Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தமிழர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோவது உண்மைதான்’ - கெஜ்ரிவால் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘தமிழர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோவது உண்மைதான்’ - கெஜ்ரிவால் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு

 

‘தமிழர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோவது உண்மைதான்’ - கெஜ்ரிவால் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு
 
புதுடெல்லி, 

நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக ஆதரவு தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரகாஷ்ராஜ் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் அவர் ஒரு வாரம் பிரசாரம் செய்ய இருக்கிறார்.


இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரிவினையும், வெறுப்பு அரசியலும் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த வேளையில், நாட்டின் ஜனநாயகத்தை காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சுகாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்னை கவர்ந்து உள்ளன.

கடந்த 70 ஆண்டுகளில் பா.ஜனதாவும், காங்கிரசும் நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றன. ஆம் ஆத்மி போன்ற கட்சிகளால் மட்டுமே நாட்டை அதில் இருந்து மீட்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, “டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 500 தமிழக மாணவர்கள் சேர்வதால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறாரே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று தமிழக நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பிரகாஷ்ராஜ், “கெஜ்ரிவால் அப்படி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுவது உண்மைதான். டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்” என்று பதில் அளித்தார்.

உடனே, “தமிழ்ப்படங்களில் நடித்து பிரபலமான நீங்கள் இப்படி பேசுகிறீர்களே” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “நான் தமிழன் அல்ல. கன்னடத்துக்காரன்” என்று பிரகாஷ்ராஜ் பதில் கூறினார்.

பிரகாஷ்ராஜ் இப்படி கூறியதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், டெல்லி தமிழ் மாணவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் திலிப் பாண்டேவை ஆதரித்து பிரகாஷ் ராஜ் நேற்று மாலையில் பிரசாரம் மேற்கொண்டார். புதுடெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது பிரசாரம் நடக்கிறது.
https://www.dailythanthi.com/News/India/2019/05/05031714/It-is-true-that-Tamils-will-get-opportunity-for-Delhi.vpf
  • கருத்துக்கள உறவுகள்

பிழைப்பு தேடி வந்த கூட்டம் தொழிலை பார்க்காமல் அரசியலில் மூக்கை நுழைக்கும் அளவுக்கு தமிழ்நாடு செல்லாகாசு ஆகிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்

கன்னடர்கள்... தமிழ்நாட்டில் நடிக்க வருவதால்....
தமிழர்களின் திரைப் பட வாய்ப்பு பறி போகின்றது என்று சொன்னால்,
அதற்கு,  வக்காலத்து வாங்க, தமிழர்களே... வருவார்கள்.
இதுதான்.... தமிழர்களின் நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்

4dkw6907.jpg

கால்ஷீட் பிரச்னை இல்லை, ரெக், ரீ ரெக் இல்லை.. ரப்பிங் ஆர்ட்ஸ்ட் இல்லை, பின்னணி பாடுவோர் இல்லை, ரூப் இல்லை , வெளிநாடுகளுக்கு சூட்டிங் எண்ட பெயரில் குடித்துவிட்டு கூத்தடிப்பது இல்லை ..தானே மனனம் செய்து, குழுவாக ஓத்ரிகை செய்து .. தாங்களே பாட்டுப்பாடி.. இசை அமைத்து .. இன்னும் பல.. செய்து ஊர் நலனுக்கு கூத்து கட்டும் நாட்டுப்புற கலைஞர்கள் எவ்வளவோ மேல்.. ஆதரிப்பீர்..🤔

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப்பிறகும் பிரகாஷ்ராஜை தமிழ்ப்பட இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தமது படம்க்களில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார்களானால், ஒன்றில் அவர் சொல்வது உண்மை அல்லது தமிழர்கள் வெட்கம் கெட்டவர்கள் என்பது உறுதியாகிவிடும்.

தமிழாவது மண்ணாவது, முதலில் எனக்குப் பிடித்த ஹீரோ படம், அதற்குள் பிரகாஷ் ராஜ் இருந்தாலென்ன, வேறெந்த ராஜ் இருந்தாலென்ன??

தமிழன்டா!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனே தமிழனை ஆள விடமாட்டான்... வாக்கும் போடமாட்டான்.. தமிழன் ஆள. சினிமா மோகம் பிடிச்சு.. இப்படி மாற்றான் பின்னாடி அலைந்தால்.. இது தான் கதி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதனைத் தொடர்ந்து, “டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 500 தமிழக மாணவர்கள் சேர்வதால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறாரே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று தமிழக நிருபர்கள் கேட்டனர்.

 

ஒரு வருடத்துக்கு ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 500 பேர்கள் சென்றால் 
அது அங்கு இருக்கும் மாணவர்களின் வாய்ப்பை தட்டி பறிக்கும்தானே?
எனக்கு என்னமோ அவர்கள் சொல்வது நிஜாஜமாக தெரிகிறது 

 

Admissions under first cut-off list

Over 11,000 students took admission to various colleges of the Delhi University after the first cut-off list -- almost six times the number last year, an official said.

The last day of the admission process for the first-cut-offs finished on Thursday.

According to a university official, out of over 56,000 seats, over 11,000 were filled which was a record-breaking number. In 2017, around 2,000 seats were filled.

 

Top colleges where students took admission:

Hindu College: 785 seats

  • Gargi College: 674 seats
  • Miranda House: 628 seats
  • Lady Shri Ram College: 579 seats
  • Shaheed Bhagat Singh College: 575 seats

 

Top DU courses:

 

  • BCom (Hons): 1,401 seats
  • BA (Programme): 1,371 seats
  • BA (Hons) Political Science: 1,004 seats
  • BA (Hons) History: 819 seats
  • BCom: 807 seats

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.