Jump to content

கவிதையோ கவிதை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கவிதையோ  கவிதை   

 

கதையோ கவிதையோ எதுவோ ஒன்று 

இணையம் 21 க்கு இயற்றிடலாம்  என்று 

தண்டோரா போட்டு விட்டனர் இன்று 

பண்புடன் ஏற்று அதை செப்புதல் நன்று 

 

மண்ணில் விதையிடில் மரம் முளைக்கலாம் 

மரத்தின் கிளையில் கவிதை  பறிக்கலாமோ  

மயங்கிய மதியை மனசுக்குள் தேற்றி 

அறிவெனும் ஒளியை அகலினில் ஏற்றி 

ஒரு கை பார்க்க புடைத்தது நெற்றி 

கொப்பியடித்தால் கிடைத்திடும் வெற்றி 

 

காலம் கடந்த பட்டுக்கோட்டை  பாடல்களை 

பக்குவமாய் தறித்து இட்டு கட்டிடலாமோ 

காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைகளை 

கன்னா பின்னா என்று உரு மாற்றிடலாமோ  

அவதாரபுருஷன் வாலியின் வாலிப வரிகளை 

வாலைப் பிடித்து வளைத்து போடலாமோ  

வைரமுத்துவின்  சத்தான செய்யுள்களை 

கொத்தாக உருவி கெத்தாய் விடலாமோ 

நா.முத்துக்குமாரின் நயமான கவிதைகளை 

நசுக்கிடாமல் சுட்டு அரங்கேற்றிடலாமோ 

 

எண்ணியெண்ணி ஏங்கித் தவிக்கிறேன் 

என் தூக்கம் கேட்டு எதுவும் எழுதிலேன் 

ஆங்கிலக் கவிதைகளை அலேக்காய் துக்கலாம்தான் 

அதிலொரு பிரச்சினை எனக்கு அம்மொழியும் அரைகுறை.....!

 

யாழ் இணையம் அகவை 21.

ஆக்கம் சுவி.......!

 

 

 

 

 

 

Posted
35 minutes ago, suvy said:

 காலம் கடந்த பட்டுக்கோட்டை  பாடல்களை 

பக்குவமாய் தறித்து இட்டு கட்டிடலாமோ 

காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைகளை 

கன்னா பின்னா என்று உரு மாற்றிடலாமோ  

அவதாரபுருஷன் வாலியின் வாலிப வரிகளை 

வாலைப் பிடித்து வளைத்து போடலாமோ  

வைரமுத்துவின்  சத்தான செய்யுள்களை 

கொத்தாக உருவி கெத்தாய் விடலாமோ 

நா.முத்துக்குமாரின் நயமான கவிதைகளை 

நசுக்கிடாமல் சுட்டு அரங்கேற்றிடலாமோ

சுவி அண்ணாவின் பயண அனுபவங்ளில் சுவாரஸ்யமான ஏதேனும் ஒன்றை சிறு கவிதையாக வடிக்கலாமே! 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தழுவல் கவிதையில் நழுவுதல் நன்றே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி அண்ணா என்னால் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை. கவிதை எழுதுவது தொடர்பாக எழுதிய வரிகள் சூப்பர். கவிதையிலும் உங்களால் மற்றவர்களின் இதழ்கடையில் முறுவலை வரவைக்கலாம் என்பதற்கு இந்தப்பதிவு நல்ல சான்று. மென்மேலும் எங்களுக்குள் மந்தகாசம் பூக்கும் கவிவரிகளைப்படைக்க வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை எழுத் வெளிக்கிட்டு ..  மூளையைக்  கசக்கி யோசித்து இருக்கிறீர்   களே ....நல்ல குசும்பு தான்  இது தான் நம்ம சுவி யர் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/24/2019 at 5:53 AM, suvy said:

ஆக்கம் சுவி.......!

சுவி நீங்கள் ஒரு ஒலிம்பிக் தங்கப்பதக்க ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கை பாக்கிறதெண்டுதான் இருக்குறியள். 😛

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/24/2019 at 12:33 PM, மல்லிகை வாசம் said:

சுவி அண்ணாவின் பயண அனுபவங்ளில் சுவாரஸ்யமான ஏதேனும் ஒன்றை சிறு கவிதையாக வடிக்கலாமே! 😃

எழுதலாம்தான்...... இதுதான் எழுத வேண்டும் என நினைக்கும் போது எதுவும் வர மாட்டேங்குது மல்லிகை வாசம்.......!  😁

On 3/2/2019 at 3:46 PM, கிருபன் said:

தழுவல் கவிதையில் நழுவுதல் நன்றே!

😁  😁  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன்.....!   👍

On 3/2/2019 at 4:43 PM, வல்வை சகாறா said:

சுவி அண்ணா என்னால் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை. கவிதை எழுதுவது தொடர்பாக எழுதிய வரிகள் சூப்பர். கவிதையிலும் உங்களால் மற்றவர்களின் இதழ்கடையில் முறுவலை வரவைக்கலாம் என்பதற்கு இந்தப்பதிவு நல்ல சான்று. மென்மேலும் எங்களுக்குள் மந்தகாசம் பூக்கும் கவிவரிகளைப்படைக்க வாழ்த்துகள்

அலுத்து களைத்து இருக்கும்போது இப்படி ஏதாவது குளறுபடி நடக்கும் சகோதரி........ 😁

Posted
53 minutes ago, suvy said:

எழுதலாம்தான்...... இதுதான் எழுத வேண்டும் என நினைக்கும் போது எதுவும் வர மாட்டேங்குது மல்லிகை வாசம்.......!  😁

உண்மை தான் சுவி அண்ணா. எழுத வேண்டும் என்று அமர்ந்தால் ஒன்றும் வராது. வேறு ஏதாவது அலுவல்களில் இருந்தால் சில ஐடியாக்கள் எட்டிப்பார்க்கும்; பிறகு வந்து ஆறுதலாக அமர்ந்து எழுதுவம் என்றால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான்! 😊

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.