Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் – மைத்திரி, ரணில், மோடிக்கு அவசரக் கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் – மைத்திரி, ரணில், மோடிக்கு அவசரக் கடிதம்!

In இலங்கை     August 3, 2019 8:37 am GMT     0 Comments     1355     by : Dhackshala

Maithirri-Ranil-Modi.jpg

வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்து அமைப்புக்களின் ஒன்றியம் அவசரக்கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அந்த அமைப்பினால் அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமீபகாலமாக வரலாற்றுக் காலம் முதல் அமைக்கப்பட்டிருந்த இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் ஆலய வளைவு உடைக்கப்படுவதும் பௌத்தர்கள் வாழ்ந்திராத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதும் இலங்கை வாழ் இந்துக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்வரும் வலுவான கோரிக்கைகளை  கவனத்திற்கொண்டு  உரிய நடவடிக்கையை மேற்கொண்டு இந்துக்கள் அனைவரும் அச்சமின்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தி உதவுமாறு தயவாக வேண்டுகின்றோம்.

01)இலங்கை வேந்தன் இராவணண் காலம் முதல் இந்துக்களால் பாதுகாக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வந்த கன்னியா வெந்நீருற்றுப் பகுதியையும் அங்கிருந்த ஆலயங்களையும் தடையேதுமின்றி மீளவும் அமைத்து வழிபாடு செய்வதற்கும் இந்தப் பகுதி சைவத் தமிழரின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதையும் உறுதிப்படுத்தல். இந்தப் பிரதேசத்துக்கு அண்மையில் பௌத்த விகாரைகள் அமைத்தலைத் தடுத்தல்.

02) வெடுக்குநாறி சிவன் ஆலயத்துக்குச் செல்லும் பாதையூடாக தடையின்றி போக்குவரத்துச் செய்வது, அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கான ஏணிப் படிகளை அமைக்க பொலிஸாரும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தாது இருத்தல்.

03) மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் இடித்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சர ஆலய வளைவை முன்பிருந்த இடத்தில் சமாதானமான முறையில் மீள அமைப்பதற்கு ஏற்பாடு செய்து மத நல்லிணக்கத்தைப் பேணுதல்.

04) தொல்லியில் திணைக்களம் நடுநிலைமை தவறி பக்கச்சார்பாகச் செயற்பட்டு பௌத்த வரலாற்றுச் சின்னங்கள் காணப்படாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை ஊக்கப்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டிப்பதோடு அத்திணைக்களத்துக்கு தகுதியான சைவத் தமிழர்களையும் நியமித்து குறித்த திணைக்களம் பக்கச்சார்பின்றி செயற்படுவதை உறுதிப்படுத்துதல்.

05)சைவத் தமிழ் மக்களின் வாழ்விடங்களில் போலியான வரலாற்றை உருவாக்கி விகாரைகள் அமைத்தலை நிறுத்துதல், புதிதாக 1000 விகாரைகள் அமைக்கும் அரசின் திட்டம் வடக்கு, கிழக்கு தமிழ் பகுதிகளில் அமுல் செய்வதைத் தவிர்த்தல்.

06) மதமாற்றங்களைத் தடை செய்தல்.

07) முல்லைத்தீவு செம்மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்யாதிருத்தல்.

08) நீராவியடிப்பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மத வழிபாட்டுத் தலங்கள் இருந்தமைக்கான ஆதாரமே இல்லை என்று தொல்பொருள் திணைக்களமே கூறியுள்ள நிலையில் அங்கு விகாரைகள் அமைத்தலைத் தடை செய்தல்.

09) வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை நிறுத்துதல்.

மேலே விவரிக்கப்பட்ட எமது நியாயமான கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலித்து அவற்றைச் செயற்படுத்துவதற்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து மத நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தித்தருமாறு வேண்டிநிற்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/பௌத்த-மேலாதிக்க-செயற்பாட/

ஹாவ்  எ பிளான் பி ஜி !

