Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை விரும்பும் சிங்கள மக்கள் - CPA

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச சார்பற்ற அமைப்பான Centre for Policy Alternatives.. கொழும்பில் உள்ள Social Indicator என்ற புள்ளிவிபரம் சேகரிக்கும் அமைப்பின் உதவியோடு சிறீலங்காவில் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் போர் மூலம் புலிகளைத் தோர்க்கடித்து அதன் பின் பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்ற எண்ணப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை வெளிப்பட்டுள்ளது..!

பெரும்பாலான சிங்களவர்கள் மகிந்தவின் செயற்பாடுகளை ஆதரிப்பதோடு அவர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவார் என்றும் நம்புகின்றனர்..!

பெரும்பாலான சிங்கள மக்கள் புலிகள் போர் நிறுத்ததைக் சரி வர கடைப்பிடிக்கவில்லை என்று கருதுகின்றனர்..!

பெரும்பாலான சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அரசு மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இது முன்னைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் வெளிவந்த புள்ளிவிபரங்களோடு ஒப்பிடும் போது அதிகம்..!

இந்த கருத்துக்கணிப்பில் சிங்கள. முஸ்லீம் மற்றும் மலையகத்தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்..!

நவீன உலகோடு தொடர்புள்ள புலம்பெயர்ந்த புளுகுத்தமிழர்கள் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தக் கூட நாதியற்ற நிலையில் இருப்பதுதான் உண்மை..! தாயகத் தமிழர்களின் எண்ணங்களும் வெளிப்படக் கூடிய நிலை இருக்கவில்லை. போர்ச் சூழல் காரணமாக கருத்துக்கணிப்பாளர்கள் தமிழர்கள் பெரிதும் செறிந்து வாழும் பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை என்றே தெரிகிறது..!

உசாத்துணை..

Solution: An overwhelming majority of the Up-Country Tamil (95.2%) and Muslim

(88.1%) communities state that peace can be achieved through peace talks while only a

slight majority of the Sinhala (46.3%) community believes the same. Interestingly, 35.1% of

the Sinhala community supports the government defeating the LTTE. When compared to

the PCI findings of November 2006, the Sinhala support for the government defeating the

LTTE has increased by 9 points to 35.1% while their support for peace talks has reduced

from 11 points to 46.3%. Amongst the Muslim community, support for peace talks has

reduced by 11 points to 88.1%.

Expanding military offensives: A majority of the Sinhala (59.2%) community agree with

the statement that .The government should expand its military action including even all

out war in order to weaken the LTTE. A majority of the Up-Country Tamil (87.9%)

community disagree with the statement. The Muslim (Agree- 50%, Disagree- 50%)

community has a divided opinion in this regard. When compared to the PCI findings of

November 2006, the agreement amongst the Sinhala community has increased (Agree:

November ‘06- 55%, February ‘07- 59.2%) while the disagreement amongst the Up-

Country Tamil community has decreased (Disagree: November ‘06- 92.3%, February ‘07-

87.9%).

Likelihood of War: A majority of the Sinhala (65.9%), Up-Country Tamil (69.9%) and

Muslim (63.9%) communities believe that it is likely a war will resume. When compared

to the PCI findings of November 2006, those who believe that it is likely a war will

resume has increased amongst the Sinhala (November ‘06- 58.2%, February ‘07- 65.9%)

community while it has decreased amongst the Muslim (November ‘06- 78.3%, February

‘07- 63.9%) community.

A majority of the Sinhala (60.6%) and the Muslim (71.7%) communities agree that the

government is capable of finding peace through talks. Amongst the Up-Country Tamil

community, 37.7% disagree while 29.5% agree. When compared to the PCI findings of

November 2006, the agreement amongst the Sinhala (Agree: November ’06- 56.6%,

February ‘07- 60.6%) has slightly increased while the agreement amongst the Up-Country

Tamil (Agree: November ‘06- 34.9%, February ‘07- 29.5%) community has decreased.

Commitment and Capability of Parties to the Peace Process: A majority of the

Sinhala (73.8%) and the Muslim (50%) communities agree that the government is

committed to find peace through talks. The Up-Country Tamil community has a mixed

opinion (Agree- 36.1%, Disagree- 32.8%, Don’t know/Not sure- 31.1%). When compared

to the PCI findings of November 2006, the agreement amongst the Sinhala (Agree:

November ’06- 79.9%, February ‘07- 73.8%) and the Up-Country Tamil (Agree:

November ’06- 52.3%, February ‘07- 36.1%) communities has decreased.

