Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:
  1. - கோயில்கள் எல்லாம் ஒரு குளத்தை அருகில் ( அநேகமாக) கொண்டிருக்கும். இது மழை நீர் சேமிப்பிற்கு உதவும்
  2. - இந்த குளத்தில் கை, கால், முகம் கழுவுதல் - மக்கள் கூடும் ஒரு இடத்தில் சுகாதாரத்தை பேண உதவும்    
  3. - கடவுளை வீதியில் வலம் கொண்டு வருதலுக்கு, திடகாத்திரமான ஆண்களை தெரிவு செய்ய இது உதவும் 

 

இப்படித்தான் போலி  விஞ்ஞான விளக்கங்கள் வலம் வருகின்றன.😜

சம்பிரதாயங்களை மதிக்க மேற்சட்டை இல்லாமல் மகிந்த வரும் அளவிற்கு நல்லூர் முருகன் பலமாக இருக்கின்றார் என்று சந்தோஷப்படலாம்😁

_47590351_-66.jpg

  • Replies 134
  • Views 10.8k
  • Created
  • Last Reply
55 minutes ago, Lara said:

 

இஞ்சியும் மரவெள்ளியும் சேர்த்து சாப்பிடுவதால் வரும் தீமையை எமது முன்னோர் முன்பே கூறினார்கள். மருத்துவ உலகு பின்னரே கண்டு பிடித்தது. 

இஞ்சியும் மரவள்ளியும் சாப்பிட்டால் மணலம் வருகிறது என்று முன்னோர் சொன்னது கண்டு பிடிப்பல்ல. அனுபவத்தின் வெளிப்பபாடு. அதை தெரியாமல் சாப்பிட்டு பலர் நோய்வாய்பட்டு அல்லது இறந்தபின் அப்படி சொல்வது அனுபவத்தின் வெளிப்பாடு. இழ்த உணவை சாப்பிட்ட பின் ஒருவருக்கு Migräne வருகிறது என்று ஒருவர் அனுபவ வாயிலாக கண்டால் அது கண்டு பிடிப்பல்ல.

கள்ளு குடித்தால் வெறிக்கும் என்பது முன்னோர் கண்டு பிடிப்பு என்று சுலபமாக கூறி இருக்கலாம்.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இல்லைத் தெரியாமல்தான் வினவுகிறேன் இங்கு விமர்சனம் செய்பவர்களது வீடுகளில் எப்படி உங்கள் மனைவி மற்றும் உறவினர்கள் எல்லோரும் இப்போ கடவுளைக்கும்பிடுவதை நிறுத்திவிட்டார்களா? சாமிப்படம் வைக்கும் இடத்தில் செருப்பைக்கழட்டி வைத்திருக்கிறீர்களா முதலில் உங்கட வீடுகளில் போய் வெள்ளை அடியுங்கோ 

தனிமனித உரிமைகளை மதிக்கவேண்டும் என்று சொல்லும் நாகரீகம் நிலவும் நாடுகளில் வாழ்வதால் குடும்ப உறுப்பினர்கள் சாமி கும்பிடுவதை எப்படித் தடுக்கமுடியும்? அது அடக்குமுறையல்லவா? 😬

34 minutes ago, Justin said:

மத நம்பிக்கைகள் சடங்குகள் பற்றி எந்த மதத்தைச் சேர்ந்தோர் விஞ்ஞான விளக்கம் சொல்லும் கதையளந்தாலும் அது சொந்தக் காலில் நிற்க வக்கில்லாமல் செய்யும் திருட்டு வேலை தான்! இயேசுவின் பிறப்பை செயற்கைக் கருக்கட்டலாக கதையளந்தது கிறிஸ்தவரா என்பதே முக்கியமான கேள்வி! ஏனெனில் சம்மனசின் வாழ்த்தினால் மேரி கர்ப்பமானாள் என்பது அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று! அதை விஞ்ஞானமாக விளக்கினால் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று குறைந்து விடும்! இப்படியே தண்ணீரில் நடந்தது, குருடன் பார்த்தது எல்லாவற்றையும் விஞ்ஞான விளக்கமாக்கினால் கிறிஸ்தவம் மறைந்து விடும்!  

