Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் விருப்பங்கள் என்ன..??!

யாழில் குழும்பப் பிரிப்பு அவசியமா..?! 35 members have voted

  1. 1. யாழில் குழும்பப் பிரிப்பு அவசியமா..?!

    • ஆம் - நிர்வாக விருப்புக்கு அமைய.
      20
    • ஆம் - கள உறுப்பினர்களின் விருப்புக்கு அமைய.
      2
    • அவசியம் இல்லை - அது எழுதும் ஆர்வத்தைக் குறைக்கும்.
      9
    • அது பயனற்ற ஒன்று - தேவையற்றது.
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உறுப்பினர் மத்தியில் குழுமங்கள் உருவாக்கப்படுவது குறித்தும்... அதில் நீங்கள் எந்தெந்த குழுமங்களில் இடம்பெற விரும்புகின்றீர்கள் என்றும் உங்கள் கருத்துக்களை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளுங்களேன். அது எல்லோரும் ஒருங்கிணைந்து முடிவுகள் எடுக்கவும் ஏற்றத்தாழ்வற்ற நிலையைப் பேணவும் உற்சாகக் குறைவின்றி அனைவரும் களத்தின் புனரமைப்பில் பங்கெடுக்கவும் அது நல்ல பயன்பெறவும் உதவிடும்..!

வாக்கெடுப்பில் ஒரு தெரிவின்றி பல தெரிவுக்கு இடமளிக்கப்பட்டிருப்பினும்.. உங்கள் தெரிவு ஒன்றாக இருப்பது விரும்பத்தக்கது.

உங்கள் ஆதரவுக்கு நன்றி..!

Edited by nedukkalapoovan

யாழில் குழும்பப் பிரிப்பு அவசியமா..?!

எனது தெரிவு:

ஆம் - நிர்வாக விருப்புக்கு அமைய!

காரணங்கள்:

1. யாழ் களம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடைசெய்தல்: கடந்த காலத்தில் புதியவர்கள் மூலம் திட்டமிட்ட முறையில் பல தடவைகள் யாழ் களம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

2. களத்திலுள்ள செய்திகளை ஒழுங்கமைத்தல்: வருபவர்கள், போபவர்கள் எல்லாம் தங்கள் மனம் போன போக்கில் செய்திகளை ஒட்டி விட்டுச் செல்கின்றார்கள். இதனால் ஒரே செய்திகள் திரும்பவும், திரும்பவும் வருகின்றன. கருத்தாடல் செய்வது கடினமாக உள்ளது.

3. தமிழீழம் செய்திகள் பகுதிக்கு வருவதற்கு தகுதியற்ற செய்திகள் தமிழீழம் தலைப்புச் செய்திகளில் ஒட்டப்படுகின்றன: ஒரு உதாரணம், உண்டியல் கள்ளன் பற்றிய செய்திகள் தமிழீழம் தலைப்புச் செய்தியில் ஒட்டப்படுதல்.

4. புதியவர்கள் ஆங்கிலத்தில் தலைப்புச் செய்திகள் ஒட்டுகின்றார்கள். ஆங்கிலத்திலேயே தலைப்பு கருத்தையும் இடுகின்றார்கள்.

5. எவரும் குறிப்பிட்ட குழுமங்களில் இணைவதற்கு நிருவாகம் தடை விதிக்கவில்லை. குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், நிருவாகத்திற்கு தனிமடல் அனுப்புவதன் மூலம் விரும்பிய குழுமங்களில் இணைய அனைவருக்கும் வசதி உள்ளது.

5. கண்டபடி தனிமனித தாக்குதல்கள் களத்தில் நடாத்தப்படுகின்றன, மேற்படி குழுமங்கள் அவற்றை எதிர்காலத்தில் குறைப்பதற்கு உதவும்.

6. யாழ் களத்திற்கு புதிதாக வருபவர்கள் தம்மை அறிமுகம் செய்து நாகரிகமான முறையில் உள் வருவதே களம் ஆரோக்கியமான முறையில் முன்னேற உதவும், இது களத்தின் தரத்தை உயர்த்தும்!

7. தலைப்புடன் சம்மந்தப்படாத வகையில் கருத்துக்கள் திசைதிருப்பப்படுவதை குழுமங்கள் தடை செய்ய உதவும்.

8. சுருக்கமாக யாழ் களம் புதிய ஒரு பரிணாம வளர்ச்சி அடைவதற்கு இவை உதவிபுரியும்!

இப்போதைக்கு இவ்வளவு! மிகுதி யோசிச்சுப் பார்த்து சொல்கின்றேன்!

:lol: :lol: :lol:

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளையின் கருத்தை அமோதிக்கிறேன். முன்பு நான் யாழில் இணைந்த காலத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் 3 கருத்துக்கள் அறிமுகம் பகுதியில் தமிழீழச் செய்திகள், சிறப்புவிவாதக்களத்தினைத் தவர எழுதிய பின்பு மற்றைய பகுதியில் எழுத அனுமதி கிடைக்கும். 50 கருத்துக்கள் எழுதியபின்பு, ஒழுங்காகத் தமிழ் எழுதக்கூடியவராகவும், தமிழ்த்தேசியத்துக்கு எதிரான கருத்துக்கள் பதியாதவர்களாகவும் இருப்பவர்கள் என நிற்வாகத்தினரால் கணிக்கப்படுபவர்களுக்கு எல்லாப் பகுதியிலும் எழுத அனுமதி வழங்கப்பட்டது. பிறகு எல்லொரும் எல்லாப்பகுதியிலும் முதலாவது கருத்துடன் எழுத அனுமதிக்கும் போது சிலர் தமிழ்த்தேசியத்துக்கு எதிரான கருத்துக்களும், ஆங்கிலத்திலும் கருத்துக்கள் பகிர்ந்தனர். அதனால் தான் நிர்வாகத்தினர் இவ்வாறு முடிவை எடுக்க விரும்பினார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளையின் கருத்துக்களோடு தேவையாகவும், மற்றும் குழுமங்கள் அமைத்து யாழ்கள உறுப்பினர்களை தரம்பார்ப்பதும் தேவையற்றதாயும் தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் குழும்பப் பிரிப்பு அவசியமா..?!

எனது தெரிவு:

ஆம் - நிர்வாக விருப்புக்கு அமைய!

காரணங்கள்:

1. யாழ் களம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடைசெய்தல்: கடந்த காலத்தில் புதியவர்கள் மூலம் திட்டமிட்ட முறையில் பல தடவைகள் யாழ் களம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

கபளீகரம் செய்பவர் உள்ள வந்துதான் செய்ய வேண்டும் என்றில்லை..! கபளீகரம் செய்யப் பல வழிகள் உள்ளன..! இருந்தாலும் இதை ஏற்றுக் கொள்ளலாம்.

2. களத்திலுள்ள செய்திகளை ஒழுங்கமைத்தல்: வருபவர்கள், போபவர்கள் எல்லாம் தங்கள் மனம் போன போக்கில் செய்திகளை ஒட்டி விட்டுச் செல்கின்றார்கள். இதனால் ஒரே செய்திகள் திரும்பவும், திரும்பவும் வருகின்றன. கருத்தாடல் செய்வது கடினமாக உள்ளது.