சரி, பதில் இல்லை ஆனால், அச்சுறுத்தல் மற்றும் பௌத்த விகாரைகள் ஆக்கிரமிப்பு தொடரும் பொழுது அடுத்த நடவடிக்கை என்ன?  

"வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்து அமைப்புக்களின் ஒன்றியம் அவசரக்கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அந்த அமைப்பினால் அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது."

இணைத்த கடிதத்தில் ஒரு அனுமார் கோயிலையும் குறிப்பிட்டு இருந்தால், சிறப்பு !

பிளான் பி ஆக, யாழில் உள்ள இந்திய துணை தூதரகம் முன்னால் ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் செய்யலாம் !

தமிழர்களாக தமது அடிப்படை நியாயமான உரிமைகளுக்காக அகிம்ஸை முறையில்  போராடிய போது எல்லா கடவுளும் பாராமுகம்.  அடுத்து ஆயுத போராட்டத்தின் போதும் கடவுள் துணைக்கு வரவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போதும் கடவுள்   கண்திறக்கவில்லை. மாறாக அப்பாவி மக்களை கொன்று குவிக்க துணை நின்றது இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்து தேசம்.   அந த பாரிய மனித அழிவின் பின்னரும் அந்த மக்களுக்கான உரிமை வழங்கப்படாமல் இருக்க ஐநா சபையில் அநீதிக்கு துணை நின்றது இந்திய தேசம். இதுதான் யதார்ததம். 

இன்றைய நிலையில் யதார்த்தத்தை புரிந்துகோண்டு ,  யாரையும் குற்றம் சாட்டி நேரத்தை விரயம் செய்யாமல்,    இருக்கும் சிறிதளவு வளங்களை வினை திறனுடன் பயன் படுத்தி மக்களின் பொருளாதாரத்தை உயர்ததுவதே இன்றைய தேவை. அதை விடுத்து எம்மை அழித்ததவர்களிடம் இந்துவாக பிச்சை எடுப்பதல்ல. இருக்கும் வளங்களை கோவில்கட்டி பாழாக்கினால் எமது மக்களின்  பொருளாதாரம் எப்படி வளரும்?  

இருக்கும் வளங்களை வைத்து புலம் பெயர் முதலீட்டாளர்களின் துணையுடன்  முதலீடுகளை உருவாக்கி மக்களின் உழைப்புடன்  பொளாதாரத்தை வல்லமையுடன்  வளப்படுத்தி மக்களின் வாழ்ககைத்தரம் உயர்த்துவதே தற்போதைய தேவை.

அதன் பின்னர் வேண்டுமானால் ஒரு சில வேலை வெட்டி இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து  தமது சொந்த மனத்திருப்திக்காக, பொழுது போக்கிற்காக கோவில்களுடன் தமது நேரத்தை செலவிடலாம். அதற்கான அவர்களின் உரிமையும் வழங்கபடல் வேண்டும்.  

7 minutes ago, tulpen said:

தமிழர்களாக தமது அடிப்படை நியாயமான உரிமைகளுக்காக அகிம்ஸை முறையில்  போராடிய போது எல்லா கடவுளும் பாராமுகம்.  அடுத்து ஆயுத போராட்டத்தின் போதும் கடவுள் துணைக்கு வரவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போதும் கடவுள்   கண்திறக்கவில்லை. மாறாக அப்பாவி மக்களை கொன்று குவிக்க துணை நின்றது இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்து தேசம்.   அநத பாரிய மனித அழிவின் பின்னரும் அந்த மக்களுக்கான உரிமை வழங்கப்படாமல் இருக்க ஐநா சபையில் அநீதிக்கு துணை நின்றது இந்திய தேசம். இதுதான் யதார்ததம். 

தமிழர்கள் மட்டுமல்ல, உலகில் பல இனங்கள் கடவுளை வணங்குகிறார்கள். அவர்களும் அழிவுகளை சந்திக்கிறார்கள். அதற்காக அவர்கள் தமது மதத்தை விட்டுக்கொடுப்பதில்லை. 