இந்துக்கள் அப்படியல்லவே! நாம் பல நூற்றாண்டு முதலே கண்டு பிடித்து செய்து விட்டோம், இப்போது விஞ்ஞானிகள் நிரூபிக்கிறார்கள் என்று விஞ்ஞானத்தை வைத்து தங்கள் நம்பிக்கையை validate செய்வது தான் இந்துக்களின் வேலையாக இருக்கிறது. அது தான் மத நம்பிக்கைக்கு அவசியம் இல்லை என்கிறேன்.

இஞ்சியும் மரவள்ளியும் சேர்த்துத் தின்றால் மரணம் நிகழும் என்று அறிந்து கொண்ட பின்னர் உங்கள் முன்னோர்கள் சாப்பிட வேண்டாமென்று சொல்லியிருப்பர்! இரண்டையும் கலந்தால் சயனைட் உருவாகிறது என்று விஞ்ஞானி கண்டு பிடித்தான். இரண்டும் கண்டுபிடிப்புகளே! ஆனால், "எங்களுக்கு சயனைட் இருப்பது தெரிந்து தான் முதலே எழுதி வைத்து விட்டோம், இவர்கள் இப்போது லேட்டாகக் கண்டு பிடிக்கிறார்கள்!" என்று நக்கலாகச் சொல்வது தான் இந்துக்களின் வேலையாக இருக்கிறது!

 மருத்துவத்தை உறுதிப்படுத்துவது விஞ்ஞான ஆய்வுகளேயன்றி, அதை வெள்ளைக் காரன் வரவேற்கிறானா கறுத்தத் தோல் உடையவன் வரவேற்கிறானா என்பதை வைத்தல்ல! வெள்ளையன் பாவித்தால் அது சிறந்தது என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு உங்கள் தோல் நிறம் இனம் பற்றி தாழ்வுச் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

ஒரு சில கிறிஸ்தவர்கள் தான் கதையளந்தவர்கள். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கூறினார்களோ தெரியாது.

முன்னோர்களின் சில செயல்களின் (விரதம் இருத்தல், தோப்புக்கரணம் போடுதல் போன்ற) நன்மைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உலகில் ஏற்கப்பட்டன என்ற ரீதியில் தான் இங்கு கருத்து வைத்தோர் வைத்தனர். அதற்காக அவர்கள் தற்போதைய விஞ்ஞான ரீதியான விளக்கங்களை கூறி தான் முன்னோர் கூறினார்கள் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. அதை நீங்கள் வேறு விதத்தில் விளங்கிக்கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

இஞ்சியும் மரவெள்ளியும் கதையும் அப்படியே. அத்துடன் அதை இந்துக்களுடன் சம்பந்தப்படுத்தி நான் எழுதவில்லை.

இந்தியா உட்பட்ட நாடுகள் எங்கே நிற்கின்றன என்ற உங்கள் கேள்விக்கு தான் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு வெள்ளையர்களே வாடிக்கையாளர்கள் என கூறியிருந்தேன். மற்றும் படி வெள்ளையன் பாவித்தால் சிறந்தது என்ற அர்த்தத்தில் அல்ல. 😀

Edited by Lara

மனிதனை படைத்தது யார்? கடவுள் என்றால் அது மெஞ்ஞானம். வேறு எதையாவது புரியாத முறையில் சொன்னால் அது விஞ்ஞானம்.

கடவுளை படைத்தது/உருவாக்கியது யார்? மனிதன் இல்லை அவன் வழிபடும் மதம். அது மெஞ்ஞானம்.

