Jump to content

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்


Recommended Posts

பதியப்பட்டது

 

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்

 

large_mysteries-of-indian-temples-11411.

1 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

2  ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது

3  தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4  தாராசுரம் (கும்பகோணம்) ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5  கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது

6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7  சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை ) 

8  சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

9  திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். 

10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்

11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான  வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது

12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது

13 ஈரோடு  காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது

14  மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

15 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

16 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

17 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது  பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது

18  தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

19 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை

20  தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

21 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி  சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை        செங்குத்தாக    நிற்கிறது.

22 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது. 

23 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும்  சுடுவதில்லை

24 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை

25 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

26 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில்  பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

27 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

28 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது. 

29 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை. 

30 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.  

31 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது. 

32 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது

33  திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது. 

34 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.  அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.

35 நாகர்கோவில் கேரளபுரம்  சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

http://www.punnagai.com/spiritual/miracles-of-hindu-god

Posted

இவ்வளவு  அற்புதங்கள் செய்த எந்த கடவுளும் இந்து தமிழ் மக்கள் 35 வருடங்களாக இனப. படுகொலை செய்யும் போது அதை தடுக்க முன்வரவில்லை.  அதன் உச்சக்கட்டமாக முள்ளிவாய்காலில் லடசக்கணக்கான இந்து மக்கள் கொல்லப்பட்ட போது கூட அதை தடுக்க தனது அறபுதங்களை பயன் படுத்த முனையவில்லை.  சும்மா வீம்புக்கு மற்றவர்களுக்கு கலர் காட்ட அற்புதங்களை செய்யும் கடவுள்கள் எதற்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, tulpen said:

இவ்வளவு  அற்புதங்கள் செய்த எந்த கடவுளும் இந்து தமிழ் மக்கள் 35 வருடங்களாக இனப. படுகொலை செய்யும் போது அதை தடுக்க முன்வரவில்லை.  அதன் உச்சக்கட்டமாக முள்ளிவாய்காலில் லடசக்கணக்கான இந்து மக்கள் கொல்லப்பட்ட போது கூட அதை தடுக்க தனது அறபுதங்களை பயன் படுத்த முனையவில்லை.  சும்மா வீம்புக்கு மற்றவர்களுக்கு கலர் காட்ட அற்புதங்களை செய்யும் கடவுள்கள் எதற்கு? 

எமக்கு தெரிந்தது, எமது வயதுக்குரிய கால வரலாறு மட்டுமே.

கடவுளுக்கு, எமது முந்தைய பிறப்புகளின் வரலாறு தெரியுமாயின், (எமது நம்பிக்கையான) ஒவ்வொரு இன்ப, துன்பமும் முன் பிறப்பு பாவ, நற்செயல் சார்ந்தது என்ற வகையில், எமது மக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே பாதிக்கப்பட, பலர், தென் இலங்கை, வெளிநாடுகளுக்கு போய் பாதுகாப்பாக உள்ளனர்.

ஆகவே இந்த பாதிக்கப் பட்டவர்கள், முன் பிறப்பில் பாவம் செய்தவர்கள் என சொல்ல முடியுமா?

உலகை கட்டியாண்ட, ரோமர்கள், கிரேக்கர்கள், தமிழர்கள் ஒரு சிறு பகுதிக்குள் ஒடுங்கியது எப்படி? சாம்ராஜ்ய விரிவாக்களில் பெரும் நாசகார கொலைகளை செய்த, ஸ்பானிய, போர்த்துக்கேய, பிரிட்டிஷ் இன்றய நிலை என்ன?

(எனது சொந்த அபிப்பிராயம் அல்ல..... சமய சார்ந்த ஒரு வியாக்கியானம்)

Posted
39 minutes ago, Nathamuni said:

எமக்கு தெரிந்தது, எமது வயதுக்குரிய கால வரலாறு மட்டுமே.

