Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேலியோ, மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் குறிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 7/30/2019 at 8:02 AM, ஏராளன் said:

கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?

https://doctorarunkumar.com/paleo-lchf-diet/fat-cholesterol-heart-disease-hypothesis/

மருத்துவர் அருண் ஆரம்பத்தில் சொன்ன எல்லாவற்றையும் தனது மருத்துவப் பாடப் புத்தகத்தில் இருந்து சரியாக எடுத்து விடுகிறார், கடைசியில் ஒரு ஸ்லைட் போடுகிறார்: இருநூறு காரணங்கள் வரை குருதிக் கலனில் கொழுப்புப் படிய இருக்குதாம், அதில் அதிக கொழுப்பு என்பது கடைசிக் காரணமாம்! இந்தியாவில் பணம் வாங்கிக் கொண்டு டிகிரி தரும் போலி மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்ததன் விளவு தான் இப்படியான அரைகுறை மருத்துவர்கள் கிளம்பி மக்களுக்கு தங்கள் நம்பிக்கைகளை ஆப்பாக இறுக்கக் காரணம் என்று நினைக்கிறேன். நிரம்பிய கொழுப்பு (saturated fat) கொலஸ்ட்ரோலை மக்களில் அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, அது எப்படி அதிகரிக்கிறது என்றும் நிறைய ஆய்வுகள் செய்து முடிந்த முடிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. இவரோ "இதையெல்லாம் மருத்துவர்கள் ஆராயவில்லை" என்கிறார். முகனூலில் இருந்து தான் இவர் மருத்துவம் படித்திருக்கிறார் போல!   

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், உங்களை முகம் சுழிக்க வைத்தமைக்கு மன்னிக்கவும். ஒரு மருத்துவர் அண்ணளவாக 3000 மருத்துவ ஆய்வு வெளியீடுகளைத் தந்த Framingham Hearst Study ஐ எட்டிக் கூடப் பார்க்காதவர் போல பேசியதால் வந்த கோபமே அது. இனித் தவிர்க்கிறேன். ஆனால் இதய குருதிக் கலன் நோய்கள் உங்களை 10 அல்லது 30 ஆண்டுகளில் தாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் காரணிகளை பாரியளவான மக்கள் தொகையில் ஆய்வு செய்து கண்டறிந்த முடிவுகளை நீங்களே நேரடியாகப்  பார்க்கலாம், இணைப்பு இதோ: 

https://www.framinghamheartstudy.org/fhs-risk-functions/cardiovascular-disease-10-year-risk/

https://www.framinghamheartstudy.org/fhs-risk-functions/cardiovascular-disease-30-year-risk/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2019 at 11:12 PM, Justin said:

முகச்சுழிப்பல்ல குழப்பம்(confused), நன்றியண்ணை உங்கள் தெளிவுபடுத்தலுக்கு.
நான் இவற்றை இங்கே இணைப்பது உங்களை போன்றோரின் கருத்துக்களை அறிவதற்கே.
சிவப்பு இறைச்சி ஆபத்து என்று கூறினீர்கள், ஆனால் சைவ/மரக்கறி உணவு எடுப்போருக்கும் இதய வருத்தம் வருகுதே?

Edited by ஏராளன்
something missed

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

முகச்சுழிப்பல்ல குழப்பம்(confused), நன்றியண்ணை உங்கள் தெளிவுபடுத்தலுக்கு.
நான் இவற்றை இங்கே இணைப்பது உங்களை போன்றோரின் கருத்துக்களை அறிவதற்கே.
சிவப்பு இறைச்சி ஆபத்து என்று கூறினீர்கள், ஆனால் சைவ/மரக்கறி உணவு எடுப்போருக்கும் இதய வருத்தம் வருகுதே?

ஏராளன், சிவப்பு இறைச்சி இதய நோயை அதிகரிக்கும் என்றால் அதன் அர்த்தம் அடிப்படையாக இருக்கும் இதய நோய்க்குரிய ஆபத்தை சில மடங்குகளால் அதிகரிக்கும் என்பதே. இறைச்சியே சாப்பிடாமல் நிரம்பிய கொழுப்புடைய மரக்கறி உணவுகளைச் சாப்பிட்டாலும் அதேயளவு இதய நோய் ஆபத்து வரும். தேங்காயெண்ணை ஆரோக்கியமானது என்ற புரளி முகநூல் எம்மிடையே பிரபலமான பின்னர் பரவி வரும் ஒரு பொய்யான தகவல். தேங்காய் பாலில் அல்லது எண்ணையில் ஆரோக்கியமான காய்கறிகளைச் சமைத்து உண்டால் சிவப்பு இறைச்சிக்கு நிகரான இதய நோய் ஆபத்து உருவாகும். மேலே நான் தந்த இணைப்பில் இதய நோய்க்குரிய முகாந்திரக் காரணிகள் பட்டியலாக இருக்கின்றன. முதல் காரணி ஒருவரின் வயதும் பாலும்: வயதான ஆண்களில் இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகம். வயதை, பாலினத்தை நாம் மாற்ற இயலாதல்லவா? அதனால் தான் மாற்றக் கூடிய விடயங்களான உணவு முறையை வாழ்க்கை முறையை நாம் மாற்றுவதால் எமது அடிப்படையான இதய நோய் ஆபத்தைக் குறைக்கலாம்! 

சுருக்கமாகச் சொன்னால்: கொழுப்பு மட்டுமே இதய நோய்க்குக் காரணம் அல்ல, என்ற கூற்று அடிப்படை உயிரியல் ரீதியில் தவறு. புகை பிடித்தல், அல்ககோல், மனப்பதட்டம், அதிக உடற்பருமன் இவையெல்லாமே உடலில் அதிக கொழுப்பைச் சேர்ப்பிப்பதாலும் அழற்சியைக் கூட்டுவதாலும் double hit ஆக குருதிக்கலன்களைத் தாக்குவதே இதய நோயின் அடிப்படை என்பது நன்கு நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இதை அறியாத மருத்துவர்களின் மருத்துவ அறிவில் ஏதோ பாரிய பிழை இருக்கிறது அல்லது அவர்களுக்கு வேறு உள்நோக்கம் இருக்கிறது.   

மாரடைப்பு காரணங்கள், மரக்கறி மட்டுமே சாப்பிடுகின்றவர்களுக்கும் ஏன் மாரடைப்பு வருகின்றது மற்றும் சிவப்பு இறைச்சி யின் பங்கு பற்றி இதிலும் கொஞ்சம் அலசியிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நாங்கள் தே.எண்ணெயும்,தேங்காய்ப்பாலும் தானே சாப்பிட்டு வளர்ந்தனாங்கள்...இங்கு உள்ள சுப்ப மார்க்கட்டில் தேங்காய் சொட்டு எல்லாம் விக்கினம் 
 
15 hours ago, ரதி said:

ஊரில் நாங்கள் தே.எண்ணெயும்,தேங்காய்ப்பாலும் தானே சாப்பிட்டு வளர்ந்தனாங்கள்...இங்கு உள்ள சுப்ப மார்க்கட்டில் தேங்காய் சொட்டு எல்லாம் விக்கினம் 

வெள்ளைக்காரருக்கு தேங்காயை துருவி சமைக்க/பயன்படுத்த தெரியாது. அதனால் தேங்காயை வாங்கி தேங்காய் சொட்டை சாப்பிடுவார்கள். அதனால் தேங்காய் சொட்டாகவே விற்கிறார்கள் போலும்.

காய்ந்த தேங்காய்ப்பூவும் விற்பார்கள். கேக்/வேறு எதற்கும் பயன்படுத்துவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டுக்களுக்கு எனது கருத்துகளை நீக்குவதில் அவ்வளவு ஆசையோ? நான் உள்ளதை தானே சுட்டிக்காட்டினேன். 😭

On 8/1/2019 at 7:03 PM, Justin said:

நிரம்பிய கொழுப்பு (saturated fat) கொலஸ்ட்ரோலை மக்களில் அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, அது எப்படி அதிகரிக்கிறது என்றும் நிறைய ஆய்வுகள் செய்து முடிந்த முடிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. இவரோ "இதையெல்லாம் மருத்துவர்கள் ஆராயவில்லை" என்கிறார். முகனூலில் இருந்து தான் இவர் மருத்துவம் படித்திருக்கிறார் போல!   

