Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kavallur Kanmani said:

ஈழப் பிரியன் நினைத்ததுபோல்  இதற்கெண்டாலும் பதில் எழுதாமல் நித்திரை வராதாம். வேறென்ன அங்க இருக்கும் அந்த அட்டை யாரையோ பதம் பார்த்திருக்கிறது என் நினைக்கிறேன். அங்குள்ள அட்டை கடித்தால் இரத்தத்தை உறிஞ்சி விடும். புங்கையின் ரென்சன் குறைந்து விட்டதா. பயணத் தொடர் மிக அருமையாக செல்கிறது. தொடருங்கள்.

மர்மமாக வைத்திருக்க விடமாட்டியளே.

சரி யாருக்கு கடித்ததென இன்னும் ஒருவருக்கும் தெரியாது தானே?

  • Replies 145
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சும்மா ஒரு தூண்டிலைப் போட மீன் தானா வந்து கொழுவிட்டுது......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

சகோதரி சும்மா ஒரு தூண்டிலைப் போட மீன் தானா வந்து கொழுவிட்டுது......!  😁

அடுத்தவர் மாட்டுப்படுகிறார் என்றால் எவ்வளவு சந்தோசம்.
ஆகா ஆகா நல்லா இருங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

ஈழப்பிரியன்.. ஒரு கலை ரசனையுடன்... காகம் கொத்திய பலாப்பழ பட  இணைப்பிற்கு நன்றி. 
அந்தப் படத்தைப்  பார்க்க, ஒரு சிமைலி  முகம் போல் உள்ளது. மிக ரசித்தேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                                      வானுக்குள் இருந்து அவலக்குரல் வருகிறதே தவிர என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை.இதில் பின்னுக்கிருந்து கூக்குரலிட்ட பலருக்குமே தெரியாது.தாய் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று ஒரே இரத்தமல்லவா ஒன்று கத்த எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்துவிட்டார்கள் என்ன ரத்தபாசம்.கடைத்தெருவென்றபடியால் வானால ஆக்கள் இறங்க முதலே வெளியாட்கள் ஒவ்வொன்றாக கூடிவிட்டனர்.அட்டை அட்டை என்று கொண்டு ஆளையாள் இடித்துத் தள்ளிக் கொண்டு இறங்கினார்கள்.அட்டை எப்படி வந்தது யாருக்கு கடித்ததென்றே தெரியாது.

                                     வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் இந்த அம்மாவுக்கு தான் இரத்தம் வருகுது இவவுக்கு தான் கடித்து போட்டுது என்று எனது மனைவியைக் காட்டியதும் ஓய்ந்து போயிருந்த அவலக்குரல் மீண்டும்.இன்னொருவர் அட்டை ரத்தமெல்லாம் குடிச்சு முடிச்சிட்டுது என்றதும் அழுகையின் சத்தம் இன்னும் கூடுது.எமக்கு அட்டையின் அனுபவமோ முன்னர் பின்னர் பார்த்ததோ இல்லை.அதிலே நின்றவர்கள் தான் இரத்தம் குடிக்கமுதல் சின்னூன்டாக இருக்கும்.இது குடிச்சு முடிச்சிட்டுது இனி பிரச்சனையே இல்லை என்றார்கள்.வடிந்த இரத்மெல்லாம் கழுவி பயணம் தொடர்ந்தாலும் நீண்ட தூரம் போகும் வரை ஆளையாள் பார்க்கிறதும் அட்டை ஏதாவது வந்திட்டுதா என்று கால்களைப் பார்ப்பதிலுமே இருந்தார்கள்.

                                  இதற்கிடையில் கிடைத்த நேரத்தை அட்டை எப்போது ஏறியிருக்கும் என்று எடுத்த படங்களை மருமகன் தேடிப் பார்த்தா பங்களா வாசலில் எல்லோரும் நின்று படம் எடுத்த போது எனது மனைவியின் காலில் அட்டை தெரிகிறது.நீங்களும் அந்த அட்டையைப் பார்க்கலாம்.