கடவுளுக்கு, எமது முந்தைய பிறப்புகளின் வரலாறு தெரியுமாயின், (எமது நம்பிக்கையான) ஒவ்வொரு இன்ப, துன்பமும் முன் பிறப்பு பாவ, நற்செயல் சார்ந்தது என்ற வகையில், எமது மக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே பாதிக்கப்பட, பலர், தென் இலங்கை, வெளிநாடுகளுக்கு போய் பாதுகாப்பாக உள்ளனர்.

ஆகவே இந்த பாதிக்கப் பட்டவர்கள், முன் பிறப்பில் பாவம் செய்தவர்கள் என சொல்ல முடியுமா?

உலகை கட்டியாண்ட, ரோமர்கள், கிரேக்கர்கள், தமிழர்கள் ஒரு சிறு பகுதிக்குள் ஒடுங்கியது எப்படி? சாம்ராஜ்ய விரிவாக்களில் பெரும் நாசகார கொலைகளை செய்த, ஸ்பானிய, போர்த்துக்கேய, பிரிட்டிஷ் இன்றய நிலை என்ன?

(எனது சொந்த அபிப்பிராயம் அல்ல..... சமய சார்ந்த ஒரு வியாக்கியானம்)

உங்கள் சொந்த அறிவு சார் அபுப்பிராயம் இல்லாமல் சமய சார நம்மிக்கை என்னும் பொழுதேஅது முட்டாள் தனமான நம்பிக்கை என்பது தெளிவாகிறது. இது உண்மையாயின் முள்ளிவாய்காஙில் இறந்தவர்கள் எல்லோரும் முற்பிறப்பில் பாவம் செய்தவர்களா? என்ன பித்தலாட்ட சமய கருத்து இது? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, tulpen said:

சும்மா வீம்புக்கு மற்றவர்களுக்கு கலர் காட்ட அற்புதங்களை செய்யும் கடவுள்கள் எதற்கு? 

சைவசமயத்திலுள்ள அத்தனையும் அறிவுரைகளும் விஞ்ஞானங்களும் மட்டுமே?

அதனால்த் தான் வெட்டவெட்ட தளைத்துக் கொண்டே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, tulpen said:

உங்கள் சொந்த அறிவு சார் அபுப்பிராயம் இல்லாமல் சமய சார நம்மிக்கை என்னும் பொழுதேஅது முட்டாள் தனமான நம்பிக்கை என்பது தெளிவாகிறது. இது உண்மையாயின் முள்ளிவாய்காஙில் இறந்தவர்கள் எல்லோரும் முற்பிறப்பில் பாவம் செய்தவர்களா? என்ன பித்தலாட்ட சமய கருத்து இது? 

சமயம் சார்ந்து பார்த்தால்..... இருக்கலாம்.....முள்ளிவாய்க்காலில் தப்பி உயிர் வாழ் பவர்களும் இருக்கிறார்களே. சரி இவ்வளவு புலிகளும் மாண்டு போக, கருணா அம்மானுக்கு உயர் வாழ பலன் இருந்திருக்கிறதே...

சரி.... ராஜிவ் கொலைக்கு சம்பந்தமில்லா 7 தமிழர்கள் சிறையில் 28 வருடம் வாடும் காரணம் என்ன?

நேருவின் மகள், இரண்டு பேரன்கள் அவல மரணத்துக்கு காரணம் என்ன? இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி இளமையிலேயே நோயினால் மாண்டார்.

தெரிந்தே அநியாயங்கள் செய்த ராஜபக்சே சகோதரர்கள், குறிப்பாக கோத்தபாய....  இந்தப் பிறவியில் தப்பினாலும், 7  தலைமுறைக்கு பாவம் சேர்க்கவில்லை என்கிறீர்களா?