அவர் சொன்னது saturated fat அதிகமாக எடுக்கும் பல நாடுகளில் குறைந்த மாரடைப்பு, குறைவாக எடுக்கும் பல நாடுகளில் அதிக மாரடைப்பு உள்ளது. அவை பற்றி மருத்துவ உலகம் ஆராயவில்லை என. (நிமிடம் 29.03 - 30.16)

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

ஊரில் நாங்கள் தே.எண்ணெயும்,தேங்காய்ப்பாலும் தானே சாப்பிட்டு வளர்ந்தனாங்கள்...இங்கு உள்ள சுப்ப மார்க்கட்டில் தேங்காய் சொட்டு எல்லாம் விக்கினம் 
 
ரதி,

நிரம்பிய கொழுப்பு  உடலில் HDL வகை கொழுப்பைக் குறைத்து LDL வகையைக் கூட்டுவதால் இதய நோய்க்கு வழி வகுக்கும் என்பது மேற்கு  நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளால் கண்டறியப் பட்டிருக்கிறது. தேங்காயில் 80% இற்கும் அதிகமான கொழுப்பு நிரம்பிய கொழுப்பு. எனவே இறைச்சி, பால், முட்டை மஞ்சட் கரு என்பவை போல இதய நலனுக்கு ஒவ்வாதது என்பது விஞ்ஞான ஆய்வை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமுறைகளின் சிபார்சு.

தேங்காய் உடலுக்கு நல்லது என்ற குழப்பகரமான கருத்திற்கு,  சில ஆதிவாசி மக்கள் கூட்டங்களில் 1980 , 90 களில் நடந்த ஆய்வுகளின் (observational studies) முடிவுகள் காரணம். மிகவும் மெலிந்த தோற்றமுடைய பொலினேசியன் ஆதுவாசிகளில் தேங்காய் பிரதான உணவாக இருந்தாலும் இதய நோய், மூளை இரத்த அடைப்பு என்பன இருக்கவில்லை என்ற அவதானத்தைத் தான் இந்த ஆய்வுகள் செய்தன. இந்த ஆதிவாசிகள் தேங்காயோடு சேர்த்து வேறெதை உணவில் சேர்க்கிறார்கள், எவ்வளவு உடலுழைப்பில் ஈடுபடுகிறார்கள், எந்த விதமான மனப்பதட்ட நிலையில் வாழ்கிறார்கள் போன்ற இதய நலனுடன் தொடர்புடைய எந்த தகவல்களும் ஆராயப் படவில்லை. மேலும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஆதிவாசிகளின் ஜீன் மாற்றங்களும் ஆராயப் படவில்லை!. எனவே இந்த ஆதிவாசிகளின் ஆரோக்கியம் தேங்காய் சாப்பிட்டதால் வந்ததா அல்லது வேறு காரணிகளோடு இணைக்கப் படும் போது தேங்காயின் நிரம்பிய கொழுப்பின் தீமைகள் மறைந்தனவா ஆகிய கேள்விகளுடன் இந்த ஆய்வுகள் முற்றுப் பெற்று விட்டன.

இதே போன்ற நிலையொன்று, உடலுழைப்பு, அதிக வெப்பமும் வியர்வையும் ஆகியவை சிறி லங்காவில் எங்களைத் தேங்காயின் தீமைகளில் இருந்து காத்திருக்கலாம். உழைப்புக் குறைவான வடதுருவ நாடுகளில் தேங்காய் உணவில் சேர்க்கப் படுவது சிவப்பு இறைச்சி போல ஆபத்தானது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

நியாண்டர் செல்வனின் புத்தகம்:    இந்த முற்றுப் பெறாத ஆய்வுகளைத் தங்கள் கற்பனைகளால் முற்றாக்கி தேங்காயை சர்வ ரோக நிவாரணியாக மாற்றும் வேலையை நியாண்டர் செல்வன் போன்ற முகநூல் விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள். நியாண்டர் செல்வன் போன்ற ஆட்களின் கருத்துகளுக்கு (மேலே ஏராளன் இணைத்த நகைச்சுவைப் புத்தகத்தில் இருப்பது போல!) எந்த விஞ்ஞான ரீதியான ஆதாரமும் இல்லை! உதாரணமாக, தேங்காயில் இருந்து வரும் கொழுப்பு உடலில் சேராது அழிக்கப் பட்டு விடும் என்கிறார் நியாண்டர் செல்வன். இதை ஆராய்ந்து கண்டு பிடித்தது யார் என்று தெரியவில்லை! அப்படியொரு கொழுப்பைக் கண்டு பிடித்தவர் மருத்துவ நோபல் பரிசு வேண்டாமென்று முகநூலில்  ஒளித்திருப்பது துயரமானது! ஏனெனில் உணவில் சுவையையும் கூட்டி, கொழுப்பில் மட்டுமே கரையும் விற்றமின்களையும் உடலுக்கு வழங்க வேண்டுமெனில் இப்படி உடலில் தங்காத கொழுப்பு வகை ஒரு சிறந்த வரப்பிரசாதமாக மாறும்.   

இதய குருதிக்கலன் நோய்கள் , கொழுப்புணவுகள் தொடர்பான நம்பிக்கையான ஆய்வின் அடிப்படையிலான தகவல்களை கீழே உள்ள இணைப்பில் சென்று பெறுங்கள்:

https://www.heart.org/

20 minutes ago, Justin said:

நிரம்பிய கொழுப்பு LDL ஐ அதிகரிப்பதுடன் HDL ஐயும் அதிகரிக்கிறதாமே. (குறைந்தளவிலாக இருக்கலாம்)

LDL இதய நோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் அதே வேளை HDL அதை குறைக்கிறது எனவும் கூறுகிறார்கள்.

தவிர சிறிய பருமனுள்ள LDL தான் அதிக ஆபத்தை கொண்டது, நிரம்பிய கொழுப்பு LDL இன் பருமனை அதிகரிப்பதால் அது ஆபத்தை குறைக்கிறது என்றும் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

நிரம்பிய கொழுப்பு LDL ஐ அதிகரிப்பதுடன் HDL ஐயும் அதிகரிக்கிறதாமே. (குறைந்தளவிலாக இருக்கலாம்)

LDL இதய நோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் அதே வேளை HDL அதை குறைக்கிறது எனவும் கூறுகிறார்கள்.

தவிர சிறிய பருமனுள்ள LDL தான் அதிக ஆபத்தை கொண்டது, நிரம்பிய கொழுப்பு LDL இன் பருமனை அதிகரிப்பதால் அது ஆபத்தை குறைக்கிறது என்றும் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்தப் பொறிமுறை பற்றி நான் அறியவில்லை. தேடிப் பார்க்கிறேன். ஆனால் தற்போதைய LDL, HDL பற்றிய மருத்துவ விளக்கம் இது தான்:

1. LDL  ஈரலில் இருந்து உடல் இழையங்களை நோக்கி கொழுப்பைக் காவிச்செல்வதாலும் அதிக triglycerides (TG) என்ற கொழுப்பை தன்னுள் வைத்திருப்பதாலும் குருதிக் கலன்களில் திட்டுகள் ஏற்பட ஒரு காரணியாகிறது.

 2. HDL உடல் இழையங்களில் இருந்து கொழுப்பை ஈரலை நோக்கி எடுத்துச் செல்வதாலும் TG குறைவாகக் கொண்டதாலும் குருதிக் கலன்களில் திட்டுகள் ஏற்படாமல் குறைக்கிறது.

 3. இந்த TG என்ற கொழுப்பு வகை உடலில் பெரும்பாலான கொழுப்பு காணப்படும் வடிவம். இது அதிகரிப்பது குருதிக்கலன் நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இந்த TG ஆபத்தில்லாத உடலுக்கு அவசியமான கொழுப்பு வகை என்று சில பேலியோ இணையங்களில் மிகவும் தவறான தகவலைக் குறிப்பிடுகிறார்கள்.

கீழே உடலின் கொழுப்பு வகைகளின் அடிப்படை பற்றிய ஒரு இணைப்பு தருகிறேன். ஆர்வமுள்ளோர் வாசித்தறியுங்கள். குறிப்பாக அட்டவணை 32.1 இனைப் பாருங்கள்.

https://www.ncbi.nlm.nih.gov/books/NBK351/

 வார இறுதியில் எனது தொடரில் மேலதிக தகவல்கள் தருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎8‎/‎5‎/‎2019 at 4:12 PM, Justin said:

ரதி,

நிரம்பிய கொழுப்பு  உடலில் HDL வகை கொழுப்பைக் குறைத்து LDL வகையைக் கூட்டுவதால் இதய நோய்க்கு வழி வகுக்கும் என்பது மேற்கு  நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளால் கண்டறியப் பட்டிருக்கிறது. தேங்காயில் 80% இற்கும் அதிகமான கொழுப்பு நிரம்பிய கொழுப்பு. எனவே இறைச்சி, பால், முட்டை மஞ்சட் கரு என்பவை போல இதய நலனுக்கு ஒவ்வாதது என்பது விஞ்ஞான ஆய்வை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமுறைகளின் சிபார்சு.