செய்திகள் ஒழுங்கமைத்தல் என்பதைக் காட்டிலும் ஒட்டுவதைக் குறைக்கலாம். செய்திகளை வாசிக்காமலே ஒட்டி வரும் கறுப்பி மேம் (உண்மைச் சொல்லுங்க கறுப்பி மேம் ஒட்டுற அவசரத்தில ஏற்கனவே உள்ள செய்திகளை வாசிக்காமல் தானே ஒட்டுறனீங்க.கறுப்பி மேம் குறையென்ன நிறை சொன்னாலும் கோவிக்காங்க அதனால சாம்பிளா காட்டி இருக்கு) எல்லா போன்றவர்கள் எனி செய்திகளை வாசிச்சு ஒட்டுவாங்க என்றீங்கள்..! ஆனாப் பாருங்கள் செய்தி ஒன்றை அலசி ஆராய்ந்து மொழிபெயர்த்துப் போடக் கூடியவங்களும் அந்த வருபவர் போபவர் லிஸ்டுக்குள்ள வந்திடுறாங்களே... அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க..!

3. தமிழீழம் செய்திகள் பகுதிக்கு வருவதற்கு தகுதியற்ற செய்திகள் தமிழீழம் தலைப்புச் செய்திகளில் ஒட்டப்படுகின்றன: ஒரு உதாரணம், உண்டியல் கள்ளன் பற்றிய செய்திகள் தமிழீழம் தலைப்புச் செய்தியில் ஒட்டப்படுதல்.

எனி அது யாழ் இனிது பகுதிகளில் இடம்பெறும்..! :lol:

4. புதியவர்கள் ஆங்கிலத்தில் தலைப்புச் செய்திகள் ஒட்டுகின்றார்கள். ஆங்கிலத்திலேயே தலைப்பு கருத்தையும் இடுகின்றார்கள்.

இதை அவர்கள் எனியும் தொடரத்தான் செய்வார்கள்.. யாழி இனிது பகுதியில். முன்னரும் அப்படித்தானே இருந்தது..!

5. எவரும் குறிப்பிட்ட குழுமங்களில் இணைவதற்கு நிருவாகம் தடை விதிக்கவில்லை. குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், நிருவாகத்திற்கு தனிமடல் அனுப்புவதன் மூலம் விரும்பிய குழுமங்களில் இணைய அனைவருக்கும் வசதி உள்ளது.

நிர்வாகம் என்னென்ன நிபந்தனைகளை உள்ளுக்க வைச்சிருக்கு என்பது யாருக்குத் தெரியும். தனிமடல் மூலம் கோருவது சாத்தியப்பாடனதுதான். ஆனால் நிர்வாகம் தனிமடலை சரியாகப் பரிசீலிக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்..! நிர்வாகத்துக்கு தனிமடல் அனுப்பி வெறுத்துப் போனவர்களும் உண்டு. சீர்திருத்தம் நிர்வாக மட்டத்திலும் வந்தால் நல்லம்..!

5. கண்டபடி தனிமனித தாக்குதல்கள் களத்தில் நடாத்தப்படுகின்றன, மேற்படி குழுமங்கள் அவற்றை எதிர்காலத்தில் குறைப்பதற்கு உதவும்.

தனிநபர் தாக்குதல் செய்பவர்கள் பத்திரமாத்தானே இருக்கிறார்கள். அவர்கள் புதுத்தலைப்புப் போட்டுத்தான் தாக்குதல் நடத்த வேண்டும் என்றில்லை. எங்க எழுத விட்டாலும் அதில தாக்குதல் நடத்துவார்கள்..! அவையா புரிஞ்சிக்கிட்டு உதை விட்டாத் தவிர கட்டுப்பாடுகளால் நிவர்த்திக்க முடியும் என்று நினைக்கல்ல..! காரணம் தனிமனித தாக்குதலை நடத்தினவங்கலே பெரிய பெரிய குழுமங்களில இருக்காங்களே..!

6. யாழ் களத்திற்கு புதிதாக வருபவர்கள் தம்மை அறிமுகம் செய்து நாகரிகமான முறையில் உள் வருவதே களம் ஆரோக்கியமான முறையில் முன்னேற உதவும், இது களத்தின் தரத்தை உயர்த்தும்!

யாழில் தரத்தை புதிய உறுப்பினர்கள் உயர்திறாங்களோ இல்லையோ பழைய உறுப்பினர்கள் சிலர் தாழ்த்தாமல் இருப்பதே பெரிய விடயம். குறிப்பாக ரென்சன் பாட்டிகள்..!

7. தலைப்புடன் சம்மந்தப்படாத வகையில் கருத்துக்கள் திசைதிருப்பப்படுவதை குழுமங்கள் தடை செய்ய உதவும்.

இது எனியும் தான் தொடரும். குழுமப்பிரிப்பு இதை எவ்வகையில் தடுக்கும்..! பதிலளிக்க உள்ள வசதி இருக்கும் வரை அது தொடரத்தானே செய்யும்..!

8. சுருக்கமாக யாழ் களம் புதிய ஒரு பரிணாம வளர்ச்சி அடைவதற்கு இவை உதவிபுரியும்!

பரிணாம வளர்ச்சி என்பதிலும் தேவையான சில மாற்றங்கள் என்று சொல்வது சரி. ஆனால் பல விடயங்களை இன்னும் உற்றுநோக்க வேண்டி இருப்பதோடு பக்கச்சார்பான செயற்பாடுகளை நிர்வாகம் தவிர்த்து காரண காரியங்களூடு நடைமுறைகளைக் கொண்டு வர முயல வேண்டும். அதுமட்டுமன்றி கள உறுப்பினர்கள் சலிப்படையா வண்ணம் ஒருங்கிணைக்க வேண்டியதும் அவசியம்..!

இப்போதைக்கு இவ்வளவு! மிகுதி யோசிச்சுப் பார்த்து சொல்கின்றேன்!

:lol: :lol: :lol:

இப்படி எழுதியதற்காக முரண்படுறம் என்பதல்ல அர்த்தம்.. இப்படியும் வியு இருக்கிறது என்பதைக் காட்டத்தான்..! :(:lol:

Edited by nedukkalapoovan

எனக்கு இந்தப்பகுதியை தவிர ஏனைய பகுதிகளில் கருத்தெழுத அனுமதி கிடைக்கவில்லை.

தொடர்ந்து தரம்பிரித்தல் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ள போதும்,

1) ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி பகுதிகளுக்கு அனுமதி கேட்டுதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும்,

2) தமிழ்த்தேசியம் என்பதே விவாதத்திற்குள்ளாகியுள்ள போது அதற்கெதிரான கருத்துகள் என சிலவற்றை சிலர் தரம் பிரித்து அதனை மெளனமாக்குவதில் எனக்கு உடன்பாடின்மையாலும்,

3) மேலும் சில தனிப்பட்ட காரணங்களினாலும்

சாணக்கியனின் கருத்துப்பயணம் இத்துடன் இனிது நிறைவு பெறுகிறது.

யாழ்களம் புத்தாண்டில் புதிய பாதையில் பயணிக்க வாழ்த்துகள் கூறி அனைத்து கள உறவுகளிடமிருந்தும் அன்புடன் விடை பெற்றுக் கொள்கின்றேன்.

நன்றி! வணக்கம்!

யாழில் குழும்பப் பிரிப்பு அவசியமா..?!

எனது தெரிவு:

ஆம் - நிர்வாக விருப்புக்கு அமைய!

காரணங்கள் பல உள்ளன ஆனாலும் கலைஞன் கூறிய காரணங்களுடன் நானும் ஒத்துப்போகிறேன்.

என்னால் எந்த பிரிவிலும் எழுத முடியவில்லை.

இங்கு நான் இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். யாழ் களத்தில் மற்றைய உறவுகளுடனும், நிருவாகத்துடனும் தொடர்பு கொள்ளக்கூடிய இலகுவான ஒரு முறையான தனி மடல்களை பலர் பயன்படுத்துவது இல்லை என்பது யாழ் களத்தில் ஒரு பெரிய குறைபாடு ஆகும்.

