Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது: தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கடும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது: தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கடும் எதிர்ப்பு [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:55 ஈழம்] [ந.ரகுராம்]

தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி உதவிடக்கூடாது, தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்ற உரிமை எமக்கு இருக்கின்றது, பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இது தொடர்பாக நடந்த விவாதம்:

பாட்டாளி மக்கள் கட்சியின் கோ.க. மணி:

இராணுவத் தளபாடங்களை சிறிலங்காவுக்கு மத்திய அரசு கொடுப்பதாக வந்துள்ள செய்தி நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

அங்கு முப்படை தாக்குதல் நடக்கின்றது. தமிழர் வீடுகளுக்கு சென்று கணவன் கண்முன்பு மனைவியை சிறிலங்கா இராணுவத்தினர் கற்பழிக்கின்றார்கள். அங்கே சோகமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.

அங்குள்ள தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் சமரச தீர்வு வரவேண்டும் என்று போப் ஆண்டவர் உட்பட பலர் சொல்கின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் சிறிலங்காவுக்கு இராணுவ உதவியை மத்திய அரசு வழங்காமல் இருக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

இதற்காக இங்கு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அனுப்ப வேண்டும்.

(கோ.க. மணி பேசியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். பதிலுக்கு பா.ம.க.வினரும் எழுந்து நின்று தாங்கள் பேசுவது சரிதான் என்று குரல் கொடுத்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சபாநாயகர் அமைதிப்படுத்தினார்.)

சுதர்சனம் (காங்கிரஸ்):

பா.ம.க. தலைவர் இங்கு ஒரு விளக்கத்தைச் சொல்லி இருக்கின்றார். மத்திய அமைச்சரவையில் பா.ம.க.வும் பங்கு வகிக்கின்றது. அங்கே அவர்களுக்கு சொல்ல வாய்ப்பு இருக்கின்றது. அதனை விட்டு விட்டு இங்கே தீர்மானம் கொண்டு வர சொல்கின்றார். இதனை விவாதிக்கும் இடம் மத்திய அரசு தான்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு):- இதில் மத்திய அரசு நிலைப்பாடு சரியில்லை.

முதலமைச்சர் கருணாநிதி:

நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்கள் இந்த அவையில் பதிவாகியிருக்கின்றன.

அதே நேரத்தில் இந்தப் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் பத்திரிகைகளிலே வந்த கருத்துக்கள் அந்த கருத்துக்களின் அடிப்படையிலே தான் இங்கே நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவரும் இங்கே உரையாற்றிருக்கின்றார்கள்.

பத்திரிகையிலே வந்த இந்த கருத்துக்கள், செய்திகள் உண்மையானவைதானா என்பதனை அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். என்ன செய்தி வந்திருக்கின்றதென்றால் இலங்கைக்கு போர்க் கருவிகளை வழங்குவதில்லை என்ற முடிவுக்கு மாறாக இந்திய அரசு தற்போது ஆயுதங்களை வழங்கியுள்ளது என்று செய்தி வந்திருக்கின்றது.

இதனை படிக்கின்ற யாரும் நம்முடைய மணி

துடித்தது போல,

பதைத்தது போல

பதறியதிலே எந்தவிதமான தவறும் இல்லை.

ஆனால் இது உண்மைதானா என்பதனை அறிந்து கொள்ள வேண்டிய அந்த வாய்ப்பை நாம் உருவாக்கிகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்தது உண்மைதான் என்றால் நாம் மத்திய அரசுக்கு, இதிலே இன்னும் ஒற்றுமையோடு இருந்து நம்முடைய அழுத்தமான வேண்டுகோளை விடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.

- நீங்கள் தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு ஆயுதம் உதவிடக்கூடாது,

- தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள்

என்று கேட்டுக் கொள்கின்ற உரிமை நமக்கு இருக்கின்றது,

பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்று மாத்திரம் சொல்லி இந்த அவையில் அமைகிறேன் என்றார் முதலமைச்சர் கருணாநிதி.

puthinam

வெளிப்படைக்கு உதிர்க்கப்படும் வார்த்தைகளால் பிரஜோனமில்லை..

செயலில் காட்டவேண்டும்..

இவர்கள் அழுத்தம் போதாமையாலேயே மத்தியஅரசு தமிழக அரசினை அசண்டை செய்வது போல நடக்கிறது..

முதல்வர் கருணாநிதி அவர்கள் கருணை எம்மக்களை காக்கவேண்டும்..