தேங்காய் உடலுக்கு நல்லது என்ற குழப்பகரமான கருத்திற்கு,  சில ஆதிவாசி மக்கள் கூட்டங்களில் 1980 , 90 களில் நடந்த ஆய்வுகளின் (observational studies) முடிவுகள் காரணம். மிகவும் மெலிந்த தோற்றமுடைய பொலினேசியன் ஆதுவாசிகளில் தேங்காய் பிரதான உணவாக இருந்தாலும் இதய நோய், மூளை இரத்த அடைப்பு என்பன இருக்கவில்லை என்ற அவதானத்தைத் தான் இந்த ஆய்வுகள் செய்தன. இந்த ஆதிவாசிகள் தேங்காயோடு சேர்த்து வேறெதை உணவில் சேர்க்கிறார்கள், எவ்வளவு உடலுழைப்பில் ஈடுபடுகிறார்கள், எந்த விதமான மனப்பதட்ட நிலையில் வாழ்கிறார்கள் போன்ற இதய நலனுடன் தொடர்புடைய எந்த தகவல்களும் ஆராயப் படவில்லை. மேலும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஆதிவாசிகளின் ஜீன் மாற்றங்களும் ஆராயப் படவில்லை!. எனவே இந்த ஆதிவாசிகளின் ஆரோக்கியம் தேங்காய் சாப்பிட்டதால் வந்ததா அல்லது வேறு காரணிகளோடு இணைக்கப் படும் போது தேங்காயின் நிரம்பிய கொழுப்பின் தீமைகள் மறைந்தனவா ஆகிய கேள்விகளுடன் இந்த ஆய்வுகள் முற்றுப் பெற்று விட்டன.

இதே போன்ற நிலையொன்று, உடலுழைப்பு, அதிக வெப்பமும் வியர்வையும் ஆகியவை சிறி லங்காவில் எங்களைத் தேங்காயின் தீமைகளில் இருந்து காத்திருக்கலாம். உழைப்புக் குறைவான வடதுருவ நாடுகளில் தேங்காய் உணவில் சேர்க்கப் படுவது சிவப்பு இறைச்சி போல ஆபத்தானது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

நியாண்டர் செல்வனின் புத்தகம்:    இந்த முற்றுப் பெறாத ஆய்வுகளைத் தங்கள் கற்பனைகளால் முற்றாக்கி தேங்காயை சர்வ ரோக நிவாரணியாக மாற்றும் வேலையை நியாண்டர் செல்வன் போன்ற முகநூல் விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள். நியாண்டர் செல்வன் போன்ற ஆட்களின் கருத்துகளுக்கு (மேலே ஏராளன் இணைத்த நகைச்சுவைப் புத்தகத்தில் இருப்பது போல!) எந்த விஞ்ஞான ரீதியான ஆதாரமும் இல்லை! உதாரணமாக, தேங்காயில் இருந்து வரும் கொழுப்பு உடலில் சேராது அழிக்கப் பட்டு விடும் என்கிறார் நியாண்டர் செல்வன். இதை ஆராய்ந்து கண்டு பிடித்தது யார் என்று தெரியவில்லை! அப்படியொரு கொழுப்பைக் கண்டு பிடித்தவர் மருத்துவ நோபல் பரிசு வேண்டாமென்று முகநூலில்  ஒளித்திருப்பது துயரமானது! ஏனெனில் உணவில் சுவையையும் கூட்டி, கொழுப்பில் மட்டுமே கரையும் விற்றமின்களையும் உடலுக்கு வழங்க வேண்டுமெனில் இப்படி உடலில் தங்காத கொழுப்பு வகை ஒரு சிறந்த வரப்பிரசாதமாக மாறும்.   

இதய குருதிக்கலன் நோய்கள் , கொழுப்புணவுகள் தொடர்பான நம்பிக்கையான ஆய்வின் அடிப்படையிலான தகவல்களை கீழே உள்ள இணைப்பில் சென்று பெறுங்கள்:

https://www.heart.org/

அவித்த முட்டை உடம்புக்கு நல்லது என்று சொல்லினம்...சில பேர் காலை சாப்பாட்டுக்கு தனிய இரு அவித்த முட்டைகள் மட்டும் சாப்பிடினம்[டயட் இருக்காதவர்கள்] ...டொக்டர்மாரும் சாப்பிட சொல்லி ரெகமண்ட்  பண்ணினதாகவும் சொல்லினம்...அவர்களுள் சலரோகக்காரரும்,இருதய நோயாளிகளும் அடக்கம் 

கடந்த வாரம் இரு மரணங்கள் என் நண்பர்களது உறவுகள் வட்டத்தில் நிகழ்ந்தன.

ஒருவர் இறந்தது 44 வயதில், மற்றவர் இறந்தது 42 வயதில்.

முதலாமவர், மரக்கறி உணவை மட்டுமே உட் கொள்கின்றவர் (Pure Vegetarian), புகை மற்றும் மது என்பனவற்றை ஒருக்காலும் அருந்தாதவர், கடும் தெய்வ பக்தி நிரம்பியவர். கொழும்பில் வசிப்பவர், காலையில் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த பின் நெஞ்சு வலி வந்து இருக்கு. அம்மாவிடம் மிளகாய் அவிச்சு தரச்சொல்லி விட்டு சாய்ந்தவர் தான். பின்னர் எழுந்திருக்கவில்லை. களுபோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று இருக்கினம். அவர் ஆஸ்பத்திரிக்கு வர முன்னரே இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர். மரணத்துக்கு காரணம் மாரடைப்பு.

கடும் கண்டிப்பான பெற்றோர்கள் அவரது குடும்ப வாழ்விலும் தலையிட்டமையால் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் என்றும் மன அழுத்தம் / Stress என்பனதான் காரணமாக இருக்கலாம் என நண்பர்கள் அபிப்பிரயப்படுகின்றனர். 4 வயதில் மகளுமுண்டு

இரண்டாமவருக்கு எந்த இதய நோய்க்கான அறிகுறிகளும் இருக்கவில்லை. ஆனால் மிக அதிகளவில் மது அருந்துகின்றவர் (Heavy alcoholic) என்று என் நண்பன் சொல்கின்றான். முதலாமவர் போலவே இலேசான நெஞ்சு வலி வந்து முதலாவது மாரடைப்பிலேயே சடுதியாக இறந்து விட்டார். கனடாவில் தான் வசித்தவர். மனைவி பிள்ளகள் உண்டு. எவரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

இந்த இருவரும் ஒருவருக்கு ஒருவர்  நேரெதிரான வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் பழக்கங்களையும் கொண்டவர்கள். 45 வயதுக்குள் மாரடைப்பால் இறந்து விட்டனர்.

மாரடைப்புக்கு இவை தான் காரணங்கள் என பட்டியலிட்டு அவை அனைத்தையும் விலக்கி வைத்தோ அல்லது மாரடைப்பை தடுக்கும் முறைகள் என சொல்லப்படுபனவற்றை பட்டியலிட்டு அவற்றை கடைபிடித்தோ மாரடைப்பை தடுக்க முடியாது என்பது தான் நான் கண்ட உண்மை. இது புற்று நோயுக்கும் பொருந்தும்.

எல்லாவற்றையும் மிதமான அளவுகளில் (Moderate level) செய்து விட்டு வாழும் வரைக்கும் வாழ்ந்து விட்டுப் போக வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

உங்கள் நிலைப்பாடு சரியானதுதான் .......

ஆனால் இதுவும் எமது மதங்கள் பேய் பிசாசுகள் கதைகள்போல 
இன்னமும் சரியான ஆய்வை செய்யவில்லை என்பதுதான் உண்மை.

மேலே ஜஸ்டின் அவர்கள் போட்டு தாக்குவதுபோல மேலோட்ட்மாகவே இருக்கும் 
உள் நோக்கிய பார்வைகள் மிக மிக குறைவு.
அமெரிக்காவை பொறுத்தவரை யாரையும் உண்மையை பேச விட மாட்டார்கள் என்பதுதான் 
உண்மை. அதையும் மீறி யாரும் பேசினால் கான்ஸிபிரசி தியரி என்றுவிடுவார்கள்
எல்லாம் சரியாகிடும். 

உணவை தவிர்த்து விட்டு 
நீங்கள் உங்கள் வீடை ஒருமுறை சுற்றி பாருங்கள் எவ்வளவு கெமிக்கல்களை நாம் 
புதிதாக மிக சாதரணமாக பாவிக்க தொடங்கி இருக்கிறோம் என்று. 

கோதுமை மாவில் பெரிதாகவே பிலீச்ட் பிளாவர் என்று எழுதி இருக்கு 
நாம் ஆடைகளை துவைக்க பாவிக்கும் அதே பிலீச்ட் தான் அங்கும் பாவிக்கிறார்கள் என்பதை 
மூளைக்கு தெரிந்தாலும்   மனது புட்டின் மீது உள்ள மோகத்தில் மறுக்கிறது. 

மரக்கறி உண்பவர்கள் அதிகம் இராசயனம் உட்க்கொள்ள சாத்தியம் உண்டு 
இவை உள்ளே என்ன விளைவை உருவாக்குகிறது என்பது சரியாக தெரியவில்லை. 
சரியாக தெரிந்தவர்கள் வாய் திறக்க போவதும் இல்லை.