End to the Conflict: A majority of the Sinhala (48.3%) community think that the country

is ‘close’ in approaching a permanent settlement to the ethnic conflict. A majority of the

Up-Country Tamil (50.8%) and the Muslim (55%) community think that the country is

‘not close at all’ in finding a permanent settlement to the ethnic conflict. When compared

to the PCI findings of November 2006, amongst the Sinhala community, those who

believe that the country is ‘close’ has significantly increased (Close: November ‘06- 26.3%,

February ‘07- 48.3%).

cpa_logo.gif

http://www.cpalanka.org/research_papers/PC...2007_REPORT.pdf

http://www.cpalanka.org/

(முக்கியத்துவம் கருதி இங்கும் தலைப்பு இடப்படுகிறது. உங்கள் கருத்துக்களை உள்ளே சிந்தனைக்களம் பகுதியில் உள்ள தலைப்பில் வையுங்கள்..! )

This is an exclusive post for yarl forum..!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21894

Edited by nedukkalapoovan

தூரத்தில் நெருப்பை வைத்துப் பார்த்து அதன் இதமான சூட்டில் குளிர்காய்பவர்கள் இவர்கள். சிமாக்களில் வரும் யுத்தத்தினை ரசிப்பது போல் நிஜ யுத்தத்தின் கொடுமையை உணராதவர்கள். அவலம் அவர்களுக்கும் ஏற்படும் போதுதான் யுத்தத்தின் தாற்பரியம் உணரப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் எவனும் தனது சொத்தாக உரிமை கொண்டாடும் ஒன்றை மற்றவர்களுக்கு எவ்வித பிரதி உபகாரமுமில்லாமல் தாரை வார்க்கமாட்டான். பெரும்பான்மை இனமக்கள் தமது நாடென்று உரிமை கொண்டாடும் இலங்கைத்தீவினைப் பிரித்து தமிழர்களிடம் அவர்களுக்கான ஆடசியதிகாரத்தைக் கையளிப்பார்கள் அல்லது ஒரு சிறுவகை அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தைத்தானும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்து அவர்களிடம் போய் அபிப்பிராயம் கோருவது படுமுட்டாள்தனம். இதனைப் பலர் பலகாலமாகச் செய்து வருகின்றனர். இதை எப்போதோ புரிந்த கொண்டதால்தான் தங்கள் பிரதேசங்களைத் தாங்களே ஆளவேண்டுமென்னும் கோரிக்கையை முன்வைத்துத் தமிழர்கள் ஆயுதமேந்தினர். நிலைமையிலுள்ள நெருக்கடியைப் புரிந்துகொண்டு வேறுவழியில்லாதாதால் சில பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தங்கள் ஏற்படலாமேயொழிய இந்தப் பிரச்சனை வெறும் சமாதான வழியில் தீர்க்கப்படவேண்டிய ஒன்றல்ல. படிப்படியாக ஈழத்தமிழரின் பலம் ஸ்தாபிக்கப்பட்டு இனிவேறு வழியில்லையென்ற நிலையில் சிங்கள அரசும் மக்களும் தமிழரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வைக்கப்படவேண்டும். அதுவே இப்போது நடைபெறுகிறது. சில சறுக்கலகள் தமிழரின் அரசியல் ராணுவச் சமநிலைகளில் தற்போது ஏற்பட்டாலும் இந்தப் போக்கிலிருந்து தமிழர்கள் யு த்திரும்பலடித்து சரி சிங்களவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அவர்களின் ஆட்சிக்குக் கீழே ஒன்றுபட்ட இலங்கையில் எங்களது தேசிய இனத்தகுதியை விட்டு சிறுபான்மையினராக எவ்வித பிரதேச ஆட்சி உரிமைகளுமின்றி வாழ்கிறோம் என்று பணிந்து போவார்களெனச் சிங்களவர் எதிர்பார்க்கவும் முடியாது அது நடைபெறப்போதுமில்லை. அப்படிச் சிங்கள மக்களும் அவர்களின் அரசும் எண்ணுவார்களேயானால் அவர்கள் யதார்த்தத்திற்குப் புறம்பாக மிகவும் வறிய புத்திஜீவித்தனத்துடன் சிந்திக்கிறார்களென்பதே அர்த்தம். நீண்டபோரினால் ஏற்படப்போகும் பாதக விளைவுகளை எதிர்வுகூர்ந்து ஒரு சமாதானத் திட்டத்திற்குள் அவர்கள் வந்தேயாகவேண்டும். அந்தக்கட்டத்தில் தமிழர்களும் சற்று இறங்கிவந்து ஜக்கிய இலங்கையைப் பற்றிச் சிந்திக்க வாய்ப்பிருக்கிறது. மற்றும்படி முற்காலங்களில் நடைபெற்றதுபோல துப்பாக்கிக் குழலினூடாக ஆட்சியதிகாரம் நிலைநிறத்தப்படுவதைத் தவிர மாற்றீடு எதையும் முன்னோக்கிப் பார்ப்பதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் எவனும் தனது சொத்தாக உரிமை கொண்டாடும் ஒன்றை மற்றவர்களுக்கு எவ்வித பிரதி உபகாரமுமில்லாமல் தாரை வார்க்கமாட்டான். பெரும்பான்மை இனமக்கள் தமது நாடென்று உரிமை கொண்டாடும் இலங்கைத்தீவினைப் பிரித்து தமிழர்களிடம் அவர்களுக்கான ஆடசியதிகாரத்தைக் கையளிப்பார்கள் அல்லது ஒரு சிறுவகை அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தைத்தானும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்து அவர்களிடம் போய் அபிப்பிராயம் கோருவது படுமுட்டாள்தனம். இதனைப் பலர் பலகாலமாகச் செய்து வருகின்றனர். இதை எப்போதோ புரிந்த கொண்டதால்தான் தங்கள் பிரதேசங்களைத் தாங்களே ஆளவேண்டுமென்னும் கோரிக்கையை முன்வைத்துத் தமிழர்கள் ஆயுதமேந்தினர். நிலைமையிலுள்ள நெருக்கடியைப் புரிந்துகொண்டு வேறுவழியில்லாதாதால் சில பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தங்கள் ஏற்படலாமேயொழிய இந்தப் பிரச்சனை வெறும் சமாதான வழியில் தீர்க்கப்படவேண்டிய ஒன்றல்ல. படிப்படியாக ஈழத்தமிழரின் பலம் ஸ்தாபிக்கப்பட்டு இனிவேறு வழியில்லையென்ற நிலையில் சிங்கள அரசும் மக்களும் தமிழரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வைக்கப்படவேண்டும். அதுவே இப்போது நடைபெறுகிறது.

