Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படலைக்கு படலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

inraiyama5.jpg:unsure:

T T N தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பாகும் படலைக்கு படலை நாடகத் தொடர் 15-04-2007 அன்று 5 வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது. நாடகத்தில் நடிக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.படலைக்கு படலை நாடகத் தொடர் மென் மேலும் வளர்ந்து வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்

மோகன்

Edited by paris kirukkan

நானும் படலைக்கு படலையின் தீவிர ரசிகன்!

கலைஞர்களிற்கு வாழ்த்துகள்!

:unsure::unsure::unsure:

எல்லாக் கனைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்களிற்கு வாழ்த்துகள்!

எல்லா கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்

மாப்பிகாக்கி நீரும் தானே கலைஞர்

நானும் படலைக்கு படலையின் தீவிர ரசிகன்!

கலைஞர்களிற்கு வாழ்த்துகள்!

:unsure::unsure::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் படலைக்கு படலையின் ரசிகை...எனது வாழ்த்துக்களும்... :o

5வது அகவையில் காலடி வைக்கும் படலைக்குப் படலை கலைஞர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் படைப்பாளர், இயக்குனர் பணி மேன் மேலும் தொடரவேண்டும் என்று இறைவனைப் பிராத்திக்கின்றேன். 10வது அகவையில் படலைக்குப் படலையில் காலடி வைக்கவும் வாழ்த்துகிறேன்.

அன்புடன்

தமிழ்வானம்

படலைக்குப் படலை கலைஞர்களுக்கு பாராட்டுக்கள். ரொம்ப விரும்பி பாக்கிற நிகழ்ச்சியில் படலைக்கு படலையும் ஒன்று. :)

அங்கிள் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு மஞ்சள் சேர்டும் போட்டுக் கொண்டு வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை பாடுவாரே ... நல்ல சிரிப்பாயிருந்தது பார்க்க .... ரொம்ப நலல செய்திருந்தார். :o:lol::lol:

ஒரு அக்கா பெரிய தாலிக் கொடி போட்டுக் கொண்டு கழுத்து வலி எண்டு டாக்டர் கிட்ட போவாவே அதுவும் நல்லாயெடுத்திருக்கினம். அந்த தாலிக் கொடி மாதிரி எங்கும் பார்க்கயில்லை அந்தளவு பெருசாயிருக்கும் :lol: :P :D

Edited by அனிதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படலைகுப்படலை கலைஞர்களுக்கும் மற்றும் ரிரிஎன் உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

படலைக்கு படலையில் நான் ரசித்த சில காட்சிகள்

1. ஞானம் அக்கா வீட்ட ஊரில இருக்கிற கோயிலுக்கு காசு கேட்டு ஒருவர் வருவார். அப்ப லண்டன் அங்கிளும் நிற்பார். காசு வாங்க வந்தவர் காசு கொடுப்பவர்களை எப்படி தாம் கெளரவிப்போம் என்று கூறுவார். அதில நன்கொடை கொடுப்பவரின் பெயரை கோயில் கொடிக்கம்பத்தில் பொறிப்பதாய் :D சொல்வார்.... இப்படியே நிறைய பகிடிகள் அதில் உள்ளது....

2. வாலை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கலியாணம் பாடலுக்கு கீழ் வீட்டு அங்கிள் ஆடும் காட்சி... :blink: உண்மையில ஒரிஜினல் பாட்டு அங்கிளின்ற ஆட்டத்துக்கு முன்னால தோற்றுப்போகும்...

3. மன்மதன் பிரான்சில் தனக்கு வதிவுடமை கிடைத்ததற்கு வைக்கும் பார்ட்டி.... :D

4. மாமியின் பகிடிகள் பார்க்க நல்லாய் இருக்கும். எங்கட வீட்டையும் அண்ணிக்கும், அம்மாவுக்கும் அடிக்கடி கொழுவலுகள் வரும். அம்மா அண்ணியுடன் பிடிபடுவதற்கு டிரெயினிங் எடுப்பது படலைக்கு படலையில வார மாமியைப் பார்த்துதான்! மாமீன்ற நடுப்பு சூப்பர்.. :D

5. ஞானம் அக்காவும், அண்ணாவும் :D வார எல்லா காட்சிகளுமே ஒரே பகிடியாய் இரசிக்ககூடியதாய் இருக்கும்.

6. கீழ் வீட்டு அங்கிளின்ற மனைவியும் :D , மகளும் வார காட்சிகளும் நல்லாய் இருக்கும்.

