Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

prabhakaran-rauff-hakeem.png?zoom=1.1024
பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. இந்தநிலையில், பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது. இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்திடடமிருந்து எந்த ஆதரவும் கிடையாது. அப்படியான கும்பல் பிரபாகரன் என்கிற தகுதிக்கு வந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் எனப் பெரும் ஆதரவுத் தளமிருந்தது. இப்போதும் இருக்கின்றது. அவர்களுக்கென்று கட்டமைப்பு இருந்தது. அரசியல் கொள்கை இருந்தது. அவர்களுக்கென்று ஒரு விடுதலைப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக் காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கிளிநொச்சியில் தாம் நேரில் சந்தித்ததாக தெரிவித்த அவர், தனக்கும் தனது கட்சியினருக்கும் பலத்த வரவேற்பு வழங்கியிருந்தார். சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தங்களுடன் அவர் மனம் விட்டுப் பேசினார் எனக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், துரதிஷ்டவசமாக அந்தச் சமாதானக் காலம் நீடிக்கவில்லை. மீண்டும் போர் ஆரம்பமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உரிமைகளைக் கேட்டு நிற்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர்களின் தாக்குதல்கள் இருந்தன எனக் கூறியுள்ள ரவூப் ஹக்கீம் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறுகிய நோக்கத்தில் இருந்ததில்லை எனவும் வலியுறுத்தி உள்ளார். 

http://globaltamilnews.net/2019/124380/

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இது எப்பவோ தெரியும்......

எங்களுக்கு இப்ப பிரச்சனை அவயளின்ட ஆள்கள் அடிச்ச காசில் புலம்பெயர்ந்த நாட்டில் கொத்து ரொட்டி கடையும்,நகைகடையும் நடத்துவதும் தான் ...இதற்கு ஐ.நாவில் ஒர் தீர்வு வரும் வரை மறைந்திருந்து போராடுவோம்....🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தாங்கள் தப்பிறதுக்கு, சும்மா அந்தாளை இதுக்க ஏன் இழுக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இவர் தாங்கள் தப்பிறதுக்கு, சும்மா அந்தாளை இதுக்க ஏன் இழுக்கிறார்?

வடக்கு கிழக்கு பாதுகாப்பான பிரதேசம் என்று நினைக்கினமோ ?.......தமிழ் பேசும் மக்கள் என்று நினைக்கினமோ? 
சிங்களவ்ர்களுக்கு எதோ செய்தியை சொல்லுகின்றார் போல

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒண்டும் நினைப்பதாக தெரியவில்லை.

தமிழர்கள் அன்றும் இன்றும் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் ஆதரவு கொடுத்ததால்தான் அவர்களால் அப்படி வளர முடிந்தது.

நாங்கள் அப்படி இல்லை, அச்சா பிள்ளையள், ஆகவே எம்மத்தியில் இருந்து அப்படி ஒரு அமைப்பு/ஆள் வராது.

இதுதான் பெரும்பான்மைக்கு ஹக்கீம் சொல்லவரும் செய்தி.

 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் அணிகளில் செயல்பட்டபோதும் தோழர் ரவூப் ஹக்கீம் புலிகள் மீதும் பிரபாகரன்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். வன்னிப் பயணத்தின்பின் ஹக்கீம்  பிரபாகரனது விருந்தோம்பலையும் மரியாதையும் வெகுவாக புகழ்ந்து பேசினார். வன்னியிலும் அதுபோன்ற நற்சேதிகளை நான் கேட்டிருக்கிறேன். வரலாறில் நம்பிக்கைதந்த எல்லாமே கனவுபோலாகிவிட்டது  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

எதிர் அணிகளில் செயல்பட்டபோதும் தோழர் ரவூப் ஹக்கீம் புலிகள் மீதும் பிரபாகரன்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். வன்னிப் பயணத்தின்பின் ஹக்கீம்  பிரபாகரனது விருந்தோம்பலையும் மரியாதையும் வெகுவாக புகழ்ந்து பேசினார். வன்னியிலும் அதுபோன்ற நற்சேதிகளை நான் கேட்டிருக்கிறேன். வரலாறில் நம்பிக்கைதந்த எல்லாமே கனவுபோலாகிவிட்டது  

பொயற் அய்யா,

நீஙகள் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறீர்கள்.

ரவூப் ஹக்கீம் அடிக்கடி சென்னைப்பயணம் வந்து போவதை கவனித்தீர்களா?

ஒவ்வொரு தடவையும், ஸ்ராலின் உட்பட்ட திமுக காரர்களை சந்திக்கிறார்.

தமிழ் தேசியவாதிகளின் கவனத்தை ஈர்க்காமல் இருக்க, பிரபாகரன் குறித்த மேலுல்ல கருத்தாயும் வைக்கிறார்.

காரணம் என்ன?

இலங்கையில், திமுகவின் முதலீடுகளை கையாண்டு நெறிப்படுத்துபவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர்.

மலையக தமிழர், ஈழத்தமிழர் ஆகியோரிலும் இவரை பயன்படுத்துவதே, திமுகவுக்கு பாதுகாப்பானது.

இந்த தொடர்பு, மகிந்த - கலைஞர் காலத்தில் ஆரம்பித்தது.