சாத்தானை வணங்குபவர்களும் உள்ளார்கள். சாத்தானுக்கு தேவாலயங்களும் வைத்திருக்கிறார்கள். அவர்களும் தமக்கு ஆதரவு திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றை தடுக்க முடியாது.

இன்னொரு திரியில் முன்னர் எழுதியிருந்தேன், இந்திய இந்துத்துவா ஆரியர்களை மட்டுமே இந்துக்களாக கருதுபவர்கள், தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் அவர்களை அழிக்க தான் நினைப்பார்கள் என்று.

20 minutes ago, tulpen said:

இன்றைய நிலையில் யதார்த்தத்தை புரிந்துகோண்டு ,  யாரையும் குற்றம் சாட்டி நேரத்தை விரயம் செய்யாமல்,    இருக்கும் சிறிதளவு வளங்களை வினை திறனுடன் பயன் படுத்தி மக்களின் பொருளாதாரத்தை உயர்ததுவதே இன்றைய தேவை. அதை விடுத்து எம்மை அழித்ததவர்களிடம் இந்துவாக பிச்சை எடுப்பதல்ல. இருக்கும் வளங்களை கோவில்கட்டி பாழாக்கினால் எமது மக்களின்  பொருளாதாரம் எப்படி வளரும்?  

இருக்கும் வளங்களை வைத்து புலம் பெயர் முதலீட்டாளர்களின் துணையுடன்  முதலீடுகளை உருவாக்கி மக்களின் உழைப்புடன்  பொளாதாரத்தை வல்லமையுடன்  வளப்படுத்தி மக்களின் வாழ்ககைத்தரம் உயர்த்துவதே தற்போதைய தேவை.

அதன் பின்னர் வேண்டுமானால் ஒரு சில வேலை வெட்டி இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து  தமது சொந்த மனத்திருப்திக்காக, பொழுது போக்கிற்காக கோவில்களுடன் தமது நேரத்தை செலவிடலாம். அதற்கான அவர்களின் உரிமையும் வழங்கபடல் வேண்டும்.  

மதங்களை வைத்து மற்றவர்கள் அரசியல் செய்யும் போது கோவில்களை அழித்து பௌத்த விகாரைகளை அமைக்கும் போது அதன் மூலம் இலங்கையை சிங்கள பௌத்த தேசமாக மாற்ற முயலும் போது அதற்கெதிராக குரல் கொடுப்பதில் ஒரு தவறும் இல்லை.

12 minutes ago, Lara said:

மதங்களை வைத்து மற்றவர்கள் அரசியல் செய்யும் போது கோவில்களை அழித்து பௌத்த விகாரைகளை அமைக்கும் போது அதன் மூலம் இலங்கையை சிங்கள பௌத்த தேசமாக மாற்ற முயலும் போது அதற்கெதிராக குரல் கொடுப்பதில் ஒரு தவறும் இல்லை.

மதங்களை விட்டுக்கொடுக்குமாறு நான் கூறவில்லையே. தமிழர்களாக. மனிதர்களாக உழைப்பில் எமது வளங்களை பெருக்கிய பின்னர்  மதங்களை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கடைப்படிக்க உரிமை உண்டு என்று தானே எழுதினேன். வாசிக்க வில்லையா? 

27 minutes ago, tulpen said:

மதங்களை விட்டுக்கொடுக்குமாறு நான் கூறவில்லையே. தமிழர்களாக. மனிதர்களாக உழைப்பில் எமது வளங்களை பெருக்கிய பின்னர்  மதங்களை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கடைப்படிக்க உரிமை உண்டு என்று தானே எழுதினேன். வாசிக்க வில்லையா? 

நீங்கள் பல திரிகளில் இந்துக்களுக்கு எதிராக கருத்து எழுதி வருபவர். இத்திரியிலும் அதையே செய்தீர்கள்.

கோவில்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்படுவதற்கெதிராக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர்களாக மனிதர்களாக உழைப்பில் எமது வளங்களை பெருக்கிய பின் தான் எதையும் செய்ய வேண்டும் என்றால் பின் வடக்கு கிழக்கு முழுவதும் கோவில்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் ஆட்கொண்டு விடும்.

