Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்த்தான் எல்லைக்குள் குண்டுவீசச் சென்று எதிர்த்தாக்குதலில் பயந்தோடிய இந்திய விமானங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் அன்ரிகளா?!
யாரப்பா அவை?

  • Replies 51
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

mqdefault.jpg

களத்துல எல்லாம் ஆன்ரி இந்தியனா இருக்கினம் .. 🤔

ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டை/ எமது இரத்த தமிழ் உறவுகளை கிந்தியாவுடன் சேர்த்து பார்ப்பதில்லை. 
தமிழ்நாடு என்றுதான் பார்க்கின்றோம்.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, thulasie said:

இந்தியா போரில் தோற்றால், தமிழினம் முற்றாக தோற்றுவிடும்.

இந்தியாவின் உதவியுடன்தான், எமக்கு சமஷ்டி கிடைக்க போகுது 

இந்தியா இனியும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு மயிரையும் புடுங்க வேண்டாம். நாறல் வாயை மூடிக்கொண்டிருந்தாலே மெத்தப்பெரிய பெரிய உபகாரம்.

41 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டை/ எமது இரத்த தமிழ் உறவுகளை கிந்தியாவுடன் சேர்த்து பார்ப்பதில்லை. 
தமிழ்நாடு என்றுதான் பார்க்கின்றோம்.:)

இந்தியாவிற்குள்தான், தமிழ்நாடு இருக்கிறது.

35 minutes ago, குமாரசாமி said:

இந்தியா இனியும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு மயிரையும் புடுங்க வேண்டாம். நாறல் வாயை மூடிக்கொண்டிருந்தாலே மெத்தப்பெரிய பெரிய உபகாரம்.

இந்தியா ஒருபோதும், அதன் வாயை மூடாது.

அது இப்போது ஒரு வல்லரசு - என்று சொல்லிக்கொள்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, thulasie said:

இந்தியா போரில் தோற்றால், தமிழினம் முற்றாக தோற்றுவிடும்.

இந்தியாவின் உதவியுடன்தான், எமக்கு சமஷ்டி கிடைக்க போகுது 

முதல் கருத்தை, இந்தியா என்றதொரு அரசு இல்லாதிருந்தால், எமது போராட்டத்தில் மிகப் பெரிய தடைகள் இருந்திராது என்ற முடிவிற்கே வர முடிகிறது.

ஆகவே, இந்திய அரசு தோற்றக்குமாயின், சிங்கள அரசு ஏறெடுத்தும் பார்க்காமல் என்ற நிலை வரும் பொது, இந்தியாவிற்கு இலங்கை தீவில் known devil, ஆனால் reliable partner ஈழத்தமிழர் மாத்திரமே.  அது மட்டுமல்ல, ஈழத்தமிழரின் நிலப்புத்தில் அரசு ஒன்று இருப்பதே, தோற்றுவிட்ட இந்திய அரசிற்கான மிகுந்த பாதுகாப்பு ஆகும். ஏனெனில், கிந்தியாவின் இண்டஸ்ட்ரியல் soft belly தென்மாநிலங்கள் ஆகும்.     

இன்னுமொன்று, ஈழத்தமிழரின் நிலப்புத்தில் அரசு இருக்கும் போது, சிங்களம் வாலாட்டுவதத்திற்கு மிகவும் தயங்கும்.

இரண்டாம் கருத்திலும் உடன்படமுடியாதுள்ளது. ஏனெனில், கிந்தியாவின் வாதம் / பயம் தமிழீழ அரசு அமைந்தால், அதன் மாநிலங்களும் independant state அமைக்கும் பலத்த கோரிக்கைகள் மற்றும் முயதர்சிகள் எழும் என்பது.

எனவே, ஹிந்தியா ஒருபோதும்   கூட்டாட்சிக்கு இலங்கை தீவில் அமைவதை விரும்பாது. ஏனெனில், கிந்தியாவில் இருப்பது ஒற்றையாட்சியே.

மிகவும் முக்கியமாக, எமது தீர்வில் நிதி அதிகாரங்களை (fiscal powers) பகிர்வதத்திற்கு ஹிந்தியா எதிர்க்கும்.

ஆகவே, இலங்கைத் தீவில் கூட்டாட்சி, அதுவும் அதிகாரங்கள் மீளப்பெற முடியாத கூட்டாட்சியை கிந்தியா வெளிப்படையாக எதிர்க்காவிட்டாலும், குழப்புவதத்திற்கு முயதர்சி எடுக்கும்.

