Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

தற்போது விஜே ரிவியில் இடம்பெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் புலம் பெயர்ந்த மக்கள் அதிகமாகப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய தலைமுறையினர் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதேயாகும். அந்த வகையில் எமக்கு நன்கு அறிமுகமான சின்மயி சிவகுமாரும் இந்த நிகழ்வில் இம்முறை கலந்து கொள்கின்றார்.

49285338_2617592474935933_69345063891170 

ஏற்கனவே ஜெசிக்கா யூட் சுப்பர் சிங்கர் மூலம் பலருக்கும் அறிமுகமாகி இருந்தார். அப்போது அவரைப்பற்றி உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் நான் எழுதியிருந்தேன். அந்த வரிசையில் மிகத் திறமையாகப் பாடக்கூடிய சின்மயி கனடாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் தனது இசைத் திறமையை பல தடவைகள் வெளிக்காட்டியிருந்தார். சின்மயியின் பெற்றோர்களான திரு. திருமதி சிவகுமார் அவர்கள் தங்கள் மகளின் ஆர்வத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். யாராக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும் போதுதான் பலராலும் பாராட்டப் படுவார்கள். எனவே சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தி உங்கள் பிள்ளைகளின் திறமைகளையும் அது எந்த துறையாக இருந்தாலும் அதை வெளிக் கொண்டு வர பெற்றோராகிய நீங்கள்தான் முன்வந்து உதவவேண்டும்.

சின்ன வயதிலே மேடையில் பாடும் போதே சின்மயி போன்ற சிலரின் திறமையை என்னால் அடையாளம் காணமுடிந்தது. அவர்களிடம் நல்ல குரல் வளமும் திறமையும் இருப்பதை அவ்வப்போது பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி அடுத்த கட்டத்திற்கு அவர்களைத் தயார்படுத்துங்கள் என்று முக்கியமாக சின்மாயியின் பெற்றோருக்கும், அபிநயாவின் பெற்றோருக்கும் ஆலோசனை கூறியிருந்தேன். போட்டி என்று வந்தால் திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சண்சுப்பசிங்கர் சுபவீனும், அவரது சகோதரி அபிநயாவும் என்னிடம் தமிழ் மொழி கற்றவர்கள்.


மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2014 ஆம் ஆண்டு நடத்திய இசைப் போட்டியின் போது சின்மயின் அப்பா சிவகுமாரிடம் இந்தப் போட்டி பற்றி கூறி, சின்மாயியைப் பங்கு பற்றும்படி ஊக்கப்படுத்த முடிந்தது. எந்தப் போட்டியிலும் திறமைசாலிகளுக்கு வெற்றி தோல்விகள் முக்கியமில்லை, உங்களால் அந்த அறைகூவலை துணிவோடு ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்பதுதான் முக்கியமானது. தோல்விகள் தான் வெற்றியின் முதற்படி என்று சொல்வார்கள், பல போட்டிகளில் பங்கு பற்றி அதை எல்லாம் கடந்து வந்த அனுபவத்தால்தான் இன்று சின்மாயியால் சுப்பர் சிங்கர் மேடையில் நிற்க முடிகின்றது.

எழுத்தாளர் இணையத்தின் முத்தமிழ் விழாவின் போது எங்கள் அழைப்பை ஏற்று தன்னார்வத் தொண்டராக வந்து தமிழ் வாழ்த்தை அழகாக இசைத்திருந்தார். ரிஇரி தொலைக்காட்சியில் நடைபெற்ற தமிழினி போட்டியின் போது நடுவராகச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததால் சின்மையின் திறமையைப் பல சந்தர்ப்பங்களில் அறிந்து கொள்ள முடிந்தது. 2014 ஆம் ஆண்டு அந்த நிகழ்ச்சியில் அவர் ‘அம்மா’ என்ற தலைப்பில் அழகான கவிதை ஒன்றைப் பாடி அவையில் இருந்த எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தார். அதேபோல பாரதி ஆட்ஸ் போட்டி நிகழ்வில் ‘பாடவா பாடவா’ என்ற பாடலைப்பாடி எல்லோர் கவனத்தையும் திருப்பி இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உதயன் விழாவில் சின்மாயி பாடியிருந்தார். அப்போது பிரபலமாக இருந்த ‘காற்றின் மொழி’ என்ற பாட்டைத் தெரிவு செய்து பாடியதால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார். ரிவிஐ தொலைக்காட்சி நடத்திய சுப்பர் ஸ்டார் யூனியர் பிரிவில் பங்கு பற்றி ‘தத்தித்தோம்’ என்ற பாடல் மூலம் அடுத்த கட்டத்திற்குத் தெரிவானார். ஐரிஆர் பெட்டகம் நிகழ்வில் நிகழ்ச்சியை நடத்திய இளங்கோ அவர்கள் மிகச் சிறப்பாக சின்மாயியை அறிமுகம் செய்திருந்தார். அவர் குறிப்பிட்டது போல ‘சின்மாயியின் அந்த சின்னச்சிரிப்பு’ எல்லோரையும் கட்டாயம் கவர்ந்திருக்கும். எனக்குப் பிடித்த பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலை நான் அந்த நிகழ்வின்போது ரசித்துக் கேட்டேன். ‘நீ ஒரு காதல் சங்கீதம்,’ ‘தென்கிழக்குச் சீமையிலே,’ ‘சின்னத்தாய் அவள் தந்த ராசாவே’ போன்ற பாடலல்களையும் அந்த நிகழ்வில் அழகாகப் பாடியிருந்தார்.48430352_2617594421602405_75618407455737

‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ என்ற பாடல் மூலம் மீண்டும் சுப்பர் சிங்கர் நேயர்களின் மனதை சின்மாயி தொட்டிருக்கின்றார். எந்த ஒரு தயக்கமும் இன்றித் தமிழில் பேசும், பாடும் இவர்களைப் போன்ற எங்கள் அடுத்த தலைமுறையினரின் திறமைகளை நாங்கள் பாராட்ட வேண்டும். மேலை நாடான கனடாவில் இருந்து தமிழ் குரல்கள் ஒலிப்பதே தமிழ் நாட்டுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. பிரபல எழுத்தாளர் ஒருவருடன் உரையாடும் போது, ‘தமிழ்நாட்டுப் பாடகிகள் தமிழில் பாடுவது ஆச்சரியமல்ல, கனடாவில் பிறந்து வளர்ந்த சிறுமி ஒருத்தி தமிழில் அழகாகப் பாடுவதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது’ என்றார். எம்மவர்களைப் பாராட்டினால் மட்டும் போதாது, அவர்கள் வெற்றி பெறுவதற்கு எம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். அதற்காக நாம் வாக்களிக்க வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதை நீங்கள் அறிவீர்கள், கனடாவின் பக்கம் சர்வதேசத்துப் பார்வையைத் திருப்புவதற்கு, குறிப்பாகத் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. முடியாதது என்று எதுவுமே இல்லை, நீங்கள் மனது வைத்தால் முடியும், எனவே சின்மாயியின் வெற்றிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

பாடல்களைவிட அவற்றை முந்திக் கொண்டு அரவது உதட்டில் மெல்ல விரியும் புன்சிரிப்பு, அவரது பணிவு எல்லோரையும் முதலில் கவர்ந்து விடும். மகாஜனக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் கையால் பரிசு பெறும் பாக்கியம் சின்மயிக்குக் கிடைத்திருந்தது. வீடு திரும்பும் போது பொதுவாக அவருடன் நிகழ்ச்சி பற்றி உரையாடுவேன், ‘மட்டுவில் ஐயாவுடைய பேர்த்தி, இந்தப் பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று அப்பொழுதே சின்மயியைப் பாராட்டியிருந்தார். கனடா வாழ் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் சின்மாயி போட்டியில் வெற்றி பெற்றுப் பரிசுகளும், பாராட்டுக்களும் பெறவேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்திப் பாராட்டுவோம். இன்னும் பலர் இங்கே இலைமறைகாயாக இருக்கிறார்கள், அவர்களையும் எங்களால் முடிந்தளவு ஆதரிப்போம்.

குரு அரவிந்தன்.

 

http://akkinikkunchu.com/?p=70652

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, கிருபன் said:

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

தற்போது விஜே ரிவியில் இடம்பெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் புலம் பெயர்ந்த மக்கள் அதிகமாகப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய தலைமுறையினர் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதேயாகும். அந்த வகையில் எமக்கு நன்கு அறிமுகமான சின்மயி சிவகுமாரும் இந்த நிகழ்வில் இம்முறை கலந்து கொள்கின்றார்.

சத்தியமங்கலம் பிரச்சனை வியாபார விஜய் ரிவிக்காரருக்கும்.....
தேன் சொட்ட புகழ்ந்து தள்ளிய கட்டுரையாளருக்கும் தெரியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சத்தியமங்கலம் பிரச்சனை வியாபார விஜய் ரிவிக்காரருக்கும்.....
தேன் சொட்ட புகழ்ந்து தள்ளிய கட்டுரையாளருக்கும் தெரியுமா? 

கனடாவைப் பொறுத்தவரை .....யாரை முன்னிறுத்தி அழைப்புக்கொடுத்தால் ..அவர்  ஆகா ..ஓகோ என்று புழுகிவினம்...அப்படி இல்லாவிட்டல் அந்த நிகழ்வுக்கு ..எதோ ஒரு சாயம் பூசிவிடுவினம்.....இது பாடகர்களுக்கு நன்கு தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வேறு எந்த டிவி கம்பெனியும் சந்தா பணம் மூலம் நிகழ்ச்சி நடாத்த முடியாத நிலையில், இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றை வைத்தே, விஜய் டிவி சந்தா  மூலம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பணம் பார்க்கிறது. சன் டிவி கூட சந்தாவில் பெரிதாக இல்லை.

லைக்கா, ஐபிசி டீவிக்கள் 30 நிமிட விளம்பரத்துக்கு கேட்பதிலும் பார்க்க, 350% அதிகமாக இவர்கள் விளம்பரத்துக்கு வாங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஜய் டீவிக்காரனுக்கு தனது டீவியை பிரபலப்படுத்த ஓர் ஈழத்து மன்னிக்கவும் ஓர் புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஓர் தமிழன் தேவைப்படுகிறான் 

வியாபார யுத்திதான்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.