எல்லோரும், எல்லா விடயங்களையும் பொதுக் கருத்துத் தளத்திலேயே பரிமாறிக் கொள்கின்றார்கள், இது மற்றவர்களைப் பற்றி இன்னொருவர் தப்பான அபிப்பிராயத்திற்கு வருவதற்கு துணை போகின்றது. தனிமனித தாக்குதல்கள் நிகழ்வதற்கும் தனிமடலில் மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் கருத்துப்பரிமாற்றம் செய்யாமல் இருப்பது காரணமாக அமைகின்றது. முதலில் நாம் எல்லோரும் மனிதர்கள், அடிப்படை குணாம்சங்களில் பொதுவானவர்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் தனிமடலில் தொடர்பு கொண்டு உரையாடுவது இருவரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி, தேவையற்ற பல சச்சரவுகள் களத்தில் வருவதைத் தடுக்கும்!

நாம் ஒவ்வொருவரும் யாழ் களத்தை வெறும் கருத்துக்கள் எழுதும் தளமாக மட்டும் கொள்ளாது, நல்ல நண்பர்களை பெற்றுக் கொள்ளும் தளமாகவும் சிந்தித்து செயற்பட்டால் இப்போதுள்ள பல பிரச்சனைகள் சுமுகமாகத் தீர்ந்துவிடும்.

யாழ் களத்தில் தனிமடலில் உரையாடுவதன் மூலம் நீங்கள் நல்ல நண்பர்களை பெற்றுக்கொள்ளக்கூடும், இவர்கள் மூலம் உங்களுக்கு பல உதவிகள், அமைதி, சந்தோசம் கூட கிடைக்கக்கூடும். நாம் வெறும் சடங்களாக இருந்து கருத்து எழுதாது அனைவருடனும் நட்புடன் பழகி யாழ் களத்தை ஒரு குடும்பமாக, சமூகமாக நினைத்தால் அதுவே நமக்கு ஒரு வெற்றியாக அமையும்!

மற்றவர்களிற்கு தனிமடல் அனுப்புவதை யாராவது கெளரவக் குறைச்சலாக நினைக்கின்றீர்களா?

சாணக்கியன் மற்றும் அனைத்து கள உறவுகளுக்கும் வணக்கம்,

புதிதாக உருவாக்கபட்ட கருத்துக்கள குழுமங்களில் உறுப்பினர்களை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. சில தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வேலைப்பளு காரணமாக அது இன்னும் முழுமை பெறவில்லை. பழைய யாழ் கள உறுப்பினர்கள் கருத்துக்கள குழுமங்களில் இணைவதற்கு விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்களை கள நிர்வாகமே அவர்களுக்குரிய குழுமங்களில் இணைத்துவிடும். தற்போது புதிதாக இணையும் உறுப்பினர்கள் மட்டும் அவர்கள் இணையவிரும்பும் குழுமங்களுக்குரிய அனுமதியை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

பழைய கள உறுப்பினர்களுக்கு முன்பு போல் எழுதுவதில் ஏதும் சிரமங்கள் இருந்தால் அதனை தனிமடல் மூலமாகவோ அல்லது கருத்துகள குழுமங்கள் குறித்த உதவிகள் என்ற தலைப்பில் எழுதுவதன் மூலமோ அறிய தாருங்கள்.

நட்புடன்

மதன்

Edited by Mathan

என்னாலும் எல்லாவற்றிலும் எழுத முடியவில்லை, நானும் விண்ணப்பிக்க வேண்டுமா..........? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். யாழ் களத்தில் மற்றைய உறவுகளுடனும், நிருவாகத்துடனும் தொடர்பு கொள்ளக்கூடிய இலகுவான ஒரு முறையான தனி மடல்களை பலர் பயன்படுத்துவது இல்லை என்பது யாழ் களத்தில் ஒரு பெரிய குறைபாடு ஆகும்.

உதாரணத்துக்கு - பெரியார் என்ற தலைப்பின் கீழ் சில கருத்துக்களை தணிக்கை செய்து இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களில் வந்த மோசமான சிருஷ்டிக்கப்பட்ட கருத்துக்களை அனுமதித்த போது அதை நிர்வாகத்துக்கு அறிவித்தும் அவர்கள் நெவர் மைண்ட் என்று இருந்திட்டார்கள். அதன் பின்னர் நாமும் அவர்களை நெவர் மைண்ட் பொலிசி கூடத்தான் பார்க்கிறது. ஏதோ மோகன் சார் செய்யுற தமிழ்மக்களுக்கான சிறிய பங்களிப்புக்கு என்று வந்து போறமே தவிர நிர்வாக நடைமுறைகளில் எம்மைப் பொறுத்தவரை பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட முடியும். அவற்றை எதிர்காலத்தில் தவிர்ப்பதோடு நிர்வாகத்துக்குள் இருப்பவர்கள் பக்கச்சார்பற்றவர்களாக கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவர்களாக கள உறுப்பினர்கள் அனைவரையும் சமனாக மதிப்பவர்களாகவும் இருக்க முயல வேண்டும்..! அப்போதுதான் கள நிர்வாகத்தோடு கள உறுப்பினர்கள் நெருங்க முடியும். சில கள நிர்வாக உறுப்பினர்கள் மத்தியில் உள்ள நெவர் மைண்ட் பொலிசி கைவிடப்பட வேண்டும்..! வேலைப்பழுவை சாட்டுச் சொல்லி தப்பிக்க முனையக் கூடாது..! வேலைப்பழு அதிகம் என்றால் நிர்வாகக் கடமைகளை புதிய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே..!

உதாரணத்துக்குப் பாருங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக களத்துக்கு வராத ஒருவர் செய்தி இணைப்புக்குழுமத்துக்குள் போட்டுள்ளனர். அவர் நல்ல பல கருத்துக்களைப் பகர்ந்து கொள்பவர் தான். அவர் தெரிவு செய்தே தலைப்பிடுபவர். அப்படிப் பலர் தெரிவு செய்து தலைப்பிடும் தகுதியோடு இருக்கின்றனர். குறிப்பா யூட், சாணக்கியன், சமாதானம் போன்றவர்களும் அடங்குவார்கள். ஆனால் நிர்வாகம் அவர்களை அதற்குள் இணைக்க முன்வருமா...??! இவை அனைத்தும் தவறுதலாக தொழில்நுட்பப் பிரச்சனையால் விடுபடுவையாக என்று சொல்லிக் கொள்ள முடியாது..! இப்படியான நிலைகள் தவிர்க்கப்பட வேண்டும் கருத்துக்கள் அடிப்படையில் கள உறுப்பினர்களைப் பாகுபடுத்துவது கள உறுப்பினர்களை சமனாக மதிக்க வேண்டும் என்ற கள விதியையே அவமதிக்கிறதாகிறது..!

எல்லோரும், எல்லா விடயங்களையும் பொதுக் கருத்துத் தளத்திலேயே பரிமாறிக் கொள்கின்றார்கள், இது மற்றவர்களைப் பற்றி இன்னொருவர் தப்பான அபிப்பிராயத்திற்கு வருவதற்கு துணை போகின்றது. தனிமனித தாக்குதல்கள் நிகழ்வதற்கும் தனிமடலில் மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் கருத்துப்பரிமாற்றம் செய்யாமல் இருப்பது காரணமாக அமைகின்றது. முதலில் நாம் எல்லோரும் மனிதர்கள், அடிப்படை குணாம்சங்களில் பொதுவானவர்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் தனிமடலில் தொடர்பு கொண்டு உரையாடுவது இருவரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி, தேவையற்ற பல சச்சரவுகள் களத்தில் வருவதைத் தடுக்கும்!

