Jump to content

நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-720x450.jpg

நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த 17 நாட்களுக்கு அத்திவரதர் நின்று கோலத்தில் காட்சியளிக்கிறார்.

நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண பக்தர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வருகை தருகின்றனர். அத்துடன் இன்று முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி மரத்தாலான பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த முதலாம் திகதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சயன கோலத்தில் அத்திவரதர் 31 நாட்கள் காட்சியளித்து வந்தார்.  இந்த கோலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. அத்துடன், நேற்று பொது தரிசனத்திற்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டு, கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை 5 மணி முதல் மீண்டும் பொது தரிசனம் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நின்ற-கோலத்தில்-காட்சியள/

  • Replies 80
  • Created
  • Last Reply
Posted

ஒரு மரத்தாலான கட்டையை தளபாடம் செய்து விற்றால் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஒரு மரக்கட்டையை படுக்கவைத்தும் நிற்க வைத்தும் பிச்சை எடுத்து பணம் உழைக்கும் கலையை சிறப்பாக  பயன்படுத்தும்  வியாபாரத்திற்கான முதலீடு முட்டாள்கள் கூட்டம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, tulpen said:

ஒரு மரக்கட்டையை படுக்கவைத்தும் நிற்க வைத்தும் பிச்சை எடுத்து பணம் உழைக்கும் கலையை சிறப்பாக  பயன்படுத்தும்  வியாபாரத்திற்கான முதலீடு முட்டாள்கள் கூட்டம் தான். 

சிலுவைகள், மரத்தினாலான சிலுவைகள், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின், மாதா  சிற்பங்கள் போன்ற பிற மதங்களின் உருவ வழிபாடுகளுக்கும் பொருந்தும்  தானே?

Posted
10 hours ago, tulpen said:

ஒரு மரத்தாலான கட்டையை தளபாடம் செய்து விற்றால் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஒரு மரக்கட்டையை படுக்கவைத்தும் நிற்க வைத்தும் பிச்சை எடுத்து பணம் உழைக்கும் கலையை சிறப்பாக  பயன்படுத்தும்  வியாபாரத்திற்கான முதலீடு முட்டாள்கள் கூட்டம் தான். 

இது என்ன IKEA இல் விற்கும் தளபாடங்கள் போல் என்று நினைச்சிட்டீங்களோ? 😀

பிரான்ஸிலுள்ள Lourdes க்கு ஒரு வருடத்திலேயே பல மில்லியன் சனம் போறது. அவர்களுக்கு நல்ல பணம் வருவாயாக கிடைக்கிறது. 

அப்பகுதியே ஒரே விற்பனைப்பொருட்கள் நிறைந்து business மயமாக காட்சியளிக்கும்.

பலர் அங்கு bath எடுத்தால் தமது நோய்கள் குணமாகும், புனிதமாவார்கள் என்றெல்லாம் நினைத்து கியூவில் நின்று அதையும் செய்வார்கள்.

எமது பிரான்ஸ் வாழ் கிறிஸ்தவ ஈழத்தமிழர்கள் பலரும் நேர்த்தி வைச்சிட்டு வேற lourdes க்கு போறவை.

நீங்கள் சுவிஸில் வசிப்பவர் என்று profile இல் பார்த்தேன். உங்களுக்கு இவை பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.

பக்தர்கள் முட்டாள்கள் என்றால் உலகமே முட்டாள்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் பாடம் எடுக்கப்போகிறீர்களா?

Posted
10 hours ago, Lara said:

நிச்சயமாக IKEA  தளபாடங்கள் செய்யும் மரக்கட்டைகள் இந்த அத்தி வரதர் என்ற மரத்தக்கட்டையை விட பெறுமதி வாய்ந்தவை தான். பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு வேலை வாய்பபு கொடுத்த IKEA பெறுமதி உயர்வானது. இந்த அத்தி மரக்கட்டை ஏழை மக்களின்  பணத்தை உயர் ஜாதி  என்று தம்மை தாமே உருவகப்படுத்திய திருட்டு பயல்கள் அபகரிக்க உதவிய கட்டை என்பது உங்களுக்கும் தெரியும். 

