Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறைவனின் கட்டளை

Featured Replies

50860044-113565499713053-3855733527647617024-n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை யார் சொன்னது?

  • தொடங்கியவர்

அப்ப சொர்க்கத்தில் ரம்பை, ஊர்வசி, மேனகை என்று அழகிகள் இருப்பாங்க என்பது சரிதான் போல! ஹிஹிஹி 😀🤣🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
11 hours ago, குமாரசாமி said:

வாயில் வந்ததை எல்லாம்  உளறி அதை நம்ப சொல்வதே  எல்லா மத அயோக்கியர்களின் வேலை. அதற்காக மனிதன் தனது அறிவினால் கண்டுபிடித்த அறிவியலையும் வெட்கமில்லாமல் உபயோகிக்க தயங்கமாட்டான்  மதவாதி என்ற அயோக்கிய பயல். இந்தகாணொளியில் வருபவனும் அப்படிப்பட்ட ஒருவன் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

வாயில் வந்ததை எல்லாம்  உளறி அதை நம்ப சொல்வதே  எல்லா மத அயோக்கியர்களின் வேலை. அதற்காக மனிதன் தனது அறிவினால் கண்டுபிடித்த அறிவியலையும் வெட்கமில்லாமல் உபயோகிக்க தயங்கமாட்டான்  மதவாதி என்ற அயோக்கிய பயல். இந்தகாணொளியில் வருபவனும் அப்படிப்பட்ட ஒருவன் தான். 

மனிதன் அறிவினால் என்ன கண்டுபிடித்தான் என்பதை சற்று பட்டியலிடவும்...

பிறகு அது இயல்பாக அமைந்தனவா கண்டுபிடித்தனவா என்பதை விவாதிக்கலாம்...

Edited by மியாவ்

  • தொடங்கியவர்
3 minutes ago, மியாவ் said:

மனிதன் அறிவினால் என்ன கண்டுபிடித்தான் என்பதை சற்று பட்டியலிடவும்...

பிறகு அது இயல்பாக அமைந்தனவா கண்டுபிடித்தனவா என்பதை விவாதிக்கலாம்...

மதவாதிகளும் மதத்தை பரப்புபவர்களும் எதை கண்டுபிடித்தார்கள் என்பதை பட்டியலிடவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

மதவாதிகளும் மதத்தை பரப்புபவர்களும் தை கண்டுபிடித்தார்கள் என்பதை பட்டியலிடவும். 

மதத்தை கண்டு பிடித்தார்கள்...

எனது கேள்விக்கு பதில் வரவில்லை...

  • தொடங்கியவர்
33 minutes ago, மியாவ் said:

மதத்தை கண்டு பிடித்தார்கள்...

எனது கேள்விக்கு பதில் வரவில்லை...

இன்றைய அறிவியல் வளர்சசி என்பது மதவாதிகளின் பல கொடுமையான தடைகளை மீறியே உருவானது என்பது வரலாறு தானாக எந்த வளர்சசயும் வரவில்லை. மனிதனின் சிந்திக்கும் ஆற்றலே இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு காரணம். நீங்களும் நானும் ஒரு நொடியில் விவாதுப்பது மனித கண்டுபிடிப்புதான். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

இன்றைய அறிவியல் வளர்சசி என்பது மதவாதிகளின் பல கொடுமையான தடைகளை மீறியே உருவானது என்பது வரலாறு தானாக எந்த வளர்சசயும் வரவில்லை. மனிதனின் சிந்திக்கும் ஆற்றலே இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு காரணம். 

மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் இயல்பாய் அமைந்ததில்லையா...

இந்த கருத்தின் மூலம் எப்படி ஒரு கூட்டம் மதத்தை பிடித்து தொங்குகிறதோ, அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் இன்னொரு கூட்டம் அறிவியலை பிடித்து தொங்குவதாக புலப் படுகிறது...