இங்கு உங்களை போல ஐடி வேலை செய்யும் பல இந்தியர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து இருக்கிறார்கள்  நீங்களும் வாசித்து இருப்பீர்கள் மன அழுத்தம் உடலை எவ்வளவு பாதிக்கும் என்று 
எந்த  அளவை வைத்து அளப்பது?  

இந்த குழப்பவாதங்கள் நச்சு உணவகளை விற்கும் பாரிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது 
வரும் லாபத்தில் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கிவிட்டு தொடர கூடியதாக இருக்கிறது. 

நமக்குத்தான் இங்கு வேறு வழியில்லை என்றால் 
ஊரிலும் சோம்பேறித்தனமும்  இரசாயன உணவும் சாதாரண ஒன்றாக மாறிக்கொண்டு இருக்கிறது.

உடற்பயிற்சியால் இவற்றை கொஞ்சம் குறைக்கலாம் என்று நான்  நம்புகிறேன் 
கரணம் ஒன்று உடல் உறுதியாக இருக்குறது  மற்றது நாம் குறைவாக சாப்பிடுகிறோம் 
தேவை இல்லாது மது அருந்த மனம் வாராது இப்படி சில நண்மைகளும். உடலில் சக்தி இருப்பதாலோ என்னமோ சோம்பேறித்தனமும் குறைகிறது.

ஊரில் பிராமணர்கள் அதிகமாக மரக்கறிதானே சாப்பிடுகிறார்கள் 
அவர்கள் உடல் வடிவம் பெரிதாக கெல்தியாக தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

கடந்த வாரம் இரு மரணங்கள் என் நண்பர்களது உறவுகள் வட்டத்தில் நிகழ்ந்தன.

ஒருவர் இறந்தது 44 வயதில், மற்றவர் இறந்தது 42 வயதில்.

முதலாமவர், மரக்கறி உணவை மட்டுமே உட் கொள்கின்றவர் (Pure Vegetarian), புகை மற்றும் மது என்பனவற்றை ஒருக்காலும் அருந்தாதவர், கடும் தெய்வ பக்தி நிரம்பியவர். கொழும்பில் வசிப்பவர், காலையில் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த பின் நெஞ்சு வலி வந்து இருக்கு. அம்மாவிடம் மிளகாய் அவிச்சு தரச்சொல்லி விட்டு சாய்ந்தவர் தான். பின்னர் எழுந்திருக்கவில்லை. களுபோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று இருக்கினம். அவர் ஆஸ்பத்திரிக்கு வர முன்னரே இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர். மரணத்துக்கு காரணம் மாரடைப்பு.

கடும் கண்டிப்பான பெற்றோர்கள் அவரது குடும்ப வாழ்விலும் தலையிட்டமையால் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் என்றும் மன அழுத்தம் / Stress என்பனதான் காரணமாக இருக்கலாம் என நண்பர்கள் அபிப்பிரயப்படுகின்றனர். 4 வயதில் மகளுமுண்டு

இரண்டாமவருக்கு எந்த இதய நோய்க்கான அறிகுறிகளும் இருக்கவில்லை. ஆனால் மிக அதிகளவில் மது அருந்துகின்றவர் (Heavy alcoholic) என்று என் நண்பன் சொல்கின்றான். முதலாமவர் போலவே இலேசான நெஞ்சு வலி வந்து முதலாவது மாரடைப்பிலேயே சடுதியாக இறந்து விட்டார். கனடாவில் தான் வசித்தவர். மனைவி பிள்ளகள் உண்டு. எவரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

இந்த இருவரும் ஒருவருக்கு ஒருவர்  நேரெதிரான வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் பழக்கங்களையும் கொண்டவர்கள். 45 வயதுக்குள் மாரடைப்பால் இறந்து விட்டனர்.

மாரடைப்புக்கு இவை தான் காரணங்கள் என பட்டியலிட்டு அவை அனைத்தையும் விலக்கி வைத்தோ அல்லது மாரடைப்பை தடுக்கும் முறைகள் என சொல்லப்படுபனவற்றை பட்டியலிட்டு அவற்றை கடைபிடித்தோ மாரடைப்பை தடுக்க முடியாது என்பது தான் நான் கண்ட உண்மை. இது புற்று நோயுக்கும் பொருந்தும்.

எல்லாவற்றையும் மிதமான அளவுகளில் (Moderate level) செய்து விட்டு வாழும் வரைக்கும் வாழ்ந்து விட்டுப் போக வேண்டியது தான்.

நிழலி:

1. நான் ஏற்கனவே பல இடங்களில் சொல்லியிருப்பது போல, எல்லோருக்கும் அடிப்படையான ஒரு இதய நோய் றிஸ்க் (baseline or residual risk) இருக்கிறது. உங்கள் பெற்றோருக்கு இருந்தால் உங்களுக்கு இந்த அடிப்படை றிஸ்க் அதிகம். நீரிழிவும் அப்படியே. ஆனால், 2000 ஆம் ஆண்டில் மனிதனின் ஜீன்களை எறத்தாழ sequence செய்து விட்டார்கள். அதன் பிறகு அந்த ஜீன்களில் என்ன வகையான விகாரங்கள் இருக்கின்றன என்றும் கண்டறிந்து விட்டார்கள். இதனால் பயன் என்ன? ஜீன்களால் பரம்பரையால் ஒருவருக்கு ஒரு நோய் வரும் வாய்ப்பை அவரது டி.என்.ஏயைப் பரிசோதிப்பதால் அண்ணளவாக ஊகிக்க முடியும். 23 & me என்ற தனியார் கம்பனியே சில நோய்களுக்கான வாய்ப்புகள் தரும் ஜீன்களைப் பரிசோதிக்கும் சேவையை வழங்குகிறார்கள். அஞ்சலினா ஜோலி தனக்கு ஆபத்தான triple negative மார்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு இருப்பதாக இப்படியான பரிசோதனையில் கண்டறிந்த பின்னர் தான், தன் மார்பகங்களை சத்திர சிகிச்சை  மூலம் அகற்றி விட்டார்.

2. மருத்துவ ஆய்வுகள் கண்டறியாத காரணங்கள் கூட இதய நோய் உட்பட பல நோய்களுக்கு இருக்கலாம் என்பது உண்மை. ஆனால், 70 ஆண்டுகள் நடந்த ஆயிரக்கணக்கான ஆய்வுகளில் என்னென்ன காரணிகளை மாற்றினால் இதய நோய் ஆபத்து குறைகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். இந்த ஆய்வுகள் பாரிய சனத்தொகைகளில் செய்யப் பட்டவை (population studies). இதனால் ஒரு சனக்கூட்டத்தில் 95% ஆன நபர்களுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் பொருந்தும் என்று கூற முடியும். மிகுதி 5% பேரில் மருத்துவம் இது வரை கண்டறியாத காரணங்களால் ஆய்வின் முடிவுகள் பொருந்தாது (புள்ளி விபரவியல் துறையில் இருப்போர் இதை இலகுவாக விளக்க முடியும், எனக்கு இவ்வளவு தான் முடியும்!). நாம் நாளாந்தம் காணும் கேட்கும், நற்பழக்கங்கள் உடையவர்களும் மாரடைப்பினால் இறந்தார்கள் என்ற செய்தி எமக்கு இந்த 5% இனைத் தான் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், 95% ஆன நபர்களில், கொழுப்பைக் குறைப்பதும், உடற் பயிற்சி செய்வதும், மன அழுத்தம் குறைப்பதும், மிகைக் குடியைத் தவிர்ப்பதும்  இதய நோய் வாய்ப்பைக் குறைக்கும் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.     

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lets%20Learn%20about%20our%20friend%20ch

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"என்னம்மா...இப்படி பண்றீங்களேம்மா.." கதறும் ஆர்வர்டு பல்கலைகழகம்

கெட்டிகாரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்.

அம்மாதிரி ஆர்வர்டு பல்கலைகழகம், அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் அனைவரின் புளுகும் அம்பலத்துக்கு வந்துள்ளது.

14 விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து இதுநாள்வரை சிகப்பிறைச்சி கெடுதல் என வந்த அனைத்து ஆய்வுகளையும் தொகுத்து மில்லியன்கணக்கான சாம்பிள் சைஸுடன் ஐந்து பாகமாக ஒரு மெகா ஆய்வை கிரேடு எனும் மிக புதிய, மிக துல்லியமான ஆய்வுமுறையின் மூலம் வடிகட்டி எடுத்தார்கள்.

