Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கன்னியா போராட்டத்திற்கு தடை

Featured Replies

போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

IMG_20190716_110856__1_.jpg

அத்துடன் கன்னியா வளாகத்தில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.

IMG_20190716_111152.jpg

இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து  திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் இன்று காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/60534

கன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி

திருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.

IMG_20190716_094813.jpg

முல்லைத்தீவு ஊடாக கன்னியாவுக்கு செல்லும் பஸ்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பெருந்திரளானோர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தற்போது சென்று கொண்டிருக்கும் வழியில் புல்மோட்டை பகுதியில் புல்மோட்டை முல்லைத்தீவு வீதியிலும் மற்றும் புல்மோட்டை திருகோணமலை வீதியிலும்  3 இடங்களில் போராட்டத்திற்கு செல்லும் பஸ்கள் மட்டும் தனியாக அடையாளப்படுத்தப்பட்டு பஸ்களில் செல்பவர்கள் கடுமையான உடல் உடமை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவதோடு போராட்டத்திற்கு செல்பவர்களையும் பஸ்களையும் இராணுவம் மற்றும் பொலிஸார் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

IMG_20190716_101104.jpg

மேலும் பருத்தித்துறையிலிருந்து புல்மோட்டை ஊடாக கன்னியா போராட்டத்திற்கு சென்ற பஸ்ஸை வழிமறித்து படையினர் மற்றும் போலீசார் பரிசோதனைகளை செய்தபின் பஸ்ஸின் முன் சில்லுக்கு காற்று போகும் விதமாக இரகசியமாக  கூரிய ஆயுதத்தால் குற்றி காற்றுபோக செய்து பயணத்தை தடை செய்யும் விதமாக நடந்தது கொள்கின்றார்கள்.

IMG_20190716_102302.jpg

 இதனால் போராட்டத்துக்கு செல்பவர்கள் வழியில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதோடு அச்சமடைந்துள்ள நிலைமையும் காணப்படுகின்றது.

IMG_20190716_101645.jpg

IMG_20190716_101104.jpg

https://www.virakesari.lk/article/60532

  • தொடங்கியவர்

image_a0e85b1611.jpg-அப்துல் சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு பௌர்ணமி   தினமான் இன்று (16) வழிபடச்  சென்ற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கன்னியா பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு தவத்திரு அடிகளார்  தலைமையில் பக்தர்கள் வழிபடச் சென்றபோது, ஆர்ப்பாட்டம் செய்ய வந்துள்ளதாக  கூறி,  அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தை பொலிஸார்  கையளித்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன்,  அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதன்போது, கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு சென்றவர்கள் மீது, இனந்தெரியாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தேநீர் சாயங்களை ஊற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து, இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

image_7b7876dbe2.jpg

  •  

http://www.tamilmirror.lk/திருகோணமலை/கன்னியா-கோவிலுக்கு-வழிபட-சென்றோருக்கு-தடை/75-235402

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தனியார் காணிக்குள் இருந்த பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்ட நிலையில் ....

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®©à¯à®±à¯ à®à®²à¯à®²à®¤à¯ à®à®¤à®±à¯à®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® நபரà¯à®à®³à¯, மரமà¯, வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ à®à®¯à®±à¯à®à¯

தமிழருக்காக அரசியல் நடாத்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எங்கே...?

என்று மட்டும் கேட்காமல் .....

தாங்களாகாவே வீதியில் இறங்கும் மக்களுக்கு தலை வணங்குகின்றேன் !