கருத்துக்களத்தில் கருத்துக்கு கருத்துச் சொல்வதை இந்தத் தனிமடல் சம்பாசணைகள் பாதிக்கலாம். அதுமட்டுமன்றி தனிமடலில் நடக்கும் அசாதாரண சம்பாசணைகள் தரும் விளைவுகளுக்கு யாரிடம் முறையிட முடியும்..! அதுமட்டுமன்றி தனிமடல் ஒரு அத்தியாசவசிய தேவைக்காக மட்டுப்படுத்தப்பட்ட கொள்ளளவில் தரப்பட்டுள்ளது. அதையும் சம்பாசணைக்கு பாவிக்க ஆரம்பித்தால் விளைவு கள நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கும் போகலாம். அப்புறம் அங்கும் ஒரு தணிக்கை குழுவை நிறுவ வேண்டித்தான் வரும்.

புரிந்துகொள்ளக் கூடியவர்கள் பொதுக்களத்திலேயே புரிந்துகொள்ளலாம். புரிந்துகொள்ள முடியாதவர்கள் நேரில் சந்தித்தாலும் அது நடக்காது..! :lol:

நாம் ஒவ்வொருவரும் யாழ் களத்தை வெறும் கருத்துக்கள் எழுதும் தளமாக மட்டும் கொள்ளாது, நல்ல நண்பர்களை பெற்றுக் கொள்ளும் தளமாகவும் சிந்தித்து செயற்பட்டால் இப்போதுள்ள பல பிரச்சனைகள் சுமுகமாகத் தீர்ந்துவிடும்.

நட்பாக கலந்துரையாட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். நண்பர்களை பெற்றுக்கொள்ளும் தளமாக என்பதை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் பலரின் பின்புலமும் ஒருவருக்கு ஒருவர் தெரியாது. தெரிந்தாலும் கூட உண்மை தெரிவது இலகுவல்ல. ஏலவே நண்பர்களாக இருந்தவர்கள் என்றால் மட்டும் இங்கும் நண்பர்களாக இருக்க முடியும். ஆனால் நட்பாக கருத்தாடல் செய்யலாம்..! பொது இடத்தில் மனிதர்களை நட்போடு அணுகவில்லையா அதுபோல..! பொது இடத்தில் எல்லாரையும் நண்பர்கள் ஆக்கிக்க முடியுமா..??!

யாழ் களத்தில் தனிமடலில் உரையாடுவதன் மூலம் நீங்கள் நல்ல நண்பர்களை பெற்றுக்கொள்ளக்கூடும், இவர்கள் மூலம் உங்களுக்கு பல உதவிகள், அமைதி, சந்தோசம் கூட கிடைக்கக்கூடும். நாம் வெறும் சடங்களாக இருந்து கருத்து எழுதாது அனைவருடனும் நட்புடன் பழகி யாழ் களத்தை ஒரு குடும்பமாக, சமூகமாக நினைத்தால் அதுவே நமக்கு ஒரு வெற்றியாக அமையும்!

நண்பர்களை மட்டுமல்ல சில சந்தர்ப்பங்களின் உபத்திரங்களையும் சந்திக்க நேரலாம். அது பழகுபவர்கள் பழக்க வழக்கத்தையும் பழகும் போது அவர்களுக்குள்ள மனநிலையையும் குணாம்சங்களையும் பொறுத்தது. பொதுவாக இக்களத்தில் நடக்கும் விடயங்கள் வெளியில் பேசப்படும் போது அவரவர் தாங்கள் அளந்து கொண்டபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விம்பம் ஏற்படுத்திக் கொடுத்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். அப்படியானவர்கள் தனிமடல் சம்பாசணைகளைக் கூட நாளை தங்களுக்காக பாவிக்கக் கூடும். மனிதர்கள் எல்லோரும் ஒரேவகையினர் இல்லையே. தேவையற்ற ஆபத்துக்களையும் அதீத நம்பிக்கைகள் தேவையற்ற மனவேதனைகளையும் அளிக்கலாம். எனவே தனிமடல் சம்பாசணைகள் அளவோடு நட்போடு எல்லைக்குள் அமைவது சிறப்பு..!

மற்றவர்களிற்கு தனிமடல் அனுப்புவதை யாராவது கெளரவக் குறைச்சலாக நினைக்கின்றீர்களா?

தனிமடல்களுக்கு சரியான மதிப்பளிக்கப்படாத போது மீண்டும் மீண்டும் அதைப்பாவிப்பதில் பயனில்லை. அதுமட்டுமன்றி தனிமடலில் பகரப்படும் விடயங்களை தேவைக்கு ஏற்ப உல்டா பண்ணி எதிர்விளைவுகளுக்கும் பாவிக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாரதூரமாக இருக்கும். களம் தொடர்பில் வெளிப்படையாக அனைவரும் அறியப் பேசிக்கொண்டால் எல்லோருக்கும் அறிவூட்டலும் அனுபவமும் கிடைப்பதோடு காத்திரமான விளைவுகளை எடுக்க சம்பந்தப்பட்ட தரப்பை வலியுறுத்தும். இலகுவில் புறக்கணிக்கப்பட வகை செய்யாது..!

சரி இன்னொரு கோணத்தில் பிரச்சனையை அணுகிப் பார்க்கலாம்....

1. எதற்கெடுத்தாலும் நிருவாகத்தை குறைகூற வேண்டுமா? எனது அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன், நான் கூட இரு இணையத் தளங்களை (ஆங்கிலம்) பரீட்சார்த்தமாக சுமார் இரு வருடங்கள் நிருவகித்துள்ளேன்.

என்னால் கூறக்கூடியதெல்லாம், யாழ் களத்தில் நாம் இருக்குமிடம் வீட்டில் உள்ள சாப்பாட்டு மேசை போன்றது. நிருவாகிகள் உள்ள இடம் சமையலறை போன்றது.

சாப்பாட்டு மேசையில் இருந்து இலவசமாக நாளும் பொழுதும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் நாம், சமையலறையில் இருந்து நாளும், பொழுதும் சேவை நோக்குடன் சமைப்பவர்களை குறைகூறுதல் நியாயமா?

2. குரங்கின் கைப்பூமாலை என்று சொல்வார்கள், முட்டாளின் கையில் ஆயுதம் கிடைத்தால் அது ஆபத்தில் முடியும்! மேலே நண்பர் கூட அக்கருத்தை ஒத்துக்கொண்டு உள்ளார், எனவே, தனிமடல்களைக் கூட முட்டாள்தனமாக உபயோகிக்கக்கூடியவர்களை யாழ் களத்தில் நிருவகிப்பதற்கு நிச்சயம் மேற்கூறிய குழுமம் பிரிப்பு நடவடிக்கைகள் நிச்சயம் தேவை! தனிமடலில் சச்சரவு நடந்தால் இருவர் பிரச்சனை, இதே சச்சரவு பொதுக்களத்தில் நடந்தால், களமே இயங்க முடியாத அளவிற்கு நாறிப்போகும்.

3. முன்னேற்றம் என்பது படிப்படியாக வருவது! எனவே, தனிப்பட்ட பழைய கசப்பான அனுபவங்களை காரணம் காட்டி, யாழ் கள முன்னேற்றப்பாட்டிற்காக எடுக்கப்படும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்மறையாக எதிர்கொள்வது மிகத் தவறானது. Be Positive!

4. மனதில் பயம், பீதி உள்ளவர்கள்தான் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்து பயப்படவேண்டும்! நெஞ்சில் உண்மை, நேர்மை இருந்தால் மற்றவர்களிற்கு நாம் அஞ்சி, அஞ்சி வாழத் தேவையில்லை.

