Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம் : வவுனியாவில் சந்திரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம் : வவுனியாவில் சந்திரிக்கா

நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

chandrika-kumaratunga.jpg

வவுனியாவிற்கு நேற்றையதினம் விஜயம் செய்த அவர் நெடுங்கேணியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஐனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோர் இந்தநாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான  செயலகத்தின் மூலம் போரினால் இடம்பெயர்ந்த  மக்களின் காணிகள் மீளவும் வழங்குவதுடன், அங்கு வீடுகுளை அமைத்து அவர்கள் வாழ்வதற்கு வழியை ஏற்படுத்துவதற்கு பல  நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருவதுடன் அழிவடைந்த  வீதிகள்,கிராமங்கள்,பாடசாலைகளில் உட்கட்டமைப்புகளை வழங்குவதற்கும் நாம்  திட்டங்களை வகுத்துள்ளோம்.

வருமானத்தை பெருக்கி சுயதொழில் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம்  நாட்டில் வாழும் அனைவரையும் ஒன்றாக்கி நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும் நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய செயலாற்றும்.

குறிப்பாக வடமாகாணத்தில் 43 கிராமங்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு முழுமையான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். இங்கு நீர் பிரச்சினை அதிகமாக  இருப்பதால் அதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கிறோம்.

வடக்கில் போரின் பின்னர் பல தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமான முறையிலே அதிகவட்டிவீதத்தில் கடன்களை வழங்கியிருக்கிறார்கள். இதனால் பல பெண்கள்மரணமடைந்திருக்கிறார்கள்.

எனவே குறைந்தவட்டி விகிதத்தில் நாங்கள் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். வருடவட்டி 6 வீதமாதாகவிருக்கிறது. அதில் 25 வீதத்தை தேசிய  நல்லிணக்கசெயலகம் வழங்கும். 

கடன்களை வழங்குவதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களை வங்கிகள்  பிணையாக கேட்கின்றன. அவ்வாறு  இல்லாமல் குறித்த கடன்தொகையை வழங்குவதற்கு விரைவில்  நடவடிக்கைள் எடுக்கபடும் என அவர் உறுதியளித்தார்.

http://www.virakesari.lk/article/51428

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கட்டியெழுப்ப நினைத்தாலும் கட்டி எழுப்ப ஏலாது பாருங்கோ ....உங்களை (சிறிலங்காவை) ஏற்கனவே பல பேர்  இறுக கட்டியணைத்து விட்டினம் இனி எழும்பிறது கஸ்டம் ...வேணுமென்றால் அவை சொல்லும் பொழுது எழும்பலாம்.....இரு என்றால் இருக்க‌லாம்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

நாட்டில் வாழும் அனைவரையும் ஒன்றாக்கி நல்லதொரு நாட்டை கட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும்

mqdefault.jpg

இயக்குனர் ஷங்கர் கோவித்து கொண்டாலும் பரவாயில்லை.. ஆமா ..☺️

7 hours ago, putthan said:

நீங்கள் கட்டியெழுப்ப நினைத்தாலும் கட்டி எழுப்ப ஏலாது பாருங்கோ ....

தினமும் Scotch Whisky இல் புரளுபவர், சந்திரிகா அம்மா.

காலையில், வேளைக்கு எழும்புவது கஷ்டம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

Iஆமா பதவியில் இருக்கும் போது எவருக்கும் நல்ல எண்ணம் வருவதே இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

Iஆமா பதவியில் இருக்கும் போது எவருக்கும் நல்ல எண்ணம் வருவதே இல்லையா? 

ஈழப் பிரியன்,  "பென்ஷன்" எடுதாப் பிறகு தான், பலருக்கும் புத்தி  வரும். 
சந்திரிக்காவும், அதற்கு விதி விலக்கு  அல்லவே....

இப்படியான செய்திகளை வாசித்து,  விட்டு,  கொடுப்புக்குள் சிரித்து விட்டு, போக வேண்டும்.
அதனை... நாம், சீரியஸாக எடுத்தால்,  எமக்கு  "பிளட்  பிரஷர்" உச்சத்துக்கு   ஏறி விடும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

தினமும் Scotch Whisky இல் புரளுபவர், சந்திரிகா அம்மா.

காலையில், வேளைக்கு எழும்புவது கஷ்டம்தான்.

சந்திரிக்கா... பிரான்சில்,  படித்து வளர்ந்தவர் என்பதால், "வைன்"  தான்... குடிப்பார் என நினைத்தேன்.
அவர்  Scotch Whisky  குடிக்கிறவர் என்று, நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப் பிரியன்,  "பென்ஷன்" எடுதாப் பிறகு தான், பலருக்கும் புத்தி  வரும். 
சந்திரிக்காவும், அதற்கு விதி விலக்கு  அல்லவே....

