Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

In English

தமிழில்

எனது பெற்றோர்கள் மலேசியாவிலே பிறந்தார்கள். நான் தமிழீழத்தில் பிறந்தேன். இந்தியாவிற்கு சென்றது கிடையாது, ஆனால் மலேசியாவிற்கு சென்றுள்ளேன். இப்போது Nortel Networks இல் Web Application Developer ஆக வேலை பார்க்கிறேன். நான் ஒரு தமிழ்ப் பற்றாளன். அதற்காக நான் என்ன செய்திருக்கின்றேன் என்று கேட்காதீர்கள். ஏதும் சொல்வதளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை.

நான் ஒரு கடும் போக்க வதி [hardliner]. இருக்கு அல்லையேல் இல்லை என்று தான் வாதிடுவேனே தவிர, இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று வாதிடுபவன் அல்ல. வாழ்க்கையே ஒரு “choice”. ஒருவன் எடுக்கும் முடிவுகள் தான் அவன் வாழ்க்கை எப்படி அமைவதென்று நிர்ணயிக்கிறது. சகலதையும் சீர்தூக்கிப் பார்த்து ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும். எல்லா முடிவுகளும் சரியானதாக இல்லாத பட்சத்தில், எது ஓரளவு சரியானதோ அதை முற்றுமுழுதாக தேர்ந்தெடுப்பவன் நான். எனது இந்த வலைப்பூக்களில் இருக்கும் சிந்தனைகள் யாவும், ஏதாவது ஒரு பக்கம் முற்றுமுழுதாக சார்ந்தே இருக்கலாம். இதனால், என் வலைபூவிற்கு வருபவர்களின் மனம் புண்படுமானால் அதற்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.

எனக்கு என் பெயரை சொல்லி பெருமிதமடைய பிடிக்காது.

ஃகீ ஃகீ… அது ஒரு பகிடிக்காகவே சொன்னேன். கர்வமென தப்பாக எடுக்க வேண்டும்.

வீட்டுப் பெயரை, வெளியில் பாவிக்க மாட்டார்கள். பத்திரிகைகளில் எழுதும்போது சொந்தப் பெயரைப் பாவிக்க மாட்டார்கள். பெண்ணின் பெயரில் எழுதிய/ எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் இருக்குறார்கள். நானும் ஏதாவது இப்படி வைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்ததே CAPital. தலைநகரத்தில் தான் முதலில் இருந்தேன். அங்கே Capital Taxi இருக்கிறது, அதைத் தளுவியே நான் CAPital என்று எனது சிறு மாற்றத்துடன் எழுத ஆரம்பித்தேன். Caps lock என்பது ஆங்கில பெரிய எழுத்தை குறிக்கும் முகமாக கணினியில் இருக்கும். ஆகவே அதை CAP என்று ஆக்கினேன்.

தமிழ் மேல் ஆர்வம் வந்த பின்பும் இந்தப் பெயரை மட்டும் விட விருப்பமில்லாமல் இருக்கிறது. பழகினால் விடுவது கடினம் தானே. இதைப் போல் எனக்குப் பிடித்த மாதிரி தமிழ்ப் பெயர் ஒன்றும் எட்டவில்லை.

________

CAPitalZ

http://1paarvai.adadaa.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் மேல் ஆர்வம் வந்த பின்பும் இந்தப் பெயரை மட்டும் விட விருப்பமில்லாமல் இருக்கிறது. பழகினால் விடுவது கடினம் தானே. இதைப் போல் எனக்குப் பிடித்த மாதிரி தமிழ்ப் பெயர் ஒன்றும் எட்டவில்லை

ம்ம்ம்.... வணக்கம் வாருங்கள்

Posted

ஏம்ப்பா...தமிழ்ப்பெயரா கெடைக்கல..???

துக்குடு கிட்ட கேட்டீன்னா...ஒரு லட்சம் தமிழ்ப்பெயரைக் கொட்டிக்கொடுப்பான்...

Posted

அப்பாடா என்ன பெரிய அறிமுகம், ஆனால் விடயம் பெரிசாக தெரியல்லை இருந்தாலும் உங்களிடம் ஏதோ விசயம் இருக்கிறமாதிரி தெரிகிறது.

உங்களை இந்ததளத்தினுள் வரவேற்பதில் ஒரு மனத்திருப்பி. வாங்க உள்ளே வாங்க பின்பு விபரமாக பேசலாம்.