என்னதான் ராமதாஸ் ஜயா போராடினாலும் காங்கிரஸ் காரர் அதுக்கு எதிர்பைதான் தெருவிக்கீனம் எப்போதேலாம் ராமதாஸ் அவர்கள் குரல் கொடுக்கும் போது கலைஞர் அதனை மழுப்பும் விதமாக கருத்துகூறி தன்னையும் ராமதாஸ் அவர்களையும் தமிழக மக்களையும் ஏமாற்றுகிறாரா அல்லது எதையோ மறைக்க பாடுபடுகின்றாரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

enna karunai ellam appadi sollakudathu naalaiku engalaku ethavathu aachuendral prabhakaran

engalukaka varamattara --ithu avarudai kadamai

உண்மையச்சொல்லப் போனால்,, தமிழ்நாட்டிலும் சரி,இந்தியாவிலும் சரி எங்களுடைய ஈழத்தமிழர் பிரச்சனை என்பது பெரும்பாலும் அவ்வப்போது அவர்களினுடைய அரசியல் நலனுக்காக தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் மாதிரி இருக்குதொழிய ,மற்றபடி ஒன்றும் இல்லை

நாங்கதான் சும்மா அலட்டிக்கோண்டு இருக்கிறோம்..

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படைக்கு உதிர்க்கப்படும் வார்த்தைகளால் பிரஜோனமில்லை..

செயலில் காட்டவேண்டும்..

இவர்கள் அழுத்தம் போதாமையாலேயே மத்தியஅரசு தமிழக அரசினை அசண்டை செய்வது போல நடக்கிறது..

முதல்வர் கருணாநிதி அவர்கள் கருணை எம்மக்களை காக்கவேண்டும்

கருணாநிதியிடம் கருணையை எதிர்பார்க்கின்றார்

என்றோ ஒருநாள் எம்.ஐP.ஆர். என்ற நல்ல இதயம் கொடுத்த காசை தலைவர் அவர்கள் வாங்கியதையே இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் மொத்தத்தமிழரையுமே பழிவாங்கும் புறக்கணிக்கும் ஒரு அரசியல்வாதி அவர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களாகப் பார்த்து திருந்தாவிட்டால் ஈழத்தின் இன அழிப்பை ஒழிக்க முடியாது. மருத்துவர் இராமதாஸ் போன்ற ஒருசிலர் நிலைமையை உணர்ந்து இதயசுத்தியுடன் போராடுகின்றனர். கலைஞர் அவர்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்கிற நிலை. இவையெல்லாம் போதாது. தமிழக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.

நான் இந்த வருடம் கூட தமிழகம் சென்றிருந்தேன். பலருக்கும் ஈழத்தமிழனின் இன்றைய நிலை குறித்து வருத்தம். ஆனால் அவர்களுக்குத் திரு ராஜீவ் அவர்களின் கொலைக்கு முன் தமிழனின் ஒட்டுமொத்த அழிவு ஒரு சிறு விடயம். ராஜீவ் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஆகப்போகின்றது. இன்னும் அதை வைத்து தமிழகம் உணர்வுச்சிறையில் அடைபட்டுள்ளது. கன்ணுக்கெட்டிய தூரத்தில் விடுதலை தென்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சொன்ன கருத்தில் சில விடயங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கன. (அவருடைய நோக்கம் வேறாக இருந்தாலும்)

பாமக, திமுக போன்றன பாராளுமன்றத்திலும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சொன்ன கருத்தில் சில விடயங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கன. (அவருடைய நோக்கம் வேறாக இருந்தாலும்)

பாமக, திமுக போன்றன பாராளுமன்றத்திலும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்

சபேசன், ஏற்கனவே வைகோ கொடுக்காத குரலா, பாராளுமன்றத்தில்? எல்லாவற்றுக்கும் மத்திய அரசாங்கத்திடம் ஒரு பதில் இருக்கும். பிரதமர் விசாரிக்கிறேன் என்பார். பாதுகாப்பு அமைச்சர் மறுப்பார். முடியாவிட்டால் ஏதாவது விசாரணைக் கமிசன் வைப்பார்கள்.

இதற்கெல்லாம் தீர்வு தமிழக மக்கள் கையில் உள்ளது. அவர்கள் விழிக்கும் வரை இந்த அரசியல் கட்சிகள் சடுகுடு ஆடியவண்ணமே இருப்பர்.

இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்ததை வைத்து தமிழக மக்கள் தமிழகத்தை

ஸ்தம்பிக்க வைக்கிறமாதிரி ஒரு நாள் பந்து போரட்டம் நடத்தினால் ஒரு வேளை மத்திய

அரசு எதிர்காலத்தில் இப்படியான பிழைகள் விடாது.....

தமிழக மக்கள் செய்வார்களா? தமிழகம் பொங்கி எழவேண்டும்.... நம்பிக்கை வைப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இந்தியா ஆயுதம்: பாமக-காங் கடும் மோதல்: தடுக்க நடவடிக்கை கருணாநிதி

சென்னை,ஏப்ரல் 23, 2007: இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவது குறித்த செய்திகள் உண்மையாக இருந்தால் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார்.

