Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

🌷..............(16).


                      
                                                          துரையப்பா ஸ்ரேடியத்தை தற்காலிகமாக பெரிய பந்தல்கள் போட்டு நிறைய கதிரைகள் எல்லாம் போட்டு அலங்கரித்திருக்கிறார்கள்.மணமக்கள் ஐயர் மற்றும் பெண்களின் பெற்றோர் பாட்டி எல்லோரும் வந்து விட்டார்கள். நடுநடுவே நாலு இடங்களில் வெள்ளித்திரை அமைத்து  திருமணத்தை நேரடியாக காண ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள்.  ரவீந்திரன் ஆரவ் அவர்களுடைய கைபேசியில் வாழ்த்துக்கள் வந்து குவியுது. மரியா  தனது போனை பாட்டியிடம் குடுத்து விட்டாள் கவனமாய் வைத்திருக்கும்படி. கிழவியும் அதை வாங்கி கொட்டைப் பெட்டியில் பத்திரப் படுத்திக் கொண்டாள். மேடை முழுதும் சாம்பிராணி புகை நிறைந்திருக்கு. ஐஞ்சாறு வான் நிறைய உணவுவகைகள் சுடச்சுட வந்து காத்திருக்கு. சக போலீசார் எல்லோரும் அவர்களது குடும்பத்தினருடன் வந்து குழுமி இருக்கின்றனர்.
                           தற்காலிகமாக பொலிஸாரின்  கடமையை செய்வதற்கு இராணுவம் அழைக்கப் பட்டிருக்கு. ஆயினும் என்ன சுமார் முந்நூறு பேர்வரைதான் அங்கிருக்கின்றனர். மிச்ச கதிரைகளுக்கு இடையால முத்தவெளி மாடுகள் இடறுப்பட்டுக் கொண்டு அங்கும் இங்கும் திரியுது. காஞ்சனா ரவீந்திரனையும் ஆரவ்வையும் பார்த்து கேட்கிறாள் என்ன ஆயிரக்கணக்கானவர்கள் வருவினம் என்று சொன்னீங்கள் கொஞ்ச பேர்தான் வந்திருக்கினம் என்று......! படுபாவிகள் எல்லோரும் போனிலேயே வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறாங்கள் என்று போனைக் காட்டுகிறான்.நான் எங்கட ப்ரண்ட்ஸை அழைக்கவா என்று கஞ்சனா கேட்க தாராளமா அழைத்து கொள் என்று ரவீந்திரன் சொல்கிறான்.உடனே அவள் தனது போனில் ஒரு மெசேஜ் தட்டிவிட்டு பேசாமல் இருக்கிறாள். என்ன யாரோ ஒருவருக்கு சொல்லவா இவ்வளவு பில்டப் குடுத்தனி என்று ஆரவ் நகைக்கிறான்.
                                        சற்று நேரத்தில் ஒருவர் இருவராக ஆட்கள் வந்து குவியத் தொடங்குகிறார்கள்.மாடுகள் எல்லாம் அப்பால் போக கதிரைகள் நிரம்புகின்றன. என்னடி இவ்வளவு பேரா என்று ரவீந்திரன் கேட்க இல்லை இவர்கள் எல்லாம் முன்பு எங்களுடைய சேல்ஸ்மென் ஆட்கள்தான். இன்னும் கஸ்ட்டமர்ஸுக்கு சொல்லவில்லை, அவர்களையும் அழைக்கவா என்று கேட்க, வேண்டாம் தாயே இவ்வளவும் போதும் எங்கள் மானத்தை காப்பாற்றினாய் என்று இருவரும் கோரஸ்ஸாய் சொல்கிறார்கள்.இந்த களேபரத்துடன் கெட்டி மேளம் ஒலிக்க ஜாம் ஜாம் என்று இருவரும் தாலி கட்டுகிறார்கள். மாலையில் கேக் வெட்டுறதும் இரவு நடன நிகழ்ச்சிகளும் உண்டு என அறிவிக்கிறார்கள்.
 எல்லோரும் தம்பதிகளுடன் சேர்ந்து படங்களும் வீடியோக்களும் எடுக்கின்றனர். மகேசன் கிளாரிடாவுடன் வந்து படம் எடுக்கும்போதுதான் காஞ்சனாவை பார்க்கிறார். உடனே ரவீந்திரனிடமும் கிளாரிடாவிடமும் இந்தப் பெண்தான் அன்று அந்த சிவமூலிகை வைத்து கட்டுக்கு கட்டு  கட்டி விட்டவ  என்று சொல்ல கிளாரிடாவும் ஏய் காஞ்சனா அந்த சிகரெட் இன்னும் இருக்கா என்று ரகசியமாய் கேட்கிறாள்.காஞ்சனாவும் இல்லை என்று உதட்டைப் பிதுக்குகிறாள்......! 
                                     