  • தொடங்கியவர்
13 minutes ago, மியாவ் said:

மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் இயல்பாய் அமைந்ததில்லையா...

இந்த கருத்தின் மூலம் எப்படி ஒரு கூட்டம் மதத்தை பிடித்து தொங்குகிறதோ, அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் இன்னொரு கூட்டம் அறிவியலை பிடித்து தொங்குவதாக புலப் படுகிறது...

அறிவியல் என்பது மதத்தை போல சிந்திக்கும் ஆற்றலை இழந்து ஒரு விடயத்தில் தொங்கிக் கொண்டு நிற்பதல்ல. மேலும் மேலும் ஆய்வுகள் செய்து புதிய விடயங்களை கண்டு பிடிப்பது. தன்னை திருத்துக்கொள்ள அறிவியல் என்றுமே தயங்கியதில்லை. என்றுமே ஒரு இடத்தில் தங்கி நிற்பதும. அல்ல. இன்றைய ஆராய்சியை நாளைய ஆரய்ச்சி பொய்யாக்கினால் அறிவியல் எந்த தயக்கமும. இன்றி அதை ஏற்றுக்கொள்ளும்.

அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விழுத்த அதில் இருந்து உருவானதே காவிரி நதி என்று ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை முட்டாளாக்கவில்லை அறிவியல்.  ஆராய்ந்து  முடிவை சொல்கிறது அது தவறென்றால் உடனே அதை ஏற்று தன்னை திருத்திக்கொள்கிறது. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

மதம் வேறு ஆன்மீகம் வேறு...

மதங்களுக்கு சடங்குகள் உண்டு, ஆன்மீகத்திற்க்கு அது கிடையாது...

ஆன்மீகம் எந்த தடையுமின்றி தன் சிந்தனைகளை விசாலப்படுத்தி கண்டுணர்ந்ததை எடுத்துரைக்கும்... 

அறிவியலும் இயல்பாய் அமைந்துள்ளதை எடுத்துரைக்கிறது... 

அறிந்தது கைய்யளவு அறியாதது உலகளவு என்பது அறிவியலுக்கும் பொருந்தும்...

அதாவது இப்படியான பஞ்சர் டியூப் போன்று காட்ச்சி அளிக்கும் அறிவியலைக் கொண்டு எடுத்தோம் தொடுத்தோம் என்று பேசுவது முறையல்ல...

எப்படி மதங்களால் இந்த உலகம் போர்க்களமாக காட்ச்சி அளிக்கிறதோ, அதே அளவு பங்கு அறிவியலுக்கும் உண்டு...

  • தொடங்கியவர்
17 minutes ago, மியாவ் said:

ஒரு குழுவாக சேர்ந்து புலம்பினால் மதம். தனியாக புலம்பினால் ஆன்மீகம் என்ற அளவில் தான் ஆன்மீகம் இன்று உள்ளது. ஏனென்றால் மத முட்டாள்த்தனதமை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல திணறும் மதவாதிகள் தான் ஆன்மீகம் என்ற வார்ததையை இன்று உபயோகிக்கிறார்கள். 

 பஞ்சர் ரீயூப்போல் மத்ததை பூசி மெழுக அறிவியல் சாதனங்களைத்தான் இன்றைய நவீன மதவாதிகள்  உபயோகிக்கிறார்கள். அறிவியல் என்றுமே யுத்தத்தை தூண்டவில்லை. அறிவியல்  கண்டு பிடிப்புக்களை மதவாதிகள் தமது யுத்தத்திற்கு பயன்படுத்துவது தான் இன்றும்  நடை பெறுகிறது. முன்பும் நடைபெற்றது. மதங்கள் யுத்தங்களை தூண்டியதற்கு எல்லா மதங்களுக்கும் பங்கு உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

அறிவியல் என்றுமே யுத்தத்தை தூண்டவில்லை.

ஓகே...

