Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரருக்கு தண்ணீர் போத்தல் வழங்கிய சிறுமி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல்  வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

________________________________________

கடந்த 21ம் திகதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 250 க்கும் அதிகமானோர் பலியாகினர்.

________________________________________

இதையடுத்து தொடர்ந்தும் நாட்டில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலைியில் நேற்று கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி கடற்கரை வீதியில்  தொடங்கி, சாய்ந்தமருது வரையான பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

________________________________________

இதன்போது, கல்முனை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட அவர், அந்த சிறுமியின் தலையை அன்புடன் வருடிக்கொடுத்தார். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த புகைப்படம், சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.

http://www.virakesari.lk/article/55045

அப்பாவிற்கும் வாப்பாவிற்கும் என்ன வித்தியாசம்? – இதயம் பலவீனமானவர்கள்தவிருங்கள்

இதே சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட சிறுவர்ளின் ஒளிப்படங்களையும் காணொளிகளையும் உங்களுக்கு சிறுதொகுப்பாய் தருகிறோம்.

https://www.thaarakam.com/2019/05/01/அப்பாவிற்கும்-வாப்பாவிற/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம்...அந்த சின்னன் வீட்டுக்காலை தனிய வெளிக்கிட்டு போய் ஆமிக்கு தண்ணி குடுத்துதாம்....அதை ஒருத்தர் படமெடுத்தாராம்.....அது இப்ப வைரலாகி உலகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்துதாம்...

ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையினர், சிறுவர்கள் மீது மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்டுள்ளது.

ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்திருந்த சிறிலங்காவின் மூன்று அதிகாரிகள் உட்பட 114 படைத்தரப்பினர் மீது சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கடந்த வருடம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அப்பாவிற்கும் வாப்பாவிற்கும் என்ன வித்தியாசம்? – இதயம் பலவீனமானவர்கள்தவிருங்கள்

இதே சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட சிறுவர்ளின் ஒளிப்படங்களையும் காணொளிகளையும் உங்களுக்கு சிறுதொகுப்பாய் தருகிறோம்.

https://www.thaarakam.com/2019/05/01/அப்பாவிற்கும்-வாப்பாவிற/

1 hour ago, குமாரசாமி said:

ஓமோம்...அந்த சின்னன் வீட்டுக்காலை தனிய வெளிக்கிட்டு போய் ஆமிக்கு தண்ணி குடுத்துதாம்....அதை ஒருத்தர் படமெடுத்தாராம்.....அது இப்ப வைரலாகி உலகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்துதாம்...

A fire burns Sunday after government shelling, according to a humanitarian group in the region. Ãhnliches Foto Ãhnliches Foto

இந்த ஊடகங்கள்...... எல்லாம், எம்மை.... எவ்வளவு, முட்டாள்கள்  ஆக்கப்  பார்க்கிறார்கள்?

தமிழ் ஈழப் போரில்  இறந்த தாயின்,  மார்பகத்திரிருந்து... பாலை குடித்த படம் எல்லாம் பார்த்தோம்.
இதனை... விட,  ஸ்ரீலங்கா ஆமிக்காரன் நல்லவன் என்று, சொல்லி....
அவனுக்கு..... "தண்ணி" கொடுக்கும் படங்களை, எங்களுக்கு காட்ட வேண்டாம்.

தமிழ் ஈழப் போரில்... பாதிக்கப்  பட்ட குழந்தைகளின் படங்களை இணைத்த  போது..... 
நிர்வாகம் அதனை... நீக்கி  விட்டது.

இப்ப  "ஆமிக்கு...  முஸ்லீம்  சிறுமி"  தண்ணி குடுக்கிற படம் எல்லாம், தேவையா?

இது... ஒரு உளவியல் மனமாற்றத்ததை ஏற்படுத்தும்,  "அபாயம்" உள்ளது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 350 இக்கு மோல் என உறுதிப்படுத்தப்பட்டுது, ஏன் இந்த வீரகேசரி மட்டும் இன்னும் 250 இக்கு மேல் என்று நிக்குது?

