Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்ட பூர்வ கொலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட பூர்வ கொலை.

தாத்தா வயது 79. மனைவியோ படுத்த படுக்கை. அவரை பராமரிக்கும் வேலை.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், ஒருநாள் அதிகாலை வேளை. போதைப்பொருள் உள்கொண்ட நிறை மயக்கத்தில் 37 வயது திருடன் வீட்டினுள் புகுந்து கொண்டான். அவனுடன் இன்னுமோர் திருடன்.

வயதானவர்கள்.... தூங்கிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு வந்திருப்பார்கள்.

தனது மனைவிக்கு உணவு தயாரிக்க கீழ்தளத்தில் இருந்தார் தாத்தா.

அவனது கையில் நீளமான screwdriver. அவைதான் அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதங்கள். போலீஸ் செக் பண்ணினாலும், அது சட்டதுக்கு மாறான பயங்கர ஆயுதம் கிடையாது என்பதால் போய் கொண்டே இருக்கலாம்.

பெரிய வாள் ஒன்றை தூக்கிக் கொண்டார் தாத்தா. 'இதோ பார்... நான் வைத்திருப்பது மிக நீளமானது. எனது வீட்டிலிருந்து வெளியே போய் விடு, கிராதகனே... எச்சரித்தார் தாத்தா.

கிழவனுக்கு லொள்ளை பார் என்பதுபோல அவரை கடந்து செல்ல முனைந்தான் அவன்.

5ccaec6e240000d80038c95c.png.cf.jpg

சுழட்டினார் வாளை . சுருண்டு விழுந்தான் அவன். கூட வந்தவனோ, பின்னம் கால் பிரடியில் அடிபட ஓடிவிட்டான்.

போலீசார் வந்தனர். பிணத்தினை அகற்றி, தாத்தாவை கொண்டு சென்றனர். அவரிடம் வாக்குமூலம் எடுக்கவே என்று சொன்னாலும், அவர் கைதானார் என்றே செய்தி பரவியது.

5ccaf3a82400002601e52380.png.cf.jpg

மக்கள் கொதிக்க தொடங்கினர். தாத்தா அனுப்பி வைக்கப்பட்டார. 

இறந்தவனோ, பரம்பரை திருடன். குடும்பமே திருட்டு தான் தொழிலே.

அவர்கள் திரண்டு வந்து, தாத்தாவின் வீட்டு வேலியில் பூக்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பலி வாங்காமல் விடமாடோம் என்று சூளுரைத்தனர்.

5ccaf3dc2300008500948557.png.cf.jpg

தாத்தாவின் பாதுகாப்புக்காக, அவரையும், மனைவியையும் வேறு ஒரு ஊருக்கு ரகசியமாக அனுப்பி வைத்தனர் அதிகாரிகள்.

அந்த பகுதியில் இருக்கும் மக்கள், பூங்கொத்துகளை புடுங்கி வீசுவதும், காலால் மிதித்து கோபத்தினை காட்டுவதும், அவர்கள் குடும்பமாக வந்து மீண்டும் பூக்கொத்துகளை வைப்பதுமாக நிலைமை இருந்தது.

5ccaf3be2300009400d165cc.png.cf.jpg

பொலிசாருக்கோ, அதிகாரிகளுக்கோ தர்மசங்கட நிலை.

இறந்தவனுக்கு துக்கம் அனுசரிப்பது அவர்களதுஉரிமை. அதனை தடுக்க முடியாது. ஆனாலும், அங்கே வந்து கொல்லுவோம், எரிப்போம், பழி  வாங்குவோம் என்று அலம்பறை பண்ணுவது சரியல்ல என்பது ஊரார் வாதம்.

சில நாட்கள் விட்டுப் பிடித்து, போதும் இதுக்கு மேல் இங்கே வரவேண்டாம் என்று சற்று இறுக்கம் காட்டினார்கள்.

மெதுவாக ஓய்ந்தது.

மரணவிசாரணை தீர்ப்பு இன்று வழங்கப் பட்டது. 

தாத்தா செய்தது, தன்னையும், தனது மனைவியையும், வீட்டினையும் காப்பாத்திக்கொள்ள செய்த சட்ட பூர்வமான கொலை என்று தீர்ப்பு வந்துள்ளது.