அந்த ஆய்வு முடிவுகள் ஆனலஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் எனும் உலகின் நம்பர் ஒன் மருத்துவ ஜர்னலில் வெளியாகியுள்ளது

"சிகப்பிறைச்சியால் எந்த கெடுதலும் இல்லை" என அந்த ஆய்வு சொல்ல:

அதிர்ச்சி அடைந்த ஆர்வர்டு பல்கலைகழகம், அமெரிக்க ஹார்ட் அசோசியேச்ன் ஆகியவை அந்த கட்டுரையையே தடை செய்யவேண்டும், வழக்கு போடுவோம் என தாம், தூம் என குதித்து வருகிறார்கள்...

அறிவியல் ஆய்வுக்கு ஏன் இவர்கள் இப்படி பதறவேன்டும்? தடை செய்ய சொல்லும் ரேஞ்சுக்கு போகவேண்டும்?

அவர்களின் ஸ்பான்சர்களின் அடிமடியில் கைவைத்தால் என்ன செய்வார்கள்?

ஆய்வை பற்றி படிக்க

https://www.vox.com/science-and-health/2019/10/1/20893070/beef-bacon-red-meat-health-effects

விடியோ பதிவாக

https://www.youtube.com/watch?v=r8cqPCtCpWQ

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2019 at 2:01 AM, ஏராளன் said:

விஞ்ஞானிகளால் பின்பற்றப் பட்டு வரும் மருத்துவ ஆய்வு முறைகளின் அடிப்படையில், இவர்கள் பின்பற்றிய கிறேடிங் முறையும் அதனால் கிடைத்த முடிவுகளும் தவறானவை. இதை நான் விளங்கப்படுத்தி நேரம் விரயம் செய்வதை விட, ஹார்வார்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையைக் கீழே பார்த்து விளங்கிக் கொள்ளலாம் (அல்லது சிவப்பிறைச்சியை  தொடர்ந்து வெட்டலாம், பாதிப்பு ஹார்வார்ட்டுக்கோ எனக்கொ அல்ல!😎)

https://www.hsph.harvard.edu/nutritionsource/2019/09/30/flawed-guidelines-red-processed-meat/ 

  • கருத்துக்கள உறவுகள்

நேத்து உண்மையானது இன்று பொய்யாகலாம் இன்று உண்மையானது நாளை பொய்யாகலாம் இதுதான் நவீன மருத்துவம் .

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

Research எனப்படுவதே மீள மீளக் கிண்டி தவறுகளைத் திருத்தி அமைப்பது தான்! ஆனால் இங்கே செய்யப்பட்டிருக்கும் meta-analysis என்பது இந்த 14 புள்ளிவிபரவியல் ஆய்வாளர்களாலும் மீள நடத்தப் பட்ட ஆய்வுகள் அல்ல! ஏற்கனவே நடந்த ஆய்வுகளில் தமக்கு உவப்பான சிலதை எடுத்து, சிலதைத் தவிர்த்து மீள புள்ளிவிபரவியல் (statistics) செய்திருக்கிறார்கள்! அவர்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுகளில் சில சிவப்பிறைச்சியோடு தொடர்பில்லாதவை. விலங்குகளில் செய்யப் பட்ட ஆய்வுகளை தவிர்த்து விட்டார்களாம். மேலும், உடலுக்கு வெளியே கலங்கள், திசுக்களில் செய்யப் பட்ட ஆய்வுகளையும் விட்டு விட்டார்களாம். அப்படி எல்லாவற்றையும் தவிர்த்தும் இவர்களின் இரண்டு ஆய்வுகள் சிவப்பிறைச்சியால் உடல் நலக்கேடு வருவது அதிகரிக்கும் என்று தான் முடிவு தந்திருக்கிறது, ஆனால் அதை "நம்பிக்கை குறைவு (low certainty) " என்று நிராகரித்திருக்கிறார்கள்! அதாவது தாங்கள் செய்த meta-analysis ஏ தமக்கு நம்பிக்கை குறைவென்று தள்ளி வைத்து விட்டு, நம்பிக்கையோடு " சிவப்பிறைச்சியைத் தவிர்த்தால் உடல் நலக் கேடு குறையாது, எனவே சாப்பிடுங்கள்" என்று சொல்லியிருப்பதால் தான் ஹார்வார்டும் அமெரிக்க இதயநோய் அமைப்பும் இதை பொறுப்பற்ற அறிக்கை என்று முத்திரை குத்தியிருக்கின்றன. ஆனால், ஏராளன் சொன்னது போல வழக்குப் போடுவோம் என்றெல்லாம் சொல்லவில்லை, அது ஏராளனின் கற்பனையென்று நினைக்கிறேன்!

மனித ஆரோக்கியம் தொடர்பான பரிந்துரைகள் மனிதர்களில் மட்டும் செய்யப் பட்ட ஆய்வுகளை முழுவதும் நம்பி உருவாக்கப் படுவதில்லை. மனிதர்களில் செய்யப் படும் ஆய்வு, எலி, குரங்கு போன்ற விலங்குகளில் நடத்திய ஆய்வுகள், முக்கியமாக உடலுக்கு வெளியே வளரும் மனிதத் திசுக்களில் செய்த மூலக்கூற்று மட்ட ஆய்வுகள், என மூன்றையும்  இணைத்தே மனித ஆரோக்கியம் தொடர்பான பரிந்துரைகள் உருவாகின்றன. இந்த மூன்று மட்டங்களிலும் 70 ஆண்டுகளாக நடந்த ஆய்வுகளின் முடிவுகள் தான் இன்றைய சிவப்பிறைச்சி, கொழுப்பு, உடற்பருமன், நீரிழிவு நோய்கள் தொடர்பான பரிந்துரைகளின் அடிப்படைகள்!

உதாரணமாக, உங்களுக்கும் எனக்கும் பரிச்சயமான ஒரு விடயத்தைப் பார்ப்போம்: மொன்சான்ரோவின் கிளைபொசேட் மனிதனில் புற்று நோயை உருவாக்கும் என்று மனிதர்களில் நடந்த ஆய்வுகள் நிரூபிக்கவில்லை! அது தான் உண்மையும் மொன்சான்ரோவின் கோர்ட் வாதத்தின் அடி நாதமும்! ஆனால், விலங்குகளிலும், மனித திசுக்களிலும் கிளைபோசெட் புற்று நோய்க்குரிய மாற்றங்களை உருவாக்குவது நிரூபிக்கப் பட்டிருக்கிறது! இதை அடிப்படையாக வைத்தே WHO கிளைபோசேட் புற்று நோய்க் காரணி என்று நிர்ணயித்தது. அமெரிக்க கோர்ட்டும் மொன்சான்ரோ பலருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது!

இந்த 14 ஆய்வாளர்களிடமும்  மொன்சான்ரோவின் கேசைக் கொடுத்தால் அவர்களின் முடிவு கிளைபோசேட் மனிதருக்குப் பாதுகாப்பான களை கொல்லி என்றே சொல்வர்! இது எவ்வளவு புத்திசாலித்தனமான ஆலோசனை என்பதை உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்!

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேலியோவில் அதிக புரதம் பரிந்துரைக்கப்படுகிறதா??

அதிக புரதம் எடுத்தால் நமது சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுமா??

விடை இந்த கட்டுரை

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

"மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்" களான

மாவுச்சத்து ( carbohydrates)
புரதச்சத்து ( protein)
கொழுப்புச்சத்து (fat)

இவற்றுள் மனிதனுக்கு மிக முக்கியமானது எது என்று கேட்டால்
மருத்துவர்கள்/ உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை நிபுணர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெல்வது

"புரதச்சத்து" தான்

புரதம் தான் நம் உடலின் ஒவ்வொரு செல்களையும் கட்டமைக்கிறது.
ஜீன்களைக் கூட மாற்றியமைக்கும் வித்தை புரதச்சத்துக்கு உண்டு.

இந்த புரதம்
மாமிசம் மூலம் வருகிறதா?
மரக்கறி மூலம் வருகிறதா?
என்பதைப் பொறுத்து

Protein from animal origin / plant origin என்று பிரிக்கப்படுகிறது

முட்டை / மாமிசம் / மீன் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் புரதம் - மிருகப்புரதம்

பயறுகள் /கடலைகள் / காய்கறிகள் போன்ற தாவர வகையில் இருக்கும் புரதம் - மரக்கறிப்புரதம்

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒருவர் தினமும் குறைந்தபட்சம் அவரது எடைக்கு நிகராக 0.8 கிராம் அளவு புரதம் கட்டாயம். எடுக்க வேண்டும் என்கிறது.

அதாவது ஒருவரது எடை 80 கிலோ என்றால் அவரது எடைக்கு தேவையான தினசரி புரதம் -
80 * 0.8 = 64 கிராம்

இந்த 64 கிராமை அவர் தனது தினசரி உணவில் எப்பாடுபட்டாவது சேர்த்தாக வேண்டும்.

அவ்வாறு சேர்க்கவில்லையெனில் என்ன நடக்கும்??

நாளடைவில் அவரது தசைகளில் இருந்தும் எலும்புகளில் இருந்தும் தேவைக்கேற்ப புரதம் திருடப்பட்டு உடல் அதை உபயோகிக்கும்.