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 8 பà¯à®°à¯, பà¯à®©à¯à®©à®à¯à®ªà¯à®ªà®µà®°à¯à®à®³à¯, பலர௠நினà¯à®±à¯à®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©à®°à¯, à®à¯à®à¯à®à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

 

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 6 பà¯à®°à¯, பலர௠நினà¯à®±à¯à®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©à®°à¯, திரà¯à®®à®£à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 11 பà¯à®°à¯, பலர௠நினà¯à®±à¯à®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©à®°à¯, à®à¯à®à¯à®à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

 

Edited by ampanai

  • தொடங்கியவர்

Kanniyaa_heritage_protest_04.jpg

Kanniyaa_heritage_protest_03.jpg

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

எனது பத்து வயதிற்குட்பட்ட காலப்பகுதிகளின் அழியாத கோலங்களில் கன்னியா வெந்நீரூற்றின் இதமான சூடு  இன்னமும் கத கதப்பாகத் தான் இருக்கின்றது….


என்னுடைய மிகச் சிறந்த நண்பன் ஒருவனை  இங்கினைக்குள்ள வைத்துத் தான் ,-  இன்று கொதி தேனீர் ஊற்றியவனின் தந்தையாக இருக்கக்   கூடும் -  ஒரு முப்பது வருடங்களின் முன்பு பஸ்ஸிலிருந்து இழுத்தெடுத்து வெட்டிப் போட்டான்.


இப்ப பொறுங்கோ,  இண்டைக்கு அல்லது நாளைக்கு ஒரு நானாவோ அல்லது காக்காவோ வந்து ' கன்னியா வெந்நீரூற்றில் இசுலாமியரின் பாரம்பரியமும் அதனை பறிபோக விடாமல் இசுலாமியர் செய்ய வேண்டிய வேலைத் திட்டமும்   "  என்று ஒரு ரீல் விடப் போவதை நினைக்கத் தான் சற்று விசராக இருக்கு !


மற்றும் படி வட்டம் மீளவும் சுற்ற ஆரம்பித்திருப்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது


எவராவது நினைத்திருந்தோமா 241  tie + 15  tie  ஆக வந்து   தான் முடிவு வரும் என்று…

எழுதிச் செல்லும் கை எழுதியே மேற் செல்லும் , அதற்காக விட்டு விடாமல்  poms உம் kiwis உம் தங்கள் நோக்கத்தில் உறுதியாகத் தானே இருந்தார்கள்.

வட்டம் மீளவும் சுற்ற ஆரம்பித்திருக்கிறது …..     

          

  • தொடங்கியவர்

இன்று கன்னியாவில் கூடி நிற்பவர்கள் சொல்லும் அரசியல் செய்தி இதுதான்

16719-2-696x356.png

பிராந்திய – புவிசார் அரசியலில் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய ஒரு கேந்திர முக்கியத்துவத்தை ‘நந்திக்கடல்’ நகர்வுகளினூடாக தனதாக்கிக் கொண்டுள்ளது தமிழீழம்.

தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் பின்னும் அது தனது பெறுமதியை இழக்கவில்லை.

வலுச் சமநிலை /பேரம் பேசும் வல்லமை/ இறைமை போன்ற இராஜதந்திர சொல்லாடல்களை அதற்கேயுரிய அர்த்தங்களுடன் உள்வாங்கி தமிழ் அரசியல் தரப்பு காய்களை நகர்த்துமாயின் தமிழீழம் போதுமான அளவு உரிமைகளைத் தனதாக்கிக் கொள்ளலாம். குறைந்தது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிலிருந்தாவது தன்னை தற்காத்துக் கொள்ளலாம்..

ஆனால் நக்கிப் பிழைக்கும், முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளிடம் இதை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.

ஆனாலும் எத்தனை வீழ்ச்சியைச் சந்தித்தாலும் இத்தகைய சாதகமான அரசியல் வெளிகளும், அதைக் கையாளும் மக்கள் தலைமைத்துவமும் வரலாற்றில் இயல்பாகவே உருவாகும் என்று நந்திக்கடல் கணித்துக் கூறுகிறது.

ஆனால் அதற்கு அது கூறும் முன் நிபந்தனை ஒன்றுதான், ‘வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அடுத்து வரும் தலைமுறைக்கு தெளிவான வரலாற்றை விட்டுச் செல்ல வேண்டும் – போதிக்க வேண்டும்’ என்கிறது.

