Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெகிழி [பிளாஸ்டிக்]

Featured Replies

நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது.

மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்: ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக்கின் தீமைகள்

  1. பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.
  2. வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.
  3. நெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.
  4. நெகிழி பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.
  5. பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.

 

பிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்

  • பிளாஸ்டிக் பைகள்        (100-1000 ஆண்டுகள்)
  • பஞ்சுக் கழிவுகள்          (1-5 மாதங்கள்)
  • காகிதம்                  (2-5 மாதங்கள்)
  • உல்லன் சாக்ஸ்          (1-5ஆண்டுகள்)
  • டெட்ரா பேக்குகள்         (5ஆண்டுகள்)
  • தோல் காலணி            (25-40 ஆண்டுகள்)
  • டயபர் நாப்கின்            (500-800 ஆண்டுகள்)

மறுசுழற்சி மறுசுழற்சி என்பதை பொருளாதார வலுவுடன் இணைப்பதன் மூலம் நெகிழியை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம். 

# 1 :  இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் தம்பதியர் நிறுவியதுதான் அக்ஷார் ஃபோரம் பள்ளி. இந்தப் பள்ளியில் பிளாஸ்டிக் கழிவை கொடுத்து மட்டுமே கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை கொண்டு, மாணவர்கள் ‘பசுமை செங்கற்களை‘ செய்கிறார்கள். பள்ளிப்படிப்பை தொடரும் அதேவேளையில் வருவாய் ஈட்டும் வழியையும் இந்த பள்ளி காட்டுகிறது.

https://www.bbc.com/tamil/india-48485645

 

#2 பிளாஸ்டிக் சாலைகள்: இங்கிலாந்துக்கு வழிகாட்டிய இந்தியா

 

  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் தவிர்ப்போம் "சிறப்பு குழந்தைகள்" விழிப்புணர்வு ஓட்டம்

https://www.youtube.com/watch?time_continue=68&v=_rZukiSMNII

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான திட்டம் .....!   பகிர்வுக்கு நன்றி அம்பானி ......!!   👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அற்புதமான திட்டம் .....!   பகிர்வுக்கு நன்றி அம்பானி ......!!   👍

அம்பனை என நினைக்கிறேன்

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைய சமுதாயத்திற்கு தலையிடியாக இருக்கப்போவது இந்த பிளாஸ்ரிக் பொருட்களே.
 எமது மூதாதையர்களும் நாங்களும் உபயோகப்படுத்திய சணல் சாக்கு பைகளையும் கடுதாசி பைகளையும் சூழல் பாதுகாப்பு எனும் பெயரில் எல்லா இடங்களிலும்  பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

அம்பனை என நினைக்கிறேன்

நீங்கள் எழுதியதுதான் சரி.....! இருந்தாலும் அவரை அம்பானி என்று சொல்வதை கூட உங்களுக்கு பொறுக்கவில்லை. பொறாமை......!   😄

  • தொடங்கியவர்

மகளிர்  மட்டும்  தொழில்புரியும் நெகிழி மீள்சுழற்சி தொழில் வாய்ப்பு 

இவை போன்ற முதலீடுகளை புலப்பெயர் உறவுகள் தாயக மக்களுக்கு அமைத்து உதவலாம். 

குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது.

மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடக்கம் நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் உள்ளன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு நிலையைக் கூட்டுகிறது.

மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. யப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும்.

 

 

 

  • தொடங்கியவர்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நெகிழி - இதை மீளாக்கம் செய்து பாடசாலை பிள்ளைகளுக்கான மேசைகள் வாங்குகளை செய்யும் பொறியியலாளர்  

q1-37.jpg

 

q2-39-768x1024.jpg

https://www.readersportaltoday.net/2019/02/20/filipino-engineer-recycles-plastic-garbage-and-made-it-into-school-chairs/?fbclid=IwAR2qneudCSNbuGgUPKvmaZcobU-m8QXX612mXDk03iqIqZnpJw2ZqlWVytI

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் அச்சுறுத்தலுக்கு சப்பாத்திக் கள்ளியால் தீர்வு சொல்லும் பெண்

சப்பாத்திக் கள்ளியிலிருந்து இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத பிளாஸ்டிக்குக்கு மாற்று தயாரிப்பை மெக்ஸிக்கோவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

இயற்கையான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை நீங்கள் சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.

 

 

 

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்டிக் நாம் பயன்படுத்தும் போது.... நமக்கு மட்டும் பாதிப்புகள் இல்லை. 
மற்ற எல்லா உயிர்களும் உள்ளது. 