இத்துடன் வழக்கு முடிவுக்கு வந்தது.

இதே போல, டோனி மார்ட்டின் என்பவர் தோட்டத்துக்குள்ளும் திருடர்கள் அடிக்கடி வந்து போனார்கள். ஒரு நாள் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டார்.

மக்களின் அனுதாபம் இருந்த போதும், அவர் மீது கொலை வழக்கு பாய்ந்தது. குறைந்தளவாயினும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். ஒன்று கை மோச கொலை. இரண்டாவது திட்டமிட்ட கொலை.

அதுவே சட்டத்தின் பார்வை. இன்றும் கூட, வீட்டினுள் வந்து விட்ட திருடனை கொல்ல சட்ட அனுமதி இல்லை. காரணம் ஒருவரை பிடிக்காவிடில், தனது வீட்டுக்கு, கடத்தி வந்தோ, வரவழைத்தோ கொலை செய்து விட்டு, வீட்டினுள் என்னை தாக்க வந்தார், கொன்றேன் என்று சொல்லி தப்பலாம் என்பதாலே.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய வாள் இல்லை குசினியில் பாவிக்கும் கத்தி என்றுதானே செய்தியில் சொன்னது!

கிழவன் வாளைச் சுழட்டவில்லை. தன்னைப் பாதுகாக்க முன்னுக்கு நீட்டிப் பிடித்தார். ஸ்க்ரூ ட்றைவருடன் அவரைக் கொல்ல  வந்த திருடன் நீட்டிக்கொண்டு நின்ற கத்தியில் செருகுப்பட்டதால் இறந்தான் என்றுதான் கிழவனின் வாக்குமூலம் உள்ளது. அதனால்தான் இது சட்டபூர்வமான கொலையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் வரும் கள்ளனைத் தீர்த்துக்கட்டலாம் என்று யாராவது வெளிக்கிட்டால் உள்ளே போவது நிச்சயம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசயத்தினை மொழி பெயர்க்கும் போது, வாசிப்பவர்களுக்கு சட்ட நுணுக்க வியாக்கியானம் தேவையில்லை என்பதே என் கருத்து. அவர்களுக்கு புரியும் இலகுவான தமிழ் தான் முக்கியமானது என்பதே எனது நோக்கம். வாள் இலங்கை, இந்தியாவில் வாசிக்கும் மக்களுக்கு புரியும். மிக நீளமான கத்தி என்று சொல்வதிலும் பார்க்க வாள் என்பது புரியக் கூடியது. இதன் காரணமாகவே அவர்களது பெயரைக் கூட சொல்லாமல், தாத்தா, திருடன் என்றேன்.

தின்னையில் கோசனும் கதைவை திறந்து விட்டு வார்னிங் கொடுத்ததாக சொல்கிறார். அப்படி தெரியவில்லையே.  

அடுத்ததாக, நான் வாளை சுழட்டினார் என்று சொன்னேன். கிருபன், நீங்கள், கையில் வைத்திருந்த கத்தியில் வந்து தானே வந்து சொருகிக் கொண்டு இறந்தான் என்கிறீர்கள். இது தான் சட்ட நுணுக்க வியாக்கியானம். 

பொது அறிவுள்ள எவனும், துப்பாக்கியில் இருந்து வந்த குண்டின் வழியில் நின்றதால் அவர் இறந்து போனார் என்று சொல்வார்களா?

இந்த கிழவருக்கு இருந்த பெரும் அனுதாபத்தினாலும், ஆதரவினால், இந்த சட்ட நுணுக்க வியாக்கியானதுடன் வழக்கு முடித்து வைக்கப் பட்டுள்ளது.

(ஐயோ.... தாங்களும் தின்ன மாட்டினம், பந்தில இருந்தும் எழும்ப மாட்டினம் கோஸ்டிகளால பெரிய அக்கப்போராக கிடக்குது.... இதோட விடுங்கப்பா.... திருப்பி வந்து.... நியாயம் பிளவாம 😀 
- சும்மா பகிடிக்கு... கோவியாதைங்கோ-)

Osborn-Brooks had warned Vincent that his knife was “bigger than yours and if you don’t leave my house you will be sorry”, the hearing was told.

