Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Brexit 

நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே 
Dances with wolves.

 பிரித்தானியாவிலஇன்று அனைவராலும்பேசப்படும்  ஒரு மிக முக்கியமான செய்தியாக பிரெக்ஸிட் இருப்பதை காண முடிகின்றது .சுமார்  இரண்டு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது .

இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார் .

50 ஆண்டு வரை  ஐ .யூ உடன் சேர்ந்து  இருந்த பிரித்தானிய முழுமையான ஓர் விவாகரத்தை வேண்டி நிற்கிறது .தெரேசா அம்மையார் தனது மந்திரி சபையுடன் ஒரு முழுமையான யுத்தம் நடாத்தி கொண்டு இருக்கிறார் .ஐ .யூ .ஓடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும் இல்லை நாம் முழுமையாக வெளியேற வேண்டும் என்று இன்னும் சில மந்திரிமாரும் தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்களால் இன்னும் ஒரு தீர்வு எட்டாமல் இழுபறி நிலையே காணப்படுகின்றது .

ஐ .யூ உடன் இருந்து பிரித்தானிய பிரிந்து போகும் இடத்து பிரித்தானியப் பொருளாதாரம் ஒரு பின்னடைவை  சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .ஐ .யூ ஊடாக பிரித்தானியாவுக்கு வரும் எந்த வித பொருள்களுழும் வரி விலக்குடனே தான் வந்து சேருகின்றன .ஐ .யூ .இருந்து பிரித்தானிய எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் விலகுமிடத்து பிரித்தானியாவுக்கள் வந்து சேரும் அனைத்து பொருளுக்கும் பிரித்தானிய வரி செலுத்தியாகவேண்டும் .

இதனால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பொருளாதாரரீதியாக மிகவும் பின் தள்ளப்படுவர் .எல்லா வித நுகர்வுப் பொருட்களின் விலை முன்பை விட அதிகரித்தே காணப்படும் .இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவர் .இது மட்டும் இன்றி பல தொழிற்சாலைகள் தாங்கள் இறக்குமதி செய்யும் உற்பத்தி சாதனங்களுக்கு முன்பை விட கூடுதலான பணம் செலுத்த வேண்டும் . இது மாத்திரம் இன்றி தொழிளாரர்  பற்றா குறையும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் .

இது இப்படி காணப்படும் இடத்து பிருத்தானியா ஏதோ ஒரு வழியில் ஐ .யு உடன் ஒரு ஒப்பந்தத்துக்கு போக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது .
ஐ .யூ உ டன் அங்கத்துவம் பெறும் எந்த ஐரோப்பிய நாடுகளும் அதன் சட்ட வரைபுக்கு உட்பட்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது .பின் வரும் முக்கிய காரணிகளை முழுமையாக அவரகள் உடன் பட வேண்டும் அப்பொழுது தான் அவரகள் single market எனப்படும் ஒற்ரை சந்தையிலோ அல்லது customs union ஒரு வரி விலக்கு சந்தையிலோ தம்மை இணைத்து கொள்ள முடியும் .

ஐ .யூ .நின் நான்கு முக்கிய ஒப்பந்தங்களாக 

The free movement of goods ,services,capital,and persons within the e.u.are the famous four freedoms set out in the treaty of Rome.அதாவது ஐ.யூ நாடுகளுடையேபொருட்கள், சேவைகள், மூலதனம் ,மக்கள் ,இலகுவாக போய் வர வேண்டும் .ஆனால் பிரித்தானிய முதல் மூன்று சேவைகளுக்கு மாத்திரமே தாங்கள் உடன் படுவதாகவும் நான்காவதான ஐரோப்பிய மக்களின் சுதந்திரமாக  பிரித்தானியாவுக்குள் வந்து  குடி உரிமை  தொழில் வாய்ப்புகள் என்பன முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு நுழைவதற்கான இறுதி திகதி அதாவது cutt-off date for EU nationals 31.12.2020 எனறும் அறிவித்து இருக்கிறது .