இது தான் இப்போ உண்மைநிலை

ஆனால் கடதாசியில் தமிழீழம் வரும் என்பவர்கள் இன்னும் எங்கள் முன் உள்ளனர்.

சொன்னால் நாட்டைவிட்டு ஓடியவருக்கு கதைக்க அருகதையில்லை என்கின்றனர்.

சிங்களவனோடு சிங்களவனாக வாழ்ந்து அடி வாங்கி விமானம் ஏறியவன் என்கின்ற ரீதியில் விட்டுவிட வேண்டியதுதான்.

வாங்கித்திருந்திவரட்டும்

தமிழீழம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்...

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கணிப்பை நம்பி தமிழர்கள் தங்களது சுதந்திரத்தை இழக்க வேண்டுமா? உதாரணத்துக்கு 99% சிங்கள மக்கள் தமிழீழத்துக்கு எதிர் என்று வைத்துக் கொள்வோமெனில், தமிழ் மக்கள் தங்கள் சுதந்திரத்துக்காக போராடக்கூடாது என்று அர்த்தம் ஆகி விடுமா? மேலும் 100% இனவாத ஊடகங்களை கேட்கும் சிங்கள மக்களிடம் வேறென்னத்தை எதிர் பார்க்க முடியும். அத்தோடு இத்தகைய கருத்துக் கணிப்புகளை நம்புவர்கள் வடி கட்டிய முட்டாள்களாக தான் இருக்க முடியும். ஏனெனில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்களுக்காக வக்காளத்து வாங்குபவர்கள் சிங்களவர்களின் மன நிலையை அறிந்து கொள்ள இதை ஒரு பயன்தரும் கருத்துக்கணிப்பாக எடுத்துக்கொள்ளலாம். சிங்களத்துக்கு புரியக்கூடிய பாசை பேச்சு அல்ல அடிதான் என்பதை நிரூபித்து இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கணிப்பை நம்பி தமிழர்கள் தங்களது சுதந்திரத்தை இழக்க வேண்டுமா? உதாரணத்துக்கு 99% சிங்கள மக்கள் தமிழீழத்துக்கு எதிர் என்று வைத்துக் கொள்வோமெனில், தமிழ் மக்கள் தங்கள் சுதந்திரத்துக்காக போராடக்கூடாது என்று அர்த்தம் ஆகி விடுமா? மேலும் 100% இனவாத ஊடகங்களை கேட்கும் சிங்கள மக்களிடம் வேறென்னத்தை எதிர் பார்க்க முடியும். அத்தோடு இத்தகைய கருத்துக் கணிப்புகளை நம்புவர்கள் வடி கட்டிய முட்டாள்களாக தான் இருக்க முடியும். ஏனெனில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

