Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 21 வயது இளைஞர் சுட்டதில் 20 பேர் பலி; 26 பேர் காயம்

Featured Replies

டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் உயிரிழப்பு; 26 பேர் காயம்படத்தின் காப்புரிமைAFP

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணதிலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம்மாகாண ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிடிபட்டுள்ள துப்பாக்கித்தாரியின் பெயர் பேட்ரிக் கிருசிஸ் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,046 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டல்லாஸ் நகரை சேர்ந்தவர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கண்காணிப்பு ஒளிப்பட கருவியில் பதிவான சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் அடர் நிற மேலாடையை உடுத்தியுள்ள நபர், கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

https://www.bbc.com/tamil/global-49224013

 

  • கருத்துக்கள உறவுகள்

EBEmIsXXkAId_rF?format=jpg&name=900x900

Confirmed Photo of the shooter as he entered the Cielo Vista Walmart store.

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில்...  இப்படியாக சகட்டுமேனிக்கு, . சுடுவது  ஒரு  மனவியாதி  போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவரை நேரில் பார்த்தேன்- வோல்மார்ட் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி

அமெரிக்காவின் எல்பசோ நகரில் உள்ள வோல்மார்ட் வணிகவளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை நேரில் பார்த்தேன் என எல்பசோவை சேர்ந்த வனேசா சயின்ஸ் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.

முதலில் சத்தம் கேட்டவேளை நான் பட்டாசுகள் என நினைத்தேன் ஆனால் வணிக வளாகத்தில் உள்ளவர்கள் வித்தியாசமாக நடந்துகொள்வதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எனது தாயார் அந்த சத்தங்கள் வேறு மாதிரியானவையாக தோன்றுகின்றன என தெரிவித்ததை  தொடர்ந்து நான் வோல்மார்ட்டிற்குள் நுழைந்து அங்கு மறைந்திருக்கலாம் என நினைத்து உள்ளே நுழைந்த வேளை நபர் ஒருவரை துப்பாக்கியுடன் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கிருந்தவர்கள் துப்பாக்கியை நீட்டி அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார் மூன்று நான்கு பேர் விழுந்து இறப்பதை பார்த்தேன் அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் எனவும் அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

aptopix-texas-mall-shooting.jpg

அமெரிக்காவின் எல்பசோ நகரில் உள்ள வோல்மார்ட் வணிகவளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை நேரில் பார்த்த வோல்மார்ட் ஊழியர் ஒருவர் தனது அச்சமூட்டும் அனுபவத்தினை விபரித்துள்ளார்.

முதலில் சத்தங்கள் கேட்டவேளை தான் பெட்டிகள் விழும் சத்தம் என நினைத்ததாக அந்த பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.

எனினும் சத்தங்கள் அருகில் கேட்க தொடங்க நான் உண்மையை உணரத்தொடங்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நானும் எனது சக பணியாளரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் அச்சமடைந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னால் என்னால் முடிந்தளவிற்கு அங்கு காணபட்டவர்களை வெளியேற்றினேன் பெற்றோரை தவறவிட்ட குழந்தையை கூட வெளியேற்றினனேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துப்பாக்கி தாக்குதல்களை மேற்கொண்ட நபர் வணிகவளாகத்தில் காணப்பட்டவர்களை சுற்றிவளைத்து ஓரிடத்தில் வைத்து அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

el-paso-shooting-1.jpg

சிறுவன் ஒருவன் அமெரிக்காவின் எல்பசோ நகரின் வணிக வளாகத்தில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுகின்றுத  என  எச்சரித்தான் ஆனால் எவனும் அவன் சொன்னதை கருத்திலெடு;க்கவில்லை என மற்றுமொரு வணிகவளாகத்தில் காணப்பட்ட நபர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.

டெக்சாஸ் வோல்மார்ட் துப்பாக்கி தாக்குதல் சம்பவத்தில் 20 ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சிலோ விஸ்டா வணிகவளாகத்தில் விளையாட்டு பொருட்கள் காணப்படும் இடத்தில் தான் நின்றுகொண்டிருந்தவேளை குழந்தையொன்று ஓடிவந்து வோல்மார்ட்டில் துப்பாக்கிதாரி பிரயோகம் இடம்பெறுகின்றுத    என தெரிவித்தது என கிளென்டன் ஓக்லி என்பவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குழந்தையின் வயது காரணமாகவும் அருகிலுள்ள வோல்மாட்டிலேயே துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்ததன் காரணமாகவும் அந்த குழந்தை தெரிவித்ததை யாரும் தீவிரவமாக எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு சில நிமிடங்களின் பின்னர் துப்பாக்கி பிரயோகங்களை தான் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/61893

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா டெக்சாஸ் மற்றும் ஒஹாயோ துப்பாக்கிச்சூடு: 29 பேர் பலி - அந்நாட்டில் நடப்பது என்ன?