7. மன்மதன் செய்யிற குரங்குச்சேட்டைகள், அக்கா, அத்தானிடம் வாங்கும் பேச்சுக்கள், திட்டுக்கள் சொல்லி வேலை இல்லை.

8. கீழ்வீட்டு அங்கிள் அடிக்கடி மன்மதனுக்கு அறிவுரை கூறுவதும், அது கடைசியில் ஏதாவது விபரீதத்தில் போய் முடிவதும் சுவாரசியமாய் இருக்கும். அதில ஒருக்கால் மன்மதனை அங்கிள் பிஸ்னஸ்மானாக மாற்றிகாட்டுறன் என்று சொல்லி மன்மதன் வயிற்றினுள் தலையணியை வைப்பார்.. பிறகு எப்படி நடப்பது என்று நடந்தும் காட்டுவார். :D

9. லண்டன் அங்கிள் அடிக்கடி இங்கிலிசில் தனது ஸ்டேட்டஸ் ஐ காட்டி கதைப்பது பார்க்க ஒரே சிரிப்பாய் இருக்கும். :lol:

10. சுருக்கமாக, ஒரு 1/2 மணித்தியாலம் படலைக்கு படலையை கிழமைக்கு ஒரு தடவை பார்க்கும்போது கவலைகளை மறந்து சந்தோசமாக இருக்கமுடிகின்றது. :lol:

படலைக்கு படலை சிறப்பாக நடத்தப்படுவதற்கு காரணமாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

படலைக்கு படலைஒருக்கால் தட்டி பாப்பம்

இந்தவாரம் ஒருபேப்பரில் வெளிவந்தது

படலைக்கு படலை என்கிற தொடர் நகைச்சுவை நாடகம் அதன் 5வது ஆண்டில் தொர்ந்தும் புலத்துவாழ் தமிழர்களின் படலைகளை தட்டஇருக்கின்றது. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் சம்பவங்களை எங்கள் பிரச்சனைகளை எங்களின் கவலைகளை .மகிழ்ச்சிகளை .நிகழ்வுகளை என்று அன்றாட வாழ்வினை எங்கள் வீட்டு கண்ணாடியாய் இருந்து அதனை எங்களிற்கே பிரதிபலித்து அதன் மூலம் எங்களை சிரிக்வும் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கின்றது.அதுமட்டுமல்ல ஒரு கற்பனை கதைகளையோ புராண இதிகாச கதைகளையோ நாடமாக்குவதென்றாலே சிரமம் அதற்கென தனிப்பட்ட பலரின் உழைப்பு மிக அவசியமாகின்றது.ஆனால் படைக்கு படலை நாடகம் வெறும் நகைசுவை நடிப்பு என்று நின்று விடாமல் எம்மவர் மத்தியில் இன்னமும் புதைந்து போயிருக்கும் சில சம்பிரதாயங்கள்.சடங்குகள் .சமயவிடயங்கள் என்று எம்மவர்களின் அன்றாட வாழ்வியலில் இன்னமும் படிந்திருக்கும் சில கறைகளை படம்பிடித்து அவற்றை கழுவும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால். இந்த கலைஞர்கள் அவர்களது வசன. நடிப்பு. படபிடிப்பு.மற்றும் தொழில் நுட்ப பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு மட்டுமன்றி அதற்கு மேலாக எம்மவர்சிலரின் விசனங்கள். விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். ஆனால் அதுவே அவர்களது வெற்றியும் ஆகும்.அதன் வெற்றிக்கு அதுமட்டும் காரணமல்ல.நடிப்பதற்கு அதுவும் திரையில் தோன்றுவதென்றாலே அழகான முகம் அதற்கு மேலும் அரிதாரம் பூசி அலங்கரித்து அடுக்கடுக்காய் வசனங்கள் இடையிடை எதுகைமோனையையும் எடுத்துவிடல் என்று நாடக தமிழில் இல்லாமல். எல்லா சம்பிரதாயங்களையும் உடைத்து.அனைவருக்கும் புரியும்படி அழகான பேச்சுதமிழ்.தமிழே அழகு அதை பேச எதற்கு முகஅழகு என்று தமிழை தமிழாக கதைத்து அரிதாரம் பூசி அன்னியபட்டு போகாமல் அடுத்தவீட்டுஉறவுகள் போனறதொரு உணர்வை ஏற்படுத்தும் அதன் நடிகர்களும் அதன் வெற்றிதான். ஒரு வீட்டில் ஒரு இளம் தம்பதியினரின் குடும்பத்தை பின்னணியாய் வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடர் காலப்போக்கில் பலரையும் இணைத்து பல குடும்பங்களாக வளர்ந்துஅதன் தேவைக்கேற்ப இன்று வெளிப்புறங்களிலும் படப்பிடிப்பக்களை நடாத்தி வளர்ந்து வருகின்றது. எனவே இந்த தொடர் நடிகர்களிற்கும் மற்றும் அதன் தயாரிப்பாளர் சுதன் ராச்சிற்கும் தொழில் நுட்ப கலைஞர்களிற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளுவேம். அடுத்ததாய் மேலே படலைக்கு படலை பற்றியும் அதன் வெற்றிகள் பற்றியதுமான கருத்துக்கள் ஆனாலும் அதில் சில குறைகளும் இருக்கதானே செய்யும் அவை தேவை கருதி புதிதாக இணைக்கபடும் நடிகளின் நடிப்பில் இன்னம் கொஞசம் கவனமெடுத்து அவர்களை பயிற்றுவித்த பின்னர் நடிக்க வைப்பது நலம் ஏனெனில் அவர்கள் ஒளிப்பதிவு(கமறாவை)கருவியை அடிக்கடி பார்ப்பது அல்லது பார்த்து கதைப்பது இயற்கை தன்மையை குறைத்து கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. அடுத்ததாக வெளிப்புற படப்பிடிப்புகளின் போது சில நேரம் ஒலி ஒளிப்பதிவு தரம் குறைந்ததாகவே இருக்கின்றது அதற்கான வசதிகள் இன்னமும் இல்லாதிருக்கலாம் ஆனாலும் ஒலிப்பதிவின் தரத்தில் வேறு வழிமுறைகள் மூலம் அதாவது ஒலிவடிவத்தை தனியாக பதிவு செய்து இணைப்பதால் அதன் தரத்தை கூட்டலாம். அதேபோல ஒளி ஒலிப்பதிவு முறையில் இன்னமும் நவீன முறைகளை கையாள்வதன் மூலம் எங்கள் படலையை மினுமினுபாக்கி கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். யாரோ படலையிலை தட்டினம் பொறுங்கோ யாரெண்டு பார்த்து விட்டு தொடருகிறேன் நன்றி சாத்திரி