பிரான்ஸ் லூட்ஸ் பாதா கோவில் ஒரு காலத்தில் மக்கள் முழுமையாக நம்பிய இடமாக இருந்தாலும் தற்போதய காலத்தில் அது ஒரு சுற்றுலா பிரதேசம். அங்கு நம்பிக்கையுடன் போவோரை விட உல்லாசபயணமாக அந்த ஆலயத்தை ஒரு வரலாற்று சின்னத்தை பாரவையிடவே மக்கள் போகிறார்கள். வரலாற்று சின்னங்கள் அவை கோவில்களாக இருந்தாலும் மன்னரகள் கட்டிய கோட்டைகளாக இருந்தாலும் மக்கள் தேடி வருவது இயற்கை தான். பாரிஸின் புறநகர் பகுதியில் உள்ள  லூயி மன்னனின் வெர்ஸெல்ஸ் கோட்டையை பார்கக பல ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுப்பதைப் போல palma majorca வுக்கோ Ibiza வுக்கோ party vacation போல.

IKEA தளபாடங்கள் ஒருக்கா பொருத்தினால் மீண்டும் கழட்டி பொருத்த/பயன்படுத்த முடியாது என வெள்ளையர்களே நக்கலடிப்பார்கள். நீங்கள் அத்திவரதரை மட்டம் தட்ட IKEA தளபாடங்களுக்கு வக்காலத்து வாங்குவது ஒன்றும் அதிசயமில்லை. 😀

Lourdes க்கு சுற்றுலாவுக்கு செல்பவர்களை விட அங்கு விசேட நாட்களில் பக்திமயமாக நிறையும் சனத்தொகை அதிகம். அதை நேரில் பார்த்தவர்களுக்கு அது தெரியும். 

சனம் காசை போட்டு விட்டு மெழுகுதிரி கொழுத்துவதன் மூலமே Lourdes இல் சேரும் பணம் கொஞ்ச நஞ்சமில்லை. சுற்றிவர பக்திமயமான பொருட்களை கடைகளில் விற்று நடக்கும் business உம் கொஞ்ச நஞ்சமில்லை. சிறு சிறு புட்டிகளை காசுக்கு வாங்கி lourdes நீரை அதற்குள் விட்டு சனம் வீட்டிற்கும் எடுத்துச்செல்கிறது.

ஆனாலும் வெள்ளைகள் எது செய்தாலும் அவர்களை குற்றம் சாட்ட மனம் வராது. எம்மவர்களை மட்டம் தட்டுவதில் மட்டும் ஒரு தில் இருக்கு பாருங்கோ.

இந்தியாவிலும் கோவில்கள் பலவும் சுற்றுலாத்தலமாக உள்ளது. வெள்ளையர்களே இந்தியாவிலுள்ள கோவில்களுக்கு செல்வார்கள். 

பலருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, மற்றவர்களது வழிபாட்டு முறைகளிலும் நம்பிக்கை இல்லை. ஆனால் திரிக்கு திரி கடவுளை வழிபடுவோரை மட்டம் தட்டி கருத்து எழுதுவதில்லை.

Posted
2 hours ago, Lara said:

ஒரு முறை பயன்படும் IKEA தளபாடங்கள் பல்லாயிக்கணக்கான சாதாரண மக்களுக்கு வேலை வாய்பபையும், மலிவான தளபாட வசதியையும் செயது மக்களுக்கு உதவியாய் இருக்கின்றன. உங்கள் அத்தி மரக்குத்தி ஒரு சில கொழுப்பெடுத்த கயவர்  கூட்டத்திற்கு  உழைக்காமல் பணம் சேர்கக மட்டுமே உதவியாய் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/5/2019 at 5:22 AM, tulpen said:

ஒரு மரத்தாலான கட்டையை தளபாடம் செய்து விற்றால் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஒரு மரக்கட்டையை படுக்கவைத்தும் நிற்க வைத்தும் பிச்சை எடுத்து பணம் உழைக்கும் கலையை சிறப்பாக  பயன்படுத்தும்  வியாபாரத்திற்கான முதலீடு முட்டாள்கள் கூட்டம் தான். 

நல்லதொரு சிந்தனை.
ஆனால் இதை எல்லா மதத்தினருமே செய்கிறார்கள்.
ஆனபடியால் நீங்கள் சொல்லுவது
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போலவே.

Posted
3 hours ago, tulpen said:

ஒரு முறை பயன்படும் IKEA தளபாடங்கள் பல்லாயிக்கணக்கான சாதாரண மக்களுக்கு வேலை வாய்பபையும், மலிவான தளபாட வசதியையும் செயது மக்களுக்கு உதவியாய் இருக்கின்றன. உங்கள் அத்தி மரக்குத்தி ஒரு சில கொழுப்பெடுத்த கயவர்  கூட்டத்திற்கு  உழைக்காமல் பணம் சேர்கக மட்டுமே உதவியாய் உள்ளது. 

