Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Lara said:

நான் வாலை விட்டு தும்பை பிடிக்கவில்லை.

மேற்குலகிற்கு தெரிந்து முள்ளிவாய்க்கால் நடந்ததா அல்லது மேற்குலகும் சேர்ந்து முள்ளிவாய்க்காலை நடத்தியதா என்பது தேவையற்ற ஆராய்ச்சி என்றால் அது பற்றி நீங்கள் யாரும் முன்னர் கருத்து வைத்திருக்க கூடாது. கருத்து வைக்கப்பட்ட பின் அதை மறுத்து கருத்து வைப்பது இயல்பு தானே. உலக நாடுகளின் உதவியில்லாமல் இலங்கை அரசு தனியே போர் நடத்தியிருந்தால் புலிகளை வென்றிருக்காது.

அன்றைய தமிழர் நிலையும் இன்றைய தமிழர் நிலையும் வேறு என்பதனால் தான் அன்று ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால் என நான் எழுதியிருந்தேன். அது எனது கருத்து.

ஒபாமாவை நெருங்கி தமிழர் தரப்பு இருந்தும் ஒபாமா சொன்னது புலிகளை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடையும் படி. (அதைவிட பல உதவிகளையும் இலங்கை அரசுக்கு அமெரிக்கா செய்தது). மிலிபாண்டின் தொகுதியில் தமிழர் வாக்கு கணிசமாக இருந்தும் பிரிட்டன் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது.

மேற்குலகு போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கையை பயமுறுத்தி எமக்கு தீர்வு பெற்று தருவார்களா என்ற கேள்வியை கேட்க முன் தமிழர் தலைமை பலமில்லாத போது, தமிழர் தலைமைக்கு தீர்வில் அக்கறையில்லாத போது, தமிழர்களால் யாருக்கும் பயனில்லாத போது ஏனைய நாடுகள் தீர்வுக்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமா என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். மேற்குலகுக்கு தேவை இருந்தால் அதை அவர்கள் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு தேவை இப்பொழுது இல்லை.

UNHRC இலிருந்து அமெரிக்காவை வெளியேற்றிய ட்ரம்பிடம் அதே UNHRC இன் தீர்மானத்தை காட்டி எவ்வாறு கதைக்க முடியும் என்பதற்காக தான் ட்ரம்ப் ஐநா க்கு எதிரானவர் என கூறி எழுதியிருந்தேன்.

நன்றி.

  • Replies 112
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Lara said:

மேற்குலகு போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கையை பயமுறுத்தி எமக்கு தீர்வு பெற்று தருவார்களா என்ற கேள்வியை கேட்க முன் தமிழர் தலைமை பலமில்லாத போது, தமிழர் தலைமைக்கு தீர்வில் அக்கறையில்லாத போது, தமிழர்களால் யாருக்கும் பயனில்லாத போது ஏனைய நாடுகள் தீர்வுக்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமா என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். மேற்குலகுக்கு தேவை இருந்தால் அதை அவர்கள் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு தேவை இப்பொழுது இல்லை.

நீங்கள் இங்கே "தீர்வு" என்று சொல்வது தமிழர்களுக்கு சுயாட்சி என்பதையே என்று தெரிகிறது. அதே வேளை "மேற்குலகுக்கு தேவை இருந்தால்" என்ற சொற் பிரயோகத்தையும் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அந்த "தேவை" சர்வதேச புவிசார் அரசியல்/பொருளாதார  மேலாண்மை என்று கருதுவது பொருத்தமாக இருக்கும் என்றே தெரிகிறது. இவற்றின் அடிப்படையில் பார்த்தால், உங்கள் கருத்தில் பின்வரும் வசனங்கள் விவாதப் பொருளாகின்றன:

  1.  "ஆனால் அவர்களுக்கு தேவை இப்பொழுது இல்லை." இங்கே நீங்கள் 'அவர்கள்' என்று சொல்வது மேற்குலகை.
  2. "தமிழர்களால் யாருக்கும் பயனில்லாத போது ஏனைய நாடுகள் தீர்வுக்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமா என்ற கேள்வியையும் கேட்க வேண்டும்."

