Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/6/2020 at 12:08, suvy said:

முறுக்கு உரல் இல்லாமல் ஓர் அசத்தலான முறுக்கு......இந்த முறையில் நீங்கள் யாராவது முறுக்கு பிழிந்திருக்கிறீர்களா.......டெல்  மீ .....!   👍

அப்பாடியோ இப்படியும் முறுக்கா.
முடியாதுப்பா விரலுகள் சிக்குப்பட்டுப்போம்.
இணைப்புக்கு நன்றி சுவி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

tutti-frutti-cake.jpg

வீணே தூக்கி போடும் தர்பூஸ் பழ தோலில் யுற்றி புரூற்றி..👌

டிஸ்கி:

பப்பாளி பழத்தோல் இன்னும் சுவை.👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டிலேயே செய்யலாம் மட்கா மலாய் குல்ஃபி

தேவையான பொருட்கள்

பால் -     2 கப்

கிரீம் -     1 கப்
கண்டென்ஸ்டு மில்க் -     1 கப்
ஏலக்காய் -     1/2 தேக்கரண்டி
ட்ரை ஃப்ரூட்ஸ் -     1/4 கப்

குங்குமப்பூ -     10-15
 
மட்கா மலாய் குல்ஃபி

செய்முறை

பாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

அத்துடன் கிரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

அடுத்து அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்று கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

கால் பங்காக சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.

சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
 
பின் அதன் மேல் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/6/2020 at 10:34, suvy said:

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

சுவி,
நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தபின் ஆட்டிறைச்சி சமையல் முறை மாறிவிட்டது. ஊரில் முன்பு இப்படி நாங்கள் எல்லாம் சமைத்து சாப்பிட்டதுதான். நீண்ட காலத்துக்கு பிறகு இன்று வித்தியாசமாக இப்பிடி சமைத்து பார்த்தேன், உண்மையிலேயே நன்றாக இருந்தது, பழைய நினைவுகளும் அத்தோடு வந்தது. காணொளிக்கு நன்றி 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 9/6/2020 at 18:34, suvy said:

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

இவரது சமையல் சட்டியை பாருங்கள். இது சீனச்சட்டி என்று சொல்லப்படும்.

அம்மா சொல்லுவா. மண்சட்டிக்கு அடுத்ததாக, கறி இந்த சட்டியில் தான் சுவையாக வரும் என்று.

இது இலங்கையில் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும்.

'இயத்து' என்று ஊரில் சொல்வார்கள். அடுப்பில இயத்தினை எடுத்து வை, என்பார்கள்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் சொல்லோ தெரியவில்லை.

நம்ம, புரட்சி, என்னப்பா, இந்த ஊர்ல, தேங்காய்ப்பால், அதுவும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பால் என்று ரொம்ப அலம்பறை பண்ணுதே என்று தலையினை சொறிந்து கொள்வார்.. 😄

Edited by Nathamuni
  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Today's recipe is Homemade Choco bar Ice cream - eggless, without cream and without ice cream maker. chocolate icecream recipe by tiffin box. Ingredients: Powdered milk - 1 cup Water - 3/4 cup Condensed milk - 1/3 cup Cornflower - 2 tablespoons Water - 2-3 tblsp vanilla essence - 1/2 tsp Milk chocolate - 200 g Roasted peanut - 1 tblsp

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/6/2020 at 19:34, suvy said:

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

சுவி, அந்த ஆட்டிறைச்சி... அடுப்பில் வேகும் போது, அந்த அழகிய சிவப்பு நிறம் வரவில்லை.
கடைசி நிமிடத்தில்... நிறம் மாறிய, அதிசயம்  வியக்க வைத்தது.  😍

8 hours ago, நீர்வேலியான் said:

சுவி,
நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தபின் ஆட்டிறைச்சி சமையல் முறை மாறிவிட்டது. ஊரில் முன்பு இப்படி நாங்கள் எல்லாம் சமைத்து சாப்பிட்டதுதான். நீண்ட காலத்துக்கு பிறகு இன்று வித்தியாசமாக இப்பிடி சமைத்து பார்த்தேன், உண்மையிலேயே நன்றாக இருந்தது, பழைய நினைவுகளும் அத்தோடு வந்தது. காணொளிக்கு நன்றி 

Kokosnussmilch - 4311501387832 | CODECHECK.INFO

நீர்வேலியான்.... இந்த முறையில் செய்யும் ஆட்டு இறைச்சி  கறியை,
உடனேயே... செய்து பார்த்து, நன்றாக வந்தது என்று சொல்லிய பின்பு....
அடுத்த முறை... இதே முறையில் செய்து பார்க்க வேண்டும். 👍

நீர்வேலியான்... நீங்கள், தேங்காயை திருவி, பிழிந்து... வந்த பாலை  பாவித்தீர்களா?
அல்லது... கடையில் "ரின்களில்" விற்கும் தேங்காய்ப் பாலை  பாவித்தீர்களா?
என அறியத் தாருங்கள்.  :)

6 hours ago, Nathamuni said:

இவரது சமையல் சட்டியை பாருங்கள். இது சீனச்சட்டி என்று சொல்லப்படும்.

அம்மா சொல்லுவா. மண்சட்டிக்கு அடுத்ததாக, கறி இந்த சட்டியில் தான் சுவையாக வரும் என்று.

இது இலங்கையில் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும்.