  • தொடங்கியவர்

நெகிழி அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

59682616_2359056400820686_45143166230410

 

நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீதியோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

 

777.jpg

 

அத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தமர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

 

65.jpg

6.jpg

https://www.virakesari.lk/article/58720

  • தொடங்கியவர்

இந்தியாவில் எறியப்படும் நெகிழிகளை கொண்டு உருவாக்கப்படும் காலணிகள் 
இந்தியாவில் இரண்டு மில்லியன்கள் தண்ணீர் நெகிழிகள் நாள் ஒன்றிற்கு எறியப்படுகின்றன. 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஆர்க்டிக் பனிப்பொழிவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக்: அதிர வைக்கும் ஆய்வு

ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் வானிலிருந்து விழும் பனிப்பொழிவிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகல்கள் இருப்பதாக கூறுகிறது ஓர் ஆய்வு முடிவு.

ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பனியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்தப் பகுதியில் மக்கள் சுவாசிக்கும் காற்றிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன.

இத்தனைக்கும் இந்தப் பகுதிதான் இந்தப் புவியின் அழகிய சூழல் இருக்கும் பகுதி என கருதப்படுகிறது.

ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் எனும் சஞ்சிகையில் வெளியாகி இருக்கிறது.

பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமல்ல பனிபொழிவில் ரப்பர் மற்றும் ஃபைபர் துகள்களும் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

எப்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது?

ஸ்வால்பார்ட் தீவில் உள்ள பனியை சேகரித்து ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

ஜெர்மனி ஆல்ஃபர்ட் வெகனர் மையத்தில் உள்ள ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவைவிட துகள்கள் அதிகளவில் இருந்துள்ளன.

துகள்கள் மிகவும் நுண்ணிய அளவில் உள்ளதால் இவை எங்கிருந்து வந்தன என்பதை ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

தாவர செல்லுலோஸ் மற்றும் விலங்கின் மெல்லிய முடி ஆகியவை இந்த பனிதுகள்களில் இருந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், ரப்பர் டையர், வார்னிஷ், பெயிண்ட் ஆகியவற்றின் துகள்களும் இருந்துள்ளன.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆய்வாளர் பெர்க்மேன் பிபிசியிடம் பேசியபோது, "சூழலியல் மாசு இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எல்லாம் இருக்குமென எதிர்பார்க்கவில்லை" என்கிறார்.

மேலும் அவர், "இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு மனித உடலில் தாக்கம் செலுத்தும் என தெரியவில்லை. நாம் சூழலியலை காப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்," என்கிறார் அவர்.

 

ஆர்க்டிக் பெருங்கடலுக்கு பிளாஸ்டிக் மாசு சென்றது எப்படி?

இதற்கு முன்பே சீனா, இரான், பாரீஸ் பகுதியில் இதுபோல பிளாஸ்டிக் துகள்கள் விழுந்துள்ளன.

காற்றில் பறந்து வளிமண்டலத்தில் கலந்து ஆர்க்டிக் பகுதியை இந்த பிளாஸ்டிக் துகள்கள் அடைந்திருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

https://www.bbc.com/tamil/science-49355021

  • 1 month later...
  • தொடங்கியவர்

பிளாஸ்டிக்குக்கான மாற்று - நீடிக்கும் சிக்கல்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கும் முடிவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

பிரதமர் மோடியின் அறிப்பின் படி இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதை இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருட்களுக்கு மாறிக்கொள்ளவும் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள போதும், அதனை உறுதியாக செயல்படுத்துவதில் முனைப்பற்ற நிலை நிலை நிலவுவதால் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருவதை இன்னும் தடுக்க முடியவில்லை

இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டுபிடிப்பதில் அடுத்த இரு ஆண்டுகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தித்துறையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அவர்களுக்கான மறு வாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமாகியுள்ளது.

பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டறிந்து உற்பத்தி செய்ய தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த மாதம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடை செய்ய மாநில அரசுகள் சட்டபூர்வ நடைமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரிய நகரங்களில் நாள்தோறும் 4 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் ஆண்டு தோறும் 94 லட்சத்து 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றில் 40 சதவீதம் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்றும் ஐ.நாவின் தன்னார்வ சூற்றுச்சூழல் செயல் திட்ட அமைப்பான பிளாஸ்டிக் இல்லா கூட்டமைப்பு, இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு, உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே 18 மாநிலங்களில் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன என்ற புள்ளி விவரம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 மாநிலங்களில் பிளாஸ்டிக் பிரச்சினையை எதிர்கொள்ள மாற்று நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவலும் இல்லை என்றும் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பிரித்து மேலாண்மை செய்யும் நடவடிக்கை நகரங்களின் உள்ளாட்சித்துறையில் உள்ளதா என்ற தகவலே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/83207/பிளாஸ்டிக்குக்கான-மாற்று---நீடிக்கும்-சிக்கல்

  • தொடங்கியவர்

கடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பம்

பசுபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் முதல்கட்ட பணியை வெற்றிகரமாக நெதர்லாந்து விஞ்ஞானிகள் குழு முடித்துள்ளது .