சர்வதேச புவிசார் அரசியல்/பொருளாதார  மேலாண்மையில் அமெரிக்காவுக்கு நிறையவே அக்கறை இருக்கிறது. நிச்சயமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் அபரீத வளர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அமேரிக்கா மும்முரமாக இருக்கிறது. ரணில் விக்கரமசிங்க, மங்கள சமரவீர மற்றும் சுமேந்திரன் அமெரிக்காவின் மேலாண்மையை பெற்று கொடுப்பதில் அமெரிக்க அரசுடன் இணைந்து செயற்படுவதை பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. அமெரிக்க அரசின் தேவையை நிறைவு செய்ய தமிழருக்கு சுயாட்சி தேவை என்று அமெரிக்க அரசு திருப்தி படத்தக்க ஆதாரங்களை சுமேந்திரன் காட்டினால், அமரிக்கா சுயாட்சியை பெற்று தரும் சாத்தியம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Jude said:

 அமெரிக்க அரசின் தேவையை நிறைவு செய்ய தமிழருக்கு சுயாட்சி தேவை என்று அமெரிக்க அரசு திருப்தி படத்தக்க ஆதாரங்களை சுமேந்திரன் காட்டினால், அமரிக்கா சுயாட்சியை பெற்று தரும் சாத்தியம் உள்ளது.

அவர்களால்   தீர்வு , இவர்கள் எடுத்துத் தருவார்கள் , தீர்வுக்கான அழுத்தங்கள் என்பவை ஒரு புறம்  இருக்க , இவை  எல்லாவற்றையும் தாண்டி   எங்களால் மாத்திரம் அடையக் கூடிய ஒரு தீர்வுக்கு ஏதேன் சாத்தியங்கள் உண்டா       

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

அமெரிக்க அரசின் தேவையை நிறைவு செய்ய தமிழருக்கு சுயாட்சி தேவை என்று அமெரிக்க அரசு திருப்தி படத்தக்க ஆதாரங்களை சுமேந்திரன் காட்டினால், அமரிக்கா சுயாட்சியை பெற்று தரும் சாத்தியம் உள்ளது.

ஜூட் நீங்கள் கிறீஸ்தவர் என நினைக்கிறேன்.

பைபிளில் வரும் சாம்சன் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். இறைவனின் ஆசி, அசுர பலம் எல்லாம் கொண்டு இஸ்ரேலியர்களின் நிரந்தர மீட்பராகக் கூடிய நிலையில் இருந்தும், தன் பலத்தை தானே அறியாதலாலும், செய்யவேண்டியதை செய்யாததாலும், செய்ய கூடாதவற்றை செய்ததாலும், சில ஆயிரம் பலஸ்தீனியர்களை கொல்லுவதோடு சாம்சனின் கதை முடிகிறது.

சுமந்திரனும் இப்படியே. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தவிரவும், இலங்கை வட கொரியா போல் ஒரே அடியாக சீனா பக்கம் சாயும் மட்டும், இலங்கையை பகைத்து எமக்கு சுயாட்சி தரவேண்டிய அவசியம் யுஎஸ் ற்கோ, இந்தியாவுக்கோ இல்லை.

எமது பிரச்சினையை அணையவிடாமல் ஆனால் எரிநிலையில் இல்லாமல் வைத்திருப்பது. இலங்கை கொஞ்சம் சீனா பக்கம் சார்ந்தால் இதை கையில் எடுத்து எரிய வைக்கப் போவது போல் காட்டுவது, இலங்கை வழிக்கு வந்ததும் தூக்கி கிடப்பில் போடுவது. இதுதான் யூஎஸ் இந்தியாவின் இலங்கைக்கான அணுகுமுறை.

இது இலங்கைக்கும் தெரியும் ஆகவேதான் அவர்களுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஆடுகிறார்கள். சீனா பக்கம் போவது போல் போக்கு காட்டுவது, பின்னர் ஈழப் பிரச்சனையை இந்தியா கையில் எடுக்கும் போல தெரிந்தவுடன் வழிக்கு வருவது.

இதில் கருவேப்பிலைகள் தமிழர் தரப்பே. ஆயுத பலம் இருந்த போதும், இப்போதும் இதுவே நிலைமை.

இதில் இருக்கும் அனுகூலங்களை வைத்து கொஞ்சமாவது வெட்டி ஆடலாம் என்றால், அந்த இயலுமை தமிழர் தலைமைகளிடம் இல்லை.

3 hours ago, Jude said:

நீங்கள் இங்கே "தீர்வு" என்று சொல்வது தமிழர்களுக்கு சுயாட்சி என்பதையே என்று தெரிகிறது. அதே வேளை "மேற்குலகுக்கு தேவை இருந்தால்" என்ற சொற் பிரயோகத்தையும் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அந்த "தேவை" சர்வதேச புவிசார் அரசியல்/பொருளாதார  மேலாண்மை என்று கருதுவது பொருத்தமாக இருக்கும் என்றே தெரிகிறது. இவற்றின் அடிப்படையில் பார்த்தால், உங்கள் கருத்தில் பின்வரும் வசனங்கள் விவாதப் பொருளாகின்றன:

  1.  "ஆனால் அவர்களுக்கு தேவை இப்பொழுது இல்லை." இங்கே நீங்கள் 'அவர்கள்' என்று சொல்வது மேற்குலகை.
  2. "தமிழர்களால் யாருக்கும் பயனில்லாத போது ஏனைய நாடுகள் தீர்வுக்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமா என்ற கேள்வியையும் கேட்க வேண்டும்."

