Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவனின் பெல்ட் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடந்திருக்கக் கூடிய அனர்த்தம் தப்பி விட்டது என ஓர் செய்தி (23/04/2019) . பெல்ட் என்பது பழைய ஞாபகம் ஒன்றை கிளறி விட்டது.

முகத்திலே  இலகுவாகப் பேய்க்காட்டுப்படக் கூடிய ஆள் என்று எழுதி வைத்திருக்கோ என்னமோ தெரியவில்லை  , எங்க சாமான் வாங்கப் போனாலும் எதாவது ஒண்டு நடக்கும்.  அது பழைய காலத்தில பெற்ராவில (புறக்கோட்டை)   நூற்றுச் சொச்ச ரூபாவிற்கு இடுப்புப் பட்டி வாங்கிய நாட்கள் என்றாலென்ன,  இப்ப 5.20 வெள்ளி பெறுமதியான யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் என்றாலென்ன, 1,399  வெள்ளி பெறுமதியான Lap Top  எண்டாலென்ன எதையாவது அமத்தி அடிச்சு தலையில கட்டப் பார்க்கினம் . ஒண்டுக்கு  இரண்டு ரீடிங் கிளாஸ் எடுத்துக் கொண்டு போய் (  சின்ன எழுத்து வாசிக்க ஒண்டு , பெரிய எழுத்து வாசிக்க ஒண்டு)  எண்ணெய் விட்டுக் கொண்டு போன கண்ணால துருவித்  துருவிப் பார்த்தாலும் சில வேளை ஏதாவது தப்பி விடும் , வீட்டுக்கு வந்து பார்க்கும் போது.

 

Episode 1: பெற்றாவில் வாங்கிய பெல்ட்  : 

 உழைக்கத் தொடங்காத காலம்.  அப்பா ஒவ்வொரு மாதமும் அனுப்பும் மணி ஓடரை  வைத்து ஹால் சாப்பாட்டுக்காசு, சில்லரைச் செலவுகள் எல்லாம் பார்த்து , இடை இடையே நண்பர்களுடன் Leons இற்கு  போய் அருமையாக ரெண்டு பியர் அடிச்சு  (  இரண்டுக்கே நல்லா  ஏறி விடும் அப்பவெல்லாம்) , பிறகு கொழும்புக்கும் போவதற்கு காசினைத் தேற்றி எடுப்பதென்பது குதிரை கொம்பு தான்.  எப்படியோ சில பல குதிரைக்கொம்புகள் இடைக்கிடை வந்து சேரும்.  அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் கொழும்பு போன நேரம் , வந்த அலுவல் முடித்து விட்டு திரும்புவதற்கு பஸ்ஸைப் பிடிக்க Pettah (புறக்கோட்டை ) நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன்.  வழியில ஒருத்தன் வித விதமான இடுப்புப் பட்டிகளை பரப்பி வைத்து விலை எதோ நூற்றுச்சொச்சம் என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தான்.  சற்றுக் குனிந்து இடுப்பைப் பார்த்தேன்.  ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய ஓட்டைகளும் குறுக்கே ஒரு பெரிய மடிப்பு வெடிப்புமாக எனது பெல்ட் பென்ஷன் தரச் சொல்லி அழுது கொண்டிருந்தது.  பர்ஸினுள் மேலதிகமாக ஒரு 125 ரூபாய் மட்டில் இருந்தது ஞாபகம் வர , சற்றே வேகம் குறைத்து அவனிடம் சென்றேன்.

  மில கீயத (என்ன விலை)?” என்று எனக்குப் பிடித்திருந்த ஒரு பெல்டைக் காட்டிக் கேட்டேன். எனது சிங்களம் பற்றி எனக்கு எப்பவுமே பெருமை உண்டு 4,5  வயதில்  கத்தோலிக்க சிஸ்டரிடம் படிக்கப் போன காலத்திலேயே , அவர் ஒரு சிங்கள மாஸ்டரை ஒழுங்கு படுத்தி சிங்களம் பயின்று வந்திருந்தது இப்ப ஒரு  45 வருடம் போன பின்பும் நல்லா நினைவில் நிக்கிற ஒண்டெண்டால் , அப்ப  இருபது வயதில தெள்ளுத் தெறித்தது மாதிரித் தானே இருந்திருக்கும்.

