Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் …….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் …….

ஆஸ்பத்திரிகளுக்கு அருமையாகத் தான் போவது. மற்றையோரை நலம் விசாரிக்கவே  அநேகம் செல்வது . வித்தியாசமாக சுகயீனம் ஒன்று காரணமாக அண்மையில் செல்ல வேண்டியிருந்தது.

வேறொன்றுமில்லை,  மகள் வீடு மாறியிருந்தார் , அவருக்கு உதவி செய்யலாம் என இரண்டு மணி வான் பயணத்தில்  துணைவியார் , இளைய மகள் சகிதம் இரண்டு கிழமை தங்கி  செல்லலாம் என வந்திருந்தோம்.   எனது அலுவலக கிளைகள் இங்கேயும் இருப்பதால் எனக்கு இங்கேயே வேலை செய்யும் வசதி உண்டு.

 வந்த இரண்டாம் நாள்  துணைவியார் கூப்பிட்டார்  இதை ஒருக்கா பாருங்கோப்பா என்று.   ஒரு கட்டி மாதிரி இருந்தது சற்றே சீழ் பிடித்துப் போயிருந்த மாதிரி இருந்தது நான் சென்னேன் இதை விடக் கூடாது   கொண்டு போய்க் காட்டுவோம் என்று-  மறுத்து விட்டார். (நான் என்ன சொன்னாலும் reflex  இல் அதை உடனேயும் மறுப்பது அவரின் இயல்பு - அதன் நன்மை தீமைகளை ஆராயாமலே)  

மகளிடம் சொன்னேன் , அவர் அதை பார்த்து விட்டு GP இடம் கொண்டு போய் காட்ட  வேண்டும் என்று சொல்லி விட்டார். (இவ அதற்கெண்டால்  உடனேயும் மாடு மாதிரி தலையாட்டுறா)

மகள்அன்று பின்னேரம் வேலையால் வந்ததும் , GP இடம் போனோம் , அவர் பார்த்து விட்டு சொன்னர், தான் செய்வதற்கு இது சற்று பெரிதாக இருக்கு , ஆஸ்பத்திரி எமெர்ஜென்சிக்கு போனால் அவர்கள் உடனேயும் செய்து விடுவார்கள் , பிரைவேட் ஆஸ்பத்திரி என்றால் அவர்கள் இன்றிரவு மறித்து அநேகம் நாளை தான் செய்வார்கள் , உங்கள் வசதிப்படி செய்யுங்கள் , அதுவரை இந்த anti-பையோட்டிக் ஐ எடுங்கள் என எழுதித் தந்தார் ।

பக்கத்தில் இருக்கும்,  நகரிலேயே திறமான பேர் பெற்ற அரசு வைத்தியசாலையின் எமெர்ஜென்சிக்கு இரவு ஒரு 6:30  போல போனோம் ; நல்ல கூட்டம் , அரை மணித்தியாலம் வரிசையில் நின்று , அட்மிஷனில் இருந்த டாக்டரிடம் கதைத்தோம் , அவர் பார்த்து விட்டு , இது  அட்மிட் பண்ணி செய்ய வேண்டும் , இருங்கள் என்று சொன்னார் , அதிலிருந்து தான் ஆரம்பித்தது எல்லாமே .

தொடக்கத்தில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை , வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம் , குறிப்பாக  இருவர் ,

ஒருவர் வயது 90 என்றாலும் இருக்கும் , வீல் செயரில் இருந்து கொண்டு அவரும் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார், அவரிடம் கண்ணைக் கொடுத்தால் உடனேயும் புன்னகைத்துக் கொண்டு கதைக்கப் பிடித்து விடுவார், அவருடன் துணைக்கு வந்தவர் - மகன் என நினைக்கின்றேன் - அவரை அதட்டி நிற்பாட்டும் வரை ।       மிகவும் சுறு சுறுப்பாக இருந்தார்

இன்னொரு நடுத்தர அல்லது வயதான பெண்மணி - தனது  கணவருடனும் மகளுடனும் வந்திருந்தார், எதோ ஒரு வித வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவருடைய மகள் மிகவும் அப்செட் ஆக இருந்தார் , கணவனோ மனைவியை கட்டிப் பிடித்துக் கொஞ்சி சேவகம் புரிந்து கொண்டிருந்தார்- கால்களை பிடித்து விடுவதில் இருந்து , சத்தி எடுக்கும் பையை மிகவும் பிரியமாக மனைவியின் வாயருகே பிடித்து விடுவது வரை । எனது துணைவியார் அர்த்த மிகு பார்வையொன்றை எனது பக்கம் வீசினார் " பார்த்தியாடா " எனும் தோரணையில்.    