உங்கள் ஆலோசனைகளை போய் சிங்கள பௌத்தர்களுக்கு உபதேசியுங்கள்.

Edited by Lara

13 minutes ago, Lara said:

நீங்கள் பல திரிகளில் இந்துக்களுக்கு எதிராக கருத்து எழுதி வருபவர். இத்திரியிலும் அதையே செய்தீர்கள்.

கோவில்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்படுவதற்கெதிராக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர்களாக மனிதர்களாக உழைப்பில் எமது வளங்களை பெருக்கிய பின் தான் எதையும் செய்ய வேண்டும் என்றால் பின் வடக்கு கிழக்கு முழுவதும் விகாரைகள் ஆட்கொண்டு விடும்.

உங்கள் ஆலோசனைகளை போய் சிங்கள பௌத்தர்களுக்கு உபதேசியுங்கள்.

ஆன்மீகம் என்பது அவரவர் தனிப்பட்ட உணர்வு  மட்டுமே. இந்து மதத்தின் பெயரால் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் விதைக்கப்பட்ட மூடப்பழக்கங்களையே நான் எதிர்ககிறேன். மனிதர்களிளின் ஆன்மீக உணர்விற்று எதிராக  நான் எழுதியது இல்லை. ஆன்மீகம் என்ற போர்வையில் மடைத்தனபான மூடப்பழக்கங்களை ஊக்குவிப்போருக்கு மட்டுமே நான் எழுதும் உண்மை  கசக்கிறது. 

19 minutes ago, Lara said:

ஆன்மீக உணர்வுள்ளவர்கள் தமக்கென ஒரு வழிபாட்டு முறையை கொண்டுள்ளார்கள். அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் அதில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு பாடம் எடுக்க விளைவது தான் பிரச்சினை.

மற்றைய மதங்களிலும் மூடப்பழக்கங்கள் இப்பொழுதும் உள்ளன. அது உங்கள் போன்றோரின் கண்களுக்கு ஏனோ தெரிவதல்லை போலும்.

உலகமே மதங்களை வைத்து அரசியல் நடத்துகிறது. இலங்கை அரசும் பௌத்த மதத்தை வைத்து அரசியல் நடத்துகிறது. இலங்கையின் வடக்கு கிழக்கில் கோவில்கள் அழிக்கப்படுவதற்கும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கும் எதிராக குரல் கொடுக்காவிட்டால் நாளைக்கு தமிழினமே இருக்காது உழைப்பில் உயர்வு காண. 

வடக்கு கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்திற்கெதிராக குரல் கொடுக்கும் செய்தி தலைப்பில் வந்து இந்து எதிர் கருத்தை வைத்தமைக்கு நீங்கள் ஏதும் விளக்கம் தரப்போவதில்லை.

இன்்று முன்னேறிய நாடுகாள உள்ள ஐரோப்பிய நாடுகள் கிறிஸ்தவ மத்ததை தீவிரமாக கடைப்பிடித்தை  வைத்து அரசியல் நடத்திய காலத்தில்  அவர்களால் முனேற முடியவில்லை. மதங்களை கடந்து சிந்தித்த பின்னரே அவர்களால் முன்னேற முடிந்தது. அது தான் தமிழர்களாக எமது வளங்களை கொண்டு நாம் முன்னேறும் பொது தமிழினம் உயர்வு பெறும். மத அடிப்படையில் அமைப்புகளின்  பின்னால் நிற்பது எமது வளங்களை வீண்டிக்கவே செய்யம் . 

9 hours ago, tulpen said:

ஆன்மீகம் என்பது அவரவர் தனிப்பட்ட உணர்வு  மட்டுமே. இந்து மதத்தின் பெயரால் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் விதைக்கப்பட்ட மூடப்பழக்கங்களையே நான் எதிர்ககிறேன். மனிதர்களிளின் ஆன்மீக உணர்விற்று எதிராக  நான் எழுதியது இல்லை. ஆன்மீகம் என்ற போர்வையில் மடைத்தனபான மூடப்பழக்கங்களை ஊக்குவிப்போருக்கு மட்டுமே நான் எழுதும் உண்மை  கசக்கிறது. 