கிந்தியா, வடக்கு-கிழக்கு பிரிவையும், மலையாளிகளின் தூண்டுதலில், ஊக்கப்படுத்தியுள்ளது.  

இது விதண்டாவாதத்தில் நான் முன்வைக்கும் கருத்துக்கள் அல்ல.

எத்தனையோ ஆய்வுகள், வெளியாருடன் கருத்தாடல்களின்  வழியாக, எனது தனிப்பட்ட முடிவு.   

  • கருத்துக்கள உறவுகள்

துளசி

கனவு கின்வு கண்டுட்டியளோ. ஆசைக்கு ஒரு உதாரணம் சொல்லுங்கோ இந்தியாவின் எல்லைகளில் உள்ள நாடுகளில் ஏதாவது ஒரு நாடு பிரச்சனை எதுவுமின்றி இருப்பதை. சமஸ்டி என்பது எக்காலத்திலும் கிடைக்காது தமிழருக்கான தீர்வை சிங்களவன் கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அதைத்தடுத்தே தீரும் சிங்களவன் சமஸ்டிக்குக்கிட்ட வந்தால் இல்லை இதைவிடக் கொஞ்சம் கூடுதலாக வாங்கித்தாறன் எனக்கூறி மீண்டும் எம்மை முள்ளிவாய்கால் நோக்கி நகர்த்தும். யாழ் குடாநாட்டில் நடராஜா இப்போ பாலச்சந்திரன் ஆகியோர் அங்குள்ள பத்திரிகையாளர் படிச்சவயள் எனக்கூறுவோர் எல்லோரையும் கைக்குள் போட்டுக்கொண்டு ஆசாராம் கோசாராம் வேலைகள் பார்ப்பதுபோல்  உங்களையும் வளைச்சுப்போட்டார்கள்போல் கிடக்கு இங்கவந்து இந்திய மகுடியை உரக்க ஊதுகிறீர்கள்.

இந்திய தேசம் தமிழர் விரோத தேசம் உன் பேரனுக்கும் பேரனின் பேரனுக்கும் கூறிவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கான் விமானங்களையும்(இந்தியா) சுட்டு விழுத்துகிறார். விமானியை உயிருடன் பிடித்து வைத்திருக்கிறார். சமாதானமும் பேச வேண்டும் என்கிறார். இந்தியாவுக்கு  ஏற்ற போட்டியாளர் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, Elugnajiru said:

  உங்களையும் வளைச்சுப்போட்டார்கள்போல் கிடக்கு இங்கவந்து இந்திய மகுடியை உரக்க ஊதுகிறீர்கள்.

இந்திய தேசம் தமிழர் விரோத தேசம் உன் பேரனுக்கும் பேரனின் பேரனுக்கும் கூறிவை.

சமஷ்டி கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் இந்தியாவின் கைகளில்தான் உள்ளது.

ஆக, இந்தியாவிற்கு ஆதரவு அழிப்பது, தமிழனின் கடமை.

பாகிஸ்தானுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது.  இலங்கையின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் ஒருபோதும் தலையிட்டது கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இன்னுமாய்யா நம்புறீங்க?!
உங்க நம்பிக்கை பொய்க்காமல் இருக்கட்டும்!

  • தொடங்கியவர்

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் பாக்கிஸ்த்தான் ஆற்றிய பங்கு பற்றி உண்மையாகவே உங்களுக்குத் தெரியாதா அல்லது உசுப்பேற்றக் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை.

அநேகமாக உங்களுக்கு அந்தளவிற்குத் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பிலையென்றே நினைக்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்த விடயங்களை மட்டும் வைத்துக்கொண்டு கருத்தெழுதாமல், கொஞ்சம் என்றாலும் தேடிப்பாருங்கள், ஓரளவிற்குப் புரியும். சுமந்திர நாமம் பாடுவதும் சுலோகம் உச்சரிப்பதும் மட்டுமே அரசியல் என்று இருக்கவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஜீக்கு தேன் எடுக்கபோய் குளவி கூட்டில கைவிட்டது போல இருக்குமா?! இல்ல திருடனுக்கு தேள் கொட்டினபோல இருக்குமா?!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மோடி ஜீக்கு தேன் எடுக்கபோய் குளவி கூட்டில கைவிட்டது போல இருக்குமா?! இல்ல திருடனுக்கு தேள் கொட்டினபோல இருக்குமா?!

