Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பகுதியில் நீங்களே எடுத்த படங்களை இணைத்து ஓரிரு வரிகள் எழுதி மகிழ்ச்சி அடையவும்.......!  ?

HPIM0172.jpg

நினைத்தேன் வந்தாய் நூறு வயது.....!  tw_blush:

  • Replies 624
  • Views 82.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    “ And in the end, All I learned was how to be strong ..Alone. - Quote from quoteambition.com

  • தமிழரசு
    தமிழரசு

    அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை .....!

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20170704_203000_001_zpseo0jnvdm.jpg

பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு.... :love:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20150822-185129.jpg

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.....!  ?

(பார்சிலோனா கடற்கரை).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20171228-181222-001.jpg

வண்ணங்கள் பொங்க வலம் வரும் தீபாவளி.......!  ஒரு சீனக் கண்காட்சியில் எடுத்தது....!  

 அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....!  ?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

20171228-181222-001.jpg

வண்ணங்கள் பொங்க வலம் வரும் தீபாவளி.......!  ஒரு சீனக் கண்காட்சியில் எடுத்தது....!  

 அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....!  ?

இலங்கையில இப்ப சீன ஆதிக்கம் அதிகம் என்று பேச்சு. இங்கு சுவி ஐயா தீபவளிக்குள்ளும் சீன ஆதிக்கத்தை கொண்டு வந்திட்டீங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20181023-095949.jpg

பனி விழும் மலர் வனம் 

"எழுந்து நடந்தால் கலைந்து போகுமோ"


எனது படங்களை பதிவேற்ற இயலவில்லை... எல்லா வடிவங்களிலும் முயன்று விட்டேன் (.png,.jpg ). 1MB  க்கு குறைவுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நண்பரே நிர்வாகத்திடம் கேளுங்கள் உதவி செய்வார்கள்.......!

20171225-200017.jpg   20171225-195907.jpg

உன்னைக்கண்டு நானாட என்னை கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DSCN1971.jpg

ஆகாயம் தழுவி அலையும் முகிலோடு விளையாடினேன் 

அன்றடித்த புயலில் ஆணிவேரும் அறுந்ததினால் வீழ்ந்தேன் 

ஆயினும் மீண்டு வருவேன் விறகாய்.....!

(சமீபத்தில் எடுத்தது) 

 

  • கருத்துக்கள உறவுகள்

DSC04360.JPG

எப்படி இருந்தாலும் வீடு கோவில்தான். செருப்பு வெளியில்தான். 

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

HPIM0193.jpg

அழகிய வாத்துகள் ஆழமான குளத்திலே 

வின்னானம் பேசி விரால் மீன் தேடும்......!  ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20171228-181502.jpg  20171228-184316.jpg

மின்னொளியில் மலர்ந்த மின்சாரப் பூக்கள்......! ?

  • கருத்துக்கள உறவுகள்

4.jpg

எங்களை ஏமாத்திப்புட்டீங்களே மைத்திரி மாமா! ☹️

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20180714-185514.jpg  20170625-100647.jpg

உனைக்கண்டு மயங்காத மனமும் உண்டோ, வடிவழகிலும் குணமதிலும் சிறந்த......!  ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20180809-112243.jpg  20180809-114850.jpg

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். (நல்லூர் வடக்கு வீதி கோபுரம் மேலே).

 

Edited by suvy
எ .பிழை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

20180809-112243.jpg  20180809-114850.jpg

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். (நல்லூர் வடக்கு வீதி கோபுரம் மேலே).

 

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் )

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.
இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.
கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.
சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.
அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.
இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.
சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2018 at 11:20 AM, ஆதித்ய இளம்பிறையன் said:


எனது படங்களை பதிவேற்ற இயலவில்லை... எல்லா வடிவங்களிலும் முயன்று விட்டேன் (.png,.jpg ). 1MB  க்கு குறைவுதான் imageproxy.php?img=&key=bf615403b0c24024imageproxy.php?img=&key=bf615403b0c24024

https://postimages.org/

ஆதி மேலே உள்ள சுட்டியை அழுத்தி முயன்று பாருங்கள்.இது முற்றிலும் இலவசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180815-WA0000.jpg

IMG-20180815-WA0008.jpg

அழகிய கடலோரம் ஆலயம் கொண்டிருக்கும் 

அருளாளரே அந்தோணியாரே 

பாலகன் ஜேசுவின் பாதம் தாங்கி 

பாஷையூரில் கொலுவிருப்பவரே -- நின் 

திருவடி சரணம் தேவனே......!  ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DSCN1967.jpg

எழுந்தால் நானும் நிழலாவேன் விழுந்தாலும் நான் வாங்காவேன்......!  ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DSCN1676.jpg

அயல்நாடு வந்தும் அழகான தேரில் 

களமாடி வரும் கருணைக் கந்தன்.....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20160426-173427.jpg IMG-20160426-173415.jpg

செடியிலே கலை வண்ணம் கண்டான் -- சிறிது 

எட்டியே துளிர்த்தாலும் வெட்டியே கொன்றான்.....!  ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20160426-173936.jpg IMG-20160426-174255.jpg

வாராதிருப்பானோ வண்ண நிற வாத்து அவன்.......!  ?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/16/2018 at 9:07 AM, suvy said:

DSCN1676.jpg

அயல்நாடு வந்தும் அழகான தேரில் 

களமாடி வரும் கருணைக் கந்தன்.....!

என்னப்பன் கந்தன்! இரண்டு பொண்டாட்டிக்காரன் எண்டு தெரிஞ்சும் உந்த தாய்க்குலம் அப்பிடி என்னத்தைத்தான் மனமுருகி  அவனிட்டை வேண்டுதல் வைக்கினமோ ஆருக்குத்தெரியும்? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 11/13/2018 at 11:48 PM, suvy said:

அழகிய கடலோரம் ஆலயம் கொண்டிருக்கும் 

அருளாளரே அந்தோணியாரே 

பாலகன் ஜேசுவின் பாதம் தாங்கி 

 பாஷையூரில் கொலுவிருப்பவரே -- நின் 

திருவடி சரணம் தேவனே......!  ?

பால்ய வயதில் இந்த அந்தோனியரிடம் அலையாத நாட்களா?

10 minutes ago, குமாரசாமி said:

என்னப்பன் கந்தன்! இரண்டு பொண்டாட்டிக்காரன் எண்டு தெரிஞ்சும் உந்த தாய்க்குலம் அப்பிடி என்னத்தைத்தான் மனமுருகி  அவனிட்டை வேண்டுதல் வைக்கினமோ ஆருக்குத்தெரியும்? tw_blush:

முருகா என்ரை புருசனையும் உன்னை மாதிரி இரண்டு பெண்டாட்டிக்காரன் ஆக்கிப் போடாதையப்பா?

வேணுமென்றால் பரிமளத்தைக் கேட்டுப் பாருங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பால்ய வயதில் இந்த அந்தோனியரிடம் அலையாத நாட்களா?

முருகா என்ரை புருசனையும் உன்னை மாதிரி இரண்டு பெண்டாட்டிக்காரன் ஆக்கிப் போடாதையப்பா?

வேணுமென்றால் பரிமளத்தைக் கேட்டுப் பாருங்கோ.

குமாரசாமியன் இரண்டு வைச்சிருந்தாலும்..... கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாதவன் கண்டியளோ......:169_family_wwbb:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.