ஐ .யூ .பிரித்தானியாவின் தீர்மானத்தில் குடி வரவுகளின் இறுதி திகதியை அங்கீகரித்தாலும் இவர்களது ஒப்பந்தத்தை தொடர்ந்து நிராகரித்து கொண்டே வருகின்றது .தனக்கு தேவையான பிரித்தானிய நலன் கருதிய பொருளாதார காரணிகளை எடுத்துக் கொண்டு தன் நாட்டுக்குள் நுழையும் ஐரோப்பிய யூனியன் மக்களை தடை செய்வதானது ஒரு cherry picking போன்றது என்று ஐ .யூ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது .

பிரித்தானிய பிரதமர் அடிக்கடி கூறி வருகின்றார் No deal is better than a bad deal என்றெ .ஐ .யூ உடனான நல்ல ஒப்பந்தம் இல்லாது விடத்து எந்த வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளி ஏறுவது சிறந்தது என்றே கூறி வருகிறார் .எது எப்படி இருப்பினும் பிரித்தானிய கட்டாயமாக ஒரு ஒப்பந்தத்தை செய்தே ஆக வேண்டிய நிலை தான் காணப்படுகிறது .இதுவே பிரித்தானியாவின் நீண்ட காலா பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் .அப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமா அல்லது மீண்டும் ஒரு மக்கள் தீர்ப்புக்கு வழி சமைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

பா .உதயகுமார் /Oslo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானியாவின் காலனி ஆட்சிக்குள் அகப்பட்ட அல்லது அகப்பட்டு மீண்ட நாடுகள் எதிலுமே மக்கள் இன்றும் நிம்மதியாக இல்லை.

தெய்வம் நின்று கொல்லும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Paanch said:

பிரித்தானியாவின் காலனி ஆட்சிக்குள் அகப்பட்ட அல்லது அகப்பட்டு மீண்ட நாடுகள் எதிலுமே மக்கள் இன்றும் நிம்மதியாக இல்லை.

தெய்வம் நின்று கொல்லும். 

ஆனால் உலகிற்கு அவர்கள் தான் நாகரீகம் பரவ செய்தவர்களாம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, மியாவ் said:

ஆனால் உலகிற்கு அவர்கள் தான் நாகரீகம் பரவ செய்தவர்களாம்...

எப்படி இப்படியா...?? 👇

7 hours ago, uthayakumar said:

நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, uthayakumar said:

Brexit 

நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே 
Dances with wolves.

 பிரித்தானியாவிலஇன்று அனைவராலும்பேசப்படும்  ஒரு மிக முக்கியமான செய்தியாக பிரெக்ஸிட் இருப்பதை காண முடிகின்றது .சுமார்  இரண்டு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது .

இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார் .

50 ஆண்டு வரை  ஐ .யூ உடன் சேர்ந்து  இருந்த பிரித்தானிய முழுமையான ஓர் விவாகரத்தை வேண்டி நிற்கிறது .தெரேசா அம்மையார் தனது மந்திரி சபையுடன் ஒரு முழுமையான யுத்தம் நடாத்தி கொண்டு இருக்கிறார் .ஐ .யூ .ஓடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும் இல்லை நாம் முழுமையாக வெளியேற வேண்டும் என்று இன்னும் சில மந்திரிமாரும் தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்களால் இன்னும் ஒரு தீர்வு எட்டாமல் இழுபறி நிலையே காணப்படுகின்றது .

ஐ .யூ உடன் இருந்து பிரித்தானிய பிரிந்து போகும் இடத்து பிரித்தானியப் பொருளாதாரம் ஒரு பின்னடைவை  சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .ஐ .யூ ஊடாக பிரித்தானியாவுக்கு வரும் எந்த வித பொருள்களுழும் வரி விலக்குடனே தான் வந்து சேருகின்றன .ஐ .யூ .இருந்து பிரித்தானிய எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் விலகுமிடத்து பிரித்தானியாவுக்கள் வந்து சேரும் அனைத்து பொருளுக்கும் பிரித்தானிய வரி செலுத்தியாகவேண்டும் .