நீங்கள் கருத்துக்கணிப்பை சரியாக அவதானிக்கக்கவும் இல்லை.. அதேவேளை சிறிலங்காவின் யதார்த்த அரசியல் களத்தை நோக்கும் நிலையிலும் இல்லை..! இந்த நிலை தமிழ் மக்களுக்கு 1% தானும் உதவப்போவதில்லை..! :P

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் பாகியசோதி சரவணமுத்துவும், மறைந்த தோழர் கேதீஸ்வரனும் பல ஆய்வுக் கட்டுரைகளையும், பல கருத்துக் கணிப்புக்களையும் ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். சமாதானத்தை சிங்கள மக்கள் முன்னெடுக்கவேண்டும் என்று இவர்கள் ஒருபோதும் நம்பியதில்லை.. இவர்களுக்குத் தேவையானதெல்லாம் இப்படியான அறிக்கைகளைத் தயாரித்து தமக்குப் பண உதவிகளைத் தருபவர்களைத் திருப்தி செய்வதுதான்..

புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிக்க வேண்டும் என்ற சிங்கள மக்களின் மனநிலை போன வருடம்தான் உறுதிபெற்றது.. ரணில் ஆட்சிக்கு வருவதற்கு சற்றுமுந்தைய காலகட்டத்திலும், போர் நிறுத்தம் ஆரம்பித்த காலகட்டத்திலும் பெரும்பாலான சிங்களவர்கள் சமாதானத்தை விரும்பியிருந்தனர்.. இன்னும் சில காலங்களில் மீண்டும் சமாதானத்தை விரும்பக்கூடும்..

இந்த நேரத்தில் அன்ரன் பாலசிங்கம் 1984 இல் கூறியது மிகவும் பொருத்தமாகத்தான் உள்ளது!

In Chennai its spokesman, Anton Balasingham, said,

The government seems hell-bent on a military solution, and if that is what they want, they will get a military answer. Our campaign will intensify until the government realizes it cannot defeat us militarily.

Balasingham was so confident because he was perhaps the only person party to the foundation Pirapaharan had laid in 1984 to build a strong military and a separate state - Tamil Eelam. The structure he built on that strong foundation is currently running a de facto parallel state in nearly 75 percent of the northeastern province.

http://www.sangam.org/articles/view2/?uid=645

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி.

தமிழர் பிரச்சைனையப் பற்றி தமிழர்களிடமல்லவா கேட்கவேணும். முசுலிம் , மலையக தமிழன், சிங்களவன் நினைப்பதை எம்மிடம் திணிக்கவா முடியும்?

இலங்கை போன்ற ஊழல் மலிந்த மூன்றாம்தர நாடுகளில் கருத்துக் கணிப்புக்கு எந்த மதிப்புமில்லை. ஏதோ புலியைப் பார்த்து பூனை சுட்டுக்கொண்டது போல இவர்களும் கருத்துக் கணிக்கலாம். ஆனால் அதன் முடிவுகள் ஒரு மாற்றத்தையும் தரப்போவதில்லை. இலங்கை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அமெரிக்கர்களுக்கு கவலையில்லை. அவர்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலை. அவர்களை என்ன நினைக்க வைக்கவேண்டும் எப்படி வைக்கவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்து அதன்படி செயல்படுவர்.

டெமோக்கிரசியைப் பற்றி புளுகித்திரியும் அமெரிக்கா பாலஸ்தீனத்தில் மக்களின் கருத்துக்கு மதிப்பளித்ததா? இல்லையே! மக்கள் தேர்ந்தெடுத்த அரசை தூக்கியெறிய முயலவில்லையா?