அப்படி எங்களை படைத்தவனையே வேறு வேறு பெயர்களில் அழைத்து எங்களுக்குள் மனிதம் அடிபட்டும் வேளையில் இந்த திரி பல விழிப்புணர்வை எனக்கு தந்தன.

இருந்தாலும், இந்த திரியை நான் இத்துடன் ஊதிவிட எண்ணிவிட்டேன். இந்த திரியை பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை கட்டுப்படுத்த எல்லாம் வல்ல கந்தனை வேண்டி முடிக்கின்றேன்.   

7 minutes ago, tulpen said:

இஞ்சியும் மரவள்ளியும் சாப்பிட்டால் மணலம் வருகிறது என்று முன்னோர் சொன்னது கண்டு பிடிப்பல்ல. அனுபவத்தின் வெளிப்பபாடு. அதை தெரியாமல் சாப்பிட்டு பலர் நோய்வாய்பட்டு அல்லது இறந்தபின் அப்படி சொல்வது அனுபவத்தின் வெளிப்பாடு. இழ்த உணவை சாப்பிட்ட பின் ஒருவருக்கு Migräne வருகிறது என்று ஒருவர் அனுபவ வாயிலாக கண்டால் அது கண்டு பிடிப்பல்ல.

கள்ளு குடித்தால் வெறிக்கும் என்பது முன்னோர் கண்டு பிடிப்பு என்று சுலபமாக கூறி இருக்கலாம்.  

நான் ஜஸ்டினுக்கு எழுதிய கருத்தையே நீங்களும் வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Lara said:

நான் ஜஸ்டினுக்கு எழுதிய கருத்தையே நீங்களும் வாசியுங்கள்.

அவர் வாசிப்பார் லாரா. 😁

இந்தத் திரியை ஏன் இத்தனை பேர் இழுக்கின்றார்கள் என்பதற்கும் விளக்கம் உள்ளது..

 

ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்குரிய விவாதக் களத்தில் பெரும்பாலும் இரு வெவ்வேறு சித்தாந்தம் கொண்டவர்கள் விவாதிக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்தப் பிரச்சனையில் அவர்களின் சித்தாந்தம் எவ்விதத்திலும் உடைபட்டுவிடக் கூடாது என்று பாதுகாக்கிறார்கள். அவர்களின் சித்தாந்தங்களின் ஊதுகுழலாக (mouthpiece) செயல்படுகிறார்கள். மொத்தத்தில் இருவருமே குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்வை நோக்கிய நகர்விற்கு செல்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

ஒரு சில கிறிஸ்தவர்கள் தான் கதையளந்தவர்கள். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கூறினார்களோ தெரியாது.

முன்னோர்களின் சில செயல்களின் (விரதம் இருத்தல், தோப்புக்கரணம் போடுதல் போன்ற) நன்மைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உலகில் ஏற்கப்பட்டன என்ற ரீதியில் தான் இங்கு கருத்து வைத்தோர் வைத்தனர். அதற்காக அவர்கள் தற்போதைய விஞ்ஞான ரீதியான விளக்கங்களை கூறி தான் முன்னோர் கூறினார்கள் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. அதை நீங்கள் வேறு விதத்தில் விளங்கிக்கொண்டீர்கள் என நிறைக்கிறேன்.

இஞ்சியும் மரவெள்ளி கதையும் அப்படியே. அத்துடன் அதை இந்துக்களுடன் சம்பந்தப்படுத்தி நான் எழுதவில்லை.

இந்தியா உட்பட்ட நாடுகள் எங்கே நிற்கின்றன என்ற உங்கள் கேள்விக்கு தான் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு வெள்ளையர்களே வாடிக்கையாளர்கள் என கூறியிருந்தேன். மற்றும் படி வெள்ளையன் பாவித்தால் சிறந்தது என்ற அர்த்தத்தில் அல்ல. 😀

நோக்கமே தெரியாத போது ஏன் சொன்னார்கள் என்று எப்படி ஆராய முடியும்?  எனக்கு யாரும் சொல்லி நான் கேள்விப் படவில்லை, ஏனெனில் அப்படியொரு விளக்கம் கிறிஸ்தவத்திற்கு எதிரான விளக்கமேயொழிய கிறிஸ்தவம் வளர்க்கும் விளக்கம் அல்ல!