7 hours ago, tulpen said:

இன்்று முன்னேறிய நாடுகாள உள்ள ஐரோப்பிய நாடுகள் கிறிஸ்தவ மத்ததை தீவிரமாக கடைப்பிடித்தை  வைத்து அரசியல் நடத்திய காலத்தில்  அவர்களால் முனேற முடியவில்லை. மதங்களை கடந்து சிந்தித்த பின்னரே அவர்களால் முன்னேற முடிந்தது. அது தான் தமிழர்களாக எமது வளங்களை கொண்டு நாம் முன்னேறும் பொது தமிழினம் உயர்வு பெறும். மத அடிப்படையில் அமைப்புகளின்  பின்னால் நிற்பது எமது வளங்களை வீண்டிக்கவே செய்யம் . 

பல கிறிஸ்தவ நாடுகளில் கிறிஸ்தவ எதிர் அரசியல் நடப்பதுண்டு. அது தெரியாதோர் ஏதோ அவர்கள் மதங்களை கடந்து சிந்தித்து விட்டார்கள் என நினைப்பதுண்டு.

ஒபாமா கிறிஸ்தவத்திற்கு எதிரானவர் என பலருக்கும் தெரியும். ட்ரம்ப் கிறிஸ்தவத்துக்கு ஆதரவானவர் என நினைத்து பலர் அவருக்கு வாக்களித்தார்கள். ஆனால் அவரும் வெளிக்கு கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக கதைத்தாலும் உண்மையில் கிறிஸ்தவ ஆதரவாளரா என்பது கேள்விக்குறி. ஏனைய பல நாடுகளிலும் கூட மதம் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது.

Edited by Lara

1 hour ago, tulpen said:

இன்்று முன்னேறிய நாடுகாள உள்ள ஐரோப்பிய நாடுகள் கிறிஸ்தவ மத்ததை தீவிரமாக கடைப்பிடித்தை  வைத்து அரசியல் நடத்திய காலத்தில்  அவர்களால் முனேற முடியவில்லை. மதங்களை கடந்து சிந்தித்த பின்னரே அவர்களால் முன்னேற முடிந்தது. அது தான் தமிழர்களாக எமது வளங்களை கொண்டு நாம் முன்னேறும் பொது தமிழினம் உயர்வு பெறும். மத அடிப்படையில் அமைப்புகளின்  பின்னால் நிற்பது எமது வளங்களை வீண்டிக்கவே செய்யம் . 

ஆனால் இன்றும் பல முட்டாள்கள் பல மதவெறியர்கள் கிருத்துவத்தை பரப்புவதிலும், அதை நியாயப்படுத்துவதிலும் இறங்கியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு மோட்டு கும்பல் மதவெறி பிடித்து கிருத்துவ மதத்தை மலினப்படுத்தி விற்பனை செய்து கொண்டிருக்கும் போது, கையாலாகாத தமிழரசுக் கட்சியினர் ஹிந்திய மதவெறிக் கும்பலிடம் இந்து சமயத்தை பாதுகாக்க கையேந்துகின்றனர்.

மோடி இலங்கை வந்தபோது சம்மந்தன்-சுமந்திரன்-மாவை-சித்தார்த்தன் உட்பட்ட தங்கள் கைக்கூலிக் கும்பலை கண்துடைப்புக்கு சந்தித்து உடனடியாக இந்தியா வந்து தமிழரின் பிரச்சினை பற்றி கதைக்க கூப்பிட்டு நாடகமாடிய பின்னர் இன்றுவரை எதுவும் நடக்கவில்லை.