IKEA காரர் ஒன்றும் சமூக சேவை செய்யவில்லை. அவர்கள் செய்வதும் business தான். அவர்களும் தாங்கள் எப்படி இலாபம் சம்பாதிக்கலாம் என்று தான் நிற்கிறார்கள். மலிந்த பொருட்களை விற்கும் இடங்கள் பலவும் அப்பொருளை தயாரிப்போருக்கு கஞ்ச சம்பளம் கொடுத்து தயாரித்த பொருட்களை தான் விற்பதுண்டு. வாங்கி இலாபமடைபவர்களுக்கு அது பற்றி தெரியப்போவதில்லை. 😀

பல கோவில்களில் அன்னதானங்களும் வழங்குவார்கள். உண்ண உணவில்லா மக்கள் பலர் அங்கு வாங்கி உண்பதுண்டு. அப்படிப்பார்க்கப்போனால் கோவில்களையும் ஏழை மக்களுக்கு உதவியாக உள்ளன என்ற பட்டியலில் சேர்க்கலாம்.

மரத்தில் செய்த சிலைகளாகட்டும் சிலுவைகளாகட்டும் வேறு பொருட்களில் செய்யப்படும் சிலைகளாகட்டும் சிலுவைகளாகட்டும் அவை கடவுளை வணங்குவோர் தமது உருவ வழிபாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள். அத்தி மரக்குத்தி என குத்தி முறியும் நீங்கள் ஏனோ ஏனையவை பற்றி வாய் திறக்க மறுக்கிறீர்கள். 

ஐயருக்கு கடவுளுக்கு பூசை செய்வது அவர் தொழில்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லதொரு சிந்தனை.
ஆனால் இதை எல்லா மதத்தினருமே செய்கிறார்கள்.
ஆனபடியால் நீங்கள் சொல்லுவது
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போலவே.

நீங்கள் அவரின் கருத்தை சரியாக புரியவில்லை என்று எண்ணுகிறேன் 
மரக்கட்டையை வைத்து வியாபாரம் செய்வது பொதுவாக எல்லா மதத்துக்கும் பொருந்தலாம்.
ஒரு குறிப்பிட்ட கொழுப்பெடுத்த சமூகமே தம்மை உயர்சாதி என்று கூறிக்கொண்டு 
ஒட்டுமொத்த சமூசாகத்தையும் சுரண்டிகொண்டு கொழுப்பெடுத்து வாழ்வது என்பது 
இந்திய இந்துமதவாதிகளிடம் மட்டுமே உண்டு. 

படுத்து கிடந்த அதே கட்டைதான் இப்போ சரித்து நிமிர்த்தி வைக்க பட்டுள்ளது 
இதுக்கு கூட போகும் கூட்டம் சொந்த புத்தியின்றி இந்த கொழுப்பெடுத்த சமூகத்தை 
சீராட்ட துடிப்பதை ஒரு சமூக விரும்பி தட்டி கேட்டுத்தான் ஆகவேண்டும். 

கடவுள் நம்ம்பிக்கை வேறு கடவுளை துதிப்பது வேறு 
கடவுளை காட்டி சமூகத்தை கொள்ளையடிப்பது தட்டி கேட்க வேண்டும். 

இந்த மர  குத்திகளையும் பார்ப்பான கூட்டத்தையும் 
தூக்கி எறியும்வரை தமிழருக்கு விடிவில்லை. 

Posted
3 hours ago, Maruthankerny said:

பிரச்சினை என்னவென்றால் tulpen சமூக அக்கறையில் எதையும் எழுதவில்லை. வடக்கு கிழக்கில் விகாரைகளை அமைப்பதற்கெதிராக குரல் கொடுத்த செய்தி வந்த திரியில் கூட இந்துக்களுக்கு எதிராக கருத்து எழுதியவர். 

பொன்னாலையில் மதம்மாற்றும் அல்லேலூயா கூட்டத்தை மக்கள் துரத்திய செய்தி வந்த திரியில் இந்துக்களையும், இந்து கடவுள்களையும் மட்டம் தட்டி எழுதிய நீங்களும் சமூக அக்கறையில் எழுதுவதாக எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Lara said:

பிரச்சினை என்னவென்றால் tulpen சமூக அக்கறையில் எதையும் எழுதவில்லை. வடக்கு கிழக்கில் விகாரைகளை அமைப்பதற்கெதிராக குரல் கொடுத்த செய்தி வந்த திரியில் கூட இந்துக்களுக்கு எதிராக கருத்து எழுதியவர். 

பொன்னாலையில் மதம்மாற்றும் அல்லேலூயா கூட்டத்தை மக்கள் துரத்திய திரியில் இந்துக்களையும், இந்து கடவுள்களையும் மட்டம் தட்டி எழுதிய நீங்களும் சமூக அக்கறையில் எழுதுவதாக எனக்கு தெரியவில்லை.