நாம் தொடர்ந்து அதைச் செய்வோம். மீதியை வரலாறு எழுதும்.

இன்று கன்னியாவில் கூடி நிற்பவர்கள் சொல்லும் அரசியல் செய்தி இதுதான்.

http://www.velichaveedu.com/hn8787/

  • தொடங்கியவர்

கன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ;

ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன ?

கன்னியாவில், விகாரை நிர்மாணிக்குமாறு தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்பு செயலாளருக்கு தான் கூறவில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

mano_ganeshan.jpg

அத்துடன் இது பற்றி தான் விசாரிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் தமிழ் எம்.பிகளின் தூதுக்குழுவை சந்திக்க தன்னிடம் அவர் உடன்பட்டார். இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இவ்விவகாரம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவுடன் தொடர்பு கொண்டு தான் கூறியதாகவும் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/60604

 

  • தொடங்கியவர்

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கு வதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள போதிலும், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவையே ஆதரிக்க வேண்டிய நிலை மைக்கு கூட்டமைப்பு ஆளாகிய பின்ன ணியில் ஜனாதிபதியின் அரசியல் ரீதி யான கோபத்திற்குக் கூட்டமைப்பு ஆளாகவும் நேர்ந்துள்ளது. 

இந்த கோபத்தின் வெளிப்பாடாகவே திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று புராதன பிள்ளையார் கோவிலைத் தகர்த்து புதிய விகாரை ஒன்றை நிர்மா ணிப்பதற்கான நேரயடியான உத்தரவு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாள ருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/60581

சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் புனையும் போலி வரலாறுகளுக்கும் மகா பொய்வம்ச வரலாறுகளுக்கும் கண்முன் கன்னியாவில் நடக்கும் சம்பவங்கள் இன்னுமொரு ஆதாரமாகும்.

இந்த சிங்கள-பௌத்தப் பயங்கரவாதிகள் இலங்கை மண்ணைவிட்டு முற்று முழுதாக அப்புறப்படுத்தப்பட வேண்டிய கும்பல் என்பதற்கு இப்போது அரங்கேறும் சம்பவங்கள் போதுமானவை.

இது போன்ற ஆக்கிரமிப்புக்களை எதிர்கொள்ள இந்துக்கள் தங்களைப் போதுமான அளவு பலப்படுத்திக் கொள்ளவில்லை என்பது அவர்கள் காலங்காலமாக செய்துவரும் மாபெரும் தவறுகளில் ஒன்று.

இந்து மாமன்றம் எனப்படும் அமைப்பினர் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? தற்போது முதுகெலும்பில்லாத பேர்வழிகள் தான் இந்துமாமன்றத்தை ஆக்கிரமித்திருப்பதாக இந்துக்கள் கூறுகின்றனர்.

சிவசேனை என்ன செய்யப்போகிறார்கள்? சிதம்பரத்துக்கு கப்பல் விடுவது மட்டும் தான் அவர்கள் குறிக்கோளா?

இவர்களையெல்லாம் விட அந்த மண்ணிலிருந்து 50 வருட திக்கற்ற அரசியல் செய்யும், ஹிந்தியக் கயவர்களுக்கும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு உறுதுணையாக நிற்கும் சகுனி சம்மந்தன் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

களத்தில் துணிந்து போராடும் வீரத் தமிழர் அனைவருக்கும் வெற்றி கிட்டவேண்டும்!

