Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கொல்வது கொலை

vicecomics01c2-670x446.jpg?resize=320:*

விடிகாலை இருள் விலகும் தருணம். அந்தத் தென்னந்தோப்புக்குள் நிலை எடுத்தபடி அவள் அவதானமாக நகர்ந்தாள். கைகள் பிஸ்டலில் பதிந்திருக்க விழிகள் தூரத்தில் நாய்கள் குரைக்கும் திசை நோக்கி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததன. ஒரு இராணுவப் படைநகர்வு பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்த கூப்பாடுகள் அந்த விடிகாலை இருளைக்கிழித்தன. அரவம் காட்டக்கூடாது என்ற மேலிடத்துக்கட்டளை அவளை அசைவித்துக் கொண்டிருந்தது. பெக்கி சேர்ட், இலகுவாக ஓடுவதற்கும் தடை தாண்டுவதற்கும் ஏற்றாற்போல் பான்ட், இடுப்பிலே கட்டப்பட்டிருந்த பெல்டின் இடது பக்கம் பிஸ்டல் வலதுபக்கம் இரண்டு கிரனைட்டுகள் கழுத்தில் குப்பி. மிடுக்கான தோற்றம், பெண்மையை வெளிப்படுத்தாத பிரிதொரு கம்பீரம். விழிகளில் மருட்சி இல்லை, அவதானம் ,எச்சரிக்கை உணர்வு, நடுக்கமில்லாத மூச்சுக்காற்று, கத்தரிக்கப்பட்ட கூந்தல் தனி மிடுக்கைக் கொடுத்து மீள மீள அந்தப் பெண் போராளியை நோக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. எதிர்ப்புறத்தை நோக்கி கொண்டிருந்தவளுக்கு பின்பக்கமாக அசைவு தெரிய அந்த இருளில் அசையாமல் நிலத்தோடு ஒட்டிக்கொண்டாள். நாய்களின் குரைப்பொலி பின்பக்கம் கேட்காததால் நிச்சயமாக அது இராணும் இல்லை என்பதை உள்ளுணர்வு உணர்த்தியது. யாரோ நம்மாட்களாக இருக்கும் என்று எண்ணியபடி மெல்லத் திரும்பியவளின் முகத்தைத் தாக்கியது ஒரு கனமான பொருள். சட்டென ஒலியின்றி சுருண்டது அவள் தேகம்.

            முனகலுடன் அவள் விழித்தபோது அவள் எதிரே அவன் இரண்டு கொங்கிரீட் கற்களை அடுக்கி அமர்ந்திருந்தான். அவனைக்கிரகித்து எழுவதற்கு முயன்றவளின் உடல் அசைக்க முடியாமல் வலித்தது. கைகால்கள் பின்புறமாகக் கட்டப்பட்டு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் கழட்டி எடுக்கப்பட்டிருந்தது. ஏன் ? இவன் எதற்கு? ஏகப்பட்ட குழப்பங்களுடன் நிமிர்ந்தவளைப் பார்த்து புன்னகைத்தான் அவன். அவனை அவளுக்குத் தெரிந்திருந்தது. அவன் போக்கு சரியில்லை என்பதும் அவன் ஒழுக்கம் பற்றியும் அமைப்பிற்குள் அரசல் புரசலாக சில கதைகள் அண்மைகாலத்தில் அலைவதையும் அறிந்திருந்தாள். மற்றப்படி அவனை அவள் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் அவளைத்தாக்கி இந்த இராணுவ நகர்வுப்பாதையில் கட்டிப்போட்டிருப்பது திகைப்பையும் அச்சத்தையும் உருவாக்கத்தவறவில்லை. அப்படியானால் இவன் ஒழுக்கந்தவறியதற்கு அப்பால் காட்டிக்கொடுக்கும் துரோகியா?

