Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சாவகச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு கிடைத்த தர்ம அடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் செய்திகள்:சாவகச்சேரி ஹோட்டலில் பத்து லட்சம் திருடிய திருடனை கடை உரிமையாளர் தலைமையிலான குழுவினர் மடக்கி பிடித்துள்ளனர்.

கடந்த மாதம் 8ம் திகதி கொள்ளையில் ஈடுபட்ட திருடன் உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளை இன்று பிடிபட்டார்.

இன்று மாலை 3.00 மணி அளவில் ஸ்ரார் ஹோட்டல் உணவக உரிமையாளரும் அவரது நண்பர்களும் இணைந்து ஐந்து கிலோ மீற்றர் வரை திருடன் ஓடீச் சென்ற போது அவரை வளிமறித்து மடக்கி பிடித்தனர்.

%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-10-287x191.jpg

பின்பு சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி பொலிசாரை வரவளைத்து திருடனை அவர்களிடம் கையளித்தனர்.

கைது செய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த குமாரவேல் சந்திரகுமார் என்பது குறிப்பிடத்தக்கது

https://www.todayjaffna.com/137201

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தான் 10 இலட்சத்தை பாதுகாப்பாக வைக்காமல் திருடு கொடுத்து விட்டு பின் திருடனை அடிப்பது எந்த வகையுயில் நியாயம். 
 
22 minutes ago, colomban said:

தான் 10 இலட்சத்தை பாதுகாப்பாக வைக்காமல் திருடு கொடுத்து விட்டு பின் திருடனை அடிப்பது எந்த வகையுயில் நியாயம். 
 
போனது உங்கள் பணம் இல்லைதானே ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

தான் 10 இலட்சத்தை பாதுகாப்பாக வைக்காமல் திருடு கொடுத்து விட்டு பின் திருடனை அடிப்பது எந்த வகையுயில் நியாயம். 
 
உங்களுக்கு நியாயம் விளங்குது உங்கை கனபேருக்கு விளங்குதில்லை களவு செய்தா  போலீசிடம் குடுக்கணும்  அதென்ன அடிக்கிறது விழுந்த அடியாளை வாழ்க்கையில் களவு எடுப்பதே மறந்து போச்சு  முந்தின கிழமை வரணியிலும் நம்ம பொடியனுக்கு கட்டி வைச்சு அடிச்சு போட்டுனம் இப்ப ரெக்கி எடுத்து தருகிறதுக்கும் பொடியள் இல்லை . எங்கடை கஷ்ட்டம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் சிங்கள போலிஸ் மாத்தையா எப்ப பார்த்தாலும் அளவுக்கு அதிகமா கேட்கிறான் குடுக்காட்டி அவனே பிடிச்சு உள்ள போட்டு விடுவான் என்ற பயம் வேறை .இப்ப பேப்பரில் முகம் வந்தபடியால் இனி ஒரு இடமும் திரிய ஏலாது முன்பு போல் மோட்டர் சைக்கிளில் பந்தாவாய் போனால் மோட்டார் சைக்கிள் களவு சைக்கிள் என்று பறித்து அடியும் போட்டு விடும் சனம் சொந்தமாய் கஷ்ட்டபட்டு  வெளிநாடுகளில் பிள்ளைகளை விட்டு தனிய வாழும் அம்மா மாரிடம் காதை அறுத்து பறித்த நகைகள் அவை அப்படி செய்கையில் எவ்வளவு கஷ்ட்டபட்டு உழைக்கிறம் என்றாவது மற்றவையளுக்கு தெரியுமா ? இப்ப நடந்த சம்பவத்தால்  இந்த தொழில் செய்ய முடியாது போயுள்ளது அவ்வளவு அடியுங்க எனக்கு விழுந்த அடியை பார்த்து கூட்டாளிகள் பழைய தொழிகளுக்கு போயிட்டாங்கள் அய்யோ இனி யாரை கூட்டு சேர்த்து செய்யலாம் சொல்லுங்க புலம்பெயர் அண்ணாமாரே ? நீங்கள் கூட்டுக்கு வந்தால் அங்கை குளிருக்குள் உழைக்கிறதை விட கூட உழைக்கலாம் கூட்டு சேருவமா?