உலகில் நூறு  மதம் இருக்கலாம் 
எல்லாவற்றிலும் களவும் பொய்யும் இருக்கலாம் 

இந்த இந்துமதம் என் வீடு வாசல் தெரு சமூகம் என்று தொடங்கி 
நானும் ஓர் அங்கமாக இருப்பதால் என் சொந்த வாழ்வை சீரழிக்கும் வரைக்கும் 
இருக்கிறது 

அடுத்தவன் முதுகை சொரிய முன்னர் 
எனது முதுகை கழுவ வேண்டிய கடமை இருப்பதால் 
இந்துமதம் பற்றி எழுத வேண்டியதுதான் எனது பொறுப்பு 

அதை நீங்கள் எவ்வாறும் எடுத்து கொள்ளலாம் 
அது உங்கள் பார்வையை பொறுத்தது 

சுத்தம் சுகாதாரம் என்பது என் வீட்டில் இருந்து தொடங்கட்டும். 

இவ்வளவு அழுக்கையும் என் வீட்டில் வைத்துக்கொண்டு 
அடுத்தவனை பற்றி பேச எனக்கு என்ன அருகதை உண்டு? 

Posted
25 minutes ago, Maruthankerny said:

அனைத்து மதங்களிலும் பல விமர்சனங்கள் வைக்கலாம். அதற்காக ஏனைய மதத்தவர்கள் தமது மதத்தை விமர்சிக்கிறேன் என ஆரம்பிப்பதில்லை. மதங்களை விமர்சிப்பது தீர்வுமல்ல.

லண்டனிலிருந்து பிரான்ஸ் வந்த ஒரு கிறிஸ்தவ மதப்பிரச்சார குழு (ஈழத்தமிழர்கள் தான்) முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்கள் அனைவரும் பாவம் செய்த மக்கள், போர் நடப்பதே தீயவர்களை அழித்து நல்லவர்களை மட்டும் உலகில் விட்டு வைப்பதற்காக என்று கூறி பிரச்சாரம் செய்ததையும் பார்த்திருக்கிறேன்.

இப்படியானவர்களுக்காக யேசுவையோ சிலுவைகளையோ தூக்கி எறியுமாறு யாரும் சொல்வதில்லை.

பார்ப்பனர்கள் மேலுள்ள விமர்சனத்தை இந்து சமய நிகழ்வுகள் அனைத்திற்குள்ளும் கொண்டு வர வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Lara said:

உங்களுடைய மற்றும் இந்து காவலர்களின் போக்குதான் 
தமிழர்களை இப்படி லூசுகள் ஆக்கி சொந்த தாய் தந்தையை பிசாசுகள் 
என்று சொல்லிக்கொண்டு திரியும் கூட்டங்களை உருவாக்குகிறது. 

எமக்கு சைவம் என்று ஒரு அழகிய மார்க்கம் இருந்தது 
இன்று எல்லாமே திட்டம் இட்டு அழிக்கபட்டு இருக்கிறது 

வேறுபாசையில் பேசினால் சாமிக்கு விளங்கும் என்று தொடங்கி 
பல குள்ள நரி வேலைகளுடன் தென் இந்தியா வந்து சாதி பிரிவுகளை உருவாக்கி 
எமது பல சோழ மன்னர்களை கூடியிருந்தே கொலை கூட செய்து 
ஆட்சி கவிழ்ப்புக்களை செய்து தமிழர்களை சின்னா பின்னமாக்கி 
இன்று கூட கீழடி ஆய்வை செய்யவிடாது தடுத்து உலகுக்கு மறைத்து 

முதன் முதலாக இந்த பூமியில் உயரமான கட்டிடம் ஆயிரம் வருடம் முன்பு 
கட்டி இன்றும் இம்மி அளவும் அசையாமல் இருக்கும் தஞ்சை கோவிலை யுனெஸ்கோ 
பரிந்துரை செய்தும் உலக அதிசயமாக வராது தடுத்து 

பல வீதி தெரு சண்டைகள் தொடங்கி ஒரு இனமே அழிந்துபோகும் போர்களை 
பின்னிருந்து வழிநடத்தி எமது இனத்தை என்றைக்கும் எழவிடாது துடிக்கும் 
பார்ப்பன மிருகங்களை பல்லக்கில் வைத்து கொண்டு திரியும் இந்து காவலர்களால் 
வரும் .... வந்த ஆபத்துக்கள் எதுவும் 