Snapshot2-1.jpg

Snapshot3.jpg

Snapshot4.jpg

Snapshot5.jpg

Snapshot6.jpgSnapshot11.jpg

Snapshot12.jpg

இந்த படலைக்கு படலை இயக்குனர் மற்றும் நடிகர்களும் யாழின் வாசகர்களாக இருப்பதால் இனிவரும் காலங்களில் படலைக்கு படலை பற்றிய உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களையும் தொடர்ந்து இந்த பகுதியில் நீங்கள் வைக்கும் பொழுது அதுஅவர்களை சென்றடைந்து அவர்களின் படைப்பையும் மற்றும் வேறு விடயங்களையும் மெருகூட்ட உதவும் என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை தாராளமாய் முன்வைக்கலாம் சாத்திரி சார். ஆனால் அதில பெரிய ஒரு சிக்கல் இருக்கு. கருத்துக்களை முன் வைக்கிறப்ப அவை விவாதங்களாய் கருத்து களத்திலிருந்தும் தூக்குற நிலைக்கு தள்ளப்படும் பிறகு............................. அவற்றை தொலைக்காட்சி நிலையத்துக்கு தனிப்பட்டதாக சமர்பிக்கும் படியுமாக அல்லவா முடியக்கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கு சாத்திரி

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி நீங்கள் தரமான விமர்சனத்தை வைப்பதன் மூலம் அவர்களையும் வளப்படுத்தலாம் யாழ் நிருவாகம் ஏன் அதனை வெட்ட போகுது எண்டு நினைக்கிறீங்கள் அப்படி விமர்சனங்கள் வந்தாலும் தொலை காட்சி நிலையம் அதில் ஏன் தலையிடும் என்று நினைக்கிறீர்கள் புரியவில்லை :lol:

படலைக்கு படலையில் இப்போதைக்கு விமர்சனம் - குறிப்பாக குறைகள் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அந்தமாதிரி, நல்லமாதிரிப் போகின்றது. :lol::D:lol: வெற்றிகரமான 05 ம் ஆண்டில் படலைக்கு படலை காலடி வைத்துள்ளமைக்கு வாழ்த்து கூறுவதை தவிர வேறொன்றும் வாயினுள் வரவில்லை.. அனைத்து படலைக்கு படலை கலைஞர்களிற்கும், மற்றும் நிருவாகிகளிற்கும் வாழ்த்துக்கள்! நன்றிகள்!