             அவன் அவளையே வைத்தகண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான். எத்தனை காலமாக அவளைக் குறிவைத்திருந்தான். இப்போது மான் மாட்டியிருக்கிறது. இராணுவ நகர்வு அண்மித்துக் கொண்டிருந்தது. அவன் அச்சமின்றி அமர்ந்திருந்தான். அவனுடன் இன்னும் சிலர் அவனுக்கு பாதுகாப்பாக… அவர்களை இராணுவம் நகரும் திசைநோக்கி நகரச் சொல்லி இந்தப்பக்கம் இராணுவம் வராமல் இருக்க அவர்களைத் திசைமாற்றி குறிப்பறிவிக்கச் சொன்னான் எப்படியாவது அவளைத் தன்வலையில் வீழ்த்த இராணுவ நகர்வைப் பயன்படுத்திவிடவேண்டும் என்பது அவன் எண்ணம். அதுவரை இராணுவத்திடம் அகப்படாமல் அவளை வைத்திருக்கத் திட்டமிட்டு, அவள் வாயில் துணியை அடைத்தான். தென்னோலைகள் கொண்டு அவளை மூடி நகர்ந்தான். அவன் நினைப்பிற்கு மாறாக அவன் மீது சந்தேகப்பார்வையை படர விட்டபடி அந்த இராணுவப் பெண் கொமாண்டர் சுற்றிலும் நோட்டம் விட்டாள். வெறுப்புடனும் விருப்பமில்லா சிரிப்புடனும் அவனுக்கு  கைகுலுக்கிக் கொண்டு அந்தப் பெண் கொமாண்டர் அவன் வந்த திசை நோக்கி நகர்ந்து முன்னேறினாள். அவள் விழிகள் கொடூரத்தன்மையை வெளிப்படுத்த இதழ்கடையில் குரூரமாக புன்னகைத்தாள். சட்டென்று அந்தத் தென்னந்தோப்புக்குள் சில இராணுவர்களுடன் நுழைந்து நோட்டம் விட்டாள் சற்று மேடாகத் தெரிந்த ஓலை அவளின் சந்தேகப்பார்வைக்குள் விழ தனக்கு அருகாமையில் இருந்த இராணுவனுக்கு கண்களால் ஆணையிட்டாள். சரசரவென ஓலைகள் அகற்றப்பட முக்கில் இரத்தம் ஒழுக, முகம் வீங்கிய நிலையில், கைகளும் கால்களும் பின்புறமாக அசையமுடியாதபடி கட்டப்பட்டிருந்த வாயில் துணி அடைக்கபட்டிருந்த போராளிப்பெண் குப்புறவாக கிடந்தாள்.  அருகே வந்த கொமாண்டர் அவள் வாயில் இருந்த துணியை அகற்றி அவளை வானம் பார்க்க நிமிர்த்திப் போட்டு விசாரிக்க ஆரம்பித்தாள். கொமாண்டரின் விசாரணைகள் எதற்கும் பதில் அளிக்காமல் இறுக்கமாக மௌனத்திற்குள் இருந்தாள் போராளி. கொமாண்டர் அவனைச்சுட்டிக்காட்டி அவன்போல் நீயும் எங்களுடன் சேர்ந்து விடு, உனக்கு வசதியான வாழ்க்கை அமைத்துத்தருகிறோம். இங்கு வாழ விரும்பாவிட்டால் இந்தியாவில் நீ அழகான வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் என்றாள். அப்பட்டமான துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அந்தப்பெண் போராளி ஆணித்தரமான மறுப்பை தலையை அசைத்து வெளிப்படுத்தினாள். இராணுவப் பெண்கொமாண்டருக்கு சினம் கூடியது. ஆத்திரத்துடன் கம்பி நறுக்கும் நீண்ட கொறடை எடுத்து போராளி அருகே வந்து அவள் கழுத்தில் வைத்து மிரட்டினாள். அவள் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தன்னினத்திற்கே துரோகியாக மாறிய அவனை பார்த்தாள். “ஏய் என்ன அவனை முறைக்கிறாய்? எங்களோடு சேர் இல்லையென்றால் இந்தக்கட்டரால் உன் கழுத்தை அறுத்துவிடுவேன்” என்றாள். முடியாது என்று உரக்கக்கூறினாள் போராளி. அடுத்த கணம் கழுத்தில் இருந்த கட்டரை சற்று சாய்வாக்கி கழுத்தின் நரம்பை அறுத்தாள் கொமாண்டர். குபுகுபுவென்று இரத்தம் பாய்ந்தோட அந்தப்பெண் போராளி கைகால்கள் கூட அசைக்கமுடியாமல் கிடந்தாள். அவள் கண்கள் எதிரியை நோக்கவில்லை துரோகியை காறி உமிழ்ந்தது. கொமாண்டர் விலகி நடந்தாள். அவளுடன் சில இராணுவர் அகல, சிலர் கைகால்கள் கட்டப்பட்டு குற்றுயிராக கிடந்த அவளை நெருங்கினர். கை கால்களின் கட்டுகளை விடுவித்து ஆடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கி குற்றுயிராய் கிடக்கும் அவள்மேல் சிறுநீர் கழித்து எங்களோடு சேராத உனக்கு இதுதான் தண்டனை என்று சொல்லி அவள் உடலெங்கும் சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். சற்றுத்தூரத்திலிருந்து அவன் பார்த்துக்கொண்டிருந்தான். ஆசைப்பட்டது தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தைத்தவிர அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவள் அன்றே இறந்தும்போனாள்.