                                    ஒலிபெருக்கியில் பாட்டுக்கள் அமர்க்களப் படுகுது.அப்போது ரவீந்திரன் மைக்கை வாங்கி   ஒரு முக்கிய அறிவிப்பை சொல்கிறார்.......!
              இங்கு பெருந்திரளாக வந்திருக்கும் கஞ்சாக் கனவான்களே ,கஞ்சா சீமாட்டிகளே  போலீஸ் உங்களின் நண்பன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். விதிவிலக்காக இன்று உங்களை யாரும் இன்று கைது பண்ண போவதில்லை. நீங்கள் உங்களிடம் வைத்திருக்கும் கஞ்சா பொட்டலங்கள்,சிகரெட்டுகள் யாவற்றையும்  நீங்களாகவே முன்வந்து மேடைக்கு அருகில் இருக்கும் பெட்டியில் சேர்ப்பித்து விடுங்கள் இது இந் நாட்டுக்கும் வீட்டிற்கும் நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு அது மட்டுமல்ல இவையே நீங்கள் எங்களுக்கு தரும் திருமணப் பரிசாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று சொல்கிறார்.எல்லோரும் வரிசையில் நின்று முகத்தை மறைத்து கொண்டு வரும்போது அவன் மீண்டும் யாரும் முகத்தை மூடத் தேவையில்லை.இந்த மைதானம் முழுதும் அறுபத்திநாலு கமராக்கள் தொடர்ந்து படமெடுத்து கொண்டிருக்கு என்று சொல்ல ......அவர்களும் தைரியமாக சிரித்துக் கொண்டு வந்து அவற்றை அங்கு குடுத்து விட்டு வந்தமர்கின்றனர்......!
உடனே மகேசன் அங்கு வந்து தன் மனைவி கிளாரிடாவையும் அங்கிருந்த ஒரு பெண்ணையும் அழைக்கிறார்.உன் பேர் என்னம்மா........!
ஸ்னேகா சேர் ......ஓ நல்ல பெயர். நீயும் கிளாரிடாவுமாக சேர்ந்து இந்த கஞ்சா பெட்டியை தூரத்தில் கொண்டுபோய் எரித்து விடுங்கள் என்கிறார்.....!
அவர்களும் சந்தோசமாக அதை ஓரமாக இழுத்து சென்று தங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கஞ்சாவும், சிகரெட்டும் எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டு பெட்டியை கோட்டை அகழிக்குள் தள்ளி விட்டு எரித்து விடுகின்றனர்......!

                                            கிழவி எழுந்து வந்து காஞ்சனாவிடம் பிள்ளை எனக்கு தலை இடிக்குது நான் பஸ்ஸில வீட்ட போறன் என்று சொல்ல அவளும் கிழவியுடன் படமும் வீடியோவும் எடுத்து விட்டு அனுப்புகிறாள்.கிழவி வெளியே வர ஒரு சிகப்பு வோக்ஸ்வேகன் அவளருகில் வந்து நிக்கிறது. ஏறுங்கோ பாட்டி நான் உங்களை வீட்டில் விடுகிறன் என்று ஸ்னேகா சொல்லி கதவைத் திறந்து விட கிழவியும் ஏறிக் கொள்கிறாள்.அவளை  கந்தர்மடத்தடியில் அவள் வீட்டில் இறக்கி விட்டு ஸ்னேகா வேகமாக போகிறாள்.....!