18 minutes ago, போல் said:

ஆனால் இன்றும் பல முட்டாள்கள் பல மதவெறியர்கள் கிருத்துவத்தை பரப்புவதிலும், அதை நியாயப்படுத்துவதிலும் இறங்கியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் மதங்களோடு நேரத்தை வீண்டிக்கும் வேலை வெட்டி இல்லாதவர்கள் உள்ளார்கள். அவர்ளை புறக்கணிக்குமாறே நானும் கூறுகிறேன்.அறிவை உபயோகித்து எம்மை முன்னேற்றுவதே இப்படியான மத முட்டாள்தனங்களில் இருந்து எம்மை காப்பாற்றும் ஒரே வழி.  

Edited by tulpen

பலருக்கு மதம் மாற்றுவதே சம்பளம் வாங்கிக்கொண்டு செய்யும் தொழில் தானே? 😀 

சரி அதை விடுங்கள்.

உங்கள் அறிவை உபயோகித்து கூறுங்கள்.

இலங்கை அரசு வடக்கு கிழக்கில் கோவில்களை அழிக்கிறார்கள், விகாரைகளை அமைக்கிறார்கள். அதற்கெதிராக குரல் கொடுக்காமல் அப்படியே விடுவதா? இது பற்றி உங்கள் கருத்து என்ன?

விட்டால் விரைவில் வடக்கு கிழக்கெங்கும் விகாரைகள் மயமாக காட்சியளிக்கும். அடுத்த கட்டமாக இந்து, கிறிஸ்தவ தமிழர்களை பௌத்தர்களாக மாற்றி பின் சிங்கள மொழி பேசும் இனமாக மாற்றுவர். தமிழினம் விரைவில் அழியும்.

Edited by Lara

49 minutes ago, Lara said:

குரல் கொடுக்கலாம் . ஆனால் பிரயோசனமற்ற வேலை.  தமிழராக வெல்ல முடியாதவர்கள் இந்துவாக என்றுமே வெல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் முறையிடும் இந்து தேசத்தினரைஒபொறுத்தவரை நாம் கீழ்ஜாதி இந்துக்கள். பெளத்தர்களே அவகளுக்கு சமமானவர்கள். 

11 minutes ago, tulpen said:

குரல் கொடுக்கலாம் . ஆனால் பிரயோசனமற்ற வேலை.  தமிழராக வெல்ல முடியாதவர்கள் இந்துவாக என்றுமே வெல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் முறையிடும் இந்து தேசத்தினரைஒபொறுத்தவரை நாம் கீழ்ஜாதி இந்துக்கள். பெளத்தர்களே அவகளுக்கு சமமானவர்கள். 

உங்கள் பதிலுக்கு நன்றி.

தமிழர்களுக்கு சிங்களவர்கள் தீர்வு தர மாட்டார்கள் என்பதற்காக தீர்வுக்காக முயற்சிக்காமல் இருப்பதில்லை. அது போல் தான் இதுவும்.

7 hours ago, போல் said:

ஆனால் இன்றும் பல முட்டாள்கள் பல மதவெறியர்கள் கிருத்துவத்தை பரப்புவதிலும், அதை நியாயப்படுத்துவதிலும் இறங்கியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு மோட்டு கும்பல் மதவெறி பிடித்து கிருத்துவ மதத்தை மலினப்படுத்தி விற்பனை செய்து கொண்டிருக்கும் போது, கையாலாகாத தமிழரசுக் கட்சியினர் ஹிந்திய மதவெறிக் கும்பலிடம் இந்து சமயத்தை பாதுகாக்க கையேந்துகின்றனர்.

மோடி இலங்கை வந்தபோது சம்மந்தன்-சுமந்திரன்-மாவை-சித்தார்த்தன் உட்பட்ட தங்கள் கைக்கூலிக் கும்பலை கண்துடைப்புக்கு சந்தித்து உடனடியாக இந்தியா வந்து தமிழரின் பிரச்சினை பற்றி கதைக்க கூப்பிட்டு நாடகமாடிய பின்னர் இன்றுவரை எதுவும் நடக்கவில்லை.

நல்ல கருத்து!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.