            புழுதி படிந்த சாய்வு நாற்காலி, அதிகாரம் இழந்த ஆணவம், எல்லோராலும் ஒதுக்கப்பட்ட தனிமை, களையிழந்த முகம், ஒளி குன்றிய கண்கள், நடுத்தர வயதின் முடிவு நரையும் ,வழுக்கையும் போட்டியிடும் தலை, மனஉளைச்சல்களின் கதக்களியில் மூப்பெய்திய அவன். கேட்க ஒரு நாதியற்ற மானுட அவலத்தில்,……. நேற்றாடிய துரோகத்தால் இன்னும் அவன் உயிரோடு கிடந்தான். அவன் தனித்திருந்தான் சூழ இருந்த பலங்கள் காரியம் முடிந்ததும் காணாமல்போயின. , மெல்ல மெல்ல மன உளைச்சல் அவனிடத்தில் குடியேறி அவன் துரோகத்தை படிப்பினையாக்கி கொண்டிருந்தது. ஆண் என்ற ஆணவமும், வாழ்வேன் என்ற வன்மமும் புழுதி படிந்து அந்த சாய்வு நாற்காலியைப்போல்…. கூட இருந்தவர்களைத் துரோகத்தால் வீழ்த்திய வரலாறு பெருஞ்சாபமாய் தலையில் விடிந்தது. கைகால்கள் மரத்துக் கொண்டன. வாயில் நா ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. உடல் நிலத்தில் வீழ்ந்தது. நீண்ட நேரமாகியும் எவரும் வரவில்லை. ஒரு நாய் மட்டும் அருகே வந்து மணந்து தனது பின்னங்காலைத்தூக்கி சிறுநீர் கழித்துவிட்டு நகர்ந்து மறைந்தது. மூளை கிரகித்துக் கொண்டது. அசைய முடியாதபடி கைகால்கள் கட்டப்பட்டு கழுத்து நரம்பு அறுக்கப்பட்ட பெண்போராளி புன்னகையுடன் அவனை விழித்துப் பார்த்தாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பதை இதைவிட அழகாக கூறமுடியாது.அற்ப சலுகைகளுக்காக சோரம்போகும் கோடரிக்கம்புகளையும் தாண்டி ஒரு இனம் வெற்றி பெறுவதென்பது மிகவும் கடினமானதொன்று. நல்லதொரு ஆக்கம்.....!  🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்கு பரிசுகளை இப்பிறவியிலயே அனுபவிக்கிறார்கள்....