இது தொடர்பாக சட்டசபையில் பாமக பிரச்சனை கிளப்பியது. அக் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி பேசுகையில்,

இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவதாக செய்திகள் வருகின்றன. இதன் மூலம் இலங்கைக்கு ஆயுதம் தர மாட்டோம் என்ற உறுதிமொழியை மத்திய அரசு மீறிவிட்டது.

ஏற்கனவே இலங்கைக்கு பாகிஸ்தானும் சீனாவும் ஆயுதங்கள் தந்து வருகின்றன. ஆனால், அங்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வரும் தமிழர்களை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரும் போப்பாண்டருமே கூட கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார் மணி.

இதையடுத்து மணிக்கு பதிலளிக்க காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் முயன்றார். இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பதிலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் குரல் தந்தனர். இதனால் அவையில் கூச்சல்குழப்பம் நிலவியது.

பின்னர் பேசிய சுதர்சனம், மத்திய அரசில் பங்கேற்றுள்ள பாமக இந்த பிரச்சனையை அங்கேய கிளப்பலாம். மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் பாமகவைச் சேர்ந்த மந்திரிகள் இந்த விவகாரத்தை கிளப்பலாம்.

மேலும் பிரதமரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் பாமக தலைவர்களுக்கு உள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக கோருவது நகைப்பாக உள்ளது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அதே நேரத்தில் தீவிரவாத அமைப்பான எல்டிடிஈயையும் காங்கிரஸ் ஆதரிக்காது என்றார்.

இதையடுத்துப் பேசிய பாமக எம்எல்ஏ மணி, இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் ஏற்கனவே எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சோனியா காந்திக்கும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ராஜிவ் காந்தியின் கொலையை பாமக மிகக் கடுமையாக கண்டிக்கிறது.

இலங்கையில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களை காக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்றார்.

அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், இலங்கை விவகாரம் என்பது வெளிநாட்டு பிரச்சனை அல்ல. அது தமிழர்கள் பிரச்சனை. இதனால் இதில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் இப்போதைய நிலை சரியல்ல என்றார்.

இந்த விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, இலங்கைக்கு ஆயுதம் தர மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் வேறு விதமாக உள்ளன. இந்த செய்திகளின் உண்மை நிலையை அறிந்த பின்னர், இந்த விஷயத்தில் நாம் ஒற்றுமையாக நமது கருத்தை மத்திய அரசிடம் திட்டவட்டமாக எடுத்துச் சொல்வோம்.

இலங்கை ராணுவத்துக்குத் தரப்படும் ஆயுதங்கள் தமிழர்களை கொடுமப்படுத்தவே உதவும் என்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய உரிமை நமக்கு உண்டு என்றார்.

மத்திய அரசுக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவும் காங்கிரசும் சட்டசபையில் மோதிக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.

- தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதம் தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

சிங்கள அரசுக்கு இந்திய அரசு பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியிருக்கிறது என்ற செய்தி, தமிழ் மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது. பல நூறுகோடி ரூபாய் பெறுமான கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள், கரையோர ரோந்துக் கப்பல், எறிகணைகள், உயர்ரக வெடி பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன என்ற செய்தி ஏப்ரல் 20 ஆம் தேதியன்றே வெளிவந்துவிட்டது. உடனடியாக மருத்துவர் இராமதாஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இன்று அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி இப்பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிவ. புண்ணியம் அவர்களும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் முதலமைச்சர் "இச்செய்தி உண்மைதானா என்று அறிந்து கொண்டு பிறகு கண்டனம் தெரிவிக்கலாம் என்று தமிழர்களின் கொதிப்புணர்வை அடக்குவதற்கு தண்ணீர்த் தெளித்திருக்கிறார்.

செய்தி வந்து 3 நாட்கள் ஆகியும் இச்செய்தியில் உள்ள உண்மையை மத்திய அரசிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள முதலமைச்சர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்பது வருந்தத்தக்கது.