ஜேசு கூட்டத்தால் எமக்கு வர போவதில்லை 
எல்லாம் புதுசில் இப்பிடித்தான் இருக்கும் பின்பு ஜேசுவை தூக்கிப்போட்டு விட்டு வருவார்கள் 
வராமல் போனாலும் இனத்துக்கு அழிவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்து மதம் என்பதே பார்ப்பான சிந்தனைதான் 
இதுக்கும் தமிழனான எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை 

சிவனை கடவுள் என்று ஏற்பதிலும்  சிவன் + சக்தி இல் உலகம் இயங்குகிறது 
என்ற உண்மையை ஏற்பதிலும்  
தமிழர்களை வேல் கொண்டு காத்த மூத்த அரசன் முருகனை வணங்குவதிலும் 
எனக்கு முரண்பாடு இல்லை.

தமிழ் முருகனுக்கு சமஸ்கிரதம்தான் புரியும் என்ற வேதாந்தம்தான் 
பல வேதத்தாந்திகளை உருவாக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் சைவசமயத்தவன். தினசரி கடவுள்களையும் என்னை பெற்றெடுத்தவர்களையும் வணங்குபவன்.இயற்கையை நேசித்து வணங்குபவன்.விருப்பம் வரும் போது கிறிஸ்தவ/பௌத்த மத தலங்களுக்கு செல்பவன்.தெய்வங்களிடம் பாகுபாடு பார்க்காதவன்.
நான் பாப்பனர்களையோ ஐயர்களையோ அருட்தந்தைகளையோ உண்மையான பிக்குகளையோ எதிரிகளாகவே பார்ப்பதில்லை.காரணம் அவர்கள் எனக்கு தேவையுமில்லை.தேடிப்போவதுமில்லை.என் பார்வையில் அவர்கள் சக மனிதர்கள்.அவர்களை கணக்கெடுப்பதுமில்லை.
நானும் என் கடவுள்களும் என் ஆத்ம திருப்தியும்.....
கள்ள அரசியல்வாதிகளை ஆறறிவுள்ள நீங்களே தேர்தெடுத்துவிட்டு....... சண்டைகள்/அழிவுகள் வரும்போதுகடவுள் ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் என்று   கேள்வி கேட்பது கொஞ்சம் ஓவர்.

Posted
25 minutes ago, Maruthankerny said:

உங்களுடைய மற்றும் இந்து காவலர்களின் போக்குதான் 
தமிழர்களை இப்படி லூசுகள் ஆக்கி சொந்த தாய் தந்தையை பிசாசுகள் 
என்று சொல்லிக்கொண்டு திரியும் கூட்டங்களை உருவாக்குகிறது. 

நான் சொன்னது இப்படியான மதப்பிரச்சார குழுக்களுக்காக யேசுவையோ சிலுவைகளையோ தூக்கி எறியுமாறு யாரும் சொல்வதில்லை என்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது தனிப்பட்ட கருத்து 
இந்த கோமாளிகளுக்காக ஜேசுவை தூக்கி எறியதேவை இல்லை என்பதே 
ஜேசுவை நான் ஒரு போராளியாகவே பார்க்கிறேன் 
எங்கும் போரும் மனித கொலைகளும் நடந்து கொண்டிருந்த உலகில் அன்பை 
போதித்து யாரும் அடித்தால் கூட திருப்பி அடிக்காதீர்கள் என்று வன்முறைகளை 
வெறுத்து தனது கொள்கைக்கவே வலிகளை தாங்கி இறந்து காட்டிய ஒரு போராளி.

பின்பு பார்ப்பனர்கள் போலவே இன்னொரு கூட்டம் அவரை கடவுள் ஆக்கி 
ஊரை கொள்ளையடிக்க தொடங்கியது ஏறிய  வேண்டியது வத்திக்கானையும் 
மற்ற ஏமாற்று பிழைப்பு நடத்துபவர்களையும்தான். இன்று ஜேசுவின் பெயரில் 
பலகோடி சொத்துக்களை அபகரித்து வைத்திருக்கும் வத்திக்கான் எந்த ஏழை 
கிறிஸ்த்தவருக்கும் ஒரு வேளை உணவை கூட கொடுப்பதில்லை. 

3 hours ago, Lara said:

பாப்பான் நாள்குறிப்பான்!

சூத்திரர்கள் தான் போருக்கு போவார்கள்!

சாவு நமக்கு சவுகரியம் அவனுக்கு! வரலாறு

Posted
5 hours ago, Lara said:

அனைத்து மதங்களிலும் பல விமர்சனங்கள் வைக்கலாம். அதற்காக ஏனைய மதத்தவர்கள் தமது மதத்தை விமர்சிக்கிறேன் என ஆரம்பிப்பதில்லை. மதங்களை விமர்சிப்பது தீர்வுமல்ல.