யாழ் களத்து உறவுகளில் நம்பிக்கை இல்லாதவர்கள், யாழ் களத்தையே சந்தேகக் கண்ணுடன் பார்ப்பவர்கள், எவ்வாறு நடுவுநிலமையுடன், ஆக்கபூர்வமாக கருத்துக்கள் எழுத முடியும்? எனவே, முதலில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இல்லாதவர்களால் உருப்படியாக ஒன்றும் செய்யவும் முடியாது, மற்றவர்களையும் உருப்படியாக ஏதாவது செய்யவும் விட மாட்டார்கள்!

என்னால் எதையுமோ, பதிவு சொய்ய முடியவில்லை, தயவு சொய்து உதவி சொய்ய முடியுமா?

என்னால் எதையுமோ, பதிவு சொய்ய முடியவில்லை, தயவு சொய்து உதவி சொய்ய முடியுமா?

நீங்கள் மோகன் அண்ணாவுக்கு டனிமடல் மூலம் தொடர்பு கொள்ளவும்

:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி இன்னொரு கோணத்தில் பிரச்சனையை அணுகிப் பார்க்கலாம்....

1. எதற்கெடுத்தாலும் நிருவாகத்தை குறைகூற வேண்டுமா? எனது அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன், நான் கூட இரு இணையத் தளங்களை (ஆங்கிலம்) பரீட்சார்த்தமாக சுமார் இரு வருடங்கள் நிருவகித்துள்ளேன்.

எமக்கும் யாழ் தவிர்ந்த ஒரு சில களங்களுடன் அனுபவமும் ஆங்கிலம் உட்பட்ட.. யாகூ குழுமங்களை.. பல்கலைக்கழக களங்களை மேற்பார்வை செய்த அனுபவத்தில் பார்க்கின்ற போது நிர்வாக நடைமுறையென்பதை யாழ் களம் தனித்து இயக்கி வருகிறது. குறிப்பாக ஓரளவு பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் கருத்துக்களைக் கருத்துக்களால் நோக்கவும் என்று இருப்பவர்கள் மத்தியில் நிச்சயம் நிர்வாகம் என்ற ஒரு அலகு அவசியமில்லை..! அதை யாழில் நிலைநாட்ட முடியாது என்பது வெளிப்படை. அது யாழுக்கு வரும் கருத்தாளர்களின் தன்மைகள் வேறுபடுவதால் ஆக இருக்கலாம்.

ஆனால் நிர்வாகம் என்ற அலகு கருத்துக்களை கருத்தாளர்களை கட்டுப்படுத்த அல்லது நிர்வகிக்க ஆரம்பிக்கின்ற போது நடுநிலையான தன்மை அவசியம். அது அதிலிருந்து விலகிச் செல்லும் சமயங்களில் அது நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டாவதில் இருந்து நிர்வாகம் தப்பிக்க முடியாது. அதைத் தவிர்க்க வேண்டியது நிர்வாக அலகை உருவாக்கி நிர்வகிப்பவர்கள் மட்டுமே. நாடு ஒன்று தவறு செய்தால் அரச நிர்வாகத்தை குறை சொல்வீர்களா அரசைத் தெரிவு செய்த மக்களைக் குறை சொல்வீர்களா..??! மக்கள் நிர்வாகம் நல்லது என்றுதான் தெரிவு செய்கின்றனர். ஆனால் குழறுபடிகள் பக்கச்சார்புகள் எழுகின்ற போது மக்கள் என்ன செய்ய முடியும்..??! தேர்தல் நடந்தால் அடுத்த தேர்தலில் அகற்றலாம். இங்கு அப்படியா..??! தவறே இழைக்காத நிர்வாகமாக இருப்பது சாத்தியம் என்று தான் சொல்கின்றோமே தவிர இந்தக் குற்றச்சாட்டுக்கள் யாழ் நிர்வாகத்தை தாக்கும் செயலாக நோக்குவதை நாம் வருத்தத்துடன் நோக்குகின்றோம்..!

என்னால் கூறக்கூடியதெல்லாம், யாழ் களத்தில் நாம் இருக்குமிடம் வீட்டில் உள்ள சாப்பாட்டு மேசை போன்றது. நிருவாகிகள் உள்ள இடம் சமையலறை போன்றது.

சாப்பாட்டு மேசையில் இருந்து இலவசமாக நாளும் பொழுதும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் நாம், சமையலறையில் இருந்து நாளும், பொழுதும் சேவை நோக்குடன் சமைப்பவர்களை குறைகூறுதல் நியாயமா?

நாம் இதை சாப்பாட்டு மேசையோடு ஒப்பிட விரும்பவில்லை. ஒரு வங்கியும் அதன் நிர்வாகமும் போல கட்டுக்கோப்போடு நோக்குகின்றோம். வங்கியின் தவறுகளுக்கு வாடிக்கையாளர்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது..!

2. குரங்கின் கைப்பூமாலை என்று சொல்வார்கள், முட்டாளின் கையில் ஆயுதம் கிடைத்தால் அது ஆபத்தில் முடியும்! மேலே நண்பர் கூட அக்கருத்தை ஒத்துக்கொண்டு உள்ளார், எனவே, தனிமடல்களைக் கூட முட்டாள்தனமாக உபயோகிக்கக்கூடியவர்களை யாழ் களத்தில் நிருவகிப்பதற்கு நிச்சயம் மேற்கூறிய குழுமம் பிரிப்பு நடவடிக்கைகள் நிச்சயம் தேவை! தனிமடலில் சச்சரவு நடந்தால் இருவர் பிரச்சனை, இதே சச்சரவு பொதுக்களத்தில் நடந்தால், களமே இயங்க முடியாத அளவிற்கு நாறிப்போகும்.

இது யதார்த்தத்திற்குப் புறம்பானது. எந்த மனிதனும் சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது ஆயுதத்தை நன்மைக்கும் பயன்படுத்தலாம் தீமைக்கும் பயன்படுத்தலாம். உங்கள் வாதப்படி பார்த்தால் ஆளுக்கொரு T 56 வழங்கி தன்னைத் தானே பாதுகாக்கச் சொல்லி சமூகத்தைப் பாதுகாக்கலாம் என்பது போல் இருக்கிறது. அதன் ஆபத்துக்கள் குறித்த சாத்தியத்தைக் கண்டுதானே மனிதர்களிடம் ஆயுதங்களை அளிக்கிறார்கள் இல்லை. மனிதர்கள் எல்லாம் பொறுப்புணர்வோட ஆயுதங்களைப் பாவிப்பார்கள் என்றால் பிறகேன் தனியான பொலிஸ் ஆமி என்று...! அதுபோலத்தான் தனிமடல் என்பதும். ஆளால் கையில் உள்ள ஆயுதம். அது சரியான நோக்கில் பாவிக்கப்படவும் முடியும் தவறாகவும் பயன்படுத்தப்பட முடியும்..! இரண்டையும் எதிர்பார்ப்பது சந்தேகம் அல்ல யதார்த்தம்..!

தனிய நடந்தால் அது சண்டை. பொது இடத்தில் நடந்தால் அது வாதம்..!

3. முன்னேற்றம் என்பது படிப்படியாக வருவது! எனவே, தனிப்பட்ட பழைய கசப்பான அனுபவங்களை காரணம் காட்டி, யாழ் கள முன்னேற்றப்பாட்டிற்காக எடுக்கப்படும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்மறையாக எதிர்கொள்வது மிகத் தவறானது. Be Positive!

