Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sachithananthan-720x450.png

மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம்!

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

சிவசேனை அமைப்பின் தலைவரை விசாரணைக்காக கடந்த மாதம் 05ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தான் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக கொழும்புக்கு வர முடியாது எனவும் கடிதம் மூலம் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் யாழ். நான்காம் குறுக்கு தெருவிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் அலுவலகத்திற்கு இன்று(வியாழக்கிழமை) மறவன்புலவு சச்சிதானந்தன் அழைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி வாக்கு மூலம் பெற்றுள்ளார்.

http://athavannews.com/மறவன்புலவு-சச்சிதானந்தன/

காலத்தின் கோலம் காரணமாக உண்மையான பயங்கரவாதிகள் நல்ல மனிதர்களை விசாரிக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Rajesh said:

காலத்தின் கோலம் காரணமாக உண்மையான பயங்கரவாதிகள் நல்ல மனிதர்களை விசாரிக்கிறார்கள்!

இவர் சில மாதங்களுக்கு முன்னர் பெளத்த பேரினவாதத்தின் அமைப்பான பொதுபல சேனாவை ஆதரிப்பதாக அறிக்கை விட்டவர், பரவாயில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ragunathan said:

இவர் சில மாதங்களுக்கு முன்னர் பெளத்த பேரினவாதத்தின் அமைப்பான பொதுபல சேனாவை ஆதரிப்பதாக அறிக்கை விட்டவர், பரவாயில்லையா?

நீங்கள் செய்வது சரி.

ஆனால், சில இடங்களில் தப்பிப்பிழைப்பதற்கு  தந்திரோபாயக் கூட்டு வைக்கவேண்டிய நிலையில் உள்ளது தமிழ் சமூகம்.

முக்கியமாக கிழக்கில், முஸ்லிம்களின் அடாத்தான காணி அபகரிப்புக்களை தடுப்பதற்கு.

அப்படியான நிலைப்பாட்டை இவர் எடுத்தது, இப்படியான பிரச்சனைகளை தத்துவார்த்த அடிப்படையில் கையாள்வாதற்கே என்று அப்போது விளங்கிக்கொண்டேன். இந்த விளக்கத்தில்  தவறு இருக்கலாம்  

அந்த நேரத்தில், பொதுபலசேனா ஓர் விளக்கமும் கொடுத்திருந்தது, அதாவது இலங்கை பூர்வீக தமிழர்களும், சிங்களவர்களிற்கும், கலாசார மற்றும்  மத ரீதியில் பல இடங்களில் ஒத்து வருகிறது என்று.

அந்த அடிப்படையிலேயே இவர் பொது பல சேனாவை ஆதரித்து இருக்கலாம் அல்லவா? 

பொதுவாக நான் சொல்வது, மறுக்கப்படுபடக் கூடிய சொல்லாடல்களை பகிரங்கமாக பாவித்து தேவையான தந்திரோபயக் கூட்டுக்களை ஆக்கிக் கொள்வதில் தப்பில்லை.

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக... நல்ல மனிதர், மறவன்புலவு  சச்சிதானந்தன்  அவர்கள்.
அவர், எம் இனத்திற்கு  செய்த சேவைகளை.... என்றும் தமிழ் இனம் மறக்கக் கூடாது.

சிங்களம், இந்தியா...  என்று,  இரட்டை  குதிரையில் ஓடும்... 
சம்பந்தன், சுமந்திரனுக்கு...  இவரைக்  கண்டால், பிடிக்காது.
காரணம்... சுத்து  மாத்து  இல்லாத மனிதன்.   

 

வாழும் போதே....  ஒருவரை, பாராட்டுவது தான்... அழகு.
அதற்கு... தமிழ் இனம், இன்னும்  தயாராக.... இல்லை என்றே... நினைக்கின்றேன்.  

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அடக்குமுறைகளைக் கண்டு மிரள்பவர் அல்ல இவர்!

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நாம் மாறிக்கொள்வது தவறில்லை என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், இங்கே சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் கண்முன்னே நடக்கும் அடக்குமுறையையும், ஆக்கிரமிப்பையும் அனுபவித்துக்கொண்டு இன்னும் அவர்களுடன் என்னவாறான சாதக சந்தர்ப்பங்களுக்குக் காத்திருக்கிறோம்? அல்லது எவ்வாறான சந்தர்ப்பத்தை சிங்களப் பேரினவாதம் எங்களுக்குத் தரப்போகிறது? 

தமிழர் தாயகம் மீதான சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பென்பது அங்கு வாழ்ந்துவந்த தமிழர்களை அழித்தோ அல்லது விரட்டியோ நடைபெறுவது.