                        வந்திருந்த எல்லோரும் வரிசையாக சென்று மணமக்களை வாழ்த்துகின்றார்கள்......!
                                                     
                              மகேசன் கனகுவிடம்  பெருமையாக  பார்த்தியா கனகு வந்த படகும் திரும்பி போய் விட்டது.இந்த அறிவிப்பு மூலம் குடாநாட்டில் இருந்த மிச்ச சொச்ச கஞ்சாவும் வந்து சேர்ந்து விட்டது என்கிறார்.தற்சமயம் குடாநாட்டில் யாரிடமும் கஞ்சா இல்லை என்று சொல்ல  யெஸ் சேர் என்று அவனும் அதை ஆமோதிக்கிறான்......! 
 எல்லோருக்கும்  திருமண விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருக்கு.....!


                            காஞ்சனா வீட்டில் கிழவியின் கொட்டைப் பெட்டிக்குள் இருந்து மரியாவின் போன் ஒலிக்கிறது. கிழவி அதை எடுத்து ஹலோ என்கிறாள்.....!
நீங்கள் மரியாவா, மரியா நீங்கள் இப்ப கஞ்சா விக்கிறதில்லையாமே, ப்ளீஸ் எனக்கு ஒரேயொரு  பொட்டலம் மட்டும் தர முடியுமா ப்ளீஸ் மரியா கெஞ்சுகிறான்....!
   அடி  செருப்பால, ஆரடா சொன்னது கஞ்சா விக்கிறேல்லை என்று. நீ வா நான்தாறன்.ரகசியம் யாருக்கும் சொல்லிபோடாதை,  உன்ர கூட்டாளிகளுக்கு  மட்டும் சொல்லு. போனை பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து இறப்புக்குள் (கூரைக்குள்) இருந்த கஞ்சா பெட்டியை எடுக்கிறாள். (அன்று அந்த மழைநாளில் ரவீந்திரன் காஞ்சூண்டியை மாற்றி வைத்து விட்டு ப்ரிட்ஜில் இருந்த கஞ்சாவை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு உள்ளே போக கிழவி எடுத்து இறப்புக்குள் வைத்துப் போட்டுது). ஒரு வாழையிலையை வெட்டி வந்து பிறப்பக்கமாய் தணலில் வாட்டி விட்டு அதை சதுரம் சதுரமாய் வெட்டி பெட்டிக்குள் இருந்து எல்லிப்போல கஞ்சாவை எடுத்து இலையில் வைத்து மடித்து வாழைநாரால் கட்ட அவன் வருகிறான்.அவனிடம் இரண்டு  பொட்டலம் குடுத்து போட்டு காசை வாங்கி கொட்டைப்பெட்டிக்குள் பத்திரப் படுத்துது.....!

🍃 🐃..................வளராது.......!
                                       
                                                              
யாவும் கற்பனை.....!
யாழ் 21 அகவைக்காக....!

ஆக்கம் சுவி .....!

(இதுவரை ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்).
 

  • Replies 60
  • Views 9.7k
  • Created
  • Last Reply

நீண்ட நாளைக்குப் பிறகு நல்லதோர் தொடர்கதையை வாசித்த அனுபவம். 

உங்கள் அற்புதமான கற்பனாசக்தியை எழுத்துக்களில் வடித்து எமது ரசனைக்கு விருந்தளித்த உங்களுக்கு நன்றி, சுவி அண்ணா! 😊

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

இன்னும் கஸ்ட்டமர்ஸுக்கு சொல்லவில்லை, அவர்களையும் அழைக்கவா என்று கேட்க, வேண்டாம் தாயே இவ்வளவும் போதும் எங்கள் மானத்தை காப்பாற்றினாய் என்று இருவரும் கோரஸ்ஸாய் சொல்கிறார்கள்.இந்த களேபரத்துடன் கெட்டி மேளம் ஒலிக்க ஜாம் ஜாம் என்று இருவரும் தாலி கட்டுகிறார்கள். மாலையில் கேக் வெட்டுறதும் இரவு நடன நிகழ்ச்சிகளும் உண்டு என அறிவிக்கிறார்கள்.

ஸ்ரேடியம் தானே கஸ்டமசுக்கும் சொல்லி ஊரையே கூட்டியிருக்கலாம்.

7 hours ago, suvy said:

யாவும் கற்பனை.....!
யாழ் 21 அகவைக்காக....!