ஏக்க சீய தஹாயாய் மஹத்தயா”  என்றான் அவன்.

 மஹத்தயா என்று அவன்  விழித்தது மனதுக்கு அப்படி ஒரு திருப்தி. இப்ப நினைச்சுப் பார்த்தால் அன்றாடம் சந்திக்கும் சாதாரண மனிதர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அவன்  தரவளிகளெல்லாம்  Customer Psychology  இல் PhD தர அறிவு கொண்டிருந்து வியாபாரம் செய்திருந்தார்கள் என வியப்பாகக் இருக்கிறது , Fittest Survives.  

இன்றைய திகதியில் எனது துணைவியாரும் என்னுடன் அங்கு நின்றிருந்தால்,  ஐம்பது ரூபாய்க்குத் தருகின்றாயா எனக் கேட்டிருப்பார். எப்போதுமே வராத அந்தத் துணிச்சல் எங்கேயோ பதுங்கி நிற்க , விலை கொஞ்சம் அதிகம் தான் என மனது சொல்ல , ஒரு மாதிரி துணிச்சலை வரவழைத்து கொண்டு கேட்டேன்,   ஏக்க சீயட்ட தெண்ட புளுவாங்த ( நூறு ரூபாய்க்கு தர முடியுமா)”  என்று.

ஒரு மாதிரி என்னை மேலும் கீழும் அளந்து பார்த்தவன் , “சரி”  என்று சொன்னான்.  எனக்குள்ளே ஒரே புழுகம்- ‘ யாரடா சொன்னது உனக்குத் துணிச்சலும் பேரம் பேசும் திறமையும் இல்லை எண்டு’  எனக்கு நானே  தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு தான் விவகாரமே ஆரம்பமாகியது.

நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். சந்தோசமாக வாங்கி வைத்து கொண்டான். பின்பு Belt எடுத்து எனது இடுப்பில் சுற்றி  அளவு பார்த்தவன் கேட்டான்   ஹோலுத் தஹலா தெனவாத மாத்தையா ருப்பியல் பஹய் விதராய் ( ஓட்டை போட்டுத்  தரவா ஐந்து ரூபாய் மட்டுமே)”   என்றான்.

நானும்  சரி என்றேன்.  இடுப்பில் வைத்து மீண்டும் அளவு எடுத்து ஓட்டை போட்டான்.  பிறகு கேட்டான் பக்கத்தில கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு மேலும் ஓட்டைகள் போடவா என்று.  நானும் ஒரு பெரிய மனிதத் தோரணையில் ஓமென்று தலையாட்டினேன்.

படக் படக் என்று நாலைந்து ஓட்டைகள் போட்டான்.  பெல்டைத் திரும்பத் தந்தான்.  போட்டுப் பார்க்கச் சொன்னான்.  பழைய பெல்டை அதிலேயே கழற்றி எறிந்து விட்டு புதியதை மாட்டிக் கொண்டேன். குனிந்து பார்க்க நல்ல எடுப்பாகத் தான் இருந்தது. பர்ஸ் இலிருந்து ஐந்து ரூபாயத் தாளை எடுத்து நீட்டினேன். போகத் திரும்பினேன்.

பொட்டக் இண்ட மஹத்தயா?”  என குரல் விட்டான். திரும்பிப் பார்த்தேன். “தவ ரூபியால் விஸ்ஸக் தென்ட மஹத்தயா( இன்னமும் இருபது ரூபாய் தாருங்கள்)?”  என்கிறான்.

எனக்குப் பெரிய அதிர்ச்சி. 105  ரூபாய் போக மிச்சமாக இருக்கக் கூடிய 20 ரூபாயில்  புறக்கோட்டை நானா கடை கொத்துரொட்டியை ஒரு கை பார்த்து விட்டு பஸ் ஏறலாம் (அப்ப ஒரு கொத்து ரொட்டி 10 ரூபா அப்படி இருந்திருக்கும்) என இருந்த எனக்கு , இவன் காசு முழுவதையும் அமத்தப் பார்த்தால் எப்படி இருக்கும்.

என்ன 5 ரூபாய் எண்டு தானே சொன்னனீ ? என்றேன் நான்.