இடையிடையே ஒலிபெருக்கியில் அறிவித்தல் ஒன்று வந்து கொண்டிருந்தது - "அன்று வழமையை விட கூட்டம் அதிகம் என்பதால் , காத்திருப்பு நேரம் கூடுதலாக இருக்கக் கூடும் , வீதியின் மறு பக்கம்  GP க்ளினிக் ஒன்று இருக்கிறது , நோயாளர் யோசித்து முடிவ எடுக்கலாம் " - என்ற தோரணையில்!...

நாங்கள் GP இடமிருந்து தான் வந்திருப்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை -

நேரமும் 8 தாண்டி , 9 தாண்டி 10ம் ஆகி விட்டது , ஒரு வித அசுமாத்தமும் இல்லை எங்கள் விடயத்தில்

அந்த 90 வயது நோயாளியின் நிலைமை என்றால் சற்று கவலை தருவதாக இருந்தது। வருவோர் போவோரை கண்ணால் கொழுவி இழுத்து கதைத்துக் கொண்டிருந்தவர் , களைத்துப் போய் அமைதியாகி , கண்ணை மூடிக் கொண்டிருந்தார்। அவரைக் கவனிப்பார் எவருமில்லை - அவரின் மகனின் முகத்திலென்றால் கலவரம் சூழ்ந்து போய் கிடந்தது .

காதல் தம்பதியினர் உள்ளே சென்று விட்டிருந்தனர் - நோ மோர் விடுப்ஸ் அங்கே !

வயிற்றுக்குள் சற்றே எதோ செய்தது , 5 மணிக்கு குடித்த தேநீருக்கு பிறகு ஒன்றும் உள்ளுக்குள் அனுப்பவில்லை  என்ற பகாசுரனின் தகவல் அது துணைவியாரை ஒன்றும் சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தியிருந்த படியால் உணவைப் பற்றி ஒருவரும் அலட்டிக் கொள்ளவில்லை - பகாசுரனின் தகவல் வரும் வரை। துணையினாருக்கும் அந்த தகவலின் காப்பி போயிருக்க வேண்டும் – “ஏதாவது குடியுங்கோவனப்பா , பிள்ளைகளுக்கும் கொடுத்து  என்றார்”  சரி என்று இரண்டு கோக் வாங்கி குடித்தோம் ( ஆஸ்பத்திரி வழியவே  கோக் போன்ற நச்சுத் திரவங்களை என் இன்னமும் தடை செய்யாமல் இருக்கிறாங்கள் ??)

 

நேரம் இப்போ 12 ம் ஆகி விட்டது     சற்றே பொறுமை இழந்து அட்மிஷனில் மீண்டும் போய் கேட்டேன் - பொறுமை காக்கவும் என்பதே பதிலாக வந்தது - ஐந்து மணித்தியாலமாக பொறுமை காத்துக் கொண்டிருப்பது , உண்மையிலும் ஒரு புது அனுபவமாகத் தான் இருந்தது

இருந்தாற்போல ஒரு பரபரப்பு - அந்த 90 வயது முதியவர் அவரது இருக்கையிலேயே மயங்கி சரிந்து விட்டார் அவரைச் சுற்றி இப்ப நாலைந்து நேர்ஸ்,  டாக்டர் என ஒரே அல்லக்கை எனக்கு உண்மையிலேயே நம்ப இயலாமல் இருந்தது -  அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரின் முக்கிய அரச வைத்தியசாலையில் வழங்கப் படும் வைத்திய சேவையின் தரம் இவ்வளவு தானா என்று   நன்றாக இருந்த மனிதனை சாகும் பருவத்துக்கு கொண்டு போய் தான் வைத்திய வசதி செய்யப் படும் என்றால் - கடவுளை நம்புவதை விட வேறு வழியில்லை போல (அது சரி எந்தக் கடவுளை ?)    அந்த மனிதரை அவர்களால் எழுப்பவே முடியவில்லை நாடித்துடிப்பு இன்னமும் இருக்கின்றது என்று கதைத்துக்  கொண்டார்கள் . ஸ்ட்ரெச்சர் இல் ஆளை தள்ளி ஏற்றி  அவசரமாக உள்ளே கொண்டு சென்றார்கள் ।।

பிழையான இடத்துக்கு வந்து விட்டோமோ என முதன் முதலாக மனதில் ஓர் எண்ணக்கீற்று.

