Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு வந்தவருடன் பாலியல் உறவு: தமிழ் பெண் வைத்தியருக்கு கனடாவில் தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு வந்தவருடன் பாலியல் உறவு: தமிழ் பெண் வைத்தியருக்கு கனடாவில் தடை!

January 24, 2019
dr-theepa-sundaralingam.jpg

தீபா சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழ் பெண் வைத்தியர், நோயாளியுன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றச்சாட்டில் வைத்தியராக பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் வைத்தியராக பணியாற்றிய தீபா சுந்திரலிங்கம் (வயது 37), புற்றுநோயாளியுடன் உறவை பேணியிருக்கிறார். நோயாளியுடன் கட்டிலில் உடலுறவில் ஈடுபட்டது, நோயாளிக்கு கட்டிலில் சுய இன்பம் செய்து விட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டபோது, நோயாளியுடன் உறவை பேணியதை ஏற்றுக்கொண்டார். “அது ஒரு மனஎழுச்சிமிக்க உறவாக அமைந்திருந்ததாக“ தீபா ஏற்றுக்கொண்டார்.

அவர் வைத்தியராக செயற்பட வழங்கப்பட்ட அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.

தீபா சுந்தரலிங்கத்திடம் சிகிச்சைக்கு சென்ற அந்த நோயாளியை பரிசோதித்த முதல்நாள், அவருக்கு புற்றுநோய் இருப்பதாக தீபா குறிப்பிட்டார்.

மறுநாள், தனது தொலைபேசி இலக்கம், இன்ஸ்டகிராம் விபரங்களை பகிர்ந்தார். இதன்மூலம் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, coffee shop இல் சந்தித்து பேசினர்கள்.

2015 யூலையில் இருந்து 2016 மார்ச் வரையில் 23 தடவைகள் நோயாளி சிகிச்சைக்காக வந்திருந்தார். வீட்டில், கிளினிக்கில், நோயாளியின் படுக்கையில் இருவரும் உறவு கொண்டிருந்தனர்.

இருவரது உறவு விவகாரத்தை நோயாளியின் பெற்றோரும் அறிந்திருந்தார்கள்.

இருவரும் மனதளவிலும் நெருக்கமாக பழகியிருந்தார்கள். பின்னர் அந்த உறவை முறித்துக் கொண்ட தீபா சுந்தரலிங்கம், அந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்கவும் மறுத்திருந்தார். சிகிச்சைப் பதிவேட்டில் இருந்தும் அவரது பெயரை நீக்கியிருந்தார்.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டை தீபா சுந்தரலிங்கம் ஏற்றுக்கொண்டதையடுத்து, வைத்தியராக செயற்பட தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

http://www.pagetamil.com/34173/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, கிருபன் said:
anuary 24, 2019
dr-theepa-sundaralingam.jpg

தீபா சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழ் பெண் வைத்தியர், நோயாளியுன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றச்சாட்டில் வைத்தியராக பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளார்.

இதென்ன கோதாரியாய் கிடக்கு.....ஓவராய் படிச்சு மண்டை குழம்பிப்போச்சோ தெரியாது? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் அம்மாவுக்கு இளகிய மனசு.  வருக்தக்காராளுக்கு ஏதோ முடிந்த மேலதிக உதவி...

இவோ கலியாணம் கட்டினவோவா இல்லையோ....

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று இந்த செய்தியை தமிழ்ப் பக்கத்தில் வாசித்து அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்☹️ இவ்வளவு படித்தும் என்ன பிரயோசனம் 😧

இரண்டு பேரின்இணக்கத்துடன் தனிப்பட்ட இடத்தில் நடந்திருந்தால் அதில் எந்த தவறும் இல்லை. அது இயல்பானது.  Abuse என்றால் மன்னிக்க முடியாத தவறு.  ஆனால் வேலை நேரத்தை தமது தனிப்பட்ட விருப்பத்தை பூர்த்தி செய்ய செலவிட்டது தவறு தான். அதற்கான தண்டனை கிடைத்திருக்கும். 

Edited by tulpen

சில மாதங்களுக்குள் பாலியல் துஷ்பிரயோக குற்றம் காரணமாக லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் வைத்தியர் இவர். ஒருவர் ஆண்  (ஆண் என்பதால் பெரியளவுக்கு செய்தி பிரபலமாகவில்லை), மற்றவர் இவர் பெண்.

உற்று நோக்கினால் இரண்டு சம்பவங்களும் பரஸ்பர இணக்கத்துடன் தான் நடந்து இருக்கு. பாதிப்பட்டவர்கள் சூழ்நிலையை தமக்கு சாதகமாக்கி உள்ளனர். Code of conduct இனை மீறியமையால் லைசென்ஸ் ரத்து செய்ப்பட்டு இருக்கு. ஆனால் பாலியல் குற்றவாளிகளாக அல்ல.