  • தொடங்கியவர்

கட்டுமானப்பணிகளை நிறுத்த மாவட்ட செயலருக்கு பணிப்பு

கன்னியாவில் விகாரை கட்டும்படி தொல்பொருள் திணைக்களத்திற்கு எந்தப் பணிப்புரையும் வழங்கப்படவில்லையென்று ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து, விகாரை கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தி வைக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், திருகோணமலை மாவட்டச் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலய விவகாரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் மனோ கணேசன் நேற்று (17) உரையாடினார். இதன்போது அங்கு விகாரை கட்டும்படி தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்திற்குக் கடிதம் அனுப்புமாறு தனது இணைப்புச் செயலாளருக்குத் தான் கூறவில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தால், அதுபற்றி விசாரணைசெய்வதாகவும் ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதேநேரம், கன்னியா விவகாரமாகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவைச் சந்தித்துப் பேசவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாகக் கூறிய அமைச்சர் மனோ கணேசன், அதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, கன்னியா விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவிதமான விகாரை கட்டுமானப் பணிக்கும் கன்னியாவில் இடமளிக்க வேண்டாம் என்று திருகோணமலை மாவட்டச் செயலாளர் புஷ்பகுமாரவை அழைத்துப் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அங்கு விகாரை கட்டுவதற்கு தொல்பொருள் திணைக்களமும் பௌத்த பிக்குகளும் நடவடிக்ைக எடுப்பதாகக் கூறி, நேற்று முன்தினம் அங்குத் தமிழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் மரபுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தின்போது இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களால், கன்னியாவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்டது.

 

 
 

கன்னியாவில் சதுர வடிவில் ஏழு வெந்நீரூற்றுக் கிணறுகள் காணப்படுகின்றன. மூன்று முதல் நான்கடி வரை ஆழமான இந்தக் கிணறுகளின் வெப்ப நிலை, ஒன்றுக்ெகான்று மாறுபட்டதாக இருக்கும். பத்துப் பதினைந்து வாளிகள் அள்ளியதும் அவற்றில் நீர் இல்லாமல் போய் மீண்டும் ஊறும்.

இந்த வெந்நீரூற்றுக் கிணறுகள் இராமாயண யுகத்தில் இராவணன் தனது தாய்க்காக அமைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அங்கு பிரதேச சபை காட்சிப்படுத்தியுள்ள அறிவிப்புப் பலகையின்படி, அந்தக் கிணறுகள் இந்துக் கலாசாரத்துடன் தொடர்புபட்டவை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக பணிப்பாளர் பாலித்த வீரசிங்க,

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதன் மேலதிக பணிப்பாளர் பாளித்த வீரசிங்க,

"எமது திணைக்களம் தொல்பொருட்களை சமயம் மற்றும் கலாசார ரீதியாக பிரித்துப் பார்ப்பதில்லை. அனைத்து தொல்பொருட்களையும் பாதுகாப்பதே எமது நோக்கம்," என தெரிவித்தார்.

"தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ள இடங்களில் கன்னியா ஒரு இடம் மட்டுமேயாகும். நாம் இதுபோன்று ஜேத்தவனராமைய விகாரை, அபயகிரி விகாரை மற்றும் கோணேஸ்வரம் ஆலயத்தையும் புனரமைப்பு செய்யவுள்ளோம். கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் பாதுகாப்பு பணிகளை முன்னெடுத்தபோது அங்கிருந்த சில கொங்கிறீட் கற்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்காக திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு இன்னும் சில தினங்களுள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிடும்," என்றும் கூறினார். (வி)

https://www.thinakaran.lk/2019/07/18/உள்நாடு/37350/கட்டுமானப்பணிகளை-நிறுத்த-மாவட்ட-செயலருக்கு-பணிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தொல்லியல் திணைக்களத்தின் பிரச்சினை, ஒரு தமிழரோ முஸ்லிமோ கூட உயர் பதவிகளில் இல்லை. 2018 தகவலின் படி கிளிநொச்சி/யாழ் பிரதேச உயர் அலுவலர் கூட ஒரு சிங்களவர். தமிழர்களின் அறிவுக் கருவூலம் எனக் கருதப் படும் யாழ் பல்கலையில் வரலாற்றுத் திணைக்களம் இருக்கிறது. மூன்று பேராசிரியர்கள் இருக்கிறார்கள். திணைக்களத் தலைவரின் நிபுணத்துவம் தொல்லியல் துறை என்பதாக அவரது முனைவர் பட்ட ஆய்வு சொல்கிறது. இப்படி இருக்க,  தொல்லியல் துறையில்  அரச சேவையில் தலைமைப் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கூடிய பட்ட தாரிகளை உருவாக்க இயலவில்லையா அல்லது இனவாதத்தினால் புறக்கணிக்கப் படுகிறார்களா?

