Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் பயன்படுத்த தடை – சுரேன் ராகவன் அதிரடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Surern-1.png

தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் பயன்படுத்த தடை – சுரேன் ராகவன் அதிரடி

தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலுவலக வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது மது பாவனை அல்லது புகை பிடிப்பதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு வட மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அதிரடியாக தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், அவர் தனது அதிரடி ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமது-அலுவலக-உத்தியோகத்தர/

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநருக்கு நன்றி. மது எனும் அரக்கன் கற்றவர் கல்லாதவர் எல்லோரையும் அடிமையாக்குகிறான். பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல ஆரோக்கிய கேட்டையும் உருவாக்கும் போதைப்பழக்கம் ஒழிக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல விடயம்.....அலுவலக நேரங்களில் அரச உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பாவிக்ககூடாது என்பது ஏற்கனவே உள்ள சட்டம் தானே ....இப்ப என்ன புதுசா.....

செய்தியை பார்த்தால் எதோ உத்தியோகத்தர்கள் எல்லோரும் போதையில் வாரமாதிரியும் ஐயா எதோ சட்டம் போட்டு தடுக்கிறமாதிரியும் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையண்ணா, ஆளுநர் அலுவலகத்தில் நடாத்தப்படும் விருந்துபசாரங்களில் மதுபானம் பயன்படுத்த தடை.

23 hours ago, ஏராளன் said:

இல்லையண்ணா, ஆளுநர் அலுவலகத்தில் நடாத்தப்படும் விருந்துபசாரங்களில் மதுபானம் பயன்படுத்த தடை.

மதுபானம் இல்லை என்றால் விருந்துபசாரத்துக்கு போய் என்ன பிரயோசனம்?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா இந்த மனநிலை?! 
உணவு விருந்து தான். 
போதையை ஒழிக்கிறோம் என்பதன் முதல் அடியாக இதை நான் பார்க்கிறேன்.

On 1/29/2019 at 9:54 AM, தமிழ் சிறி said:

அலுவலக வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது மது பாவனை அல்லது புகை பிடிப்பதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு வட மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த நல்ல விசயத்த கட்டாயம் பாராட்டியே தீரவேண்டும்!

On 1/29/2019 at 12:15 PM, putthan said:

ந‌ல்ல விடயம்.....அலுவலக நேரங்களில் அரச உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பாவிக்ககூடாது என்பது ஏற்கனவே உள்ள சட்டம் தானே ....இப்ப என்ன புதுசா.....

செய்தியை பார்த்தால் எதோ உத்தியோகத்தர்கள் எல்லோரும் போதையில் வாரமாதிரியும் ஐயா எதோ சட்டம் போட்டு தடுக்கிறமாதிரியும் இருக்கு

அரச உத்தியோத்தர்கள் மட்டுமல்ல பெரும்பாலான தனியார் துறை கொம்பனிகளிலும் வேலை நேரத்துல மது அருந்துவதும், புகை பிடிப்பதுவும் தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களிலும் இவை சட்டரீதியா தடை செய்யப்பட்டுள்ளன.

இதுக்குள்ள இந்த மனுஷன் திருநீறையும் பூசிக்கொண்டு இவற்றை தடைசெய்வதாக கூறுவதால் ரெஜினோல்ட் கூறே காலத்தில் இவையிரண்டும் சட்டவிரோதமாக கொடிகட்டி பறந்திருக்க வேண்டும் என்டு தான் எடுக்க வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

நிமல் சிறிபால டி சில்வா தனது ஜதேக, நண்பருக்கு சொன்னது போல, தகுதி இல்லாதவர்களையெல்லாம், வாக்குகுகளுக்காக ஆளுனர் ஆக்கியுள்ளார் மைத்திரி.

1 minute ago, Nathamuni said:

நிமல் சிறிபால டி சில்வா தனது ஜதேக, நண்பருக்கு சொன்னது போல, தகுதி இல்லாதவர்களையெல்லாம், வாக்குகுகளுக்காக ஆளுனர் ஆக்கியுள்ளார் மைத்திரி.

வடக்குக்கு வந்த இந்த மனுஷருக்கு வாக்கு வங்கியில்லை!

அவர் கிழக்கில சட்டவிரோத செயல்களில் (திருட்டு மணல், திருட்டுக்காணி, திருட்டு வியாபாரம், திருட்டு மாட்டிறைச்சிக்கடை ...) போன்ற விடயங்களில் கொடிகட்டி பறக்கும் ஒரு இனத்தின் தாதா ஒருவரை குறிப்பிட்டிருக்க வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அலுவலகம் ஒன்றில் நடந்த மதுவிருந்தின் பின்னர் அலுவலக வாகனம் விபத்துக்குள்ளானதை அடுத்து இத்தடை வந்ததாக நண்பர்கள் கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Rajesh said:

வடக்குக்கு வந்த இந்த மனுஷருக்கு வாக்கு வங்கியில்லை!

அவருக்கல்ல, தமிழர் ஒருவரை நியமித்ததால், சந்தோசத்தில, தமிழர்கள் தனக்கு வாக்களிப்பர் என்ற ஜடியா மைத்திரிக்கு.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.