 

ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் பகுதி இரண்டு தொடரும்……….

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

பிழையான இடத்துக்கு வந்து விட்டோமோ என முதன் முதலாக மனதில் ஓர் எண்ணக்கீற்று.

சாமானியன்அப்பலோ மாதிரி இடம் ஒன்றும் இல்லையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சாமானியன்அப்பலோ மாதிரி இடம் ஒன்றும் இல்லையோ?

அதுவல்ல ஈழப்பிரியன் ,  இலையான் அடிக்க பீரங்கி தேவையில்லை என்று தான் …...

 

  • கருத்துக்கள உறவுகள்

Accident and emergency பிரித்தானியாவிலும் நீண்ட நேரம் காத்திருக்கும் அனுபவம்தான். ஆனால் triage தாண்டினால் நன்றாகவே பார்த்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

Accident and emergency பிரித்தானியாவிலும் நீண்ட நேரம் காத்திருக்கும் அனுபவம்தான். ஆனால் triage தாண்டினால் நன்றாகவே பார்த்துக்கொள்வார்கள்.

எந்த ஆஸ்பத்திரி என்றாலும் அம்புலன்சில் போனால் கொஞ்சம் விரைவாக அலுவல் நடக்கும்.

இல்லை என்றால் நெஞ்சைப் பொத்திக் கொண்டு ஐயோ குய்யோ என்று உள்ளிட்டால் தான் உடனே வேலை நடக்கும்.

அரசு மருத்துவமனைகளில் பொதுவாக இப்படித்தான் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி வரும். அவுஸ்திரேலியாவும் விதிவிலக்கல்ல!

அவசரத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து முன்னுரிமை கொடுப்பார்கள்.

இதனால் தான் private health coverம், ambulance coverம் வைத்திருப்பது அவசரத்துக்கு உதவியாக இருக்கும். 😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

அரசு மருத்துவமனைகளில் பொதுவாக இப்படித்தான் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி வரும். அவுஸ்திரேலியாவும் விதிவிலக்கல்ல!

அவசரத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து முன்னுரிமை கொடுப்பார்கள்.

இதனால் தான் private health coverம், ambulance coverம் வைத்திருப்பது அவசரத்துக்கு உதவியாக இருக்கும். 😊

இவற்றை விடவும் கிரிட்டிக்கலன வேறு பல பரிமாணங்களும் இங்கே இருக்கு , பதிவு 2 ஒப் 2 இல் அவற்றை தொட்டுச் செல்வேன் ..

1 hour ago, சாமானியன் said:

இவற்றை விடவும் கிரிட்டிக்கலன வேறு பல பரிமாணங்களும் இங்கே இருக்கு , பதிவு 2 ஒப் 2 இல் அவற்றை தொட்டுச் செல்வேன் ..

நிச்சயமாக, தொடருங்கள்... ஆவலாயுள்ளோம். 😊

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான ஒரு பதிவு. ஆர்வத்துடன் வாசித்தோம்.

மருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள்  குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

மருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள்  குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். 

எங்கடை சனம் கனக்க மருத்துவ காப்புறுதி செய்யாமல் காசு மிச்சம் பிடிக்கினமாமே?

1 minute ago, குமாரசாமி said:

எங்கடை சனம் கனக்க மருத்துவ காப்புறுதி செய்யாமல் காசு மிச்சம் பிடிக்கினமாமே?