ஆனால் நீங்கள் சொன்னது போல எங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்படி ஒரு கருத்துக் கணிப்பெடுத்து (நம்பகமாக) அதை மேற்குக்கு சொன்னால் பலன் கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நீங்கள் மட்டும் ஏதோ 100% உதவிய மாதிரி நடிக்காதீர்கள். ஏன் இந்த கருத்து கணிப்பை வடக்கிலும்,கிழக்கிலும் நடத்தியிருந்தால் நிச்சயமாக எதிர்மறையான ஒரு முடிவை தந்து இருக்கும். அப்போ நீங்கள் என்ன கூறப்போகின்றீர்கள்? யதார்த்த நிலையில் why do we(tamils) have to care about singala people who are not willing to understand people.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ நீங்கள் மட்டும் ஏதோ 100% உதவிய மாதிரி நடிக்காதீர்கள். ஏன் இந்த கருத்து கணிப்பை வடக்கிலும்,கிழக்கிலும் நடத்தியிருந்தால் நிச்சயமாக எதிர்மறையான ஒரு முடிவை தந்து இருக்கும். அப்போ நீங்கள் என்ன கூறப்போகின்றீர்கள்? யதார்த்த நிலையில் why do we(tamils) have to care about singala people who are not willing to understand people.

தமிழர்களின் தீர்வு தமிழீழம் என்று நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம்..! ஆனால் விடுதலைப்புலிகளில் இருந்து அனைத்துத் தமிழர் தரப்பும் தமிழீழத்துக்கு மாற்றான தீர்வையும் காணத்தயாராகவே உள்ளனர். அப்படியொரு நிலையில் மூவின மக்களினதும் எண்ணங்கள் நிச்சயம் இறுதித் தீர்வில் செல்வாக்குச் செய்யும் என்பது வெளிப்படை உண்மை. அதை நீங்கள் உணர மறுக்கிறீர்கள். ஒரேவேளை புலிகள் இராணுவ ரீதியாக சிறீலங்கா இராணுவத்தை வென்று விரட்டி தமிழீழத்தை அமைத்தாலும் கூட சர்வதேசத்துக்கு புலிகள் பல பதில்களைச் சொல்ல வேண்டிய நிலை உண்டு. அதில் எல்லாம் சர்வதேசம் மக்களின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பளிக்கும். சர்வதேசம் நீங்கள் நினைப்பது போல தமிழர்களையே ஆதரித்து மற்றவர்களைப் புறக்கணிக்கும் என்று கணிப்பிடுவது மிகத்தவறானது..! தமிழீழம் சர்வதேச ஆதரவின்றி இயங்கவோ இருக்கவோ முடியாது..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.. வீடுகளுக்கு மேல் நள்ளிரவில் குண்டு விழுந்தால் எப்படியான வேதனை வரும் அறியாத அப்பாவிகள்..

புலிகள் இன்னும் நாலு குண்டை போட்டால் தெரியும் உந்த கருத்துகணிப்பின் கருத்துக்களின் மாற்றம்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தீர்வு தமிழீழம் என்று நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம்..! ஆனால் விடுதலைப்புலிகளில் இருந்து அனைத்துத் தமிழர் தரப்பும் தமிழீழத்துக்கு மாற்றான தீர்வையும் காணத்தயாராகவே உள்ளனர். அப்படியொரு நிலையில் மூவின மக்களினதும் எண்ணங்கள் நிச்சயம் இறுதித் தீர்வில் செல்வாக்குச் செய்யும் என்பது வெளிப்படை உண்மை. அதை நீங்கள் உணர மறுக்கிறீர்கள். ஒரேவேளை புலிகள் இராணுவ ரீதியாக சிறீலங்கா இராணுவத்தை வென்று விரட்டி தமிழீழத்தை அமைத்தாலும் கூட சர்வதேசத்துக்கு புலிகள் பல பதில்களைச் சொல்ல வேண்டிய நிலை உண்டு. அதில் எல்லாம் சர்வதேசம் மக்களின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பளிக்கும். சர்வதேசம் நீங்கள் நினைப்பது போல தமிழர்களையே ஆதரித்து மற்றவர்களைப் புறக்கணிக்கும் என்று கணிப்பிடுவது மிகத்தவறானது..! தமிழீழம் சர்வதேச ஆதரவின்றி இயங்கவோ இருக்கவோ முடியாது..!