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

                                   நேராக கண்டி போய் நகரத்தை சுற்றிப் பார்த்து தலதாமாளிகைக்கும் போனோம்.அங்கு ஒருவருக்கும் பெரிதாக மனதைக் கவரவில்லை.மதியம் சாப்பிட்டுவிட்டு சிகிரியா நோக்கி புறப்பட்டோம்.பொழுதுபடும் போது போய்ச் சேர்ந்தோம்.ஏற்கனவே ஒழுங்கு செய்த விலாசத்துக்கு  (அவ்வளவு பெரிய வசதி இல்லாவிட்டாலும் புதியது)போனால் ஒரு சிங்கள பெண்மணி கணவன் பொலிஸ் என்றும் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்று சொன்னார்.

                                   ஒரு அரைமணி நேரத்தில் வீட்டுக்காரரும் வந்திருந்தார்.எந்த இடம் என்று சுகம் விசாரித்தார்.கோப்பாய் என்றதும் ஓ நானும் கோப்பாய் போலிசில் வேலை செய்தனான் என்றார்.அப்போது மனைவியின் தங்கச்சி முன்னுக்கு வந்து என்னைத் தெரியுதோ என்றா.என்னடா என்று எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தா கெல்மட் வைத்துக் கொண்டு போடாமல் போனதற்கு 500ரூபா தண்டம் விதித்திருக்கிறார்.காசு கொஞ்சம் தாறன் என்று சொல்லியும் தண்டம் அறவிட்டுவிட்டீரே என்றா.ஓ அப்படியா சிலவேளை யாரும் சிக்கலான ஆட்கள் நின்றிருப்பார்கள் இல்லாவிட்டால் விட்டிருப்பேன் என்றார்.தம்பி நல்லா உழைத்துக் கொண்டு நல்ல இடத்தில் இடமாற்றம் பெற்று பணங்களையும் வீணடிக்காமல் நல்லதொரு முதலீடாக்கியுள்ளார்.எல்லோரும் வேளைக்கு படுத்து வேளைக்கே சிகிரியா போவதற்காக படுத்துவிட்டோம்.

5-E667863-74-B6-42-C8-B320-0899-AB1217-D

                                   காலையில் எழுந்து மாமியாரை சாரதியுடன் விட்டுவிட்டு நாங்கள் சிகிரியா பார்க்க சென்றோம்.பக்கத்திலே தான் நடந்தே போகலாம்.உள்நாட்டவருக்கு 100 ரூபாவும் வெளிநாட்வருக்கு 4000ரூபாவும் அறவிடுகிறார்கள்.கீழே இருந்து பார்க்க சிறிய தூரம் மாதிரி தெரிந்தது.மேலே ஏறஏற சில இடங்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது.எத்தனையோ பேர் இடையிடையே நின்று பயந்து குளந்தைகள் போல அழுகிறார்கள்.மேலே போகப்போக கருங்குளவி பெரிய பெரிய கூடுகள்.ஒன்றிரண்டு ஆங்காங்கே பறந்தாலும் அனேகமானவை அமைதியாக இருந்தது.சத்தம் செய்பவர்களை காசுக்கு ஆட்களை கூட்டி வருபவர்கள் சத்தம் போட வேண்டாம் என்று குளவிக் கூட்டை காட்டுகிறார்கள்.அனுபவம் போலும்.ஆங்காங்கே எச்சரிக்கை பலகை மும்மொழிகளிலும் போடப்பட்டிருந்தது.அனைவருமே ரசித்து பார்த்தோம்.இதற்கு முதல் பார்க்கவில்லை என்பதால் எல்லோரும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.

                                              அடுத்து திருகோணமலை நோக்கி போக வேண்டும்.இடையில் மின்னேரியாவில் யானைகள் பார்க்க போக வேண்டுமென்றார்கள்.மின்னேரியா போக வழி நெடுகிலும் சேறுசகதிக்குள் ஓடக் கூடிய வாகனங்களுடன் ஆக்களைக் கூட்டிக் கொண்டுபோக தயாராக நிற்கிறார்கள்.5-6 ரக் நின்ற இடத்தில் விபரங்கள் கேட்டோம் எவருக்கும் தமிழ் தெரியவில்லை.எமக்கு கொஞ்ச கொஞ்ச சிங்களம்.மின்னேரியாவை விட கடுல்லவேவா என்ற இடம் கூடதலான யானைகள் வரும் 3000 ரூபா கூட என்றார்கள்.எல்லோரும் ஒரே ரக்கில் போனோம்.