இந்த பெண் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆணினது சம்மதத்துடன் தான் மருத்துவமனையிலும், வெளியிடங்களிலும் உடலுறவும் பாலியல் ரீதியிலான தொடுகையும் இடம்பெற்று இருக்கு. இருவரின் குடும்பத்தினருக்கும் இவர்களின் உறவு தெரிந்தும் இருக்கு. பெண் பின்னாளில் இன்னொரு ஆண் துணையை தேடிக்கொண்டமையால் சம்பந்தப்பட்ட ஆண் வழக்கு தொடர்ந்து தன்னை துஷ் பிரயோகம் செய்து இருப்பதாக முறையிட்டு இருக்கின்றார். இதில் சம்பந்தப்பட்ட ஆண் இப் பெண் தனக்கு அனுப்பிய அனைத்து குறும்தகவல்கள், இஸ்டாகிராம் தகவல்கள் என அனைத்தையும் சேகரித்து வைத்து வழக்கின் போது காட்டியுள்ளார்.

இதன் மூலம் அவருக்கு கிடைத்தது 16,000 டொலர்கள். இப் பெண் இழந்தது கஷ்டப்பட்டு படிச்சு பெற்ற மருத்துவ வைத்தியர் அனுமதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/24/2019 at 11:10 PM, Nathamuni said:

டாக்டர் அம்மாவுக்கு இளகிய மனசு.  வருக்தக்காராளுக்கு ஏதோ முடிந்த மேலதிக உதவி...

இவோ கலியாணம் கட்டினவோவா இல்லையோ....

அட.....விசர் வேலை பாத்திட்டன். முந்தியெல்லாம் என்ரை பமிலி டாக்குத்தரம்மா எனக்கு பயங்கர பொடி செக்கப் செய்வாவு,,.....நான் தான் அதை விளங்கிக்கொள்ளாமல் இருந்திட்டன்....இனி ஒண்டும் செய்யேலாது....ஏனெண்டால் அவ இப்ப பெஞ்சனுக்கு போயிட்டாவு...😤

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

சில மாதங்களுக்குள் பாலியல் துஷ்பிரயோக குற்றம் காரணமாக லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் வைத்தியர் இவர். ஒருவர் ஆண்  (ஆண் என்பதால் பெரியளவுக்கு செய்தி பிரபலமாகவில்லை), மற்றவர் இவர் பெண்.

உற்று நோக்கினால் இரண்டு சம்பவங்களும் பரஸ்பர இணக்கத்துடன் தான் நடந்து இருக்கு. பாதிப்பட்டவர்கள் சூழ்நிலையை தமக்கு சாதகமாக்கி உள்ளனர். Code of conduct இனை மீறியமையால் லைசென்ஸ் ரத்து செய்ப்பட்டு இருக்கு. ஆனால் பாலியல் குற்றவாளிகளாக அல்ல.

இந்த பெண் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆணினது சம்மதத்துடன் தான் மருத்துவமனையிலும், வெளியிடங்களிலும் உடலுறவும் பாலியல் ரீதியிலான தொடுகையும் இடம்பெற்று இருக்கு. இருவரின் குடும்பத்தினருக்கும் இவர்களின் உறவு தெரிந்தும் இருக்கு. பெண் பின்னாளில் இன்னொரு ஆண் துணையை தேடிக்கொண்டமையால் சம்பந்தப்பட்ட ஆண் வழக்கு தொடர்ந்து தன்னை துஷ் பிரயோகம் செய்து இருப்பதாக முறையிட்டு இருக்கின்றார். இதில் சம்பந்தப்பட்ட ஆண் இப் பெண் தனக்கு அனுப்பிய அனைத்து குறும்தகவல்கள், இஸ்டாகிராம் தகவல்கள் என அனைத்தையும் சேகரித்து வைத்து வழக்கின் போது காட்டியுள்ளார்.

இதன் மூலம் அவருக்கு கிடைத்தது 16,000 டொலர்கள். இப் பெண் இழந்தது கஷ்டப்பட்டு படிச்சு பெற்ற மருத்துவ வைத்தியர் அனுமதி.

டாக்குத்தரமா இப்ப உங்களை பார்ப்பார் எண்டோன்ன.... அவரும் எழும்பி ஓடி இருப்பார்.... ம்.. ம்ம்ம்...

உடல் நலம் கைவிட்டது போக, இந்தம்மா நம்ப வச்சு கையை விட்டிருச்சு....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

சில மாதங்களுக்குள் பாலியல் துஷ்பிரயோக குற்றம் காரணமாக லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் வைத்தியர் இவர். ஒருவர் ஆண்  (ஆண் என்பதால் பெரியளவுக்கு செய்தி பிரபலமாகவில்லை), மற்றவர் இவர் பெண்.

உற்று நோக்கினால் இரண்டு சம்பவங்களும் பரஸ்பர இணக்கத்துடன் தான் நடந்து இருக்கு. பாதிப்பட்டவர்கள் சூழ்நிலையை தமக்கு சாதகமாக்கி உள்ளனர். Code of conduct இனை மீறியமையால் லைசென்ஸ் ரத்து செய்ப்பட்டு இருக்கு. ஆனால் பாலியல் குற்றவாளிகளாக அல்ல.

