....! என்று சிங்கள இனத்தையும் முன்நிறுத்தி வரலாற்றில் இடம்பிடிக்க வைத்தமைக்கே அந்த அம்மாவுக்கு செவாலியே விருது.!! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.