7070585-D-F792-4-AA5-A3-BC-8-C4-E2957-ED

                                              அந்த ஏரியா உள்நுழையும் போதே ஜெராசீக் பாக்கில் வாறமாதிரி இரண்டு பக்கமும் மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்.உள்ளே போவதற்கு பயணச் சீட்டுகளை சாரதியே வாங்கி வந்தார்.சரதாரண வண்டியில் போனால் வண்டி உருப்படியாக வந்து சேராது.ஒரே பள்ளமும் புட்டியும் சேறும் சகதியும்.இடையிடையே யானைக் கூட்டங்கள் வந்தாலும் கூடுதலான யானை வாவிக்கருகில் தண்ணீர் குடிக்க வரும் என்றார்.எல்லோருமே அந்த இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தனர்.
 
                                          வாவி அருகே போனதும் இறங்கி ஆங்காங்கே வரும் யானைகளைப் பார்த்துக் கொண்டிருக்க கூட்டம் கூட்டமாக யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக வாவியை நோக்கி வரத் தொடங்கியது.குறைந்தது 100 யானைகளாவது இருக்கும்.மிக அருகிலிருந்து பார்க்க எவ்வளவோ சந்தோசமாக இருந்தது.ஏதாவது பிரச்சனை என்றால் ஓட வேண்டி வரும் ஒருவருமே இறங்க வேண்டாம் என்று சாரதி சொன்னார். 

127002-AC-27-AF-494-E-9779-2-EA66-D1-C1-

                                        நீண்டநேரம் சென்றபின் சாரதி சொன்னது போல எமக்கு எதிரே நின்ற ரக்குக்கு ஒரு யானை ஓடிவந்து முட்டியது.பின்னால் நின்ற யானைகளும் அந்த வாகனத்தை நோக்கி நகர எல்லோருமே (20-25 ரக்குகள்) எடுத்துக் கொண்டோடத்க தொடங்கிவிட்டனர்.நாங்களும் வெளியே வரும் போது பார்த்தா உள்ளே போவதற்காக மிக நீண்ட வரிசை.இவர்களில் அரைவாசிப் பேருக்கு மேல் உள்ளேவிட மாட்டார்களென்று சாரதி சொன்னார்.திரும்பவும் பழைய இடத்துக்கு வந்து திரகோணமலை நோக்கி புறப்பட்டோம்.

கண்டம் ஒன்று காத்திருந்தது.
நீங்களும் காத்திருங்கள்.

16 minutes ago, தமிழ் சிறி said:

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

ஈழப்பிரியன்.. ஒரு கலை ரசனையுடன்... காகம் கொத்திய பலாப்பழ பட  இணைப்பிற்கு நன்றி. 
அந்தப் படத்தைப்  பார்க்க, ஒரு சிமைலி  முகம் போல் உள்ளது. மிக ரசித்தேன். :)

சிறி காகம் கொத்தத் தொடங்கினால் விடாது.மச்சான் வரும் வரை காத்திருந்தால் முழுவதும் கொந்திவிடும் என்றதால் கொஞ்சம் அவசரம்.இந்த பிலாப்பழம் நல்ல சுவை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

யாரப்பா... இந்தப் படத்தை எடுத்தது
கண்டியில்..... பச்சை பசேல் என்று, புல்லு வளரும் என்று எடுத்த படம் மாதிரி இருக்கப்பா....  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ சிறி இது ஆக்களைப் பாக்கிற படமில்லை அட்டையைப் பார்க்கிற படம்.மனைவியின் காலில் அட்டை.
அதுசரி ஏற்கனவே கண் ஒரு மாதிரி.அதுவும் வெள்ளிக்கிழமை வேறை சொல்லவா வேண்டும்.

36994-E32-D250-4-D9-F-BD8-C-AC870580-B7-

தம்பிக்கு இப்ப சந்தோசமோ?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ சிறி இது ஆக்களைப் பாக்கிற படமில்லை அட்டையைப் பார்க்கிற படம்.மனைவியின் காலில் அட்டை.
அதுசரி ஏற்கனவே கண் ஒரு மாதிரி.அதுவும் வெள்ளிக்கிழமை வேறை சொல்லவா வேண்டும்.