சிங்கள அரசுக்குப் போர்க்கருவிகளை வழங்குவதில்லை என பிரதமர் மன்மோகன்சிங் உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும் அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறும் வகையில் நடைபெற்றுள்ள இச்செயலுக்கு தமிழகம் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய வேளையில் பிரச்சினையை ஆறப்போடுவது ஈழத்தமிழர்களின் அழிவுக்கு வழிவகுக்கும். உடனடியாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் மூலம் நமது கடும் கண்டனத்தை பிரதமருக்குத் தெரிவிக்க முதலமைச்சர் மு.கருணாநிதி முன்வரவேண்டுமென வற்புறுத்துகிறேன் என்றார் நெடுமாறன்.

http://www.eelampage.com/?cn=31520

Edited by கந்தப்பு

இலங்கைக்கு இந்திய ஆயுத உதவி

தமிழக சட்டசபையில் நேற்று

கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை, ஏப். 24

இலங்கைக்கு போராயுதங்களை இந்திய மத்திய அரசு வழங்கியதாக வெளிவந்துள்ள தகவல் குறித்து தமிழக சட்டமன்றத்தில் நேற்று விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட சகல கட்சிகளின் தலைவர்களும் மத்திய அரசின் செயலுக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய தமி ழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி கூறியதாவது:

தமிழர்களை வதைக்க, இலங்கையில் உள்ள படையினருக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி உதவிடக் கூடாது. அங்கு அனுப் பப்படும் ஆயுதங்கள் நிச்சயமாக தமிழர் களை வதைப்பதற்காகவே பயன்படும்.

ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொள் கின்ற உரிமை எமக்கு இருக்கின்றது. பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என்றார் அவர்.

பாட்டாளி மக்கள் கட்சி கோ.க.மணி, காங்கிரஸ் கட்சி யின் சுதர்சனம் ஆகியோர் உட்பட பலர் மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதனை நிறுத்தக் கோரியும் உரைகளை ஆற்றினர்

உதயன்

சிலரின் மலுப்பல் பேச்சுக்கள் பிரச்சனையின் தீவிரத்தை குலைத்து விடுகின்றன அனைத்தும் தமிழர்களின் சாபக்கேடு

rpq;fs ,uhZtj;Jf;F MAj cjtp: nrd;idapy; neLkhwd;> ,uhkjh]; fz;ld Mu;g;ghl;lk;.

[ nrt;tha;fpoik, 24 Vg;gpuy; 2007 ] [ n[auhrh ]

rpwpyq;fh ,uhZtj;Jf;F ,e;jpah MAj cjtp nra;tjidf; fz;bj;J ghl;lhsp kf;fs; rhu;gpy; nrd;id Nrg;ghf;fj;jpy; ,d;W nrt;tha;f;fpoik fz;ld Mu;g;ghl;lk; elj;jg;gl;lJ.ghl;lhsp kf;fs; fl;rpapd; epWtdu; kUj;Jtu; ,uhkjh]; jiyikapy; eilngw;w ,e;j Mu;g;ghl;lj;jpy; jkpou; Njrpa ,af;fj; jiytu; go. neLkhwd;> tpLjiyr; rpWj;ijfs; mikg;gpd; jkpo;ehL rl;lg;Nguit cWg;gpdu; nry;tg;ngUe;jif> ghl;lhsp kf;fs; fl;rpj; jiytu; Nfh.f.kzp cs;spl;Nlhu; gq;Nfw;wdu;.Mu;g;ghl;lj;Jf;F jiyik tfpj;J gh.k.f. epWtdu; kUj;Jtu; ,uhkjh]; NgrpajhtJ:rpq;fs ,uhZtj;Jf;F ,e;jpa muR MAjk; toq;Ftjhf nra;jp tUk; Nghnjy;yhk; mt;thW toq;fg;gltpy;iy vd;w kWg;Gk; tUfpwJ. Mdhy; MAjk; nfhLf;fg;gl;L tUfpwJ vd;gJ jhd; cz;ik.Nghg; Mz;ltu; cs;gl kdpj Neaj;ij tpUk;Gk; cyfj; jiytu;fs; vy;yhk; mikjpahd Kiwapy; <oj; jkpou; gpur;rpidf;F jPu;T fhz Ntz;Lk;. mjw;F rpwpyq;fh muR clNd Nghiu epWj;j Ntz;Lk; vd;W Nfhupf;if tpLj;Js;sdu;. Mdhy; njhg;Gs; nfhb cwthd jkpou;fs; thOk; ,e;jpah kl;Lk; nksdk; rhjpg;gJ Vd; vd;W njupatpy;iy. ,e;jpuh fhe;jp fhyj;jpy; vLf;fg;gl;l epiyg;ghl;il ,e;jpah kPz;Lk; filg;gpbf;f Ntz;Lk;.tq;fhsNjr kf;fs; tpUk;gpajw;F Vw;g ehl;bd; gpuptpidf;F ,e;jpah cjtp nra;jjhf Nrhdpah Fwpg;gpl;Ls;shu;. mNj Nghy ,yq;ifg; gpur;rpidf;Fk; xU ey;y Kbit vLf;f Ntz;Lk;. cldbahf ,e;jpah ,e;j gpur;rpidapy; jiyapl Ntz;Lk;.rhjp> kjk;> murpaYf;F mg;ghw;gl;L xl;Lnkhj;j jkpou;fSk; xd;W jpus Ntz;Lk;. <oj; jkpou;fs; rhfbf;fg;gLtij ghu;j;Jf; nfhz;bUf;f KbahJ. xU jkpoidAk; rhftpl khl;Nlhk; vd;w Kjy; Fuy; Kjy;ikr;ru; fUzhepjpaplk; ,Ue;J tuNtz;Lk;.