'இயத்து' என்று ஊரில் சொல்வார்கள். அடுப்பில இயத்தினை எடுத்து வை, என்பார்கள்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் சொல்லோ தெரியவில்லை.

நம்ம, புரட்சி, என்னப்பா, இந்த ஊர்ல, தேங்காய்ப்பால், அதுவும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பால் என்று ரொம்ப அலம்பறை பண்ணுதே என்று தலையினை சொறிந்து கொள்வார்.. 😄

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட ...

நாதமுனி,  எங்கள் வீட்டிலும்....  "இயத்து" என்ற சொல்லை பாவிப்பார்கள்.
சீனச்  சட்டியில்...  பலவகை இருக்கும்.

எண்ணை விட்டு பொரிக்க... சிறிய சட்டியும்,
மா வறுக்க... அதே அமைப்பில்... பெரிய தாச்சியும்,
அரிசி களைய... (அரிசியில் இருந்து, கல்லை பிரித்து எடுக்க) அரிக்கன் சட்டி என்று  பலவகை இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

சுவி, அந்த ஆட்டிறைச்சி... அடுப்பில் வேகும் போது, அந்த அழகிய சிவப்பு நிறம் வரவில்லை.
கடைசி நிமிடத்தில்... நிறம் மாறிய, அதிசயம்  வியக்க வைத்தது.  😍

Kokosnussmilch - 4311501387832 | CODECHECK.INFO

நீர்வேலியான்.... இந்த முறையில் செய்யும் ஆட்டு இறைச்சி  கறியை,
உடனேயே... செய்து பார்த்து, நன்றாக வந்தது என்று சொல்லிய பின்பு....
அடுத்த முறை... இதே முறையில் செய்து பார்க்க வேண்டும். 👍

நீர்வேலியான்... நீங்கள், தேங்காயை திருவி, பிழிந்து... வந்த பாலை  பாவித்தீர்களா?
அல்லது... கடையில் "ரின்களில்" விற்கும் தேங்காய்ப் பாலை  பாவித்தீர்களா?
என அறியத் தாருங்கள்.  :)

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட ...

நாதமுனி,  எங்கள் வீட்டிலும்....  "இயத்து" என்ற சொல்லை பாவிப்பார்கள்.
சீனச்  சட்டியில்...  பலவகை இருக்கும்.

எண்ணை விட்டு பொரிக்க... சிறிய சட்டியும்,
மா வறுக்க... அதே அமைப்பில்... பெரிய தாச்சியும்,
அரிசி களைய... (அரிசியில் இருந்து, கல்லை பிரித்து எடுக்க) அரிக்கன் சட்டி என்று  பலவகை இருக்கும். :)

சிறி,
வீட்டில் தேங்காய் எப்பவுமே துருவி பிரிட்ஜ்ல் இருக்கும், ஆனாலும் அதை பால் புழிந்து வேஸ்ட் ஆக்க விரும்பவில்லை, எனவே டின் இல் உள்ள தேங்காய் பால் தான் பாவித்தேன், இரண்டாம் பாலுக்கு சிறிது தண்ணீர் அதிகமாகவும், முதலாம் பாலுக்கு தண்ணீர் குறைவாகவும் சேர்த்தேன்.

நீங்கள் படத்தில் போட்ட நீங்கள் சொல்வது போல் அரிசி களைய பயன்படுத்துவது என்று நினைக்கிறன், இவர் சமைத்த பாத்திரம் இரும்புச்சட்டி போல் இருந்தது, கைபிடிதான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நீர்வேலியான் said:

நீர்வேலியான்...  "டின்னில்"  உள்ள தேங்காய்ப் பால் விடுவது என்றால், 
சமையல் நேரத்தில்... பெரும் பகுதி நேரம், சேமிக்க முடியும். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூரி போல குண்டு குண்டு தேங்காய் வடை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

நீர்வேலியான்...  "டின்னில்"  உள்ள தேங்காய்ப் பால் விடுவது என்றால், 
சமையல் நேரத்தில்... பெரும் பகுதி நேரம், சேமிக்க முடியும். :)

டின்பாலிலும் பார்க்க, பவுடர் மில்க் நல்லது என்கிறா, கூட வேலை செய்யும் சிங்கள அம்மணி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Nathamuni said:

டின்பாலிலும் பார்க்க, பவுடர் மில்க் நல்லது என்கிறா, கூட வேலை செய்யும் சிங்கள அம்மணி.

Online NESPRAY EVERYDAY MILK POW - 1 KG Online price in Sri Lanka ...

"நெஸ்பிரே" பவுடர் போட்டால்,  கறி இனிக்குமே.... 😮
எங்கடை ஆட்டிறைச்சி  கறிக்கு, சிங்கள அம்மணி.. ஆப்படிக்கிற பிளான் போலை இருக்கு. 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

Online NESPRAY EVERYDAY MILK POW - 1 KG Online price in Sri Lanka ...

"நெஸ்பிரே" பவுடர் போட்டால்,  கறி இனிக்குமே.... 😮
எங்கடை ஆட்டிறைச்சி  கறிக்கு, சிங்கள அம்மணி.. ஆப்படிக்கிற பிளான் போலை இருக்கு. 😄

நீங்கள் போட்டது, முழு ஆடை பசுப்பால் மா.

நான் சொன்னது இது...

Jay Brand Coconut Milk Powder 300g online shopping in the UK ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளநீர்ல என்னடா செய்யுரீங்க.. 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு ஏதேதோ செய்கிறார்கள் தோழர்......!   🤔

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.