இதனால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பொருளாதாரரீதியாக மிகவும் பின் தள்ளப்படுவர் .எல்லா வித நுகர்வுப் பொருட்களின் விலை முன்பை விட அதிகரித்தே காணப்படும் .இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவர் .இது மட்டும் இன்றி பல தொழிற்சாலைகள் தாங்கள் இறக்குமதி செய்யும் உற்பத்தி சாதனங்களுக்கு முன்பை விட கூடுதலான பணம் செலுத்த வேண்டும் . இது மாத்திரம் இன்றி தொழிளாரர்  பற்றா குறையும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் .

இது இப்படி காணப்படும் இடத்து பிருத்தானியா ஏதோ ஒரு வழியில் ஐ .யு உடன் ஒரு ஒப்பந்தத்துக்கு போக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது .
ஐ .யூ உ டன் அங்கத்துவம் பெறும் எந்த ஐரோப்பிய நாடுகளும் அதன் சட்ட வரைபுக்கு உட்பட்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது .பின் வரும் முக்கிய காரணிகளை முழுமையாக அவரகள் உடன் பட வேண்டும் அப்பொழுது தான் அவரகள் single market எனப்படும் ஒற்ரை சந்தையிலோ அல்லது customs union ஒரு வரி விலக்கு சந்தையிலோ தம்மை இணைத்து கொள்ள முடியும் .

ஐ .யூ .நின் நான்கு முக்கிய ஒப்பந்தங்களாக 

The free movement of goods ,services,capital,and persons within the e.u.are the famous four freedoms set out in the treaty of Rome.அதாவது ஐ.யூ நாடுகளுடையேபொருட்கள், சேவைகள், மூலதனம் ,மக்கள் ,இலகுவாக போய் வர வேண்டும் .ஆனால் பிரித்தானிய முதல் மூன்று சேவைகளுக்கு மாத்திரமே தாங்கள் உடன் படுவதாகவும் நான்காவதான ஐரோப்பிய மக்களின் சுதந்திரமாக  பிரித்தானியாவுக்குள் வந்து  குடி உரிமை  தொழில் வாய்ப்புகள் என்பன முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு நுழைவதற்கான இறுதி திகதி அதாவது cutt-off date for EU nationals 31.12.2020 எனறும் அறிவித்து இருக்கிறது .

ஐ .யூ .பிரித்தானியாவின் தீர்மானத்தில் குடி வரவுகளின் இறுதி திகதியை அங்கீகரித்தாலும் இவர்களது ஒப்பந்தத்தை தொடர்ந்து நிராகரித்து கொண்டே வருகின்றது .தனக்கு தேவையான பிரித்தானிய நலன் கருதிய பொருளாதார காரணிகளை எடுத்துக் கொண்டு தன் நாட்டுக்குள் நுழையும் ஐரோப்பிய யூனியன் மக்களை தடை செய்வதானது ஒரு cherry picking போன்றது என்று ஐ .யூ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது .

பிரித்தானிய பிரதமர் அடிக்கடி கூறி வருகின்றார் No deal is better than a bad deal என்றெ .ஐ .யூ உடனான நல்ல ஒப்பந்தம் இல்லாது விடத்து எந்த வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளி ஏறுவது சிறந்தது என்றே கூறி வருகிறார் .எது எப்படி இருப்பினும் பிரித்தானிய கட்டாயமாக ஒரு ஒப்பந்தத்தை செய்தே ஆக வேண்டிய நிலை தான் காணப்படுகிறது .இதுவே பிரித்தானியாவின் நீண்ட காலா பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் .அப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமா அல்லது மீண்டும் ஒரு மக்கள் தீர்ப்புக்கு வழி சமைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

பா .உதயகுமார் /Oslo

உதயகுமார் அவர்களே.... பிரெக்சிற் பற்றிய உங்களது, அழகிய தமிழ் விளக்கத்திற்கு நன்றி.
இன்று காலையில்...  இதனைப் பற்றி, கிருபனிடம் ஒரு விளக்கம் கேட்போம் என நினைத்தேன்.
ஆனால்... என்ன அதிசயம் என்று தெரியவில்லை, மாலையில் உங்கள் கட்டுரை வந்திருந்தது மகிழ்ச்சி. :)