Posted

துரோகத்தின் வலியைச் சிறப்பாகச் சித்தரிக்கும் ஓர் கதை அக்கா. மனச்சாட்சி கொடுக்கும் தண்டனையிலிருந்து எந்தப் பாவியும் தப்பமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பவும் தெய்வம் இருக்கா?...அது நின்று வேறு கொல்லுதா 😮

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, வல்வை சகாறா said:

கூட இருந்தவர்களைத் துரோகத்தால் வீழ்த்திய வரலாறு பெருஞ்சாபமாய் தலையில் விடிந்தது. கைகால்கள் மரத்துக் கொண்டன.

வீரனுக்கு ஒரு சாவு
துரோகிக்கு தினம் தினம் சாகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான கதை சகாரா.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆறு நாட்களுக்கு முன்.... நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால்  தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என வீறாப்பு பேசியவர், இப்ப என்னத்துக்கு நாக்கை தொங்கப்  போட்டுக் கொண்டு மருத்துவர் வைத்திலிங்கத்துடன் மல்லு கட்டுக்கின்றார். இவ்வளவிற்கும்...  மருத்துவர் வைத்திலிங்கம், இவரது சுத்துமாத்து செயல்களுக்கு எல்லாம் பொதுக்குழுவில் இவருக்கு ஆதரவாக இருந்தவர்.   சுமந்திரன் எந்தக் காலத்திலும் எவருடனும் நட்பாக இருந்தது கிடையாது.  தனது காரியம் முடிந்தவுடன் ஆட்களை கழட்டி விட்டு... குழியும் பறிக்கின்ற கெட்ட சிந்தனை உடைய மனிதன்.
    • 15 NOV, 2024 | 03:37 PM   அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியாகவும் ஒற்றுமையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபட்ட இலங்கை மக்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான  நட்புறவை   மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான  நட்புறவை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198870
    • யாழ் தேர்தல் கணக்கு- O/L இல் சோதனையில் வரவில்லை!   யாழ்ப்பாணம்  325312 செல்லுபடியான வாக்குகள்.  தேசிய மக்கள் சக்தி. 80830  தமிழரசு. 63327  சைக்கிள் 27986  ஊசி 27855 சங்கு 22513 மிச்சம் கணக்கில எடுக்காம நேரடியா 5 % க்கு குறைந்த கழிவுக்கு விடுவம். முன்னிலை வகிக்கும் NPP க்கு 1 போனஸ்.  5% கழிக்க, 16265 கீழ பெற்றோர் கழிந்தனர். முதல் சுற்று,  80830+63327+27986+27855=199998 ஒரு சீற்றுக்கான வாக்குகள் 199998/5 அண்ணளவாக 40000.  இரண்டாம் சுற்றில்  தேசிய மக்கள் சக்தி 80830-80000= 830 (2+போனஸ் 1=3) தமிழரசு 63327-40000=23327(1சீட்) மற்றவர்களுக்கு முதல் சுற்றில் இல்லை,  இரண்டாம் சுற்றில்  தேசிய மக்கள் சக்தி 830  தமிழரசு  23327  சைக்கிள் 27986  ஊசி 27855 சங்கு 22513 மிச்சம் இருக்கிற 2 சீட்.  இரண்டாம் சுற்றில் சைக்கிள் மற்றும் ஊசி முன்னிலை வகிப்பதால், ஆளுக்கு 1 சீட்.  🏛 படிப்பறிவு அதிகமான யாழ்ப்பாணத்தில நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 32767. கிட்டத்தட்ட ஒரு சீட்டுக்கான வோட்.  🏛 ஈசல் போல நிறை பேர் கேட்டதால, 5% வீதத்துக்கு குறைந்த என்று, பயனற்று போன வோட் 125312 வோட்ஸ். இது செல்லுபடியான வோட்டின் 38%  தெரியுமா?💀💀💀ஓமைகாட் OMG 😨
    • இப்போ தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் போக சத்தியலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். இவர் எல்லாம் ஒரு மனிதன், நேரம் ஒரு கதை கதைத்துக்கொண்டு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.