சர்வதேச புவிசார் அரசியல்/பொருளாதார  மேலாண்மையில் அமெரிக்காவுக்கு நிறையவே அக்கறை இருக்கிறது. நிச்சயமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் அபரீத வளர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அமேரிக்கா மும்முரமாக இருக்கிறது. ரணில் விக்கரமசிங்க, மங்கள சமரவீர மற்றும் சுமேந்திரன் அமெரிக்காவின் மேலாண்மையை பெற்று கொடுப்பதில் அமெரிக்க அரசுடன் இணைந்து செயற்படுவதை பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. அமெரிக்க அரசின் தேவையை நிறைவு செய்ய தமிழருக்கு சுயாட்சி தேவை என்று அமெரிக்க அரசு திருப்தி படத்தக்க ஆதாரங்களை சுமேந்திரன் காட்டினால், அமரிக்கா சுயாட்சியை பெற்று தரும் சாத்தியம் உள்ளது.

சம்பந்தன் சுமந்திரனுக்கு தமிழர்களுக்கு தீர்வு வாங்கி தரும் எண்ணமில்லை, யாரும் தாமாக தீர்வு தந்தால் அதை கைநீட்டி வாங்குவதற்கு மட்டும் தான் முன்வருவார்கள். 😀

தமிழர்களுக்கு தீர்வு கொடுத்து தான் அமெரிக்கா தமது தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை இப்பொழுது இல்லை. 😎

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Lara said:

100% சரி. இந்த தேவை இந்தியாவுக்கும் இல்லை.  சொல்லப்போனால் தமிழர் தரப்பு அதியுச்ச ஆயுத, அரசியல் பலத்தோடு இருந்தபோதே இந்த தேவை இருக்கவில்லை. ஏனெறால் எந்த தமிழ் தலைமையும், இந்தியா யூஎஸ் சின் எதிர்த் தரப்புகளான சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்றவற்றை அணுகுவதாகக் போக்கு கூட காட்டவில்லை.

என்ன நடந்தாலும் தமிழர் தரப்பு இந்தியாவின் காலடியில்தான், ஆனால் சிங்களம் சீனா, ரஸ்யா, பாகிஸ்தானுடன் நல்லுறவு வைத்துள்ளது எனும் போது,

சீங்களத் தரப்பின் பேரம்பேசும் வலு bargaining power கூடுவது இயற்கை.

4 hours ago, Lara said:

சம்பந்தன் சுமந்திரனுக்கு தமிழர்களுக்கு தீர்வு வாங்கி தரும் எண்ணமில்லை, யாரும் தாமாக தீர்வு தந்தால் அதை கைநீட்டி வாங்குவதற்கு மட்டும் தான் முன்வருவார்கள். 😀

அதுவும் சாத்தியமோ தெரியலை!

ஏனென்டால், கிட்டடில தான் யாரோ உண்ணாவிரதம் இருந்து கல்முனை பிரதேச சபைக்கு போராட, இடையில றணில்ட புலுடா தீர்வை தூக்கிக்கொண்டு ஓடின சுமந்திரனுக்கு நடந்த சாத்துக்கு பிறகு கொஞ்சமாவது பயப்படுவீனம் என்டு நினைக்கிறன்!

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2019 at 9:51 PM, Justin said:

நான் பதிலின் நாயகன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது உங்கள் அறியாமை நுணா! நானே அப்படி நினைப்பதில்லை! மேலும், தீர்வுக்கு முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் எவரையும் (அது என்ன தான் பயனற்ற நொண்டி முயற்சியானாலும்) கரிச்சுக் கொட்டிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது நான் அல்லவே! அவ்வாறு கேள்விகளும் வெற்று விமர்சனங்களும் வைப்போர் தான் பதில்களையும் கொடுக்கக் கடமையுடையோர்! 

’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’

-வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.

”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன்.

”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.

”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.

”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.

செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம்.

அது போல்,பதிவு ஒன்றுதான்... எத்தனை எத்தனை பார்வை.எத்தனை எத்தனை கண்ணோட்டம்.

ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம்.