(ரகசியமா, வைச்சிருஙக, வெளிய சொல்லிப்போடாதீங்க)😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

எதிர் அணிகளில் செயல்பட்டபோதும் தோழர் ரவூப் ஹக்கீம் புலிகள் மீதும் பிரபாகரன்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். வன்னிப் பயணத்தின்பின் ஹக்கீம்  பிரபாகரனது விருந்தோம்பலையும் மரியாதையும் வெகுவாக புகழ்ந்து பேசினார். வன்னியிலும் அதுபோன்ற நற்சேதிகளை நான் கேட்டிருக்கிறேன். வரலாறில் நம்பிக்கைதந்த எல்லாமே கனவுபோலாகிவிட்டது  

நீங்களும் விடுவதில்லை என்று நிக்கிறீர்கள் அவர்களோ பட்டும் திருந்துவதுக்கு இடமில்லாமல் இரண்டு  முஸ்லீம் பிரிவும் மமமதையில் இருக்கிறார்கள் தமிழனும் சிங்களவனும் கொள்ளுபட பிள்ளையை பெத்து நாட்டை பிடிப்பம் என்று வெளிக்கிட்ட கூட்டம் இப்படியே சும்மா விட்டாலும் 20, 30 வருடங்களில் அவர்கள்தான் எனும் யதார்த்தம் பலருக்கும் சுடும் . கொஞ்ச ஆளுநர் அதிகாரம் குடுத்ததுக்கே வடகிழக்கு இணைப்பால்  இரத்த ஆறு ஓடும் என்று ஜனநாயக நாட்டில் அறைகூவல் விடுக்கிறான் அதை எங்கடை தமிழ் அரசியல்வாதிகளும் பார்த்துகொண்டு இருக்கினம் நீங்களும் இப்படியானவற்றை விட்டு அவர்களுக்குபுனுகு பூசி விடுவதிலே குறியாய் உள்ளீர்கள் .

அவர்கள் முதலில் தாங்கள் சிறுபான்மை இனம் எடுத்ததுக்கெல்லாம் அரபு நாடுகள் வந்து உதவி செய்யாது வடகிழக்கு தமிழர் உடன் இணைந்து போவதை தவிர வேறு வழியில்லை எனும் முடிவுக்கு வரணும் ஆனால் அங்கு நடப்பது என்ன அரபு மொழி தடை என்று பிழையான தகவலை அரபு நாடுகளுக்கு குடுக்கிறார்கள் உலகிலே தாங்கள்தான் பெரிய டான் எனும் போலியான மமதை இவற்றை அவர்களின் அரசியல்வாதிகள் பிழையான தகவலை குடுத்து உருவேற்றி வைத்து உள்ளார்கள் நீங்களும் விழுந்தடித்துகொண்டு அடுக்கு தடுக்கு பண்றதை விட்டு ஆறபோடுங்க முதலில் நன்றாய் வேண்டிகட்டி சிங்களத்தால் எமக்கு ஏற்படுத்திய இழப்பில் 100 ல் 20 பங்கு வேண்டவே அவர்களுக்கு புரியும் இலங்கையின் சிறுபான்மை இனம் என்று .

சிங்களம் காலா காலமாய் பிரித்து விளையாடும் விளையாட்டை மறுபடியும் கையில் எடுக்குது தேரர் கூட்டம்கள்  பிரபாகரன் பெயரை சொல்லி நல்ல பிள்ளை யாகுவினம் நாங்களும் நம்பிகெடுவதில் உலகில் ஓராம் நம்பர் கூட்டம் .உண்மையிலே  சிங்களம் இறங்கி வருமாகில் தீர்வை தரட்டும் அதன்பின் பார்க்கலாம் .இல்லை மல்லுக்கு நின்றால் எதிர்காலம் அவர்கள் கையில் இல்லை அது அவர்களுக்கும் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

நட்புடன் நாதமுனி மற்றும் பெருமாள் அவர்களுக்கு. திமுக மாற்று அரசு என்கிறதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்ஙகை தமிழக முஸ்லிம்களின் தமிழ் வழி தொடர்புகள் தீவிர மத அமைப்புகளுள் தேங்குவது நல்லதல்ல. இலங்கை தேசிய கட்சிகளை தாண்டி  தமிழக அரசியல் கட்சிகளோடு இலங்கை முஸ்லிம்கள் தொடர்புகளை வளர்பது நம்மைப்பொறுத்தும் நல்ல வளர்ச்சிதான்.

வரலாறு யானை பார்பதைப் போலத்தான் நீங்க பார்த்ததை நீங்க சொல்லுங்க நான் பார்த்ததை  சொல்ல என்னையும் அனுமதியுங்க. ஏனெனில் அதிக தகவல்கள்  உண்மையை கண்டுகொள்ள உதவும்.  நீங்கள் சொன்ன தகவல் உங்கள் புரிதல் என்கிற வகையில் இந்த உரையாடலுக்கு ஒரு உதிரிப்பாகமாக வளம் சேர்க்கும். ஆனால் ஒரு உதிரிப்பாகம் மட்டும் ஒரு யந்திரமில்லை. நமக்குள் ஆளாளுக்குத் தெரிந்த தகவல்களும் அப்படித்தான் நண்பா. ஆயிரம் மலர்கள் மலரட்டும் பல்லாயிரம் தகவல்கள் பகிரட்டும்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.