  • தொடங்கியவர்

கன்னியா விவகாரம் ; பொலிஸார் மீது குற்றம் சுமத்தும் பொது அமைப்புக்கள்

திருகோணமலை- கன்னியாவில் பொலிஸ் பாதுகாப்பில் சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் ஆகியோா் மீது எச்சில் தேனீா் ஊற்றப்படும்போது பொலிஸாா் பாா்த்துக் கொண்டிருந்ததாகவும், காடையா்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ அவா்கள் முயற்சிக்கவில்லை. எனவும் பொது அமைப்புக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா். 

kailai-athinam.gif

கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதை கண்டித்து அடையாள ஊா்வலம் ஒன்றையும் விசேட வழிபாடு ஒன்றையும் தென் கைலை ஆதீனம் ஒழுங்கமைத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்ற தடையுத்தரவை பெற்ற பொலிஸாா், கலக தடுப்பு பொலிஸாா் மற்றும் இராணுவத்தினரை களமிறக்கி மக்களுடைய வழிபாட்டு உாிமையை தடைசெய்திருந்தனா். 

இதன்போது பௌத்த பிக்கு ஒருவா் மற்றும் பொலிஸாா் முன்னிலையில் பிக்குவுடன் நின்ற காடையன் ஒருவன் தென் கைலை ஆதீனம் மீதும், பிள்ளையாா் ஆலய உாிமையாளா் கோகில ரமணி அம்மையாா் மீதும் எச்சில் தேனீரை ஊற்றி அவமானப்படுத்தியிருந்தாா். இந்த விடயத்தை கண்டித்து ஜக்ரத சைத்தன்ய சுவாமிகள் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளா்களை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அமைதியான முறையில் அடையாள ஊா்வலம் ஒன்றையும் விசேட வழிபாட்டையும் நடத்த தீா்மானித்திருந்தோம். இதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து பெருமளவு இளைஞா்கள் ஒன்றுகூடியிருந்தனா். இந்நிலையில் நீதிமன்ற தடையுத்தரவை காண்பித்து கன்னியா பகுதிக்குள் நுழைவதற்கு 500 மீற்றா் முன்பாகவே எங்களை தடுத்தனா். 

நாங்கள் மிக நாகாிகமான முறையில், அமைதியாக எங்களுடைய நிலைப்பாட்டையும், எங்களுடைய உாிமை மறுக்கப்படுவதையும் கூறினோம். மேலும் பொலிஸாா் காட்டிய நீதிமன்ற தடையுத்தரவில் பௌத்தா்களின் சைத்தியம் அமைந்திருந்த இடம் எனவும், அங்கே தமிழா்கள் ஆக்கிரமிப்பு செய்ய வருகிறாா்கள். எனவும் கூறப்பட்டிருந்தது. அதனை நாங்கள் நிராகாித்து எமது தரப்பு நியாயங்களை தெரிவித்தோம். 

ஆனாலும் எங்களுடைய கருத்துக்கள் அல்லது எங்கள் பக்க நியாயங்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை. இதன் பின்னா் எங்களோடு இருந்த இளைஞா்கள் சிலா் சிங்கள மக்கள் உள்ளே செல்லலாம், வழிபடலாம் என்றால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது எதற்காக? என கேள்வி எழுப்பியிருந்தனா். இதனையடுத்து தாங்கள் சிங்கள மக்களை உள்ளே விடவில்லை. வேண்டுமானால் இருவா் வாருங்கள் கட்டலாம் என தெரிவித்தனர். 