சின்ன... ஒரு,  கேள்வி உதயகுமார்.    
ஐரோப்பிய யூனியனுடன், பிரித்தானியா... சேர்ந்து, 50 வருடங்கள் என்று குறிப்பிட்டமை,  
தவறான தகவல் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் தமிழ் சிறி 
நீங்கள் கூறுவது சரியானதே இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுவுக்கு 
வந்த பின் ஐரோப்பிய நாடுகள் தங்கள் எதிர்கால அமைதி பொருளாதாரம் 
பற்ரி சித்திக்க தொடக்கி சில ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு 
பொருளாதார சந்தையை உருவாக்கினர் .இதன் பின் படிப்படியாகா 
பல நாடுகள் சேர்ந்து 1957 இல் ஒரு ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை
உருவாக்கினார் இதில் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்தனர் .
பெரிய பிரித்தானிய இதில் இணைய இரு முறை விண்ணப்பித்தும் 
பிரான்ஸ் அதிபர் டீ கூலே இனால் நிராகரிக்கப்பட்டு மீண்டும்
1973 ம் ஆண்டு ஐரோப்பிய சந்தயில் இணைந்து கொண்டனர் .
பின்பு முன்னாள் பிரதமர் மார்கிரட் தக்சர் புதிதாக பல ஒப்பந்தங்களை 
கொண்டு வந்தார் .

நல்ல கருத்துக்கள் கூறிய உறவுகளுக்கு நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதயகுமார், சுருக்கமான எளிமையான விளக்கத்திற்கு நன்றி. இவை இன்று அவசியமான விளக்கங்கள். எனக்கிருக்கும் சில கேள்விகளை இங்கு கேட்கலாமா? வெளியேறும் முடிவுக்கு மிகச் சிறிய பெரும்பான்மை வெற்றி கிடைத்தது (1% ?). இந்த ஆதரித்து வாக்களித்த வாக்காளர்கள் என்ன வகையினர்? வயது, தொழில், கல்வி நிலை என்ற ரீதியில்? பிறெக்சிற் வெற்றியும் அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றியும் ஒரே மாதிரியான குடிவரவு எதிர்ப்பு மனநிலையின் விளைவுகள் என நான் நினைக்கிறேன். இது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/5/2019 at 2:03 PM, மியாவ் said:

ஆனால் உலகிற்கு அவர்கள் தான் நாகரீகம் பரவ செய்தவர்களாம்...

நாகரிகம் என்றால் வரையறை எதுவென்று எமக்கே இன்னும் தெரியாதபோது அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்

17 hours ago, Justin said:

உதயகுமார், சுருக்கமான எளிமையான விளக்கத்திற்கு நன்றி. இவை இன்று அவசியமான விளக்கங்கள். எனக்கிருக்கும் சில கேள்விகளை இங்கு கேட்கலாமா? வெளியேறும் முடிவுக்கு மிகச் சிறிய பெரும்பான்மை வெற்றி கிடைத்தது (1% ?). இந்த ஆதரித்து வாக்களித்த வாக்காளர்கள் என்ன வகையினர்? வயது, தொழில், கல்வி நிலை என்ற ரீதியில்? பிறெக்சிற் வெற்றியும் அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றியும் ஒரே மாதிரியான குடிவரவு எதிர்ப்பு மனநிலையின் விளைவுகள் என நான் நினைக்கிறேன். இது உண்மையா?

இது மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு அல்ல. பாராளுமன்றக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Justin said:

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாகரிகம் என்றால் எதுவென்று எமக்கே இன்னும் தெரியாதபோது அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்

இது மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு அல்ல. ஐரோப்பியப் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு.

இது எப்ப நடந்தது??????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

இது எப்ப நடந்தது??????