இவ்வளவு தூரம் கற்பனை பண்ணியிருக்கிறீர்கள்.ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுவியண்ணா அவசரப் பட்டு முடித்திட்டீங்கள் ?
 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

🌷..............(16).


                            காஞ்சனா வீட்டில் கிழவியின் கொட்டைப் பெட்டிக்குள் இருந்து மரியாவின் போன் ஒலிக்கிறது. கிழவி அதை எடுத்து ஹலோ என்கிறாள்.....!
நீங்கள் மரியாவா, மரியா நீங்கள் இப்ப கஞ்சா விக்கிறதில்லையாமே, ப்ளீஸ் எனக்கு ஒரேயொரு  பொட்டலம் மட்டும் தர முடியுமா ப்ளீஸ் மரியா கெஞ்சுகிறான்....!
   அடி  செருப்பால, ஆரடா சொன்னது கஞ்சா விக்கிறேல்லை என்று. நீ வா நான்தாறன்.ரகசியம் யாருக்கும் சொல்லிபோடாதை,  உன்ர கூட்டாளிகளுக்கு  மட்டும் சொல்லு. போனை பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து இறப்புக்குள் (கூரைக்குள்) இருந்த கஞ்சா பெட்டியை எடுக்கிறாள். (அன்று அந்த மழைநாளில் ரவீந்திரன் காஞ்சூண்டியை மாற்றி வைத்து விட்டு ப்ரிட்ஜில் இருந்த கஞ்சாவை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு உள்ளே போக கிழவி எடுத்து இறப்புக்குள் வைத்துப் போட்டுது). ஒரு வாழையிலையை வெட்டி வந்து பிறப்பக்கமாய் தணலில் வாட்டி விட்டு அதை சதுரம் சதுரமாய் வெட்டி பெட்டிக்குள் இருந்து எல்லிப்போல கஞ்சாவை எடுத்து இலையில் வைத்து மடித்து வாழைநாரால் கட்ட அவன் வருகிறான்.அவனிடம் இரண்டு  பொட்டலம் குடுத்து போட்டு காசை வாங்கி கொட்டைப்பெட்டிக்குள் பத்திரப் படுத்துது.....!

🍃 🐃..................வளராது.......!
                                       
                                                              
யாவும் கற்பனை.....!
யாழ் 21 அகவைக்காக....!

ஆக்கம் சுவி .....!

(இதுவரை ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்).
 

Ãhnliches Foto Ãhnliches Foto

காஞ்சனாவின்  கிழவிக் காறி, கஞ்சா விற்றும்... "ஹாண்ட் பாக்" வாங்காமல்,
கொட்டைப்  பெட்டிக்குள்...  "ஐ போன்" வைத்திருக்கும், பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. :grin:

கிழவி... பேய்க் கிழவியாய் இருக்கு ....  எல்லாரையும், பேக்காட்டி போட்டுது. 🤣

சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத.. அருமையான கதையை எழுதிய :110_writing_hand:  சுவியருக்கு நன்றியும், பாராட்டுக்களும். :):)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2019 at 10:34 PM, மல்லிகை வாசம் said:

சுவி அண்ணா, அசத்தலான ஆரம்பம். நாங்கள் சிரிக்க ரெடி! தொடருங்கள். 😀

தொடர்ந்து முடித்து விட்டோம் மல்லிகை வாசம்.

On 3/9/2019 at 10:48 PM, ஈழப்பிரியன் said:

புலிகளுக்கு முன்னர் நீதிமன்றங்களில் கூடுதலான வழக்குகள் பங்குக்காணி பங்குக்கிணறு அதுவும் கூடுதலாக சகோதரங்கள் மிகவும் நெருங்கிய சொந்தம் என்று தான் இருக்கும்.

 

அப்ப மட்டுமல்ல இப்போதும் காணி வழக்குகளுக்கு குறைவில்லை.......!  😁

On 3/9/2019 at 10:50 PM, புங்கையூரன் said:

வளரட்டும் .... சுவியர்!

வளர்ந்து அறுவடையும் ஆகி விட்டது புங்கையூரன் ........நன்றி....!  😁

On 3/10/2019 at 12:03 AM, குமாரசாமி said:

கஞ்சா.....காஞ்சனா.....கண்ணி.......!