(ஒரு கள்வனின் பக்கம் இருந்து யோசிச்சதில் வந்தது யாரையும் நோகடிக்க அல்ல )

13 minutes ago, பெருமாள் said:

இப்ப ரெக்கி எடுத்து தருகிறதுக்கும் பொடியள் இல்லை

ஆமா ரெக்கி எண்டால் என்ன 

உங்களுக்குள்ள பல சங்கேத மொழி இருக்கும் - ஆனா எங்களுக்கும் புரியிறமாதிரி எழுதலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா ரெக்கி எண்டால் என்ன 

உங்களுக்குள்ள பல சங்கேத மொழி இருக்கும் - ஆனா எங்களுக்கும் புரியிறமாதிரி எழுதலாமே.

ரெக்கி என்று  சொன்னால் விழுற அடி குறையும் என்று உங்களின் ஆட்கள் தான் சொல்லி தந்தவை ஏன் எண்டு எனக்கும் தெரியாது உங்களுக்கு தெரிந்ததை உங்களின் மகத்தான அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் அதாவது இந்தியன் ஆமிகாலத்தில் நீங்கள் செய்த சேவைகளை அறிய விரும்புகிறேம் .😎

1 minute ago, பெருமாள் said:

அதுசரி 

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

இல்லை அது கடத்தல்காரரின் சங்கேத சொல் என்றால் - ரகசியமாவே வைத்திருங்கள் 

உங்கள் ரகசியம் முக்கியம் அமைச்சரே 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

அதுசரி 

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

இல்லை அது கடத்தல்காரரின் சங்கேத சொல் என்றால் - ரகசியமாவே வைத்திருங்கள் 

உங்கள் ரகசியம் முக்கியம் அமைச்சரே 

ஏங்க உங்களுக்கு  பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா ?

1 minute ago, பெருமாள் said:

ஏங்க உங்களுக்கு  பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா ?

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

2 minutes ago, பெருமாள் said:

ஏங்க உங்களுக்கு  பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா ?

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

அதான் தெரியாது எண்டு சொல்லியிட்டம் இந்தியன் ஆமிகாலத்து முன்னாள் கொள்ளை களவெடுத்த பெயர் வேண்டின அனுபவபட்ட மனுஷன் அதான் எங்களின் குரு சொல்லித்தந்தவர் அப்படி சொல்ல சொல்லி கதை பேச்சில் இடைக்கிடை அப்படியான கதைகளை விட விழுற அடி குறையுமெண்டு. நான் நினைக்கிறன் எங்கடை குரு உங்களுக்கு சொந்தகாரர் போல் இருக்குது அவரும் உங்களை போலத்தான் ஒரு விடயத்தை தெரிந்தாலும் தெரியாத மாதிரி திரும்ப திரும்ப கேட்ப்பார் .

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டில் ஈடுபட்டவரை பேஸ்புக்கின் உதவியுடன் மடக்கி பிடிப்பு

முகநூலின் உதவியுடன், உணவகத்தில் திருடியவர் தொடர்பான விபரங்களைப் பதிவு செய்யப்பட்டு, மக்களின் உதவியுடன் திருடனைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் உணவக உரிமையாளர்.facebook.jpg

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அருகில் உள்ள உணவகமொன்றில் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இரவு ஓடு பிரித்து உள்நுழைந்த திருடன் முதலில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் செய்றபாடுகளை நிறுத்தி விட்டு உணவகத்தினுள் இறங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபா பணத்தையும் 3 இலட்சம் ரூபா பெறுமதியான அலைபேசி,மீள்நிரப்பு அட்டைகளையும் திருடிச் சென்றுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கடையின் உரிமையாளர் கடைக்குள் செயலிழக்காமல் இருந்த கமராவின் உதவியுடன் அதற்கு முதல்நாள்களில் கடைக்கு வந்திருந்தவர்கள் தொடர்பாக பார்வையிட்டார்.