இருவரும் வேறாகத் தான் விளங்கிக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்! ஆனால், அப்படியான விளக்கங்கள் பல போலியானவை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்: உதாரணமாக சுப்பர் மூளை யோகா தோப்புக்கரணம் என்பவை ஒரு சில இந்தியர்களால் தாங்கள் செய்ததாகக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட தகவல்கள் மட்டுமேயொழிய அதில் உண்மையான மருத்துவ பயன்கள் இருப்பதாக சுயாதீனமான ஆய்வுகள் இல்லை! இருந்தால் இங்கே இணையுங்கள் பேசலாம்! இந்த யூரியூப் வீடியோக்கள் ஆதாரம் என்று வராதீர்கள்.

பெண்கள் தனியாகப் போக முடியாத நிலையை வெள்ளையர்கள் ஆயுர்வேதம் என்ர போலி மருத்துவத்தை நாடிப் போவது எப்படி மாற்றும்? ஒரு பெண் ஜனாதிபதி வந்தே மாறாத தேசம் அது. எங்கிருந்து இந்த பெண் விரோதப் போக்கு இந்தியாவுக்கோ அல்லது மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளுக்கோ வந்தது என நினைக்கிறீர்கள்? அதையே நான் குறிப்பிட்டேன்!

26 minutes ago, ampanai said:

மனிதனை படைத்தது யார்? கடவுள் என்றால் அது மெஞ்ஞானம். வேறு எதையாவது புரியாத முறையில் சொன்னால் அது விஞ்ஞானம்.

கடவுளை படைத்தது/உருவாக்கியது யார்? மனிதன் இல்லை அவன் வழிபடும் மதம். அது மெஞ்ஞானம்.

அப்படி எங்களை படைத்தவனையே வேறு வேறு பெயர்களில் அழைத்து எங்களுக்குள் மனிதம் அடிபட்டும் வேளையில் இந்த திரி பல விழிப்புணர்வை எனக்கு தந்தன.

இருந்தாலும், இந்த திரியை நான் இத்துடன் ஊதிவிட எண்ணிவிட்டேன். இந்த திரியை பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை கட்டுப்படுத்த எல்லாம் வல்ல கந்தனை வேண்டி முடிக்கின்றேன்.   

மனிதனைப் படைத்தது யார்? கடவுள் என்று சுலபமாக வெட்டித்தனமாக  கூறி மக்களை நம்ப வைப்பது மெய்ஞானம் என்று தன்னை  தானே அழைக்கிறது.

எப்படி இந்த உலகம் தோன்றியது, எப்படி உயிரினங்கள் தோன்றியது  என்று தொடர்சியாக ஆய்வுகளை மேற்க்கொண்டு அதில் அளப்பரிய முன்னேற்றங்களை கண்டுள்ளதுடன்  வெற்றிப்பாதையில் முன்னேறி வருவது  அறிவியல். அளிவியலின் பிரமிக்கத்தக்க இந்த வளரச்சி முன்னால் மெய்ஞானம் என்று உலகை ஏமாற்றுவோரால் தாக்கு பிடிக்க முடியாது. 

21 minutes ago, கிருபன் said:

அவர் வாசிப்பார் லாரா. 😁

இந்தத் திரியை ஏன் இத்தனை பேர் இழுக்கின்றார்கள் என்பதற்கும் விளக்கம் உள்ளது..

நான் ஜஸ்டினுக்கு என்ன சொல்ல வந்தேன் என்று அவர் புரிந்து கொண்டுள்ளார். இடையில் புகுந்து கொள்பவர்களுக்கு தான் பிரச்சினை. 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.