“I was just showing him that the knife I had was actually bigger than the screwdriver. So if he was to lunge at me he would hit my knife rather than hit me first.

“I thought he would look at my knife and see it is bigger than his implement and he would take the opportunity to run out the front door, which was open. My intention was to get him out of the house and away from my wife.

https://www.theguardian.com/uk-news/2019/may/02/hither-green-stabbing-of-burglar-was-lawful-killing-coroner-rules

4 hours ago, கிருபன் said:

பெரிய வாள் இல்லை குசினியில் பாவிக்கும் கத்தி என்றுதானே செய்தியில் சொன்னது!

கிழவன் வாளைச் சுழட்டவில்லை. தன்னைப் பாதுகாக்க முன்னுக்கு நீட்டிப் பிடித்தார். ஸ்க்ரூ ட்றைவருடன் அவரைக் கொல்ல  வந்த திருடன் நீட்டிக்கொண்டு நின்ற கத்தியில் செருகுப்பட்டதால் இறந்தான் என்றுதான் கிழவனின் வாக்குமூலம் உள்ளது. அதனால்தான் இது சட்டபூர்வமான கொலையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் வரும் கள்ளனைத் தீர்த்துக்கட்டலாம் என்று யாராவது வெளிக்கிட்டால் உள்ளே போவது நிச்சயம்!

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அடுத்ததாக, நான் வாளை சுழட்டினார் என்று சொன்னேன். கிருபன், நீங்கள், கையில் வைத்திருந்த கத்தியில் வந்து தானே வந்து சொருகிக் கொண்டு இறந்தான் என்கிறீர்கள். இது தான் சட்ட நுணுக்க வியாக்கியானம். 

பொது அறிவுள்ள எவனும், துப்பாக்கியில் இருந்து வந்த குண்டின் வழியில் நின்றதால் அவர் இறந்து போனார் என்று சொல்வார்களா?

 வாளைச் சுழட்டினார் என்று சொன்னதை நம்பி நண்டனும் பெருமாளும் கள்ளன் வீட்டுக்குள் வந்தால்  கிடைக்கிற வாளை எடுத்து ரசனி ஸ்ரைலில் சுழட்டி கள்ளனின் தலையைச் சீவினால் அதுக்கு நீங்கள்தான் பொறுப்பு நிக்கவேண்டும் நாதம்ஸ்!😂

கிழவன் கத்தியாலை கொல்லவேண்டுமென்று நினைத்துத்தான் சொருகி இருப்பார். ஆனால் சாட்சி இல்லாததால் கத்தியைப் பிடிச்சுக்கொண்டு நின்றேன். வந்து தானாகச் சொருகிக்கொண்டான் என்று சொல்லித் தப்பிக்கொண்டார். வந்த ஜிப்ஸியும் தூளடித்துவிட்டு வேறு வந்திருக்கான்..

ஆகவே மக்காள், வீட்டுக்குள் வரும் கள்ளனைக் கொல்லும் உரிமை இந்த வழக்கு மூலம் கொடுக்கப்படவில்லை🙃

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.... நல்ல சுவராசியாமான கதை. :)
நேற்று, இந்தக் கதையை... வாசித்து, விட்டு... இன்று  இதனை... 
வேலை இடத்தில், மற்ற ஆட்களுடன் கதைக்காலம் என்ற ஆர்வத்துடன் போய் ....
இந்த  விடயத்தை....  ( "ரொப்பிக்கை") எப்படி அங்கு நுழைப்பது, என்று....
சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதனைவிட.... பெரிய,  "ஆர்கியூமென்ட்"  எல்லாம் நடந்து கொண்டிருந்ததால்,  
இந்தக் கதையை... வாற  திங்கள் கிழமை,எப்படியும்.... சொல்லியே... தீருவேன். 

 "இல்லாவிடில், என் மண்டை வெடித்துவிடும்."  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

இதனைவிட.... பெரிய,  "ஆர்கியூமென்ட்"  எல்லாம் நடந்து கொண்டிருந்ததால்,  
இந்தக் கதையை... வாற  திங்கள் கிழமை,எப்படியும்.... சொல்லியே... தீருவேன். 