பின்னங்கால்.... பிடரியில், அடிபட... ஓடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.  😝

8 hours ago, ragunathan said:

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் பாக்கிஸ்த்தான் ஆற்றிய பங்கு பற்றி உண்மையாகவே உங்களுக்குத் தெரியாதா அல்லது உசுப்பேற்றக் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை.

இலங்கை அரசிற்கு, பாகிஸ்தான் ஆயுதங்களை  விற்றது,  பயிற்சி கொடுத்தது எல்லாம் சிறு பிள்ளையும் தெரிந்த கதை.

இது அரசுகளுக்கிடையில் நடக்கும் சமாச்சாரங்கள்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், பாகிஸ்தான் ஒருபோதும் தலையிட்டது கிடையாது.

இந்திய அரசு, புலிகளுக்கு ஆயுதம்  வழங்கி பயிற்சிகளையும் வழங்கி ஈழத்துக்காக போரிடுமாறு பல உதவிகளையும் செய்தது மட்டுமல்ல, இலங்கை அரசியலிலும் இலங்கையின் உள்விவகாரங்களிலும் மூக்கை நுழைத்தது. 

அதனால், விழைந்தது மாகாண சபை.

ஆக, பாகிஸ்தான் சார்பாக செயல்படுவதைவிட, இந்தியா சார்பாக செயல்படுவதினால் மாத்திரமே, தமிழினத்தின் அரசியல் முன்னேற்றத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

9 hours ago, ஏராளன் said:

இன்னுமாய்யா நம்புறீங்க?!
உங்க நம்பிக்கை பொய்க்காமல் இருக்கட்டும்!

நான் நம்பவில்லை.  அதனால்தான் சொன்னேன் -  

**சமஷ்டி கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் இந்தியாவின் கைகளில்தான் உள்ளது**

  • கருத்துக்கள உறவுகள்

போர் என்றாலே அழிவுதான் ஏற்படும். இருபக்கமும் விட்டுக்கொடுத்து போக வேண்டும். அப்பாவி உயிர்கள் தான் இதனால் பலியாகும்.போர் வேண்டவே வேண்டாம்

புலிகளுக்கு எதிராக இந்தியா செயல்பட்டதினால் இந்தியா பேரழிவை சந்திக்க வேண்டும் என கருத்து கூறுவது எந்த வகையுலும் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. வடக்கு கிழக்கில் 30க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து நான் பெரிது நீ பெரிது என அடிபட்டுவிட்டு பின்பு இந்தியாவையும் பாகிஸ்தானையும் குறைகூறுவதில் எந்த வகையில் நியாயம்? 

52 minutes ago, colomban said:

போர் என்றாலே அழிவுதான் ஏற்படும். இருபக்கமும் விட்டுக்கொடுத்து போக வேண்டும். அப்பாவி உயிர்கள் தான் இதனால் பலியாகும்.போர் வேண்டவே வேண்டாம்

போர் என்றால் போர்தான் 

சமாதானம் என்றால் சமாதானம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, thulasie said:

இலங்கை அரசிற்கு, பாகிஸ்தான் ஆயுதங்களை  விற்றது,  பயிற்சி கொடுத்தது எல்லாம் சிறு பிள்ளையும் தெரிந்த கதை.

இது அரசுகளுக்கிடையில் நடக்கும் சமாச்சாரங்கள்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், பாகிஸ்தான் ஒருபோதும் தலையிட்டது கிடையாது.

இந்திய அரசு, புலிகளுக்கு ஆயுதம்  வழங்கி பயிற்சிகளையும் வழங்கி ஈழத்துக்காக போரிடுமாறு பல உதவிகளையும் செய்தது மட்டுமல்ல, இலங்கை அரசியலிலும் இலங்கையின் உள்விவகாரங்களிலும் மூக்கை நுழைத்தது. 

அதனால், விழைந்தது மாகாண சபை.

ஆக, பாகிஸ்தான் சார்பாக செயல்படுவதைவிட, இந்தியா சார்பாக செயல்படுவதினால் மாத்திரமே, தமிழினத்தின் அரசியல் முன்னேற்றத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

நான் நம்பவில்லை.  அதனால்தான் சொன்னேன் -  

**சமஷ்டி கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் இந்தியாவின் கைகளில்தான் உள்ளது**

பாக்கிஸ்த்தான் இலங்கையின் உள்நாட்டு விவகாரர்ங்களிலோ அரசியலிலோ தலையிடவில்லை !!!!!!