36994-E32-D250-4-D9-F-BD8-C-AC870580-B7-

தம்பிக்கு இப்ப சந்தோசமோ?

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

ஓ.... ஈழப்பிரியன், இப்ப தான்.... அட்டை, காலில் நிற்பதை பார்த்தேன்.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

கொத்தின காகமும் ஒழுங்காய் கொத்தேல்லை....பிலாப்பழம் சரியான குந்து போலை கிடக்கு..😀

தகவல்களும், படங்களும் அருமை ஈழப்பிரியன் அண்ணா. தொடருங்கள் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 12:48 PM, putthan said:

ஆனால் அவவோ நுவரெலியாவில் இரண்டு நாட்கள் போட்டு மட்டக்களப்பை தவிர்த்து விட்டா.அவ அனுப்பிய அட்டவணையைப் பார்த்ததும் யாழ் தனிக்காட்டுராசாவை பார்க்க முடியாதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

On 3/14/2019 at 8:20 PM, ஈழப்பிரியன் said:

தனிக்காட்டுராஜாவை தொடர்பு கொள்வதாக சொல்லி அவரது தொல்லைபேசி இலக்கமும் எடுத்து சுற்றுலாவின் போது சின்ன ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம் என்று பல எண்ணங்களுடன் இருந்து கடைசியில் தவறவிட்டுவிட்டேன்.எனக்கு எப்போதுமே சொன்னதைச் செய்யவில்லை என்றால் மிகவும் வருத்தமாக இருக்கும்.அவர் விரும்பினால் என்ன விரும்பாவிட்டாலும் இப்போது சுமையை இறக்கி வைத்த மாதிரி உள்ளது.

இதற்கெல்லாம் எதற்கு  மன்னிப்பு அண்ணே நல்ல சுவாரசியமாக இருக்கிறது எழுதுங்கள் இன்னும் இன்னும் மீண்டும் ஓர் நாள் சந்திப்போம் என்று கூறுகிறேன் 

அந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பது நல்லது ஆனால் சில வேளைகளில் மலையின் உச்சியில் இருந்து சில பாறை துண்டுகள் விழுவது வழமை கவனமாக இருந்திருக்க வேண்டும் யாரும் சொன்னவர்களா ?? எனக்கும் நுவரெலியா பிடிக்கும் ஆனால் அங்கே உழைப்பு சுறண்டப்படுவதால்  பிடிக்காது  ஆனால் நல்ல காலநிலை பூக்களும் பச்சை பசேல் என நிறங்களும் இடங்களும் மனதை கொள்ளை கொள்ளத்தான் செய்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த யானை பழம் கொடுக்கா விட்டால் விடாது போகிற வானை மறித்து மறித்து பழங்கள் வாங்கி கொள்ளும் கொடுக்காவிட்டால் போக விடாது சோம்பேறி யானை மாலை ஆகினால் இன்னும் வந்து சேரும் கதிர்காம பாதையில் 

  • கருத்துக்கள உறவுகள்

சிகிரியாவும் காட்டு யானைகளும் சூப்பரான படங்கள்.........!கைவசம் இருக்கும் நல்ல படங்களையும் எடுத்து விடுங்கள் பார்க்கிறோம்......!   😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

.... ஈழப்பிரியன், இப்ப தான்.... அட்டை, காலில் நிற்பதை பார்த்தேன்.  :grin:

சனிக்கிழமை காலையில் பார்க்கத் தான் தெரியுதோ?

16 hours ago, குமாரசாமி said:

கொத்தின காகமும் ஒழுங்காய் கொத்தேல்லை....பிலாப்பழம் சரியான குந்து போலை கிடக்கு..😀

கொந்துது என்ற செய்தி கேட்டு ஓடிப் போய் விழுந்து எழும்பியாச் செல்லோ.