rpwpyq;fh MAjk; toq;fkhl;Nlhk; vd;w cj;juthjj;ij kj;jpa murplk; ,Ue;J mtu; ngw;Wj; ju Ntz;Lk;. ,e;jpa muR jiyaplhky; ,yq;if gpur;rpidf;F jPu;T tuhJ vd;whu; mtu;.Mu;g;ghl;lj;jpy; gq;Nfw;Nwhu;><oj;jkpod; vq;fs; cld;gpwg;GmtDf;F cjTtJ jkpou;fspd; nghWg;Gjkpou;fis nfhd;W Ftpf;f ,e;jpa muNr cjthNj!jkpou;fis fhf;f clNd eltbf;if vL!J}juf cwit clNd Jz;bj;J tpL vd;gJ cs;spl;l Kof;fq;fs; vOg;ggl;ld.

Please read

the important

information

Rdhkp gpd;duhd

Kfhikj;Jt fl;likg;ig

jhgpj;J 670 ehl;fs; Mfpd;wd.

Mopg; Nguiy

,lk;ngw;W ,d;Wld;

850

ehl;fs; Mfpd;wd.

rhkhjhd xg;ge;jk;

nra;ag;gl;L

,d;Wld; 1888

ehl;fs; Mfpd;wd.

Njrpaj; jiytH

Nt. gpughfud; mtHfspd;

khtPuH ehs; ciu

2006

vOj;J tbtk;

jkpo;

Mq;fpyk;

2005

vOj;J tbtk; 2004

vOj;J tbtk;

jkpo; kf;fspd;

RaepHza

cupikf;fhd

,ilf;fhy

tiuG

<<< cs;Ns >>>

jkpo;j; Njrpaf; $l;likg;gpd; NjHjy; tpQ;Qhgdk; 2004

<<< cs;Ns >>>

milahs ml;il

--------------------------------------------------------------------------------

JapYkpy;yk;.

--------------------------------------------------------------------------------

Njrpaf; nfhb.

--------------------------------------------------------------------------------

Ngr;Rf;fs;.

--------------------------------------------------------------------------------

re;jpupf;fhtpd; rhjid.

--------------------------------------------------------------------------------

1995d; xg;ge;jk;.

--------------------------------------------------------------------------------

td;dp epyk; tuNtw;fpwJ

--------------------------------------------------------------------------------

Nlhf;fpNahg; gpufldk;.

--------------------------------------------------------------------------------

Nghh; ,ilepWj;j xg;ge;jk;.

--------------------------------------------------------------------------------

x];Nyh gpufldk;.

--------------------------------------------------------------------------------

Rdhkp xg;ge;jk;.

--------------------------------------------------------------------------------

< NkYk; >

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் ஒரே இரத்த உறவுகள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்திய தேசியம் இந்த உறவைப்பிரிக்கமுடியாது. அது பகற்கனவாகவே முடியும். தமிழரின் இன அடையாளங்கள் இந்தியாவில் முற்றாக அழிக்கப்படுமாயின் மட்டுமே ஈழத்தமிழருடனான அவர்களின் உறவும் அழியும். இந்தியப் புலனாய்வு இந்த விடயத்தில் தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுகின்றது. சிறுபான்மையினரான ஏனைய சில இனங்களின் ஆதரவைப் பெற்றுத் தமிழரின் தனித்துவ அடையாளங்களை இல்லாதொழித்துவிடலாம் என்ற உள்நோக்கத்தோடுதான் சிறுபான்மை இனங்களிலிருந்து அரசியல் ஆலோசகர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள். அவர்கள் தமிழரின்மீத கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் தமிழீழப் போரட்டத்துக்கெதிராக சகலவழிகளிலும் செயல்படுகிறார்கள். சதிவேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். இதனைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நன்க புரிந்து கொண்டு இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து புலனாய்வுத்துறையினரின் அடாவடித்தனங்களை இரும்புக்கரங்கொண்டு அடக்குதல்வேண்டும். மத்திய அரசென்பது விருப்பு வெறுப்பற்ற வெறும் நிர்வாகத்துக்கான அரசென்பதைத்தவிர வேறு எந்தவித உள்றோக்கங்களுமில்லாத அரசாக மாற்றப்படவேண்டும். இனங்களின் தனித்தன்மைக்கெதிராக கொள்கைவகுக்கும் எந்த நயவஞ்சகர்களையும் மானில மக்கள் அடக்கி ஒடுக்கவேண்டும். அது நடைபெறப்போகும் காலம் வெகுதூரத்திலில்லை.