ஆனால் இருவரை அனுப்ப முடியாது. 5 போ் வருகிறோம் என கேட்டபோது அது நிராகாிக்கப்பட்டு தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் கோகில றமணி அம்மையாா் ஆகிய இருவரும் பொலிஸாா் தாம் பாதுகாப்பு வழங்குவதாக கூறியதன் அடிப்படையில் உள்ளே அழைத்து செல்லப்பட்டனா். இந்நிலையில் உள்ளே சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் கோகில றமணி அம்மையாா் ஆகியோா் 

இடையில் மறிக்கப்பட்டு அங்கிருந்த பௌத்த பிக்கு மற்றும் அவருடன் நின்றிருந்த சுமாா் 20ற்கும் மேற்பட்ட காடையா்களினால் கடுமையான வாா்த்தை பிரயோகங்களினால் திட்டி தீா்க்கப்பட்டுள்ளனா். பின்னா் வாகனத்தில் இருந்தவா்கள் மீது கன்னியா சுற்றாடலில் சிற்பி விற்பனை செய்யும் குமார என்ற காடையா் தான் குடித்துக் கொண்டிருந்த எச்சில் தேனீரை ஊற்றியுள்ளாா். இதனை அங்கிருந்த பொலிஸாா் நேரடியாக பாா்த்துக் கொண்டிருந்தனா். 

மேலும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டபோதும் அவா்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. பின்னா் தென் கைலை ஆதீனம் உள்ளிட்டவா்கள் வெளியே வந்து நடந்த விடயத்தை கூறியபோதும் மக்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேட்டனா். ஆனால் தென் கைலை ஆதீனத்தை வைத்தியசாலையில் சேருங்கள் அல்லது முறைப்பாடு கொடுங்கள் என தெரிவித்ததோடு, அங்கிருந்து ஒதுங்கி நின்றுவிட்டாா்கள். 

எனவே இவ்வாறான சம்பவத்தை கண்டிப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் தொடா்பாக இந்து சமய தலைவா்கள் ஒன்றிணைந்து இந்தியாவுடன் பேசுவதற்கும், இந்தியாவிலுள்ள இந்து சமய அமைப்புக்களுடன் பேசுவதற்கும் தீா்மானித்துள்ளோம். அதேபோல் இந்து சமய அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்கும் நாங்கள் தீா்மானித்துள்ளோம். 

மேலதிகமாக இலங்கையில் இந்து சமய உயா்பீடம் ஒன்றை உருவாக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றனா். 

https://www.virakesari.lk/article/60637

On 7/18/2019 at 11:59 PM, ampanai said:

இடையில் மறிக்கப்பட்டு அங்கிருந்த பௌத்த பிக்கு மற்றும் அவருடன் நின்றிருந்த சுமாா் 20ற்கும் மேற்பட்ட காடையா்களினால் கடுமையான வாா்த்தை பிரயோகங்களினால் திட்டி தீா்க்கப்பட்டுள்ளனா். பின்னா் வாகனத்தில் இருந்தவா்கள் மீது கன்னியா சுற்றாடலில் சிற்பி விற்பனை செய்யும் குமார என்ற காடையா் தான் குடித்துக் கொண்டிருந்த எச்சில் தேனீரை ஊற்றியுள்ளாா். இதனை அங்கிருந்த பொலிஸாா் நேரடியாக பாா்த்துக் கொண்டிருந்தனா். 

மேலும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டபோதும் அவா்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. பின்னா் தென் கைலை ஆதீனம் உள்ளிட்டவா்கள் வெளியே வந்து நடந்த விடயத்தை கூறியபோதும் மக்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேட்டனா். ஆனால் தென் கைலை ஆதீனத்தை வைத்தியசாலையில் சேருங்கள் அல்லது முறைப்பாடு கொடுங்கள் என தெரிவித்ததோடு, அங்கிருந்து ஒதுங்கி நின்றுவிட்டாா்கள். 