 ஓம் மஹத்தயா ஒரு ஓட்டை போட 5 ரூபாய் , 5 ஓட்டைக்கும் 25 ரூபாய் ஆகின்றது.  காசைத் தாருங்கள்”  என்று தொனியை சற்றே உயர்த்தி சொன்னான்.

யாரோ எங்கோ எள்ளி நகைத்தார்கள்.  எனது  கொத்து ரொட்டி கனவை இறுக்கமாக மூட்டை கட்டி வைத்து விட்டு,  பர்ஸை வழித்துத் துடைத்து அவனிடம் கொடுத்து விட்டு , ஏன் எனக்குத் தான் இதெல்லாம் நடக்குது என்று வாழ்க்கையே  வெறுத்துப் போய் திரும்புவதற்கு மீண்டும் பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

 

Episode 2 : வரும்….

 

 

Edited by சாமானியன்
spelling

  • கருத்துக்கள உறவுகள்

சேம் பிளட்......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

சேம் பிளட்......

இப்பவரைக்கும் கொழும்ம்புக்கு செல்பவர்களுக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது இந்த சம்பவம்.

ஆனால் இப்ப சிங்களவர்களை பெற்றாவில் கடை வைத்திருக்கும் தமிழர்கள்தான் வாங்க வாங்க என்று கூப்பிட்டு விட்டு வியாபாரம் முடிந்த பின் சிங்களத்தில் அதட்டி பேசுவதால் கன பேர் மீதிக்காசை  விட்டுட்டு  வந்தவர்கள் இப்பவும் இருக்கிறார்கள்.

சாமானியனின்  சேம் சம்பவம் நடந்திருக்கு ஓட்டை ஸ்கூட் டிரைவரால் போட்டுக்கொண்டது நான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமாக விபரித்திருக்கிறீர்கள். பல ஆண்கள் இப்பிடி ஏமாந்து போவதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏமாந்த கதையை சொல்லுவம் என்று வந்தால் இவ வேற....., அதனால் நான் அந்த ஏமாளிகள் லிஸ்டில் சேர விரும்பவில்லை.....!  😣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல சுவாரசியமாக விபரித்திருக்கிறீர்கள். பல ஆண்கள் இப்பிடி ஏமாந்து போவதுதான்.

இந்த பெயாரன் லவ்லியை நம்பி இப்பவரைக்கும் ஏமாறும் பெண்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது அதென்ன ஆண்கள் மட்டும் ஏமாந்து போவது 

 

4 minutes ago, suvy said:

நானும் ஏமாந்த கதையை சொல்லுவம் என்று வந்தால் இவ வேற....., அதனால் நான் அந்த ஏமாளிகள் லிஸ்டில் சேர விரும்பவில்லை.....!  😣

சரி நாங்க மறைச்சு வச்சுகிறமே ( அந்த அழிறப்பரை எடுங்கள் )

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த பெயாரன் லவ்லியை நம்பி இப்பவரைக்கும் ஏமாறும் பெண்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது அதென்ன ஆண்கள் மட்டும் ஏமாந்து போவது 

 

சரி நாங்க மறைச்சு வச்சுகிறமே ( அந்த அழிறப்பரை எடுங்கள் )

உங்களுக்கு தெரியும் தானே நாங்கள் உதுகளைப் பூசுறதும் இல்லை ஏமாறுறதும் இல்லை😛

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு தெரியும் தானே நாங்கள் உதுகளைப் பூசுறதும் இல்லை ஏமாறுறதும் இல்லை😛

 வீட்டின் மூலையில் சோற்றுக் கற்றாழை நல்ல வளர்ந்து இருக்கு । அதை வெட்டி முகத்தில் பூசி வந்தால் வேறு ஒன்றும் தேவையில்லை என்று சொல்லினம், முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் - வரு முன் காக்கும் நோக்கில்   

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

 வீட்டின் மூலையில் சோற்றுக் கற்றாழை நல்ல வளர்ந்து இருக்கு । அதை வெட்டி முகத்தில் பூசி வந்தால் வேறு ஒன்றும் தேவையில்லை என்று சொல்லினம், முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் - வரு முன் காக்கும் நோக்கில்   

 

பெண்கள் தான் முக அழகைப்பற்றிக் கவலைப்படுறது. நீங்களும்????.......எங்கேயோ இடிக்குதே சாமானியன்.????