இந்த பெண் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆணினது சம்மதத்துடன் தான் மருத்துவமனையிலும், வெளியிடங்களிலும் உடலுறவும் பாலியல் ரீதியிலான தொடுகையும் இடம்பெற்று இருக்கு. இருவரின் குடும்பத்தினருக்கும் இவர்களின் உறவு தெரிந்தும் இருக்கு. பெண் பின்னாளில் இன்னொரு ஆண் துணையை தேடிக்கொண்டமையால் சம்பந்தப்பட்ட ஆண் வழக்கு தொடர்ந்து தன்னை துஷ் பிரயோகம் செய்து இருப்பதாக முறையிட்டு இருக்கின்றார். இதில் சம்பந்தப்பட்ட ஆண் இப் பெண் தனக்கு அனுப்பிய அனைத்து குறும்தகவல்கள், இஸ்டாகிராம் தகவல்கள் என அனைத்தையும் சேகரித்து வைத்து வழக்கின் போது காட்டியுள்ளார்.

இதன் மூலம் அவருக்கு கிடைத்தது 16,000 டொலர்கள். இப் பெண் இழந்தது கஷ்டப்பட்டு படிச்சு பெற்ற மருத்துவ வைத்தியர் அனுமதி.

செய்தியை படித்த உடனேயே இதுதான் நடந்திருக்கும் என்று ஊகித்து கொண்டேன் 
இப்படி திரும்பும் என்று இவர் எதிர்பார்த்து இருக்க வேண்டும்.
அப்படி எதிர்பார்த்து இருந்தால் அதற்கேட்ப நந்திந்து இருக்கலாம்.

இந்த பாடலில் சில்க் ஸ்மிதா பாடும் ஒரு வரி ...

"அம்மாடியோ இதற்காக ஒரு ஆராய்ச்சி நடப்பதென்ன"

நல்ல வழக்கறிஞர் இருந்து இருப்பின் வழக்கை வேறு திசையில் மாற்றி இருக்கலாம். 

code of conduct யினை 

Moral & Ethics ஆக மாற்றி இருக்க வேண்டும். 
குறைந்து சமூகத்தில் ஆவது பெயரை காப்பாற்றி இருக்கமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய கூத்து ஆடினாலும் ...
காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும் என்பார்கள்.

சிலுக்கு பாடும் அந்த வரிகள் 
அவ்வளவு தப்பையும் வேறு திசையில் மாற்றிவிடுகிறது  ...... 

cancer research & development 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அட.....விசர் வேலை பாத்திட்டன். முந்தியெல்லாம் என்ரை பமிலி டாக்குத்தரம்மா எனக்கு பயங்கர பொடி செக்கப் செய்வாவு,,.....நான் தான் அதை விளங்கிக்கொள்ளாமல் இருந்திட்டன்....இனி ஒண்டும் செய்யேலாது....ஏனெண்டால் அவ இப்ப பெஞ்சனுக்கு போயிட்டாவு...😤

ஓமோம், இனி ஒண்டும் செய்யேலாது. டாக்குத்தர் அம்மா, அப்பவே செக் பண்ணி முடிவு பண்ணியிருப்பா, வேட்டை நாய் எது, விசர் நாய் எது எண்டு.

😜

அணில் பிடிக்கிற நாய மூஞ்சீல தெரியும் எல்லோ !

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Nathamuni said:

ஓமோம், இனி ஒண்டும் செய்யேலாது. டாக்குத்தர் அம்மா, அப்பவே செக் பண்ணி முடிவு பண்ணியிருப்பா, வேட்டை நாய் எது, விசர் நாய் எது எண்டு.

😜

அணில் பிடிக்கிற நாய மூஞ்சீல தெரியும் எல்லோ !

0ld man à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்  அற்ப வேலை செய்ததால்..... 
மரியாதையும், பலவருட படிப்பையும் வீணாக்கி விட்டு நிற்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுக்கும் அறிவிற்குமான போட்டியில் உணர்வு வென்றுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு.. தனிநபர் ஒழுக்கத்தைப் பேதிப்பதில்லை.. மேற்குலகில். அதன் விளைவுகளில் இதுவும் ஒன்று.

ஒரு நோயாளி மீது இரக்கம் கொண்டு அவருக்கு வாழ்க்கை துணையாக அமைவது வேறு.. அந்த நோயாளியின் சூழ்நிலையை காரணம் காட்டி.. பாலியல் செய்வது என்பது.. பாலியல் துஷ்பிரயோகமே.

இங்கு லண்டனில்.. சில சிங்கள ஆண் வைத்தியர்கள் இதே குற்றச்சாட்டின் கீழ் வைத்திய அந்தஸ்தை இழந்துள்ளனர்.

கனடாவில்.. தமிழ் பெண் வைத்தியர் இப்படி நடந்து கொண்டுள்ளமை.. தமிழர்களுக்கு இழுக்கோ இல்லையோ... வைத்தியத்துறைக்கு இழுக்கு. 🙄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.