ஆனால், பின்வருவனவற்றைச் செய்தது.

1999 இலிருந்து கணிசமான அளவு ஆயுதங்கள் மற்றும் ராணுவ கனரக வாகனங்களை இலங்கை அரசுக்கு வழங்கியது. புலிகளின் யாழ் நோக்கிய முன்னகர்வை சாவகச்சேரியில் வைத்து முறியடிக்க ராணுவத்திற்குப் பெரிதும் உதவிய பல்குழல் பீரங்கிகளை வழங்கியது. இது ராணுவச் சமநிலையை குழப்பியதோடு, பின்னர் வந்த போர்களுக்கும் இறுதி யுத்தத்திற்கும் ஒருவகையில் வழிசமைத்துக் கொடுத்தது. ஆனாலும், பாக்கிஸ்த்தான் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவில்லை.

2005 - 2006 பகுதியில், மகிந்த அரசிற்கு தான் கொடுத்து வந்த ராணுவ உதவியை பன்மடங்கு உயர்த்தியதுடன், தனது விமானிகளை நேரடியாகவே யுத்த விமானங்களை இயக்குவதற்கு அனுமதித்தது. இந்த விமானத்தாக்குதல்களில் பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு போரின் போக்கிற்கும் இவர்களின் பங்களிப்பு பாரிய பங்கைச் செலுத்தியிருந்தது. ஆனாலும், பாக்கிஸ்த்தான் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை.

ராணுவத்திற்கு விசேட பயிற்சியளித்தல், புலநாய்வு நடவடிக்கைகளில்  உதவுதல், முன்னரங்குகளுக்கு அண்மையாக ஊடுருவி வேவுபார்க்கும் கட்டமைப்புகளை உருவாக்க உதவுதல் ஆகியவற்றைப் பாக்கிஸ்த்தான் செய்துகொடுத்தது. இதனால் புலிகளின் முக்கியஸ்த்தர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டதோடு, புலிகளின் எல்லைகளைச் சிறுகச் சிறுக உடைக்கவும் பாக்கிஸ்த்தான் உதவியது. ஆனாலும், பாக்கிஸ்த்தான் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை.

ஐ. நா வில் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் அரசுக்குச் சார்பாக இயங்கியதுடன், நடைபெற்ற போர்க்குற்றங்களை மறைக்க உதவிசெய்தது பாக்கிஸ்த்தான். ஆனாலும், உள்நாட்டு விவகாரங்களில் அது மூக்கை நுழைக்கவில்லை.

லட்சக்கணக்கான தமிழ் மக்களை அழிக்கக் காரண்மான இனவழிப்புப் போருக்கு உதவிசெய்து, நேரடியாகப் பங்குபற்றி, அணுசரணை வழங்கி, சர்வதேசத்திலும் இலங்கைக்குச் சார்பாக இனவழிப்பை மறைக்கத் துணைபோயிருக்கிறது பாக்கிஸ்த்தான். ஆனால், உங்களைப் பொறுத்தவரை பாக்கிஸ்த்தான் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை.

அப்போ, இதெல்லாம் எந்த நாட்டில் நடந்ததாக நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? மாலைதீவிலா? இதைவிட வேறு என்ன செய்துவிடமுடியும் அரசியல் ரீதியில் என்று நினைக்கிறீர்கள்? இதைவிட மூக்கையோ, காலையோ கைய்யையோ நுழைப்பதற்கு வெறு என்ன செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இதைவிட உள்நாட்டுய் விவகாரங்களில் வேறு எந்த வகையில் தலையிட முடியும் என்று நினைக்கிறீர்கள்? 

மொக்கைத்தனமாக ஒரு கருத்தை எழுதிவிட்டு, அதைச் சரியென்று நிலைநாட்ட சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள். இதற்குள் சிறுபிள்ளைக்கும் தெரியும், பெரிய பிள்ளைக்கும் தெரியும் என்கிற மேதாவித்தனம் வேறு !!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்ஸ்போர்ட் பட்டதாரி எதிர் டீ மாஸ்டர்...

1 hour ago, ragunathan said:
9 hours ago, thulasie said:

இலங்கை அரசிற்கு, பாகிஸ்தான் ஆயுதங்களை  விற்றது,  பயிற்சி கொடுத்தது எல்லாம் சிறு பிள்ளையும் தெரிந்த கதை.