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்பிடி ஏமாற்றப்பட்டுள்ளேன். நாங்கள் எகிறினால் அவர்கள் கட்டாயம் பணம் தரவேண்டும் என்று மிரட்டும் தொனியில் கேட்பார்கள், உதவிக்கு அவர்களின் group பக்கத்திலேயே இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு தெரியும் தானே நாங்கள் உதுகளைப் பூசுறதும் இல்லை ஏமாறுறதும் இல்லை😛

ம்ம் நாமெல்லாம் கறுப்புதானே அக்கா

 

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்கள் தான் முக அழகைப்பற்றிக் கவலைப்படுறது. நீங்களும்????.......எங்கேயோ இடிக்குதே சாமானியன்.????

நல்ல   நாள் பெரு நாளிலேயே கணக்கில எடுக்கினமில்லை.  முகத்தில வேறு பளபளப்பு குறைஞ்சு போச்சுதெண்டால்   எல்லாம் முடிஞ்சு போச்சுது எண்டு ஒரேயடியாகக் தள்ளி வைச்சு விடுவினம். 
நாங்கள் எவ்வளவைத் தான் யோசிச்சு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு 😏

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் நாமெல்லாம் கறுப்புதானே அக்கா

 

இங்க ஒரு பகுதி என்னடாவென்றால் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு"  என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கு. 

Come  on  ராஜா,  நிறத்தை விட presentation  இல தான்  விஷயம் இருக்கு , இது நான் சொல்லவில்லை அனுபவம் சொல்லுது …….

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சாமானியன் said:

ஓம் மஹத்தயா ஒரு ஓட்டை போட 5 ரூபாய் , 5 ஓட்டைக்கும் 25 ரூபாய் கின்றது.  காசைத் தாருங்கள்”  என்று தொனியை சற்றே உயர்த்தி சொன்னான்.

சிங்களம் கதைக்கத் தான் பிரச்சனை.
நேரடியாக தமிழிலேயே கதைத்தால் எல்லாம் சரியாகத் தான் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

இங்க ஒரு பகுதி என்னடாவென்றால் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு"  என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கு. 

Come  on  ராஜா,  நிறத்தை விட presentation  இல தான்  விஷயம் இருக்கு , இது நான் சொல்லவில்லை அனுபவம் சொல்லுது …….

 

ஆஹா ஊர்ல எல்லாம் வெள்ளையாக கிறீம் போடுக்கொண்டு இருக்கிறது அதுவும் விலைகூடிய நைட் கிறீமாம் என்னத்த சொல்ல 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆஹா ஊர்ல எல்லாம் வெள்ளையாக கிறீம் போடுக்கொண்டு இருக்கிறது அதுவும் விலைகூடிய நைட் கிறீமாம் என்னத்த சொல்ல 

இப்பவே நொந்து போனார் போலை கிடக்கு.....:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆஹா ஊர்ல எல்லாம் வெள்ளையாக கிறீம் போடுக்கொண்டு இருக்கிறது அதுவும் விலைகூடிய நைட் கிறீமாம் என்னத்த சொல்ல 

தெரிஞ்ச ஆட்களென்றால் அவையிட்ட சொல்லுங்கோ காசைக்  கரியாக்க வேண்டாம் என்று.  சோற்றுக்கற்றாழை ( Aloe Vera) எங்கேயும் வளரும்,  அதுவும் எல்லுப்பன்  பச்சை மஞ்சளும் கலந்து முகம்,  கை,  கால்களில் பூசி ஒரு 15 -30 நிமிடத்தின் பின் அகற்றி விடலாம்-  இவை பாவிக்கக் கூடிய எந்த Cream யும் விட நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும்.   சைனீஸ் , தாய் பெண்கள் இதைத் தான் காலா காலமாக செய்து வருகிறார்கள்.

 

அதை விட புற்றுநோயைக் குணப்படுத்த சோற்றுக்கற்றாழையை பாவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.  சைனீஸ் பெட்டையளிட்ட கேட்டுப் பாக்க வேணும் அவையின்ர பக்கம் இந்த புற்றுநோய் விவகாரம் எல்லாம் எந்த அளவில் இருக்கு எண்டு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.