சோமாலியா , எதியோப்பியா போன்ற நாடுகளில் மக்கள் பஞ்சத்தில் தவிக்கின்றனர் என்று படிக்கிறோமே.. அவர்களுக்கு தினசரி புரதம் சரியாக கிடைப்பதில்லை என்பதே அவர்கள் எலும்பும் தோலுமாக காட்சியளிப்பதற்கு காரணம்.

ஒரு வளர்ந்த நாடு என்பது உணவுக்கொள்கையின் படி தனது அனைத்து குடிமக்களுக்கும் இந்த தேவையான புரதச்சத்தை தினமும் வழங்குகிறதா என்பதை பொறுத்து கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆகவே, தினசரி கட்டாய புரதச்சத்து தேவை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அதிகபட்சம் எவ்வளவு புரதம் எடுக்கலாம்??? என்பதில் தான் இவ்வளவு கட்டுக்கதைகளும் ஆரம்பமாகின்றன.

இதற்கு புரதச்சத்தை நம் உடல் எப்படி செரிமானம் செய்கிறது என்று அறிய வேண்டும்..

நாம் உண்ணும் உணவில் உள்ள புரதச்சத்து நம் உடலால் அமினோ அமிலங்களாக உடைக்கப்பட்டு நமது உடலின் கட்டுமானம், தினசரி நடவடிக்கைகள், ஜீன்கள் புணரமைப்பு போன்ற பல வேலைகளுக்கு பயன்பட்டு கடைசியாக இருக்கும் குப்பை கழிவு தான் இரத்த யூரியா நைட்ரஜன். இதைத் தான் BUN என்கிறோம் blood urea nitrogen.

அதிக புரதம் உண்டால் அதிக யூரியா நைட்ரஜன் வெளியாகும் இதனால் அதை வெளியேற்றும் கிட்னிகள் சிரமத்துக்குள்ளாகும் என்பதே எதிர்ப்பாளர்களின் வாதம்..

ஆனால் , ஒன்றை மறக்க கூடாது.
நமது கிட்னிகள் ஒன்றும் வீட்டில் நாம் கட்டி வைத்துள்ள செப்டிக் டேங்குகள் கிடையாது.

நமது வீட்டில் அன்றாடம் மூன்று முதல் ஐந்து பேர் கழிவறையை உபயோகிக்கிறோம். செப்டிக் டேங்க் நிரம்ப வாய்ப்பில்லை. ஆனால் அதுவே ஐநூறு பேர் உபயோகப்படுத்தினால் நிரம்பி விடும் அல்லவா..

இந்த பார்வையுடன் தான் நமது கிட்னிகளையும் அணுகுகின்றனர் எதிர்ப்பாளர்கள். இது தவறான அணுகுமுறை

சொல்லப்போனால் சில ஆய்வுகள் புரதச்சத்தை அதிகமாக உண்பவருக்கு அதை குறைவாக உண்பவரை விட கிட்னிகள் சிறப்பாக இயங்குகின்றன என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
(https://authoritynutrition.com/how-much-protein-per-day/)

இத்தனைக்கும் உலக சுகாதார நிறுவனம் அதிக உடலுலைப்பு இல்லாத ஒருவருக்கு தினமும் 1 முதல் 1.5 வரை ( சில ஆய்வுகள் 2 கிராம் வரை) புரதம் எடுக்கலாம் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறது.

இதன் படி ஒரு 80 கிலோ உடலுலைப்பு அதிகம் இல்லாத பேலியோ உணவு எடுப்பவர் தினசரி 80* 1.5 = 120 கிராம் வரை புரதம் எடுக்கலாம்.

மேலும் 20-30 கிராம் கூட எடுத்தாலும் பாதிப்பு இல்லை.
சிறுநீரகங்கள் இந்த புரத உணவு முறைக்கு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.

தங்களின் ரத்த வடிகட்டும் திறனை ( glomerular filtration rate) அதிகப்படுத்துகின்றன.

வடிகட்டும் செல்களான க்ளோமெருலை(glomeruli) பெரிதாகின்றது.

கிட்னிகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் அதிகப்படுத்தப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் புரதச்சத்தை சரியாக எடுத்தால் ரத்த கொதிப்பை சரியான அளவில் வைக்க உதவும் கிட்னியால் செயல்படுத்தப்படும் ரெனின்- ஆன்ஜியோடென்சின்- சிஸ்டம் பக்காவாக வேலை செய்து ரத்த அழுத்தம் குறைகிறது .

யார் புரதங்களை குறைத்து உண்ண வேண்டும்??

ஏற்கனவே நாள்பட்ட நீரிழிவு (diabetes) மற்றும் ரத்த கொதிப்பு இருந்தவர்களுக்கு அவர்களது முந்தைய நோய்கள் காரணமாக சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

நீரிழிவினால் பாதிக்கப்பட்டால் அதை diabetic nephropathy என்கிறோம்

ரத்தகொதிப்பால் பாதிக்கப்பட்டால் அதை hypertensive nephropathy என்கிறோம் .

இப்படிப்பட்டவர்களுக்கு கிட்னிகளின் வடிக்கட்டும் திறன் குறைவாக இருக்கும்.

இவர்களுக்கு தான் நாம் புரதச்சத்தை குறைத்து கொடுக்க வேண்டும்..
அதுவும் ஒரு நாளைக்கு 56 கிராமிற்கு கீழ் கொடுக்க கூடாது.

எவ்வளவு முற்றிய கிட்னி நோயாக இருந்தாலும்.. இந்த குறைந்தபட்ச புரதச்சத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன

டயாலசிஸில் இருக்கும் சிறுநீரக நோயாளிக்கு கட்டாயம் 1.2 கிராம் புரதம் கொடுக்க வேண்டும் .

காரணம் அவர்களுக்கு உடலில் உள்ள தசைகள் வலுகுறைந்து புரத இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்ட வேண்டும்

நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு எக்காரணம் கொண்டும் புரதச்சத்தை குறைக்க வேண்டிய அவசியமே இல்லை.

இருப்பினும் தமிழ் பேலியோவில் நாம் ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது எடையை கணக்கிட்டு அதற்கேற்ப புரதச்சத்தை இன்றைய அறிவியலின் வழிகாட்டுதலின்படி அளவில் குறைத்து தான் கொடுக்கிறோம்.

மருத்துவர் அட்கின்ஸ் கண்டுபிடித்த அட்கின்ஸ் டயட் என்பதில் தாராளமாக 200 கிராம் புரதம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கே சிறுநீரகத்தில் எந்த பிரச்சனையும் வருவதில்லை .

அப்படி அதிக புரதம் எடுத்தால் கிட்னி நோய் வரும் என்று கூறும் பெரும்பான்மை ஆராய்ச்சிகளில் மக்கள் புரதம் அதிகமாக எடுப்பதுடன் மாவுச்சத்தையும் அதிகம் எடுத்திருக்கிறார்கள்.கூடவே ஆலகஹால் மற்றும் ஸ்மோக்கிங் இருக்கும். ரீபைண்டு சுகர் இருக்கும் . டயாபடிஸ்/ ப்ரஷர் போன்றவை கண்ட்ரோல் இல்லாமல் இருக்கும்.

தமிழ் பேலியோவில் நாம் நிர்ணயிக்கும் அதிகபட்ச புரத அளவுகள் 120 -150 கிராம். ஆகவே பேலியோவை பின்பற்றுபவர்களுக்கு கிட்னி சார்ந்த பிரச்சனைகள் குறைவதைக் காண்கிறோம்

கூடிய விரைவில் அதை மருத்துவ ஆராய்ச்சியாக வெளியிடவும் இருக்கிறோம்..

மேலும் குறை மாவு நிறை கொழுப்பு மித புரத உணவு எடுப்பவர்களுக்கு சிறுநீரகங்கள் நன்றாக செயல்படுவதாக இந்த ஆய்வு விளக்குகிறது
(https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/23690533/…)

புரதம் நம் சிறுநீரகங்களுக்கு நண்பன்

அதிகமான குளுக்கோஸ் நம் கிட்னிகளுக்கு எதிரி...
அதிகமான ரத்த அழுத்தம் நம் கிட்னிகளுக்கு எதிரி ..

எதிரிகளை விட்டு விட்டு புரதச்சத்தின் மீது பழிபோட்டுக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சிக்கன் பிரியாணி எடுப்பது வேறு
அதில் உள்ள சிக்கனை மட்டும் உண்பது வேறு

சிக்கன் பிரியாணி = மாவுச்சத்து + புரதச்சத்து
சிக்கன் = புரதச்சத்து மட்டும்

பேலியோவில் சிக்கன் மட்டுமே உண்டு
சிக்கன் பிரியாணி கிடையாது

குழப்பிக்கொள்ள வேண்டாம்...
😃😃

#paleo@LCHF
#kidney myth
#paleo&protein

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

https://www.facebook.com/100002195571900/posts/2714162335333592?d=n&sfns=mo

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீரிழிவைக் கட்டுப்படுத்த
சிறந்த வழி எது?