இது அரசுகளுக்கிடையில் நடக்கும் சமாச்சாரங்கள்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், பாகிஸ்தான் ஒருபோதும் தலையிட்டது கிடையாது.

எனது மொக்கைத்தனமான கருத்தை, மேலதிக ஆதாரங்களுடன் நிறுவியதற்கு நன்றி.

1 hour ago, ragunathan said:

மொக்கைத்தனமாக ஒரு கருத்தை எழுதிவிட்டு, அதைச் சரியென்று நிலைநாட்ட சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள். இதற்குள் சிறுபிள்ளைக்கும் தெரியும், பெரிய பிள்ளைக்கும் தெரியும் என்கிற மேதாவித்தனம் வேறு !!!

  • கருத்துக்கள உறவுகள்

On 2/27/2019 at 11:41 AM, ஏராளன் said:

இந்தியன் அன்ரிகளா?!
யாரப்பா அவை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாக்கிஸ்த்தான் மற்றும் இலங்கைக்கிடிஅயிலான உறவு பற்றி பாக்கிஸ்த்தான் பத்திரிக்கையொன்றில் வந்த ஆக்கத்தினை இணைத்திருக்கிறேன். முடிந்தால் படித்துப் பார்க்கலாம். இலங்கை விவகாரத்தில் பாக்கிஸ்த்தானின் மூக்கு எவ்வளவு தூரத்திற்கு நீண்டிருந்தது என்பதற்கு இது ஒரு சாட்சி மட்டுமே!

The Diplomatic Insight - 2016-01-31 - Front Page - ... Pakistan will never forget the support that Sri Lanka provided during the 1971 war when Sri Lanka ... of Supreme Audit Institutions (ASOSAI) and ECOSOC, a UN body for the term 2015-18.

Edited by ragunathan
link

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 இனவழிப்புப் போர் முடிந்து சில நாட்களின் பின்னர் பாக்கிஸ்த்தான் ராணுவ இணையத்தில் வந்த ஆக்கம் ஒன்றை இங்கே இணைத்திருக்கிறேன்.

பாக்கிஸ்த்தான் இலங்கை உள்விவகாரங்களில் மூக்கினை நுழைக்கவில்லை என்று நினைப்போருக்கு, பாக்கிஸ்த்தான் இலங்கைக்கு உதவுவதன் காரணம் என்ன, எவ்வாறான உதவிகளை அது இதுவரை செய்துவந்தது, 2009 இனவழிப்புப் போரில் எவ்வகையான பாத்திரத்தை பாக்கிஸ்த்தான் வகித்தது தொடர்பாக சில தகவல்கள் உள்ளன. 

இதில் கவலையென்னவென்றால், தான் இலங்கைக்கு உதவுவதற்குக் காரணமே, இந்தியா தமிழர்களூடாக இலங்கையை அச்சுருத்துவதுதான் என்று பாக்கிஸ்த்தான் விளக்கம் கூறும்போது, எவ்வாறு அது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை என்று எம்மில் சிலரால் உணரமுடிகிறதென்பது உண்மையாகவே வேடிக்கைதான்.

https://defence.pk/pdf/threads/sri-lanka-thanks-pakistan.28379/

4 hours ago, ragunathan said:

மூக்கை நுழைப்பது என்பது, இலங்கையின் அரசியல் விவகாரங்களில்.

இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்வது,  இலங்கையின் மூக்கை நுழைக்கும் பட்டியலில் வராது. 

இலங்கை அரசிற்கான இராணுவ உதவிகள், பாகிஸ்தான் பலவந்தமாக செய்வதில்லை.

இலங்கை அரசு கேட்டதற்கு இணங்க, உதவிகளை செய்கிறது. 

அதுவும் சும்மா இல்லை.  பணத்திற்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, thulasie said:

மூக்கை நுழைப்பது என்பது, இலங்கையின் அரசியல் விவகாரங்களில்.

இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்வது,  இலங்கையின் மூக்கை நுழைக்கும் பட்டியலில் வராது. 

இலங்கை அரசிற்கான இராணுவ உதவிகள், பாகிஸ்தான் பலவந்தமாக செய்வதில்லை.

இலங்கை அரசு கேட்டதற்கு இணங்க, உதவிகளை செய்கிறது. 

அதுவும் சும்மா இல்லை.  பணத்திற்கு!

சுத்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.