கதை ஒரு மார்கமாய்த்தான் போகும் போலை கிடக்கு....👍

கொஞ்சம் கிளாமராய் இருக்கட்டும் என்றுதான் இதை எழுதும் முன்பு நினைத்தேன், நான் நினைத்ததைவிட அதிக ஆதரவு தந்ததற்கு நன்றி கு.சா.....!  👍

On 3/10/2019 at 8:19 AM, ஜெகதா துரை said:

 சுவி அண்ணா !

சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......! என்று எழுதியிருக்கிறீர்கள் ஆரம்பமே  சிரிப்போட  சிந்திக்கக் கூடியதாய் இருக்கு, தொடருங்கள்.......

சும்மா சிரித்தாள் மட்டும் போதாது சகோதரி, கொஞ்சம் சிந்திக்கலாம்தானே....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2019 at 1:27 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்பிடி நகைச்சுவையாக எழுத உங்களால்த்தான் முடியும்

நகைச்சுவையாய் இருக்கட்டும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன் சகோதரி.நன்றி கருத்து பகிர்வுக்கு  .....!  👍

On 3/11/2019 at 1:57 PM, ஈழப்பிரியன் said:

நீண்ட நாட்களின் பின் புட்டுக்கிட்டுது என்ற சொல்லை பார்த்திருக்கேன்.

கூடியவரை பழைய சொற்களை பயன்படுத்தவே விரும்புவேன் பிரியன்....!  😁

On 3/11/2019 at 2:19 PM, ஈழப்பிரியன் said:

சுவி ,

ரவீந்திரன் ,கனகு, மார்க்கண்டு ,மகேசன் எல்லாம் தமிழ் பொலிசாவே இருக்கு.

கதையானாலும் ஒரு சிங்கள பொலிஸ் தானும் இல்லையே என்று மனதுக்குள் சந்தோசமாக இருக்கு.
ஆனால் இனி பதவி உயர்வுக்காக மார்க்கண்டு என்ன செய்யப் போகிறார் என்னு சந்தேகமாக இருக்கு.ஐயா தமிழ் பொலிசை நாறடிச்சிடாதீங்க.ரொம்ப ஏமாற்றமாக போயிடும்.

இந்தக் கதையில் யாரும் வில்லன் இல்லை.பொதுவாய் மனிதர்கள் அவர்களின் சில குறை நிறைகளுடன் வலம் வருவார்கள்....!  👍

On 3/11/2019 at 8:33 PM, ரதி said:

அட்டகாசம் சுவியண்ணா...தொடருங்கள் 

 

உங்கள் போன்றவற்றின் ஆதரவும் ஊக்கமும்தான் எழுத வைக்குது சகோதரி....!   👍

On 3/11/2019 at 10:08 PM, புங்கையூரன் said:

தொடருங்கள் சுவியர்....!

பின்னர் கருத்து எழுதுகின்றேன்....!

கதை முடிஞ்சாச்சுது கருத்து எங்கே .........!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2019 at 5:25 AM, தமிழ் சிறி said:

நல்லதொரு நகைச் சுவை கதை சுவி. இதற்கு எடுத்த கரு... மிக அருமை. 
எந்தக்  கோணத்தில், கதையை... நகர்த்தினாலும், சிரிப்புக்கு பஞ்சம் இராது என்பது திண்ணம்.

தற்போது எங்கும் செய்திகளில் கஞ்சாதான் கதாபாத்திரம்.அதுதான் ஒரு நகைச்சுவையாகவும் கிளாமராகவும் இருக்கட்டும் என்று திடீரென எடுத்த முடிவுதான்.அது யூரோப் முழுதும் பிரயாணங்களின்  இடையில் எழுதவேண்டியதாய் போச்சுது.இன்னும் வீட்டுக்கு போகவில்லை.இப்போது ஸ்ராஸ்பெர்க்கில் மகனுடன் நிக்கிறோம். நாளைக்கு பாரிஸ், பின்புதான் வீடு. நன்றி சிறியர்....!  😁

On 3/12/2019 at 8:31 AM, மல்லிகை வாசம் said:

இந்தியா சுதந்திரமடைவற்குச் சற்று முன்னான காலப்பகுதியில் வெளியான 'துப்பறியும் சாம்பு' எனும் நாவலைத் தழுவிய வை.ஜி.மகேந்திரனின் நகைச்சுவை நாடகத் தொடரொன்றைப் பார்த்திருக்கிறேன். அது போல் நாடகங்கள் தற்போது ஏன் வெளிவருதில்லை என்றும் யோசித்திருக்கிறேன்.