5 hours ago, Lara said:

நான் சொன்னது இப்படியான மதப்பிரச்சார குழுக்களுக்காக யேசுவையோ சிலுவைகளையோ தூக்கி எறியுமாறு யாரும் சொல்வதில்லை என்று.

உலகம் முழுவதும் மதங்களை இல்லாதாக்கும் கம்யூனிசத்தை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் கிறீஸ்தவராக பிறந்தார்.

கம்யூனிச ரஷ்யாவை உருவாக்கிய லெனின், ஸ்ராலின் எல்லோரும் ரஷ்ய பழமைவாத கிறீஸ்தவர்களாக இருந்தவர்கள்.

கம்யூனிச சீனாவை உருவாக்கிய மாவோ சே துங் பௌத்தராக இருந்தவர்.

இவர்கள் மதப்பிரச்சார குழுக்களையும் சின்னங்களையும் தூக்க எறியுமாறு சொன்னதுடன் நிறுத்திவிடவில்லை.

மதம் சார்ந்த அனைவரையும் கொன்றொழித்து மதச்சின்னங்களை அடையாளம் தெரியாமல் அழித்து மதம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையையே உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆகவே, கிறீஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் மத்தியில் மதங்களுக்கு எதிரான செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இடம் பெற்று இருக்கின்றன. 

Posted
2 hours ago, Maruthankerny said:

எனது தனிப்பட்ட கருத்து 
இந்த கோமாளிகளுக்காக ஜேசுவை தூக்கி எறியதேவை இல்லை என்பதே 
ஜேசுவை நான் ஒரு போராளியாகவே பார்க்கிறேன் 
எங்கும் போரும் மனித கொலைகளும் நடந்து கொண்டிருந்த உலகில் அன்பை 
போதித்து யாரும் அடித்தால் கூட திருப்பி அடிக்காதீர்கள் என்று வன்முறைகளை 
வெறுத்து தனது கொள்கைக்கவே வலிகளை தாங்கி இறந்து காட்டிய ஒரு போராளி.

ஜேசு கிறீஸ்து போராளி, ஆனால் வன்முறையை விரும்பாத போராளி அல்ல.

ஜெருசலேம் தேவாலயத்தில் மக்களுக்கு நேர்த்தி கடன் செலுத்த பறவைகளையும் மிருகங்களையும் விற்றுக்கொண்டு இருந்த வணிகர்களை “ எனது தந்தையின் ஆலயத்தை கள்வர் குகை ஆக்காதீர்கள்” என்று கூறி தனது இடுப்பு பட்டையை களற்றி அதனால் அடித்து விரட்டிய வன்முறையாளர் இவர். ஆனால் வன்முறை பயன் தராத இடத்தில் அதை பயன்படுத்துவதை சாதூரியமாக தடுத்து வந்தவர்.

2 hours ago, Maruthankerny said:

 ஏறிய  வேண்டியது வத்திக்கானையும் 
மற்ற ஏமாற்று பிழைப்பு நடத்துபவர்களையும்தான். இன்று ஜேசுவின் பெயரில் 
பலகோடி சொத்துக்களை அபகரித்து வைத்திருக்கும் வத்திக்கான் எந்த ஏழை 
கிறிஸ்த்தவருக்கும் ஒரு வேளை உணவை கூட கொடுப்பதில்லை. 

வத்திக்கானின் தலைமையில் ஏழைகளுக்கும் அகதிகளுக்கும் உலகளாவிய அளவில் பெருமளவில் உணவும், உறைவிடமும் மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. அன்னை திரேசாவின் அமைப்பும், திருச்சிலுவை கன்னியரின் மருத்துவ மனைகளும் இவற்றில் சிலவாகும். 

 ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிறுவனமும், சர்வதேச செஞ்சிலுவை அமைப்பும் பாதுகாப்பு கருதி முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய பின்பும் மக்களுடன் இறுதிவரை நின்றவர்கள் கத்தோலிக்க மத குருக்களும் கன்னியரும் ஆவர். அரசும் புலிகளும் இவர்களுக்கு வெளியேற அனுமதி வழங்கியும் இவர்கள் மக்களை விட்டு வெளியேற மறுத்தனர். வத்திக்கானின் பண உதவி இவர்களுக்கு இருந்தது. இவர்களில் இருவர் இறுதிப் போரில் பலியானார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Jude said:

ஜேசு கிறீஸ்து போராளி, ஆனால் வன்முறையை விரும்பாத போராளி அல்ல.