நீக்கப்பட்டுள்ளது

Edited by Innumoruvan

படலைக்குப் படலை நிகழ்ச்சியை நான் பார்க்கும் சந்தர்ப்பம் குறைவு. ஆகவே இவற்றை சீடிகளில் எங்கேயாவது வாங்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இருந்து கொண்டு படலைக்குப் படலை பார்க்க சந்தர்ப்பம் இல்லையா லிசான். அப்ப நீங்கள் சூரியத்தொலைக்காட்சியா பார்க்கிறீர்கள்

பிரான்சில் இருந்து கொண்டு படலைக்குப் படலை பார்க்க சந்தர்ப்பம் இல்லையா லிசான். அப்ப நீங்கள் சூரியத்தொலைக்காட்சியா பார்க்கிறீர்கள்

:lol:

நான் எந்தத் தொலைக்காட்சியையுமே பார்ப்பதில்லை. கணணிக்கு முன்னால் வாழ்க்கையில் பாதியை கழிக்கிறேன். நேரம் கிடைப்பது குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி நீங்கள் தரமான விமர்சனத்தை வைப்பதன் மூலம் அவர்களையும் வளப்படுத்தலாம் யாழ் நிருவாகம் ஏன் அதனை வெட்ட போகுது எண்டு நினைக்கிறீங்கள் அப்படி விமர்சனங்கள் வந்தாலும் தொலை காட்சி நிலையம் அதில் ஏன் தலையிடும் என்று நினைக்கிறீர்கள் புரியவில்லை :rolleyes:

ம்....................புரியாதுதான்.

ஊடகங்கள் பற்றிய கருத்துக்கள் ஏற்படும் போது தானுங்க சிலசமயம் இப்படி எல்லாம் நடக்கும்.

மனதில் பட்டதை சொன்னேன் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

படலைக்குப் படலை நிகழ்ச்சியை நான் பார்க்கும் சந்தர்ப்பம் குறைவு. ஆகவே இவற்றை சீடிகளில் எங்கேயாவது வாங்க முடியுமா ?

லிசான் விரைவில் ஒரு தொகுதி நாடகங்கள் இறுவெட்டுகளில் ஆவணமாக்கபட்டு அவை வெளியிடபட இருக்கின்றது விரைவில் பார்க்கலாம் எதிர் பாருங்கள்

யூரியூப்பிலும், யாராவது படலைக்கு படலையின் சிறுதுண்டுகளை போட்டுவிடலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

படலைக்கு படலை நல்ல தொடர் ,நானும் பார்க்கிறனான்.......மெகா சீரியலும் இதுவும் ஒளிபரப்பட்டால் மெகா சீரியலைதான் சிலர் பார்க்க துடிக்கினம்.இந்த மெகாசீரியல் மோகத்தை படலைக்கு படலை முறியடிக்க வேனும் என்பது அடியேனின் ஆசை....

  • கருத்துக்கள உறவுகள்

படலைக்கு படலை முக்கிய நடிகரான, சாரங்கனையும், அதை நெறியாள்பரவான சுதன்ராஜையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் நினைக்கிறேன் அவர்கள் அந்த தொடரை நடிப்பதற்கோ இயக்குவதற்கோ ரொம்ப சிரமப்படமாட்டார்கள் என்று, ஏனெனில் இயற்கையிலேயே அவர்களிடம் அந்த திறமை இருக்கின்றது, ஒரு சிறிய தகவலை குடுத்து இப்படீ இந்த மாதிரி செய்யனும் எண்டு சொன்னாலே போது, (அதாவது கோடு போட்டால், ரோடு போடுறமாதிரி).

சாரங்கனின் அறுவை நாடகத்தில் மட்டுமல்ல, நேரிலும் தான். மன்மதனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை... (மவன் மாட்டினான்.............. :P :rolleyes: )

  • கருத்துக்கள உறவுகள்

லிசான் விரைவில் ஒரு தொகுதி நாடகங்கள் இறுவெட்டுகளில் ஆவணமாக்கபட்டு அவை வெளியிடபட இருக்கின்றது விரைவில் பார்க்கலாம் எதிர் பாருங்கள்

வெளியிட்டவுடன் தயவுசெய்து அறியதரவும்.......

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய படலையைத் தட்டினால் படலைக்குப்படலை பார்க்கலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.