தவறுகள் திரும்பக் கூடாது என்பதில் எல்லோருக்கும் அக்கறையுண்டு. பல தடவைகள் சிலரின் தவறுகள் புறக்கணிக்கப்பட்டு சிலரின் தவறுகள் மட்டும் திட்டமிட்டு பூதாகாரமாக்கப்பட்டது நிகழ்ந்திருக்கும் போது தவறுகள் மீளக்கூடாது என்று வேண்டுதல் ஒன்றும் கசப்புணர்வை பகிர்ந்து கொள்வதல்ல. அவை மீளக்கூடாது. அதுவும் முன்னேற்றத்தோடு மாற்றங்களோடு சாத்தியப்படட்டும் என்ற ஆதங்கம் மட்டுமே..!

4. மனதில் பயம், பீதி உள்ளவர்கள்தான் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்து பயப்படவேண்டும்! நெஞ்சில் உண்மை, நேர்மை இருந்தால் மற்றவர்களிற்கு நாம் அஞ்சி, அஞ்சி வாழத் தேவையில்லை.

இதுவும் மிகத்தவறான கருத்து. புலி ஒன்று பதுங்குகிறது என்றால் பயத்தால் பீதியால் என்று நீங்கள் சொல்வீர்களா..??! சில ஆபத்துக்களை தவிர்க்க வேண்டி.. வேண்டாதவைகள் மீளக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சொல்லப்படுபவை நேர்மைக்குப் புறம்பானவை அல்ல..! வாழ்க்கையில் அலேட்டா இருப்பது ஒவ்வொரு மனிதனின் தேவை..! அலேட்டா இருக்கிறான் என்பதற்காக மனதில் பயம் பீதி நேர்மை அற்றவர்கள் நெஞ்சில் உண்மையற்றவர்கள் என்பதாகாது. களத்தில் இருந்து பின்வாங்குபவன் எல்லாம் கோழையல்ல..!

யாழ் களத்து உறவுகளில் நம்பிக்கை இல்லாதவர்கள், யாழ் களத்தையே சந்தேகக் கண்ணுடன் பார்ப்பவர்கள், எவ்வாறு நடுவுநிலமையுடன், ஆக்கபூர்வமாக கருத்துக்கள் எழுத முடியும்? எனவே, முதலில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இல்லாதவர்களால் உருப்படியாக ஒன்றும் செய்யவும் முடியாது, மற்றவர்களையும் உருப்படியாக ஏதாவது செய்யவும் விட மாட்டார்கள்!

நடுவுநிலை என்பது யால்ரா அடித்தலும் சார்போடு இருத்தலும் மசிந்து போதலும் அல்ல. தான் கொண்ட நிலையை சரியோ தவறோ வெளிப்படுத்தி விளங்கிக் கொள்பவன் தான் அந்த வகைக்குள் வர முடியும். இப்படி எழுதினா அவை நோகுவினம் இப்படி எழுதினா இவை அகற்றுவினம் இப்படி எழுதினா இவை கூட நட்பு குலைஞ்சிடும் என்று பதுங்கிப் பதுங்கி ஒதுங்கி ஒதுங்கி கருத்தெழுதுவதல்ல நடுநிலை என்பது. நடுவுநிலை நிற்பவன்.. யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் பல கோணங்களிலும் கருத்தை உணர வரவைக்க பகரத் தெரிந்திருக்க வேண்டும்..! பல கோணங்களில் நோக்குதல் என்பதை வழமையான மனிதர்களின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் கீழத்தரமான சொற்களான சந்தேகம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பவை கொண்டு நோக்குதல் தவறு..! எப்பவும் ஒரு சார்பாகத்தான் நியாயம் நிற்கும் என்பதுதான் ஆபத்தான தன்னம்பிக்கை அற்றவர்களின் பார்வை..!

உருப்படி என்பதன் அர்த்தம்..???! சாதிப்பது சமூகத்தில் அல்லது ஒரு மனிதனில் செய்யவல்ல மாற்றம்..! அது சாத்தியப்படுவது பக்கச் சார்பில் அல்ல..! விடயங்களுள் உள்ள சாத்தியமான அனைத்தையும் நோக்கும் போதே அது மக்களை அவரவர் சிந்தனைக்கு ஏற்ப சென்றடையும். ஒருவரைப் புறக்கணித்து அடுத்தவரை திருப்தி செய்வதன் மூலம் சமூகம் பிளவுபடுமே அன்றி உருப்படாது..!

இவை கருத்துப்பகிர்வுகளாக மட்டுமே நோக்க வேண்டும். நெடுக்காலபோவன் கலைஞன் சண்டை என்று நோக்கின் அது மிகத் தவறானது..! நாம் கருத்துக்களத்துக்கு வெளியில் எல்லோரோடும் நட்புப் பாராட்டவே விரும்புகின்றோம்..! :P :rolleyes:

Edited by nedukkalapoovan

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! :rolleyes:

வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம்! கால் பட்டால் குற்றம்! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! :rolleyes:

அது சிந்திக்கத் தெரியாத மாட்டுக்கு..! சிந்தனையுள்ள மனிதனுக்கு..??! :unsure:

வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம்! கால் பட்டால் குற்றம்! :)

அது பொண்டாட்டிய அசிங்கமாப் பார்க்கிறவர்களுக்கு மட்டும்..! பெண்டாட்டில குறைகள் இருப்பின் சொல்லி நிவர்த்திக்கவும் அல்லது குறைய நிறைவாக்கவும் தெரிஞ்சவர்கள் முன்னிலையில்...இவை..??! :)

">
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் - உறுப்பினர் தெரிவு

ஏற்கனவே உள்ள அங்கத்தவர்கள் எந்தக்குழுமத்திலும் சேரலாம் என்பதால் பெரிதாக யாருக்கும் பாதிப்பு வரப்போவதில்லை. முக்கியபிரச்சனை சாணக்கியன் போன்ற ரென்சன் பாட்டிகளுடையதாகவே இருக்கப் போகிறது. எல்லாத்துக்கும் ரென்சன் படுகிறார். கொஞ்சம் கூட அடுத்தவர்களின் நிலையை புரிந்து அண்டர்ஸ்ராண்ட் பண்ண முயற்சிக்கிறார் இல்லை மனுசன் என்பது என் கணிப்பு. சாணக்கியன் வீட்டில் அடிக்கடி சண்டை பிடிப்பீங்களோ?

மேலும்,

இந்த புதிய திட்டத்தை வெற்றியடைய வைப்பது எமது கைகளிலேயே இருக்கிறது என நினைக்கிறேன். உதாரணமாக, குழுமங்களுக்கு புதியவர்கள் விண்ணப்பம் கோரும் வரை காத்திராமல் (இது அனேகமாக மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறப்போகிறது) நாங்களே புதியவர்களை எங்கள் குழுமத்தில் இணையுமாறு கோரலாம். உதாரணமாக ஒருவர் கவிதை நன்றாக எழுதுபவர் என தன்னை யாழ் இனிது பகுதியில் அடையாளம் காட்டினால் உடனடியாகவே அவரை கவிதை பகுதியில் இணையுமாறு தனி மடலிலோ அல்லது விவாதப்பகுதியிலோ கோரலாம். உதாரணமாக அண்மையில் டுபுக்கு என்பவர் இணைந்தபோது பல பமிலிகள் அவரை தம் பமிலிக்குள் இழுக்க முனைந்ததைக் கூறலாம். இப்படி ஏற்கனவே உள்ள மெம்பர் களின் உற்சாகப்படுத்தலில் தான் இந்த புதிய நடைமுறையின் வெற்றி தங்கி இருக்கிறது.

குழுமங்களின் எண்ணிக்கை கூடிவிட்டது என்பதே என்கருத்தும். ஊரிப்பட்ட குழுமங்கள். அனேகமானவை வெறுமையில். குழுமங்களை குறைப்பது நிர்வாக சிக்கல்களை குறைக்க கௌதவலாம். படிப்படியாக புதிய குழுமங்களை உருவாக்கலாம்.