ஐயா

எமது வேண்டுதலே வாழு வாழ விடு என்பது தான்

தமிழீழம் என்பது நீர் ஏதும் தராவிட்டால் நாம் அடையப்போவது

நீர் தரமாட்டீர் என்பது எனக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் தெரியும்

அதற்குத்தான் இந்த உடன்படிக்கை பேச்சுவார்த்தை எல்லாமே.........

நீர் தரமட்டீர் என்பது சர்வதேசத்துக்கு தெரிந்தபின்பு அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள்

ஏற்கனவே பல போராட்டங்களின் இறுதியில் கடைசியாக முடிவெடுத்திருக்கினம்

எடுப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

வரலாற்றை மறுக்கவேண்டாம்

எடுத்தவுடன் தமிழன் தமிழீழம் கேட்கவில்லை

ஆரம்பத்தில் கேட்டதைக்கொடுத்திருக்கலாமெ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தீர்வு தமிழீழம் என்று நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம்..! ஆனால் விடுதலைப்புலிகளில் இருந்து அனைத்துத் தமிழர் தரப்பும் தமிழீழத்துக்கு மாற்றான தீர்வையும் காணத்தயாராகவே உள்ளனர். அப்படியொரு நிலையில் மூவின மக்களினதும் எண்ணங்கள் நிச்சயம் இறுதித் தீர்வில் செல்வாக்குச் செய்யும் என்பது வெளிப்படை உண்மை. அதை நீங்கள் உணர மறுக்கிறீர்கள். ஒரேவேளை புலிகள் இராணுவ ரீதியாக சிறீலங்கா இராணுவத்தை வென்று விரட்டி தமிழீழத்தை அமைத்தாலும் கூட சர்வதேசத்துக்கு புலிகள் பல பதில்களைச் சொல்ல வேண்டிய நிலை உண்டு. அதில் எல்லாம் சர்வதேசம் மக்களின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பளிக்கும். சர்வதேசம் நீங்கள் நினைப்பது போல தமிழர்களையே ஆதரித்து மற்றவர்களைப் புறக்கணிக்கும் என்று கணிப்பிடுவது மிகத்தவறானது..! தமிழீழம் சர்வதேச ஆதரவின்றி இயங்கவோ இருக்கவோ முடியாது..! :mellow:

தனது இலக்கை அடைவதற்கான படிகளை கடக்க யாருக்குத்தான் விருப்பமில்லை?

எந்த தீர்வையும் தமிழர்களான நாங்கள் ஏற்றுக்கொள்ள எப்போதிருந்தே தாயாராகத்தான் இருக்கிறோம் அதனால்தான் திம்பு தொடங்கி ஜெனிவா வரை எத்தனையோ பயணங்கள் போயாச்சு.

அதனால் எதையும் நாம் ஏற்றுக்கொள்வோம் என்று பொருள்படாது!

அது எமது முதலாவது படிக்கல்........ எமது இலக்கு இறுதிவரை தமிழுழம்தான்!

அதை அரைகுறையற்ற எந்த ஒரு முழுதமிழனாலும் மறுக்க முடியாது....... இது வரையில் அப்படி யாரும் மறுத்ததுமில்லை!

" Every long travel began with a one step"

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய வார்த்தையில் கூறுவதானால்,யதார்த்த நிலையில் சர்வதேசம் யார் கையோங்கிறதோ அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கிறது.மேலும் யார் சர்வதேசம் என்று பார்த்தால் உலககள்வர் வரிசையில் உள்ள அமெரிக்கவும் அவர்களை சார்ந்த நாடுகளும் தான்.மற்றய நாடுகள் அவர்கட்கு "ஆமா" போடுபவர்கள்.இவர்களிடம் தமிழ் மக்கள் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

அடுத்து நீங்கள் கூறும் கருத்து கணிப்பில் முற்று முழுதாக இனவாதம் எனும் நஞ்சூட்டப்பட்ட சிங்கள மக்களிடம் தமிழர்கட்கு அல்லது முழு இலங்கையருக்குமான தீர்வை நீங்கள் கூறும் கருத்து கணிப்பு எதிரொலிக்குமென்றால் அது ஒரு பகற்கனவாக மட்டுமே இருக்கும்.