இயக்கத்தில் சேராமல் நான் வெளிநாடு வந்ததற்கும், வெளியே வராமல், நாட்டிலேயே இருப்பேன் என்று, இயக்கத்தில் சேராமல் வாழ்ந்து, புலி என்று சும்மா கைதாகி, கப்பம் தர மறுத்ததால், கொலையான நண்பன்..... காரணம் என்ன?

வினை விதைத்தால் வினை அறுவடை செய்ய வேண்டும்.... இந்த பயமே.... பலரையும் தவறு, வன்மம், கொடூர செயல்களில் இருந்து தூர வைத்துள்ளது என்கிறேன்.

சிங்கள ஊர் கந்தனே.... ரத்தினபுரி போகும் வழியில் உள்ளது... ஒரு ரப்பர் தோட்டம் விலைக்கு வந்தது.... எனது தந்தையின் சில நண்பர்களும் பார்க்க போனார்கள்... அங்கே 17 வயது வலது மிக குறைந்த இளைஞன் மரத்துக்கு கீழே கட்டிலில் கட்டி வைத்திருந்தார்கள்... ஏன் என்று கேட்டதுக்கு, அவனது தந்தை, தோட்டத்தினை விறகும் நபர், கண்களில் பொல, பொல என கண்ணீர். தமிழர்களுக்கு 1958 கலவரத்தில் எனது தந்தை அநியாயம் செய்து.... தப்பித்துக் கொண்டார்.... நான் அந்த பாவத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றாராம்..

நீங்கள் பகுத்தறிவுடன் கேட்டால், பதில் இல்லை. ஆனாலும் நான் சொல்வது பட்டறிவு…

Posted
41 minutes ago, ஈழப்பிரியன் said:

சைவசமயத்திலுள்ள அத்தனையும் அறிவுரைகளும் விஞ்ஞானங்களும் மட்டுமே?

அதனால்த் தான் வெட்டவெட்ட தளைத்துக் கொண்டே இருக்கிறது.

இரண்யாட்ச‌ன் என்ற அரக்கன் பூமியை எடுத்துச் சென்று பாயாக சுருட்டி கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான். அதனை மீட்டெடுக்க விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலின் அடிவரைசென்று பாதாளம் நோக்கி துளை அமைத்துச்சென்று அசுரனுடன் ஆயிரம் வருடங்கள் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி நரகாசுரன் என்ற மகனைப் பெற்றெடுத்தார். என்ன ஒரு அறிவார்ந்த கற்பனை. இதையெல்ல்லாம் நம்பிவிட்டோம்.

கிருத யுகத்தில் வராக அவதாரத்தில் பிறந்த நரகாசுரன் துவாபர யுகத்தில் கிருஷ்ன அவதாரத்தால் அழிக்கபட்டானம். இத்தனைக்கும் கிருத யுகத்திற்கும் துவாபர யுகத்திற்கும் வித்தியாசம் அதை எழுதியவர்களின் கணக்குபடி 30 லட்சம் வருடங்கள். இதையும் நம்பிவிட்டோம். ராகு, கேது என்ற இரண்டு பாம்புகள் விழுங்கி தான் சந்திர, சூரிய கிரகணங்கள் உருவாகின்றது என்பதையும் அறிவு கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிட்டோம்.

இப்படி எந்த முட்டாள் கதையை சொன்னாலும் உனது பகுத்தறிவை கொண்டு ஆராய்ந்து பார்க்காமல் நம்பு என்று கூறுகிறது ஆன்மீகம் என்ற பெயரில் நடத்தப்படும் மத வியாபாரம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, tulpen said:

நம்ப வைத்தநம்ப வைத்தஇரண்யாட்ச‌ன் என்ற அரக்கன் பூமியை எடுத்துச் சென்று பாயாக சுருட்டி கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான். அதனை மீட்டெடுக்க விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலின் அடிவரைசென்று பாதாளம் நோக்கி துளை அமைத்துச்சென்று அசுரனுடன் ஆயிரம் வருடங்கள் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி நரகாசுரன் என்ற மகனைப் பெற்றெடுத்தார். என்ன ஒரு அறிவார்ந்த கற்பனை. இதையெல்ல்லாம் நம்பிவிட்டோம்.