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

சென்ற வருடம் இதே நாள் அமெரிக்க நீரிழிவு சங்கத்துக்கு பெரிய பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியிருக்கிறேன்

எதற்காக?

மூன்று மாதம் மட்டுமே கடைபிடிக்க உகந்த டயட் என்று அதுவரை பெயர் வாங்கியிருந்த பேலியோ எனும் குறை மாவு உணவு முறையை

நீரிழிவு நோயர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தேவை கருதி இரண்டு வருடம் வரை கொடுக்கலாம் என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் தனது மேற்கோளில் அறிவித்தது

இது நமது மாநிலத்தில் இருக்கும் இரண்டு லட்சம் மருத்துவ சொந்தங்களில் எத்தனை மருத்துவர்களைச் சென்று சேர்ந்தது என்று தெரியாது.

ஆனால் உண்மை இது தான்.

எனக்கு மார்க் ஒரு வாய்ப்பு கொடுத்தால் இன்னும் ஐந்தாயிரம் பேரை நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம் என்று தனது சட்டத்தை மாற்றி அமைத்தால் எனக்கு நண்பர்களாக இளம் தலைமுறை மருத்துவர்கள் ஐந்தாயிரம் பேரை சேர்த்துக்கொண்டே செல்வேன் .

இது மருத்துவர்களுக்கு மட்டும் காட்டும் பாரபட்சம் என்று நினைத்து விட வேண்டாம்.

ஒரு மருத்துவரை நான் ஒரு மருத்துவராக மட்டும் பார்ப்பது இல்லை.
அவரைத்சார்ந்து இருக்கும் ஒரு சிறிய சமூக அமைப்பாக பார்க்கிறேன்.

ஒரு மருத்துவரை நாம் நமது பார்வையில்
நமது கோணத்தில் சிந்திக்க வைத்தால் அவர் ஒரு சிறிய சமூக கூட்டமைப்பை மாற்றுப்பாதையில் சிந்திக்க வைப்பார் என்று உளமாற நம்புகிறேன்.

எனவே தான் எனக்கு நண்பர் விருப்பம் தரும் பட்டியலில் மருத்துவர்கள் இருந்தால் உடனே அவர்களை ஏற்பதை உடனே செய்து வருகிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம்.

இரண்டு லட்சம் மருத்துவர்கள் வாழும் நம் தமிழகத்தில்
இருபதாயிரம் மருத்துவர்களுக்கு பேலியோ/ குறை மாவு உணவு முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விட்டது என்று உத்தேசமாக கொள்வோம்

மீதம் உள்ள 1,90,000 மருத்துவர்களை எப்படி அடைவது ?

முகநூல் மூலமாக
வாட்சப் மூலமாக
யூட்யூப் மூலமாக
அசோசியேசன் மீட்டிங்குகள் மூலமாக
என்று எப்படியாவது இந்த நற்செய்தியை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

அமெரிக்க நீரிழிவு சங்கம் 2019 பரிந்துரைப்படி தனது லேண்ட் மார்க் ஜட்ஜ்மெண்ட்டில்

இவ்வாறு கூறுகிறது

" Management standards of medical care in diabetes emphasizes on a patient centered, individualized approach is under girded by an acknowledgment that based on the current evidence that, a Low carbohydrate is both safe and effective used a medical nutrition therapy for upto two years in adults in order to lower blood sugar, reduce diabetes medicine usage and support weight loss"

இதன் அர்த்தம் என்ன?

"நீரிழிவுக்கான சிகிச்சையில் ஒவ்வொரு நோயாளியையும் தனிப்பட்டவராகக் கருதி அவருக்கென பிரத்யேக சிகிச்சை முறையைக் கையாள வேண்டும். அத்துடன் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளின்படி வயது வந்தோருக்கு "குறை மாவு உணவு முறை" ரத்த சர்க்கரை அளவுகளைக் குறைப்பதிலும், மருந்து மாத்திரையின் தேவையைக் குறைப்பதிலும், எடை குறைப்பதிலும் சிறப்பான பங்காற்றுகிறது . இதுவரை கிட்டிய ஆராய்ச்சி முடிவுகளின் படி இரண்டு வருடங்களுக்கு இந்த உணவு முறை நீரிழிவைக் கட்டுக்குள் வைப்பதில் திறன் உள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது"

இந்த தீர்ப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது ஆயினும் இது குறித்து அறியாத மருத்துவர்கள் கட்டாயம் இருப்பார்கள்.

இது அவர்கள் தவறல்ல.

சகோதர சகோதரிகாள்

முன் முடிவு செய்யப்பட்ட எந்த விசயத்திலும் நாம் சிந்திக்கும் ஆற்றல் மட்டுப்படுத்தப்படுகிறது.

இந்தியாவை சூழ்ந்துள்ள முக்கிய ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனை இந்த "தொற்றாநோய்கள்"

ஒரு மாநிலத்தில் டெங்கு எனும் தொற்று நோய்க்கு ஒருவர் இறந்தால் பெரிதாக பேசப்படுகிறது
ஆனால்
அமைதியாக தினமும் ஒரு இளம் வயது நபரை
முப்பது வயது நபரை இதய நோய் / சிறுநீரக நோய்க்கு பலி கொடுத்து வருகிறோம்.

"பலி கொடுத்து வருகிறோம்" என்ற பதம் ஏன் இங்கு பயன்படுத்தப்பட்டது என்றால்

ஒருவர் தனது சமூகத்தின் அறியாமையால் இறக்கிறார் என்றால் அவரை அந்த சமூகம் பலி கொடுத்து விட்டது என்று தானே அர்த்தம்

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சிறிய தேசங்களான சிங்கப்பூர், இலங்கை போன்றவை விழித்துக்கொண்டு விட்டன.

அவர்களை சிறிய முன்னுதாரணங்களாக எடுத்துக்கொண்டு நாமும் மாறியாக வேண்டும்.

தென்ஆப்பிரிக்க குறை மாவு உணவு முறை போதிக்கும் மருத்துவர் Dr.டிம் நோக்ஸ் கூறினார்

" இன்னும் முப்பது வருடங்களில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை மருத்துவ அறிவியலால் அங்கீகரிக்கப்பட்டு அதுவே புதிய அறிவியலாக மாறும்"

இன்னும் முப்பது ஆண்டுகள் வரை நாம் அமைதி காத்திருந்தால்,
அதுவரை இறக்கப்போகும் பல கோடி மக்களுக்கு யார் பொறுப்பு.?

உரக்கச்சொல்வோம்..

நீரிழிவிற்கு நேரடி வழி - குறை மாவு உணவு முறையென்று.

🙋‍♂️

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Image may contain: text
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2017ஆம் ஆண்டு இதே நாள்
வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த ஒரு மேடையில் சக மருத்துவர்களுடன் இணைந்து

மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கலைக்கல்லூரி மற்றும் இந்திய உணவுப் பரிந்துரையாளர்கள் சங்கம், கீழக்கரை இணைந்து நடத்திய
தேசிய அளவிலான பயிலரங்கத்தில்

"குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையின் நோய் தீர்க்கும் திறன்" குறித்து
உரையாற்றினோம்.

தமிழ் பேலியோ வரலாற்றில் முக்கியமான நாளாக அது அமைந்ததற்கு காரணம், அறிவியல் பேசும் அரங்கில் பேலியோ உணவு முறை குறித்து வளரும் ஊட்டச்சத்தாளர்கள் மற்றும் உணவியலாளர்களிடம் பேச முடிந்தது.

பேலியோ வாழ்வியலை ஏற்றபின் நான் கண்ட முதல் மேடை என்பதால் எனக்கும் முக்கியமான நாளாக அது இருந்தது.

நான் அந்த அரங்கில் பேசிய தலைப்பு

"Is Carbohydrates an essential nutrient???"
மாவுச்சத்து என்பது உயிர் வாழத்தேவையான ஒரு உயிர்சத்தா??

என்ற தலைப்பில்

நாம் உயிர் வாழ மாவுச்சத்து "தேவையற்றது" என்று அறிவியல் கருத்துகளுடன் பேசினேன்.

நாம் உயிர் வாழ தேவையான எந்த வேதியியல் மாற்றத்திற்கும் கார்போஹைட்ரேட் தேவையில்லை

புரதம் இல்லாமல் நம்மால் வாழ முடியாது..
புரதம் நம் உடலில் இருந்து வெளியேறினாலோ, நம் உடலுக்கு தேவையான புரதச்சத்தை எடுக்காமல் விட்டாலோ நெகடிவ் வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகி உடல் கடுமையான தேய்மானத்தைச் சந்திக்கும்.

