Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல்

வைட்டமின் 'சி’ நிறைந்த ஹெல்தியானது இந்த நெல்லிக்காய் பொரியல். இதை சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

வைட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல்

 

தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 10

இட்லி மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் - தேவையான அளவு

தாளிக்க

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.
 
நெல்லிக்காய்


செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.
 

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து... வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆந்திர ஸ்ரைல் பழ கலவை.👌

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படிப்பட்ட கிராமங்களால் தான் நகரங்கள் இயங்குகின்றது. அக்காவை சுத்தி எத்தனை கோழிகள், வீட்டிற்குள் ஆட்டுகுட்டி; ஆகா என்ன ஒரு வாழ்கை 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதுரை கறி தோசை கடை .👌

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரச குல்லா வெதுப்பக செய்முறை..👌

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

rose-milk-100.jpg 

அடிக்குற வெயிலுக்கு "ரோஸ் மில்க்" தயார் செய்ய பயன்படும் றோஸ் சிரப்..👌

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருக்கை மீன் எப்படி சமைப்பது என்று யாராவது சொல்வீர்களா?...நன்றி  
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரதி said:

திருக்கை மீன் எப்படி சமைப்பது என்று யாராவது சொல்வீர்களா?...நன்றி  
 

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, ரதி said:

திருக்கை மீன் எப்படி சமைப்பது என்று யாராவது சொல்வீர்களா?...நன்றி  

திருக்கை மீன் சமைப்பது, நீங்கள் குழம்பாகத்தான் மீன் சமைக்க வேண்டும் என்றால் எத்தனையோ youtube  இல்  வீடியோ இருக்கின்றன.

அநேகமான youtube குழம்பு சமையல் முறைகள் தோலுடன் தான். 

தோலுடன் சுறா, திருக்கை குழம்பாக சமைப்பது, எவ்வளவு மசாலாவுடன், பழப்புளியுடன் சமைத்தாலும், என் பொரித்தாலும் ஓர் நெடி இருந்து கொண்டே இருக்கும்.

காரணம், சுறா, திருக்கை தோல்கள் வெப்பத்தில் யூரியா தன்மை உள்ள திரவத்தை சுரப்பது (உண்மையில் அந்த திரவம் மனித  சிறுநீர் கழிவை ஒத்தது).       

அதனாலேயே அந்த நெடி.

திருக்கையை (sting ray) முழுமையாக வாங்கி, தோலை நீக்க வேண்டும். தோலை நீக்கிய திருக்கை சிறகுகளை வாஙகுங்கள்.  

திருக்கையை திருக்கை தன்மையுடன் நீங்கள் ருசி பார்க்க விரும்பினால்,  கீழ் சொல்வது oven முறை ஆகும்.

முழுமையாக இருக்கும் தோல் நீக்கப்பட்ட திருக்கை சிறகிற்கு கறித்தூள், மிளகுத்தூள், சிறிதளவு (உறைப்பு அளவை பொறுத்து) தனித்தூள், மல்லித்தூள், மஞ்சள், hot and smoked paprika தூள், ginger and garlic paste,  சிறகின் இருபக்கமும் முளிமையாக  மிகவும் மெல்லிய படலமாக பிரட்டப்படக்கூடிய அளவில்  செறிவான பழப்புளி கூழ், பார்வைக்கு ஏற்ற அளவு சிவப்பு அல்லது பச்சை மிளகாய் பொடியாக, ஏற்ற அளவு lemon grass (இல்லாவிட்டால் பரவாயில்லை), ஏற்ற அளவு உப்பு  சேர்த்து 1-2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  
திருக்கை இறகு மற்றும் தசை ஒளிபுகும் தன்மை இழக்கும் வரைக்கும் oven  செய்யவும், இடைக்கிடை திருக்கை மீன் இந்த மசாலாக்களுடன் சேர்ந்து வெளிவிடும் சாறினால் baste பண்ணவும்.
 
வேண்டுமாயின், இறக்கும் தறுவாயில், வெகு சிறிதளவு எண்ணையில்  வறுத்த மிகச் சிறிதளவு பெரும்சீரகம், நற்சீரகத்தை தூவவும்.

சூடாக பரிமாறவும் சமைக்கும்போது உருவாகிய  திருக்கை மீன் இந்த மசாலாக்களுடன் சேர்ந்து வெளிவிடும் சாறுடன்.

திருக்கையின் சிறகு தவிர்ந்த நடுப் பகுதிக்கும் இந்த முறை பொருந்தும், ஆனால் அதன பெரும் பகுதி முள்ளாகும்.

ஆனால், அளவான திருக்கையை முழுமையாக இருக்கமாறு தோல் நீக்கி இந்த முறையில் சமைக்கலாம்.

Edited by Kadancha
amend
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முறுக்கு உரல் இல்லாமல் ஓர் அசத்தலான முறுக்கு......இந்த முறையில் நீங்கள் யாராவது முறுக்கு பிழிந்திருக்கிறீர்களா.......டெல்  மீ .....!   👍

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கை முறுக்கு - தமிழ் நாட்டில் இப்படி செய்கின்றவர்கள், திறமை வேணும் இப்படி செய்ய

On 8/6/2020 at 03:08, suvy said:

முறுக்கு உரல் இல்லாமல் ஓர் அசத்தலான முறுக்கு......இந்த முறையில் நீங்கள் யாராவது முறுக்கு பிழிந்திருக்கிறீர்களா.......டெல்  மீ .....!   👍

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.