முதல் நாளில் அங்கு உணவருந்த வந்தவரும் திருட்டின் போது செயற்பட்ட கமராவில் பதிவில் காணப்பட்ட நபரும் ஒரே மாதிரியாக இருந்ததால் முகநூலில் பதிவு செய்து அங்கு காணப்படுபவர் தொடர்பான விபரங்களை தமக்குத் தெரியப்படுத்துமாறும் இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தப் பதிவினைப் பார்வையிட்ட உடையார்கட்டைச் சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளருக்கு அறிவித்துள்ளார். உரிமையாளர் சிலருடன் அங்கு சென்றார். இவர்களைக் கண்டதும் குறித்த நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சிக்கவே பொதுமக்களின் உதவியுடன் பிடித்தனர்.

வாகனத்தில் கொண்டு வந்த நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

http://www.virakesari.lk/article/50292

19 minutes ago, பெருமாள் said:

அதான் தெரியாது எண்டு சொல்லியிட்டம் இந்தியன் ஆமிகாலத்து முன்னாள் கொள்ளை களவெடுத்த பெயர் வேண்டின அனுபவபட்ட மனுஷன் அதான் எங்களின் குரு சொல்லித்தந்தவர் அப்படி சொல்ல சொல்லி கதை பேச்சில் இடைக்கிடை அப்படியான கதைகளை விட விழுற அடி குறையுமெண்டு. நான் நினைக்கிறன் எங்கடை குரு உங்களுக்கு சொந்தகாரர் போல் இருக்குது அவரும் உங்களை போலத்தான் ஒரு விடயத்தை தெரிந்தாலும் தெரியாத மாதிரி திரும்ப திரும்ப கேட்ப்பார் .

தயவு செய்து இனிமேல் உங்களுக்கே தெரியாததை எழுதாதையுங்கோ 

அப்புறம் யாராவது விளக்கம் கேட்டால் இப்படித்தான் சடைய வேண்டி வரும் 

ஆனால் இப்பவும் எனக்கு ரெக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவேயில்லை.,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

18005-1-0344b6a5fa3b7c4b6a39df6805f34d6c.jpg

18005-2-0344b6a5fa3b7c4b6a39df6805f34d6c.jpg\

18005-3-0344b6a5fa3b7c4b6a39df6805f34d6c.jpg

18005-4-0344b6a5fa3b7c4b6a39df6805f34d6c.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து இனிமேல் உங்களுக்கே தெரியாததை எழுதாதையுங்கோ 

அப்புறம் யாராவது விளக்கம் கேட்டால் இப்படித்தான் சடைய வேண்டி வரும் 

ஆனால் இப்பவும் எனக்கு ரெக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவேயில்லை.,

அங்கு களவு கொள்ளை குறைய நீங்கள் பழையபடி அங்கு இருக்கேலாது என்பதை நினைக்க உதறல் ஏற்படுவது ஒவ்வொருவருக்கும் இயற்கைதானே அடுத்த பிழைப்பு பார்க்கணும் அல்லவா  ஆனால் உங்களுக்கு அது புதுசு இல்லைத்தானே ஏற்கனவே 1989லும் நடந்தது .

8 minutes ago, பெருமாள் said:

ஆனால் உங்களுக்கு அது புதுசு இல்லைத்தானே ஏற்கனவே 1989லும் நடந்தது .

ஆமா எனக்கு 89 இல் என்ன நடந்தது.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து இனிமேல் உங்களுக்கே தெரியாததை எழுதாதையுங்கோ 

அப்புறம் யாராவது விளக்கம் கேட்டால் இப்படித்தான் சடைய வேண்டி வரும் 

ஆனால் இப்பவும் எனக்கு ரெக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவேயில்லை.,

எல்லா இயக்கங்களிலும் பரவலாக பாவிக்கப்பட்ட சொல். இராணுவ ஊசாட்டங்களை நோட்டமிடுதல் என நினைக்கிறேன். எந்த மொழிச்சொல் என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரெக்கி என்பது உளவு அல்லது வேவுபார்த்தல் என்ற பொருள்படும் Reconnaissance என்ற ஆங்கிலச்சொல்லின் சுருக்கம்

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.