கொழுப்புச் சத்தில்லாமல் நம்மால் வாழ முடியாது..
நம் உடலின் ட்ரில்லியன் கணக்கான செல்களின் வெளிப்புற சுவர் கொழுப்பால் ஆனது. நமது இனப்பெருக்க ஹார்மோன்கள் அனைத்தும் கொழுப்பால் ஆனவை. உயிர்காக்கும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் உருவாக கொழுப்பு வேண்டும்.
கொழுப்பை முறையாக எடுக்காமல் விட்டால் நம் சந்ததி அழிந்து விடும் அபாயம் உண்டு.

இரும்பு, வைட்டமின் முதலிய சத்துகள் இன்றியும் நம்மால் வாழ முடியாது .
ஏன் தண்ணீர் இல்லாமல் நம்மால் சில நாட்களைக் கூடக்கடக்க முடியாது..

ஆனால்
கார்போஹைட்ரேட் இல்லாமல் நம்மால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் உயிர் வாழ முடியும்.

நம் அனைவருக்கும் தெரியும்
வைட்டமின் ஏ குறைபாட்டால் வரும் நோய் -- மாலைக்கண் ( night blindnes)

இரும்புச் சத்து குறைந்தால் வருவது
-- ரத்த சோகை ( anemia)

கால்சியம் குறைந்தால்
-- எலும்பு வலிமை ( osteoporosis) இழக்கிறது
ஆனால்

கார்போஹைட்ரேட் குறைபாட்டால் எதேனும் நோய் நமக்கு வருகிறதா என்றால் ஒன்று கூட இல்லை.

நீங்களே நினைத்துப்பாருங்கள்

நம் உடலுக்குத் தேவையே இல்லாத மாவுச்சத்தைத் தான் நாம் தினமும் விரும்பி அதிகமாக உண்டுகொண்டிருக்கிறோம்.
கார்போஹைட்ரேட் நம் உடலில் ஒரு விசயத்துக்கு உபயோகப்படுகிறது என்றால் அது மூளைக்கு தேவைப்படும் க்ளூகோஸை அளிக்கிறது என்பது மட்டுமே. ( மூளை குளூகோஸ் மற்றும் கீடோன்கள் கொண்டே இயங்கும் ) இன்னும் கண் விழிப்படலம் ( ரெட்டினா) , ரத்த சிகப்பு அணுக்கள், மூளை போன்றவை களூகோசை மட்டும் நம்பி இயங்குபவை. ஆனால் இந்த அங்கங்களுக்குத் தேவையான மாவுச்சத்து என்பது மிக மிக குறைவு.

கொழுப்பை செரிமானம் செய்வது மூலம் கிடைக்கும் க்ளிசரால், லேக்டேட், இன்னும் புரதத்தை உடைத்துக்கிடைக்கும் சில அமினோ அமிலங்கள் மூலம் க்ளூகோஸ் மூலம் மட்டும் இயங்கும் அங்கங்களுக்கு நமது உடலால் க்ளூகோசை சமைக்க முடியும்.

நம் உணவில் நாம் கார்போஹைட்ரேடை உண்ணாவிட்டாலும், போதுமான அளவு கொழுப்புணவையும் புரதச்சத்தையும் உண்டால், நமது கல்லீரல் நம் மூளைக்குத் தேவையான க்ளூகோசை தானே உற்பத்தி செய்துகொள்ளும் வலிமையுடையது.இதை Gluconeogenesis என்கிறோம்.

சரி நம் மூளைக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டை நான் உணவு வழியே எடுக்கிறேனே அதில் என்ன தவறு ? என்று கேட்கிறீர்கள்
ஒரு தவறும் இல்லை
ஆனால் எவ்வளவு தேவையோ
அவ்வளவு எடுத்தால் சரி தான்
தேவை எவ்வளவு ??
தினமும் 50 கிராம் கார்போஹைட்ரேட்
(அது நமது மூளைக்கு எரிசக்தியாக உபயோகிக்கப்படும்)
அந்த கார்போஹைட்ரேட்டும் நமக்கு காய்கறிகள் போன்ற குறைந்த அளவு இன்சுலின் சுரப்பை ஏற்படுத்தும் உணவுகள் மூலம் மட்டுமே வந்தால் சிறப்பு .

அதற்கு நாம் தினமும் 300 - 500 கிராம் காய்கறிகள் உண்ண வேண்டும் ஆனால் நாம் 300-500 கிராம் சாதம் உண்கிறோம்.
இது சரியா??

மருத்துவ ஆய்வுகள் இந்த கார்ரபோஹைட்ரேட்டை பற்றி என்ன சொல்கிறது..
" கார்போஹைட்ரேட் கண்டிப்பாக நாம் உயிர் வாழத் தேவையென்று கூற முடியாது. உணவில் தேவையான அளவு கொழுப்புணவு இருந்தால், கார்போஹைட்ரேட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
கொழுப்புணவு எடுக்காமல் இருந்தால் தினமும் 50 - 100 கிராம் காரப் எடுப்பது நல்லது" என்கிறது பின்வரும் ஆய்வு ( American journal of clinical nutrition may 2002 volume 75 no.5
page no 951 - 953 )

தினமும் 50 கிராம் அளவு கார்ப்ஸ் போதும் ஆனால் இந்தியர்கள் உண்ணும் சராசரி கார்ப்ஸ் 400 கிராம்.
தினமும் 40 டீஸ்பூன் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை சர்ககரையை உண்பதற்கு இணையான அளவு கார்ப்ஸ் எடுத்துவிட்டு நமக்கு நீரிழிவு வராமல் இருக்க வேண்டும் என்றால் எவ்வாறு முடியும்.

2004இலேயே அமெரிக்க நீரிழிவாளர்கள் சங்கம் குறைந்த பட்சம் 130 கிராம் மாவுச்சத்தாவது ஒரு மனிதனுக்கு தேவை என்றது.
(https://care.diabetesjournals.org/content/27/9/2266)

அந்த சங்கம் இப்போது 2019 பரிந்துரையில் தனது நிலையை மாற்றிக்கொண்டு விட்டது. அவரவர் தேவைக்கு ஏற்ப மாவுச்சத்தின் அளவுகளை குறைக்கலாம். அந்த 130 கிராம் கட் ஆப்பை வாபஸ் பெற்றுக்கொண்டது. பேலியோ எனும் Very Low carb உணவு முறையின் சாதகங்களை அந்த சங்கத்தால் புறந்தள்ள முடியவில்லை.
மேலும் , உணவில் எடுக்கும் நிறைவுற்ற கொழுப்பால் தான் இதய நோய் ஏற்படுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக நிறுவும் எந்த ஆராய்ச்சியையும் அதனால் எடுத்து வைக்க முடியவில்லை.

ஆனால் நாம் இன்னும் நமது மாவுச்சத்து உட்கொள்ளலை 300முதல் 400 கிராமில் இருந்து சில சதவகிதங்கள் கூட குறைத்ததாக தெரியவில்லை.

இந்த மாவுச்சத்தின் அளவை 50 கிராமிற்குள் குறைத்து உண்ணச்சொல்வதே பேலியோ எனும் குறை மாவு ஆரோக்கியமான கொழுப்பு உண்ணும் உணவு முறை .

கடந்த அரை நூற்றாண்டில் உணவு சார்ந்த இலக்கணங்கள் மாற்றப்பட்டுவிட்டன.
இதில் மனிதனின் பேராசை அதிகம் விளையாடியது உண்மை.

தன் இனத்துக்கு ஒவ்வாத உணவுகளை நல்லது என்று கூறி விற்கும் ஒரே இனம்

மனித இனமாகிப்போனது

ஆசைக்கு தீர்வு உண்டு
பேராசைக்கு ஏது தீர்வு ?
அந்த பேராசைக்கு தன்னையே பலியாகக் கொடுக்க மனிதன் துணிந்து விட்டான்.

மனிதனின் இயற்கையான உணவாக இருந்து வந்த கொழுப்புணவுகளை வில்லன்களாக சித்தரித்து உணவுப்பிரமிடின் கூம்பில் கொண்டு வைத்தான்.

அடித்தளத்தில் மாவுச்சத்தை வைத்து நிரப்பி தனக்கு தானே சமாதி கட்டும் வேலையைச் செவ்வனே செய்கிறான்

நிச்சயம் மாவுச்சத்து நாம் உயிர்வாழத்தேவையான ஊட்டச்சத்து இல்லை.

மாவுச்சத்தை குறையுங்கள்

குறைவாக இன்சுலினை தூண்டும் உணவுகளை உண்ணுங்கள்

கொழுப்பு நிச்சயம் வில்லன் அல்ல.
கொழுப்பின் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. அந்த களங்கம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது.

மீண்டும் நம் ஆதித் தொல்லுணவுக்கு மாறுவோம்.
ஆரோக்கியத்தை மீட்போம்.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

https://www.facebook.com/groups/tamilhealth/permalink/1198955520294925/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.