அப்படியே வந்து ஆக 50 திற்கு மேல் தான் என்று நிக்குமோ?😡

1 hour ago, மலையான் said:

மொத்த தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 350 இக்கு மோல் என உறுதிப்படுத்தப்பட்டுது, ஏன் இந்த வீரகேசரி மட்டும் இன்னும் 250 இக்கு மேல் என்று நிக்குது?

அப்படியே வந்து ஆக 50 திற்கு மேல் தான் என்று நிக்குமோ?😡

350 என்பது அரசின் தவறான கணக்கெடுப்பு. அரசே பிறகு அதை சரி செய்து 253 என்றது

11 hours ago, தமிழ் சிறி said:

A fire burns Sunday after government shelling, according to a humanitarian group in the region. Ãhnliches Foto Ãhnliches Foto

இந்த ஊடகங்கள்...... எல்லாம், எம்மை.... எவ்வளவு, முட்டாள்கள்  ஆக்கப்  பார்க்கிறார்கள்?

தமிழ் ஈழப் போரில்  இறந்த தாயின்,  மார்பகத்திரிருந்து... பாலை குடித்த படம் எல்லாம் பார்த்தோம்.
இதனை... விட,  ஸ்ரீலங்கா ஆமிக்காரன் நல்லவன் என்று, சொல்லி....
அவனுக்கு..... "தண்ணி" கொடுக்கும் படங்களை, எங்களுக்கு காட்ட வேண்டாம்.

தமிழ் ஈழப் போரில்... பாதிக்கப்  பட்ட குழந்தைகளின் படங்களை இணைத்த  போது..... 
நிர்வாகம் அதனை... நீக்கி  விட்டது.

இப்ப  "ஆமிக்கு...  முஸ்லீம்  சிறுமி"  தண்ணி குடுக்கிற படம் எல்லாம், தேவையா?

இது... ஒரு உளவியல் மனமாற்றத்ததை ஏற்படுத்தும்,  "அபாயம்" உள்ளது. 

தமிழ் சிறி,

இன்னும் ஒரு படமும் வீடியோவும் வைரலாகிக் கொண்டு இருக்கு. சஃறானின் பெண் பிள்ளை சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் காயம் அடைந்து உயிருக்கு போராடும் போது காப்பாற்றி வெளியே கொண்டு வருவதும், பின் அம்புலன்ஸில் வைத்து முதலுதவி செய்வதும்..... அவற்றை இணைக்கவா😀

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் அரசியல் நோக்கத்திற்காகத் தான் எடுக்கப்பட்டு இருக்கு...ஆனால் மட்டில் தமிழர் ஆரம்ப பிரச்சினை{சீயோன் சேர்ச்யில் குண்டு வெடித்த அடுத்த 2,3 நாட்களுக்கு} நடந்த நேரம் போலீசாருக்கு தண்ணீர் எல்லாம் குடுத்து உபசரித்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா அரச பயங்கரவாதம்.. ஐ எஸ் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதத்தை விட திறம் என்று காட்ட விளைவதோடு.. சர்வதேச அரங்கில் எழுந்துள்ள.. 2009 போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான சூழலாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.. கச்சிதமாக.

அதாவது சொறீலங்கா சிங்கள அரசும்.. அதன் அரச பயங்கரவாதப் படைகளும்.. ஒரே கல்லில்... பல மாங்காய்களை இலக்கு வைத்துச் செயற்பட்டு வருகின்றன. 

Image result for பாலà®à¯à®à®¨à¯à®¤à®¿à®°à®©à¯

உந்தப் படங்களோடு சேர்த்து இதையும் வைரலாக்க ஆக்களில்லை என்பதை எண்ணினால்.. இந்த உலகம் போற போக்கை எளிதாக விலங்கிக் கொள்ளலாம். 

விபரமறியாத சிறுகுழந்தைக்கு தெரியாது தான் தண்ணி போத்தல் குடுக்கிறது ஒரு மோசமான கொலைகாரனுக்கு என்று!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.