நன்றி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/22/2019 at 11:05 AM, tulpen said:

வாயில் வந்ததை எல்லாம்  உளறி அதை நம்ப சொல்வதே  எல்லா மத அயோக்கியர்களின் வேலை. அதற்காக மனிதன் தனது அறிவினால் கண்டுபிடித்த அறிவியலையும் வெட்கமில்லாமல் உபயோகிக்க தயங்கமாட்டான்  மதவாதி என்ற அயோக்கிய பயல். இந்தகாணொளியில் வருபவனும் அப்படிப்பட்ட ஒருவன் தான். 

  • தொடங்கியவர்
15 hours ago, குமாரசாமி said:

இந்த அயோக்கியப்பயல் உளறுவதை விட்டு விட்டு உங்கள் சொந்த மூளையில் சிந்தியுங்கள். தமிழர்களை அறிவியலில் பால் சிந்திக்க விடாமல்  இந்த இந்துத்துவா காவி அயோக்கியர்களின் உளரல்களை ஆதாரமாக காட்டாதீர்கள். தமிழர்களின் தொன்மை நகரமான கீழடியில் மத சின்னங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது யாழில்  இணைத்த காணொளியில் கூட சொல்லப்பட்டுள்ளது. தமிழரின் தொன்மையை கண்டு பிடிக்கும் அகழ்வாராய்யைதடுத்து நிறுத்த இந்து கும்பல்கள் மேற்கொள்ளும் சதி தொடர்பாக அங்கு கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் தொன்மை அறிவியல்பால் பட்டு இருந்திருக்கலாம். அவற்றை அழித்து புராண மூடப்பழக்கங்களை பக்தி இலக்கியம் என்ற பெயரில் எம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். 

 தமிழர்களின் வணிகம் தொடர்பாக நீங்கள் இணைத்த காணொளிகள் சிறந்தவை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
18 hours ago, குமாரசாமி said:

இதை தானே நான் முன்பே சொன்னேன் மதங்கள் எல்லாமே முட்டாள் தனமானவை என்று நான்கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டு இப்போது நான் கூறியதை உறுதிப்படுத்தும் பல காணொளிகளை இணைத்து விட்டீர்கள். . முட்டாள்த்தனமும் மூடப்பழக்கங்களும் ஏமாற்றும் எமது  இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா மதங்களுக்கும் பொதுவானவை. என்ன எமது இந்து, சைவ மதங்களில்  மதங்களில்  மற்றயவைகளை விட கொஞ்சம. அதிகமாகவே உள்ளன. அவ்வளவுதான். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, tulpen said:

இதை தானே நான் முன்பே சொன்னேன் மதங்கள் எல்லாமே முட்டாள் தனமானவை என்று நான்கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டு இப்போது நான் கூறியதை உறுதிப்படுத்தும் பல காணொளிகளை இணைத்து விட்டீர்கள். . முட்டாள்த்தனமும் மூடப்பழக்கங்களும் ஏமாற்றும் எமது  இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா மதங்களுக்கும் பொதுவானவை. என்ன எமது இந்து, சைவ மதங்களில்  மதங்களில்  மற்றயவைகளை விட கொஞ்சம. அதிகமாகவே உள்ளன. அவ்வளவுதான். 

மதங்கள் என்றுமே முட்டாள்தனங்களை விதைக்கவில்லை. மாறாக ஆறறிவு உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியே நிற்கின்றது.

இருந்தும் ஒருசிலர் அல்லது பலரால் எடுக்கப்படும்  வியாபார நோக்கிலான மத யுக்திகளை பலரும் புறக்கணிக்க வேண்டும்.

மதங்கள் கட்டுப்பாடுகள் இருந்தும் மிருகமான மனித இனம். எதுவுமே இல்லாத மனித இனம் எப்படியிருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மதங்கள் என்றுமே முட்டாள்தனங்களை விதைக்கவில்லை. மாறாக ஆறறிவு உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியே நிற்கின்றது.