நிச்சயமாக அவ்வாறு செய்ய முடியாது. சுவிற்சர்லாந்தில் வசிக்கும்  எல்லோருக்கும் மருத்துவக்காப்புறுதி  சட்டக்கட்டாயம்.  நீங்கள் கூறியது போல  யாராவது அப்படி செய்வார்களானால் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்பது அனைவருக்கும் தெரியும்.  எனவே அப்படி ரிஸ்க் எடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 

வேண்டுமானால் மாத  prämien குறைவாக கட்டி அதை சேமிப்பதற்காக ஒரு  வருடத்தில் மருத்துவ செலவில் தாம் பொறுப்பேற்க வேண்டிய தொகையை உயர்த்தி வைத்துக் கொள்ளலாம்.எப்போதாவது டொக்ரரிடம் செல்பவர்கள் இம்முறை மூலம் பயன் அடையலாம்   ஆனால் அடிக்கடி டொக்டரிடம் செல்பவர்களுக்கு இது உகந்த முறை அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிக்கழித்தல் ஒன்றுதான் குறிக்கோள் மற்றப்படி தண்ணியடித்துவிட்டு விழுந்து முறிந்து போனால் இராச மரியாதை மத்தப்படி வாங்கில்தேய்ப்புத்தான் இங்கேயும். ஆனால் அனைத்து மருத்துவமனைகளும் இங்கு உலகத்தரம் என்ன, ரிஸ்க் எடுக்கமாட்டான் டாக்குத்தர் காரணம் ரிஸ்க் எடுத்துப் பிசகிப்போச்சுதெண்டால் வழக்கு வம்பு என இழுபடவேண்டும் என்பதால். இன்னுமொரு விடையம் கடந்தவருடம் இந்த நாட்டின் அரச அதிபரது மனைவிக்குக் உழந்த பிறந்தது அரசாங்கப் பொது மகப்பேற்று மருத்துவமனையிலேயே பிரசவம் பார்த்தார்கள். எனது இளையமகன் சின்னவயதில் போன பாலர் பாடசாலையில்தான் அவ்வேளையில் பிரதமராகப் பதவிவகித்தவரது மகள் சேர்க்கப்பட்டிருந்தாள் இங்கு எல்லாமே சகயம் அதனால்தான் இதைக்குறிப்பிடுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்தில் மருத்துவம் இலவசம். அடிப்படை வருமான உள்ளவர்களுக்குக் கூட்டிக்கழித்துப்பார்த்து சமூக நலக்கொடுப்பனவைக் கவனிக்கும் துறை உதவிகளைச் செய்கிறது அதிக வருமானமுள்ளவர்களது மருத்துவம்கூட பெருமெடுப்பிலான கட்டண முறை இல்லை தவிர அனைவரும் கல்வி வீட்டு வசதி மருத்துவம் உணவுத்தேவை ஆகியவிடையத்தில் பாரபட்சம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(a) ஒன்றை குறிப்பிட மறந்து விட்டேன் , இந்த நாட்டில் கடந்த பதினைந்து வருடத்துக்கும் மேலாக மருத்துவக் காப்புறுதி வைத்திருக்கிறேன் , முழுக் குடும்பத்துக்குமென மாதாமாதம்  கணிசமான தொகையைக் கறந்து விடுகிறார்கள் .  இது பற்றி எழுதினால் பெருகும்  .. சுருக்கமாக   …..

 

இது வரை காலமும் பெற்ற பயன்கள்

(1) பல்லுக் கழுவுதல் - தொடக்கத்தில் மேலதிக பணம் வாங்காமல் கழுவியவர்கள் , பின்பு அது செய்தால் நல்லம் இது செய்ய வேண்டும் என மாதாந்த பிரீமியத்தை விடவும் பல மடங்கு தொகையை ப்ரபோஸ் பண்ண தொடங்கவே , ஆளை விடுடா சாமி என்று இப்ப அங்காலைப் பக்கமே போறதில்லை ; பல வருடங்களுக்கு முன்னர் வாங்கி வைத்திருந்த கோபால் பற்பொடி இன்னும் ஒரு இரண்டு மூன்று வருடத்திற்கெண்டாலும் வரும் , கிழமைக்கு ஒருக்கால் என்றாலும் எடுத்து பல்லு தீட்ட தவறுவதில்லை   , பிரச்சனை இல்லாமல் போகுது , அத்துடன் அது முகத்துக்கும் ஒரு பொலிவைக் கொடுக்கும் பாருங்கோ ( கொண்டும் சாடையா லிப்ஸ்டிக் அடிச்ச மாதிரி இருக்கும் )

(2) கண்ணாடி - நாற்பது தாண்டினாலே சிஸ்டம் சொல்லி விடும் வாசிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கு எண்டு.  காப்புறுதி இருக்கு தானே எடுப்பம் எண்டு போனால் ( எக்ஸஸ் கட்டத் தேவையில்லை என்று சொல்லிய பிறகு தான் போவது ) , மல்டி focal , கோட்டிங் அது இது என்று சொல்லி ஒரு நூறு இருநூறு எண்டாலும்  கறந்து விடுவினம்.      