நெதர்லாந்தை சேர்ந்த போயான் சால்ட் என்ற விஞ்ஞானி, 'தி ஓஷன் கிளீனப்' என்ற நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக  இருக்கிறார்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கு 'நகரும் வளையம்' போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் உருவாக்கிய தொழில்நுட்பத்தை சோதனை ரீதியாக இயக்கி வந்தார். தற்போது இதில் வெற்றி கண்டுள்ளார். இவரது தொழில்நுட்பம் மூலம் முதல்கட்டமாக பல டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

இத்தொழில்நுட்பம் 'சி' வடிவில் ஒரு அரை வளையம் போல இருக்கும் இதன் நீளம் 2 ஆயிரம் அடி. பாராசூட் மூலம் இயக்கப்படுகிறது. பாரசூட் முன்னோக்கி செல்ல, இவ்வலை பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக்கொண்டே வரும். வாரம் ஒருமுறை கப்பல் சென்று சேகரித்த குப்பைகளை ஏற்றிச்செல்லும். வளையத்தின் மத்தியில் கடல்வாழ் உயிரினங்கள் கடந்து செல்வற்கு பத்து அடி ஆழத்துக்கு துணி உள்ளது.

Tamil_News_large_2384776.jpg

இத்திட்டத்தின் மூலம் டன் கணக்கிலான மீன் வலைகள் முதல், பெரிய மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

முதல்கட்ட வெற்றியைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.

https://www.virakesari.lk/article/66627

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல்பாடு .....பகிர்வுக்கு நன்றி அம்பனை.....!  👍

  • தொடங்கியவர்
45 minutes ago, suvy said:

நல்ல செயல்பாடு .....பகிர்வுக்கு நன்றி அம்பனை.....!  👍

உண்மைதான் சுவி. இதை செய்யாவிட்டால் மீன்களே இல்லாமல் போய்விடலாம். அது இல்லை என்றால், அதிகம் பாதிக்கப்படுவது உலகின் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களே. 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி - ராமதாஸ்

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு பசுமை தாயகம் சார்பில் ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் சில இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்ததால் அரிசி கொடுக்கும் திட்டம் வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ராமதாஸ், மாவட்டத் தலை நகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/87438/2-கிலோ-பிளாஸ்டிக்-கழிவுகளைகொடுப்போருக்கு-ஒரு-கிலோஅரிசி---ராமதாஸ்

நல்ல முயற்சி. சனத்தொகை நெருக்கம் கூடிய இந்திய மாநிலங்களில் இவ்வாறான முன்னெடுப்புகள் அவசியம். 

நல்ல பகிர்வு அம்பனை. 😊

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு

பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு ஐவோரி கோஸ்ட் (Ivory Coast ) பகுதியில் சிறிய செயற்கை தீவை உருவாக்கியுள்ளார்.

 படகு தொழில் ஆரம்பிக்கும் திட்டத்துடன் சென்ற எரிக் பேக்கர் என்பவர், அங்கு பிளாஸ்டிக் பாட்டீல்கள் போன்ற கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டார்.

பின்னர் அவற்றை சேகரித்து, நீச்சல் குளங்கள், சிறிய வீடுகளை கொண்ட சிறிய தீவை உருவாக்கி, சூரிய ஒளி மின்னுற்பத்தி மூலம் மின்சார வசதி செய்து கொடுத்துள்ளார்.

அந்த தீவுக்கு வாரத்துக்கு சுமார் 300 பேர் வருவதால் எரிக் பேக்கருக்கு போதிய லாபமும் கிடைக்கிறது.

https://www.polimernews.com/dnews/89730/பிளாஸ்டிக்-கழிவுகளைகொண்டு-செயற்கை-தீவு

 

French entrepreneur makes island from 700,000 plastic bottles

A French entrepreneur has made an island of plastic waste in Ivory Coast. The island consists of 700,000 plastic bottles. There is a hotel on the island where guests can stay. franse-ondernemer-maakt-eiland-van-700000-plastic-flessen.jpg

https://www.tellerreport.com/life/2019-11-21---french-entrepreneur-makes-island-from-700-000-plastic-bottles-.HJYGMG7VhB.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.