கிருத யுகத்தில் வராக அவதாரத்தில் பிறந்த நரகாசுரன் துவாபர யுகத்தில் கிருஷ்ன அவதாரத்தால் அழிக்கபட்டானம். இத்தனைக்கும் கிருத யுகத்திற்கும் துவாபர யுகத்திற்கும் வித்தியாசம் அதை எழுதியவர்களின் கணக்குபடி 30 லட்சம் வருடங்கள். இதையும் நம்பிவிட்டோம். ராகு, கேது என்ற இரண்டு பாம்புகள் விழுங்கி தான் சந்திர, சூரிய கிரகணங்கள் உருவாகின்றது என்பதையும் அறிவு கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிட்டோம்.

இப்படி எந்த முட்டாள் கதையை சொன்னாலும் உனது பகுத்தறிவை கொண்டு ஆராய்ந்து பார்க்காமல் நம்பு என்று கூறுகிறது ஆன்மீகம் என்ற பெயரில் நடத்தப்படும் மத வியாபாரம்.

 

நான் சொன்னது சைவ மத நம்பிக்கை. 

தமிழ் முருகனை, பிள்ளையார் தம்பியாக்கி, சிவனார் இரண்டாவது மகனாக, நம்ப வைத்த, இலங்கைத் தமிழ் அரசன், சைவன் ராவணனை... அரக்கனாக சித்தரித்து... எம்மையே நம்ப வைத்த, ஆரிய பிராமணர்கள்.... சொன்ன பல, இந்து மத  விஷயங்களையே நீங்கள் சொல்லுகிறீர்கள்...

சைவ மதம் அறிவு பூர்வமானது... அபத்தங்கள் இல்லை... சித்தர்களின் பங்களிப்பு நிறைந்தது.

 

Posted

மிக அதீத மத நம்பிக்கையுள்ள தென்னாசியா வறுமையுலும் வன்முறையிலும் சீரழிகின்றது. குறைந்தளவு மத நம்பிக்கையுடைய கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பா பொருளாதார மனித நாகரிக வளர்ச்சியில் பன்மடங்கு வளர்ந்து நிற்கின்றது.

மதம் மனித நாகரீக பொருளாதார வளர்ச்சியினை பின்நோக்கி கொண்டு செல்லும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. 

Posted

மதம் அது சார்ந்த அரசியல், சுரண்டல் மற்றும் ஏற்றதாழ்வுகள் என்பதையும் இறை நம்பிக்கையோடு தொடர்புடைய நல்லவிசயங்களையும் பிரித்தறிய முடியாத நிலையில் தற்போதைய காலம் உள்ளது. சிறு தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சைவம், இந்து என்பதே குழப்பமானது. என்னுமோருபுறம் பாபாக்கள் நித்தியானந்தாக்கள் ஈசா மையங்கள் என இந்து மதம் எந்த வரையறையும் அற்றது. சைவம் பொளத்தம் சமணம் என்பவற்றுக்கும் தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் கலாச்சாரம் பண்பாடு வரலாறு போன்றவற்றுக்கும் உள்ள பிணைப்புக்கள் என எல்லாவற்றையும் கொண்டுபோய் இந்துமதம் என்பதற்குள் போட்டு ஒரு பெரிய சாம்பார் வைத்தாகிவிட்டது. 