11 hours ago, மல்லிகை வாசம் said:

தகவல்களும், படங்களும் அருமை ஈழப்பிரியன் அண்ணா. தொடருங்கள் 🙂

இன்னும் கொஞ்ச தூரம் இருக்கிறது.கூட வாருங்கள்.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதற்கெல்லாம் எதற்கு  மன்னிப்பு அண்ணே நல்ல சுவாரசியமாக இருக்கிறது எழுதுங்கள் இன்னும் இன்னும் மீண்டும் ஓர் நாள் சந்திப்போம் என்று கூறுகிறேன் 

எனக்கு கஸ்டமாக இருந்தது.இப்போ நிறைவாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பது நல்லது ஆனால் சில வேளைகளில் மலையின் உச்சியில் இருந்து சில பாறை துண்டுகள் விழுவது வழமை கவனமாக இருந்திருக்க வேண்டும் யாரும் சொன்னவர்களா ?? எனக்கும் நுவரெலியா பிடிக்கும் ஆனால் அங்கே உழைப்பு சுறண்டப்படுவதால்  பிடிக்காது  ஆனால் நல்ல காலநிலை பூக்களும் பச்சை பசேல் என நிறங்களும் இடங்களும் மனதை கொள்ளை கொள்ளத்தான் செய்கின்றன. 

இல்லையே.எதேச்சையாக பார்த்தது உடனே இறங்கிவிட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த யானை பழம் கொடுக்கா விட்டால் விடாது போகிற வானை மறித்து மறித்து பழங்கள் வாங்கி கொள்ளும் கொடுக்காவிட்டால் போக விடாது சோம்பேறி யானை மாலை ஆகினால் இன்னும் வந்து சேரும் கதிர்காம பாதையில் 

ஆமா அப்படித் தான் சாரதி சொன்னார்.அவர் பழங்களை வாங்கும் போது இது பற்றி எதுவுமே பேசவில்லை.அதனாலோ என்னவோ எல்லோரும் பயந்து அதிர்ச்சியாகி விட்டோம்.
அத்துடன் யானை அடித்து பலி காயம் என்று அடிக்கடி செய்திகள்.

6 hours ago, suvy said:

சிகிரியாவும் காட்டு யானைகளும் சூப்பரான படங்கள்.........!கைவசம் இருக்கும் நல்ல படங்களையும் எடுத்து விடுங்கள் பார்க்கிறோம்......!   😍

சுவி ஒரு அசட்டுத் துணிவில் தொடங்கியாச்சு.இப்போ ஒரே முழுசாட்டம்.நான் அவ்வளவு படங்களுடன் மினக்கெடுவதில்லை.பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமா அப்படித் தான் சாரதி சொன்னார்.அவர் பழங்களை வாங்கும் போது இது பற்றி எதுவுமே பேசவில்லை.அதனாலோ என்னவோ எல்லோரும் பயந்து அதிர்ச்சியாகி விட்டோம்.
அத்துடன் யானை அடித்து பலி காயம் என்று அடிக்கடி செய்திகள்.

இந்த யானைகள் அடித்தது இல்லை இது வீதிக்கு வந்து பல வருடம் ஆகிவிட்டது சிலருக்கு அதை முட்ட நினைப்பவர்களை துரத்தி இருக்கு ஆனால் எந்தநேரம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்ல முடியாது கணிக்கவும் முடியாது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யானைகள் அடித்தது இல்லை இது வீதிக்கு வந்து பல வருடம் ஆகிவிட்டது சிலருக்கு அதை முட்ட நினைப்பவர்களை துரத்தி இருக்கு ஆனால் எந்தநேரம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்ல முடியாது கணிக்கவும் முடியாது 

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த யானை பழம் கொடுக்கா விட்டால் விடாது போகிற வானை மறித்து மறித்து பழங்கள் வாங்கி கொள்ளும் கொடுக்காவிட்டால் போக விடாது சோம்பேறி யானை மாலை ஆகினால் இன்னும் வந்து சேரும் கதிர்காம பாதையில் 

எங்கையும் எப்பவும் குடுத்து பழக்கினால் உதுதான்  பிரச்சனை கண்டியளோ.....
 குடுத்தவன் குடுக்காட்டில்  வெட்டுக்கொத்து பகையிலை தான் முடியுமெண்டு ஊரிலை எங்கடை பழசுகள் அடிக்கடி சொல்லுவினம்...😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