இரு வாரங்களுக்கு முன் என நினைக்கிறேன். ஆனால் ஐரோப்பியப் பாராளுமன்றில் அல்ல. UK பாராளுமன்றில். 432 உறுப்பினர்களில் 230 பேர் எதிராக வாக்களித்ததாகச் செய்திகளில் கூறினர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்ற மக்கள் தீர்ப்பு வாக்கு எடுப்பில் (ரெபிரண்டம் )பெரும்பான்மையாக 70 வயதுக்கு மேலான மக்கள் விலகுவதற்கு வாக்களித்தார்கள் .இளம் வயதினை உடைய படித்த பலர் பெரிய பிரித்தானிய சேர்ந்து இருக்க வேண்டும் என்றே வாக்களித்தனர் .ஸ்கோஇட்லண்ட் லண்டன் போன்ற இடங்ககஇல் பெரும்பான்மை மக்கள் சேர்ந்து இருக்க வாக்களித்தனர் .சிறிய விகுத்தசாரத்தில் தான் பிரிந்துபோக வாக்கு அளித்தனர் 
இறுதியாக நடந்த அமெரிக்க ஜனாபதி தேர்தலும் பிரெகசீட்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே அரசியல் பொருளாதார சமூக காரணங்களே இப்படி ஒரு தாக்கத்தை இரு நாடுகளிலும் கொண்டு வந்தது .
முக்கியமாக குடி வரவினரால்பெரும் பய உணர்வே முக்கிய காரணமாகும் (ஸேனோபோபியோ )என்று ஆங்கிலத்தி கூறுவார்கள் .
வெளி நாட்டவர்கள் தங்கள் வேலைகளை தங்கள் பணத்தை இவர்கள் திருடிடுவதாகவே இவர்களுக்கு மிகவும் வெறுப்பும் பயமும் முக்கிய காரணமாக அமைந்தது .அதே போல் உலக ஒழுங்கில் எட்டப்படும் மாறுதல்கள் எல்லாமே  காரணமாக இருக்கின்றன .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/6/2019 at 6:52 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாகரிகம் என்றால் வரையறை எதுவென்று எமக்கே இன்னும் தெரியாதபோது அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்

இது மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு அல்ல. பாராளுமன்றக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு. 

சுமே, நான் கேட்டது ஆரம்பத்தில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்களிப்பை. அதில் 51.8% பேர் விலகவும் , 48.11% பேர் சேர்ந்திருக்கவும் வாக்களித்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே விலகும் நடவடிக்கை ஆரம்பித்தது! 

17 hours ago, uthayakumar said:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்ற மக்கள் தீர்ப்பு வாக்கு எடுப்பில் (ரெபிரண்டம் )பெரும்பான்மையாக 70 வயதுக்கு மேலான மக்கள் விலகுவதற்கு வாக்களித்தார்கள் .இளம் வயதினை உடைய படித்த பலர் பெரிய பிரித்தானிய சேர்ந்து இருக்க வேண்டும் என்றே வாக்களித்தனர் .ஸ்கோஇட்லண்ட் லண்டன் போன்ற இடங்ககஇல் பெரும்பான்மை மக்கள் சேர்ந்து இருக்க வாக்களித்தனர் .சிறிய விகுத்தசாரத்தில் தான் பிரிந்துபோக வாக்கு அளித்தனர் 
இறுதியாக நடந்த அமெரிக்க ஜனாபதி தேர்தலும் பிரெகசீட்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே அரசியல் பொருளாதார சமூக காரணங்களே இப்படி ஒரு தாக்கத்தை இரு நாடுகளிலும் கொண்டு வந்தது .
முக்கியமாக குடி வரவினரால்பெரும் பய உணர்வே முக்கிய காரணமாகும் (ஸேனோபோபியோ )என்று ஆங்கிலத்தி கூறுவார்கள் .
வெளி நாட்டவர்கள் தங்கள் வேலைகளை தங்கள் பணத்தை இவர்கள் திருடிடுவதாகவே இவர்களுக்கு மிகவும் வெறுப்பும் பயமும் முக்கிய காரணமாக அமைந்தது .அதே போல் உலக ஒழுங்கில் எட்டப்படும் மாறுதல்கள் எல்லாமே  காரணமாக இருக்கின்றன .

இதே போலத்தான் ட்ரம்பின் தெரிவும். புளோரிடா மாநிலம் "God's waiting room" என்று கூறப்படும் அளவுக்கு ஒய்வு பெற்றுச் சென்று  வசிக்கும் வயசாளிகளால் நிரம்பிய ஒரு மாநிலம். அங்கே ட்ரம்பிற்குப் பெரு வெற்றி! 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.