ஜெருசலேம் தேவாலயத்தில் மக்களுக்கு நேர்த்தி கடன் செலுத்த பறவைகளையும் மிருகங்களையும் விற்றுக்கொண்டு இருந்த வணிகர்களை “ எனது தந்தையின் ஆலயத்தை கள்வர் குகை ஆக்காதீர்கள்” என்று கூறி தனது இடுப்பு பட்டையை களற்றி அதனால் அடித்து விரட்டிய வன்முறையாளர் இவர். ஆனால் வன்முறை பயன் தராத இடத்தில் அதை பயன்படுத்துவதை சாதூரியமாக தடுத்து வந்தவர்.

அநேகமானவை பின்னாளில் மக்களால் எழுதப்பட்ட்டவை 
அதில் எவ்ளவு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை 
இவ்வளவு மனோதைரியமாக இருந்த ஒருவர் அப்படி செய்திருப்பார் என்று நான் நம்பவில்லை 
அப்படி நடக்கவில்லை என்பதுவும் உறுதி படுத்த முடியாதது.
அவர் அவர்களை கலைத்து  இருப்பார் .... பின்னாளில் வெற்றி வேல் வீர வேல் என்று 
எழுதியிருக்கலாம் 

ரஜனி தினகமரவை  புலிகள் குறிப்பாக காண்டீபன் சுட்டு போட்டு போனதை 
கண்ணால் கண்டவர்களை ..... கண்டு வாழும் உலகம் இது. 

வத்திக்கானின் தலைமையில் ஏழைகளுக்கும் அகதிகளுக்கும் உலகளாவிய அளவில் பெருமளவில் உணவும், உறைவிடமும் மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. அன்னை திரேசாவின் அமைப்பும், திருச்சிலுவை கன்னியரின் மருத்துவ மனைகளும் இவற்றில் சிலவாகும். 

 ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிறுவனமும், சர்வதேச செஞ்சிலுவை அமைப்பும் பாதுகாப்பு கருதி முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய பின்பும் மக்களுடன் இறுதிவரை நின்றவர்கள் கத்தோலிக்க மத குருக்களும் கன்னியரும் ஆவர். அரசும் புலிகளும் இவர்களுக்கு வெளியேற அனுமதி வழங்கியும் இவர்கள் மக்களை விட்டு வெளியேற மறுத்தனர். வத்திக்கானின் பண உதவி இவர்களுக்கு இருந்தது. இவர்களில் இருவர் இறுதிப் போரில் பலியானார்கள்.

இது கூட செய்யவில்லை என்றால் ...
கஸ்டமருக்கு எங்கு போவது?
ஏதும் பித்தலாட்டம் செய்து அதுக்கு விளம்பரம் செய்தால்தானே 
மக்களை தொடர்ந்தும் ஏய்த்து புடுங்கலாம்.
இத்தாலி ஸ்டார்க் மார்க்கெட்டில் 15-20 வீதம் வரை வத்திக்கான் 
தனது கட்டுப்பாட்டில் முதலீடு செய்து வைத்த்திருக்கிறது 
இதில் வரும் லாபத்தை எடுத்து கொடுத்தால் கூட  உலகில் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் 
உணவு உடை வீடு கொடுக்க முடியும்.
இதைவிட பெரிய முதலீடுகளை வங்கிகளிலும் மற்றும் இயற்கை கனிமங்களிலும் 
செய்து இருக்கிறது.

தனி தனியே வரும் போது பல பாதிரியார்கள் பாரிய தியாங்களை செய்து இருக்கிறார்கள் 
அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நாம் யோக்கியவான்கள் இல்லை என்பதுதான் உண்மை 
அது வத்திக்கானையோ கிறிஸ்தவ மதத்தையோ சாராது என்பது எனது நிலைப்பாடு 
காரணம் அப்படியெனில் எல்லோரும் அவ்வாறு இருக்க வேண்டும்  ..... மாறாக 
கிறிஸ்தவ பாதிரி மார்களால்  பெண்களுக்கும் சிறார்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துஸ்பிரயோகம் 
இன்னும் எந்த இராணுவத்தலும் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. 

அது போதாது என்று இப்போ இதுக்காகவே ஜெகோவா அல்லேலூயா என்று 
ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு. 

Posted
12 hours ago, Jude said:

உலகம் முழுவதும் மதங்களை இல்லாதாக்கும் கம்யூனிசத்தை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் கிறீஸ்தவராக பிறந்தார்.

கம்யூனிச ரஷ்யாவை உருவாக்கிய லெனின், ஸ்ராலின் எல்லோரும் ரஷ்ய பழமைவாத கிறீஸ்தவர்களாக இருந்தவர்கள்.