உங்கள் தொடரை வாசிக்கையில் அந்த நாடகம் பார்த்த உணர்வு மீண்டும் கிடைக்கிறது. தொடருங்கள், நாமும் இணைந்திருக்கிறோம். 😊

உண்மைதான் மல்லிகை. அவையெல்லாம் அன்றைய காலத்தில் நானும் நிறைய வாசித்திருக்கிறேன்.ஆனால் எழுதுவேன் என்று கனவு கூட கண்டதில்லை.உங்களின் பாராட்டுக்கள் சந்தோசமாய் இருக்கு.யாழ் இஸ் பெஸ்ட் .......!  😁

On 3/12/2019 at 10:55 AM, putthan said:

சுவியர் தொடர் சூப்பர் தொட‌ருங்கள் .....வாசிக்க வாசிக்க சிரிப்புதான் வருகின்றது

நல்லகாலம் தப்பினேன் புத்ஸ் .......இல்லையென்றால் நகைசுவை என்று நானே எழுதி நானே சிரித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்......நன்றி புத்ஸ் .....! 👍

On 3/12/2019 at 10:57 PM, ஈழப்பிரியன் said:

கஞ்சா காசிவரை போட்டுதா?

காசி விஸ்வநாதரின் தரிசனத்தை காசியில்தான் கஞ்சா குடுக்குது தெரியாதா.....நன்றி ஈழப்பிரியன்.....!   😁

On 3/13/2019 at 12:22 AM, நிலாமதி said:

சு வியரின்  கஞ்சா  காஞ்சனா  ...நீர்  வீழ்ச்சி  மாதிரி   ...வேகமாய் இருக்கிறது . தொடருங்கோ 😀

வேகமாய் விழுந்த அருவி கடலில் கலந்து விட்டது சகோதரி.இனி முடிவை  நீங்கள்தான் சொல்லவேண்டும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணாவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2019 at 1:45 AM, தமிழ் சிறி said:

சுவியரின் கதையில், நம்ம ஏரியாவும் வந்தது மிக மகிழ்ச்சி. :102_point_up_2:
ஆரவ்... தகர வேலிக்கு  கீழால் பார்க்கும் போது... 
தெரிந்தவற்றை வர்ணித்த விதம் அழகோ... அழகு. :grin:
மரியா... ஜட்டி போட்டிருந்த படியால், ஆரவ்....  மயக்கம் வராமல் தப்பினார். 😝

கஞ்சா வேட்டைக்கு போய்... காஞ்சோண்டி  இலைகளை புடுங்கிக் கொண்டு வந்தால், 
பதவி உயர்வு எப்படி கிடைக்கும்?   🤣

முன்பெல்லாம் மேலே தகரமும் கீழே முள்ளுகம்பியும்தான் அடித்திருப்பார்கள். நாயும் அதுவரை வந்து புழுதி பறக்க குரைக்கும்.அதை நினைத்துதான் எழுதியது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்.......!  👍

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 4:16 PM, ஈழப்பிரியன் said:

ஆகா காஞ்சூண்டி ரொம்பகாலத்தின் பின் இதை ஊரில் காணக் கிடைக்கவில்லை.

இது மைன்ட் வொய்ஸ் என்றெல்லோ நினைத்தேன்.

இங்கும் காஞ்சசூண்டிகள் நிறைய இருக்கின்றன ஈழப்பிரியன். ஆத்தங்கரையோர பூங்காவில் சோலையாக வளர்ந்திருக்கின்றன.இலைகளும் மிகப் பெரிதாக .......!   😄

 

On 3/14/2019 at 4:32 PM, ஈழப்பிரியன் said:

கதை கஞ்சாவுடன் போகும் என்று பார்த்தா தொழில் வேற மாதிரி போகுதே.

இப்ப சொல்லுங்கள் தொழில் எப்படி என்று......!   😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.