ஒரு சின்ன உதாரணத்துக்கு, ஜன நாயகத்தின் காவலன் அமெரிக்கா ஈராக்கில் காலடி வைக்க முன் ஜன நாயகத்தை கொண்டு வருவேன் என்றார்கள். இன்றோ நிலமையை கண்கூடாக காண்கிறீர்கள்.இதே சர்வதேசம்(ஏற்கனவே கூறியது போல் இவர்கள் தான் சர்வதேசம்) தமிழ் மக்களுக்கு சார்பாக நடப்பார்கள் என்று நீங்கள் எதிர் பார்க்கின்றீர்களா?

ஒரேவேளை புலிகள் இராணுவ ரீதியாக சிறீலங்கா இராணுவத்தை வென்று விரட்டி தமிழீழத்தை அமைத்தாலும் கூட சர்வதேசத்துக்கு புலிகள் பல பதில்களைச் சொல்ல வேண்டிய நிலை உண்டு. அதில் எல்லாம் சர்வதேசம் மக்களின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பளிக்கும்.

ஆகா என்ன ஒரு (முழு உலகை சோற்றில் மறைக்கிற) உண்மையை கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

சர்வதேசம் மக்களின் உணர்வுகளுக்கு கூடிய மதிப்பளிக்கும் என்ற உமது முட்டாள் தனமான கருத்தை உமது மட்டத்திலேயே வைத்திரும்.அதை இங்கு வந்து கொட்டாதீர்.நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் இன்று உலகம் ஒரு அமைதிப்பூங்காவாக இருந்திருக்கும்.எல்லாருமே பக்கா சுயநலவாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தீர்வு தமிழீழம் என்று நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம்..! ஆனால் விடுதலைப்புலிகளில் இருந்து அனைத்துத் தமிழர் தரப்பும் தமிழீழத்துக்கு மாற்றான தீர்வையும் காணத்தயாராகவே உள்ளனர். அப்படியொரு நிலையில் மூவின மக்களினதும் எண்ணங்கள் நிச்சயம் இறுதித் தீர்வில் செல்வாக்குச் செய்யும் என்பது வெளிப்படை உண்மை. அதை நீங்கள் உணர மறுக்கிறீர்கள். ஒரேவேளை புலிகள் இராணுவ ரீதியாக சிறீலங்கா இராணுவத்தை வென்று விரட்டி தமிழீழத்தை அமைத்தாலும் கூட சர்வதேசத்துக்கு புலிகள் பல பதில்களைச் சொல்ல வேண்டிய நிலை உண்டு. அதில் எல்லாம் சர்வதேசம் மக்களின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பளிக்கும். சர்வதேசம் நீங்கள் நினைப்பது போல தமிழர்களையே ஆதரித்து மற்றவர்களைப் புறக்கணிக்கும் என்று கணிப்பிடுவது மிகத்தவறானது..! தமிழீழம் சர்வதேச ஆதரவின்றி இயங்கவோ இருக்கவோ முடியாது..! :mellow:

இராணுவத் தீர்வு முயற்சிகளும் சிங்கள மக்களின் உணர்வுகளும்

[07 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் (Tகெ Cஎன்ட்ரெ fஒர் Pஒலிcய் ஆல்டெர்னடிவெச் ) கருத்துக் கணிப்புப் பிரிவான சமூகக் குறிகாட்டி (ஸொcஇஅல் ஈன்டிcஅடொர் ) 2007 பெப்ரவரிக்கான சமாதான நம்பிக்கைச் சுட்டெண் (Pஎஅcஎ Cஒன்fஇடென்cஎ ஈன்டெx ) ஆய்வின் பிரதான முடிவுகளை இவ்வாரம் வெளியிட்டிருக்கிறது. போர் மற்றும் சமாதானம் தொடக்கம் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் வரை முக்கிய விவகாரங்கள் தொடர்பில் மக்கள் மத்தியிலான கருத்து மாறுதல்களைப் புரிந்துகொள்வதற்கு வகை செய்யும் இத்தகைய ஆய்வை சமூகக் குறிகாட்டி கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இறுதியாக வெளியிடப்பட்டிருப்பது 25 ஆவது ஆய்வு முடிவுகளாகும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்களும் வன்முறைகளும் தீவிரமடைந்து மனித உரிமை மீறல்களினாலும் மக்கள் இடம்பெயர்வுகளினாலும் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடி தோன்றியிருக்கும் சூழ்நிலையில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அதிகரித்துவரும் ஆரோக்கியமற்ற உணர்வுகளை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு காண்பதற்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் சடுதியாக அதிகரித்திருக்கிறது. சமூகக் குறிகாட்டியினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சிங்களவர்களில் அரைவாசிக்கும் கூடுதலானவர்கள் (59.2 சதவீதம்) இராணுவத் தீர்வுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றலைக் கொண்டிருப்பதாக 48 சதவீதமான சிங்களவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இதுவிடயத்தில் மலையகத் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஐயுறவைக் கொண்டிருக்கிறார்கள்.