கம்யூனிச சீனாவை உருவாக்கிய மாவோ சே துங் பௌத்தராக இருந்தவர்.

இவர்கள் மதப்பிரச்சார குழுக்களையும் சின்னங்களையும் தூக்க எறியுமாறு சொன்னதுடன் நிறுத்திவிடவில்லை.

மதம் சார்ந்த அனைவரையும் கொன்றொழித்து மதச்சின்னங்களை அடையாளம் தெரியாமல் அழித்து மதம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையையே உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆகவே, கிறீஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் மத்தியில் மதங்களுக்கு எதிரான செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இடம் பெற்று இருக்கின்றன. 

பல கிறிஸ்தவ நாடுகளில் கிறிஸ்தவ எதிர் அரசியல் நடப்பதுண்டு என நான் இன்னொரு திரியில் எழுதியிருந்தேன். அவர்கள் பின்னணி அரசியலுடன் இயங்குபவர்கள்.

நான் இங்கு சொல்ல வந்தது தனது மதத்தை விமர்சனம் செய்கிறேன் என்று மருதங்கேணி அவர்கள் அத்தி மரக்குத்தியை தூக்கி எறியுமாறு சொல்வது போல் ஏனைய மதத்தினர் சொல்வதில்லை.

கடவுள் சிலைகளையோ, பார்ப்பனர்களையோ தூக்கி எறிந்து இந்துக்களின் கோவில்களையும் உடைத்து அழித்து விட்டால் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை. அவ்விடத்தை கிறிஸ்தவமும் பௌத்தமும் இஸ்லாமும் ஆக்கிரமிக்கும், அரசியல் பிரச்சினை தொடரும்.

Posted
On 8/6/2019 at 9:23 PM, Maruthankerny said:

நீங்கள் அவரின் கருத்தை சரியாக புரியவில்லை என்று எண்ணுகிறேன் 
மரக்கட்டையை வைத்து வியாபாரம் செய்வது பொதுவாக எல்லா மதத்துக்கும் பொருந்தலாம்.
ஒரு குறிப்பிட்ட கொழுப்பெடுத்த சமூகமே தம்மை உயர்சாதி என்று கூறிக்கொண்டு 
ஒட்டுமொத்த சமூசாகத்தையும் சுரண்டிகொண்டு கொழுப்பெடுத்து வாழ்வது என்பது 
இந்திய இந்துமதவாதிகளிடம் மட்டுமே உண்டு. 

படுத்து கிடந்த அதே கட்டைதான் இப்போ சரித்து நிமிர்த்தி வைக்க பட்டுள்ளது 
இதுக்கு கூட போகும் கூட்டம் சொந்த புத்தியின்றி இந்த கொழுப்பெடுத்த சமூகத்தை 
சீராட்ட துடிப்பதை ஒரு சமூக விரும்பி தட்டி கேட்டுத்தான் ஆகவேண்டும். 

கடவுள் நம்ம்பிக்கை வேறு கடவுளை துதிப்பது வேறு 
கடவுளை காட்டி சமூகத்தை கொள்ளையடிப்பது தட்டி கேட்க வேண்டும். 

இந்த மர  குத்திகளையும் பார்ப்பான கூட்டத்தையும் 
தூக்கி எறியும்வரை தமிழருக்கு விடிவில்லை. 

தங்கள் புரிதலுக்கும் தொடர்ந்த  சிறப்பான கருத்துக்களுக்கும் நன்றி. பயணத்தில் இருப்பதால் wifi வசதி இல்லாததால் விரிவாக எழுத முடியவில்லை. 

Posted
On 8/6/2019 at 2:13 PM, ஈழப்பிரியன் said:

நல்லதொரு சிந்தனை.
ஆனால் இதை எல்லா மதத்தினருமே செய்கிறார்கள்.
ஆனபடியால் நீங்கள் சொல்லுவது
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போலவே.

எல்லா மதத்திலும் பல்வாறான பிற்போக்குத்தனமான நடைமுறைகள் உள்ளன. மருதூர்கணி குறிப்பிட்டவாறு எனது வீட்டை நான் சுத்தப்படுத்தாது இன்னொருவரை நோக்கி கைநீட்ட முடியாது. 

பிறப்பால் வளர்ப்பால் இந்துமத பின்னனி உள்ளவர்கள் அதிலுள்ள பிற்போக்குத்தனமானவற்றை அவர்கள்தான் வெளிக்கொணர்தல் வேண்டும். அதைத்தான் களஉறவுகள் துல்பன், மருதூர்க்கணி கோசான், மற்றும் நடிகர் கமலகாசன் போன்றோர் செய்கின்றார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.