எனவே புதிய திட்டம் சரிவர எவ்வாறு செயற்படலாம் என்று சிந்திப்போம்.

என்னங்க எனக்கு ஒண்ணுமா புரியல ...ஏன் சிலர் புலம்புகிறார்கள் தங்களால் எழுதமுடியவில்லை என்று. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே எழுதுவதற்கு...

ஆனாலும் அந்தக்காலத்தில தமிழ்வாத்தியார் பிரம்பு வைச்சு அடிப்பார் எழுத்துப்பிழை விட்டால்...அது என் கருத்தாக இருக்கட்டும் மற்றவரின் கருத்தாக இருக்கட்டும். எழுத்துப்பிழை விட்டு யாரும் இங்கு எழுதினால் முதல் எச்சரிக்கை அதன் பின்பு கிழித்து குப்பையில் போடுவீர்கள் என்று தெரிந்தால் நாம் இங்கால ஒழுங்கா தமிழில எழுதப்பார்ப்போம். அதை முதலில் செய்யுங்க இல்லாட்டி என்னைப்போல சிலர் லூசுத்தனமா ஸ்பெலிங் செக் பண்ணாம எல்லாம் போஸ்ட் பண்ணுறாங்க. :rolleyes:

புலி மாமாவின் இந்த கருத்து நடைமுறைக்கு சாத்தியமன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் தடை போட்டிருக்காங்களா? நம்மளால கூட எல்லாப்பக்கமும் எழுத முடியவில்லையே

எனக்கும் அனுமதி தாங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் - உறுப்பினர் தெரிவு

ஏற்கனவே உள்ள அங்கத்தவர்கள் எந்தக்குழுமத்திலும் சேரலாம் என்பதால் பெரிதாக யாருக்கும் பாதிப்பு வரப்போவதில்லை. முக்கியபிரச்சனை சாணக்கியன் போன்ற ரென்சன் பாட்டிகளுடையதாகவே இருக்கப் போகிறது. எல்லாத்துக்கும் ரென்சன் படுகிறார். கொஞ்சம் கூட அடுத்தவர்களின் நிலையை புரிந்து அண்டர்ஸ்ராண்ட் பண்ண முயற்சிக்கிறார் இல்லை மனுசன் என்பது என் கணிப்பு. சாணக்கியன் வீட்டில் அடிக்கடி சண்டை பிடிப்பீங்களோ?

மேலும்,

இந்த புதிய திட்டத்தை வெற்றியடைய வைப்பது எமது கைகளிலேயே இருக்கிறது என நினைக்கிறேன். உதாரணமாக, குழுமங்களுக்கு புதியவர்கள் விண்ணப்பம் கோரும் வரை காத்திராமல் (இது அனேகமாக மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறப்போகிறது) நாங்களே புதியவர்களை எங்கள் குழுமத்தில் இணையுமாறு கோரலாம். உதாரணமாக ஒருவர் கவிதை நன்றாக எழுதுபவர் என தன்னை யாழ் இனிது பகுதியில் அடையாளம் காட்டினால் உடனடியாகவே அவரை கவிதை பகுதியில் இணையுமாறு தனி மடலிலோ அல்லது விவாதப்பகுதியிலோ கோரலாம். உதாரணமாக அண்மையில் டுபுக்கு என்பவர் இணைந்தபோது பல பமிலிகள் அவரை தம் பமிலிக்குள் இழுக்க முனைந்ததைக் கூறலாம். இப்படி ஏற்கனவே உள்ள மெம்பர் களின் உற்சாகப்படுத்தலில் தான் இந்த புதிய நடைமுறையின் வெற்றி தங்கி இருக்கிறது.

குழுமங்களின் எண்ணிக்கை கூடிவிட்டது என்பதே என்கருத்தும். ஊரிப்பட்ட குழுமங்கள். அனேகமானவை வெறுமையில். குழுமங்களை குறைப்பது நிர்வாக சிக்கல்களை குறைக்க கௌதவலாம். படிப்படியாக புதிய குழுமங்களை உருவாக்கலாம்.

எனவே புதிய திட்டம் சரிவர எவ்வாறு செயற்படலாம் என்று சிந்திப்போம்.

பண்டிதர் ஐயா... நீங்கள் பல திட்டங்களோடு இங்கு வந்தவர். இன்று எத்தனை திட்டங்களை நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள்...???! பிரிவினையை வளர்த்ததை விட..!

சிறீலங்கா கிறிக்கெட்டிக்கு எதிராக இணையத்தில் பிரச்சாரம் செய்யச் சொன்னீர்கள்.. நாம் அப்பவே சொன்னம் இணையத்தில் செய்து பெரிதாகப் பலனில்லை போட்டி நடக்கும் இடத்தில் செய்யுங்கள் என்று, இன்று திறமையான இணையத்தளத்தத நடத்தும் சர்வதேச மன்னிப்புச்சபை கூட போட்டி நடக்கும் இடங்களில் பிரச்சாரம் தொடங்கி சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்ததன் பின்னர்.. புலிகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்..!

திட்டத்தோட அலையுறது முக்கியமில்ல. திட்டம் திடமா செயற்பட வேணும் என்றால் ஏற்றத்தாழ்வற்ற நிலையும் கருத்தியல் ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும். இந்தக் குழுமங்களை வகுப்பதன் மூலம் நீங்கள் இதைச் சாதிக்க முயலாமல் சாணக்கியனை ஓரங்கட்ட நினைப்பதும் அவரின் குடும்பத்தை இழுத்து தனிநபர் தாக்குதல் நடத்துவதும் திட்டங்களோடு திரியும் உங்களின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி கேட்க வைக்கிறது..!

ஆட்களை ஓரங்கட்ட இந்தக் குழுமப் பிரிப்பு பயன்படலாம் என்று ஆரம்பத்திலேயே எமக்குள்ளும் தோன்றியதால் தான் இந்தத் தலைப்பு உருவாக்கப்பட்டு கள உறுப்பினர்கள் எவரும் அப்படியான எண்ணங்களுக்கு அப்பால் ஒருங்கிணைய வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கும் தருணத்தில்.. பாவம் தான் நேசிக்கும் மக்களின் கஸ்டங்களைச் சொல்ல வந்த சாணக்கியனை ஓரங்கட்ட சந்தர்ப்பம் தேடுவது சரியாப்படேல்ல..!

ஒரு கருத்தாளன் தன்ர ஆக்கத்தை களவிதிக்கு உட்பட்டு எழுதச் சொல்வது நியாயம். குழுமம் குழுமமா அனுமதி பெற்று எழுதனும் என்பது அவமதிப்புக்கு நிகரானது. அதுவும் தற்போதுள்ள உறுப்பினர்களிடம் அப்படிக் கோருவது தவிர்க்கப்பட வேண்டும்..!

களத்தில் அரட்டை என்று அதிகம் பேசினார்கள்.. இப்போ அதுக்கு என்று தனிய சந்தியே திறந்திருக்கு..! அங்கு எழுதப்பட்ட கருத்துக்கள் எத்தனை..??! அறிவியலில் உள்ள கருத்துக்கள் எத்தனை..! இதை மாற்றி அமைத்துக்காட்டுங்கள்.. உங்களால் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்பலாம்..!

குழுமம் பிரிக்கும் மோகன் சார் இங்கு கருத்தெழுதுவதில்லை. நாம் தான் கருத்தெழுதுகின்றோம். எமக்குள் ஒரு அண்டஸ்ராண்டிக்குக்கு வரமுடியல்ல என்றால் எப்படி சார் திட்டங்களை செயற்படுத்தப் போறீங்க..????!