இப்படியான செய்திகளை வாசித்து,  விட்டு,  கொடுப்புக்குள் சிரித்து விட்டு, போக வேண்டும்.
அதனை... நாம், சீரியஸாக எடுத்தால்,  எமக்கு  "பிளட்  பிரஷர்" உச்சத்துக்கு   ஏறி விடும். :grin:

அதை மனதுக்குள் நினைதா யார்தான் கேட்கப் போகிறார்கள். இப்படி கூட்டம் கூட்டியா சொல்ல வேண்டும்.

15 minutes ago, தமிழ் சிறி said:

சந்திரிக்கா... பிரான்சில்,  படித்து வளர்ந்தவர் என்பதால், "வைன்"  தான்... குடிப்பார் என நினைத்தேன்.
அவர்  Scotch Whisky  குடிக்கிறவர் என்று, நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.  :grin:

நாளாந்தம் வைனை அடிக்க அடிக்க ஒன்றும் வேலை செய்யவில்லை என்று இப்போ நேராகவே விஸ்கி தானோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளசிதான் தினமும் சந்திரிக்கா அம்மையாருக்கு விஸ்கி ஊத்திக் கொடுத்து பிரட்டி விடுகின்றவர். அவருக்குத்தான் அம்மையாரை காலையில் எழுப்பும் கஷ்டம் புரியும்!

அம்மையார் எப்படிப் பாடுபட்டாவது மகிந்த கோஷ்டி ஆட்சியைப் பிடிப்பதை தடுக்க முயற்சிக்கின்றார். அதற்காகத்தான் சிறுபான்மை இனங்களிடம் புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்று வார்த்தைஜாலங்களை அள்ளித் தெளிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

-------

அம்மையார் எப்படிப் பாடுபட்டாவது மகிந்த கோஷ்டி ஆட்சியைப் பிடிப்பதை தடுக்க முயற்சிக்கின்றார். அதற்காகத்தான் சிறுபான்மை இனங்களிடம் புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்று வார்த்தைஜாலங்களை அள்ளித் தெளிக்கின்றார்.

ஓமோம்... ரணிலுக்கு, முட்டுக்  கொடுத்து... 
தனது  எதிர்க் கட்சி பதவியை, பறி கொடுத்த.....  சம்பந்தன் போன்ற,  சாணக்கிய...  தலைவர் மாதிரி,
இன்னும் யாராவது... இழிச்சவாய்,  தமிழ் அரசியல்வாதிகள்  அம்பிடுவார்கள்  என்பது, 
சந்திரிக்கா அம்மையாரின்..... எதிர் பார்ப்பாக இருக்கலாம்.

அதுவும்... நடந்தால், ஆச்சரியப் பட  மாட்டோம்.
அந்த... அளவுக்கு, சம்பந்தன் / சுமந்திரன் கும்பல், ஈழ  அரசியலை.... கேவலப் படுத்தி வைத்து விட்டது.    🤬

Edited by தமிழ் சிறி

1 hour ago, தமிழ் சிறி said:

சந்திரிக்கா... பிரான்சில்,  படித்து வளர்ந்தவர் என்பதால், "வைன்"  தான்... குடிப்பார் என நினைத்தேன்.
அவர்  Scotch Whisky  குடிக்கிறவர் என்று, நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.  :grin:

பிரான்சில் படித்து வளர்ந்தால், வைன்தான் குடிக்க வேண்டுமா?

வைன் அடிப்பவர், விஸ்கியை தொட்டும் பார்க்கமாட்டார் என்று நினைக்கிறீர்களா?

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில்,  இரவு நேரங்களில் கொழும்பில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில், விஸ்கி அடித்துவிட்டு நடக்கவும் முடியாமல், அவரை அவரின் மெய்ப் பாதுகாப்பாளர்களினால் தூக்கி காருக்குள் வைப்பார்கள்.

இது வழமையாக நடப்பது.

இந்தளவு, சந்திரிகாவின் முகம் சுருண்டு போனது, விஸ்கியால்தான்!

சந்திரிகா ஒரு பெரும் குடிமகள்.

Chandrika is a notorious drunkard.

1 hour ago, கிருபன் said:

அம்மையார் எப்படிப் பாடுபட்டாவது மகிந்த கோஷ்டி ஆட்சியைப் பிடிப்பதை தடுக்க முயற்சிக்கின்றார்

மகிந்த கோஷ்டி மீண்டும் ஆட்சிக்கு வருவதை, சந்திரிகா தடுப்பது நல்லதுதானே!

முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும்போது, சந்திரிகா எவ்வளவோ நல்லவர்.

We should support for her efforts.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

பிரான்சில் படித்து வளர்ந்தால், வைன்தான் குடிக்க வேண்டுமா?

வைன் அடிப்பவர், விஸ்கியை தொட்டும் பார்க்கமாட்டார் என்று நினைக்கிறீர்களா?