அமெரிக்கா துப்பாக்கிச்சூடு 29 பேர் பலி - அந்நாட்டில் நடப்பது என்ன?படத்தின் காப்புரிமைEPA

டெக்சாஸ் மற்றும் ஒஹாயோ பகுதிகளில் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 29 பேர் பலியாகி உள்ளனர்.

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்தத் தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா துப்பாக்கிச்சூடு 29 பேர் பலி - அந்நாட்டில் நடப்பது என்ன?படத்தின் காப்புரிமைAFP

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம்மாகாண ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிடிபட்டுள்ள துப்பாக்கிதாரியின் பெயர் பேட்ரிக் கிருசிஸ் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,046 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டல்லாஸ் நகரை சேர்ந்தவர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்கா துப்பாக்கிச்சூடு 29 பேர் பலி - அந்நாட்டில் நடப்பது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கண்காணிப்பு ஒளிப்பட கருவியில் பதிவான சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் அடர் நிற மேலாடையை உடுத்தியுள்ள நபர், கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

மோசமான தாக்குதல்

நவீன அமெரிக்கா வரலாற்றில் நடந்த எட்டாவது மோசமான தாக்குதல் என இந்த டெக்சாஸ் தாக்குதல் வர்ணிக்கப்படுகிறது.

அமெரிக்கா துப்பாக்கிச்சூடு 29 பேர் பலி - அந்நாட்டில் நடப்பது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தாக்குதல் சம்பவத்தை 'கோழைத்தனமான செயல்' என வர்ணித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "அப்பாவி மக்களை கொல்வதை எதனைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @EPPOLICE
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @EPPOLICE

கொல்லப்பட்டவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. ஆனால், பலியானவர்களில் மூன்று பேர் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

வெள்ளை தேசியவாதம்

இந்தத் தாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாத நபரால் பகிரப்பட்ட வெள்ளை தேசியவாத அறிக்கை குறித்து போலீஸ் மற்றும் எஃப்.பி.ஐ விசாரித்து வருகிறது.

அமெரிக்கா துப்பாக்கிச்சூடு 29 பேர் பலி - அந்நாட்டில் நடப்பது என்ன?படத்தின் காப்புரிமைREUTERS

உள்ளூர் ஹிஸ்பானிக் சமூகத்தை குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அறிக்கை விவரிக்கிறது.

ஒஹாயோ துப்பாக்கிச்சூடு

இதுபோல டைடூன் பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் , 16 பேர் காயமுற்றதாகவும் ஒஹாயோ போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா துப்பாக்கிச்சூடு 29 பேர் பலி - அந்நாட்டில் நடப்பது என்ன?படத்தின் காப்புரிமைCBS

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிதாரி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

காயமுற்றவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @DaytonPolice
 

#OregonDistrict #update Lt. Col. Carper: at 1:22am active shooter situation began in oregon district. The shooter is deceased. There are 9 others also deceased. At least 16 others went to area hospitals with injuries.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @DaytonPolice

துப்பாக்கிச் சூடு தொடங்கிய உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், உடனடியாக பதிலடி கொடுத்து, ஒரு முடிவுக்கு கொண்டுவந்ததாகவும் , போலீஸார் ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

போலீஸ் துணை தலைவர் கார்பர், "துப்பாக்கிதாரி குறித்து எந்த தகவல்களும் தெரியவில்லை. இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து ஆராய்வதில் முனைப்பாக இருக்கிறோம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-49226293

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் மற்றுமொரு துப்பாக்கி பிரயோகம் – 10 பேர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெய்டன் (Dayton) பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே துப்பாக்கிதாரி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இதன்போது காயமடைந்த 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் மற்றுமொரு துப்பாக்கி பிரயோகம் – 10 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் டெய்டன் (Dayton) பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த துப்பாக்கி பிரயோகம் குறித்த மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

26 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்காவில்-மற்றுமொர-2/

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆர் ஏ எனும் அமைப்பு கோடி கோடியாக குடியரசுக்கட்சிக்கு கொடுக்கும் பணத்துக்காக துப்பாக்கி தடை கொண்டுவர மறுக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.