 "இல்லாவிடில், என் மண்டை வெடித்துவிடும்."  :grin:

அதென்ன எல்லாத்தையும் விட பெரிய "ஆர்க்கியூமென்ட்" ???? அதை என்னெண்டு இஞ்சை சொல்லாட்டில் என்ரை மண்டை வெடிக்கும் 😃

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அதென்ன எல்லாத்தையும் விட பெரிய "ஆர்க்கியூமென்ட்" ???? அதை என்னெண்டு இஞ்சை சொல்லாட்டில் என்ரை மண்டை வெடிக்கும் 😃

குமாரசாமி அண்ணை, அது, பெரிய கதை... 

எங்களுடைய... வேலை இடம் மாறுகின்றோம். அதற்காக.... பல புதிய வேலை ஆட்கள் வந்துள்ளார்கள். அவர்களில்..  பல நாட்டுக்காரரும், பல பல பழக்க வளத்துடன்  இருப்பார்கள் தானே... 

அதில்.... ஒருத்தன், பன்றி கறி, உள்ள சாப்பாட்டை, "மிக்றோ..மெசினி´ல்" சூடாக்கி விட்டான்.
அதனை.... துருக்கி கண்டு, விட்டு... கிளம்பிய, பஞ்சாயத்தை,
மேலிடம்... போகாமல், தவிர்க்கிற வேலையில்...  ஈடுபட்டு விட்டேன்.

பஞ்சாயத்து தீர்ப்பு:  என்னவாக இருக்கும் என்று, நீங்கள் சொல்லுங்களேன்.:grin:      

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2019 at 1:22 AM, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை, அது, பெரிய கதை... 

எங்களுடைய... வேலை இடம் மாறுகின்றோம். அதற்காக.... பல புதிய வேலை ஆட்கள் வந்துள்ளார்கள். அவர்களில்..  பல நாட்டுக்காரரும், பல பல பழக்க வளத்துடன்  இருப்பார்கள் தானே... 

அதில்.... ஒருத்தன், பன்றி கறி, உள்ள சாப்பாட்டை, "மிக்றோ..மெசினி´ல்" சூடாக்கி விட்டான்.
அதனை.... துருக்கி கண்டு, விட்டு... கிளம்பிய, பஞ்சாயத்தை,
மேலிடம்... போகாமல், தவிர்க்கிற வேலையில்...  ஈடுபட்டு விட்டேன்.

பஞ்சாயத்து தீர்ப்பு:  என்னவாக இருக்கும் என்று, நீங்கள் சொல்லுங்களேன்.:grin:      

இரண்டு பேரையும் திரத்திப்பொட்டு, பன்றி சாப்பாட்டை நீஙகள் அடிச்சிருப்பியள்.

******

கம்பர் மகன் அம்பிகாபதியை, அரசர் தனது மகள் அமராவதியை சந்திக்க போனால் தலை சீவப்படும் என்று சொல்லி விட்டார்.

அம்பிகாபதி களவாக அரண்மனை நந்தவனம் சென்று காதல் புரிந்து திரும்பும் போது, நந்தவனத்தில் மட்டுமே காணப்படும் அரிய மலர் ஒன்றை கையில் வைத்து மணந்து கொண்டு வரும் போது காவலன் பிடித்துவிடுகிறான்.

அம்மலர் கையில் இருப்பதால், அமராவதியை சந்திக்க போயிருக்கிறாய், வா அரசரிடம் என்கிறான்.

அப்போது, அவ்வழியே வந்த கம்பர், கவிதையால் சிலேடை செய்ய, புரிந்து கையில் இருந்த பூவை, வாயில் போட்டு மென்று விழுங்க, ஆதாரம் இன்றி விளித்த காவலன், மேலிடத்துக்கு போக வழியின்றி, நகர்ந்து செல்கிறான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

புது மிக்ரோ மெஷின் வாங்கிக் கொடுத்திருப்பார் கொம்பனியிடம் சொல்லி......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

மிசினுக்குளே இறைச்சியை வைத்து சுத்துற தட்டை மாற்றிக் கொடுத்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கிக்காரனுக்கு பன்றி இறைச்சி சாப்பிட பழக்கி இருப்பீங்கள்😋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.