இந்த விடயத்தில் சிங்கள-போலீஸ் காடையர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தெரிந்திருந்தாலும்,  அதே சிங்கள-போலீஸ் காடையர்களின் போலீஸ் நிலையத்தில் எழுத்து மூலமான முறைப்பாட்டை வழங்க வேண்டும், வழங்கினால் மட்டுமே தமிழர் தரப்பில் வலுவான சட்டரீதியான ஆதாரம் ஒன்று கிடைக்கும் என்ற அடிப்படை அறிவற்றவர்களாக இந்த இந்து சமயத் தலைவர்கள் இருப்பது மிகவும் கவலையானது.

அதை விடுத்தது வெறும் அறிக்கைகளை விடுவது சட்டரீதியான நடவடிக்கைகள் எதற்குமே உதவப்போவதில்லை. இது போன்ற தவறுகளை அடிப்படை அறிவற்ற தமிழ்த் தலைவர்கள் காலம் காலமாக செய்து வருகின்றனர்.

நீண்ட நித்திரையில் இருந்த நாடுகடந்த அரசு எனக் கூறிக்கொள்ளும் அறிவிலிகளும் அண்மையில் ஐநா. பிரதிநிதி இலங்கை சென்றவுடன் அவர் கன்னியாவுக்கும், நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கும் செல்ல வேண்டும் என்று தமிழில் அறிக்கை விட்டு மகிழ்ந்ததை மறக்க முடியாது. அதனால் எந்தப் பயனும் கிட்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

"தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்வத்தினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்"

கன்னியா போராட்டத்தின் போது தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்ட சம்வத்தினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தமது கண்டன அறிக்கயினை இன்று வெளியிட்டுள்ளனர்.

கன்னியா போராட்டத்தின் போது ஆதீன சுவாமிகள் மீது  தேநீர்  வீசி தாக்குதல் நடத்திய சம்பவமானது கடும் கண்டனத்திற்குரியது.

same.jpg

இந்து சமயத்திலே உயர் நிலையில்  இருக்கும் எமது சுவாமி அவர்கள் மீது நடாத்தப்பட்ட இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு எமது மதத்தின் தலைவர்களுகளுக்குரிய கௌரவத்தினயும் உரிய முறையில் வழங்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

 சாத்வீகமான முறையில் கன்னியாவின் தமிழர் பூர்வீகத்தை பாதுகாக்கும் போராட்டத்தை வழி நடத்திய  ஆன்மீக  தலைவர்களில் ஒருவராகிய வணக்கத்துக்குரிய தென் கைலை ஆதீனத்தின் மீது தேநீர் வீச்சினை மேற்கொண்டவர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையுமில்லை என நாம் அறிகின்றோம்.

 இவ் கன்னியா போராட்டத்தை அகிம்சை முறையில் மேற்கொண்ட மக்களை அடக்க முற்பட்டு வருகின்றனர்.

 அனைவரும் ஒன்றிணைந்து எமது சமய தலைவர்களில் ஒருவரும் தமிழர்களின் பூர்வீக கன்னியாவை மீட்கும் போராட்டத்தின் முதன்மை வழி காட்டியுமான தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாருக்கு இழைக்கப்பட்ட கொடுஞ் செயலுக்கு நீதி வேண்டும் என மன்னார் மாவட்ட  இந்துக் குருமார் பேரவை தமது கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/60813

On 7/17/2019 at 10:29 PM, போல் said:

இந்து மாமன்றம் எனப்படும் அமைப்பினர் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? தற்போது முதுகெலும்பில்லாத பேர்வழிகள் தான் இந்துமாமன்றத்தை ஆக்கிரமித்திருப்பதாக இந்துக்கள் கூறுகின்றனர்.

அவர்களின் இணைய தளத்துக்கு (hinducongress.lk/) போய் பார்த்த செத்துப்போன ஆக்களுடைய பெயர்கள் தான் நிறைய இருக்கு.

ஒருவேளை செத்த ஆக்களுடைய பெயர்களைப் போட்டு பெரும் கொள்ளை அங்க நடக்குதோ தெரியல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.