"மனிதன் கடவுளைப் படைத்தான் கடவுள் மனிதனைப் படைத்தார்" கடவுள் குறித்த எனது புரிதல் இதுதான். கடவுள் என்பது புறநிலையில் ஒரு பொருளாக இல்லை என்பது கடவுள் மீது நெருங்கிய பற்றுள்ளவரே அதிகம் உணர்வார். எந்த அபாயத்திலும் ஆபத்திலும் புறநிலையில் உள்ள ஒரு கடவுள் வந்து யாரையும் காப்பாற்ற முடியாது. ஏனெனில் அப்படி எதுவும் இல்லை. கடவுளுகும் எமக்கும் இடையில் பக்தி என்பது ஒரு உளவியல் கேம். பல இடத்தில் வெற்றி பெறுவோம் பல இடத்தில் தோற்போம். வென்றதை அடிப்படையாக வைத்து இந்த கேமை தொடர்வோம்.

உதாரணமாக கந்த சாஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் மூன்று மிளகும் மூன்று மிடறு தண்ணியும் குடித்து இருக்கும் போது எமது உடலில் ஏற்பட வாய்பிருக்கும் அல்லது ஆரம்ப நிலையில் உள்ள கொடிய பல வியாதிகளை குணமாக்கும் திறன் வாய்ந்தது. பட்டிணி என்பது மிகச் சிறந்த மருத்துவம். 

இந்த ஆராய்ச்சியை அடிப்படையாகவும் இதனோடு தொடர்புடைய பல தரவுகளை இணையத்தில் காண முடியும். 

கடவுள் என்ற ஒரு குறியீட்டை அடிப்படையாக வைத்து விரதம் என்ற போர்வையில் பட்டிணி என்ற கேம் சாத்தியமாயிற்று. இதைபோல் ஆயிரம் நல்ல விசயங்கள் இருக்கின்றது. இருந்தும் இப்போது எதையும் பிரித்தறியா முடியாத நிலைக்குள் வந்துவிட்டோம் என்றே தோன்றுகின்றது ஏனெனில் கேம் மாறிவிட்டது , இந்த திரியின் தலைப்பே "பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்" 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, manimaran said:

மிக அதீத மத நம்பிக்கையுள்ள தென்னாசியா வறுமையுலும் வன்முறையிலும் சீரழிகின்றது. குறைந்தளவு மத நம்பிக்கையுடைய கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பா பொருளாதார மனித நாகரிக வளர்ச்சியில் பன்மடங்கு வளர்ந்து நிற்கின்றது.

மதம் மனித நாகரீக பொருளாதார வளர்ச்சியினை பின்நோக்கி கொண்டு செல்லும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. 

மிக அதீத மத நம்பிக்கையுள்ள, மத்திய கிழக்கு எண்ணை வளத்தால் கொழிக்கிறது.

ஊழல்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, manimaran said:

மிக அதீத மத நம்பிக்கையுள்ள தென்னாசியா வறுமையுலும் வன்முறையிலும் சீரழிகின்றது. குறைந்தளவு மத நம்பிக்கையுடைய கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பா பொருளாதார மனித நாகரிக வளர்ச்சியில் பன்மடங்கு வளர்ந்து நிற்கின்றது. 

கிழக்காசியாவில், மதம் குறைந்தளவு என்றோ முக்கியத்துவம் குறைந்தது என்றோ கூற முடியாது.  ஒரு சில அரசுகளை தவிர, மதம கிழக்காசியவில் ஆகக்குறைந்தது அரச ஆசிர்வாதத்துடடன் தான் இருக்கிறது. வெளிப்படையாக முதன்மைபடுத்தப்படவில்லை என்ற தோற்றமே உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரசை பொறுத்தவரையில் மதம் இல்லாவிட்டாலும், உத்தியோகப்பற்றற்ற முறையில் சீன அரசு கண்டும் காணாதது போல் இருக்கிறது.