2006 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட சமாதான நம்பிக்கைச் சுட்டெண் ஆய்வுடன் ஒப்பிடும்போது விடுதலைப் புலிகளை அரசாங்கம் தோற்கடிக்க வேண்டுமென்பதற்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் (26.1 சதவீதத்திலிருந்து) 35.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேவேளை, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான ஆதரவு 57.3 சதவீதத்திலிருந்து 46.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இராணுவத் தீர்வுக்கான ஆதரவு அண்மைக் காலத்தில் சிங்களவர்கள் மத்தியில் சடுதியாக அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தைக் காண்பதில் அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருப்பதாக 73.8 சதவீதமான சிங்களவர்களும் 50 சதவீதமான முஸ்லிம்களும் நம்புகிறார்கள்.

புதிய அவசரகால ஒழுங்கு விதிகள் பயங்கரவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அவசியமானவை என்று அதிகப் பெரும்பான்மையான சிங்களவர்கள் நம்புகிறார்கள். சாதாரண தமிழ்க் குடிமக்களுக்கு இந்த அவசரகால ஒழுங்கு விதிகளினால் ஆபத்து ஏற்படுவதாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் நம்பத் தயாராயில்லை. இந்த ஒழுங்கு விதிகள் ஜனநாயகத்துக்கு பாதிப்பாக அமையும் என்றும் பெரும்பான்மையான சிங்களவர்கள் கருதுவதாக இல்லை. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் திருப்தி தெரிவித்திருக்கின்ற அதேவேளை, அவ்வாறு அரசாங்கம் செயற்பட்டிருப்பதாக மலையகத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த சமாதான நம்பிக்கை சுட்டெண் ஆய்வின் முடிவுகளைப் பொறுத்தவரை, முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம் சிங்கள மக்கள் மத்தியில் இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வு காண்பதற்கான ஆதரவு அதிகரித்துவருவதும் படுமோசமாகச் சீர்குலைந்திருக்கும் மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பில் அந்த மக்கள் மத்தியில் காணப்படக்கூடிய அலட்சிய மனோபாவமுமேயாகும். இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக சர்வதேச சமூகம் ஆழ்ந்த விசனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அவசரகால ஒழுங்கு விதிகள் அவசியமானவை என்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வைக் கண்டுவிடமுடியுமென்று சிங்கள மக்களை மீண்டும் நம்பவைப்பதற்கான பிரசார இயக்கங்கள் தென்னிலங்கையில் தீவிரமாக முன்னெடுக்கப்பவதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து நாம் எண்ணற்ற தடவைகள் எமது ஆசிரிய தலையங்கங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றோ

யுத்தத்தின் மூலம் தமிழீழம் அமைக்க சிங்களவன் ஆதரவு எண்டு சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கமும் சிங்கள மக்களும் போரைத் தான் விரும்புகிறார்கள்

[08 - April - 2007] [Font Size - A - A - A]

* சமாதானப் பேச்சுவார்த்தை என்பதற்கான சாத்தியமே இல்லை -சுனந்த தேசப்பிரிய

-இரா.துரைரத்தினம்-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவாவுக்கு வருகைதந்த சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வி

கேள்வி :இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஊடகத்துறையை சார்ந்தவர் என்ற வகையில் இன்று அங்குள்ள நிலைமை என்ன?

பதில் :உண்மையை எழுதுகின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல் நிலவிவருகிறது. உண்மையை எழுதும் அரசாங்கத்தை அரச படைகளை விமர்சிக்கும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. பல தமிழ் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். சிலர் பத்திரிகை தொழிலிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் மூலம் தமிழீழம் அமைக்க சிங்களவன் ஆதரவு எண்டு சொல்லுங்கோ

நாட்டு நடப்பைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது..??! :lol::(:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.