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில்,  இரவு நேரங்களில் கொழும்பில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில், விஸ்கி அடித்துவிட்டு நடக்கவும் முடியாமல், அவரை அவரின் மெய்ப் பாதுகாப்பாளர்களினால் தூக்கி காருக்குள் வைப்பார்கள்.

இது வழமையாக நடப்பது.

இந்தளவு, சந்திரிகாவின் முகம் சுருண்டு போனது, விஸ்கியால்தான்!

சந்திரிகா ஒரு பெரும் குடிமகள்.

Chandrika is a notorious drunkard.

chandrika-kumaratunga.jpg

Bildergebnis für chandrika kumaratunga Ãhnliches Foto

சந்திரிகாவின்... அழகிய முகம், இப்படி மாறியற்கு...  புலிகள் காரணம் என்று நினைத்த எனக்கு,
அவ குடிக்கிற,  "விஸ்கி"  தான்... காரணம் என்ற உண்மையை, கண்டறிந்த  துளசிக்கு பாராட்டுக்கள்.  

இனிமேல்... யாரும், "விஸ்கி"  குடிக்காதேங்கோ.......
குடித்தால்... சந்திரிகா முகம் வந்திடும். ஆமா.... 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

சந்திரிக்கா... பிரான்சில்,  படித்து வளர்ந்தவர் என்பதால், "வைன்"  தான்... குடிப்பார் என நினைத்தேன்.
அவர்  Scotch Whisky  குடிக்கிறவர் என்று, நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.  :grin:

 நோமலாய் வைன் தான்.......

விஸ்கி அடிக்க பழக்கினது ஆரெண்டுன்நினைக்கிறியள்????

வேறை ஆர் எங்கடை கதிர்காமர்தான்..😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 நோமலாய் வைன் தான்.......

விஸ்கி அடிக்க பழக்கினது ஆரெண்டுன்நினைக்கிறியள்????

வேறை ஆர் எங்கடை கதிர்காமர்தான்..😎

அட்றா... சக்கை, குமாரசாமி அண்ணை. :grin:
நான்... இந்தக் கோணத்தில், சிந்தித்துப் பார்க்கவேயில்லை.  😝

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, thulasie said:

மகிந்த கோஷ்டி மீண்டும் ஆட்சிக்கு வருவதை, சந்திரிகா தடுப்பது நல்லதுதானே!

முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும்போது, சந்திரிகா எவ்வளவோ நல்லவர்.

We should support for her efforts.

எந்த சிங்களக்கட்சி வந்தாலும் இலங்கை தமிழருக்கு விமோசனம் இல்லை.
இது 60வருட அரசியல் அனுபவம். ஒரு இஞ்சியளவு கூட இய்ய விடமாட்டார்கள்.

1 hour ago, குமாரசாமி said:

 நோமலாய் வைன் தான்.......

விஸ்கி அடிக்க பழக்கினது ஆரெண்டுன்நினைக்கிறியள்????

வேறை ஆர் எங்கடை கதிர்காமர்தான்..😎

நீலன் திருச்செல்வமும் இருந்திருந்து விஸ்கி அடிப்பவர் - 🍷

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, thulasie said:

நீலன் திருச்செல்வமும் இருந்திருந்து விஸ்கி அடிப்பவர் - 🍷

ம‌ருந்தாக பாவித்திருப்பார்😀

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

எந்த சிங்களக்கட்சி வந்தாலும் இலங்கை தமிழருக்கு விமோசனம் இல்லை.
இது 60வருட அரசியல் அனுபவம். ஒரு இஞ்சியளவு கூட இய்ய விடமாட்டார்கள்.

சில முற்போக்கு சக்திகள்(???) சொல்லுவினம் இந்த 60 வ‌ருடத்தில் முதல் 30 வருடம் சிங்களர்கள் அரசியல் தீர்வை கொடுப்பதற்காக அயராது உழைத்து ஒர் தீர்வை கொடுக்க முன்வரும் பொழுது தமிழரின் ஆயுத போராட்டம் அதை சிதைத்து விட்டது   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, putthan said:

சில முற்போக்கு சக்திகள்(???) சொல்லுவினம் இந்த 60 வ‌ருடத்தில் முதல் 30 வருடம் சிங்களர்கள் அரசியல் தீர்வை கொடுப்பதற்காக அயராது உழைத்து ஒர் தீர்வை கொடுக்க முன்வரும் பொழுது தமிழரின் ஆயுத போராட்டம் அதை சிதைத்து விட்டது   

ஆயுத போராட்டத்தை குறை குற்றம் சொன்ன ஆக்களைத்தான் 2009க்கு பிறகு காணவேயில்லை. புலி துலைஞ்சால் காணும் எண்டவையள் இப்ப சிங்களவைனை திட்டிக்கொண்டு திரியினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.