ஐரோப்பாவிலும்,  ஏறத்தாழ கிலாகசியவை போலவே மதம் இருக்கிறது, ஒரு சில அரசுகளை தவிர (உ.ம். பிரான்ஸ், secular state). அதே நேரத்தில் ஸ்பெயின், இத்தாலியை விட, கத்தோலிக்க முகத்தை காட்டுவதில் பெருமையும், புளகாங்கிதமும் அடைகிறது.  UK in உத்தியோகபூர்வ மதம் கிறிஸ்டியானிட்டி, முடிக்குரிய அரசவம்சத்தின் மதம் protestant. முடிக்குரிவாறே UK அரசின் தலைவராக இருப்பதால், சட்ட அடிப்படையில்  protestant ஏ உத்தியோகபூர்வ அடிப்படியில் அரச மாதமாக வாய்ப்புள்ளது. Canada, Australi, நியூ ஸிலண்ட் என்பன சுதந்திர தேசங்கள் தவிர, சுதந்திரமானதும், தனித்துவமனுதுமான அரசுகள் அல்ல என்பதால், அவற்றில் உத்தியோகபூர்வ மதம் இல்லாவிட்டாலும், UK முடிக்குரியவரே அவற்றின் அரச தலைவராக இருப்பதா, சட்ட அடிப்படையில்  protestant ஏ உத்தியோகபூர்வ அடிப்படியில் அரச மாதமாக வாய்ப்புள்ளது.

US, ஓர் மதசார்பற்ற அரசு தான். ஆனால்,  அதன் தேசம் மிகவும் பாரம்பரியமான மத (கிறிஸ்டியானிட்டி) நம்பிக்கை உடையது.

இந்த UK , கனடா, ஆஸ்திரேலியா, நியூ ஸிலண்ட், US  என்பன உண்மையில் ஏனைய தேசங்களையும், இனங்களையும் தம்முள் சீரழிக்கும் அரசுகளாவே இருந்தன. டெமோகிராசி, லிபேரலிசம், நியோ லிபெரல்  எனும் முகப்பை தற்போது போர்த்தியுள்ளன.         

மத்திய கிழக்கை பற்றி சொல்லத்  தேவையில்லை.

மத்திய ஆசியாவிலும், மதம் (இஸ்லாம்) வெளிப்படையாக அரசுகளினால் ஆகக்குறைந்தது ஆசிர்வதிக்கப்படுகிறது.     

தென் அமெரிக்காவில் உள்ள அரசுக்கள், அதனை உருவாக்கிய அரசுகளாக பொந்துகள், ஸ்பெயின் ஆகியவற்றின் மதம் சார்பான கோரா முகத்தை இன்னும் காட்டியபடியே இருக்கின்றன.

ஏறத்தாழ ஒரே விதமான (homogeneous) சனத்தொகையால், அந்தந்த அரசுக்களால் ஏற்றப்படுத்தக்கூடியதாக இருந்த அரசியல் உறுதிப்பாடே ,நீங்கள் சொல்லிய பொருளாதார மற்றும் நாகரீக வளர்ச்சி என்தத்திற்கு மிக முக்கிய காரணமா அமைந்தது.

ஆனால், அதற்கு  முதல் இவர்கள் தம்மிடையே வரலாறு காணாத கொடூரமாக கொத்தி, வெட்டி, உரித்து மோதிக்கொண்டார்கள்.  

Posted
5 hours ago, manimaran said:

மிக அதீத மத நம்பிக்கையுள்ள தென்னாசியா வறுமையுலும் வன்முறையிலும் சீரழிகின்றது. குறைந்தளவு மத நம்பிக்கையுடைய கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பா பொருளாதார மனித நாகரிக வளர்ச்சியில் பன்மடங்கு வளர்ந்து நிற்கின்றது.

மதம் மனித நாகரீக பொருளாதார வளர்ச்சியினை பின்நோக்கி கொண்டு செல்லும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. 

இது அறிவியல்  வளர்ச்சி.

2 hours ago, Nathamuni said:

மிக அதீத மத நம்பிக்கையுள்ள, மத்திய கிழக்கு எண்ணை வளத்தால் கொழிக்கிறது.

ஊழல்!!