ரென்சன் பாட்டின்னுட்டு இந்தக் கருத்தைப் பார்த்து ரென்சன் ஆகாதிங்க.. ஆகனும் என்றும் எதிர்பார்க்கல்ல.. புரிஞ்சுக்க வேணும் சில நிலைகளை..! :P

செய்வன திருந்தச் செய்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டிதர் ஐயா... நீங்கள் பல திட்டங்களோடு இங்கு வந்தவர். இன்று எத்தனை திட்டங்களை நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள்.

சிறீலங்கா கிறிக்கெட்டிக்கு எதிராக இணையத்தில் பிரச்சாரம் செய்யச் சொன்னீர்.. நாம் அப்பவே சொன்னம் இணையத்தில் செய்து பெரிதாகப் பலனில்லை போட்டி நடக்கம் இடத்தில் செய்யுங்கள் என்று, இன்று திறமையான இணையத்தளத்தத நடத்தும் சர்வதேச மன்னிப்புச்சபை கூட போட்டி நடக்கும் இடங்களில் பிரச்சாரம் தொடங்கி சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்ததன் பின்னர்.. புலிகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்..!

திட்டத்தோட அலையுறது முக்கியமில்ல திட்டம் திடமா செயற்பட வேணும் என்றால் ஏற்றத்தாழ்வற்ற நிலையும் கருத்தியல் ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும். இந்தக் குழுமங்களை வகுப்பதன் மூலம் நீங்கள் இதைச் சாதிக்க முயலாமல் சாணக்கியனை ஓரங்கட்ட நினைப்பதும் அவரின் குடும்பத்தை இழுத்து தனிநபர் தாக்குதல் நடத்துவதும் திட்டங்களோடு திரியும் உங்களின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி கேட்க வைக்கிறது..!

ஆட்களை ஓரங்கட்ட இந்தக் குழுமப் பிரிப்பு பயன்படலாம் என்று ஆரம்பத்திலேயே எமக்குள்ளும் தோன்றியதால் தான் இந்தத் தலைப்பு உருவாக்கப்பட்டு கள உறுப்பினர்கள் எவரும் அப்படியான எண்ணங்களுக்கு அப்பால் ஒருங்கிணைய வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கும் தருணத்தில்.. பாவம் தான் நேசிக்கும் மக்களின் கஸ்டங்களைச் சொல்ல வந்த சாணக்கியனை ஓரங்கட்ட சந்தர்ப்பம் தேடுவது சரியாப்படேல்ல..!

ஒரு கருத்தாளன் தன்ர ஆக்கத்தை களவிதிக்கு உட்பட்டு எழுதச் சொல்வது நியாயம். குழுமம் குழுமமா அனுமதி பெற்று எழுதனும் என்பது அவமதிப்பு நிகரானது. அதுவும் தற்போதுள்ள உறுப்பினர்களிடம் அப்படிக் கோருவது தவிர்க்கப்பட வேண்டும்..!

களத்தில் அரட்டை என்று அதிகம் பேசினார்கள்.. இப்போ அதுக்கு என்று தனிய சந்தியே திறந்திருக்கு..! அங்கு எழுதப்பட்ட கருத்துக்கள் எத்தனை..??! அறிவியலில் உள்ள கருத்துக்கள் எத்தனை..! இதை மாற்றி அமைத்துக்காட்டுங்கள்.. உங்களால் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்பலாம்..!

குடுமம் பிரிக்கும் மோகன் சார் இங்கு கருத்தெழுதுவதில்லை. நாம் தான் கருத்தெழுதுகின்றோம். எமக்குள் ஒரு அண்டஸ்ராண்டிக்குக்கு வரமுடியல்ல என்றால் எப்படி சார் திட்டங்களை செயற்படுத்தப் போறீங்க..????!

ரென்சன் பாட்டின்னுட்டு இந்தக் கருத்தைப் பார்த்து ரென்சன் ஆகாதிங்க.. ஆகனும் என்றும் எதிர்பார்க்கல்ல.. புரிஞ்சுக்க வேணும் சில நிலைகளை..! :P

செய்வன திருந்தச் செய்..!

ஐயோ கடவுளே,

சாணக்கியனை ஓரங்கட்டும் எண்ணத்துடன் நான் எழுதியது போல தெரிகிறதா? தெரிந்தால் நீங்கள் என்ன கண்ணாடி பாவிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்?

சாணக்கியன் ஏற்கனவே தான் விலகுவதாக எழுதியிருந்தார். அதனால் அவரை மீண்டும் அழைக்கும் விதமாகத் தான் அதை எழுதி இருந்தேன். மேலும் சாணக்கியன் சாணக்கியன் ஒரு ரென்சன் பாட்டியாக இருக்கவேண்டுமென்பது எனது கணிப்பு. ரென்சன் பாட்டிகளிப்பற்றி எனக்கு பயங்கரமாக தெரியும். அதனால் தான் வீட்டில் சண்டை அடிக்கடி நடக்குமே என்று நட்புரீதியில் கேட்டிருந்தேன். இது பற்றி மேலதிக விளக்கம் வேண்டுமானால் சாணக்கியனுக்கு தனிமடலில் தருகிறேன். குடும்பத்தை வீதிக்கு இழுப்பது எனது நோக்கமல்ல (என்னமா விளக்கங்கொடுக்கிறாங்கப்பா, இருந்து யோசிப்பாய்ங்களோ?).

நெடுக்காலபோவானின் கருத்துத்தான் உங்களதுமா என சாணக்கியன் இங்கு தெரிவிக்க வேண்டும். அப்படியானால் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்.

எனது திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லைத் தான். முக்கிய காரணம் ஆதரவின்மை. திட்டங்களை எப்படி மேம்படுத்தலாம் ஆதரவை எவ்வாறு பெறலாம் என்ற உங்களின் கருத்தை நன்றியுடன் வேண்டிநிற்கிறேன்.

நன்றி.

என் தெரிவு அவசியம் இல்லை - அது எழுதும் ஆர்வத்தைக் குறைக்கும் ஏன் எனின் அரட்டைகளையும் தனிமனித தாக்குதலையும் குறைக்க வேண்டும் என்பதுக்காக இவ்வதிரடி முடிவை எடுத்திருகிறது நிர்வாகம் ஆனால் பலர் சலிப்படையக்கூடும் உதாரணத்துக்கு சானக்கியன்.அரட்டையை மட்டும் தொழ்லிலாக கொண்ட பல உறுப்பினர்கள் இங்கு இருகின்றனர் அவர்களை கட்டுப்படுத்தலாம் ஒருநாளைக்கு இவ்வளவு கருத்துக்களை எழுதலாம் என கட்டுப்பாடு விதிக்கலாம்.அது பல்லிழிப்புக்கும் சும்மா அரட்டைக்கும் செய்பவர்களை கட்டுப்படுத்தும்.எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எங்கும் எழுத முடிகிறது ஆனால் பல அக்டிவ் மெம்பர்ஸ் இதனால் சலிப்படையக்கூடும் என நினைகின்றேன்.

உதாரணத்துக்கு அருவியை கூறலாம் இன்று என்னுடன் தனிமடலில் தன் சலிப்பை வெளிப்படுத்தினார்.மற்றது நம்ம துயவன் வருவது மிகக்குறைவு தற்போது.என்னை பொறுத்த வரையில் செய்தி பிரிவில் நிவாகம் எடுத்த முடிவு சரியாயினும் மற்றய பகுதிகளுக்கு குழுக்கள் அமைப்பது நல்லதாக படவில்லை.

இப்பிரிப்பால் பல குழுக்களாக யாழ் கள உறவுகள் பிரிவார்களோ என கவலைப்படுகின்றேன்

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.