மல்டி போக்கலை  போட்டு நடந்தால் படியில் மேலே ஏறும் போது, கீழே இறங்குவது மாதிரி ஒரு பீலிங் , ஒரு ஸ்டெப் எடுத்து வைச்சால் கால் ஒன்றரையாம் படியில் நிற்கப் பாக்கும்;   அத்துடன்  றோட்டிலை  கார் ஓடிக் கொண்டு போகும் போது எக்கச்சக்கமான ஹார்ன் அடிப்புகள் - மற்றைய சக ஓட்டுநர்களிடமிருந்து தான் - மனுசி சொல்லிப் போட்டுது - உந்த மல்டி போக்காலுடன் ஓட்டுவதென்றால் நான் வர மாட்டேன் என்று.

அதவாது பரவாயில்லை,   "அவளுகள் சொன்னாளுகள் எண்டவுடனே  பல்லை இளித்து கொண்டு ஓமெண்டிருப்பியள்" என்ற துணைவியாரின் ஜட்ஜ்மெண்ட் தான் மனதை கடுமையாக காயப்படுத்தும் ( சில வேளை உண்மையும் அது தானோ ? ) .   

கடைசியில் இப்ப வருடக் கணக்காக கை கொடுப்பது 2 dollar ஷாப்பில் வாங்கி வைத்திருக்கும் வித விதமான பவரில் கிடைக்கும் அந்தக் கண்ணாடிகள் தான் - தொலைந்தால் புதிது மாற்றுவது ஒரு விடயமே இல்லை   

 

(b) அரச வைத்தியசாலை எமெர்ஜென்ஸிக்கு போனது , பிரத்தியேக வைத்தியசாலையில் உடனே விடாமல் மறித்து விடுவார்கள் என்பதால். சில விடயங்கள் பட்டுத் தான் அறிவு வர வேண்டும் எண்டு விதித்திருந்தால் யார் தான அதை மாற்ற முடியும் .   

 

(c) அட்மிஷனில் முதல் வேலையாக எமது மருத்துவக் காப்புறுதி விபரங்களை கேட்டு பெற்றுக் கொண்டார்கள்.  அரச வைத்தியசாலைகளில் பிரத்தியேக முறையில் மருத்துவ வசதி அளித்து மேலதிக  தொகையை பெற்றுக்   கொள்ளும் பொருட்டில். என்ன ஒரு rip- off ….

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவு சாமன்யன்.

எனக்கும் இலங்கையிலும் யூகேயிலும் ஆசுப்பத்திரி அனுபவங்கள் இருக்கு.

1. யூகே NHS ஆனது free at point of service எனும் நடைமுறையில் நடக்கிறது. ஆனால் பொது வரியில் இருந்து கணிசமான அளவு இதற்குப் போகிறது. யூகேயில் தனியார் காப்புறுதிகள் இருந்தாலும், அடிப்படை, மேல்நிலை (கான்சர், bypass surgery, transplant) இப்படி கிட்டத்தட்ட சகல பிரச்சினைக்களுக்கும் தரமான மருத்துவம், இலவசம். முன்னாள் பிரதமர் கமருன் பெரும் செல்வந்தர், மனைவி அவரை விட செழிப்பான குடும்பம். ஆனாலும் அவர்களின் வலுக்குறைந்த குழந்தை ஒன்றை முற்றிலும் என் எச் எஸ் சிலேயேதான் பராமரித்தார்கள். இங்கேயும் எமெர்ஜென்சியில் போனால் காத்திருக்கும் பிரச்சினை இருக்கு. பொதுவாக பெருநகரங்களில் இது அதிகம். ஆனால் எல்லா காத்திருப்பும் ரெகோர்ட் செய்யப்பட்டு. டார்கெட் இற்கு எதிராக மாத முடிவில் அலசப்படும். இந்த டார்கெட் இருப்பதால் எப்படியும் 3 மணதியாலதுக்குள் பார்த்துவிடுவர்.