ஐரோப்பிய.நாடுளே தமது  வாகனங்களுக்கு   தேவையான. எண்ணையை.  மத்தியகிழக்கில். கண்டுபிடித்து இன்றுவரை  அமெரிக்க ஐரோப்பிய கட்டுப்பாட்டில் வைத்து இருக்கின்றன.
இதில் இருந்து விடுபட. முயலும். ஈரான்,. ஈராக்.,. யெமன். போன்ற. நாடுகளின்.நிலைக்கு. அல்லாவா காரணம்?  

Posted

மதம் என்ற சொல்லிற்கு தமிழில் தான் தெளிவான விளக்கம் உள்ளது என்று எங்கோ கேட்டது நினைவில் உள்ளது.

மதம்- வெறி (மதம் தூய தமிழ் சொல்லா என்பது விவாதத்திற்குரியது)

மதம் பிடித்த நாடுகளில் பெரும்பாலானவை ஊழல் வறுமை அடக்குமுறை வன்முறைகளில் முன்னனியில் நிற்கின்றன. 

மதங்களிலிருந்து மெது மெதுவாக விடுபட்ட, விடுபடும் நாடுகள் மக்கள் வாழ்வதற்கு உகந்த சூழலினை ஏற்படுத்துகின்றன.

இன்று பிறந்த நாள் காணும் நம்மில் பெரும்பாலோனோர் பெரும் மதிப்பு வைத்திருக்கும் பெரியவரும் மதமற்ற ஒரு தேசத்தை கட்டியெழுப்பவே முயன்றார். 

 

https://www.utne.com/mind-and-body/the-worlds-happiest-countries-are-the-least-religious

Posted
9 hours ago, Nathamuni said:

நான் சொன்னது சைவ மத நம்பிக்கை. 

தமிழ் முருகனை, பிள்ளையார் தம்பியாக்கி, சிவனார் இரண்டாவது மகனாக, நம்ப வைத்த, இலங்கைத் தமிழ் அரசன், சைவன் ராவணனை... அரக்கனாக சித்தரித்து... எம்மையே நம்ப வைத்த, ஆரிய பிராமணர்கள்.... சொன்ன பல, இந்து மத  விஷயங்களையே நீங்கள் சொல்லுகிறீர்கள்...

சைவ மதம் அறிவு பூர்வமானது... அபத்தங்கள் இல்லை... சித்தர்களின் பங்களிப்பு நிறைந்தது.

 

 விவாத‍த்திற்காக என்ன தான் கூறினாலும் நீங்கள் கூறிய சைவமதம் இன்று நடைமுறையில் ஆரிய பிராமண ஆதிக்கத்துகுள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  அதை விட பல மூட நம்மிக்கைகளுக்கு இன்று இன்று விஞ்ஞான விளக்கம் வேறு கொடுக்கப்படுகிறது. எமது முன்னோர்களின் வாழ்க்கை முறையில் பல அறிவு சார் நடைமுறைகள் இருந்த‍து என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் மத‍த்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.  அது எமது முன்னோர்களின் அறிவியல் வளர்ச்சி என்று பெருமைபடலாமே தவிர அதை  மத‍த்துடன் தொடர்பு படுத்தி மதங்கள் கூறும் முட்டாள்தனமான வடிகட்டிய மூடப்பழக்கங்களுக்கு விஞ்ஞான விளக்கம் கொடுப்பது அபத்தமானது.  இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு எந்த வித‍த்திலும் பொருத்தம் இல்லாத‍து.  இதில் முரண்பாடு என்ன வென்றால் அந்த மூடப்பழக்களை கேள்வி கேட்காமல் ஏற்று கொள்ளும் போது  எந்த விஞ்ஞான விளக்க‍மும் வரவில்லை. இப்போது அது தொடர்பாக அறிவியல் வளர்ச்சி அடைந்த சமுதாயம் கேள்வி கேட்கும் போது தான் அதை நியாயப்படுத்த விஞ்ஞான விளக்கம் கொடுக்கப்படுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.