இருந்தும் ஒருசிலர் அல்லது பலரால் எடுக்கப்படும்  வியாபார நோக்கிலான மத யுக்திகளை பலரும் புறக்கணிக்க வேண்டும்.

மதங்கள் கட்டுப்பாடுகள் இருந்தும் மிருகமான மனித இனம். எதுவுமே இல்லாத மனித இனம் எப்படியிருக்கும்?

சட்ட்ங்கள்தான் இன்று மனிதரை கட்டி வைத்திருக்கிறது 
கோவிலுக்குள்ளும் சேர்ச்சிலும் சாமி அறையிலும் காம வெறி ஆட்டமும் 
அதன் தொடர்ச்சியும்தான் நடக்கிறது.

மனிதனின் ஆறறிவு கண்டு பிடிப்புகளை 
மதங்கள் அமுக்கி கொண்டதுதான் வரலாறு 
மதங்கள் எதையும் கொண்டதில்லை.

உலகம் உருண்டை என்றவனை கொலை செய்தது மதம்.
உலகம் உருண்டை என்றது ஆறறிவு. 

நீங்கள் அடிக்கடி குழம்பி போகிறீர்கள் இந்துமதம் என்ற சாக்கடைக்கும் 
தமிழருக்கும் தொடர்பில்லை.

"அருவமும் உருவமும் இல்லா அரும்பெரும் ஜோதியே" 
இதுதான் தமிழர் மதம் எமது மத இறைவனுக்கு உருவம் இல்லை 
அவன் இயற்கையையும் .. இயக்கமாகவும் இருக்கிறான் என்பதே தத்துவம். 

மற்ற குப்பை எல்லாம் ..... விஜயநகர படையெடுப்புடன் அவர்கள் ஆரியரிடம் திணிப்பால் 
பெற்றதை இங்கு கொண்டுவந்து கொட்டியவை ஆகும். 

பார்ப்பான் முருகனுக்கு விளங்காத சம்ஸ்கிருதத்தில் பூசை செய்து 
தமிழராகிய எம்மை ஏமாத்துவது இந்துமதம்.
எம்மை ஆண்ட முருகனை இறைவன் இடத்தில் வைத்து தொழுவது தமிழன். 

இங்கு தொடர்ந்தும் ஏமாளியாக இருப்பதா 
தமிழனாக ஒரு மனிதனாக இருப்பதா ?
என்பதுதான் கேள்வி 
 
  • தொடங்கியவர்
9 hours ago, குமாரசாமி said:

மதங்கள் என்றுமே முட்டாள்தனங்களை விதைக்கவில்லை. மாறாக ஆறறிவு உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியே நிற்கின்றது.

இருந்தும் ஒருசிலர் அல்லது பலரால் எடுக்கப்படும்  வியாபார நோக்கிலான மத யுக்திகளை பலரும் புறக்கணிக்க வேண்டும்.

மதங்கள் கட்டுப்பாடுகள் இருந்தும் மிருகமான மனித இனம். எதுவுமே இல்லாத மனித இனம் எப்படியிருக்கும்?

எதை வைத்து கூறுகின்றீர்கள்? இதே திரியில் நான் முன்பே குறிப்பிட்டது போல் ஒரு நதி எப்படி உருவகிறது என்று அறிவியலின்பால் சிந்திக்க விடாமல் செய்ய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காகம் தட்டிவிடதிலிருந்து பெருக்கெடுத்து காவிரி நதி வந்ததாக முட்டாள்கதை சொன்னது யார்?  அதை பாடசாலையில் படிப்பித்தது யார்? இந்திரனின் சாபம் நீங்க பெண்களுக்கு அளிக்கப்பட்டதே மாதவிடாய் என்று முட்டாள்ததனத்தை பரப்பியது யார்? இவ்வாறு  மதங்கள் குறுப்பாக இந்து சைவ மதங்கள் விதைத்த முட்டாள்த தனங்களைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.