2009 உடன் தமிழர் மீதான முற்றுமுழுதான வெற்றியைக் கண்டுள்ள சிங்களம் இன்று முஸ்லீம்கள் மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

தமிழர் காணிகளோ, சொத்துக்களோ முஸ்லீம்களால் அடாத்தாக ஆக்கிரமிக்கப்படவில்லை. தமிழர்கள் அவற்றை விற்பதனால் அவர்கள் வாங்குகிறார்கள். தமிழர்கள் விற்கவில்லையென்றால், நாங்கள் பயப்படும் "முஸ்லீம் ஆக்கிரமிப்பு" இடம்பெற சாத்தியமில்லை. ஆனால் இதற்கும் சிங்கள ஆக்கிரமிப்பிற்குமிடையிலான வேறுபாடு தெரியாமல் நாம் இருப்பது வேதனை.

எம்மில் குறைந்தது 200,000 பேரைக் கொன்று, எமது தாயகத்தைன் தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றாக முறியடித்து, இன்றுவரை எம்மண்ணில் தனது பயங்கரவாத ராணுவத்தை வைத்திருக்கும் சிங்களப் பேரினவாதம் எம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் முஸ்லீம்கள் காணி வாங்குவதும், வீடுவாங்குவதும் பாரதூரமாகத் தெரிகிறது.

தமிழும் சிங்களமும் சரித்திரத்தில் ஒரேமாதிரியானவர்கள் என்று அவன் சொல்லிவிட்டால் மட்டும் அவன் செய்தவை எல்லாவற்றையும் மறந்து, மன்னித்து விட்டு விடலாமா? முற்றாக அடிமைப்படுத்தப்பட்ட தமிழினத்தை சிங்கள பேரினவாதத்துக்குள் உள்வாங்கி எமது அடையாளத்தையே சிதைத்து இல்லாமல் செய்துவிட அவன் எடுக்கும் முஸ்த்தீபாக இது இருக்கலாமென்று ஏன் நாம் யோசிக்கவில்லை?

மறவன்புலவு சச்சிதானந்தம் முன்னர் தமிழ்த் தேசியவாதியாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் இன்று இந்துத்துவா பேசும் இந்து மதவெறி இயக்கமான சிவசேனையின் இலங்கைத் தலைவர். கருணாகூட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்தான். ஆனால் இன்று எப்படியிருக்கிறார்? அவரை நாம் இன்னமும் புலிகளின் ஒப்பற்ற தளபதியாக கொள்ளலாமா?

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பி.ஜே.பி யின் வாலாக இருக்கும் சச்சி தாயகப்பகுதியில் மதவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றார். ஆனால் இவருடைய பருப்பு வேகாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragunathan said:

தமிழர் காணிகளோ, சொத்துக்களோ முஸ்லீம்களால் அடாத்தாக ஆக்கிரமிக்கப்படவில்லை. தமிழர்கள் அவற்றை விற்பதனால் அவர்கள் வாங்குகிறார்கள். தமிழர்கள் விற்கவில்லையென்றால், நாங்கள் பயப்படும் "முஸ்லீம் ஆக்கிரமிப்பு" இடம்பெற சாத்தியமில்லை. ஆனால் இதற்கும் சிங்கள ஆக்கிரமிப்பிற்குமிடையிலான வேறுபாடு தெரியாமல் நாம் இருப்பது வேதனை.

உங்கள் சொல்லாடலில் இருந்து நீங்கள் ஊகமாதான் உங்கள் கருது இருப்பதாக தென்படுகிறது. ஏனெனில் சாத்தியக்கூறு என்கிறீர்கள்.

ஆனால், அங்கு நடப்பதை தெரிந்து கொள்வதே முக்கியம்.

இதனாலேயே, அடாத்தான காணி  அபகரிப்பு என்று சொல்லியுளேன்.

வெகு சமீபத்தில் கூட ஓர் கோயில் காணியை போலி மற்றும் திருட்டு உறுதி மூலம் அபகரிக்கப்பட்ட சேதி வந்தது.

நான் அறிந்தவற்றைக் கொண்டே இங்கு எனது கருத்துக்களை சொல்கிறேன்.

கிழக்கில் இருப்போர் முஸ்லிம்களின் அடாத்தான காணி  அபகரிப்பு என்பது பெரும்பாலும் நடைபெறவில்லை என்பதை இங்கு உறுதி செய்தால், நீங்கள் சொல்வதை ஏற்கிறேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.