2. இங்கே பெரிய பிரச்சினை படுக்கை. Bed space. Social care செய்ய வேண்டிய ஒரு பகுதி வேலையும் மருத்துவ மனைகள் மீது விழுவதால், விடுவிக்க தயாரான பின்னரும் பல வயதானவர்கள் மருத்துவ படுக்கையில் இருப்பதால் - படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு. எமெர்ஜின்சி வார்டில், கொரிடோரில் கட்டில் போடும் நிலையும் சில சமயம் ஏற்படும். எனது தாயாருக்கு பல நோய்கள். அண்மையில் 3 கிழமை ஆசுபத்திரி வாசன். மிகவும் கண்ணியமான, கனிவான கவனிப்பு. அவரோடு 24/7 நாங்கள் நிண்டது பல தாதிகளுக்கு அதிசயம். அம்மாவுக்க்கு இலவச உணவு, அதையும் தாண்டி எம்மையும் கோப்பியை, பானை எடுத்து சாப்பிடமாறு வேறு கேட்பார்கள். அதுவரை அதிகப்படியான வரி என்று முக்கால் அழும் நான் அன்றுதான் அதன் பலனை உணர்ந்தேன்.

3. இங்கே NHS ஒரு தேசிய அடையாளம். அதில் கைவைக்கப் போகிறார்கள், தனியார் மயப்படுத்த போகிறார்கள் என சதா தொழில் மற்றும் லிபரல் கட்சிகள் கன்சவேடிவ்வை தாக்கும். அவர்களுக்கும் அப்படி செய்ய ஆசைதான், ஆனால் அப்படி செய்தால் ஆட்சி பறிபோகும். எனவே சிறுக சிறுக தனியார் மயப்படுத்தலை புகுத்துகிறார்கள். மிக அதிகளவில் ஆசுபத்திரிகளை மூடி விட்டார்கள். 

4. முன்னர் NHS ஐ உலகின் பொறாமை (envy of the world) என்பார்கள். இப்போ அந்த சிறப்பு இல்லை எனிலும், ஆதார மருத்துவம், அவசர மருத்துவம், மேல் மருத்துவம், மருத்துவ ஆராய்சி என்பதில் இன்னும் தரமான சேவையே தரப்படுகிறது. இப்போ கன்சேவேடிவ் ஜோன்சனும் கூடுதல் பண ஒதுக்கீடு அறிவித்துள்ளார். பார்க்கலாம்:

  • கருத்துக்கள உறவுகள்

5. இலங்கை அனுபவம் அப்பாவை, சித்தப்பாவை ஒட்டியது. அப்பா வைத்தியர் சிவக்குமாரன்னின் நண்பர். வைத்தியர் கண்டிப்புக்கு பெயர் போனவர் ஆனாலும் அப்பாவின் நண்பர் என்பதால் கொஞ்சம் இயல்பாய் இருப்பார். தனியார் மருத்துவ மனையில் ஒருதரம் அப்பாவை பார்த்து விட்டு, அவரே இதைவிட என் கூடுதல் கவனிப்பு அரச மருத்துவ மனையில்தான் கிடைக்கும் அங்கே வாருங்கள் என மாற்றினார் ( இப்படி பட்ட உன்னதத்களும் எம்மத்தியில் இருந்தார்கள்). இதன் பின் அப்பா காலாமாகும் வரை அரச ஆஸ்பத்திரிதான். குறை சொல்ல முடியாத சேவை. என்ன இலங்கை ஆஸ்பதிரிகளுக்கே உரிய மூக்கை பிடுங்கும் மருந்து நாற்றம்தான் ஒரே குறை.

5. சித்தப்பா - தனியார் ஆஸ்பத்திரிக்கு போகும் போதே மூளைச்சாவு ஆகிவிட்டார். எனினும் 3 நாட்கள் செயற்கை உயிரூட்டியில் வைத்து காசை கறந்த பின்னரே விட்டார்கள் 😡.

பிகு: கல்வியும் மருத்துவமும், எப்போதும் அரச கையில் இருக்க வேண்டும். பெறும் நிலையில் (point of delivery/service) இலவசமாக இருக்க வேண்டும். இவை இரெண்டிலும் லாப நோக்க தனியார் கம்பெனிகளை விட்டால், அவர்கள் வேண்டும் என்றே அரச அமைப்புக்களை சீரழித்து, தனியாரே சிறப்பு. அல்லது காப்புறுதியே காப்பு எனும் நிலையை உருவாக்குவார்கள். அமெரிகாவை பார்த்தால், ஓபாமா கேர் இற்கு வந்த எதிர்ப்புகளை பார்த்தால் இது புரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.