சென்னை: இலங்கைக்கு ஆயுதங்கள் வழக்கக் கூடாது என்று வலியுறுத்தி சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், 1983ம் ஆண்டு இலங்கையில் இனப் பிரச்சினை வெடித்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எப்படி அதைக் கையாண்டாரோ அதே போல இப்போதும் மத்திய அரசு தமிழர் பிரச்சினையில் தலையிட்டு அமைதி ஏற்பட உதவ வேண்டும்.

இலங்கையில் நிலைமை மோசமாகி வருகிறது. அப்பாவித் தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டியது உடனடி அவசியம் ஆகும்.

இந்தியாவின் தலையீடு இல்லாமல் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இயலாத காரியம்.

பாதிக்கப்படுள்ள தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு விரும்பினாலும் கூட வெளியுறவுத்துறையில் உள்ள சில அதிகாரிகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர். இலங்கைக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்க வேண்டும் என அவர்கள் மத்திய அரசை தவறான பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மறைந்த இந்திரா காந்தி எடுத்திருந்த நிலையைப் போலவே இப்போதும் எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைக் கேட்டுக் கொள்கிேறன். மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் கருணாநிதியும் இலங்கைப் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துவதை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கையை அவர் மேற்கொள்ள ேவண்டும்.

மத்திய அரசைத் தொடர்பு கொண்டு இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.

உலக சமுதாயம் ஒன்று கூடி கேட்டுக் கொண்டும் கூட அப்பாவித் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை அதிபர் ராஜபக்ஷே நிறுத்திக் கொள்ளாதது கடும் கண்டனத்துக்குரியது என்றார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் பேசினர்.

சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதனைக் கண்டித்து பாட்டாளி மக்கள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பேசியதாவது:

சிங்கள இராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்குவதாக செய்தி வரும் போதெல்லாம் அவ்வாறு வழங்கப்படவில்லை என்ற மறுப்பும் வருகிறது. ஆனால் ஆயுதம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது தான் உண்மை.

போப் ஆண்டவர் உள்பட மனித நேயத்தை விரும்பும் உலகத் தலைவர்கள் எல்லாம் அமைதியான முறையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதற்கு சிறிலங்கா அரசு உடனே போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் தொப்புள் கொடி உறவான தமிழர்கள் வாழும் இந்தியா மட்டும் மெளனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்திரா காந்தி காலத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும்.

வங்காளதேச மக்கள் விரும்பியதற்கு ஏற்ப நாட்டின் பிரிவினைக்கு இந்தியா உதவி செய்ததாக சோனியா குறிப்பிட்டுள்ளார். அதே போல இலங்கைப் பிரச்சினைக்கும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். உடனடியாக இந்தியா இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்.

சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று திரள வேண்டும். ஈழத் தமிழர்கள் சாகடிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு தமிழனையும் சாகவிட மாட்டோம் என்ற முதல் குரல் முதல்மைச்சர் கருணாநிதியிடம் இருந்து வரவேண்டும்.

சிறிலங்கா ஆயுதம் வழங்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசிடம் இருந்து அவர் பெற்றுத் தர வேண்டும். இந்திய அரசு தலையிடாமல் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு வராது என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்,

ஈழத்தமிழன் எங்கள் உடன்பிறப்பு

அவனுக்கு உதவுவது தமிழர்களின் பொறுப்பு

தமிழர்களை கொன்று குவிக்க இந்திய அரசே உதவாதே!

தமிழர்களை காக்க உடனே நடவடிக்கை எடு!

தூதரக உறவை உடனே துண்டித்து விடு என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பபட்டன.

courtesy

puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் தனது ஆட்சியை எப்படி நீடிப்பது என்பதையே யோசிப்பார்

அவரிடம் நாம் எதையாவது எதிர்பார்த்தால்தான் நாம் ஏமாற்றபடுவோம்.

இந்திய அரசியலில் அதெல்லாம் சகஜமப்பா.

ஆயுதங்களை இந்தியா வழங்குகின்றதா?

மட்டக்களப்பு பகுதியில் நேரடி சண்டைக்கே ரெடிமாதிரித்தான் 'றோ' காரன் நிக்கிறான் இதெல்லாம் தமிழகத்திற்கு தெரியாதா? கருணா என்ற கற்பளிப்பு கும்பலின் முகாம்களை புலிகள் தாக்கியபோது அங்கே இருந்து இரண்டு இந்திய கடவுசீட்டுக்களiயும் புலிகள் கைப்பற்றியருந்தார்கள் அது யாருடையது?