பட இணைப்புகளுக்கு நன்றி ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் உங்கள் தொடர் நன்றாகப்போகிறது. ஆனால் உங்கள் மனைவியின் காலில் அட்டையைத்தான் எத்தனை தடவை பார்த்தும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஈழப்பிரியன் உங்கள் தொடர் நன்றாகப்போகிறது. ஆனால் உங்கள் மனைவியின் காலில் அட்டையைத்தான் எத்தனை தடவை பார்த்தும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கமரா கிளிக்கின சத்தத்திலை....அட்டை....கீழ விழுந்திட்டுது போல.....!😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஈழப்பிரியன் உங்கள் தொடர் நன்றாகப்போகிறது. ஆனால் உங்கள் மனைவியின் காலில் அட்டையைத்தான் எத்தனை தடவை பார்த்தும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

உப்பிடி தான் சிறியும் வெள்ளி இரவு பார்த்திட்டு அட்டையைக் காணேல்லை என்றார்.சனி விடிய தெரியுது என்றார். உங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்ப தெரியுதா பாருங்க?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

5 hours ago, புங்கையூரன் said:

கமரா கிளிக்கின சத்தத்திலை....அட்டை....கீழ விழுந்திட்டுது போல.....!😀

அப்ப உங்களுக்கும் அட்டையைத் தெரியலை?

இதில ஏறின அட்டை தலவாக்கலையில் தேயிலை வாங்கிக் கொண்டு வெளிக்கிடத் தான் விழுந்திருக்கு.ஏறத்தாள முக்கால் மணிநேரம் இரத்தம் குடித்திருக்கு.

உங்களுக்கும் இப்ப தெரியுதோ?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

இடது காலில் சின்னவிரலுக்கும் அடுத்த விரலுக்குடையில்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

உப்பிடி தான் சிறியும் வெள்ளி இரவு பார்த்திட்டு அட்டையைக் காணேல்லை என்றார்.சனி விடிய தெரியுது என்றார். உங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்ப தெரியுதா பாருங்க?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

அப்ப உங்களுக்கும் அட்டையைத் தெரியலை?

இதில ஏறின அட்டை தலவாக்கலையில் தேயிலை வாங்கிக் கொண்டு வெளிக்கிடத் தான் விழுந்திருக்கு.ஏறத்தாள முக்கால் மணிநேரம் இரத்தம் குடித்திருக்கு.

உங்களுக்கும் இப்ப தெரியுதோ?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

இடது காலில் சின்னவிரலுக்கும் அடுத்த விரலுக்குடையில்.

சத்தியமாய் ....நான் அட்டையைத் தேடவேயில்லை...!

முந்தி வருசம் ...வருசம்....தியத்தலாவைக்  காம்புக்குப் போற நேரத்தில....ஒரு இருபது மைல்  தூரமாவது.....காடுகளுக்கு ஊடாக.....தரப்பட்ட வரை படத்தின் உதவி கொண்டு ...குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள்நடந்து முடிக்க வேண்டும்..!

யாப்பாணய இந்து மகா வித்தியாலயா.......குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கும் எனினும்.....முடித்தவர்களின் பூட்சுக்களுக்குள்...சராசரி.....ஐந்து அட்டைகளாவது...வீங்கின படியே இருக்கும்!

ஆச்சரியம் என்னவென்றால்......ஒரு சிறிது கூட.......வலித்தது கிடையாது!

என்னே......இயற்கையின்....பரிணாம வளர்ச்சியின்  இரகசியம்!

இவற்றை...இப்போது மருத்துவ தேவைகளுக்காக.....ஆய்வு கூட்ங்களில் வளர்க்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

உப்பிடி தான் சிறியும் வெள்ளி இரவு பார்த்திட்டு அட்டையைக் காணேல்லை என்றார்.சனி விடிய தெரியுது என்றார். உங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்ப தெரியுதா பாருங்க?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

அப்ப உங்களுக்கும் அட்டையைத் தெரியலை?

இதில ஏறின அட்டை தலவாக்கலையில் தேயிலை வாங்கிக் கொண்டு வெளிக்கிடத் தான் விழுந்திருக்கு.ஏறத்தாள முக்கால் மணிநேரம் இரத்தம் குடித்திருக்கு.

உங்களுக்கும் இப்ப தெரியுதோ?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

இடது காலில் சின்னவிரலுக்கும் அடுத்த விரலுக்குடையில்.

இப்ப தெரியுது. நான் ஒருநாளும் அட்டையைக் காணாத்தால தெரியேல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.