ஆயிரம் விமர்சனங்கள் வரலாம் அது அவரவர் சிந்தனையை பொறுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

2070 அண்டும் போது, இலங்கை தமிழர் ஒவ்வொருவரும் ஆகக் குறைந்தது  50,000  டாலர் ஆவது ( இதனை முதலில் 1 மில்லியன் என பதிவிட யோசித்திருந்தேன் )  தமது சேமிப்பிலும் , இனிமேல் மணம் புரியும்  ஒவ்வொரு  இலங்கை தமிழ் தம்பதியினரும் 3 அல்லது 4 குழந்தைகளாவது பெற்றுக் கொண்டிருந்தால்,  2069இல்  எமது பிரச்சனை திருப்தியான முறையில் தீர்ந்து போயிருக்கும் .   

சம் உம் தேவையில்லை சும் உம் தேவையில்லை ………

Edited by சாமானியன்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’

-வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.

”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன்.

”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.

”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.

”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.

செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம்.

அது போல்,பதிவு ஒன்றுதான்... எத்தனை எத்தனை பார்வை.எத்தனை எத்தனை கண்ணோட்டம்.

ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம்.

ஆயிரம் விமர்சனங்கள் வரலாம் அது அவரவர் சிந்தனையை பொறுத்தது.

வெற்று விமர்சனம் என்று சொல்லியிருக்கிறேன்! உங்களுக்கு என்ன விளங்கியது அந்த வாக்கியத்தில்? நான் கருதியது, சுமந்திரன் சம்பந்தன் இன்னும் பிறரின் முயற்சி போதாமல் இருக்கலாம்! அதைச் சுட்டிக் காட்டுவதில் தவறொன்றும் இல்லை! ஆனால், அதையா செய்கிறார்கள்? பெட்டி வாங்கினார்கள் என்கிறார்கள்! சாட்சியம் கேட்டால் போட்டொ எடுத்துக் கொண்டா வாங்குவர் என்று சிரிக்கிறார்கள்! சரி, இதே பேர்வழிகள் போட்டொ வீடியோ வாய்மூல எழுத்து மூல ஆதாரம் இருந்தும் சில அமைப்புகளின் செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதும் ஆட்களாக இருக்கிறார்கள்! ஊகங்களை உருவாக்குவதில் அங்கே ஒரு நியதியும் சமந்திரன் சம்பந்தருக்கு ஒரு நியதியும் இருப்பதைக் காண்கிறோம் அல்லவா? அது தான் பிரச்சினை! Consistent ஆக இருங்கள் என்பதே என் கோரிக்கை! 

On 7/8/2019 at 6:28 PM, Justin said:

நீங்கள் எவ்வாறு தீர்வுக்கு சம்பந்தன் சுமந்திரன் முயற்சி செய்கிறார்கள் என நினைக்கிறீர்களோ அதே போல் சம்பந்தன் சுமந்திரனின் கடந்தகால நடவடிக்கைகளை அவதானித்தவர்கள் அவர்கள் தீர்வுக்கு முயற்சி செய்வதில்லை, இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார்கள் என நினைப்பதற்கும் உரிமை உள்ளது.

சம்பந்தன் சுமந்திரன் பெட்டி வாங்கினார்களா இல்லையா என்பது பற்றி நான் கதைக்க வரவில்லை என கூறிக்கொண்டே நான் எனது கருத்தை முன் வைத்தேன். ஒரு வேளை பெட்டி வாங்கியிருந்தால் கூட அதற்கு ஊடக ஆதாரம் கிடைக்கத்தக்கதாக தான் வாங்குவார்கள் என்றில்லை. 

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2019 at 2:55 AM, goshan_che said:

ஜூட் நீங்கள் கிறீஸ்தவர் என நினைக்கிறேன்.

பைபிளில் வரும் சாம்சன் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். இறைவனின் ஆசி, அசுர பலம் எல்லாம் கொண்டு இஸ்ரேலியர்களின் நிரந்தர மீட்பராகக் கூடிய நிலையில் இருந்தும், தன் பலத்தை தானே அறியாதலாலும், செய்யவேண்டியதை செய்யாததாலும், செய்ய கூடாதவற்றை செய்ததாலும், சில ஆயிரம் பலஸ்தீனியர்களை கொல்லுவதோடு சாம்சனின் கதை முடிகிறது.

சுமந்திரனும் இப்படியே. 

சிறு வயதில் பொழுதுபோக்காக கிறீஸ்தவ மதத்தை பயன்படுத்தி இருக்கிறேன், ஆனால் இந்த கதை எனக்கு தெரியாது. சுமேந்திரனை நான் குறிப்பிட்டதன் காரணம் அவரை தான் தமிழர் தரப்பில் அமெரிக்க அரசு தனது நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கிறது. சுமேந்திரனும் அவருக்கு உரிய பலவீனங்கள் கொண்ட மனிதர்.  மற்றவர்களின் உதவி, கருத்துகள் இல்லாமல் அவராலும் தனித்து பயனுள்ள வகையில் செயல் பட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.