இந்த றோ காரன்தான் காட்டுக்குள் வைத்து அவங்களுக்கு கற்பளிப்பு பயிற்சியே கோடுக்கிறான்.

இதெல்லாம் கருணாநிதிக்கும் மனதோடு வைத்திருக்கும்படி அவர்கள் சொல்லியிருப்பார்கள்

இந்த கிழடு சும்மா அறிக்கைவடறமாதிரி ஒரு நாடகம்...... காரணம் தமிழகத்தில் இது நன்றாக அரங்கேறும்! தமிழகத்தில் நல்ல பத்திரிகை துறையில்லாததன் விளைவே இது.

தி.மு.க நினைத்தால் ஆட்சியை கூட கவுட்கலாம் என்பதால் மத்திய அரசு எல்லா நரி வேலைகளையும் இவர்களுடன் கூடித்தான் செய்யும்.

அது சும்மா தமிழ் உணர்வால் திகழ்வது பொல் ஒரு பாத்திரம் அவ்வளவே.

நாம் அதை நினைத்து வருந்த வேண்டியதி;லலை காரணம் இந்தியா கொடுக்காவிட்டால் சிங்களவன் இன்னொருநாட்டில் அதை வாங்கத்தான் போகிறான் பாவம் இந்தியாவாவது எமது அழிவால் முன்னேறட்டும்.

ஓரே ஓரு நட்டம் அவற்றை புலிகள் கைப்பற்றும்போது அதில் ஏதாவது பிழையிருப்பின் அதற்கான உதிரிபாகங்களை இந்தியாவிடமிருந்து வாங்குவது கடினம் அல்லது ஊழலுக்கு அதிக பணத்தை விரயம் பண்ண நேரிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமரை வலியுறுத்தி தடுத்திட வேண்டும் - வீரமணி

ஈழத் தமிழர்களை அழிக்கும் சிங்கள அரசின் அடக்குமுறைகள், சித்ரவதைகள் தொடர்கின்றன!

இந்த நிலையில் வாக்குறுதிக்கு மாறாக, இந்திய அரசு இராணுவக் கருவிகளை, தளவாடங்களை வழங்குவதா?

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்தும், வாக்குறுதிகளுக்கு மாறாக சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளித்துவரும் இராணுவ உதவிகள் குறித்தும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கை இந்தியாவின் அண்டை நாடு மட்டுமல்ல; தமிழர்களின் தொப்புள்கொடி உறவுள்ள நாடு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் வசிக்கும் நாடாகும்!

சிங்கள அரசின் இரட்டை அணுகுமுறையில் மாற்றம் தேவை!

அது நாட்டின் எல்லையாலும், அரசியலாலும் வேறுபட்ட நாடானாலும், பண்பாட்டினைப் பொறுத்தவரை அங்குள்ள தமிழர்களுக்கும் தாயகம் தமிழ்நாடு என்பது எவரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.

அங்குள்ள தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக தாங் கொணாத துன்பங்களையும், துயரங்களையும், இழப்புகளையும், சோகங்களையும் வேறு வழியின்றித் தாங்கி போராடி வருகிறார்கள்!

அங்குள்ள தமிழர்களின் பிரச்சினை 25 ஆண்டுகளுக்குமேலாக தீராத பிரச்சினையாக உள்ளது. அதற்கு விடியல் ஏற்பட வேண்டுமானால், அரசியல் அணுகுமுறை - சிங்கள அரசின் இரட்டை வேட முறை மாறிடவேண்டும்.

தமிழ்நாடு அரசின் முயற்சிகள்

அதனை உரிமையுடன் நமது மத்திய அரசு சுட்டிக்காட்டி, இராணுவ நடவடிக்கைகளால் அந்த உணர்வுத் தீயை அணைக்க முடியாது; மேலும், தீ கொழுந்துவிட்டுத்தான் எரியுமே தவிர, முடிவாக மாறாக, அரசியல் நடவடிக்கைகளின்மூலம் அதற்குத் தீர்வு காண முடியும் என்று வற்புறுத்தி, இலங்கை அரசினை வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோணத்தில், தமிழ்நாட்டிலுள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்பட வற்புறுத்தின! சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கத் தவறவில்லை.

நம் மானமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் முன்பு டில்லிக்குச் சென்றபோது, பிரதமரையும், அய்க்கிய முற்போக்கு அணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் நேரில் சந்தித்து வற்புறுத்தி வந்துள்ளார்கள்! என்றாலும், சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் குண்டுமழை பொழிந்து, தமிழர்களை ஏதிலிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறச் செய்திருப்பதும், காடுகளிலும், வனாந்திரங் களிலும் விரட்டியும், சிங்கள இராணுவத்தின் அத்துமீறிய அடாவடித்தன அருவருக்கத்தக்க சித்ரவதைகள் செய்தும், அப்பாவித் தமிழர்களை இரத்தக் கண்ணீர் என்னும் கடலில் மிதக்கச் செய்யும் அவலம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது!