Posted

வாங்க கப்பிட்டல்,

ஆமா என்னங்க முதல்+ தமிழ் = இதனை சுருக்கி முதல்தமிழ் ஆக்கி மூத்ததமிழ் என்று போடுங்கோ.அப்படியில்லையன்னா முத்தமிழ் என்ரு போடலாமே? இப்படி போடீங்கன்னா,

மூன்று தமிழ் தோன்றியதோ உன்னிடமோ, இந்த மூவேந்தர் வழி வந்த மன்னவனோ என்று பின்ன நாம் உங்களை பாடலாம் எல்ல!!

இல்லையா துடுக்கு தமிழ் பயலே? :(

Posted

வாங்க கப்பிட்டல்,

ஆமா என்னங்க முதல்+ தமிழ் = இதனை சுருக்கி முதல்தமிழ் ஆக்கி மூத்ததமிழ் என்று போடுங்கோ.அப்படியில்லையன்னா முத்தமிழ் என்ரு போடலாமே? இப்படி போடீங்கன்னா,

மூன்று தமிழ் தோன்றியதோ உன்னிடமோ, இந்த மூவேந்தர் வழி வந்த மன்னவனோ என்று பின்ன நாம் உங்களை பாடலாம் எல்ல!!

இல்லையா துடுக்கு தமிழ் பயலே? :icon_idea:

கப்பிடல் = தலைநகரம்

கப்பிட'மி'ல் = தலைத்தமிழ்

தமிழுக்கே தலை..அதனால...."தமிழ்தலை"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கப்பிடல் = தலைநகரம்

கப்பிட'மி'ல் = தலைத்தமிழ்

தமிழுக்கே தலை..அதனால...."தமிழ்தலை"

நன்றி புக்குடு அவர்களே,

ஆனால், பெயர்கள் "தலை"க்கனம் மிக்கவையாகத் தென்படுகிறது. வேண்டாம் பெயர் மாற்றுவதாக எண்ணம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ.

வாழ்க்கையே ஒரு “choice”. ஒருவன் எடுக்கும் முடிவுகள் தான் அவன் வாழ்க்கை எப்படி அமைவதென்று நிர்ணயிக்கிறது.

உங்க அறிமுகம் அழகு. அதில் இது என்னைக் கவர்ந்தது.

Posted

கப்....வணந்கம்...இன்னமா அறிமுகம்...

யப்பா...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன இத்தனை பேரு வரவேற்கிறீர்களா?

நன்றி நன்றி.

ஆமா, உண்மையில் இவ்வளவு பேரா இல்லை.... ஒரே ஆளு இத்தனை தடவையா. [ அட நாமளும் FORUM நடத்தின ஆக்கள் தான்.]

________

CAPitalZ

http://1paarvai.adadaa.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட்டகாசமான அறிமுகம்.மிகவும் தையிரியசாலி.ஆனால் எனக்கென்னமோ இப்படிப்பேசுபவர்கள் செயலில் காட்டப்பின்னிற்பார்கள் ஆனால் நீங்கள் அதற்கு விதிவிலக்காக இருப்பீர்கள் என எண்ணுவோமாக.நல்வரவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் ஏற்கனவே "தமிழா நீ?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி "யாழ் உறவோசை" இல் பிரசுரித்தேன். அதை மட்டுறுத்துபவர்கள [moderators]் தடைசெய்து, "யாழ் அரிச்சுவடி" இல் அறிமுகம் செய்யச் சொன்னார்கள்.

நானும் அறிமுகம் செய்தாகிவிட்டது. ஆனால் இன்னும் என் கட்டுரையைப் மீள்பிரசுரிக்கவில்லை மட்டுறுத்துபவர்கள்..

Posted

நான் ஏற்கனவே "தமிழா நீ?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி "யாழ் உறவோசை" இல் பிரசுரித்தேன். அதை மட்டுறுத்துபவர்கள [moderators]் தடைசெய்து, "யாழ் அரிச்சுவடி" இல் அறிமுகம் செய்யச் சொன்னார்கள்.

நானும் அறிமுகம் செய்தாகிவிட்டது. ஆனால் இன்னும் என் கட்டுரையைப் மீள்பிரசுரிக்கவில்லை மட்டுறுத்துபவர்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.