இந்தியாவின் இராணுவ உதவி கூடாது

இலங்கைக்கு இந்திய அரசு எவ்வித இராணுவ உதவியும் செய்யக் கூடாது; அப்படி மீறிச் செய்தால் அது தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு உடந்தையான செயலாகிவிடும் அபாயத் தில் தான் முடியும் என்று அனைத்துத் தமிழ்நாட்டு கட்சிகளும் கூறின.

இணைய தளத்தில் வெளிவந்துள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

ஆனால், ஓர் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல் களைக் கொண்டு நாம் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்!

``இலங்கைக்கு ஆபத்துகளற்றி தற்பாதுகாப்பு கருவிகளை வழங்குவது என்ற முடிவுக்கு மாறாக இந்திய அரசு தற்போது ஆயுதங்களை வழங்கியுள்ளது.

அந்த ஆயுதங்களின் விவரம்:

கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் 30.

கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் 30.

`வாரகா’ என்ற கரையோர ரோந்து கப்பல் 1.

40 மி.மீ., எறிகணை செலுத்திக்கா குண்டுகள்.

உயர் ரக வெடி பொருள்கள் 60.

பாதுகாப்பு உடைகள் 2,000.

குண்டு துளைக்காத உடற்கவசம் 4,500.

பிளாக் உடைகள் 2,800.

பாதுகாப்புத் தலைக்கவசங்கள் 3,245.

குண்டுப் பாதுகாப்பு வாகனங்கள் 10.

25 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான

உறைநிலைக் கொள்கலன்கள் சிறிய உளவு எந்திரங்கள்.

குண்டு துளைக்காத வாகனங்கள் 10.

இரவுப் பார்வைச் சாதனங்கள் 400.

கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள் 50.

மூன்று மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான

தொலைத்தொடர்புச் சாதனங்கள்.

உயர் அலைவரிசை கொண்டு தொடர்பு சாதனங்கள் 35.

மின் நிறுத்த பலகைகள் 25.

பாதுகாப்பான தளங்கள் 35.

யு.எச்.எஃப். கையடக்க சாதனங்கள் 350 என்பன இதில் அடங்கும்.

பொறியியல் சாதனங்களைக் கொண்ட 1.2 மில்லியன் டாலர் பொருள்களும், 4.4 மில்லியன் டாலர் பெறுமதியான உடைகள் என்பனவும் வழங்கப்பட்டன.

இந்தியாவும், பாகி°தானும் போட்டிக்கு நாசகார ஆயுதங்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கி வருவதால், அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கையினால் நடத்தப்பட்டு வரும் கொடூரமான போரை ஊக்குவிப்பது போல் இருப்பதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.’’

- இவ்வாறு அந்த இணைய தளத்தில் கூறப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மிக அவசரமான பல நியாயமான செயல்கள்மூலம் பரிகாரம் காண முன்வரவேண்டும்.

ஈழத்தமிழர்களின் கோரிக்கை!

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் முதல்வர் கலைஞர் அவர்களின் அக்கறையும், கவலையும் உலகத் தமிழர்கள் அறிந்த உண்மை. அவர்களுக்குள்ள ஆட்சிப் பொறுப்பும், கடமையும் என்ன என்பதையும் உலகத் தமிழர்கள் - குறிப்பாக ஈழத் தமிழர்கள் நன்கு அறிந்தவர்கள்.

அவர்கள் உரிமையுடன் ``உதவிடுங்கள், இன அழிவிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’’ என்று தமிழ்நாட்டை நோக்கி, குறிப் பாக தமிழ்நாடு அரசினையும், முதல்வர் கலைஞரையும், அவரது சீரிய இராஜ தந்திர வியூகத்தால் உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக மத்தியில் நடைபோடும் அய்க்கிய ஜனநாயக முன்னணி ((U.P.A.) ஆட்சியையும், அதன் தலைமையையும் நோக்கித்தான் (S.O.S.) கோரிக்கை வைக்கின்றனர்!

மத்திய அரசை வலியறுத்தவேண்டும்

எனவே, மனிதநேயத்துடனும், தமிழ் இன உணர்வுடனும் உடனடியாக இலங்கை அரசின் அதீத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு முன்வரவேண்டும் என்பதை, முதல்வர் கலைஞர் அவர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வற்புறுத்தவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

விடுதலை - ஏப்ரல் 23, 2007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.